Wednesday 23 November 2016

நிவேதனம் , பூஜை, ஆகம விதி




1.1 ஒரு சிறு புல்லைக்கூட சிருஷ்டிக்கத் திறனற்ற மனிதனுக்கு இத்தனை உணவும், உடையும், மற்ற உபகரணங்களும் வழங்கும் ஆண்டவனுக்கு நன்றி கூறும் அடையாளமாகவே நாம் நிவேதனம் செய்கிறோம்; ஆபரணங்களையும் வஸ்திரங்களையும் சமர்ப்பிக்கிறோம். எல்லாருமே வீட்டில் இவ்வாறு பூஜை செய்து, திரவியங்களை ஈசுவரார்ப்பணம் செய்ய இயலாது. எனவே, சமுதாயம் முழுவதும் சேர்ந்து இப்படி சமர்ப்பணம் பண்ணும்படியான பொது வழிபாட்டு நிலையங்களாக ஆலயங்கள் எழுந்துள்ளன. இறைவனுக்கு நன்றி செலுத்துவதைத்தான் பரார்த்த பூஜையாக, நிஷ்காம்ய வழிபாடாக, ஆலயங்களில் செய்கிறோம்.

1.2 அரணிக்கட்டையுள் நெருப்பு மறைந்துள்ளது போல, மலரில் மணம் மறைந்துள்ளது போல ஈச்வரன் பிம்பத்தில் (லிங்கத்தில்) உள்ளார். பாலை விட, தயிரிலிருக்கும் நெய்யைக் கண்டெடுப்பது எளிது. உலகெங்கிலும் பாலில் மறைந்துள்ள நெய் போல் உறையும் இறைவன், ஆலயத்தில் தயிரினுள் மறைந்திருக்கும் நெய் போல எளிதில் நமக்கு முன் வந்து அருளக் காத்திருக்கிறான்.

1.3 ஆகமங்களில் விதித்துள்ள சிற்ப சாஸ்திரங்களுக்கொப்ப அமைந்துள்ள திருக்கோவில்களே பரம்பொருள் வீற்றிருக்கும் தேவாலயங்கள். ஆகம விதிப்படி அமையாத ஆலயங்கள் மடாலயங்கள் எனப்படும்.

1.4 சிவலிங்கம் இருக்கும் இடத்திலிருந்து நான்கு புறமும் 150 முழ தூரம் சிவ÷க்ஷத்ரம் ஆகும். இங்கு வசிப்பதுமச் சிவலோகவாசத்திற்கு காரணமாகும் என்று சுப்ரபேத ஆகமம் கூறுகிறது

1.5 முன் ஜன்மாவில் சிவ கைங்கர்ய உபகாரிகளாக வாழ்ந்தவர்கள், இந்த ஜன்மாவில், நல்ல உருவமும், தன ப்ராப்தியும் உடையவர்களாக காணப்படுவார்கள். சிவ தர்மத்தில் - பக்தியுடன், தன் சொத்துக்குத் தகுந்தபடி, ஆலயங்களை ஒவ்வொருவரும் செய்விக்க வேண்டும். அப்படிச் செய்தால், சிறிதாக அல்லது பெரிதாக செய்தாலும், தனவானுக்கும் ஏழ்மையானவர்களுக்கும், சமமான புண்யமே. பணக்காரராயினும், லோபமான மனஸுடன் பணத்தைக் குறைத்து சிவதர்மங்களைச் செய்பவர், அப்புண்ய பலனை அடைய மாட்டார். வாழ்வு நிலையற்றது; எனவே, ஒவ்வொருவரும் தன் சொத்தில் இரு பங்கு தர்மத்திற்கும், தனது வாழ்விற்கு ஒரு பங்குமாக ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும் என்கிறது ஜீர்ணோத்தார தசகம்.

1.6 மனத்தை ஒருவழிப் படுத்தவும், கீழ்ப்படிவு, நீதி வழி நிற்றல், தன்னலம் மறுப்பு, பணிவு, இரக்கம் ஆகிய பல சிறந்த பண்படுகளை உண்டாக்கி வளர்க்கவும், இறுதியாக மோக்ஷ ஸாம்ராஜ்யம் அடைந்திட வழி வகுக்கவும் திருக்கோயில் வழிபாட்டைத் தவிர வேறு மார்க்கம் இல்லை.

1.7 சாதாரணமாக, நம் கைகள் இரண்டு விரிந்து, வளைந்து, பற்பல செய்கைகளைச் செய்கின்றன. இறைவனுடைய ஸந்நிதானத்தில் கும்பிடும்போது, அத்தகைய செய்கைகள் எல்லாம் ஒழிந்து, கைகள் ஒன்று சேர்ந்து குவிகின்றன. அவ்வாறு குவிந்திடும் கைகள் ஆண்டவனே ! இனி என் செயல் என்று ஏதும் இல்லை என்பதை உணர்ந்துவிட்டேன். எல்லாம் உன் அருட் செயலே என்ற சரணாகதி தத்துவத்தை உணர்த்துகின்றது.

1.8 ஆலயங்களில் விக்ரஹ ஆராதனை முக்கியத்துவம் பெறுகிறது. உலகத்தில் சக்திகள் யாவும் உறையும் இடம் என்று பொருள் தருவது விக்ரஹம் என்ற சொல் (விஸேஷேண க்ருஹ்யதே ஸக்திஸமூஹ: அஸ்மின் இதி விக்ரஹ:) வி என்றால் விசேஷமான, சிறப்பான, இறைத்தன்மையுள்ள என்று பொருள். க்ரஹிப்பது என்றால் ஈர்த்துக்கொள்வது. பல்வேறு மந்த்ர தந்த்ர யந்த்ர வழிபாட்டு முறைகளினால் ஆராதிக்கப்படும்போது, இறையருளை முன்வைத்து, இறைத்தன்மையை ஈர்த்துத் தன்னுள் தேக்கி வைத்துக்கொண்டு, தன்னை வணங்குவோருக்கு அருள் புரியும் வல்லமை உள்ள பொருள்தான் விக்ரஹம்.

1.9 விக்ரஹங்கள் பல திறத்தன: பொருள் பொதிந்து விளங்குவன. எடுத்துக்காட்டாக, இறைவன் உருவமற்றவன்: அருவமானவன். அவனுக்கு அருவுருவமாகிய லிங்க ப்ரதிஷ்டை கருவறையிலே. அவனுக்கே, மாகேச்வர மூர்த்தங்கள் என்று அழைக்கப்படும் 25 உருவங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. (அவையாவன: 1. லிங்கோத்பவர் 2. சுகாசனர் 3. சந்திதர மூர்த்தி 4. கல்யாண சுந்தரர் 5. அர்த்த நாரீச்வரர் 6. ஸோமாஸ்கந்தர் 7. சக்ரவரதர் 8. திரிமூர்த்தி 9. ஹரிமர்த்தனம் 10. சலந்தராரி 16. திரிபுராரி 17. சரப மூர்த்தி 18. நீலகண்டர் 19. திரிபாதர் 20. ஏகபாதர் 21. பைரவர் 22. இடபாரூடர் 23. சந்திரசேகரர் 24. நடராஜர் 25. கங்காதரர்). இவை 25 விக்ரஹங்களுள் ஒவ்வொன்றும், பற்பல தத்துவங்களை உள்ளடக்கியவை. மீண்டும் எடுத்துக்காட்டாக, சோமாஸ்கந்த மூர்த்தியை எடுத்துக் கொண்டால், ஸச்சிதானந்தமே சோமாஸ்கந்தம் என்கிறார் காஞ்சிப் பரமாச்சாரியார். அவர் கூற்றுவது: ஸத்-சித்-ஆனந்தம் என்று சொல்வார்களே அதுதான் பரம்பொருள். இதிலே ஸத் (இருப்பு) பரமேச்வரன்; இருக்கிறோம் என்பதை உணர்ந்து சக்தியைக் காட்டுகிறது சித் அம்பாள்: இப்படி உணர்ந்ததில் பேரானந்தம் பிறக்கிறது. இந்த ஆனந்தமே சுப்ரமண்யர். சிவம் என்கிற மங்களமும், அம்பாள் என்கிற காருண்யமும் கலந்த மரம் பரம உத்க்ருஷ்டமான (உயர்வான) ஸ்தானம் அவர் (ஸுப்ரஹ்மண்யர்); ஸச்சிதானந்தத்தையே சோமாஸ்கந்தர் என்று தமிழ்நாட்டுச் சிவாலயங்களில் எல்லாம் வைத்து உற்சவம் நடத்துகிறோம்.

1.10 இறைவனை அடையும் வழிகள் ஒன்பது என்பர்: (1) ச்ரவணம் - கேட்டல், இறைவன் புகழ் கேட்டல் - உதாரணம்: ஹனுமான், (2) கீர்த்தனம் - பாடுதல், நாதோபாஸனை - உதாரணம்: வால்மீகி, தியாகராஜ ஸ்வாமிகள். (3) ஸ்மரணம் - நினைத்தல், நின்றும் இருந்தும் கிடந்தும் அவனையே நினைப்பது - உதாரணம்; ஸீதாதேவி, (4) பாதசேவனம் - சேவித்தல் - உதாரணம்: பரதன், (5) அர்ச்சனம் - பூஜித்தல் - உதாரணம்: சபரி, கண்ணப்ப நாயனார், சாக்கிய நாயனார், (6) வந்தனம் - நமஸ்கரித்தல், வந்தித்தல் - உதாரணம்: விபீஷணன். (7) தாஸ்யம் - தொண்டு புரிதல் - உதாரணம்: லக்ஷ்மணன், திருநாவுக்கரசர். (8) ஸக்யம் - சிநேக பாவம் - உதாரணம்: சுக்ரீவன், அர்ஜுனன், சுந்தரர். (9) ஆத்ம நிவேதநம் - தன்னையே அர்ப்பணித்தல் - உதாரணம்: ஜடாயு. இந்த ஒன்பது வழிகளுள் ஏதாவது ஒன்றை உறுதியாகப் பற்றுவதே இறைவனை அடைவதற்கு  போதுமானது. இவற்றுள் கடைசி இரண்டைத் தவிர, ஏழு முறைகளில் வழிபட ஆலயங்களே வகை செய்வது குறிப்பிடத்தக்கது.

1.11 இவ்வாறு ஆலய வழிபாட்டை மையமாக வைத்து அமைக்கப்பட்ட வாழ்க்கை முறையே சிவதன்மம் ஆகிறது. சிவதன்மம் என்றால் சைவ ஒழுக்கம் என்று பொருள். சிதம்பரம் மறைஞானதேசிகர் (கி.பி.1560) சிவாகம பரிபாஷா மஞ்சரி என்ற வடமொழி நூலில் சிவதன்மம் பத்துக் கோட்காடுகளைக் கொண்ட நெறி என்கிறார்: 1. அஹிம்சை. 2. தயை, 3. சத்யம், 4. அடக்கம் 5. வளம், 6. புலனடக்கம் 7. எளியோர்க்கு வழங்குதல், 8. தியாகம், 9. ஜபம், 10. தியானம் - அல்லது 1. அஹிம்சை, 2. சத்யம், 3. பிறர் பொருள் விழையாமை, 4. சிற்றின்பம் துறத்தல், 5. அவா ஒழித்தல், 6. க்ரோதம் தவிர்த்தல், 7. பெரியோரைப் போற்றுதல், 8. தூய்மை, 9. துயறுற்றலும் மகிழ்வுடன் இருத்தல், 10. நேர்மை என்றபடி. இக்கோட்பாடுகள் அனைத்தும் ஆலய வழிபாட்டு நெறிக்கும் இன்றியமையாததாக இருப்பது கவனிக்கத் தக்கது.

