பெங்சூயியில் விளக்கியபடி வர்ணங்களும் எண்களும் நமக்குத் தரும் பலன்களைப் பார்த்தோம். இப்போது அடுத்த செயல் விளக்கத்தை காண்போம். பல்வேறு விதமான வியாபாரங்களுக்கும் தொழில்களுக்கும் உரிய வர்ணங்களை இப்போது பார்க்கலாம். அதேபோல் வீடுகளிலும் பல்வேறு அறைகளை எந்தெந்த வர்ணங்களைக் கொண்டு அலங்கரித்தால், அவை முழுப்பலன்களை அளிக்கும் என்பதை காணலாம்.
வீட்டின் அறை அனுசரணையான வர்ணம் - ஏதேனும் ஒன்று
புகுமுக அறை (வராந்தா) வெள்ளை, இளம் பச்சை, பிங்க், இளம் நீலம்
வரவேற்பறை (லிவிங் ஹால்) மஞ்சள், இளம் பச்சை
சாப்பாட்டு அறை பிங்க், தாமரைக் கலர், இளம் நீலம்
பிரதான படுக்கை அறை பிங்க், இளம் நீலம்
குழந்தைகள் அறை நீலம், பச்சை
பூஜை/தியான அறை சிவப்பு, பச்சை, இளம் நீலம்
சமையல் அறை வெள்ளை, இளம் பிங்க்
படிக்கும் அறை மரக்கலர், சிவப்பு
குளியலறை சாம்பல் நிறம், வெள்ளை, பிங்க்
வியாபாரம் அல்லது தொழிலில் ஈடுபட்டோரின் அலுவலக அறைகளும் அவற்றுக்கான நிறங்களும்
1 தரகர்கள் சாம்பல் நிறம், இலைப்பச்சை
2 கட்டிட வல்லுநர்கள் பச்சை, நீலம்
3 வங்கி/பங்கு வர்த்தகம் வெள்ளை, நீலம், பச்சை, மஞ்சள்
4 அழகு நிலையங்கள் வெள்ளை, அனைத்தும் கலந்த வர்ணங்கள்
5 கட்டிட ஒப்பந்ததாரர்கள் பச்சை, வெள்ளை
6 கணக்கியல் வல்லுநர்கள் வெள்ளை, மஞ்சள்
7 கணினி உபயோகிப்போர் இளம் நீலம், பச்சை, எல்லா இளம் வர்ணங்களும்
8 மருத்துவர்கள் வெள்ளை, நீலம், ஆப்-ஒயிட், பிங்க்
9 வழக்கறிஞர்கள் கறுப்பு, வெள்ளை, மஞ்சள், நீலம்
10 வியாபார நிறுவனங்கள் இளம் பச்சை
11 ஆடியோ/வீடியோ வெள்ளை, பிங்க், இளம் பச்சை, சிவப்பு
12 புத்தகக்கடை பச்சை, நீலம், மஞ்சள்
13 அழைப்பிதழ்கள் கடை இளம் நீலம், பிங்க், வெள்ளை
14 குழந்தைகள் நலம் பிங்க், இளம் பச்சை, இளம் மஞ்சள், வெள்ளை அல்லது அனைத்தும் கலந்தவை
15 மின் சாதன வியாபாரம் சிவப்பு, பிங்க், வெள்ளை
16 பொது கடை இளம் பச்சை, பிங்க், வெள்ளை
17 தங்க நகைகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் மஞ்சளை தவிர மற்ற அனைத்து வர்ணங்களும்
18 மருந்துகள் விற்பனை இளம் நீலம், பிங்க்
19 ரெடிமேட் துணிக் கடை நீலம், பச்சை
20 காலணிக் கடைகள் கறுப்பு, மரக்கலர், சிவப்பு, வெள்ளை
No comments:
Post a Comment