Sunday 28 August 2016

அகோரிகள் என்பவர்கள் யார்? - சில உண்மைகள் பகுதி மூன்று“நான் வங்காளத்தை ஆண்ட மன்னன், நான் இறந்த பிறகு எனது ஆட்சியை எனது மகனுக்கு கொடுக்காமல் எனது மைத்துனன் எடுத்து கொண்டான். பிரிடீஷ் வைஸ்ராய் இதில் தலையிட்டு நீதி வழங்க வேண்டும்”


விசித்திரமான இந்த வழக்கை கண்டு நீதிபதி குழம்பினார். தான் இறந்துவிடேன் என சொல்லும் அரசன் உயிருடன் இருக்கிறான் என்றால் யாருக்கு தான் குழப்பம் வராது. நடந்தது இது தான்...

வங்க தேசத்தின் கிழக்கு பகுதியை ஆண்டு வந்த அரசன் (ஜமீந்தார், குறுநில மன்னன் என்றும் சொல்லலாம்) சில தவறான பழக்கங்களால் இள வயதில் நோய் கண்டான். அரசு மருத்துவர்கள் எத்தனையோ மருத்துவம் செய்தும் அரசன் உடல் நலம் மிகவும் நலிவுற்றது. 25 ஆம் வயதில் வாழ்க்கையின் கடைசி நிலையில் இருந்தான் அந்த அரசன். மலைவாழ்ஸ்தலங்களில் இருந்தால் சிறிது காலம் வாழலாம் என மருத்துவர்கள் கூறினார்கள். அரசன் தனது ராணி, மூன்று வயது மகன் மற்றும் பரிவாரங்களுடன் டார்ஜலிங் சென்றான்.

டார்ஜலிங் அப்பொழுது பிரிடீஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்தது. பிரிடீஷ்காரர்களுக்கு கப்பம் கட்டும் மன்னனாக இருந்ததால் அவர்களும் அரசனை வரவேற்றார்கள். அரசன் காலரா, பிளேக் போன்ற கொடுடிய நோய் கொண்டவனாக இருந்து அது பிறருக்கு பரவுமோ என ஐயம் கொண்ட பிரிடீஷ்காரகள் தங்கள் சார்பாக ஒரு மருத்துவரை கொண்டு மன்னனை பரிசோதித்தார்கள். அவருக்கு தொற்றகூடிய நோய் இல்லை என தெரிந்ததும் அனுமதித்து தங்கள் விருந்தினர் மாளிகையில் தங்குவதற்கு அனுமதித்தனர்.

சில மாதங்களில் மன்னன் நோய் முற்றி இறந்தான். பிரிடீஷ் ஆதிக்க இடத்தில் இறந்ததால், அவர்களின் மருத்துவர் மன்னன் உடலை பரிசோதித்து இறப்பு சான்றிதழ் வழங்கினான். அரசனின் அரண்மனை வைத்தியரும் பரிசோதித்து மன்னன் இறந்ததை உறுதி செய்தார். மன்னனின் இறுதி சடங்கு கங்கை ஆற்றங்கரையோரம் டார்ஜலிங் அருகில் இருக்கும் ஒரு ஊரில் நடந்தது.


உடலுக்கு மூன்று வயது மகன் நெருப்பு மூடிய சில நிமிடத்தில் திடீரென வெள்ள பெருக்கு ஏற்பட்டு உடல் ஆற்றில் அடித்து சென்றது. உடல் தகனம் செய்ய வந்தவர்கள் ஆற்றுவெள்ளத்தில் மிதந்து மீண்டார்கள்.

கணவன் இறந்த துக்கத்தில் அரண்மனை வந்த ராணி தனது மகனுக்கு முடிசூட்ட தயாரானாள். ஆனால் ராணியின் தம்பி ஆட்சியை கைபற்றினான். இருவரையும்துன்புறுத்தினான். மக்களை கொடுங்கோலனாக ஆட்சி செய்தான்.

இதே சமயத்தில் காட்டின் ஒரு பகுதியில்..

கங்கை கரையின் ஓரத்தில் அந்த யோகிகள் கூட்டம் வட்டமாக அமர்ந்திருந்தார்கள். தூரத்தில் ஆற்றில் ஒரு பிணம் மிதந்து வருவதை பார்த்த தலைமை யோகி சைகை செய்தார். பிற யோகிகள் அந்த உடலை ஆற்றில் இறங்கி கரை சேர்த்தார்கள். மார்பில் சில பகுதிகள் மட்டும் தீக்காயத்துடன் இருந்த உடலின் கபாலத்தை திறந்து சில மூலிகைகளை சேத்து மீண்டும் மூடினார்கள். தினமும் இரு யோகிகள் அந்த உடலுக்கு காவல் இருந்தார்கள். உடல் முழுவதும் சவரம் செய்யப்பட்டு தினமும் சில “ரகசியமான செயல்கள்” மூலம் அந்த உடல் புத்துயிர் ஊட்டப்பட்டது. சில நாட்களுக்கு பிறகு உடலில் சில அசைவுகள் வரத்துவங்கின. மெல்ல நடக்கவும், உணவு உற்கொள்ளவும் அந்த உடலுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது. அந்த உடல் , தான் யார் என்ற எந்த உணர்வும் அற்ற நிலையில், இருபத்திஐந்து வயது குழந்தையாகவே வலம்வந்தது.

பன்னிரெண்டு வருடங்கள் யோகிகளுக்கு உண்டான பயிற்சி அளிக்கபட்ட அந்த உடல் ஒரு கும்பமேளா நேரத்தில் யோகிகள் குழுவுடன் காட்டிலிருந்து நடக்க துவங்கியது. ஒர் இடத்தில் திடிரென டேரா அமைத்தார்கள். வட்டமாக பல மணி நேரம் யோகிகள் உட்கார்ந்து இருப்பது டேரா என அழைக்கிறார்கள். நெடுநாள் விருந்தாளிகள் நம் வீட்டில் தங்குவதை சொல்லுவோம் அல்லவா அதே வார்தை தான். யோகிகளின் குழு தலைவர் அந்த உடலை அழைத்து, சில யோக முறைகளை செய்து அவ்வுடலின் பழைய சம்பந்தத்தை மீண்டும் கொண்டுவந்தார்.

உடல் மீண்டும் மன்னன் ஆகியது. மன்னன் செய்ய வேண்டிய வேலையை கூறி டேராவிலிருந்து அனுப்பி வைத்தார்.மன்னன் மீண்டும் தனது நாட்டிற்கு வந்து தனது ஆட்சியை கேட்க, மன்னனின் மைத்துனன் ஏதோ மந்திரவாதி மன்னன் உருவில் வ்ந்திருப்பதாக சொல்லி விரட்டினான். சிலரின் துணையோடு பிரிடீஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தான் மன்னன். நீதிபதி விசாரணையை துவக்கி, மன்னன் இறந்ததையும் - மீண்டும் உயிருடன் வந்ததையும் உறுதி செய்தார். மன்னனுக்கு எப்படி உயிர் வந்தது என நீதிபதி கேட்க மன்னன் விளக்கியது தான் நீங்கள் மேலே படித்த வரிகள்.

மன்னன் உடலாக இருக்கும் பொழுது யோகிகளுக்கு உதவியாக தானும் பிற உடலுக்கு காவலாக இருந்ததையும் கூறினான். வழக்கு மேல்முறையீட்டுக்காக லண்டனில் இருந்த உச்ச நீதி மன்றதிற்கு மாற்றபட்டது. அங்கும் மன்னன் உயிர் பெற்றான் என்றும், யோகிகள் உயிர் அளித்தார்கள் என்றும் நிரூபிக்கபட்டது.


பிரிடீஷ்காரகள் மீண்டும் ஆட்சியை மன்னனிடம் கொடுத்தார்கள். பன்னிரெண்டு ஆண்டுகள் ஆட்சி செய்துவிட்டு வளர்ந்த மகனுக்கு முடிசூட்டி மீண்டும் யோகிகளுடன் சென்று இணைந்தான் மன்னன். மன்னிக்கவும் யோகி.


இப்படி பட்ட அசாத்திய ஆற்றல் கொண்ட அகோரிகளுக்கு ஒரு பழக்கம். தங்களை பிறர் கவனிக்கிறார்கள் என தெரிந்தால் அவர்கள் அருவெருக்க தக்க செயல்களை செய்வார்கள். அதன் பின் அவர்களை பார்த்து ஓடிவிட செய்வார்கள். தங்களை பிறர் பின் பற்றவேண்டும் என விரும்ப மாட்டார்கள் என்பதே இதற்கு காரணம். உதாரணமாக அவர்கள் பூஜை செய்வதை கவனிக்க ஆரம்பித்தால் மலம் மற்றும் சிறுநீரில் பூஜை செய்ய துவங்குவார்கள். ..!


உங்கள் வைராகியத்தை நிரூபணம் செய்தால் அவர்களுடன் இணைத்து கொள்வார்கள். சிலர் இவர்கள் முன், தங்கள் உடல் உணர்வு இல்லாமல் வைராகியம்கொண்டிருக்கிறோம் என காட்ட பலர் தங்கள் பிறப்புறுப்பை கட்டையாலும், கம்பிகளாலும் பிணைத்து கொள்வார்கள். அப்படி பட்டவர்களை பார்க்கும்வெளிநாட்டுகாரர்களும் , நம் நாட்டுகாரர்களும் யோகிகளே அவ்வாறு இருப்பதாக நினைப்பார்கள். உண்மையில் இவர்கள் யோகிகளின் காலேஜுக்கு அட்மீஷன்கேட்பவர்கள் தான் யோகிகள் அல்ல.நாக சன்யாசிகளுக்கு முன் தனது வைராக்யத்தை காண்பிக்கும் ஒருவர்.[ காலேஜ் அட்மீஷன் காட்சியை பார்த்தவுடன் கால்ககளை சேர்த்து உற்கார தோன்றுகிறதா?]


காசி நகரத்தில் இவர்கள் வலம்வருவது உண்டு. காசி நகரம் ஆன்மீக நாட்டம் கொண்டர்களின் சரணாலயம். ஊருக்கு ஒரு மயானம் இருப்பது போல உலகிற்கே ஒரு மயானம் என்றால் அது காசி என சொல்லலாம். தினமும் சராசரியாக எழுநூறு முதல் ஆயிரம் பிணங்கள் எரிக்கப்படுகிறது. [என்னடா இது... காசியை பற்றி கூட தனி பதிவு போடலாம் போல இருக்கே..! ]


சன்யாசிகள், யோகிகள், தாந்திரீகர்கள், மாந்திரீகம் செய்பவர்கள் என அங்கே கூட்டம் அதிகம். காக்கி சட்டையில் வரும் ஒருவர் வாட்சுமேனா அல்லது போலீஸா என தெரியாமல் முழிப்பவர்கள் போல, மக்கள் யோகிகளுக்கும் மாந்திரீகர்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் அனைவரையும் ஒரே தலைப்பில் அடைத்துவிடுவார்கள்.


மேலைநாட்டுகாரர்களுக்கு இந்தியாவில் நரமாமிசம் சாப்பிடும் மாந்திரீகர்களை படம் பிடித்து அவர்களை நாக சன்யாசிகள், அகோரிகள் என கூறிவது வருந்த தக்கது.


ஒரு பதிவர்கூட அகோர பசியால் மனித உடலை திண்பவர்கள் அகோரிகள் என பதிவிட்டுருந்தார். அதை கண்டு மனம் வருந்தாமல் இருக்க முடியவில்லை. வீடியோவிலோ அல்லது இது போன்ற பதிவையோ படிக்க நேர்ந்தால் யோகிகளை மாந்திரீகர்கள் இடமிருந்து வித்தியாசம் காட்ட சில தன்மைகளை கூறிகிறேன்.


யோகிகளின் லட்சணங்கள் :

யோகிகள் மயானத்தில் தியானம் செய்வார்கள், எரியும் உடல் மேல் அமர்ந்து தியானிப்பார்கள். ஆனால் மனித உடலை உண்ணமாட்டார்கள். உணவு தேவை என்பதே இவர்களுக்கு இல்லை என்பது தான் உண்மை. சில மூலிகைகளை வைத்து கொண்டு பசியற்ற நிலையில் இருக்கிறார்கள். உடலில் எந்த ஒரு மத சின்னங்களோ அடையாளமோ இருக்காது. ருத்திராட்சம் , சங்கு மற்றும் ஆயுதம் இவற்றில் ஏதாவது ஒன்று கைகளில் வைத்திருப்பார்கள். ஆபரணம், மோதிரம் அணிய மாட்டார்கள். தலை மூடி நீண்டு இருக்குமே தவிர முகத்திலும், மார்ப்பிலும் முடி இருக்காது. கெளபீணமோ அல்லது நிர்வாணமாகவோ இருப்பார்கள். உடை உடுத்துவது இவர்கள் மரபு அல்ல. சுடுகாட்டு சாம்பலை கும்பமேளா தவிர பிற நாட்களில் / இடங்களில் பூச மாட்டார்கள்.கும்ப மேளாவில் ஆரம்ப நிலை யோகிகளின் அணி வகுப்பு


சத்யமேவ ஜெயதே..!

அகோரிகள் என்பவர்கள் யார்? - சில உண்மைகள் - பகுதி இரண்டு


அகோராத்ரா என்றால் காலம் என அர்த்தம். இவ்வார்த்தையிலிந்து தான் ஹோரை எனும் தமிழ் சொல்லும், ஹவர் எனும் ஆங்கில சொல்லும் வந்ததாக ஓரு பேச்சு உண்டு. இவர்களை அஹோராத்ரத்தை கடந்ததால் அஹோரிகள் எனவும் சொல்லலாம். காலத்தை கடந்த நிலையில் இருப்பதால் இவ்வகை யோகிகள் காலபைரவ அம்சமாக வணங்கப்படுகிறார்கள்.

ஸ்வாமிகள் என்பவர்கள் ஆன்மாவை உணர்ந்தவர்கள், யோகிகள் என்பவர்கள் இறைநிலையில் இரண்டர கலந்தவர்கள், ஞானிகள் என்பவர்கள் இறைவனாகவேஇருப்பவர்கள் என எளிமையாக விளக்கினாலும் உள்நிலையில் ஆன்மீகவாதி எப்படிபட்டவன் என கூறுவது கடினம். ஆன்மீக நிலையில் இருப்பவர்களின் நடை, உடை பாவனையை கொண்டு அவர்கள் இந்த நிலையில் தான் இருக்கிறார்கள் என நாம் முடிவு செய்வது கடினம்.

ராமகிருஷ்ணரும், ரமணரும் நமக்கு முன்னே தற்சமயம் வந்தால் கையில் இருக்கும் நாணயங்களை பிச்சையாக போட்டுவிட்டு கடந்து சென்றுவிடுவோம். உண்மையை அவர்களின் உள்நிலை உயர்வை நாம் உணரும் நிலையில் இல்லை.

காவி உடை அணிந்தவர்கள் எல்லாம் ஆன்மீகவாதிகள் என சொல்லிவிட முடியாது, அது போலவே உடைகள் இல்லாமல் இருக்கும் யோகிகள் ஆன்மீகவாதிகள் இல்லை எனவும் சொல்ல முடியாது அல்லவா?

அஹோரி எனும் இத்தகைய யோகிகள் பிரம்மாண்டமானவர்கள் என சொன்னால் மிகையில்லை. தங்களின் இறையாற்றலை உயர்ந்த நிலையில் பயன்படுத்துபவர்கள். தங்கள் வாழ்க்கையையே இறைவனுக்காக அர்ப்பணித்தவர்கள். யோகிகள் இரு நிலையில் வகைப்படுத்தலாம்.அதாவது தன்முனைப்பு கொண்டவர்கள், சமூக முனைப்பு கொண்டவர்கள்.

தன்முனைப்பு கொண்ட யோகிகள் தங்களுக்கு என ஆன்மீக பயிற்சிகள் அமைத்து கொண்டு செயல்படுபவர்கள். சமூக முனைப்பு கொண்டவர்கள் சமூகத்தை அறவழியில் கொண்ட செல்ல செயல்படுபவர்கள்.

யோகிகள் நிர்வாணமாக இருப்பார்கள் என சொன்னேன், சில காரணங்களால் சமூகத்துடனும் கலந்து இருப்பார்கள். தொலைக்காட்சியிலும் செய்தித்தாளிலும் வரும் எத்தனையோ ஆன்மீகவாதிகளில் இவர்கள் உண்டு. நமக்கு அவர்களை அடையாளம்காண்பது அரிது.