1.12 எனவே, ஆலயத்தை மையமாகக் கொண்ட வாழ்க்கையில், நீறு இல்லா நெற்றி பாழ்; சிவாலயம் இல்லா ஊர் பாழ்; சிவபூஜை இல்லா ஜன்மம் பாழ்; சிவனை அடையா வித்யை பாழ் என்று ஆகமங்கள் வலியுறுத்துகின்றன.


ஆலயங்கள் அமைத்தல்


2.1 ஆலயக் கிரியைகள் : ஆலயங்களில் செய்யப்பெறும் கிரியைகள் முப்பெரும் பிரிவினுள் அடங்கும்; 1. கர்ஷணாதி ப்ரதிஷ்டாந்தம், 2. ப்ரதிஷ்டாதி உற்சவாந்தம், 3. உற்சவாதி ப்ராயச்சித்தாந்தம்.

2.2. கர்ஷணாதி ப்ரதிஷ்டாந்தம் : புது இடத்தை உழுதல் (கர்ஷணம்) முதலான கிரியைகளுடன் தொடங்கி, திருக்கோவில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்யும் வரை.

2.3 ப்ரதிஷ்டாதி உற்சவாந்தம்: நித்திய, நைமித்திய, காமிக கிரியைகளும், உற்சவங்களும்.

2.4 உற்சவாதி ப்ராயச்சித்தாந்தம்: மஹோத்ஸவங்களும், அவற்றின் நிறைவாக நிகழும் ப்ராயச்சித்த (மஞ்சள் நீராட்டு வைபவங்களும்)

2.5 பாலாலயம் : தற்காலிகமாக அமைக்கப்பெறும் இறைவனின் இருப்பிடங்கள் இளங்கோயில் அல்லது பாலாலயம் என்று அழைக்கப்பெறும். புதிதாக ஆலயம் எழுப்புவதாயினுங்கூட, முதலில் பாலாலயம் அமைத்தே அதில் இறைவரை எழுந்தருளச் செய்திடல் வேண்டும். ப்ரதானாலயம் கட்ட இடம் சதுரித்த பின், பால லிங்கத்தை பாலாலயத்தில் பிரதிஷ்டை செய்து, பூஜித்து வரவேண்டும்; இதற்காகக் கட்டப்படுவது முதலாவது பாலாலய வகை. பின் மூலாலயத்தில் மூல லிங்கத்தை பிரதிஷ்டை செய்தபின், இறைவரை பாலலிங்கத்திலிருந்து மூல லிங்கத்திற்குச் சென்று எழுந்தருளச் செய்து, பிறகு பாலாலயத்தை நீக்க வேண்டும். பிற்காலத்தில், மூலாலயம், பீடம், சிவலிங்கம், பிம்பங்கள் இவை ஜீர்ணம், பின்னம், அங்கக் குறைவு, வெடிப்பு முதலியவற்றால் தோஷமுற்றபோது, இவைகளை கும்பத்தில் ஆவாஹனம் செய்து, பின்னர் பாலபிம்பத்தில் சேர்க்க வேண்டும்; இத்தகு தருணங்களில் அமைக்கப்பெறும் பாலாலயங்கள் இரண்டாவது வகைத்து. இவை தருணாலயம் என்றும் கூறப்படும்.

2.6 உற்சவங்கள்: ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் ஒரு நாள் நிகழ்ச்சிகளாகவும், 3 முதல் 36 நாட்கள் வரை தொடர் விழாக்களாகவும் நடைபெறுவது உண்டு. அவ்வாறு 1,3,5 நாட்கள் நடைபெறும் உற்சவங்களுக்குக் கொடியேற்றம் தேவையில்லை. அதற்கு மேற்பட்ட நாட்களாக செய்யப்படும் உற்சவங்கள் கொடியேற்றத்துடன் செய்ய வேண்டுமென ஆகமத்தில் கூறப்பட்டுள்ளது. அத்தகைய உற்சவங்கள் மஹோற்சவங்கள் எனவும் கூறப்படும். பாலாலயம் செய்துள்ளபோது, கும்பாபிஷேகம் ஆகும் வரை, மத்தியில் மஹோத்சவம் (கொடி ஏற்றி உற்சவங்கள்) செய்யலாகாது. அப்படி அவசியம் உற்சவம் செய்யவேண்டுமாயின், மூலாலயத்திற்கு ஈசானம் முதலிய குறிப்பிட்ட திசைகளில், மூலாலயம் போலவே விமானம், கர்ப்பக்ருஹம், பரிவார தேவதைகள், கொடிமரம், பலிபீடம் யாவும் உள்ள பாலாலயம் அமைத்து, பிரதிஷ்டைகள் செய்து, அந்தக் கொடிமரத்தில் கொடி ஏற்றி உற்சவம் செய்யலாம்

2.7 யாகசாலை : உற்சவத்திற்கான யாகசாலை மேற்கு முகமாக இருத்தல் வேண்டும். ஆனால், பிரதிஷ்டை, கும்பாபிஷேகம், சம்ப்ரோக்ஷணம் யாவற்றிற்கும் யாகசாலை கிழக்கு முகமாய் இருத்தலே உத்தமம் என்று காரணாகமம் கூறுகிறது.

2.8 நந்திதேவர் பிரதிஷ்டை: சிவாலயங்களி, குறைந்த பக்ஷமாக ஒரு நந்தியும், அதிக பக்ஷமாக ஐந்து நந்திகளும் ப்ரதிஷ்டை செய்யப்பட வேண்டும். ஐந்து வித நந்திகள்: 1. லிங்கத்துக்கு மிக அருகிலுள்ள (முதல்) நந்தி கைலாஸ நந்தி (பொற் பிரம்பும், வீர வாளும் தாங்கியவர்; தன் மூச்சுக் காற்றால் இறைவனைக் குளிர வைத்துக் கொண்டு இருப்பவர். ஆலயத்தினுள் ஒரே ஒரு நந்தி அமைப்பதனால் இவர் மட்டுமே ப்ரதிஷ்டை ஆவார்) 2. இரண்டாவது நந்தி மஹாவிஷ்ணு அவதார நந்தி (திருமால் இறைவனைத் தான் தாங்குவதற்காக நந்தி உருக் கொண்டு அமர்ந்துள்ளமை - நான்கு நந்திகளுக்குக் குறைவாக உள்ள ஆலயங்களில் இந்த ப்ரதிஷ்டை இல்லை) 3. மூன்றாவதான நந்தி பக்தர்களை உள்ளே விடவும், தடுப்பதற்கும் அதிகாரம் பெற்றவர். சில நூல்களில் இவரை அதிகார நந்தி என்றும் பெயரிட்டு குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறுவர் (துவஜஸ்தம்பம் அருகே உள்ளவர். இரண்டு நந்திகள் மட்டுமே அமைப்பதனால், இரண்டாவதாக இவர் ப்ரதிஷ்டை ஆவார்) 4. நான்காவதான நந்தி சாதாரண நந்தி (ஐந்து நந்திகளுக்குக் குறைவாக உள்ள ஆலயங்களில் இந்த ப்ரதிஷ்டை ஆவார்) 4. நான்காவதான நந்தி சாதாரண நந்தி (ஐந்து நந்திகளுக்குக் குறைவாக உள்ள ஆலயங்களில் இந்த பிரதிஷ்டை இல்லை) 5. ஐந்தாவதான் நந்தி உருவில் மிகப் பெரியவர். விச்வரூபம் கொண்டு போருக்கு ஆயத்தமாயுள்ளவர். ஆலயங்களின் நுழைவாயிலில் அமைக்கப்பெறுபவர் இவரே. புகழ்பெற்ற தஞ்சைப் பெருவுடையார் கோயில் பெரிய நந்தி இதற்கு உதாரணம். இவர் பெரிய நந்தி, அல்லது மஹா நந்தி என்றும் அழைக்கப்படுவார் (மூன்று நந்திகளுக்கு குறைவாக உள்ள ஆலயங்களில் இந்த ப்ரதிஷ்டை இல்லை)

2.9 ப்ரதிஷ்டா கிரியைகள்: கும்பாபிஷேகத்தை ஒட்டி நிகழ்விக்க வேண்டிய கிரியைகள் - அதாவது கர்ஷணாதி ப்ரதிஷ்டாந்த கிரியைகள் - பற்பல. அவற்றின் பெயர்களைத் தொகுத்து ஒரு (ஏறத்தாழ, அனைத்து கிரியைகளின்) பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. இவற்றுள் சிலவற்றின் விளக்கமும் மேற்கொண்டு காணலாம்: 1. மஹூர்த்த நிர்ணயம் 2. ஸ்தம்ப ஸ்தாபனம் 3. அனுக்ஞை 4. தன பூஜை 5. ஆசார்ய வரணம் 6. ப்ஸன்ன கணபதி பூஜை. 7. க்ராம சாந்தி 8. ப்ரவேச பலி. 9. ர÷க்ஷõக்ன ஹோமம் 10. ஆசார்ய தசவித ஸ்நானம் 11. வாஸ்து சாந்தி 12. க்ரஹ மகம் 13. திசா ஹோமம் 14. கோ பூஜை, 15. விப்ர போஜனம், 16. ம்ருத் ஸங்க்ரஹணம் 17. ரத்ன ந்யாஸம் 18. நயனோன் மீலனம், 19. தான்யாதி வாசனம், 20. ஜலாதி வாசம் 21. சாந்தி ஹோமம், 22. மூர்த்தி ஹோமம், 23. சம்மிதா ஹோமம், 24. அங்குரார்ப்பணம், 25. ரக்ஷõ பந்தனம் 26. சயனாதி வாசம், 27. யாகசாலை தான்ய ஸ்தாபனம் - ஸூர்யகாந்தாக்நி ஸங்க்ரஹணம் 28. ருத்விக் சாதஹாதி வரணம் 29. ப்ரஸன்னாபிஷேகம் 30. கும்ப ஸ்தாபனம் 31. கலா கர்ஷணம் 32. மூர்த்தி ஹோமம் 33. யாத்ரா ஹோமம் 34. யாத்ரா தானம் 35. கடோத்வாஸனம், 36. யாகசாலா ப்ரவேசம் 37. யாக பூஜை ன த்ரவ்யாஹுதிகள், 38. யாக பூஜை - பூர்ணாஹுதிகள் 39. ஜம் ரத்ன ந்யாஸம், யந்த்ர ஸ்தாபனம், 40. தேவதா ஸ்தாபனம் 41. அஷ்ட பந்தனம், ஸ்வர்ண பந்தனம் 42. க்ருத சிரோர்ப்பணம் 43. தைலாபிஷேகம் 44. பிம்ப சுத்தி 45. பிம்ப ரக்ஷõ பந்தனம் 46. தீப ஸ்தாபனம், தீபலக்ஷ்மீ பூஜை. 47. லக்ஷ்மீ பூஜை.  48. கந்தலோபனம் 49. மஸ்தக ஜபம் 50. ந்யாஸார்ச்சனம் 51. சாந்தி கும்பம் 52. ஸ்பர்சாஹுதி 53. மஹா பூர்ணாஹுதி 54. யாத்ரா தானம் 55. கடோத்வாஸனம் 56. மூலாலய ப்ரவேசம் 57. ஸ்தூபி கும்பாபிஷேகம் 58. ஸ்வாமி கும்பாபிஷேகம் 59. பரிவார கும்பாபிஷேகங்கள் 60. யஜமான உற்சவம் 61. சண்ட ஹோமம் 62. மஹாபிஷேகம் 63. திருக்கல்யாணம் 64. திருநீதி உலா 65. அவப்ருத ஸ்நானம் 66. ஆசார்ய உற்சவம் 67. மண்டல பூஜாரம்பம் 68. மண்டலாபிஷேக பூர்த்தி 69. சண்டிகேசர் உற்சவம் 70. யஜமானஸ்ய பல ஸமர்ப்பணம்.

