திருவாதிரை தரிசனம்!
திருச்சியில், முருகப் பெருமான் கோலோச்சும் முக்கியமான ஆலயம்; அருணகிரிநாதர் உருகி உருகிப் பாடிய தலம்; திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள், இந்தத் தலத்துக்குப் பலமுறை வந்து சொற்பொழிவாற்றியதுடன், இந்தக் கோயிலுக்கு ஏராளமான திருப்பணிகளையும் செய்த திருவிடம் என வயலூருக்குத்தான் எத்தனைப் பெருமைகள்?!
இந்தத் தலத்தின் கூடுதல் சிறப்பு... சதுர தாண்டவக் கோலத்தில் அற்புதத் திருமேனியராகக் காட்சி தருகிறார் ஸ்ரீநடராஜப் பெருமான். சிதம்பரம் தலத்தில் தில்லை அம்பலவாணனுக்குச் செய்யப்படுவது போலவே, அனைத்து ஆராதனைகளும் செய்யப்படுகின்றன. திருவாதிரை நட்சத்திர நாளில், இங்கு வந்து நடராஜருக்கு அபிஷேகம் செய்து வணங்கினால், நினைத்த காரியங்கள் யாவும் கைகூடும் என்கின்றனர், பக்தர்கள். தவிர, திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் இங்கு வந்து வழிபட்டால், கிரக தோஷங்கள் யாவும் விலகும் என்பது ஐதீகம்!
மார்கழித் திருவாதிரையிலும் மற்ற திருவாதிரை நாட்களிலும் இங்கு வந்து ஆதிரை நாயகனை ஆத்மார்த்தமாக வேண்டுங்கள்; அனைத்து வரங்களையும் தந்தருள்வான் ஆடலரசன்!
No comments:
Post a Comment