இமாலய மலை பகுதிகளில் ( யமுனோத்தரி, கங்கோத்தரி மற்றும் நேப்பாளம்) இவர்களின் முக்கிய இடமாக இருக்கிறது. கும்பமேளா தவிர பிற காலங்களில் இவர்கள் குழுவாக வெளியே வலம் வருவதில்லை. குழுவிலிருந்து தனியே சில பணிகளுக்காக செல்லும் யோகிகள் தங்கும் இடம் மயானம். எந்த ஊருக்கு சென்றாலும் நாம் ஹோட்டலை தேடுவது போல இவர்கள் மயானத்தில் இருப்பதை விரும்புவார்கள்.


யோகிகளுக்கு தங்கள் உடலின் சக்தி நிலை மிகவும் முக்கியமானது. இங்கே உடல் சக்தி என நான் குறிப்பிடுவது பூஸ்ட், காம்ளாண் குடித்து வருவதில்லை. யோக சக்தியின் உயர் நிலையை எக்காரணத்திலும் இழக்க அவர்கள் தயாரக இருக்க மாட்டார்கள். இயற்கையிலிருந்து எப்படி சக்தியை பெறுவது எனபது இவர்களுக்கு அத்துப்படி. மயானம், ஆறு மற்றும் வனங்களில் தங்கள் உடல்சக்தியை மேம்படுத்துவார்கள்.

தங்கள் யோக சக்தியை பிறருக்கு அநாவசியமாக காட்ட மாட்டார்கள். சமூகத்தில் தர்மம் தடுமாறும் பொழுது சூட்சமமாக செயல்பட்டு தர்மத்தை நிலைநிறுத்துவார்கள். யோகிகளில் ஒரு பிரிவினர் ராணுவத்தை போல செயல்படுகிறார்கள். ராணுவ யோகிகள் சிலர் கையில் பெரிய ஆயுதங்களை வைத்திருப்பதையும் பார்த்திருக்கிறேன். பாரதத்தில் சுதந்திர போராட்டத்தில் இவர்கள் பங்கு குறிப்பிடத்தக்கது.

உபநிஷத்தின் வார்த்தையான “சத்ய மேவ ஜெயதே” ஏன் இந்திய அரசின் தேசிய வார்த்தையாக இருக்கிறது? சுந்திர போராட்டத்தில் ஏன் காந்தி முன்னிருத்தப்பட்டார் ?


தமிழக சமூக சீர்திருத்தவாதிகள் ஏன் அடிக்கடி ரிஷிகேசம் சென்றார்கள் ? என பல காரணங்கள் இவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். பல நூற்றாண்டுகளாக இருக்கும் இந்த ராணுவ படை, பல “நற்காரியங்களை” செய்துள்ளது. அவர்கள் செய்த காரியதத்தை சொன்னால் , இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசினேன் என களி சாப்பிட வேண்டிவரும்.


நான் கும்பமேளாவில் நாக சன்யாசிகளின் கூடாரத்திற்கு அருகில் தங்க நேர்ந்தது. இருபது மணி நேரத்திற்கு மேலாக ஒரு நூல் கூட அசையாமல் கண்களை மூடிதியானத்தில் அமர்ந்திருந்தார்கள். ஒரு நாள் சரியாக நடு இரவு பன்னிரெண்டு மணிக்கு மேல் இருக்கும். எனது கூடாரத்தின் வெளியே அமர்ந்திருந்தேன். குளிருக்காக பெரிய மரம் என் முன்னே எரிந்து கொண்டிருந்தது( தூஹ்ணி). யோகிகள் மொத்தம் பத்து முதல் இருபது பேர் இருப்பர்கள். சொல்லிவைத்தாற்போல அனைவரும் எந்த ஒரு சப்தமும் வராமல் எழுந்து நின்றார்கள்.

வரிசையாக நடந்து சென்று கங்கையாற்றில் இறங்கினார்கள். எழுந்து வந்து அருகில் இருக்கும் மயானத்தின் சாம்பல் கொட்டும் பகுதியில் புரண்டு விட்டு மீண்டும் வந்து தியானத்தில் அமர்ந்தார்கள். இத்தனையும் நடக்கும் பொழுது தங்களுக்குள் அவர்கள் பேசவில்லை. சைகை காட்டவில்லை. அனைவரும் ஒரே உடலின் உறுப்பு போல கச்சிதமாக செயல்பட்டார்கள். அப்பொழுது தட்பவெப்பம் சுமாராக 4 டிகிரிக்கும்குறைவாக இருக்கும்.


கும்ப மேளா என்பது ஒரு சிறப்பு மிக்க நிகழ்வு. பூமியில் வேறு எந்த பகுதியிலும் நிகழாதவண்ணம் அதிக மக்கள் கூடும் ஒரே விழா கும்பமேளா. 2007ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பமேளாவில் ஒரு கோடிக்கும் மேலாக மக்கள் கலந்து கொண்டார்களாம். அழைப்பிதல் இல்லை, அமைப்பாளர்கள் இல்லை, தொண்டர்படைஒருங்கினைப்பில்லை அப்படி இருக்க , இந்த விழா எப்படி சிறப்பாக நடைபெறுகிறது? ஏதோ ஒரு சூட்சும சக்தி அனைவரையும் வரவழைக்கிறது. பல லட்சம் மக்கள் இணையும் இடத்தில் உணவுக்கோ, தண்ணீருக்கோ பஞ்சம் இல்லை. உயிர்சேதம் இல்லை.

யாரோ ஒருவர் பெரிய லாரியில் கம்பளிகளை கொண்டுவந்து அனைவருக்கும் இலவசமாக தானம் செய்கிறார். மற்றொருவரோ அனைவருக்கும் உணவுபொட்டலங்களை வினியோகம் செய்கிறார். இவர்களை தூண்டியது எந்த சக்தி?

தங்கள் அர்ப்பணிப்பு உணர்வால் இவர்கள் செய்யும் தியாகமும், வைராக்கியமும் அலாதியானது. தங்கள் குழுக்களில் பிறரை சுலபமாக சேர்க்க மாட்டார்கள். யோகிகளின் ராணுவ அமைப்பின் தலைவர் பதவியை ஏற்கும் முறை விசித்திரமானது. புதிய தலைவரை வணங்கிவிட்டு , பழைய தலைவர் தன்னை மாய்த்துக்கொள்ளுவார்...! இவர்களை பொருத்தவரை ரிடையர்மெண்ட் என்பது நேரடியாக செட்டில்மெண்ட் தான்.


மஹாவத்தார் பாபாஜி என பலராலும் அழைக்கப்படுபவர் இமாலயத்தில் வாழ்கிறார் என பலர் சொல்வதுண்டு. இவரை பற்றி என்னை விட உங்களுக்கு அதிகம் தெரியும் என நினைக்கிறேன். காரணம் ஒரு நடிகர். அவரின் புகழ் பெற்ற படமும்.

சென்ற பதிவில் இருந்த யோகியின் உருவத்தையும் , இவரின் உருவத்தையும் ஒப்பிட்டு பாருங்கள். சில உண்மைகள் புரியும். பரமஹம்ஸ யோகானந்தர் எனும் யோகி, தனது வாழ்வில் மஹாஅவதார் பாபாஜியை கண்டார். அதை மனதில் வைத்து வரைந்த உருவம் தான் இது.யோகிகள் பார்ப்பதற்கும் செயல்படுவதிலும் ஒன்று போலவே இருப்பர்கள். இவரை போன்ற அனேக யோகிகள் அருவமாக வாழ்வதுண்டு. யோகிகள் தங்கள் உடலை சில காலத்திற்கு மேல் வைத்திருப்பதில்லை, சூட்சம நிலையில் மாற்றிவிடுகிறர்கள்.

இறந்து போனவரை உயிர்த்தெழுக வைப்பது என்பது இவர்களுக்கு கைவந்த கலை.

யோகிகள் உயிர் அற்ற உடலை உயிர்ப்பிக்கும் சக்தி வாய்ந்தவர்கள் என உணர்ந்து கொள்ள பிரிடீஷ் நீதிமன்றத்தில் வந்த இந்த வழக்கு ஒன்றே சாட்சி.


அந்த வழக்கு...

(தொடரும்)

அகோரிகள் என்பவர்கள் யார்? - சில உண்மைகள்


உலக மக்கள் இரு பிரிவாக இருக்கிறார்கள் என சொல்லலாம். ஆன்மீக நாட்டம் உள்ளவர்கள், ஆன்மீக தன்மை பற்றி உணர்வற்றவர்கள். இந்த இரு பிரிவில் யார்உயர்ந்தவர்கள் என்றால், இருவரும் தான். பூமியின் ஏதாவது ஒரு பகுதி இரவு தன்மையை கொண்டு இருக்கிறது. அதற்காக அந்த பகுதியே எப்பொழுதும் இரவாகவே இருக்காது என சொல்லலாம். காலம் சுழலும் இரவு பகலாகும், பகலும் இரவாகும். ஆனால் பூமியில் தொடர்பற்று ஆகாய மார்க்கத்தில் இருக்கும் ஒரு வஸ்துவுக்கு இரவு பகல் என்பது கிடையாது. சூரியனில் ஏது இரவு ஏது பகல்? மனிதர்கள் பூமியில் தொடர்பு கொண்டு வாழ்வதால் அவர்களுக்கு மாற்றம் என்பது இருக்கிறது. ஆன்மீகவாதிகள் இதிலிருந்து விடுபட்டு உள்ளதால் காலத்தாலும், மாற்றத்தாலும் கட்டுவிக்கப்படாமல் விடுபட்டு இருக்கிறார்கள்.

ஆன்மீகவாதிகள் என்றவுடன் பாரத தேசத்தில் மட்டுமே இருப்பதாகவும், உலகில் வேறுபகுதியில் கடவுள் ஆன்மீகவாதிகளை வளரவிட மாட்டார் எனவும் பலர்எண்ணுகிறார்கள். வேத காலம் என ஒன்று இருந்தது. அக்காலத்தில் உலகமே ஒரு நாடாக இருந்தது. எல்லை பிரச்சனையில் பக்கத்து மாநிலத்துடன் சண்டையிடும் நமக்கு இதை சிந்திப்பது சிரமம் தான். வேத மந்திரம் “பாரத கண்டே” எனும் சொல் நமது உலகமே ஒரே கண்டமாக இருந்தது என உணர்த்துகிறது.

காலத்தால் கலாச்சார மாற்றம் அடைந்து பெரிய சேலையாக இருந்த பாரதம் பல சிறு துண்டங்களாக மாற்றம் அடைந்து கைக்குட்டையானது. உலகின் பிறபகுதிகள் கலாச்சார மாற்றம் அடைந்தாலும், பாரத தேசத்தில் மட்டுமே ஆன்மீகவாதிகள் பெருக காரணம் சூழல் தான். தாங்கள் செய்யும் ஆன்மீக சாதனைகள் (பயிற்சிகள்) இடையூறு வராதவண்ணம் சூழல் இங்கு இருக்கிறது. ஞானம் அடைய தனிமனித முயற்சி இருந்தாலும் அதற்கான சூழல் வேண்டும்.


திபத்தில் இருக்கும் மக்கள் முக்கியமாக ஓர் மந்திரத்தை சொல்லி கடவுளை வேண்டுவதுண்டு. “கடவுளே எனக்கு அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் என்னை பாரதத்தில் பிறக்க வை”- என்பதே அம்மந்திரம். வேறு இடங்களில் ஒரு மனிதன் பிறந்தால், தானே ஞானமடையும் முயற்சியில் இறங்க வேண்டுமாம். பாரதத்தில் பிறந்தாலே போதும் என்பது அவர்களின் எண்ணம். பாவம் அவர்களுக்கு தெரியாதே, நாம் துரித உணவகத்தில் உண்டு, கேளிக்கை செய்து, இனத்தை பெருக்கி மாண்டுவிடுவோம் என்பது...!


ஆன்மீகவாதிகள் என்றவுடன் நம் மக்களுக்கு சில எண்ணங்கள் உண்டு. கற்பனை உலகிலேயே வாழ்பவர்கள் தங்கள் நினைத்தது போல தான் பிறர்வாழ்கிறார்கள் என எண்ணுவார்கள். உண்மையில் ஆன்மீகவாதிகளின் நிலை ரகசியாமாக காக்கப்படுவதில்லை. மக்கள் தெரிந்துகொள்ள முயற்சிக்காததால் ரகசியமாகி விட்டது.கடலுக்கு அடியில் முத்து எடுக்க சென்றவன், தான் கடலின் ஆழத்தில் கண்டவற்றை கரையில் இருப்பவனுக்கு சொல்ல முடிவதில்லை. அது போல ஆன்மீகநாட்டமுள்ளவனும் பிறரிடம் தான் கண்ட ஆன்மீகவாதிகளை பற்றி வெளியே சொல்ல முடிவதில்லை.

ஆன்மீகம் என்பது மதம்,கலாச்சாரம், சடங்குகள், மொழி போன்றவற்றை கடந்தது. ஆன்மீகம் என்றவுடன் அனைவரும் மதத்துடன் அதை தொடர்புபடுத்தி குழப்பிகொள்கிறார்கள்.

ஆன்மீகத்தில் இருப்பவர்களுக்கு பல நிலைகள் மற்றும் தன்மைகள் உண்டு. இயல்புவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு அவர்களை பார்த்தால் வித்தியாசம்தெரிவதில்லை.

சாதுக்கள், சன்யாசிகள், ஸ்வாமிகள், யோகிகள், ரிஷிகள், மகரிஷிகள் என பல வடிவங்களில் அவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அனைவரையும் நம் ஆட்கள் ஒரேவார்த்தையில் அடக்கிவிடுவார்கள் அது- “சாமியார்”

தாந்தீர்கம் செய்பவர்களும், மந்திரங்கள் மூலம் தீமை விளைவிப்பவரும் இங்கு ”சாமியார்” எனும் அடைவுக்குள் வந்துவிடுகிறார்.


தமிழகத்தில் சித்தர்கள் என சிலரை சொல்லுவதுண்டு. தமிழ் நாட்டை தாண்டி வேறு மாநிலத்திற்கு சென்று சித்தர் பற்றி பேசினால், சித்தார் எனும் இசைகருவியை தான் காண்பிப்பார்கள். காரணம் சித்தர் எனும் பெயர்வழக்கு தமிழில் மட்டுமே உண்டு. யோகிகள் என்பவர்களை தான் நாம் சித்தர்கள் என தமிழ் “படுத்தி” இருக்கிறோம். இது போதாது என்று அவர்கள் பதினெட்டு எண்ணிக்கையில் தான் இருக்கவேண்டும் என கட்டயாம் வேறு படுத்துகிறோம். உண்மையில் சித்தர்கள் மதம் சார்ந்தவர்கள் அல்ல. தங்களை உடலாலும், உயிராலும் மேன்மை அடைய ஆன்மீக பயிற்சி செய்பவர்கள் எனலாம்.

நாம் எப்படி காவி காட்டிய அனைவரையும் சாமியார் என்கிறோமோ அது போல வட நாட்டில் அவர்களை “பாபா” என அழைப்பார்கள். பாபா என்றால் தந்தை அல்லது உயிர் கொடுத்தவர் என அர்த்தம்.

அங்கு அனைவரும் பாபா தான். மேல்தட்டு மக்கள் மஹராஜ் என அழைப்பார்கள். ரிஷிகள் அவர்களுக்கு அரசனை போன்றவர்கள்.[இந்த சொல்லாடலை மனதில்வைத்துக்கொள்ளுங்கள் பின்னால் இதை பற்றி பேசுவோம்.]


அகோரிகள் எனும் சொல்லாடலும் தமிழ் நாட்டில் சித்தர்கள் என நாம் சொல்லுகிறோமே அதன் வடமொழி வழக்குதான். தமிழில் வடமொழி சொற்கள் தவறான அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது.

ஒருவனை பார்த்து “கேவலமானவன் நீ” என சொன்னால் அவர் என்ன நினைப்பார்?

வடமொழியில் “கேவல” எனும் சொல் தனித்துவமான - மேல்நிலையான என பொருள்படும். [உ.ம். கேவல சைதன்யம்- உண்னதமான துய்மை நிலை]. இப்பொழுது எதற்கு இந்த சமஸ்கிருத வகுப்பு என நீங்கள் கேட்பது புரிகிறது.

தினசரிகளில் கொடூரமான விபத்தை பற்றி எழுதும் பொழுது “கோரமான விபத்து” என எழுதுவார்கள் அல்லவா? கோரம் என்றால் “பார்க்க முடியாத அளவுக்கு”,“மனம் பாதிப்படையும் தன்மை உள்ள” என பொருள் கொள்ளலாம். இதற்கு எதிர்பதம் தான் அ-கோரம்.


ரம்மியமான, பார்த்தால் ரசிக்க தக்க நிலையில் இருப்பவர்களே அகோரர்கள். அகோரமான முகம் என தமிழில் இந்த சொல்லையும் தவறாகவே பயன்படுத்துகிறோம்.