2.10 சங்கற்பம், அனுக்ஞை: ஆலய நிர்மாணம் தொடங்கி, எந்தக் காரியம் செய்தாலும், முதலாவதாக சங்கற்பமும், அனுக்ஞையும் செய்திடல் வேண்டும். எடுத்துக் கொண்ட காரியத்தை குருவின் உதவியுடன் செய்து முடிப்பதாக உறுதி பூணுதல் சங்கல்பம். விநாயகர், இறைவன், மூலமூர்த்தி முதலாக சண்டேச்வரர் ஈறாகவுள்ள அனைத்துத் தெய்வங்கள், குருமார்கள், பெரியோர்கள், முதியோர்கள் ஆகியோரது அனுமதியைக் கோரிப் பெறும் உத்தரவு பெறுதல் என்னும் நிகழ்ச்சியே அனுக்ஞை.

2.11 ப்ரவேச பலி: பூத, பிசாச, ப்ரம்மராக்ஷஸர்களுக்கு பலி (நைவேத்யம் முதலாய உபசாரப் பொருட்கள்) கொடுத்து, அவற்றை ஏற்றுக் கொண்டு வேறிடம் செல்லுமாறு அவர்களை வேண்டி, இடையூறுகளை நீக்கிக் கொள்ளும் கிரியையே ப்ரவேச பலி. இது கீழ்க்கண்ட காலங்களில் செய்திடல் வேண்டும். 1. புதுஆலய நிர்மாணம் தொடங்கும் போது 2. நெடுங்காலமாக நித்திய நைமித்திய பூஜைகள் இன்றிக் கிடந்த ஆலயங்களில் மீண்டும் வழிபாடுகள் தொடங்கும்போது 3. கும்பாபிஷேகங்களுக்கு முன்னதாக 4. மஹோத்சவங்களுக்கு முன்னதாக

2.12 ர÷க்ஷõக்ன ஹோமம்: புறத்தேயிருக்கும் தேவதைகளை அகற்ற ப்ரவேச பலி செய்யப்படுவதைப் போல, ஆலயத்தில் உள்ளிருக்கக்கூடிய துர்தேவதைகளை சாந்தி செய்து அகற்றிட ர÷க்ஷõக்ன ஹோமம் செய்யப்படும்.

2.13 வாஸ்து சாந்தி: ஆலயம் சமைப்பதற்கு முன்னாலும், பின்னர் நடைபெறும் சம்ப்ரோக்ஷணம்-பிரதிஷ்டை-கும்பாபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகளுக்கு முன்பாகவும், சங்காபிஷேகம், மஹோற்சவம் போன்ற பெருவிழாக்கள் துவங்குவதற்கு முன்னும் - ஆகிய காலகட்டங்களிலே, இடத்திற்கு தேவதையாக உள்ள வாஸ்து புருஷனையும், அவரது அதிவேதையான ப்ரம்ம தேவரையும், சக்திகளையும் பூஜித்து, ஏனைய தெய்வங்களையும் வழிபட்டு திருப்தி செய்வதே வாஸ்து சாந்தி. மகிழ்வித்த வாஸ்து புருஷனை, ஹோமாக்னியால் எரியூட்டி, ஆலயம் முழுதும் இழுத்துச் சென்று சுத்திகரித்து, இறுதியாக புண்யாஹவாசன கலச நீரினால் அவ்விடங்களை சுத்த செய்வதே வாஸ்து சாந்தியின் நிறைவு.

2.14 அங்குரார்ப்பணம்: அங்குரார்ப்பணம் என்பது முளை இடுதல் (பாலிகை). மஹோற்சவம், ப்ரதிஷ்டை ஆகிய காலங்களில் இந்நிகழ்ச்சி செய்யப்பெறும். சிவாச்சார்யார், 5 அல்லது 9 நாள் முன்னதாக, மங்கள முறைப்படி, 40, 24, 16 (அல்லது வைதீக முறைப்படி 5) பாலிகைகளில் நன்முளையிட்டு காலை - மாலை  பஞ்சகவ்ய நீர் வார்த்து, அவற்றின் முளைகளை நன்கு கவனித்து, பயன்களை அறிந்து கொண்டு, அவற்றின் சூசகத்தை எஜமானருக்கு உணர்த்திடல் வேண்டும்

2.15 ம்ருத்ஸங்க்ரஹணம்: அங்குரார்ப்பணத்துக்காக சிவாச்சார்யார், ஆற்றங்கரை, மலையடிவாரம், நந்தவனம் போன்ற பரிசுத்தமான இடத்திலிருந்து புது மண் எடுத்து வரும் நிகழ்ச்சி ம்ருத்ஸங்க்ரஹணம் எனப்படும்.

2.16 ரக்ஷõபந்தனம் : ரக்ஷõபந்தனம் என்பது காப்புக் கட்டுதல். விழாவின் தொடக்கம் முதன், நிறைவு வரை, வெளி உலக உபாதைகள் ஒன்றும் தீண்டக்கூடாது என்பதற்காக, சிவாச்சாரியார், தமக்கும், யாகத்தில் பங்கு பற்றும் ஏனைய சிவாச்சாரியாருக்கும் காப்பு கட்டுவதுடன், மூல மூர்த்திக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் அவரவர்க்குரிய ஸ்தானத்தில் ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டும்

2.17 ஸ்நபநம்: இறைவரை, தேவர்களை தற்காலிகமாக உருவேற்றிப் பூஜிப்பதற்கென, கும்பங்களைக் கலாகர்ஷணப் பொருளாக ஸ்தாபிப்பதே கடஸ்தாபனம் அல்லது ஸ்நபநம் எனப்படும். அப்படி ஸ்தாபிக்கப்பட்ட கும்பம் மூர்த்தியாகவே பாவிக்கப்படுகிறது. கும்பத்தோடு சகஜமாக இருக்கும் மண் உடலுக்கு உரிய அம்சம்; அதில் சுற்றப்படும் நூல் எழுபத்து இரண்டு ஆயிரம் நாடி நரம்புகள்; அதில் சுற்றப்படும் வஸ்த்ரம் தோல்; கும்பத்துள் இடப்படும் நீர் இரத்தம் மற்றும் மேதை எனப்படும் ஏழு தாதுக்கள்; கும்பத்துள் இடப்படும் நவரத்தினம், வெள்ளி, பொன் முதலியவை சுக்கிலம்; உள்ளே இடப்படும் கூர்ச்சம் முள்ளந்தண்டு எனப்படும் முதுகெலும்பு; மாவிலை சடை; தேங்காய் கபாலம்; வெளியே இடப்படும் கூர்ச்சம் குடுமி; நியாஸங்கள், ப்ராண ப்ரதிஷ்டை முதலான மந்திரங்கள் ஜீவன். கீழே பரப்பப்படும் தானியங்கள் மூர்த்திக்கு உரிய ஆஸனம்; உத்தரீய மாலைகள், மலர்கள் முதலிய அலங்காரப் பொருள்கள்.

சிவாச்சாரியார்

3.1 ஆலயக் கிரியை வகைகள்: சிவாலயங்களில் நடைபெறும் கிரியைகள் மூவகைப் படுத்தப் பட்டுள்ளன: 1. நித்தியக் கிரியைகள் 2. நைமித்திகக் கிரியைகள் 3. காமியக் கிரியைகள். தினந்தோறும் (குறைந்தது ஒரு காலம், அதிகபக்ஷம் 12 காலம்) நிகழும் பூஜைகள் நித்தியக் கிரியைகள்.  ஏதாவது காரணங் கொண்டு நிகழ்வன நைமித்திகக் கிரியைகள் (நிமித்தம் என்றால் காரணம்). இவை நித்தியக் கிரியைகளை அன்னியில், செய்யப்பெறும் விசேஷக் கிரியைகள், அதாவது, சதுர்த்தி, ஷஷ்டி, சிவராத்திரி, ப்ரதோஷம், பௌர்ணமி, நடராஜர் அபிஷேகம், ஆவணி மூலம், பெரிய கார்த்திகை, மாசி மகம், ஆருத்ரா, விஷு, ஆடிப்பூரம், அன்னாபிஷேகம், ப்ரஹ்மோத்ஸவம், மகாமகம், அர்த்தோதயம், மஹோதயம், கும்பாபிஷேகம் போன்ற நாட்களில், அல்லது காலங்களில், அல்லது முஹூர்த்தங்களில் விசேஷமாகத் திட்டமிடப்பட்டுச் செய்யப்பெறும் நிகழ்ச்சிகள். ஒரு குறிப்பிட்ட பேறு பெற விழைந்து, ஒருவராலோ அல்லது பலர் ஒரு குழுவாகச் சேர்ந்தோ, செய்யப்படும் கிரியைகள் காமியக் கிரியைகள். (காமிகாகமம்). திருக்கோவில் பூஜைகள் பெரும்பாலும் பொது ஜனங்கள் அனைவரது நன்மையயும் வேண்டிப் பொதுவாகச் செய்யப்படும் நிஷ்காம்யக் கிரியைகளே. ஒரு அன்பரோ அல்லது குழுவோ தமக்கென்று ஒரு பேற்றினை வேண்டி பூஜைகள் நிகழ்வித்தாலும், அவை திருக்கோவிலில் நிகழ்ந்தால், மஹா ஸங்கல்பமாக, பூஜையின் ஆரம்பத்தில் அனைவருக்கும் பொதுவாக அனைத்து நன்மைகளையும் வேண்டி, நிஷ்காம்யக் கிரியையாக வழிபாடுகளை நிகழத்துதலே முறை.