அகோரமான நிலையில் இருப்பவர்கள் தான் அகோரிகள். வடநாட்டில் அனைவராலும் அகோரிகள் என அழைக்கப்படுபவர்கள் யோகிகளே. நாக சன்யாசிகள் அல்லது நாகா பாபா என அழைக்கப்படுபவர்களும் இவர்கள் தான். ஹிந்தியில் நங்கா என்றால் நிர்வாணம் என அர்த்தம். நங்கா பாபா எனும் சொல் வழக்கு பின்னாளில் நாகா பாபா என மாற்றமடைந்தது.


உடலில் ஆடைகள் இல்லாமல், நீண்ட முடியுடன். முகத்திலும் மார்ப்பிலும் முடிகள் இல்லாமல் இருப்பவர்கள் அகோரிகள்.இனிவரும் பகுதியில் இவர்களை யோகிகள் என அழைப்போம். தலை பகுதிகள் தவிர பிற இடங்களில் இவர்களுக்கு முடிகள் இருக்காது. இவர்கள் உலகை வெறுத்து தனியாக வாழ்பவர்கள் கிடையாது. சிறு சிறு குழுக்களாகவும் தலைமை யோகியின் பின்னால் இவர்கள் இருப்பார்கள்.

தங்களை விளம்பரபடுத்திகொள்ளவோ, தங்களுக்கு இருக்கும் அமானுஷ ஆற்றலை வெளிகாண்பிக்கவோ மாட்டார்கள். உடல் முழுவதும் சாம்பல் அல்லது மண்கொண்டு பூசியிருப்பார்கள். மத பொருட்கள் எதையும் கைகளில் வைத்திருக்க மாட்டார்கள்.

யோகிகள் குழுக்களாக இருக்கும் சூழலில் யார் தலைமை யோகி அல்லது குரு என கண்டறிவது சிரமம். அனைவரும் ஒரே போல இருப்பார்கள். ஆண் மற்றும் பெண் யோகிகள் இருவரும் இருப்பர்கள். நிர்வாணமாக இருந்தாலும் பெண்யோகிகளை கண்டறிவது கடினம்.

இவர்களின் தலைமுடி வயதானாலும் வெள்ளை ஆகாது. உடல் பயில்வானை போல இல்லாமல்,உடல் சீரான நிலையில் இருக்கும். ரிஷிகேசத்தில் இருந்த ஒரு யோகியின் புகைப்படம். இந்த படம் எடுக்கும் பொழுது அவருக்கு 85 வயது...!


தத்வவாலே பாபா


ரிஷிகேசம் அல்லது இமாலய மலையின் வனங்களில் இருப்பார்கள். பன்னிரு வருடத்திற்கு ஒரு முறை கும்பமேளாவிற்கு வந்து கூடுவார்கள். இமாலயவனத்திலிருந்து நடந்தே அலாகாபாத் எனும் இடத்திற்கு வருவார்கள், மீண்டும் நடந்தே சென்றுவிடுவார்கள். வாகனத்தை பயன்படுத்த மாட்டார்கள். வாகனத்தில் சென்றால் குறைந்த பட்சம் பன்னிரெண்டு மணி நேர பயணம்.

ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் பொழுது கட்டுகோப்பாக வரிசையில் செல்வார்கள். வரிசையின் முன்னாலும் , பின்னாலும் இருக்கும் யோகிகள் பாதுகாப்பு அரணாக இருப்பார்கள்.

நீண்ட முடியும், மண் அல்லது சுடுகாட்டு சாம்பலை பூசி இருந்தாலும் அவர்கள் மேல் எந்த விதமான வாசனையும் இருக்காது. நறுமணமும் இருக்காது, நாற்றமும் இருக்கது. முக்கியமாக இவர்கள் பிறருடன் பேசுவது குறைவு. தங்களுக்குள் பேசிக்கொள்ளவே மாட்டார்கள்.

குழுவாக வட்டவடிவில் உற்கார்ந்து கொண்டு ஒரு மூலிகையை புகைப்பார்கள். இம்மூலிகை கஞ்சா என பிறர் எண்ணுகிறார்கள். கும்ப மேளாவில் கஞ்சா எல்லாஇடத்திலும் கிடைக்கும், சிலர் இலவசமாக பிறருக்கு வழங்குவார்கள். ஆனால் இவர்களிடம் யாரும் கொடுக்க மாட்டார்கள், இவர்களும் வாங்க மாட்டார்கள்.

தாங்கள் இருக்கும் வனத்திலிருந்து சில மூலிகைகளை கொண்டுவருவார்கள். வட்டமாக உட்கார்ந்திருக்கும் இவர்கள் வட்டத்தின் மையத்தில் அந்த மூலிகையைவைத்து ப்ரார்த்தனை செய்த பின் புகைப்பார்கள். மூலிகை குழாயில் வைத்து ஒரு முறை மட்டுமே உள்ளே இழுப்பார்கள். பிறகு அடுத்தவருக்கு கொடுப்பார்கள். இப்படியாக வட்டம் முழுவதும் புகைகுழாய் வட்டமடிக்கும்.

ரிஷிகேசத்திலும், கும்ப மேளாவிலும் 1 டிகிரி செண்டிகிரேட் குளிராக இருந்தாலும் நிர்வாணமாக உற்கார்ந்து தியானம் செய்வார்கள்.


இப்படி பட்ட யோகிகளை புரிந்து கொள்வது கடினம்.


ஏன் இவர்கள் எப்படி வாழ்கிறார்கள்? இவர்களுக்கு வேறு வேலை இல்லையா? இதனால் இவர்களுக்கு என்ன பிரயோஜனம்?

அடுத்த பதிவில்..


(தொடரும்)

சனி ஊனமான கதை

சூரிய குடும்பத்தில், சனி சூரியனிலிருந்து ஆறாவது கிரகமாகவும் இரண்டாவது பெரிய கிரகமாகவும் உள்ளார்.அவருக்கு அறுபத்திரண்டு உபகோள்கள் உள்ளன.சூரிய குடும்பத்தில் சூரியனைச்சுற்றி வரும் கிரகங்களில் மிகவும் மெதுவாகச் சுற்றி வரும் கிரகம் சனி ஆகும். சனி ,சூரியனை ஒரு முறை சுற்றி வலம் வர முப்பது வருடங்கள் ஆகும். ஒவ்வொரு இராசியிலும் இரண்டரை வருடங்கள் தங்கி பன்னிரண்டு இராசிகளை முப்பது வருடங்களில் கடக்கிறார்.வடமொழியில் சனி என்றால் மெதுவாகச் செல்பவன் என்று பொருள்.சனியின் நட்புக்கிரகம் சுக்கிரன் ஆகும்.

சனிபகவானின் மற்ற பெயர்கள்.

சௌரா ----சூர்ய புத்திரன்
குரூர லோச்சனா ---குரூர கண்களை உடையவன்
பான்கு ---அங்கஹீனமனாவன்
அசிட்டா ---கருத்தவன்
சப்த்ராட்சி ---ஏழு கண்களை உடையவன்
காகவாஹன் ---காகத்தை வாகனமாகக் கொண்டவன்
மண்டு ---மந்தமாக இருப்பவன்

மார்க்கண்டேய புராணத்தில் உள்ளபடி சனிபகவான் சூரியனுக்கும் அவரது மனைவி சாயாவுக்கும் பிறந்தவர்.அவருடன் உடன் பிறந்த சகோதரி தபதி. சூரியனின் முதல் மனைவி சம்ஜ்ஞாவுக்கும் சூரியனுக்கும் பிறந்த குழந்தைகள் மூவர்.அவர்கள் மனு, யமன் மற்றும் யமுனை ஆவார்கள். சனியின் மனைவி பரம்தேஜஸ்வி.சூரிய புத்திரர்களில் மிகவும் முக்கியமானவர்கள் சனியும் யமனும் ஆவார்கள். அவர்கள் இருவரும் நீதிமான்களாக கருதப்படுகிறார்கள். முன்வினையில் அவரவர் செய்த கருமகாரியங்களுக்கேற்ப சனிபகவான் அவரவர் வாழும் காலத்தில் இப்பூவுலகில் பலாபலன்களைஅளிக்கிறார். இப்பூவுலகில் அவரவர் வாழும் காலத்தில் செய்யும் கருமகாரியங்களுக்கேற்ப யமன் அவர்கள் இறந்தபிறகு அவர்களுக்குண்டான பலாபலன்களை அளிக்கிறார்.இருவருமே நீதி நேர்மை தவறாமல் தீர்ப்பு எழுதும் சிறந்த நீதிமான்கள்.சனிபகவான் ஒரு சிறந்த சிவபக்தன்.அவன் நிறம் கருப்பு .அவன் அணியும் ஆடை கருப்பு.அவருக்குண்டான ரத்தினம் நீலக்கல் மற்றும் கருப்புக்கல்.மலர்களில் நீல நிற மலர்கள். எண்களில் எட்டு.திசை மேற்கு.


சனி மிகவும் கடுமையானவர்.நேர்மையானவர்.அவருக்கு பொய், பித்தலாட்டம் ,மது ,சூது ,அசுத்தம், மிருகவதை,நம்பிக்கைத் துரோகம் மற்றும் பெற்றோர்களுக்கும் பெரியவர்களுக்கும் அவமரியாதை செய்வதுபிடிக்காது. அவரைப்போலவே அவரது பார்வையும் மிகவும் கடுமையானது.சனி பிறந்தவுடன் கண் விழித்து சூரியனைப் பார்த்தவுடன் சூரியனுக்கு கிரகணம் பிடித்தது.அவர் விலங்குகளையும் மனிதர்களையும் தேவர்களையும் கடவுளர்களையும் சரிசமமாகப் பாவித்து அவரவர் ஊழ்வினைப்படி பலாபலன்களை அளிக்கிறார்.இதில் சிவனும் மகாவிஷ்ணுவும் பிரம்மாவும் அடக்கம்.


பிரம்ம வைவர்த்த புராணத்தின்படி ஒரு முறை சனிபகவான்,பகவான் கிருஷ்ணனை நோக்கி தியானம் செய்து கொண்டு இருந்தார்.நீண்ட நாட்களாக சனிபகவானின் மனைவிக்கு குழந்தை இல்லாததால் அன்று அங்கு வந்து தனக்கு குழந்தை பாக்கியம் அளிக்குமாறு கேட்டுக்கொண்டாள் .நீண்ட நேரம் காத்திருந்தும் சனிபகவான் தியானத்தில் இருந்து கண் விழிக்கவில்லை.பொறுமையை இழந்த தேஜஸ்வி மிக்ககோபம் கொண்டு சனிபகவானைப்பார்த்து, எங்கேயும் எப்போதும்
உன்நேர்ப் பார்வையில் யாரைப்பார்க்கிறாயோ அவர்கள் அழியக்கடவார்கள்,என்று கடுமையான சாபம் இட்டு சென்று விட்டாள்.இந்த சாபத்தின் விளைவாக சனிபகவான் யாரையும் நேரடியாகப் பார்க்காமல் பூமியைப் பார்த்து கீழ்ப்பார்வையுடன் தலை குனிந்தவண்ணம் இருப்பார்.


சிவனின் மனைவி பார்வதி புண்யக விரதம் காத்து பகவான் கிருஷ்ணனையே குழந்தையாகப் பெற்றாள். குழந்தை கணேசன் கிருஷ்ணனின் அம்சம்.இந்த நிகழ்ச்சியை மிகவும் கோலாகலமாக விழா எடுத்துக் கொண்டாடினார்கள்.கைலாயமே மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தது.விழாவிற்கு எல்லோரும் வந்திருந்து குழந்தை கணேசனைவாழ்த்தினார்கள். பகவான் சனியும் விழாவிற்கு வந்திருந்தார்.ஆனால் குழந்தை கணேசனைப் பார்க்கவில்லை.இதனைக் கண்ணுற்ற பார்வதி இது குறித்து சனியிடம் வினவினாள்.சனியும் தனக்கு தன் மனைவி இட்ட சாபத்தைக் கூறிஅதனால் தான் குழந்தை கணேசனைப் பார்க்கவில்லை என்று கூறினார்.இதைக் கேட்டு பார்வதியும் அவளது தோழிமார்களும் சிரித்து சனியைப் பார்த்து எள்ளிநகையாடினர்.பார்வதி சனி கூறியதை விளையாட்டாக எண்ணி சனியைப் பார்த்து அதெல்லாம் ஒன்றுமில்லை,நீ தாராளமாக குழந்தை கணேசனைப் பார்த்து அவனை ஆசிர்வதிக்கலாம் என்று கூறினாள்.இவ்வாறு பார்வதி கூறியதைக் கேட்டு சனியும் வேறு வழியின்றி குழந்தை கணேசன் மீது தன் பார்வையை நேரடியாக செலுத்தாமல் ஓரக்கண்ணால் மட்டுமே கணேசனைப் பார்த்தார்.சனிபகவான் பார்வை குழந்தை கணேசன் மீது பட்ட அடுத்த கணம் பார்வதியின் கைகளில் இருந்த குழந்தை கணேசனின் தலை காணமல் போய் விட்டது.அது நேரடியாகப் போய் கோலோகத்தில்(சிவனுக்கு கைலாயம், விஷ்ணுவுக்கு வைகுந்தம் ,கிருஷ்ணனுக்கு கோலோகம்) கிருஷ்ணனின் தலையுடன் சேர்ந்து விட்டது.இதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றனர்.தன் ஆசை மகன் தலையில்லாமல் முண்டமாக தன் கைகளில் இருப்பதைப் பார்த்த பார்வதி அதிர்ச்சியடைந்து மூர்ச்சையானாள்.விரதம் அனுஷ்டித்து பெற்ற குழந்தை கணேசன் ஒரு நொடியில் தலை இல்லாமல் முண்டமாகிப் போனதைப் பார்த்து இதெற்க்கெல்லாம் காரணம் சனி தான் என்று நினைத்து அவன் மீது மிகுந்த கோபம் கொண்டாள்.இதையெல்லாம் பார்த்தக் கொண்டிருந்த பகவான் கிருஷ்ணன் உடனே கருடன் மீதேறிப் போகையில் இந்திரனின் ஐராவதம் யானை ஒரு ஆற்றங்கரையில் படுத்து நித்திரையில் இருந்ததைக் கண்டு தன் சுதர்சன சக்கரத்தால் அதன் தலையை வெட்டி கைலாயம் அடைந்து தலையின்றிக் கிடந்த கணேசனின் முண்டத்தில் பொருத்தினார்.குழந்தை கணேசன் யானைத் தலையுடன் உயிர் பெற்று எழுந்தார்.எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி.மீண்டும் விழா களை கட்டியது.நிறைய தான தருமம் செய்யப்பட்டது.கைலாயமே மகிழ்ச்சி வெள்ளத்தில்குதூகளித்தது. குழந்தை கணேசனுக்கு பிரம்மா கமண்டலத்தை பரிசாக அளித்தார்.ப்ரித்வி எலி வாகனத்தைக் கொடுத்தாள்.எல்லோரும் நிம்மதி அடைந்தனர்.ஆனாலும் சனியின் மீதான பார்வதியின் கோபம் குறையவில்லை.எனவே பார்வதி சனியை முடமாகும்படிச் சபித்தாள்.ஆனால் வந்திருந்த தேவர்களும், முனிவர்களும் மற்ற விருந்தாளிகளும் நடந்த சம்பவங்களுக்கு சனி காரணமில்லை என்றும்,பார்வதிதேவி கேட்டுக்கொண்டதின் பேரிலேயே சனி குழந்தை கணேசனைப் பார்த்தான்என்றும் பார்வதியை சமாதானப்படுத்தினார்கள்.பார்வதிக்கு சனியின் மீதான கோபம் சற்று குறைந்தது.ஆனாலும் பார்வதி இட்ட சாபத்தினால் சனி முழுவதும் முடமாகாமல் சிறிது ஊனம் ஏற்பட்டு அதுவே நிரந்தரமாக நிலைத்து விட்டது. இப்படியாக சனி நிரந்தர ஊனமானார் .

பொதுவாக மக்கள் எண்ணுவது போல் சனிபகவான் கொடூரமானவரோ மோசமானவரோ அல்லர்.அவரவர் செய்த கர்மங்களுக்கு ஏற்ப இந்தப் பிறவியில் பலன்களையும் தண்டனைகளையும்அவர் அளிக்கிறார்.சனியைப்போல்கொடுப்பாருமில்லை சனியைப்போல் கெடுப்பாருமில்லை என்பர் .குற்றங்களுக்கும் நற்காரியங்களுக்கும் ஏற்ப தரும நியாயத்தின்படி அவர் நீதி வழங்குகிறார்.தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதிற்க்கினங்க அவரவர்களே அவர்களுடைய வாழ்க்கையை நிர்மாணித்துக் கொள்கிறார்கள்.சனிபகவானை அச்சத்தினாலும் பீதியினாலும் வணங்குவதைவிட பக்தியுடனும் சிரத்தையுடனும் வணங்குவது நல்லது.

பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் - ஒரு கண்ணோட்டம் ... 2

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
கொங்கு நாட்டில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் ...

1.திருநணா (பவானி) - சங்கமேஸ்வரர்
2.திருச்செங்கோடு - அர்த்தநாரீஸ்வரர்
3.கருவூர் (கரூர்) - பசுபதிநாதர்
4.திருமுருகப்பூண்டி - திருமுருகநாதசுவாமி
5.கொடுமுடி - கொடுமுடிநாதர்
6.திருப்புக்கொளியூர் (அவிநாசி) - அவிநாசியப்பர்
7.வெஞ்சமாக்கூடல் - விகிர்தநாதேஸ்வரர்

தமிழ்நாட்டில் உள்ள திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் மேற்கூறிய 7 சிவஸ்தலங்களும் அமைந்துள்ளன.


நடு நாட்டில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் ...


1. திருநெல்வாயில் அரத்துறை - தீர்த்தபுரீஸ்வரர் நாதர்

2. தூங்கானை மாடம் (பெண்ணாகடம்) - சுடர்கொழுந்தீசர்

3. திருக்கூடலையாற்றுர் - நர்த்தன வல்லபேஸ்வரர்

4. திருஎருக்கத்தம்புலியூர் - திருநீலகண்டர்

5. திருத்திணை நகர் - சிவக்கொழுந்தீசர்

6. திருச்சோபுரம் - சோபுரநாதர்

7. திருவதிகை - அதிகை வீரட்டநாதர்

8. திருநாவலூர் - திருநாவலேஸ்வரர்

9. திருமுதுகுன்றம் - பழமலைநாதர்

10. திருநெல்வெண்ணை - சொர்ணகடேஸ்வரர்

11. திருக்கோவிலூர் - வீரட்டேஸ்வரர்

12. திருஅறையணிநல்லூர் - அறையணிநாதர்

13. திருவிடையாறு - இடையாற்று நாதர்

14. திருவெண்ணைநல்லுர் - தடுத்து ஆட்கொண்டநாதர்

15. திருத்துறையூர் - சிஷ்டகுருநாதர்

16. வடுகூர் - பஞ்சநாதீஸ்வரர்

17. திருமாணிகுழி - வாமனபுரீஸ்வரர்

18. திருப்பாதிரிப்புலியூர் - பாடலீஸ்வரர்

19. திருமுண்டீச்சரம் - சிவலோக நாதர்

20. புறவர் பனங்காட்டூர் - பனங்காட்டீசர்

21. திரு ஆமாத்தூர் - அழகிய நாதர்

22. திருவண்ணாமலை - அருணாசலேஸ்வரர்

இத்தலங்கள் யாவும் தமிழ்நாட்டிலுள்ள விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் அமைந்துள்ளன.

மாவட்ட வாரியாக இத்தலங்கள் அமைந்துள்ள விபரம் கீழே காண்க.
விழுப்புரம் மாவட்டம்
திருநாவலூர், திருநெல்வெண்ணை, திருக்கோவிலூர், திருஅறையணிநல்லூர், திருவிடையாறு, திருவெண்ணைநல்லுர், திருத்துறையூர், திருமுண்டீச்சரம், புறவர் பனங்காட்டூர், திரு ஆமாத்தூர்
கடலூர் மாவட்டம்
திருநெல்வாயில் அரத்துறை, தூங்கானை மாடம் (பெண்ணாகடம்), திருக்கூடலையாற்றுர், திருஎருக்கத்தம்புலியூர், திருத்திணை நகர், திருச்சோபுரம், திருவதிகை, திருமாணிகுழி, திருப்பாதிரிப்புலியூர், திருமுதுகுன்றம்
திருவண்ணாமலை மாவட்டம்
திருவண்ணாமலை
புதுச்சேரி மாநிலம்
வடுகூர்

பாண்டிய நாட்டில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் ...

1. திருஆலவாய்(மதுரை) - சொக்கநாதர்

2. திருஆப்பனுர் - ஆப்புடையார்

3. திருப்பரங்குன்றம் - பரங்கிரிநாதர்

4. திருவேடகம் - ஏடகநாதேஸ்வரர்

5. திருகொடுங்குன்றம் - கொடுங்குன்றீசர்

6. திருப்புத்தூர் - திருத்தளிநாதர்

7. திருப்புனவாயில் - பழம்பதிநாதர்

8. இராமேஸ்வரம்(ஜோதிர்லிங்க ஸ்தலம்) - இராமநாதசுவாமி

9. திருவாடானை - ஆடானைநாதர்

10. திருக்கானப்பேர்(காளையார்கோவில்) - காளையப்பர்

11. திருப்பூவணம் - புஷ்பவனேஸ்வரர்

12. திருச்சுழியல் - திருமேனிநாதர்

13. குற்றாலம் - குறும்பலாநாதர்

14. திருநெல்வேலி - நெல்லையப்பர்

தமிழ்நாட்டில் உள்ள மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வெலி ஆகிய மாவட்டங்களில் மேற்கண்ட பாண்டிய நாட்டு சிவஸ்தலங்கள் உள்ளன.

மாவட்ட வாரியாக இத்தலங்கள் அமைந்துள்ள விபரம் கீழே காண்க.
மதுரை மாவட்டம்
திருஆலவாய் (மதுரை), திருஆப்பனுர், திருவேடகம், திருப்பரங்குன்றம்
சிவகங்கை மாவட்டம்
திருகொடுங்குன்றம், திருப்புத்தூர், திருக்கானப்பேர்
புதுக்கோட்டை மாவட்டம்
திருப்புனவாயில்
ராமநாதபுரம் மாவட்டம்
இராமேஸ்வரம், திருவாடானை, திருப்பூவணம்
விருதுநகர் மாவட்டம்
திருச்சுழியல்
திருநெல்வேலி மாவட்டம்
குற்றாலம், திருநெல்வேலி

தொண்டை நாட்டில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் ...

1. கச்சி ஏகம்பம் (காஞ்சீபுரம்) - ஏகாம்பரேஸ்வரர்

2. திருக்கச்சி மேற்றளி - திருமேற்றளிநாதர்

3. திருஓணகாந்தான்தளி - ஓணகாந்தேஸ்வரர்

4. கச்சி அநேகதங்காபதம் - அநேகதங்கா பதேஸ்வரர்

5. கச்சிநெறிக் காரைக்காடு காரை - திருநாதேஸ்வரர்

6. திருகுரங்கணில் முட்டம் - வாலீஸ்வரர்

7. திருமாகறல் - அடைக்கலம்காத்த நாதர்

8. திருவோத்தூர் - வேதபுரீஸ்வரர்

9. திருப்பனங்காட்டூர் - பனங்காட்டீஸ்வரர்

10. திருவல்லம் - வில்வநாதேஸ்வரர்

11. திருமாற்பேறு - மணிகண்டேஸ்வரர்

12. திருஊறல் (தக்கோலம்) - ஜலநாதேஸ்வரர்

13. இலம்பையங்கோட்டூர் - சந்திரசேகர்

14. திருவிற்கோலம் - திரிபுரநாதர்

15. திருவாலங்காடு - வடாரண்யேஸ்வரர்

16. திருப்பாசூர் - வாசீஸ்வரர்

17. திருவெண்பாக்கம் - ஊண்றீஸ்வரர்

18. திருக்கள்ளில் - சிவானந்தேஸ்வரர்

19. திருவொற்றியூர் (சென்னை) - ஆதிபுரீசர், படம்பக்கநாதர்

20. திருவலிதாயம் - வலிதாய நாதர்

21. திருமுல்லைவாயில் - மாசிலாமனி ஈஸ்வரர்

22. திருவேற்காடு - வேதபுரீசர்

23. திருமயிலை (சென்னை) - கபாலீஸ்வரர்

24. திருவான்மியூர் (சென்னை) - மருந்தீஸ்வரர்

25. திருக்கச்சூர் ஆலக்கோவில் - விருந்திட்ட ஈஸ்வரர்

26. திருஇடைச்சுரம் - ஞானபுரீஸ்வரர்

27. திருக்கழுகுன்றம் - வேதகிரீஸ்வரர்

28. அச்சிறுபாக்கம் - ஆட்சீஸ்வரர்

29. திருவக்கரை - சந்திரசேகர்

30. திருஅரசிலி - அரசிலிநாதர்

31. இரும்பை மாகாளம் - மாகாளேஸ்வரர்

இத்தலங்கள் யாவும் தமிழ்நாட்டிலுள்ள திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம், வேலூர்,விழுப்புரம் மற்றும் திருவண்ணாமாலை ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ளன.

மாவட்ட வாரியாக இத்தலங்கள் அமைந்துள்ள விபரம் கீழே காண்க.
சென்னை மாவட்டம்
திருமயிலை (சென்னை), திருவான்மியூர் (சென்னை)
திருவள்ளூர் மாவட்டம்
திருவிற்கோலம், திருவாலங்காடு
திருப்பாசூர்
திருவெண்பாக்கம்
திருக்கள்ளில்
திருவொற்றியூர் (சென்னை), திருமுல்லைவாயில் (சென்னை) திருவேற்காடு (சென்னை)
காஞ்சீபுரம் மாவட்டம்
கச்சி ஏகம்பம் (காஞ்சீபுரம்), திருக்கச்சி மேற்றளி, திருஓணகாந்தான்தளி
கச்சி அநேகதங்காபதம், கச்சிநெறிக் காரைக்காடு, திருமாகறல், இலம்பையங்கோட்டூர், திருவிற்கோலம்
திருக்கச்சூர் ஆலக்கோவில், திருஇடைச்சுரம், திருக்கழுகுன்றம், அச்சிறுபாக்கம்
திருவண்ணாமலை மாவட்டம்
திருகுரங்கணில் முட்டம், திருவோத்தூர், திருப்பனங்காட்டூர்
வேலூர் மாவட்டம்
திருவல்லம், திருமாற்பேறு, திருஊறல் (தக்கோலம்)
விழுப்புரம் மாவட்டம்
திருவக்கரை, திருஅரசிலி
கடலூர் மாவட்டம்
இரும்பை மாகாளம்

காவிரி நதியின் வடகரையில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் ...

1. சிதம்பரம் - நடராஜர்

2. திருவேட்களம் - பாசுபதேஸ்வரர்

3. திருநெல்வாயல் - உச்சிநாதேசுவரர்

4. திருக்கழிப்பாலை - பால்வண்ண நாதர்

5. திருநல்லுர் பெருமணம் - சிவலோக தியாகேசர்

6. திருமயேந்திரப்பள்ளி - திருமேனிஅழகர்

7. தென்திருமுல்லைவாயில் - முல்லைவன நாதர்

8. திருக்கலிக்காமூர் - சுந்தரேஸ்வரர்

9. திருசாய்க்காடு (சாயாவனம்) - சாயாவனேஸ்வரர்

10. திருபல்லவனீச்சுரம் - பல்லவனேஸ்வரர்

11. திருவெண்காடு - சுவேதஆரன்யேஸ்வரர்

12. கீழை திருக்காட்டுப்பள்ளி - ஆரண்ய சுந்தரேஸ்வரர்

13. திருக்குருகாவூர் வெள்ளடை - வெள்ளடையீசுவரர்

14. சீர்காழி - பிரம்மபுரீசர்

15. திருகோலக்கா - சத்தபுரீசுவரர்

16. திருபுள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன் கோவில்) - வைத்தியநாதர்

17. திருக்கண்ணார்கோவில் ( குறுமானக்குடி ) - கண்ணாயிரநாதர்

18. திருக்கடைமுடி - கடைமுடிநாதர்

19. திருநின்றியூர் - மகாலட்சுமி நாதர்

20. திருபுன்கூர் - சிவலோகநாதர்

21. நீடூர் - அருட்சோம நாதேஸ்வரர்

22. திருஅன்னியூர் - ஆபத்சகாயேஸ்வரர்

23. திருவேள்விக்குடி - கல்யாணசுந்தரர்

24. திருஎதிர்கொள்பாடி - ஐராவதேஸ்வரர்

25. திருமணஞ்சேரி - அருள்வள்ள நாதர்

26. திருக்குருக்கை - வீரட்டேஸ்வரர்

27. திருக்கருப்பறியலூர் - குற்றம் பொருத்த நாதர்

28. திருக்குரக்குக்கா - கோந்தல நாதர்

29. திருவாளொளிப்புத்தூர் - மாணிக்கவண்ணர்

30. திருமண்ணிப்படிக்கரை - நீலகண்டேசர்

31. திருஓமாம்புலியூர் - துயரந்தீர்த்தநாதர்

32. திருக்கானாட்டுமுல்லூர் - பதஞ்சலி நாதர்

33. திருநாரையூர் - சௌந்தரேசுவரர்

34. திருக்கடம்பூர் - அமிர்தகடேசர்

35. திருபந்தனைநல்லூர் - பசுபதி நாதர்

36. திருகஞ்சனூர் - அக்னீஸ்வரர்

37. திருகோடிக்கா - திருக்கோடீஸ்வரர்

38. திருமங்கலக்குடி - பிராண நாதேஸ்வரர்

39. திருப்பனந்தாள் - தாலவனேஸ்வரர்

40. திருஆப்பாடி - பாலுகந்த ஈஸ்வரர்

41. திருசேய்ஞலூர் - சத்யகிரீஸ்வரர்

42. திருந்துதேவன்குடி ( நண்டாங்கோவில் ) - கற்கடேஸ்வரர்

43. திருவியலூர் - சிவயோகிநாத சுவாமி

44. திருக்கொட்டையூர் - கோடீஸ்வரர்

45. திருஇன்னாம்பர் - எழுத்தறிநாதர்

46. திருப்புறம்பியம் - சாட்சி நாதேஸ்வரர்

47. திருவிசயமங்கை - விஜயநாதர்

48. திருவைகாவூர் - வில்வவனநாதர்

49. வடகுரங்காடுதுறை - தயாநிதீஸ்வரர்

50. திருப்பழனம் - ஆபத்சகாயநாதர்

51. திருவையாறு - ஐயாரப்பர்

52. திருநெய்த்தானம் - நெய்யாடியப்பர்

53. திருப்பெரும்புலியூர் - வியாக்ர புரீசர்

54. திருமழபாடி - வஜ்ரதம்ப நாதர்

55. திருப்பழுவூர் - ஆலந்துறையார்

56. திருக்கானூர் - செம்மேனி நாதர்

57. திருஅன்பில் ஆலாந்துறை - சத்யவாகீஸ்வரர்

58. திருமாந்துறை - ஆம்பிரவன நாதர்

59. திருபாற்றுறை - ஆதிமூலநாதர்

60. திருவானைக்கா - ஜம்புகேஸ்வரர்

61. திருபைஞ்ஜிலி - ஞீலிவனேஸ்வரர்

62. திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி) - மாற்றுறை வரதீஸ்வரர்

63. திருஈங்கோய்மலை - மரகதாசலேசுவரர்

இத்தலங்கள் யாவும தமிழ்நாட்டிலுள்ள கடலூர், நாகப்பட்டிணம், தஞ்சாவூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி முதலிய மாவட்டங்களில் அமைந்துள்ளன.