3.2 சிவபூஜை வகைகள்: சிவபூஜை ஆத்மார்த்தம், பரார்த்தம் என இரு வகைப்படும். இவ்விரு பூஜைகளுள்,சிவதீøக்ஷ பெற்ற யாவரும் ஆத்மார்த்த பூஜை செய்யலாம், பரார்த்த பூஜைகளே திருக்கோவிலில் நிகழ்வன. சிவதீøக்ஷ பெற்ற ஆதிசைவர்கள் (சிவாச்சாரியார், குருக்கள்), குருமுகமாகப் பயிற்சி பெற்று, ஆசார்யராக இருக்கத் தகுதி பெற்றபின்னரே பரார்த்த பூஜை செய்ய உரிமை பெறுவர்.

3.3. சிவாச்சாரியார்: சிவாலயங்களில் பூஜை செய்யும் அருகதை உள்ள சிவாச்சாரியார்கள் பதினாறு வயதுக்கு மேற்பட்டவர்களாகவும், எழுபது வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்று காமிகாமம் கூறிகின்றது.

3.4 சிவாச்சாரியாருக்கு விதிக்கப்பட்ட கிரியைகள்: சிவாச்சாரியார் (அல்லது சிவ தீøக்ஷ செய்து கொண்ட எவரும்) தினமும் செய்ய வேண்டி விதிக்கப்பட்டுள்ள ஸ்நானம், பூஜை, ஜபம், த்யானம், ஹோமம் போன்றவற்றிற்கும், சிவாச்சாரியாருக்கு உருடய நித்தியக் கிரியைகள் என்றே பெயர். தீøக்ஷ செய்துகொள்ளுதல் ப்ரதிஷ்டை செய்தல் போன்றவை அவருக்கான நைமித்திகக் கிரியைகள் எனப்படும்

3.5 சிவ த்யானம்: நம்முடைய ஹ்ருதய கமலத்திலாவது, துவாதசாந்தத்திலேயாவது சிவனை நிறுத்தி தியானம் செய்ய வேண்டும். நிஷ்களமான சிவனை, குரு உபதேசித்தபடி த்யானம் செய்து மூல மந்திரத்தால் (ஓம் ஹாம் சிவாய நம: அல்லது ஓம் ஹாம் ஹம் ஹாம் சிவாய நம:) ஜபம் செய்யவேண்டும். அப்படி நிஷ்களமான சிவனை த்யானம் செய்யும் சாமர்த்தியம் இல்லாதவர் சிவபெருமானுடைய விக்ரஹங்களில் தனக்குப் பிடித்தமான ஒருவரை மனதில் நிலைக்கச் செய்து, த்யானம், ஜபம் செய்தல் வேண்டும்

3.6 சைவக் கிரியைகளின் அங்கங்கள்: பாவனை, கிரியை, மந்திரம் என்னும் மூன்றும் சேர்ந்து பரிமளிப்பனவே சைவக் கிரியைகள். பாவனை என்றால் எண்ணுவது என்று பொருள். கிரியைகள் என்பதை முத்திரைகளுடன் செய்யப்படும் செய்கைகள். மந்திரங்கள் என்பவை முத்திரைகளுடன் செய்யப்படும் செய்கைகள். மந்திரங்கள் என்பதை எண்ணங்களுக்கு ஏற்ற கிரியைகளின் பயன்களைத் தர வல்ல சொற்றொடர்கள். ஒவ்வொரு கிரியையும், அதற்கேற்ற பாவனை, மற்றும் மந்திரங்களுடனேதான் செய்யப்படுதல் வேண்டும். பாவனை இல்லாது மந்திரங்களுடன் மட்டும் கரியைகளைச் செய்தால் அவை பயனற்றவையாகும். பாவனையும் இல்லாது, மந்திரங்களையும் மொழியாது, கிரியைகளைச் செய்தால், அச்செய்கைகள் தேவர்களை மகிழ்விக்காது; அசுரர்களையே மகிழ்விக்கும்; அதனால் புண்ணியம் தேய்ந்து பாவமே வளரும். எனவே, பூஜைகளில் முழுப்பயனும் மக்களைச் சென்றடைய, பாவனை, கிரியை, மந்திரம் ஆகிய மூன்றிலுமே லோபம் (குறைகள்) இல்லாமல் அனுஷ்டானத்தைச் செய்யுமாறு சிவாச்சாரியார்கள் குருமுகமாகப் பயிற்சி அளிக்கப்படுகிறார்கள்.

3.7 பக்தியில்லாத சிவாச்சாரியார்: தீக்ஷிதனாகிய ஆச்சாரியார், பக்தி இல்லாதவனாக பூஜித்தால், ராஜா. ராஜ்யம் இவர்களுக்கு கெடுதல்; அது எவ்விதம் எனில், காட்டில் இருக்கிற துஷ்ட மிருகமாகிற ஸிம்ஹத்தைக் கண்ட யானையானது எப்படி பயம் அடையுமோ, அதுபோல் பக்தியில்லாத ஆச்சாரியனைப் பார்த்த உடனே சிவபெருமான் பயம் அடைந்து (விலகி விடுவார்) மந்திரம் இல்லாமல் அர்ச்சனை செய்தால், அந்த ஈச்வரன் பயம் அடைவார்.

3.8 சிவாச்சாரியாருக்கு உரிய சில அனுஷ்டான மந்திரங்கள்:
ஆசன மந்திரம் :
1. ஓம் ஹாம் ஆத்ம தத்வாய ஸ்வதா
2. ஓம் ஹீம் வித்யா தத்வாய ஸ்வதா
3. ஓம் ஹூம் ஸிவ தத்வாய ஸ்வதா
பஞ்சகலா மந்திரம் :
1. ஓம் ஹ்லாம் நிவ்ர்த்தி கலாயை நம:
2. ஓம் ஹ்லீம் ப்ரதிஷ்டா கலாயை நம:
3. ஓம் ஹ்ரூம் வித்யா-கலாயை நம:
4. ஓம் ஹ்யைம் ஸாந்தி கலாயை நம:
5. ஓம் ஹ: ஸாந்த்யாதீத கலாயை நம:
ஸம்ஹிதா மந்திரம் :
1. பஞ்ச ப்ரஹ்ம மந்திரங்களும்
2. ஷடங்க மந்திரங்களும் ஒன்று சேர்ந்தது.
பஞ்ச ப்ரஹ்ம மந்திரம் :
1. ஈசானம்  : ஓம் ஹோம் ஈஸாந மூர்த்தயே நம:
2. தத்புருஷம்: : ஓம் ஹேம் தத்புருஷ வக்த்ராய நம:
3. அகோரம் : ஓம் ஹும் அகோர ஹ்ருதயாய நம:
4. வாமதேவம் : ஓம் ஹிம் வாமதேவ குஹ்யாய நம:
5. ஸத்யோஜாதம்: ஓம்ஹம் ஸத்யோஜாத மூர்த்தயே நம:
ஷடங்க மந்திரங்கள் :
1. ஹ்ருதயம் : ஓம் ஹாம் ஹ்ருதயாய நம:
2. சிரஸ் : ஓம் ஹீம் ஸிரஸே நம:
3. சிகை : ஓம் ஹூம் ஸிகாயை நம:
4. கவசம் : ஓம் ஹைம் கவசாய நம:
5. நேத்ரம் : ஓம் ஹெளம் நேத்ரேப்யோ நம:
6. அஸ்த்ரம் : ஓம் ஹ: அஸ்த்ராய நம:
மூல மந்திரங்கள் :
1. கணபதி : ஓம் கம் கணபதயே நம:
2. குரு : ஓம் கும் குருப்யோ நம:
3. சிவன் : ஓம்
4. தேவீ : ஓம் ஹ்ரீம் தேவ்யை நம:
5. கந்தன் : ஓம் ஹாம் ஸ்கந்தாய நம:
6. ஸூர்யன்  : ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஸ: ஸிவஸூர்யாயை நம:
காயத்ரீ :
1. அஸ்த்ர காயத்ரீ :
ஓம் ஸிவாஸ்த்ராய வித்மஹே காலாநலாய தீமஹி
தந்நோ அஸ்த்ர ப்ரசோதயாத்.
2. சிவ காயத்ரீ :
ஓம் தன் மஹேஸாய வித்மஹே வாக்விஸுத்தாய தீமஹி
தந்ந: ஸிவ: ப்ரசோதயாத்
ஸப்தகோடி மஹாமந்திரம் :
1. நம:  2. ஸ்வாஹா 3. ஸ்வதா
4. வஷட் 5. வெளஷட் 6. ஹும் 7. பட்

3.9 கர ந்யாஸம் :

3.9.1 ஓம் ஹ: அஸ்த்ராய பட் என்ற சிவ அஸ்திர மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே, சாண முத்திரையால், இடது, வலது கைகளால், மேலும் கிழுமாக இடது வலது கைகளைத் துடைத்துக் கொள்ள வேண்டும். இடது கையை இரு முறையும், வலது கையை ஒரு முறையும் அவ்வாறு செய்ய வேண்டும். கரங்களில் உள்ள அசுத்தங்களை எல்லாம், சிவாஸ்திரத்தால் உண்டான அக்நியால் எரித்ததாக பாவனை செய்துகொள்ள வேண்டும். பின்னர், ஓம் ஹெளம் சக்தயே வெளஷட் என்று கைகளை ப்ரஸன்ன முத்திரையாகக் கூட்டி, நெற்றியில் புருவங்களின் இடை வரை உயர்த்தி, அங்குள்ள சக்தி அம்ருதத்தால் கைகள் நனைந்து புனிதமானதாகப் பாவித்துக் கொள்ள வேண்டும்.

3.9.2 இரு கைகளும் சக்தி சிவ வடிவம் என்றுணர்ந்து, கட்டை விரல் ஒழித்த எட்டு விரல்களும் எட்டிதழத் தாமரைகளாகப் பாவித்து, உள்ளே மடங்கி உள்ள விரல் தாமரையின் விதை உருவாகும் பிந்து (பொகுட்டு) ஸ்தானத்தைத் தொடுவதாகக் கொண்டு, உள்ளங்கைகளில் கண்டு விரலுக்குக் கீழே, புதன் மேட்டில், கட்டை விரலால் தொட்டு, ஓம் ஹாம் சிவாஸநாய நம: என்று நியஸித்து, சிவனுக்கு மந்திராஸனம் அளிக்க வேண்டும். ஓம் ஹாம் ஹம் ஹாம் சிவ மூர்த்தயே நம: என்று நியாஸித்து, சிவாஸனத்தில் சிவமூத்தியை எழுந்தருளச் செய்ய வேண்டும்.

3.9.3 பிறகு ஓம் ஹோம் ஈசான மூர்த்தயே நம: என்று உச்சரித்துக் கொண்டே, ஆள்காட்டி விரல்கள் நடு விரல்களைத் தொடாமல் விலகி இருந்து, அதன் நுனிகள் கட்டைவிரல் நுனிகளை தொட்டுக் கொண்டிருக்குமாறு (உஷ்ணீக முத்திரை) நியாஸம் செய்ய வேண்டும். அடுத்து, ஓம் ஹேம் தத் புருஷ வக்த்ராய நம: என்று உச்சரித்துக் கொண்டே, ஆள்காட்டி விரல்கள் நடு விரல்களோடு சேர்ந்து இருக்கையில், அதன் நுனிகள் கட்டைவிரல் நுனிகளைக் தொட்டுக் கொண்டிருக்குமாறு (சின் முத்திரை (அ) சின்மய முத்திரை) நியாஸம் செய்ய வேண்டும். தொடர்ந்து, ஓம் ஹூம் அகோர ஹ்ருதயாய நம; என்று உச்சரித்துக் கொண்டே, நடு விரல் நுனிகள் கட்டைவிரல் நுனிகளை தொட்டுக் கொண்டிருக்குமாறு (யோக முத்திரை (அ) மோக முத்திரை) நியாஸம் செய்ய வேண்டும். பிறகு, ஓம் ஹிம் வாம தேவ குஹ்யாய நம: என்று உச்சரித்துக் கொண்டிருக்குமாறு (திவ்ய முத்திரை) நியாஸம் செய்ய வேண்டும். இறுதியாக, ஓம் ஹம் ஸத்யோஜாத மூர்த்தயே நம: என்று உச்சரித்துக் கொண்ட, சுண்டு விரல் நுனிகள்  கட்டைவிரல் நுனிகளை தொட்டுக் கொண்டிருக்குமாறு (ஆக்ர முத்திரை) நியாஸம் செய்ய வேண்டும். சிவபெருமானுக்குரிய ஐந்து முகங்களையும் இந்த பஞ்ச ப்ரஹ்ம மந்திரங்களைக் கூறி நியாஸித்ததன் மூலம் தன் கரங்களின் விரல் நுனிகளில் எழுந்தருளியதாகப் பாவித்தல் வேண்டும்.

3.9.4 பிறகு உள்ளங்கைகளிலே, பெரு விரல்களால் தொட்டு (அதிஷ்டான முத்திரை) ஓம் ஹாம் ஹெளம் வித்யா தேஹாய நம: என்று நியாஸித்து, சிவனுக்கு வித்யா தேகம் கற்பிக்க வேண்டும். ஆள்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் என்ற மூன்று விரல்களால் உள்ளங் கைகளைத் தொட்டு (கடா முத்திரை), பின் கூப்பி, ஓம் ஹெளம் நேத்ரேப்யோ நம: என்று நியஸித்து, ஐயனின் த்ரிநேத்திரஙகளை த்யானிக்க வேண்டும். ஓம் ஹாம் ஹெளம் சிவாய நம: என்ற மூல மந்திரத்தை உச்சரித்தவாறே,சகல ஹஸ்த வ்யாப்த சக்தியினாலே, கைகளுக்குள்ளே, பெரு விரல்களால் நியஸித்து சிவனை ஆவாஹனம் செய்ய வேண்டும்.

3.9.5 பின்னர், ஓம் ஹாம் ஹ்ருதயாய நம; என்று உச்சரித்து, ஆக்ர முத்திரையால், இதயஸ்தான்தில் ந்யாஸம் செய்ய வேண்டும். அடுத்து, ஓம் சீரஸே ஸ்வாஹா என்று உச்சரித்து, திவ்ய முத்திரையால், (முன்) தலையில் ந்யாஸம் செய்ய வேண்டும். பிறகு ஓம் சிகாயை வெளஷட் என்று உச்சரித்து, யோக முத்திரையால், (குடுமி) சிகையில் ந்யாஸம் செய்ய வேண்டும். தொடர்ந்து, ஓம் ஹைம் கவசாய வெளஷட் என்று உச்சரித்து, கவச முத்திரையால், உடலில் ந்யாஸம் செய்ய வேண்டும். பின்னர், ஓம் ஹ: அஸ்த்ராய பட் என்று உச்சரித்து, அஸ்த்ர முத்திரையால், கைகளில் ந்யாஸம் செய்ய வேண்டும். இந்த ந்யாஸத்தின் மூலமாக, கரங்களில், எழுந்தருளியுள்ள சிவபிரானுக்கு உரிய உரு உண்டானதாகக் கொண்டு த்யானிக்க வேண்டும்.

3.9.6 பின்னர், அவகுண்டனம் செய்ய வேண்டும். அவகுண்டனம் செய்வது, சிவ-சக்தி எழுந்தருளியுள்ள தலத்தைச் சுற்றி மூன்று மதில்களும், மூன்று அகழிகளும் உண்டாவதாக எண்ணி அவகுண்டன முத்திரையால் ஓம் ஹைம் கவசாய வெளஷட் என்ற கவச மந்திரத்தை உச்சரித்தவாறே அந்த ஸ்தானத்தைச் சூழ வளைத்து மும் முறை சுற்றுவதாகும்.

3.9.7 நிறைவாக, ஓம் ஹாம் ஹெளம் சிவாய வெளஷட் என்று உச்சரித்தவாறே பரமீகரணம் செய்தல் வேண்டும். பரமீகரணம் என்பது, கைகளைக் கூப்பி வந்தனி என்றும் பெயருள்ள நமஸ்கார முத்திரை செய்து, கரங்களைத் தலைக்கு மேல் உயர்த்தி வணங்கி, பின் இதயத்திற்கு எதிரே கொண்டு வந்து முடிப்பது.

3.9.8 இதுவே சிவாச்சாரியார்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கரநியாஸம் செய்யும் முறையாகும்.

3.10 அங்க ந்யாஸம் :

3.10.1 கர ந்யாஸம் செய்து கொண்ட பின்னரே அங்க ந்யாஸம் செய்ய வேண்டும்.

3.10.2. ஓம் ஹ: அஸ்த்ராய ஹூம்பட் என்ற சிவ அஸ்திர மந்திரத்தை
உச்சரித்துக் கொண்ட, சாண முத்திரை கொண்ட கைகளால், பாதம் முதல் சிரஸ்வரை துடைத்துக் கொள்ள வேண்டும். உடலில் உள்ள அசுத்தங்களை எல்லாம், சிவாஸ்திரத்தால் உண்டான அக்நியால் எரித்ததாக பாவனை செய்துகொள்ள வேண்டும். பின்னர், ஓம் ஹெளம் சக்தயே வெளஷட் என்று கைகளை ப்ரஸன்ன முத்திரையாக கூட்டி, நெற்றியில் புருவங்களின் இடை வரை உயர்த்தி, அங்குள்ள சக்தி அம்ருதத்தால் உடல் முழுதும் நனைந்து புனிதமானதாகப் பாவித்துக் கொள்ள வேண்டும்.

3.10.3 திவ்ய முத்திரையால் இதயத்தைத் தொட்டு, ஓம் ஹாம் சிவாஸநாய நம: என்று நியஸித்து, சிவனுக்கு மந்திராஸனம் அளிக்க வேண்டும். மீண்டும் திவ்ய முத்திரையால் இதயத்தைத் தொட்டு, ஓம் ஹாம் ஹம் ஹாம் சிவ மூர்த்தயே நம: என்று நியாஸித்து, சிவாஸனத்தில் சிவமூர்த்தியை எழுந்தருளச் செய்ய வேண்டும்.

3.10.4 பிறகு, ஓம் ஹோம் ஈசான மூர்த்தயே நம: என்று உச்சரித்துக் கொண்டே, உஷ்ணீக முத்திரையால் தலை உச்சியில் நியாஸம் செய்ய வேண்டும். அடுத்து, ஓம் ஹேம் தத் புருஷ வக்த்ராய நம: என்று உச்சரித்துக் கொண்டே சின் முத்திரையால் நெற்றியில் நியாஸம் செய்ய வேண்டும். தொடர்ந்து ஓம் ஹூம் அகோர ஹ்ருதயாய நம: என்று உச்சரித்துக் கொண்டே, யோக முத்திரையால் மார்பில் நியாஸம் செய்ய வேண்டும். பிறகு, ஓம் ஹிம் வாம தேவ குஹ்யாய நம: என்று உச்சரித்துக் கொண்டே, திவ்ய முத்திரையால் நாபியில் நியாஸம் செய்ய வேண்டும். இறுதியாக, ஓம் ஹம் ஸத்யோஜாத மூர்த்தயே நம: என்று உச்சரித்துக் கொண்டே, ஆக்ர முத்திரையால் வலது-இடது முழங்கால்களில் நியாஸம் செய்ய வேண்டும். சிவபெருமானுக்குரிய ஐந்து முகங்களையும் இம்மந்திரங்களைக் கூறி நியாஸித்ததன் மூலம் தன் அங்கங்களில் எழுந்தருளியதாகப் பாவித்தல் வேண்டும்.

3.10.5 பிறகு திவ்ய முத்திரையால் ஓம் ஹாம் ஹெளம் வித்யா தேஹாய நம: என்று மார்பில் நியாஸித்து, சிவனுக்கு வித்யா தேஹம் கற்பிக்க வேண்டும். ஆக்ர கண்ட முத்திரை என்று கூறப்படும் நேத்ர முத்திரையால் ஓம் ஹெளம் நேத்ரேப்யோ நம: என்று கண்களில் நியஸித்து, ஐயனின் த்ரிநேத்திரங்களை த்யானிக்க வேண்டும்.

3.10.6. பிறகு, ஓம் ஹாம் ஹெளம் சிவாய நம: என்ற மூல மந்திரத்தை உச்சரித்தவாறே, ஹ்ருதயஸ்தானத்திலே நியாஸித்து சிவனை ஆவாஹனம் செய்ய வேண்டும்.

3.10.7 பின்னர், ஓம் ஹாம் ஹ்ருதயாய நம: என்று உச்சரித்து, ஆக்ர முத்திரையால், இதயஸ்தானத்தில் ந்யாஸம் செய்ய வேண்டும். அடுத்து, ஓம் சிரஸே ஸ்வாஹா என்று உச்சரித்து, திவ்ய முத்திரையால், (முன்) தலையில் ந்யாஸம் செய்ய வேண்டும். பிறகு, ஓம் சிகாயை வெளஷட் என்று உச்சரித்து, யோக முத்திரையால் (குடுமி) சிகையில் ந்யாஸம் செய்ய வேண்டும். தொடர்ந்து, ஓம் ஹைம் கவசாய வெளஷட் என்று உச்சரித்து, கவச முத்திரையால், கண்டத்திலிருந்து நடு மார்பு வரை உடலில் ந்யாஸம் செய்ய வேண்டும்.

3.10.8 உஷ: முத்திரை எனப்படும் மோதிர விரல்களால் அங்கங்களைத் தொடும் முறையினால், ஓம் ஹ: அஸ்த்ராய பட் என்ற அஸ்த்ர மந்திரத்தை உச்சரித்து, இரு கைகளிலும் ந்யாஸம் செய்து சிவபிரானுக்கு அஸ்திரங்கள் அறிவத்ததாகப் பாவிக்க வேண்டும்.

3.10.9 தாளத்ரயம்: கோவிடாண முத்திரை என்று அழைக்கப்பெறும் கட்க முத்திரையால், ஓம் ஹூம் ஹ: அஸ்த்ராய பட் என்ற ஹூம்-படந்த (ஹூம்-ஐ முதலிலும், பட்- ஐ ஈறாகவும் கொண்டுள்ள) அஸ்திர மந்திரத்தை உச்சரித்தவாறே தாளத்ரயம் செய்ய வேண்டும். தாளத்ரயம் என்பது இடது உள்ளங்கையில் வலது கை கட்க முத்திரை விரல்களால் மும்முறை தட்டுதல், சிவசக்தி ப்ரகாசங்களுக்குக் கேடு செய்ய வரும் அசுரர் முதலியோரை விரட்டு பொருட்டுச் செய்வதே தாளத்ரயம்.