மாவட்ட வாரியாக இத்தலங்கள் அமைந்துள்ள விபரம் கீழே காண்க.
கடலூர் மாவட்டம்
சிதம்பரம், திருவேட்களம், திருநெல்வாயல், திருக்கழிப்பாலை, திருஓமாம்புலியூர், திருக்கானாட்டுமுல்லூர், திருநாரையூர், திருக்கடம்பூர்
நாகப்பட்டிணம் மாவட்டம்
திருநல்லுர் பெருமணம், திருமயேந்திரப்பள்ளி, திருமுல்லைவாயில், திருக்கலிக்காமூர், திருசாய்க்காடு, திருபல்லவனீச்சுரம், திருவெண்காடு, கீழை திருக்காட்டுப்பள்ளி, திருக்குருகாவூர் வெள்ளடை, சீர்காழி, திருகோலக்கா, திருபுள்ளிருக்குவேளூர், திருக்கண்ணார்கோவில், திருக்கடைமுடி, திருநின்றியூர், திருபுன்கூர், நீடூர், திருஅன்னியூர், திருவேள்விக்குடி, திருஎதிர்கொள்பாடி, திருமணஞ்சேரி, திருக்குருக்கை, திருக்கருப்பறியலூர், திருக்குரக்குக்கா, திருவாளொளிப்புத்தூர், திருமண்ணிப்படிக்கரை
தஞ்சாவூர் மாவட்டம்
திருபந்தனைநல்லூர், திருகஞ்சனூர், திருகோடிக்கா, திருமங்கலக்குடி, திருப்பனந்தாள், திருஆப்பாடி, திருசேய்ஞலூர், திருந்துதேவன்குடி, திருவியலூர், திருக்கொட்டையூர், திருஇன்னாம்பர், திருப்புறம்பியம், திருவிசயமங்கை, திருவைகாவூர், வடகுரங்காடுதுறை, திருப்பழனம், திருவையாறு, திருநெய்த்தானம், திருப்பெரும்புலியூர், திருக்கானூர்
அரியலூர் மாவட்டம்
திருமழபாடி, திருப்பழுவூர்,
திருச்சிராப்பள்ளி மாவட்டம்
திருஅன்பில் ஆலாந்துறை, திருமாந்துறை, திருபாற்றுறை, திருவானைக்கா, திருப்பாச்சிலாச்சிராமம், திருபைஞ்ஜிலி, திருஈங்கோய்மலை

காவிரி நதியின் தென்கரையில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
1. திருவாட்போக்கி - ரத்தினகிரிநாதர்

2. திருகடம்பந்துறை - கடம்பவனேஸ்வரர்

3. திருப்பராய்த்துறை - பராய்த்துறை நாதர்

4. திருகற்குடி - உஜ்ஜீவ நாதர்

5. திருமூக்கீச்சரம் (உறையூர், திருச்சி) - பஞ்சவர்னேஸ்வரர்

6. திருச்சிராப்பள்ளி - தாயுமானவர்

7. திருஎறும்பியூர் (திருவெறும்பூர்) - எறும்பீசர்

8. திருநெடுங்களம் - நித்யசுந்தரேஸ்ரர்

9. மேலை திருக்காட்டுப்பள்ளி - அக்னீஸ்வரர்

10. திருவாலம்பொழில் - ஆத்மநாதேஸ்வரர்

11. திருபூந்துருத்தி - புஷ்பவன நாதர்

12. திருக்கண்டியூர் - பிரம்மசிரகண்டீசர்

13. திருசோற்றுத்துறை - தொலையாச்செல்வர்

14. திருவேதிகுடி - வேதபுரீஸ்வரர்

15. திருதென்குடித்திட்டை - வசிஷ்டேஸ்வரர்

16. திருபுள்ளமங்கை - ஆலந்துறை நாதர்

17. திருசக்கரப்பள்ளி (அய்யம்பேட்டை) - சக்ரவாகேஸ்வரர்

18. திருக்கருகாவூர் - முல்லைவன நாதர்

19. திருப்பாலைத்துறை - பாலைவன நாதர்

20. திருநல்லூர் - பஞ்சவர்ணேஸ்வரர்

21. ஆவூர் பசுபதீச்சரம் - பசுபதீஸ்வரர்

22. திருசத்திமுற்றம் - சிவகொழுந்தீசர்

23. திருபட்டீச்சரம் - தேனுபுரீஸ்வரர்

24. பழையாறை வடதளி - சோமேஸ்வரர்

25. திருவலஞ்சுழி - கற்பகநாதர்

26. திருக்குடமூக்கு (கும்பகோனம்) - கும்பேஸ்வரர்

27. திருக்குடந்தை கீழ்கோட்டம் - நாகேஸ்வரசுவாமி

28. திருக்குடந்தைக் காரோணம் - காசி விஸ்வநாதர்

29. திருநாகேஸ்வரம் - சண்பக ஆரண்யேஸ்வரர்

30. திருவிடைமருதூர் - மஹாலிங்கேஸ்வரர்

31. தென்குரங்காடுதுறை - ஆபத்சகாயநாதர்

32. திருநீலக்குடி - நீலகண்டேஸ்வரர்

33. திருவைகல் மாடக்கோவில் - வைகல் நாதர்

34. திருநல்லம் - உமாமஹேஸ்வரர்

35. திருக்கோழம்பம் - கோகிலேஸ்வரர்

36. திருவாவடுதுறை - மாசிலாமனி ஈஸ்வரர்

37. திருத்துருத்தி (குத்தாலம்) - உக்தவேதீஸ்வரர்

38. திருவழுந்தூர் - வேதபுரீஸ்வரர்

39. மயிலாடுதுறை - மயூரநாதர்

40. திருவிளநகர் - துறைகாட்டும் வள்ளலார்

41. திருப்பறியலூர் (பரசலூர்) - வீரட்டேஸ்வரர்

42. திருசெம்பொன்பள்ளி - சுவர்ணபுரீசர்

43. திருநனிபள்ளி (புஞ்ஜை) - நற்றுணையப்பர்

44. திருவலம்புரம் (மேலப்பெரும்பள்ளம்) வலம்புரநாதர்

45. திருதலைச்சங்காடு சங்காரண்யேஸ்வரர்

46. திருஆக்கூர் - தான்தோன்றியப்பர்

47. திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர்

48. திருக்கடவூர் மயானம் பிரம்மபுரீஸ்வரர்

49. திருவேட்டக்குடி - திருமேனிஅழகர்

50. திருதெளிச்சேரி (கோயில்பத்து) - பார்வதீஸ்வரர்

51. திருதர்மபுரம் - யாழ்மூரிநாதர்

52. திருநள்ளாறு - தர்பாரண்யேஸ்வரர்

53. திருக்கோட்டாறு - ஐராவதேஸ்வரர்

54. அம்பர் பெருந்திருக்கோவில் - பிரம்மபுரீசர்

55. அம்பர் மாகாளம் - மாகாளநாதர்

56. திருமீயச்சூர் - மேகநாதசுவாமி

57. திருமீயச்சூர் இளங்கோவில் - சகலபுவனேஸ்வரர்

58. திருதிலதைப்பதி - மதிமுத்தீஸ்வரர்

59. திருப்பாம்புரம் - பாம்பு புரேஸ்வரர்

60. சிறுகுடி - சூட்சுமபுரீஸ்வரர்

61. திருவீழிமிழிலை - நேத்ரார்பனேஸ்வரர்

62. திருவன்னியூர் - அக்னீஸ்வரர்

63. திருக்கருவிலிக்கொட்டிட்டை - சற்குனநாதேஸ்வரர்

64. திருபேணுபெருந்துறை - சிவானந்தேஸ்வரர்

65. திருநறையூர் - சித்தி நாதேஸ்வரர்

66. அரிசிற்கரைப்புத்தூர் - சொர்ணபுரீஸ்வரர்

67. சிவபுரம் - சிவபுரநாதர்

68. திருகலயநல்லூர் - அமிர்தகலசநாதர்

69. திருக்கருக்குடி - சற்குனலிங்கேஸ்வரர்

70. திருவாஞ்சியம் - வாஞ்சிநாதர்

71. நன்னிலம் - மதுவனேஸ்வரர்

72. திருகொண்டீச்சரம் - பசுபதீஸ்வரர்

73. திருப்பனையூர் - சௌந்தர்யநாதர்

74. திருவிற்குடி - வீரட்டானேஸ்வரர்

75. திருப்புகலூர் - அக்னீஸ்வரர்

76. திருப்புகலூர் வர்த்தமானீச்சுரம் - வர்த்தமானேஸ்வரர்

77. இராமனதீச்சுரம் - இராமநாதசுவாமி

78. திருபயற்றூர் - திருபயற்றுநாதர்

79. திருசெங்கட்டாங்குடி - உத்தராபதீஸ்வரர்

80. திருமருகல் - இரத்தினகிரீஸ்வரர்

81. திருச்சாத்தமங்கை - அயவந்தீஸ்வரர்

82. நாகைக் காரோணம் (நாகப்பட்டினம்) - காயாரோகனேஸ்வரர்

83. சிக்கல் - நவநீதேஸ்வரர்

84. திருக்கீழ்வேளூர் - கேடிலியப்பர்

85. தேவூர் - தேவபுரீஸ்வரர்

86. பள்ளியின் முக்கூடல் - முக்கோண நாதேஸ்வரர்

87. திருவாரூர் - வன்மீகி நாதர்

88. திருவாரூர் அரநெறி - அறனெறியப்பர்

89. ஆரூர் பறவையுன்மண்டளி - தூவாய் நாயனார்

90. திருவிளமர் - பதஞ்சலி மனோஹரர்

91. திருக்கரவீரம் - கரவீரநாதர்

92. திருப்பெருவேளுர் - அபிமுக்தீஸ்வரர்

93. திருதலையாலங்காடு - ஆடவல்லீஸ்வரர்

94. திருக்குடவாயில் - கோனேஸ்வரர்

95. திருச்சேறை - செந்நெறியப்பர்

96. திருநாலூர் மயானம் - ஞானபரமேஸ்வரர்

97. திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் - சொர்ணபுரீசுவரர்

98. திருஇரும்பூளை (ஆலங்குடி) - ஆபத்சகாயேஸ்வரர்

99. திருஅரதைப் பெரும்பாழி (ஹரிதுவார மங்கலம்) - பாதாளேஸ்வரர்

100. திருஅவளிவநல்லூர் - சாட்சி நாநர்

101. திருப்பரிதிநியமம் - பரிதியப்பர்

102. திருவெண்ணியூர் - வெண்ணிக்கரும்பர்

103. திருப்பூவனூர் - புஷ்பவனநாதர்

104. திருப்பாதாளீச்சரம் - சர்ப்ப புரீஸ்வரர்

105. திருக்களர் - பாரிஜாதவனேஸ்வரர்

106. திருசிற்றேமம் - பொன்வைத்த நாதேஸ்வரர்

107. திருவுசத்தானம் - மந்திர புரீஸ்வரர்

108. திருஇடும்பாவனம் - சற்குனநாதேஸ்வரர்

109. திருக்கடிக்குளம் - கற்பகநாதர்

110. திருத்தண்டலை நீணெறி - நீணெறிநாதர்

111. திருக்கோட்டூர் - கொழுந்தீசர்

112. திருவெண்டுறை - வெண்டுறைநாதர்

113. திருக்கொள்ளம்புதூர் - வில்வவனேஸ்வரர்

114. திருப்பேரெயில் - ஜகதீஸ்வரர்

115. திருக்கொள்ளிக்காடு - அக்னீஸ்வரர்

116. திருதெங்கூர் - வெள்ளிமலைநாதர்

117. திருநெல்லிக்கா - நெல்லிவனேஸ்வரர்

118. திருநாட்டியாத்தான்குடி - மாணிக்கவண்ணர்

119. திருக்காறாயில் - கண்ணாயிரநாதர்

120. திருகன்றாப்பூர் - நடுதறியப்பர்

121. திருவலிவலம் - மனத்துனைநாதர்

122. திருகைச்சினம் - கைசின நாதேஸ்வரர்

123. திருக்கோளிலி - கோளிலிநாதர்

124. திருவாய்மூர் - வாய்மூர்நாதர்

125. திருமறைக்காடு (வேதாரண்யம்) - மறைக்காட்டு மணாளர்

126. அகத்தியான்பள்ளி - அகஸ்தீஸ்வரர்

127. கோடியக்கரை - அமிர்தகடேஸ்வரர்

இத்தலங்கள் யாவும தமிழ்நாட்டிலுள்ள கரூர், திருச்சி, நாகப்பட்டிணம், தஞ்சாவூர், திருவாரூர் முதலிய மாவட்டங்களிலும், மற்றும் புதுச்சேரி மாவட்டத்திலுள்ள காரைக்கால் வட்டத்திலும் அமைந்துள்ளன.

மாவட்ட வாரியாக இத்தலங்கள் அமைந்துள்ள விபரம் கீழே காண்க.
கரூர் மாவட்டம் (2)
திருகடம்பந்துறை, திருப்பராய்த்துறை
திருச்சிராப்பள்ளி மாவட்டம் (6)
திருவாட்போக்கி, திருகற்குடி, திருமூக்கீச்சரம், திருச்சிராப்பள்ளி, திருஎறும்பியூர், திருநெடுங்களம்
தஞ்சாவூர் மாவட்டம் (35)
மேலை திருக்காட்டுப்பள்ளி, திருவாலம்பொழில், திருபூந்துருத்தி, திருக்கண்டியூர், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருதென்குடித்திட்டை, திருபுள்ளமங்கை, திருசக்கரப்பள்ளி, திருக்கருகாவூர், திருப்பாலைத்துறை, ஆவூர் பசுபதீச்சரம், திருபட்டீச்சரம், திருசத்திமுற்றம், பழையாறை வடதளி, திருவலஞ்சுழி, திருக்குடமூக்கு, திருக்குடந்தை கீழ்கோட்டம், திருக்குடந்தைக் காரோணம், திருநாகேஸ்வரம், திருவிடைமருதூர், தென்குரங்காடுதுறை, திருநீலக்குடி, திருவைகல் மாடக்கோவில், திருநல்லம், திருக்கோழம்பம், கருவிலிக்கொட்டிட்டை, திருபேணுபெருந்துறை, திருநறையூர், அரிசிற்கரைப்புத்தூர், சிவபுரம், திருகலயநல்லூர், திருக்கருக்குடி, திருச்சேறை, திருப்பரிதிநியமம்
நாகப்பட்டிணம் மாவட்டம் (21)
திருவாவடுதுறை, திருத்துருத்தி, திருவழுந்தூர், மயிலாடுதுறை, திருவிளநகர், திருப்பறியலூர், திருசெம்பொன்பள்ளி, திருநனிபள்ளி, திருவலம்புரம், திருதலைச்சங்காடு, திருஆக்கூர், திருக்கடவூர், திருக்கடவூர் மயானம், திருப்புகலூர், திருப்புகலூர் வர்த்தமானீச்சுரம், திருசெங்கட்டாங்குடி, திருமருகல், நாகைக் காரோணம், சிக்கல், திருக்கீழ்வேளூர், தேவூர்,
புதுவை மாநிலம் (4)
திருவேட்டக்குடி, திருதெளிச்சேரி, திருதர்மபுரம், திருநள்ளாறு
திருவாரூர் மாவட்டம் (59)
திருநல்லூர், திருக்கோட்டாறு, அம்பர் பெருந்திருக்கோவில், அம்பர் மாகாளம், திருமீயச்சூர், திருமீயச்சூர் இளங்கோவில், திருதிலதைப்பதி, திருப்பாம்புரம், சிறுகுடி, திருவீழிமிழிலை, திருவன்னியூர், திருவாஞ்சியம், நன்னிலம், திருகொண்டீச்சரம், திருப்பனையூர், திருவிற்குடி, இராமனதீச்சுரம், திருபயற்றூர், திருச்சாத்தமங்கை, பள்ளியின் முக்கூடல், திருவாரூர், திருவாரூர் அரநெறி, ஆரூர் பறவையுன்மண்டளி, திருவிளமர், திருக்கரவீரம், திருப்பெருவேளுர், திருதலையாலங்காடு, திருக்குடவாயில், திருநாலூர் மயானம், கடுவாய்க்கரைப்புத்தூர், திருஇரும்பூளை, திருஅரதைப் பெரும்பாழி, திருஅவளிவநல்லூர், திருவெண்ணியூர், திருப்பூவனூர், திருப்பாதாளீச்சரம், திருக்களர், திருசிற்றேமம், திருவுசத்தானம், திருஇடும்பாவனம், திருக்கடிக்குளம், திருத்தண்டலை நீணெறி, திருக்கோட்டூர், திருவெண்டுறை, திருக்கொள்ளம்புதூர், திருப்பேரெயில், திருக்கொள்ளிக்காடு, திருதெங்கூர், திருநெல்லிக்கா, திருநாட்டியாத்தான்குடி, திருக்காறாயில், திருகன்றாப்பூர், திருவலிவலம், திருகைச்சினம், திருக்கோளிலி, திருவாய்மூர், திருமறைக்காடு, அகத்தியான்பள்ளி, கோடியக்கரை

பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் - ஒரு கண்ணோட்டம் ...

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் அநேக சிவன் கோவில்கள் இருந்தாலும், 274 கோவில்கள் மட்டுமே பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் என்ற சிறப்பைப் பெற்றிருக்கின்றன. தேவார மூவர் என்று போற்றப்படும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் வாழ்ந்திருந்த காலமாகிய 7, 8 மற்றும் 9-ம் நூற்றாண்டுகளில் இயற்றப்பட்ட தேவார பதிகங்களில் இந்தக் கோவில்களைப் பற்றியும், கோவில்களில் குடி கொண்டுள்ள சிவபெருமானைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது. பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் என்று கூறப்படும் இந்தக் கோவில்கள் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை. அவ்வளவு பழம் பெருமை வாய்ந்த இந்தக் கோவில்கள் தனிச்சிறப்பு பெற்றதில் வியப்பில்லை.