3.10.10. திக்பந்தனம் : விரல்களை மடக்கி, ஆட்காட்டி விரலால் பெருவிரல் மத்தியில் விரல் துடிக்கத் தெறிக்கும் சோடிகா முத்திரையால் ஓம் ஹ: அஸ்த்ராய பட் என்ற அஸ்திர மந்திரத்தை உச்சரித்தவாறே சிரஸ்ஸைச் சூழ மேலே எண்மருங்கிலும் திக்பந்தனம் செய்து அக்நி ப்ரகாசம் உண்டாக்கி அக்நி தேவரைக் காவல் வைப்பதாகப் பாவிக்க வேண்டும்.

3.10.11 அவகுண்டனம் : ந்யாஸ முத்திரையால் ஓம் ஹைம் கவசாய வெளஷட் என்ற கவச மந்திரத்தை உச்சரித்தவாறே சிரஸ்ஸைச் சூழ கீழ்நோக்கி மேலே அவகுண்டனம் செய்து மூன்று மதில்களும் அகழ்களும் அமைப்பதாகக் கொள்ளவேண்டும்.

3.10.12 பரமீகரணம் : நிறைவாக, ஓம ஹாம் ஹெளம் சிவாய வெளஷட் என்று உச்சரித்தவாறே கைவிரல்கள் சாதாரணமாக நீண்டிருப்பதான மஹா முத்திரையால் பாதம் முதல் சிகை வரை தடவ வேண்டும். பாதம் முதல் கேசம் வரை துடைக்கும் இந்த கிரியைக்கு பரமீகரணம் என்று பெயர்.

3.10.13 இந்த ந்யாஸத்தின் மூலமாக, சிவபெருமானை மந்திராஸனத்தில் எழுந்தருளச் செய்து, அவயவங்களைப் பாவித்து, ப்ரகாசமும், அக்நி கோஷ்டமும், அகழும் உண்டானதாகப் பாவித்து, பரமாமிர்தாபிஷேகம் செய்து, பின் தான் அவருடன் இரண்டறக் கலந்ததாக (ஏக பாவம் ஆனதாக) பாவித்தல் வேண்டும்.

3.10.14. இதுவே சிவாச்சாரியார்க்கு விதிக்கப்பட்டுள்ள அங்க ந்யாஸம் செய்யும் முறையாகும்

3.11. ஆத்மபூஜா த்யாநம்: நாதம் லிங்கம் என்றும், அதுவே ஸ்ரேஷ்டமான சிவம் என்றும், பிந்து பீடம் என்றும், அதுவே சக்தியாகிய ஆதார ஆஸநம் (அல்லது ஆவுடையார்) என்றும், ஆதேயமாகிய சிவம் பாணமென்றும் சொல்லப்படுகின்றது. சிவம் அன்னியில் சக்தி இல்லை; சக்தி அன்னியில் சிவம் இல்லை; இவை, புஷ்பத்தில் வாஸனை போலும், எள்ளில் என்னை போலும் அபேதமாக இருப்பதாக அறியவும். எனவே, (மாநஸீகமாக) ஸிம்ஹாஸநம் செய்து, அதிலே சிவாஸநம் செய்து, சாஸ்ரோக்தமான க்ரியைகளினாலே தேவதேவேச்வரனை சிவாச்சாரியார் பூஜை பண்ணவேண்டியது.

3.12 சகளீகரணம்: கர ந்யாஸமும், அங்க ந்யாஸமும், சேர்ந்து செய்வதற்கு சகளீகரணம் என்று பெயர்.

3.13. விசேஷ அர்க்யம்:

3.13.1 சகளீகரணம் செய்த பிறகு, த்ரவ்ய சுத்தி செய்வதற்கும், மற்றபடி விதித்துள்ள விசேஷ நிகழச்சிகளுக்கும் சிவாச்சாரியார் (பஞ்ச பாத்திரத்தில்) புனித நீர் தயாரித்துக் கொள்வதே விசேஷார்க்யம்.

3.13.2 பொன், தாமிரம், வெள்ளி, பஞ்சலோகம், வெண்கலம், பித்தளை (ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், இரும்பு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்) இவற்றுள் ஏதாவதொன்றால் செய்யப்பட்டுள்ள பஞ்சபாத்ரம்-உத்தரிணி அல்லது கெண்டி-கமண்டலம் போன்ற பாத்திரத்தைச் சுத்தப்படுத்தி எடுத்து வைத்துக் கொண்டு, அஸ்த்ர மந்திரத்தைக் கூறி அவற்றை மந்த்ர பூர்வகமாக மீண்டும் அலம்ப வேண்டும்.

3.13.3 நீரீக்ஷணம்: நிரீக்ஷணம் என்றால் பார்த்தல் என்று பொருள்படும். ஓம் ஹாம் சிவாய நம: என்று மூல மந்திரம் உச்சரித்து, நீரீக்ஷண முத்திரையால், பாத்திரத்தில் நிரப்பப்படும் சுத்தமான நீரைப் பார்க்க வேண்டும். அப்போது, அந்த நீரிலுள்ள குற்றங்களை ஸூர்யனாகிய வலக்கண்ணால் காய வைத்து, அக்நியாகிய நெற்றிக் கண்ணால் தகித்தெறிந்து விட்டு, சந்திரனாகிய இடது கண்ணில் ஊறும் அமுதத்தை அதனோடு கலப்பதாகப் பாவிப்பதே நிரீக்ஷணம் செய்தல் எனப்படும்.

3.13.4 ப்ரோக்ஷணம் : பிந்து ஸ்தானமாகிற புருவ மத்தியிலிருந்து பெறுகின்ற அம்ருத தாரா மயமாக சுத்த ஜலத்தை பாவித்துக் கொண்டு, ஹ்ருதய மந்திரத்தைக் கூறி, அதன்மூலமாக அந்த அம்ருத தாரா பாத்திரத்தினுள் சென்று நிரம்புவதாகப் பாவிக்கும் கிரியைக்கு ப்ரோக்ஷணம் என்று பெயர் கூறுவர்.

3.13.5 பிறகு, அந்த நீரிலே சந்தனம், புஷ்பம், அருகு, அக்ஷதை, ஆகியவற்றை இட்டு அலங்கரிக்க வேண்டும், தொடர்ந்து, ஆசமன, பஞ்ச ப்ரஹ்ம, வித்யாதேஹ, நேத்ர, மூல, ஹ்ருதய மந்திரங்களால் பூஜை செய் வேண்டும். ஸம்ஹிதா மந்திரத்தால் (பஞ்ச ப்ரஹ்ம + ஷடங்க மந்திரங்கள்) அபிமந்திரிக்க வேண்டும்.

3.13.6 தாடனம்: அஸ்திர மந்திரத்தால் அர்க்ய நீரை ரக்ஷõ பந்தனம் செய்வதற்குத் தாடனம் என்று பெயர். தூயதான நீரில் வியாபித்திருக்கும் சிவசக்தியரின் அருளை ப்ரகாசிக்கச் செய்யும் பொருட்டு, அஸ்த்ர மந்திரம் கூறி ஒரு முறை தட்டுதலே தாடனம்.

3.13.7 அப்யுக்ஷணம் : கவிழ்ந்த பதாகை முத்திரையால் அந்த நீரை சூடி, கவச மந்திரத்தை உச்சரித்து, அதிலுள்ள ப்ரகாசம் நீங்காது இருக்குமாறு செய்வதாக பாவித்தலே அப்யுதக்ஷணம்.

3.13.8 அடுத்து, அர்க்ய நீரில் நிரம்பியுள்ள சிவ-சக்தி ப்ரகாசத்திற்கு ஊறு செய்ய வரும் துர்தேவதைகளை விரட்ட தாளத்ரயம் சாய்ய வேண்டும்.

3.13.9 தொடர்ந்து, கவச மந்திரத்தால் திக்பந்தனுமும், கவச மந்திரத்தால் அவகுண்டனமும் செய்தல் வேண்டும்.

3.13.10 நிறைவாக, வெளஷடந்த மூல மந்திரத்தால் (ஓம் ஹாம் ஹம் ஹாம் சிவமூர்த்தாய வெளஷட்) தேனு முத்திரை கொடுத்து, சிறப்பாக அர்க்ய பாத்தி நீரைப் புனிதமாக்கிக் கொள்ளல் வேண்டும்.

3.13.11. மேற்சொன்ன கிரியையே விசேஷார்க்யம். இந்நிகழ்ச்சியின் மூலம் அர்க்ய நீரில் சிவசக்தி ப்ரகாசம் நிறைகின்றது.

3.14 சாமான்யார்க்யம் : சகளீகரணம் செய்த பிறகு, இரும்பு சம்பந்தப்படாத பாத்திரத்தில் வெளஷடந்த ஹ்ருதய மந்திரத்தை உச்சரித்தவாறு சுத்த ஜலத்தை நிரப்பி, அதில் ஏழு தடவை ப்ரணவ மந்திரத்தால் அபிமந்திரித்து, திக்பந்தனம், அவகுண்டனம் செய்ய வேண்டும். பிறகு,தேனு முத்திரை கொடுத்து செய்து கொள்ளும் தீர்த்தத்திற்கு சாமான்யார்க்யம் என்று பெயர்

3.15 ஐவகை சுத்தி: பூஜை செய்யும் ஆச்சாரியார், பூஜை செய்யும் பொருட்டு, தூய்மை செய்து கொள்ளும் கிரியைகளுக்கு பஞ்ச சுத்தி என்று பெயர். அவையாவன (1) ஆத்ம சுத்தி (2) ஸ்தான சுத்தி (3) த்ரவ்ய சுத்தி (4) மந்த்ர சுத்தி (5) லிங்க சுத்தி.

3.16 ஆத்ம சுத்தி: சிவாச்சாரியார், தனக்குள் இறைவனை எழுந்தருளச் செய்வதே ஆத்ம சுத்தி. அதற்காக அவர் செய்யும் அனைத்துக் கிரியைகளும், அவரது உள்ளத்தளவிலே செய்யப்படுகின்றன; அதாவது, பாவனையாக செய்யப்படுகின்றன. அச்செயல்களாவன: 1. சரீரத்தில் உள்ள மலம், மாயை, கர்மா சம்பந்தமான புற அழுக்குகளை நீக்குதல் 2. பஞ்ச பூத தன்மாத்திரைகளால் ஏற்படும் அக அழுக்குகளாம் சப்தாதி குணங்களை நிக்குதல் 3. வலக்கால் பெரு விரலிலிருந்து உண்டாகும் காலாக்னியால் கர்ம சரீரத்தைப் பொசுக்குதல் 4. ப்ரம்மாந்திரத்தில் உள்ள அமிர்தத்தால் உள்ளும் புறமும் நனைத்துக் கொள்ளுதல் 5. நித்யத்வ, வியாபகத்வ, சுத்த தத்வ, யுக்த, பரமாகாஸாபிபூத்த, சுத்த சைதன்ய திவ்ய சரீரமாகத் தன் உடலை பாவித்துக் கொள்ளுதல் 6. ஹ்ருதய கமலத்தில் ஈச்வரனை மனோபாவனையால் பூஜித்தல் 7. நாபியில் உள்ள அக்னியில் ஹோமம் செய்து, ஹ்ருதய கமலத்தில் உள்ள இறைவனிடத்தில் சமர்ப்பணம் செய்து, உள்பூஜையை நிறைவு செய்வதாகப் பாவித்தல் 8. பிந்து ஸ்தானத்தில் ஈச்வரனை த்யானம் செய்து, புற பூஜையின் பொருட்டு ப்ரார்த்தனை செய்து, அதனைத் தொடங்க உத்தரவு கேட்டுப் பெற்றுக் கொள்ளுதல்.

3.17 ஸ்தான சுத்தி: சிவாச்சாரியார், பூஜை நடைபெறுகிற இடத்தில் விக்னங்கள் அணுகாமல் காப்பதாக பாவித்துச் செய்யும் கிரியைகளே ஸ்தான சுத்தி எனப்படும். அதற்காக அவர் செய்யும் கிரியைகளும், பாவனைகளும்: 1. அஸ்த்ர மந்திரத்தால் மூன்று தடவை தாளம் செய்து, சிட்டிகை போட்டு, ஸ்தலத்திலுள்ள தடைகளைப் போக்குதல் 2. அஸ்த்ர மந்த்ரத்தால் நான்கு மூலைகளிலும் அக்னி ப்ரகாசம் செய்தல் 3. கவச மந்த்ரத்தால் வலது ஆள் காட்டி விரலை மும்முறை சுழற்றி, மூன்று கோட்டைச் சுவர்களும், மூன்று அகழிகளும் உண்டாக்குதல் 4. வெளஷடந்த சக்தி மந்த்ரத்தைச் சொல்லி, தேனு முத்திரையை மேலும் கீழும் காண்பித்தி ரக்ஷõ பந்தனம் செய்தல்.

3.18 த்ரவ்ய சுத்தி: சிவாச்சாரியார், விசேஷ அர்க்யத்தால் புனித நீர் தயாரித்துக் கொண்டு, பிறகு அந்த நீரினால், தன்னையும், சுற்றி உள்ள மற்ற பூஜைக்கான  உதவியாளர்களையும், பூஜை செய்வதற்காக எடுத்துவைத்துள்ள சாதனங்கள், பொருட்கள் ஆகியவற்றையும் தூய்மை செய்வதாக பாவித்துச் செய்யும் கிரியைகளே த்ரவ்ய சுத்தி எனப்படும். அதற்காக அவர் செய்யும் கிரியைகளும், பாவனைகளும் 1. விசேஷ அர்க்யம் தயாரித்தல் 2. அஸ்திர மந்திரம் சொல்லித் தன் தலை மீது ப்ரோக்ஷணம் செய்து கொள்ளுதல் 3. பூஜா திரவியங்களை (அ) அஸ்திர மந்திரம் கூறி ப்ரோக்ஷணம் செய்தல் (ஆ) கவச மந்திரம் கூறி துடைத்து சுத்தம் செய்தல் (இ) ஹ்ருதய மந்திரம் சொல்லி அபிமந்திரித்தல் (ஈ) கவச மந்திரம் கூறி அவகுண்டனம் செய்தல் (உ தேனு முத்திரை கொடுத்து அனைத்தையும் அம்ருத மயாக்குதல் 4. அபிஷேகத்திற்கென வைத்திருக்கும் ஜலத்தின் மீது விசேஷார்க்ய ஜலத்திலிருந்து கொஞ்சம் புஷ்பத்தினால் எடுத்து விட்ட பிறகு, தேனு முத்திரை கொடுத்து அம்ருத மயமாக்குதல்.

3.19 மந்திர சுத்தி: சிவாச்சாரியார், தன்னுள் இறைவனை நிலைநிறுத்தித் தன்னை மந்திரங்கள் கூறுவதற்குத் தகுதி உடையவராகச் செய்து கொள்வதற்கு மேற்கொள்ளும் கிரியைகளே மந்திர சுத்தி எனப்படும். இது திரவிய சுத்தி செய்த பிறகே செய்யப்படும். முதலில் ஓம் ஹாம் சிவாஸநாய நம: என்று ஆஸனம் கற்பித்து, தன்னுடைய ஹ்ருதயத்தில் ஓம் ஹாம் சிவ மூர்த்தயே நச: என்று பூஜை செய்ய வேண்டும், பின்னர், நெற்றியில் புருவ மத்தியில் சந்தனத்தால் திலகம் இட்டு, மூல மந்திரத்தால் சிரஸிலே புஷ்பத்தால் பூஜித்து ஆத்ம பூஜை செய்ய வேண்டும். அடுத்து சம்ஹிதா மந்திரத்தையும், மூல மந்திரத்தையும் (ப்ரணவத்தை முதலிலும், நம: என்ற பதத்தைக் கடைசியிலும் உடைத்தானதாக) பஞ்ச ப்ரஹ்ம மந்திரங்களை ஹ்ரஸ்வமாகவும், ஷடங்க மந்திரங்களை தீர்க்கமாகவும், மூல மந்திரங்களை ப்லுதமாகவும் உச்சரிக்க வேண்டும். இதுவே மந்திர சுத்தி.

3.20 லிங்க சுத்தி : முதல் நாள் (அல்லது, முந்திய காலத்தில்) செய்த பூஜா திரவியங்களை லிங்கத்தில் மேலிருந்து களைந்து, பின்னர் அபிஷேகம் செய்து, நிறைவாக துடைத்தெடுத்து அலங்காரத்துக்கு ஆயத்தமாக்குவதே லிங்க சுத்தி எனப்படும். இது செய்ய வேண்டிய முறை : முதலில் சிவ காயத்ரியால் அர்ச்சனை : பூஜத்துடன் கூடிய ஹ்ருதய ஸ்வாஹந்தமான மூல மந்திரத்தால், ஸத்யோஜாதம் முதல் ஈசானம் வரையான ஐந்து சிரஸ்ஸிலும் சாமான்யார்க்யத்தைக் கொண்டு அர்க்யம்; தூப, தீபங்கள் காட்டுதல்; லிங்கத்தின் மேல் கையை வைத்து ஸத்யோஜாதாதி பஞ் பரஹ்ம மந்திரங்களை உச்சரித்தல்; அஸ்திர மந்திரங்களைக் கூறி நிர்மால்யங்களைக் களைந்து, ஈசான பாகத்தில் தயாராக வைத்துள்ள சுத்தமான பாத்திரத்தில், சண்டிகேச்வரரிடம் சமர்ப்பிப்பதற்காக, ஹ்ருதய மந்திரங்களைக் கூறியவாறே அந்நிர்மால்யங்களை வைத்தல்; அஸ்திர மந்திரத்தைச் சொல்லி லிங்கத்தையும் பீடத்தையும் அலம்புதல்; அஸ்திர மந்திரங்களைக் கூறி சாமான்யர்க்யத்தால் அபிஷேகம்; மூல மந்திரத்தால் ஐந்து தடவையும், சம்ஹிதா மந்திரம் - வ்யோம வ்யாபி மந்திரம் எண்பத்து ஒன்றினையும் சொல்லி அபிஷேக திரவியங்கள், பஞ்சாமிதாதி திரவியங்களால் அபிஷேகம்: குளிர்ந்த சுத்த நீரினால் ஸஹஸ்ர தாரா வழி அபிஷேகம்; ஹ்ருதய மந்திரம் கூறி அர்க்ய ஜலம், ஸ்நபன ஜலம் ஆகியவற்றால் அபிஷேகம்; நிறைவாக வெண்மையானதும், மெல்லியதானதும் சுத்தமானதுமான வஸ்த்ரத்தால் துடைத்து விடுதல். இதுவே லிங்க சுத்தி. இதன் பிறகே அலங்காரம்

3.21 கலாகர்ஷணம் : பாத்யாதி உபசாரங்களுக்குப் பிறகு, பஞ்ச ப்ரஹ்ம மந்த்ரங்கள், ஷடங்க மந்த்ரங்கள், வ்யோமவ்யாபி மந்த்ரங்கள் ஆகியவற்றை ஜபம் சொய்தவாறே, கிரீம் முதலாக வரிசையாக அஷ்ட த்ரிசத் கலா நியாஸம் செய்ய வேண்டும்; அதாவது, முப்பத்தெட்டு இடங்களில் முப்பத்தெட்டு கலைகளை வைக்க வேண்டும்.

3.22 அபிஷேகத்துக்குப் பிறகு, லிங்கம் ஆவுடையார் இவைகளை மெல்லிய, வெண்மையான, சுத்தமான வஸ்த்ரத்தினால் நன்றாகத் துடைத்து, சிவனுடைய சிரஸ்ஸிலே ஹ்ருதய மந்த்ரத்தைக் கூறி புஷ்பத்தை வைக்க வேண்டும்.

3.23 சிவோகம்பாவனை செய்யும் சிவாச்சாரியார் தன் வலக்கையில் சந்தனம் பூசிக்கொண்டு அதைச் சிவஹஸ்தமாகப் பாவிப்பர்; பின்னர் தன்னையே சிவமாகப் பாவனை செய்து கொள்வார்; தாம் புறத்தே பூஜிக்க இருக்கும் மந்திரங்களைக் கூறி, அந்தக் கையினால் தன் அகத்தையும் பூஜிப்பார்; இவ்வாறாக, காண்பானும் சிவம், காட்சியும் சிவம், காட்சிப் பொருளும் சிவம் என்ற முறையில் மூன்றும் ஒன்றித்த நிலையில் திரிகரண சுத்தியுடன், நிற்பதே சிவோகம்பாவனை.

3.24 நெற்றியில் குட்டு: விநாயகருக்கு பூஜை செய்யும் சிவாச்சாரியார் இரண்டு கைகளினாலும் விரல்களை மூடிக்கொண்டு , முஷ்டி முத்திரையைச் செய்துகொள்ள வேண்டும். இரண்டு கைகளிலும் நடுவிலுள்ள மூன்று விரல்களின் நடுப்பாகங்களால் நெற்றியின் இரண்டு பாகத்தையும் நன்றாகக் குட்டிக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதனால், கபோலத்தில் உள்ள அம்ருதமானது, சமஸ்தான சரீரத்தையும் நன்றாக நனைத்து ஸ்நானம் செய்விக்கின்றது. இந்த அம்ருத ஸ்நானத்தால் ஆணவம், கர்வம், மலம், மாயைகள் நீங்கி ஞானம் பிறக்க வழி கிடைக்கின்றது. இந்த அம்ருத ஸ்நானத்தை விநாயகர் முன்பு செய்வதால் அவருக்கு நம்மிது தனிப்ரீதி உண்டாகும்.