தமிழ்நாட்டில் தேவாரம் எழுந்ததற்கு முன்பே சிவாலயங்கள் இருந்து வந்தன. அடியார்கள் அந்தந்த ஊர்களில் ஆலய வழிபாடு செய்து வந்தார்கள். இராஜ ராஜ சோழனும், நம்பியாண்டார் நம்பிகளும் தில்லை சிதம்பரத்தில் தேவாரம் எழுதியிருந்த ஏட்டுச் சுவடிகளைக் கண்டுபிடித்து எடுத்த போது அவைகள் கறையானால் மூடப்பட்டிருந்தது. பிறகு எண்ணை ஊற்றி கறையானைப் போக்கி ஏட்டை எடுத்துப் பார்க்கும் போது பல பதிகங்கள் சிதைந்திருந்தன. அதைக் கண்டு சோழ மன்னன் வருந்தியபோது "ஈண்டு வேண்டுவன வைத்தோம்" என்று அசரீரி வாக்கு எழ, பிறகு கிடைத்தவற்றை ஒழுங்கு படுத்தினார்கள். தேவார மூவர் என்று போற்றப்படும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் தோன்றி தேவாரம் பாடிய பிறகு, தேவாரம் பெற்ற ஸ்தலங்களுக்கு தனி மதிப்பு ஏற்பட்டது. அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய இந்த மூவரும் அக்காலத்தில் இருந்த இந்தக் கோவில்களுக்குச் சென்று அங்கு குடி கொண்டுள்ள இறைவனைத் தரிசித்து இறைவன் மேல் பதிகங்கள் பாடியுள்ளனர். பல இடங்களில் பதிகங்கள் பாடி அற்புதங்களும் நிகழ்த்தியுள்ளனர். உதாரணமாக திருமருகல் என்கின்ற சிவஸ்தலத்தில் பாம்பு கடித்து இறந்த ஒரு வணிகனின் உயிரை மீட்டுத் தரும்படி அவன் மனைவி கதறி அழுது கேட்டுக்கொண்டதின் பேரில் அவள் பால் இரக்கப்பட்டு " சடையாய் எனுமால் " எனத் தொடங்கும் பதிகம் பாடி திருஞானசம்பந்தர் இறைவனிடம் உயிர்ப் பிச்சை கேட்டார். இறந்த வணிகனும் திருமருகல் இறைவன் மாணிக்கவண்ணர் பேரருளால் உயிர் பெற்று எழுந்தான். அதே போன்று திங்களூர் சிவஸ்தலத்தில் பாம்பு கடித்து இறந்து விட்ட அப்பூதியடிகள் மூத்த மகனை "ஒன்று கொலாம் " என்று ஆரம்பிக்கும் பதிகம் பாடி இறந்தவனை உயிர்ப்பித்து எழுப்பிய அற்புதம் திருநாவுக்கரசரால் நிகழ்ந்தது. ஒவ்வொரு சிவஸ்தலமும் ஒவ்வொரு பெருமை பெற்றது.

தேவார மூவர் என்று போற்றப்படும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் மூவரும் அவர்கள் காலத்தில் உள்ள போக்குவரத்து சிரமங்களையும் பாராமல் இந்த கோவில்களுக்குச் சென்று அங்குள்ள சிவபெருமானைப் பாடி புகழ்ந்துள்ளனர். ஒரு சில சிவஸ்தலங்களுக்கு இவர்கள் நேரில் போகாமல் இருந்த போது, இறைவனே இவர்கள் கனவிலோ அல்லது அசரீரியாகவோ கூப்பிட்டு அவர்களை வரச்செய்து இறைவன் தன் மேல் பதிகங்கள் பாட வைத்திருக்கிறார்.

இவர்கள் பாடிய பதிகங்கள் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகள் பல ஆண்டுகளாக சிதம்பரம் கோவிலில் உள்ள ஓர் அறையில் பூட்டி வைக்கபட்டு இருந்தன. திருமுறை கண்ட சோழன் என்றழைக்கப்படும் ராஜராஜ சோழன் காலத்தில் இவை கண்டுபிடிக்கப்பட்டு திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி என்பவரால் தொகுத்து ஒழுங்கு படுத்தப்பட்டன. சைவத் திருமுறைகள் 12 ஆக வகுக்கப்பட்டுள்ளன. இவற்றில் முதல் 7-ம் தேவார மூவர் பாடிய பதிகங்களைப் பற்றிய விபரங்களைக் கொண்டுள்ளன. முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தர் பாடிய பதிகங்களைக் கொண்டுள்ளன. 4,5, 6-ம் திருமுறைகளில் திருநாவுக்கரசர் பாடிய பதிகங்களும், 7-ம் திருமுறையில் சுந்தரர் பாடிய பதிகங்களும் இடம் பெற்றுள்ளன. தமிழ் இலக்கியங்களில் தேவாரப் பாடல்கள் என்று குறிப்பிடப்படும் இந்த பதிகங்கள் ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ளன.


திருநாவுக்கரசர் (அப்பர்)

சிவன் கோவில்களுக்கு நேரில் சென்று பதிகம் பாடிய சிவஸ்தலங்கள் - 125

நேரில் செல்லாமல் மற்ற சிவன் கோவில்களில் குடிகொண்டுள்ள சிவபெருமானைப் பற்றி பதிகம் பாடிய சிவஸ்தலங்கள் - 98

பதிகம் பெறாத சிவஸ்தலங்கள் - 51

திருஞானசம்பந்தர்

சிவன் கோவில்களுக்கு நேரில் சென்று பதிகம் பாடிய சிவஸ்தலங்கள் - 219

நேரில் செல்லாமல் மற்ற சிவன் கோவில்களில் குடிகொண்டுள்ள சிவபெருமானைப் பற்றி பதிகம் பாடிய சிவஸ்தலங்கள் - 12

பதிகம் பெறாத சிவஸ்தலங்கள் - 43

சுந்தரர்

சிவன் கோவில்களுக்கு நேரில் சென்று பதிகம் பாடிய சிவஸ்தலங்கள் - 84

நேரில் செல்லாமல் மற்ற சிவன் கோவில்களில் குடிகொண்டுள்ள சிவபெருமானைப் பற்றி பதிகம் பாடிய சிவஸ்தலங்கள் - 54

பதிகம் பெறாத சிவஸ்தலங்கள் - 136

Saturday 27 August 2016

சந்திரகலை என்றால் என்ன?


இடது நாசி(இடது பக்க மூக்கு) சுவாசம் சந்திரகலை எனவும், வலது நாசி(வலது பக்க மூக்கு) சுவாசம் சூரியகலை எனவும் அழைக்கப்படும். சந்திரகலையை மதி/இடகலை/இடைக்கால் எனவும், சூரியகலையை பிங்கலை/பின்கலை/வலக்கால் எனவும் அழைக்கப்படுவதுண்டு.இங்கு 'கால்' என்பது மூச்சைக் குறித்து நிற்கின்றது. அதனால் தான் 'காலனைக் காலால் உதைத்தேன்' எனச் சித்தர்களும் ஞானியரும் கூறுவதுண்டு. இங்கு காலனாகிய
இறப்பை, காலாகிய மூச்சுக்காற்றைச் சுழிமுனையில் ஒடுங்கச் செய்வதன் மூலம் பிறவிப்பிணி நீங்கி ஒளியுடம்பு பெற்று மரணமில்லாப் பெருவாழ்வு/சகாக்கலை அடைதலைக் குறிக்கும்.

'விதியை மதியால் வெல்லலாம்' என்பார்கள். இங்கு மதி என்று கூறப்படுவது புத்தி அல்ல. மதி என்றால் சந்திரன். 16 அங்குலம் ஓடக்கூடிய சந்திரகலையை சுருக்க சுருக்க ஆயுள் விருத்தியாகும். எனவே விதி முடிவும் விலகியே போகும்.

ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு; மூச்சை உள்ளே இழுப்பது ஒரு பங்கு, நேரம் . உள்ளே அதை தங்கவைப்பது 4 பங்கு நேரம். மூச்சை வெளியே விடுவது 2 பங்கு நேரம். இதுதான் பிராணாயாமத்தின் சாராம்சம்.

நமது நுரையீரலில் வலது, இடது என இரு பகுதிகள். வலது நுரையீரலில் 3 பகுதிகள், இடது நுரையீரலில் 2 பகுதிகள். நுரையீரல் 'ஸ்பாஞ்' போல காற்றுப் பைகளால் ஆனது. வலதுபக்கம் சாய்ந்து படுக்கும்போது, வலது நுரையீரலில் உள்ள 3 பகுதிகளும் அழுத்தப்பட்டு இடது நாசி வழியாக மூச்சுக்காற்று ஒரே சீராக உள்ளிழுக்கப்பட்டு உடல் முழுக்க 'பிராணா' சக்தி சீராகப் பரவுகிறது .

இடது நாசி வழியாக ஓடும் மூச்சு , 'சந்திரகலை'. இது குளுமையானது . வலது நாசி வழியாக ஓடும் மூச்சு , 'சூரியகலை'. இது வெப்பமானது. வலதுபக்கம் சாய்ந்து படுக்கும்போது குளுமையான 'சந்திரகலை' அதிகரிக்கும். இது மன படபடப்பைக் குறைத்து தூக்கத்தையும் வரவழைக்கும்.

இந்திரன் எங்கே இருக்கிறார் ? தேவலோகத்திலா ?

தேவேந்திரன் என்று அழைக்கப்படும் இந்திரன் தேவர்களுக்கெல்லாம் தலைவன். வஜ்ராயுதம் தாங்கி தேவலோகத்தில் வசிப்பார் என புராணங்களிலும் , திரைப்படங்களிலும் பார்த்திருக்கலாம். இந்திரன் என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது அசுரர்கள் அவரை தோற்கடிப்பார்கள், இறைவனிடம் முறையிட்டு மீண்டும் அப்பதவியை அடைவார் என்பது தானே?பெண்கள் மேல் மையல் கொள்ளும் இந்திரனாகவும், ரம்பா ஊர்வசி மேனகையின் நடனத்தை காணும் இந்திரன் என அவர் மேல் நமக்கு நல்ல நினைப்பே வரும் அளவுக்கு அவரை பற்றி கதைகள் இல்லை. முனிவரின் மனைவி மேல் மையல், கையை பிடித்து இழுத்தார் என பல வில்லங்கமான கதைகள். அப்படிபட்ட தேவேந்திரன் யார் என பார்ப்போம்.

இந்திய கலாச்சாரத்தில் பலவகையான எழுத்து வகைகள் உண்டு. அவற்றை தெளிவாக தெரிந்து கொண்டால் இந்திரனை அறிய வசதியாக இருக்கும். காவியங்கள், புராணங்கள் மற்றும் இதிகாசங்கள் என்பவையே மூன்று வகையாக எழுத்துவகைகள்.

காவியங்கள் என்பது முழுமையாக கற்பனை கதாப்பத்திரங்களை வைத்து எழுத்தாளர் எழுதும் புதினம் எனலாம்.

உதாரணமாக சகுந்தலம் எனும் காவியம் புனையப்பட்டது. தற்காலத்தில் நாவல் எனும் தன்மை இதற்கு ஒப்பாக சொல்லாம். இதிகாசம் என்பதன் வடமொழி விளக்கம் உங்களுக்கு போதுமானதாக இருக்கும். “இதி” என்றால் “இவ்வாறு” , ஹாசா என்றால் “நடந்தது”. ஓர் சம்பவம் இவ்வாறு நடத்தது என்பதனை உலகுக்கு உணர்ந்த எழுதப்பட்டது இதிகாசம். ராமாயணம், மஹாபாரதம் என்பவை இதிகாசங்கள்.

புராணங்கள் என்பது சில உயர்நிலையில் உள்ள சூட்சுமமான விஷயங்களை பாமரனுக்கு புரியும் நோக்கில் சுவாரசியமாக கூறும் எழுத்துவகை. டார்வின் தியரி எனும் விஷயத்தை பாமரனுக்கு விளக்கினால் புரியாது என்பதால் அவனுக்கு நெருக்கபான விஷ்யத்தை வைத்து கூறப்பட்டது தசாவதாரம் எனும் புராண கதை. இந்த விஷயம் பாகவதம் எனும் புராணத்தில் இருக்கிறது.

புராணங்களில் வரும் கதைகளையோ, கதையின் உள்நோக்கத்தையோ காணாமல் மேலெழுந்த வாரியாக பார்த்தால், வேடிக்கையாக இருக்கும். பாமர நிலையில் இருக்கும் ஒருவனுக்கு உயர் ஞான விஷயத்தை விளக்குவதே புராணங்களின் நோக்கம்.

புராணங்களை தொகுத்து உலகிற்கு அளித்தவர் வியாசர். அவர் தனது ஞான நிலையிலிருந்து இறங்கி சராசரியான மனிதனுக்கு புரியும் நோக்கில் பதினோரு புராணங்களை தொகுத்தார். நீங்கள் பிரம்மாண்டமான விஷயங்களை புரிந்து கொள்ளாதவராக இருந்தால் இந்திரன் என்பவர் தேவலோகத்தில் மனித வடிவில் இருப்பவர் என்றே கற்பனை செய்ய முடியும். இந்திரன் என்பது ஓர் ஆற்றலின் குறிசொல் அவ்வளவே.

மின்சாரத்தை தான் இந்திரன் என உருவகபடுத்தி இருக்கிறார்கள். மேலும் இந்திரன் என்பவர் ஒருவர் கிடையாது. தேவந்திர பதவிக்கு பலர் போட்டியிடுவர் என்றும் புராணங்களில் உண்டு.

வருணன் (நீர்), வாயு ( காற்று), அக்னி, சூரியன் மற்றும் பிற தேவர்கள் இந்திரனுக்கு கீழே இருப்பவர்கள் என்பது உங்களுக்கு தெரியும். ஏன் இவர்கள் கீழே இருக்க வேண்டும்? இந்திரன் ஏன் தலைவனாக இருக்க வேண்டும்?

நீர், காற்று, அக்னி, மற்றும் சூரியன் என அனைத்திலிருந்தும் நவீன மனிதன் மின்சாரத்தை தயாரிக்க முடியும். மின்சாரம் அனைத்திலும் பிரதானமாக இருப்பதால், இந்திரன் எனும் மின்சாரம் அனைத்திலும் முதன்மையாக இருக்கிறது.

இந்திரனுக்கு ஆயிரம் கண் என்றும் அது ஏன் எற்பட்டது என்ற விவகாரமான கதையையும் படித்திருப்பீர்கள். மின்சாரத்திற்கு ஓர் முனை செயல்பாடு கிடையாது, பல இணைப்புகளை கொடுக்க கொடுக்க, அனைத்திலும் மின்சாரம் பாயும். இதை உணர வைக்க எப்படிப்பட்ட கதை சொல்ல வேண்டி இருக்கிறது....!

மின்சாரம் என்பது பல பொருட்களுக்கு உற்பத்தி ஆதாரமாக இருக்கிறது. அதனால் தான்உற்பத்தி சம்பந்தமான (உறுப்புகள்) விஷயங்களுக்கு இந்திரனை காரணமாக்குகிறார்கள்.

தொலைகாட்சி மற்றும் இதர சாதனங்கள் மின்சாரத்தால் இயங்குகிறது என்பது உங்களுக்கு தெரியும். நவீன காலத்தில் தொலைகாட்சி, கணினி மற்றும் வானொலி தான் ரம்பா, ஊர்வசி மேனகா.

இக்கட்டுரையை வாசிக்கும் சமயம் தியானத்தில் உற்கார்ந்து பாருங்கள், பக்கத்து வீட்டின் டீவி ஒலி, உங்கள் செல்போன் என பல விஷயங்கள் உங்களை இடையூராக்கும். விஸ்வாமித்திரருக்கும் இதே அனுபவம் நேர்ந்தது. இந்திரன் எனும் மின்சாரம் மனிதன் எனும் விஸ்வாமித்திரர்களை தன்னை போல் ஆற்றல் வாய்ந்தவர்களாக மாறாமல் தடுக்க தியானத்திற்கு இடையூரு செய்யும் நோக்கில் தொலைகாட்சி-வானோலி-கைபேசி எனும் ரம்பா-ஊர்வசி-மேனகை அனுப்புகிறார்.

மனித உடலில் கூட மின்சாரம் உண்டு என்கிறது நவீன விஞ்ஞானம். யோக சாஸ்திரமும் மனித உடலின் முதுகெலும்பு பகுதியில் இந்திரன் வசிக்கிறார் என்கிறது. இந்திரனின் கையில் இருப்பது வஜ்ராயும் என்னும் கருவி. மின்னல் என்பதன் வடமொழி சொல்லே வஜ்ரம் என்பதாகும். மின்னலில் எண்ணிலா மின்சார சக்தி இருப்பதாக கூறுகிறார்கள். அதனால் இந்திரன் மின்சார உருவகம் என்பதில் வஜ்ராயுதமே சாட்சி.

Friday 26 August 2016

ருத்ராக்ஷம் பகுதி 2


ருத்ராக்ஷம் 

-உயிருள்ள ஜடப்பொருள்


ருத்ராக்ஷம் என்பது ருத்ரனின் ஆக்ஷம் என விளக்குபவர் உண்டு. ஆக்ஷம் என்றால் கண்ணீர் என பொருள்பட சிவனின் கண்ணீர் என ருத்ராக்ஷம் எனும் சொல்லை மொழி பெயர்ப்பார்கள்.சிவன் ஏன் அழவேண்டும்? அவருக்கு என்ன கஷ்டம் வந்தது அழுது கண்ணீர் வடிக்கும் அளவிற்கு, என குழப்பம் கொள்ளும் அளவிற்கு இத்தகைய மொழிபெயர்ப்பு அமைந்து விடுகிறது. ருத்ரன் எனும் சிவ அம்சம் அதிக ஆற்றல் வாய்ந்த, வேகமான ஆன்ம உணர்வை ஊட்டும் நிலையாகும். தவநிலையிலிருந்து வெளிப்பட்டவுடன் அதிக வேகமான இயக்க நிலைக்கு சிவன் மாற்றம்மடையும் தன்மை ருத்ராம்சம் என அழைக்கப்படும்.

சூரியனின் மையம் ருத்ரமண்டலம் என அழைக்கப்படுவதை கொண்டு ருத்ராம்சம் என்பது எத்தகைய ஆற்றல் வாய்ந்தது என பொருள்கொள்ளலாம். ருத்ரநிலையில் தனது புருவ மத்தியில் உள்ள மூன்றாம் கண்ணை திறக்கும் பொழுது வெளிப்பட்டஆற்றல் திண்ம வடிவில் மாற்றம் அடைவதே ருத்ராக்ஷம் என அழைக்கிறோம்.

ஆக்ஷம் என்ற சொல்லுக்கு " கண்ணிலிருந்து வெளிப்படுவது" என்றும்பொருள்கொள்ளமுடியும். ருத்ரனின் நெற்றி கண்ணிலிருந்து உதிரும் பொருள் என சரியாக மொழி பெயர்க்க வேண்டும். இதன் மூலம் சூரியனுக்கு ஒப்பான ஆற்றல் கொண்டது ருத்ராக்ஷம் என்றும் மனதில் கொள்ளவேண்டும். சூரியன் எவ்வாறு தன்னுடைய ஆற்றல் மூலம் சூரிய மண்டலத்தை உருவக்கியதோ அது போல ருத்ராக்ஷம் தனது ஆற்றல் மூலம் அதன் சூழ்நிலை முழுவதும் கட்டுப்பட்டில் வைக்கும் சக்தி கொண்டது.

ருத்ராக்ஷத்திற்கு என சில இயல்பு குணங்கள் உண்டு. சக்தியூட்டப்பட்ட ருத்ராக்ஷம் அணிந்திருப்பவர்களை மிருகம் மற்றும் விஷ ஜந்துக்கள் தீண்டாது என்பது அறிவியலுக்கு அப்பாற்பட்ட உண்மை. இதனால்தான் காடுகளில் தவம்செய்ய செல்லும் ரிஷிகள் தங்களின் உடல் முழுவதும் ருத்ராக்ஷத்தை அணிந்தார்கள்.

ருத்ராக்ஷம் என்பது நமக்கு நிகரான ஒர் உயிரின் வடிவம் என அறிந்து கொள்வது அவசியம்.நீங்கள் ருத்ராக்ஷத்தை தொடர்ந்து அணிபவராக இருந்தால் உங்களுக்கு ஏற்படும் சுக-துக்கங்களின் வெளிப்பாடு ருத்ராக்ஷத்திலும் தெரியும். உங்களின் உடலில் அதிகமான உடலுக்கு ஒத்துக்கொள்ளாத வேதிப்பொருட்கள் இருந்தால் ருத்ராக்ஷம் தனது இயல்பு நிறத்தை மற்றிக்கொள்ளும். விஷபொருட்கள் உடலில் கலந்தால் ருத்ராக்ஷம் அந்த விஷப்பொருட்களைப் பிரித்தெடுத்து தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் வகையில் உடைந்து விடுவதை எனது அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.

தியான நிலையில் இருப்பவர்களுக்கு சூட்சும முறையில் ஆற்றலை கடத்துதல், அவர்களின் ஆன்மாவுடன் உரையாடுதல் என ருத்ராக்ஷம் ஒர் உயிராகவே செயல்படும். 108 மணிகள் கொண்ட ருத்ராக்ஷ மாலை அணிந்து வலம் வருபவர் ஒரு கூட்டமாக நூற்றுக்கு மேற்பட்டவர்கள் உலா வருவதற்கு சமமான செயலை செய்கிறார் என்பதை உணரவேண்டும்.

ருத்ராக்ஷம் பயன்படுத்த எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை. குறிப்பிட்ட ஜாதி, மத, இன வேறுபாடு கிடையாது. ஆண்/பெண் என இருவரும் பயன்படுத்தலாம். வயது மற்றும் இதர விசயங்கள் தடையாக இருக்காது. ஆனால் ஒழுக்கமும் தூய்மையும் ருத்ராக்ஷத்திற்கு முக்கியமான ஒன்று.


தூய்மையற்ற நிலையிலும் ஒழுக்கமற்ற நிலையிலும் பயன்படுத்தும் பொழுது ருத்ராக்ஷத்தின் இயல்பு நிலையான தன்மை பாதிக்கப்படுகிறது. மேலும் தெய்வீகமான ஒர் பொருளை எவ்வாறு பாதுகாப்போமோ அதற்குண்டான மரியாதை செலுத்துவது நல்லது.

எனக்கு தெரிந்த ஓர் சினிமா நடிகர் ருத்ராக்ஷத்தை தவறாக ஃஷேன் ஷோவில் பயன்படித்தினார். அதுவரை சிறப்பாக இருந்த அவரின் வெற்றிகள் தடம்மாற துவங்கின. அதனால் ருத்ராக்ஷம் பயன்படுத்தும் பொழுது கவனம் தேவை.

குரு தீஷை பெற்றவர்கள் தினமும் ஜெபம் செய்த பிறகு ருத்ராக்ஷ மாலையை கழுத்தில் அணிவது நல்லது.ஜெபிக்கப்பட்ட மந்திரமானது ருத்ரக்ஷ மாலையில் தொடர்ந்து அதிர்வுகளை உண்டு பண்ணி அன்ரு முழுவதும் அவர்களை ஆனந்திக்கச் செய்யும்.

மந்திர ஜெபம் செய்யாதவர்கள் கூட ஆன்மீக ஆற்றல் வாய்ந்தவர்களிடத்தில் பிரசாதமாக வாங்கி அணிந்து கொள்ளலாம். இதை தவிர வேறு தன்மையில் ருத்ராக்ஷம் அணிந்தால் அது ஓர் சாதாரண அணிகலனுக்குச் சமமானது. வேரு விசேஷம் அதில் இல்லை.

ருத்ராக்ஷ மாலையை பயன்படுத்தும் பொழுது நன்றாக பாதுகாப்பது முக்கியமான ஒன்று. கெமிக்கல் பொருட்கள், சோப் மற்றும் இதர செயற்கைப் பொருட்கள் படாமல் பாதுகாக்க வேண்டும்.

பயன்படுத்த துவங்குவதற்கு முன்னால் ஒரு வார காலம் பசு நெய் அல்லது நல்லெண்ணையில் ஊறவைக்க வேண்டும். பின்பு நீரால் கழுவி ஈரம் போக துடைத்து விட்டு திருநீறில் ஒரு நாள் முழுவதும் வைக்கவேண்டும். பின்பு காய்ச்சாத பசும்பாலில் கழுவி நீரில் முக்கி எடுத்து நன்றாக துடைத்துக் கொள்ளவும். பின்பு பூஜையில் வைத்து ஜெபங்கள் செய்து அணியலாம். இந்த தூய்மையாக்கும் முறையை வருடத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும். மாத சிவராத்திரி அல்லது மஹாசிவராத்திரி அன்று அணியுமாறு தூய்மை வேலையை துவக்க வேண்டும்.


ருத்ரக்ஷத்தை தூய்மை செய்ய இத்தனை வேலை செய்ய வேண்டுமா என்ற மனநிலை ஏற்படுகிறதா? இதை செய்ய வேண்டிய அவசியத்தை நிதர்சனமான விஷயத்திலிருந்து பார்ப்போம். உங்கள் உடலில் மேல்தோல் முழுவதும் இல்லாமல் வெறும் சதைப்பகுதி மட்டும் வெளியே தெரிந்தால் உங்கள் உடல் எவ்வளவு உணர்வு மயமாக இருக்கும். இதற்கு ஒப்பானது ருத்ராக்ஷத்தின் உணர்வு நிலை. அதனால் தான் மேற்பகுதியை கடினமாக்கவும், உணர்வு மிகாமல் சரியான நிலையை அடைய இயற்கையான பொருள் மூலம் சுத்திகரிக்க முயல்கிறோம்.

ருத்ராக்ஷ மணிகளில் பல வகைகள் உண்டு. ஒன்று முதல் பதினான்கு முகங்கள் வரை ருத்ராக்ஷ மணிகள் கிடைக்கிறது. முகம் என்பது ருத்ரக்ஷ மணிகள் மேல் உள்ள செங்குத்தான கோடுகள் ஆகும். ஆரஞ்சு பழத்தை தோல் உரித்தால் உள் பகுதியில் ஒவ்வொரு சுளைக்கும் இடையே தெரிவது போல உள்ள பகுதியை முகம் என அழைக்கிறார்கள். ஒவ்வொரு முக தன்மைக்கு ஏற்ப ருத்ராக்ஷம் ஆற்றலை வேறுபடுத்துகிறது என்றும் அதன்மூலம் கிடைக்கும் பலன்கள் வேறுபடுகிறது என்றும் கூறுகிறார்கள். உண்மையில் ருத்ராக்ஷத்திற்கு பலன் தருவது, செல்வம் கொடுப்பது போன்ற செயல் கிடையாது.நவரத்தின கல் போல இதனையும் வியாபாரமாக்கும் யுக்தியே இந்த பிரச்சாரம்.

ருத்ரக்ஷத்தை தங்கம், தாமிரம் அல்லது பருத்தி நூலில் மாலையாக அணிவது நல்லது. நூலில் அணியும் பொழுது மட்டும் நெருக்கமாக கோர்த்து அணிய வேண்டும். ருத்ரக்ஷ வடிவங்களுக்கு என்று சில முக்கிய செயல்கள் உண்டு. இந்த ஒவ்வொரு வகையான ருத்ரக்ஷமும் அடிப்படையில் ஒன்றான செயல்களை செய்தாலும், சில பிரத்யேக காரணங்களுக்கும் பயன்படுத்தலாம்.

1. ஐந்து முக ருத்ராக்ஷத்தை மட்டுமே (கிரஹஸ்தர்கள்) குடும்ப வாழ்க்கையில் உள்ளவர்கள் பயன்படுத்தலாம்.

2. ஏக முகி என அழைக்கப்படும் ஒருமுக ருத்ராக்ஷம் சன்யாசிகள் மட்டுமே அணியவேண்டும். பிறர் வீட்டில் உள்ள சாலிக்ராமம் மற்றும் விக்ரஹம் போல வைத்து பூஜை செய்யலாம்.

3. நான்கு முக ருத்ராக்ஷத்தை பயன்படுத்தினால் கலை நயம், சங்கீத ஞானம் போன்ற கலையாற்றல் வளரும். குழந்தை பிறப்பு இல்லாமல் சிரமப்படுபவர்களுக்கு நான்கு முக ருத்ராக்ஷத்தை பயன்படுத்துவதால் தடை நீங்க வாய்ப்பு உண்டு.

4. துடிப்பு இல்லாமல் சோர்வுடன் இருக்கும் பன்னிரெண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆறுமுக (ஷண்முகி) ருத்ராட்சம் நல்ல பலனை அளிக்கும்.

5. மணவாழ்க்கையில் வாழ்க்கைத் துணைவருடன் பிரிவு உள்ளவர்கள் கௌரி சங்கர் என்ற ருத்ராட்ச வகையை அணிந்தால் மண வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு.

தனியாக ஒரே ஒரு ருத்ராக்ஷம் அணிவதை விட மணிமாலையாக அணிவது நல்லது. பஞ்சமுக ருத்ராக்ஷத்தை தவிர வேறு வகையான ருத்ராக்ஷம் அரிது. எனவே நமது பஞ்ச ப்ராணன்களில் சக்தி நிலை மேம்பட 108 மணிகள் கொண்ட ஐந்துமுக ருத்ராக்ஷத்தை அணிந்தால் அனைத்து மேம்பாட்டையும் பெறலாம்.

ருத்ராக்ஷத்தில் போலியான மணிகள் வருவதுண்டு. இதை எவ்வாறு கண்டறிவது என குழப்பம் அனைவருக்கும் உண்டு. ருத்ராக்ஷம் தனக்கெனசில தனித் தன்மைகளைக் கொண்டது. தாவர வகையாக இருந்தாலும் நீரில் மூழ்கிவிடும். மரவகைகள் நீரில் மிதப்பதைப் போல மிதக்காது. ருத்ராக்ஷத்தில் செயற்கையாக எதையும் இணைக்க முடியாது.

ருத்ராக்ஷ மணியின் துளைகளுக்கு அருகே செப்பு நாணயங்களை வைத்தால் ருத்ராக்ஷம் காந்தப்புலம் விலகுவதை போல வேறு திசைக்கு மாற்றமடையும். ருத்ராக்ஷம் போன்ற உருவத்தில் இருக்கும் சில மரவகைகள் உண்டு. இதை" பத்ராட்சம் " என அழைப்பார்கள். இதில் சாயத்தைக் கொடுத்து ருத்ராக்ஷம் போல விற்பனை செய்வார்கள். தகுந்த பரிசோதனைக்குப் பிறகு வாங்குவது நல்லது.

ஜோதிட ரீதியாக ருத்ராக்ஷம் பயன்படுமா என்றால் முடியும் என்றே கூறலாம். ஒருமுக ருத்ராக்ஷம் முதல் அதன் வரிசைகிரமமாக உள்ள முக அமைப்புகள் சூரியன் முதல் சனி வரை உள்ள வானியல் அடிப்படையான கிரக வரிசைக்கு சமமானவை. எந்த கிரகத்தின் ஆற்றல் தேவையோ அந்த கிரகத்தின் அமைப்பு கொண்ட ருத்ராக்ஷத்தில் கிரகத்தின் மூலமந்திரத்தை ஜெபம் செய்து அணியலாம்.

ருத்ராக்ஷத்தை பல லட்ச ரூபாய் விலையில் விற்கவும் வாங்கவும் ஆட்கள் தயாராக இருக்கிறார்கள். பத்திரிகையிலும், தொலைக்காட்சிகளிலும் விளம்பரம் செய்கிறார்கள். பல கோடி ரூபாய் செல்வம் சேர ருத்ராக்ஷம் அணியுங்கள் என பிரச்சாரம் செய்கிறார்கள். எனக்கு தெரிந்தவரை எந்த ஒரு உடல் முழுவதும் ருத்ராக்ஷம் அணியும் எந்தசிவனடியாரும் கோடிஸ்வரராக இருந்து பார்த்ததில்லை. பிறருக்கு கோடிகளை அளிக்கும் ருத்ராக்ஷத்தை விற்கும் வியாபாரி ஏன் கோடீஸ்வரன் ஆவதில்லை என சிந்தித்துப் பார்த்தால் நிதர்சனம் புரியும்.

ருத்ராக்ஷத்தைக் கொண்டு கோடீஸ்வரனாக முடியாது. ஆனால் அண்டத்தைப் படைத்த ஈஸ்வரனாக முடியும். லஷ்மியை அடைய முடியாவிட்டாலும் ஆன்ம லஷியத்தை அடையமுடியும். பிறப்பு இறப்பு அற்ற நிலையை அடையும் முக்தி எனும் விருட்சத்தை வளர்க்க ருத்ராக்ஷம் என்ற விதையை விதையுங்கள்.

கணபதி மூர்த்திகளின் உருவங்களும், எண்களும்கணபதி மூர்த்திகளின் உருவங்களும், எண்களும் சித்தர்கள் விளக்கிய முறை
இவ்வுலகில் நாம் காணும் அனைத்தும் பிரணவத்திலிருந்துதான் தோன்றியுள்ளது. இவ்வாறு பிரணவ ஒலியிலிருந்து தோன்றிய உலகைக் காண்பதற்கு மனித உடலிலுள்ள மூலாதாரக் கனலே வழி வகுக்கிறது.
இதனால்தான் 'மூலாதாரத்தில் மூண்டெழும் கனலை' எழுப்பும் கலையை ஔவை மூதாட்டியும் விளக்கி உள்ளார்.

மூலாதாரத்தில் எழும் ஒலியும், ஒளியும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தன்மையை உடையதாக இருந்தாலும் ஒருவர் பிறந்த தேதிக்கும் அவருடைய மூலாதாரத்தில் எழும் ஆதாரக் கனலுக்கும் தொடர்பு இருப்பதால் தங்கள் பிறந்த தேதிக்கு உரித்தான கணபதி மூர்த்தியை உபாசித்து வருவதால் எளிதில் இந்த மூலாதாரக் கனலின் தன்மையைப் புரிந்து ஆன்மீகப் பாதையில் விரைவாக முன்னேற முடியும்.

கணபதி மூர்த்திகளின் உருவங்களுக்கும் எண்களுக்கும் உள்ள தொடர்பை சித்தர்கள் விளக்கிய முறையில் வழிபடுவோர் எளிதில் எண் சக்திகளைப் பெற்றுப் பயனடைய முடியும். ஒரு எண்ணிற்கும் அதற்குரித்தான கணபதி மூர்த்திக்கும் உள்ள இணைப்பை இங்கு அளிக்கிறோம்.

ஒன்றாம் எண் கணபதி

கணபதி மூர்த்தியின் வாகனமான மூஷிகம் என்னும் மூஞ்சூறு கணபதியின் திருவடிகளைத் தரிசித்த வண்ணம் அதன் தலை குனிந்து பணிந்து நிற்கும். இத்தகைய கணபதி மூர்த்தி எண் ஒன்றுக்கு உரித்தானவர். இவரின் திருஉருவத்தை கோயில்களில் அல்லது ஓவியங்களில், வண்ணப் படங்களில் தரிசித்து குறைந்தது 10 நீர்க் கொழுக்கட்டைகளை தானமாக அளித்து வந்தால் எண் ஒன்றின் சக்திகளை விரைவாகப் பெறலாம்.

பணிவுடன் வணங்கி நிற்கும் இந்த வாகன மூர்த்தியின் வரலாறு அறிவதற்கு மிகவும் அற்புதமானது. நவகிரக மூர்த்திகளில் ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வர பகவானைப் போல தெய்வ அவதார மூர்த்திகளின் வாகனங்களில் ஈஸ்வர பட்டம் பெற்ற மூர்த்திகளும் உண்டு. அவர்களுள் தலையாயவர் மூஷிகேஸ்வரர் என்னும் நாமத்துடன் பிள்ளையாரின் வாகனமாக அருள்புரியும் மூர்த்தியாவார். அவர் தன்னுடைய தவத்தின் நிறைவில் ஸ்ரீஅருணாசல மூர்த்தியிடமிருந்து ஈஸ்வர பட்டம் பெற்றவுடன் தன்னுடைய சற்குருவான பிள்ளையார் அப்பனுக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் எழுந்தருளிய கோலமே அதாவது பிள்ளையாரின் திருப்பாதக் கமலங்களை வணங்கி நின்ற தோற்றத்தையே பிள்ளையார் மூர்த்தி எண்களில் முதலிடம் ஒன்றுக்கு உரிய கோலமாக ஏற்றுக் கொண்டார். பணிந்தவனே பக்தன் என்று பக்திக்கு ஆதாரமாக பணிவு இருக்க வேண்டும் என்ற காரணத்தால் முதல் எண்ணிற்குரிய கோலமாக இதைக் கணபதி மூர்த்தி ஏற்றுக் கொண்டார் எனலாம்.

கணபதி மூர்த்தியின் இந்தத் திருவிளையாடலின் பின்னணியில் உள்ள ரகசியம் என்ன? 

எல்லா ரகசியங்களுக்கும் மூலமாக இருப்பதே திருஅண்ணாமலை புனித பூமியாகும். தான் சுமக்கும் ஈசனான பிள்ளையாருக்குத் தகுதியான வாகனமாக அமையும் பொருட்டு ஈஸ்வர பட்டம் பெறுவதற்காக எம்பெருமானை வணங்கி அதற்குரித்தான உபாயத்தையும் மூஷிகம் கேட்டார். அதைக் கேட்டு மனம் மகிழ்ந்த பிள்ளையார் மூர்த்தி திருஅண்ணாமலையைத் தொடர்ந்து வலம் வந்தாலே எல்லா அனுகிரகமும் கிடைத்து விடும் என்று பதிலுரைத்து அதற்கான ஒரு பூஜை முறையையும் தெரியப்படுத்தினார்.
திருஅண்ணாமலையை வலம் வரும்போது கிரிவலப் பாதையில் உடன் வரும் மற்ற ஜீவன்களின் திருப்பாதங்களை மட்டுமே நோக்கி வலம் வர வேண்டும். எக்காரணம் முன்னிட்டும் எந்த ஜீவனுடைய முழங்காலிற்கு மேல் மூஷிக வாகனத்தின் பார்வை பட்டு விடக் கூடாது என்பதே கணபதி மூர்த்தி மூஷிகருக்கு அளித்த பூஜை முறையாகும். கேட்பதற்கு மிகவும் எளிமையாக இருந்தாலும் சற்று யோசித்துப் பார்த்தால்தான் இந்த பூஜையை நிறைவேற்றுவது எவ்வளவு கடினம் என்பது புரிய வரும்.
திருஅண்ணாமலையை ஈ, எறும்பு, பறவைகள், விலங்குகள், பாம்புகள் என கோடி கோடி ஜீவ ராசிகள் வலம் வருகின்றன. எறும்பு, புழு, பூச்சி போன்ற ஜீவன்களை விட எலி வடிவில் இருக்கும் மூஷிக வாகனம் உருவத்தில் பெரிதாக இருப்பதால் இத்தகைய நுண்ணிய ஜீவ ராசிகளின் பாதங்களை மட்டும் பார்ப்பது என்பது எப்படி சாத்தியமாகும்?

அதற்காக ஓர் விந்தையான பூஜை முறையை தனக்குத்தானே ஏற்படுத்திக் கொண்டார் மூஷிகர். தரைக்கு மேல் கிரிவலம் மேற்கொண்டால்தானே மற்ற ஜீவ ராசிகளைப் பார்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். கிரிவலப் பாதையில் பூமிக்கு கீழ் மூன்று சாண் ஆழத்தில் துளையிட்டுக் கொண்டே அத்துளை வழியாகத் தன்னுடைய கிரிவலத்தை மேற்கொண்டார். தொடர்ந்து பல வருடங்கள் துளையிட்டுக் கொண்டே சென்றதால் மூஷிகருடைய பற்கள் நாளடைவில் பலம் இழக்கத் தொடங்கின. சிறிது காலம் சென்றவுடன் பற்கள் எல்லாம் கொட்டிப் போய் தன்னுடைய மூக்கு, கால்களால் மட்டுமே மண்ணைத் தோண்டித் தோண்டி கிரிவலத்தைத் தொடர்ந்து நிறைவேற்றி வந்தார். யுகங்கள் கடந்தன. கொஞ்சம், கொஞ்சமாக கால்களும் தேய்ந்து போனதால் மேற்கொண்டு மண்ணைத் தோண்ட முடியாமல் எங்கெல்லாம் சிறிய பொந்துகள் தென்படுகின்றனவோ அதன் வழியாக உருண்டு உருண்டு கிரிவலத்தைத் தொடர்ந்து நிறைவேற்றி வந்தார் மூஷிகர்.
ஒரு யுகத்தில் ஆவணி மாத சுக்ல பட்ச சதுர்த்தி திதி அன்று ஏக முக தரிசனப் பகுதியில் அருணாசல ஈசன் மூஷிகருக்கு காட்சி அளித்து, மூஷிகேஸ்வரா என்று தன் திருவாக்கால் அழைத்தார். அத்தருணத்திலும் மூஷிகேசருக்கு ஒரு சோதனை காத்திருந்தது. தன்னை அழைத்த குரல் எல்லாம் வல்ல எம்பெருமானின் குரலோசை என்று உணர்ந்தவுடன் உள்ளம் எல்லையில்லா ஆனந்தப் பரவசத்தில் திளைத்து தன்னையும் அறியாமால் எம்பெருமானின் திருமுகத்தை நிமிர்ந்து பார்க்கலாம் என்று சற்றே நினைத்தார். அப்போது தன் குருநாதரான கணபதி மூர்த்தியின் அருளாணை ஞாபகத்திற்கு வரவே தன் தவறை உணர்ந்து தன்னிலை பெற்றார். ஈசனின் திருமுகத்தை நோக்காமலே அவருடைய திருப்பாதங்களை மட்டும் வணங்கி தன்னுடைய பூஜையை நிறைவேற்றினார். எந்தச் சூழ்நிலையிலும் கடமை மறவாத, குரு வாக்கை உயிரினும் மேலாகப் போற்றி மதித்த மூஷிகேசரின் தவத்தை மெச்சிய ஈசன் அதிஅற்புதமான தெய்வீக வரங்களை எல்லாம் அவருக்கு வழங்கி மறைந்தார். மூஷிகேசருக்கு அருணாசல ஈசன் அருளாசி வழங்கிய ஏகலிங்க முக தரிசனப் பகுதி தற்போது ரமணாஸ்ரமத்தை அடுத்துள்ளது.

இவ்வாறு ஒவ்வொரு எண்ணிற்கும் உரிய கணபதி கோலத்தின் பின்னால் பற்பல காரணங்கள் உண்டு. இந்த காரணங்கள் என்னவென்பதை நீங்கள் ஆத்ம விசாரம் செய்து பாருங்கள். உரிய காலத்தில் மற்ற எண்களின் கோலத்திற்குரிய மகத்துவம் அளிக்கப்படும்

இரண்டாம் எண் கணபதி

இரண்டு கைகளாலும் லட்டைப் பிடித்துக் கொண்டு இரண்டு கால்களால் நின்று கொண்டிருக்கும் மூஷிக வாகனத்தை உடைய கணபதி மூர்த்தி எண் இரண்டுக்கு உரியவர் ஆவார். இத்தகைய மூர்த்திகளை வழிபட்டு பூரண கொழுக்கட்டைகளை 11, 20 என்ற எண்ணிக்கையில் சுவாமிக்கு நைவேத்தியம் செய்து சந்தியா நேரங்களில் தானம் செய்து வந்தால் எண் இரண்டின் சக்திகள் வாழ்விற்கு பல நன்மைகளைச் செய்யும்.

மூன்றாம் எண் கணபதி

கணபதி மூர்த்தியின் வாகனமான மூஷிகம் வெண்மையாக இருக்க வேண்டும். வெண்ணிற வாகனம் பெற்ற கணபதி மூர்த்தி எண் மூன்றுக்கு உரிய மூர்த்தியாகத் திகழ்வதால் அவரவர் கை கொள்ளும் அளவிற்கு மூன்று கைப்பிடி வேகவைத்த நிலக்கடலையை சுவாமிக்கு நைவேத்யம் செய்து மாணவர்களுக்குத் தானமாக அளித்தலால் எண் மூன்றின் சுப சக்திகளை எளிதில் பெறலாம்.

நான்காம் எண் கணபதி

இரண்டு கைகளிலும் தாமரை மலர்களை ஏந்திய கோலத்தில் திகழும் கணபதி மூர்த்தி எண் நான்கிற்கு உரிய மூர்த்தியாவார். மண் கலயத்தில் கொள்ளை வேக வைத்து சர்க்கரை கலந்து சுவாமிக்கு நைவேத்யம் செய்து கழுதைகளுக்கு தானம் அளித்தலால் எந்த வேலையிலும் நிரந்தரமாகப் பணி செய்ய முடியாமல் அலை பாயும் மனதுடன் இருப்பவர்களின் மன வேதனை தணியும். கடுமையாக வேலை செய்தும் அதற்குரிய கூலியோ, சன்மானமோ பெற முடியாக நிலை மாறும்.

ஐந்தாம் எண் கணபதி

பாசம், அங்குசத்தை கைகளில் ஏந்தி அருள் புரியும் கணபதி மூர்த்தி எண் ஐந்திற்குரிய கணபதி மூர்த்தி ஆவார். இவரை வணங்கி உருண்டை வடிவில் இலவம் பஞ்சு வைத்துத் தைத்த திண்டு தலையணைகளை நீண்ட நாள் படுத்த படுக்கையாக கிடக்கும் நோயாளிகளுக்கு, வயதானவர்களுக்குத் தானமாக அளித்தலால் வயதான காலத்தில் மற்றவர்கள் உதவியை எதிர்பார்த்து வாழும் நிலை ஏற்படாமல் இறைவன் காத்தருள்வார்.

ஆறாம் எண் கணபதி

கணபதி மூர்த்தி தன்னுடைய வலது காலை மடக்கி இடது காலைத் தொங்க விட்ட நிலையில் அருள்புரியும் கோலம் எண் ஆறுக்கு உரியதாகும். சுவாமியின் துதிக்கை வலஞ்சுழியாக இருத்தல் வேண்டும். இம்மூர்த்திகளை வணங்கி தேங்காய் பர்பி நைவேத்யம் செய்து தானம் அளித்தலால் நேரம் காலம் பார்க்காது கொடுத்த கடன்கள் உரிய காலத்தில் வசூலாகும். இது ஒருமுறையே கிட்டும் பரிகாரம் என்பதை நினைவில் கொள்ளவும்.

ஏழாம் எண் கணபதி

கணபதி மூர்த்தியின் துதிக்கை இடஞ்சுழியாக அமைந்து, மூர்த்தியானவர் தன்னுடைய இடது காலை மடக்கி, வலது கால் தொங்கிய நிலையில் அருள் வழங்கும் கோலம் எண் ஏழிற்கு உரியதாகும். இம்மூர்த்தியின் தரிசனமும், ஏழை இசைக் கலைஞர்களுக்கு நரம்பு இசைக் கருவிகள் தானமும் சொந்த வீடுகள் வாங்க விரும்புவோர்க்கு நலம் பயக்கும். சம்பூர்ண ராகங்களில் அமைந்த தியாகராஜ கீர்த்தனைகளை இறைவன் முன் பாடி வருதலால் வாஸ்து தோஷங்கள் விலகும்.

எட்டாம் எண் கணபதி

துதிக்கை மேலே தூக்கியவாறு ஆசீர்வதிக்கும் நிலையில் உள்ள கணபதி மூர்த்தி எண் எட்டுக்குரியவர் ஆவார். இவரை வணங்கி எள் கலந்த முறுக்கு, சீடைகளைத் தானம் அளித்தலால் சனி பகவான் பீடிப்பால் வரும் துன்பங்கள் ஓரளவு குறையும். எல்லா தெய்வ மூர்த்திகளுமே சனி பகவான் பீடிப்பால் துன்பம் அடைந்து விதியின் வலிமையை மக்களுக்கு உணர்த்தியுள்ளார்கள் அல்லவா? இந்த விதிக்கு விலக்காக அமைந்தவர்கள் பிள்ளையார், ஆஞ்சநேயர் மூர்த்திகள் மட்டுமே. இவ்வாறு பிள்ளையாரைப் பீடிக்க முடியாமல் சனி பகவான் தன்னுடைய பணியில் ஏற்பட்ட குழப்பத்தை நினைத்து மனம் வருந்தி நின்றபோது விநாயகப் பெருமான் தன்னுடைய துதிக்கையை துக்கி அவரை ஆசீர்வதித்து ஆறுதல் கூறினார். அன்று முதல் பிள்ளையாரின் இந்த தரிசனம் சனி பகவானால் பூஜிக்கப்பட்டு மக்களின் துயர் நீக்க வந்த கணபதி பிரசாதமாக அளிக்கப்பட்டுள்ளது.

ஒன்பதாம் எண் கணபதி

பத்மாசன கோலத்தில் அமர்ந்து துதிக்கையில் கும்பம் ஏந்திய கணபதி மூர்த்தி எண் ஒன்பதிற்குரிய இறை மூர்த்தியாவார். மங்கள சக்திகள் பூரணமாய்ப் பொலியும் இந்த இறைக் கோலத்தை தரிசனம் செய்து ஒன்பது சுற்றுகள் உடைய கை முறுக்கு தானம் செய்து வருதலால் பெண்களின் திருமணத் தடங்கல்கள் நீங்கி விரைவில் மண வாழ்வு மலரும். அபாய நிலையில் உள்ள நோயாளிகள் நலம் பெறுவர்.

குசா கணபதி

குசா எண்ணுக்கு உரித்தான மூர்த்தி குசா வாகன மூர்த்தி. பறவை இனத்தில் மயில் குசா சக்திகளைப் பெற்றுள்ளதால் இரண்டு மயில்களை வாகனமாக உடைய ஸ்ரீவைபவ கணபதி மூர்த்தி குசா எண்ணுக்கு உரிய மூர்த்தியாக போற்றப்படுகிறார்.