3.25 பூஜை செய்யும் திசை : கிழக்கு அல்லது மேற்கு முகமாக ப்ரதிஷ்டை ஆகியுள்ள சுவாமியை, சிவாச்சாரியார் வடக்கு முகமாக நின்று பூஜிக்க வேண்டும். தெற்கு அல்லது வடக்கு முகமாக உள்ள ஸ்வாமியை கிழக்கு முகமாக நின்று பூஜை செய்ய வேண்டும்

3.26 கட்டை விரலால் மட்டும் எடுத்து விபூதி அளித்தால் வியாதி உண்டாகும்; சுட்டு விரலால் விபூதி அளித்தால் மரணம் உண்டாகும்; நடு விரலால் விபூதி அளித்தால் புத்ர சோகம் உண்டாகும்; கனிஷ்டிகையால் (சுண்டு விரலால்) விபூதி அளித்தால் தோஷம் உண்டாகும்; ஆதலால் பெருவிரலும் மோதிரவிரலும் சேர்த்து விபூதி அளிக்க வேண்டும்.

3.27 அனைத்துக் கிரியைகளின்போதும், விதிக்கப்பட்ட மந்த்ரங்களையும் ச்லோகங்களையும் கூறுவதுடன், அந்தந்த இடத்துக்குரிய முத்திரைகளையும் தவறாது காட்ட வேண்டும். முத்திரைகள் கிரியைகளின் அங்கம்; அவை தேவர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பன; அசுரர்களை விரட்டுவன.

முத்திரைகள்


4.1 முத்ரா என்ற சொல்லுக்கு இறைவழிபாட்டின்போது விரல்களை குறிப்பிட்ட வகையாக வைத்துக் கொள்ளும் முறை என்ற பொருள் ஸம்ஸக்ருத அகராதிகளில் காணக்கிடைக்கிறது. முத்ரா என்ற சொல் ஒரு காரணப் பெயர். முத் என்ற வினைச் சொல் மகிழ்வூட்டும், மனநிறைவளிக்கும் என்று பொருள்படுவது. த்ரா என்ற பதத்துக்கு விரைந்து வெளியேற்றுதல் என்று பொருள். எனவே, தேவதைகளுக்கு மகிழ்வையும் மன நிறைவையும் அளிப்பதுவும், விரைவாகப் பாவங்களை அகற்றுவதும் ஆன கிரியைக்கு முத்ரா என்பதாகக் காரணப் பெயர் அமைந்துள்ளது.

4.2 முத்திரைகளின் பெருமையை விளக்கிக் கூறும் ச்லோகங்கள் இவ்வாறு கூறுகின்றன: எல்லா தேவர்களையும் மகிழ்விப்பதாலும், பாவத் தொடர்பைப் போக்குவதாலும் அவை முத்திரை என்று பெயர் பெறுகின்றன. முத்திரைகள் எல்லாக் காமங்களையும் (இன்பம்) (தர்ம-அர்த்த-காம-மோக்ஷம் என்பதே அறம், பொருள், இன்பம், வீடு என்றாகிறது), அர்த்தங்களையும் (செல்வம்), கூட்டுவிப்பதாகும். தந்த்ரங்களில் கற்பிக்கப்பட்ட முத்திரைகளைக் காட்டுவதால், மந்த்ர தேவதைகள் ப்ரீதி அடைவார்கள். அர்ச்சனை, ஜபம், த்யானம் முதலியவற்றின் போதும், ஸ்நானம், ஆவாஹனம், சங்கப்பரதிஷ்டை , ரக்ஷணம், நைவேத்யம், முதலிய கிரியைகளின்போதும், அந்தந்த (பூஜா) கலபங்களில் கூறப்பட்ட முத்திரைகளை உரிய ஸ்தானங்களில், உரிய லக்ஷணங்களுடன் காண்பிக்க வேண்டும்.

4.3 முத்திரைகளைப் பற்றிய சில விளக்கங்களை நம்மில் பலருக்குப் பரிச்சயமான ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம பாராயண முறையை ஒரு உதாரணமாகக் கொண்டு காண்போம்.

4.4. மனனத்தால் (ஜபிப்பதனால்) ஸாதகனைக் (ஜபிப்பவனைக்)  காப்பவை (மநநாத் த்ராயதே ) மந்திரங்கள் பலவகை: ஓர் அக்ஷரம் உள்ளவை பிண்டம்; இரண்டு அக்ஷரம் உள்ளவை கர்த்ரீ; மூன்று முதல் ஒன்பது அக்ஷரங்கள் கொண்டவை பீஜம்; ஒன்பதுக்கு மேல் அக்ஷரங்கள் கொண்டவை மந்த்ரங்கள்.

4.5 மந்திரங்கள் அனாதியானவை. இறைவனோடு மூச்சுக் காற்றென ஒன்றியவை. அவற்றை மானஉஷ சக்திகள் உருவாக்கவில்லை. அவை பேறு பெற்றவர்கள் பாக்கியசாலிகள். ரிஷிகள் மந்திரங்களை முதலில் கண்டறிந்து, அவற்றின் சக்தியை உணர்ந்து, உலக நன்மைக்காக அவற்றை வெளியிட்டவர்கள். ஒரு மந்திரத்தை ஜபிக்கத் தொடங்கும் முன் வலக்கையால் சிரஸ்ஸைத் தொட்டு, அந்த மந்திரத்தைக் கண்டறிந்து சொன்ன முனிவரை நினைவு கூர்ந்து, அவரை வணங்குவதாகப் பாவனை செய்வதுதான் குரு ந்யாஸம். இவ்வாறு சிரஸ்ஸைத் தொடும் செய்கை ஒரு முத்திரை.

4.6 மந்திரம் அமைந்துள்ள சொற்கட்டுக்கு (சந்தத்திற்கு) சந்தஸ் என்று பெயர். அதற்கு வணக்கம் செலுத்துவதே சந்தஸ் ந்யாஸம் என்பது, சந்தஸ்ஸை நினைவு கூர்ந்து, உதட்டின் மேல் வலது  கையால் தொடும் முத்திரையே சந்தஸ் ந்யாஸம்.

4.7 அந்தந்த மந்திரத்துக்கு உரிய தேவதையை இதயத்தில் அமர்த்துவதாகப் பாவித்து இதயத்தைத் தொடுவது தேவதா ந்யாஸம்.

4.8 மந்திரம் என்பது, மரம் போன்று பலன் தரும் வரிந்த சக்தி வடிவம். இதன் விதை போல, கருவாக, இதன் சூக்ஷ்ம சக்தி அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்துள்ள சொல் வடிவமே பீஜம். அந்த பீஜத்தில் அடங்கியுள்ள வீர்யமே சக்தி. சக்தி தேவையின்றி வேறிடத்தில் செல்லாமல், அதனைப் பிணைத்து வைத்திருக்கும் ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் என்ற மாலா மஹா மந்திரத்துக்கு ஐம் என்பது பீஜம்; ஸெள: என்பது சக்தி; க்லீம் என்பது கீலகம்; (இந்த ஐம் ஸெள: க்லீம் என்ற மூன்று அக்ஷரங்களும் சேர்ந்து ஸ்ரீ பாலா மந்திரம் என்ற தனிப் பெயரும் பெற்றுள்ளன). ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர பாராயணத்துக்கு முன்னால் ந்யாஸம் செய்யும்போது, இந்த அக்ஷரங்களைச் சொல்லி, அங்கங்களைத் தொட்டு, அங்கு அவை நிலைத்திருப்பதாக பாவனை செய்கிறோம். இந்த கிரியைகள் பீஜ ந்யாஸம், சக்தி ந்யாஸம், கீலக ந்யாஸம் எனப்படும். எந்த உறுப்புகளை எவ்வாறு தொடவேண்டும் என்பது அவரவரது குரு போதித்த ஸம்ப்ரதாயத்தைப் பொறுத்தது.

4.9 இவ்வாறே விநியோக ந்யாஸம், கர ந்யாஸம், அங்க ந்யாஸம் முதலியனவும் ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம பாராயணத்துக்கு விதிக்கப்பட்டுள்ளன.

4.10 மேற்கூறியவற்றால் (அ) மந்திரங்கள் உச்சரிக்கும்போது, முத்திரைகளுக்கு முக்கிய இடம் உண்டென்பதும், (ஆ) அந்த முத்திரைகளும் குரு பரம்பரைக்கு ஏற்ப பேதங்களாகும் என்பதும் பெறப்படும். அதே வகையில்தான், மந்திரங்களை ப்ரயோகித்து சிவாலய பூஜா கிரியைகள் நடக்கும்போது, பல வகையான முத்திரைகளுக்கு அக்கிரியைகளில் முக்கியத்துவம் தரப்படுகின்றது. அவற்றை சிவாச்சாரியார்கள் பயிற்சி பெறும்போது, குருமுகமாகக் கற்றறிவர். பின்னர் அவர்கள் அவற்றைப் பிழைகளின்றி, ச்ரத்தையுடன் ப்ரயோகிக்கும்போது, கிரியைகளைச் சூழ்ந்து வரும் மந்திரங்களின் பலன்கள் பூரணமாக ஸித்தியாகின்றன. முத்திரைகள் வெறும் அங்க சேஷ்டைகள் அல்ல; அவை பொருள் பொதிந்தவை; கிரியைகளுக்கு பூரணத்துவத்தை அளிப்பவை.

4.11 நல்ல செயல்முறைகளுக்குத் தந்த்ரங்கள் என்று பெயர். மந்திரங்களை உபயோகித்து பூஜை செய்யும் விதி முறைகளும் தந்த்ரங்களே. அத்தந்த்ரங்கள் எழுதப்பட்டுள்ள நூல்களையும் தந்த்ரங்கள் என்றே அழைப்பர். ஆகமங்கள் அனைத்தும் அத்தகு தந்த்ர நூல்களே.

4.12 வேதங்களில் ஓம் என்ற ப்ரணவமும், ஸ்வாஹா, ஸ்வதா, வஷட், வெளஷட், வேட், வாத் முதலிய மந்திரங்களும், பூ; புவ; ஸுவ; என்னும் வ்யாஹ்ருதிகளும் முதல் முதலாகக் கூறப்படுகின்றன. பிற்காலத்துத் தந்த்ர சாஸ்திரங்களில் ஹம், ஹாம், ஹும், ஹூம், ஹ்ரீம், ஹ்ராம், ஹ்ரோம், ஸ்ரீம், ஐம், ஏம், க்லீம், பட் முதலிய ஒலிச் சேர்க்கைகள் குறிப்பிடப்படுகின்றன. இவை அனைத்தும் மந்திர சக்தி வாயந்தவை. இவற்றை ஆகம நூல்கள் பீஜாக்ஷரங்கள் என்று பெயரிட்டு திருக்கோவில் கிரியைகளுக்குப் பெரும் அளவில் பயன்படுத்துகின்றன. பூஜா மந்திரங்களை முறைப்படி குருவிடமிருந்து கற்றுக் கொள்ளும்போது, பீஜாக்ஷர மந்திரங்களின் ப்ரயோகமும் கற்றுத் தரப்படும்.

4.13. யந்த்ரம் என்ற சொல்லுக்கு ஒரு பொருளையோ சக்தியையோ தேக்கி வைத்திருக்கும் கருவி, ஒரு செயல் புரிகையில் அதற்குப்  பயன்படுத்தப்படும் கருவி, சாதாரண அறிவுக்கெட்ட சக்தியைத் தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டு விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு சாதனம் என்றெல்லாம் பொருள் காணப்படுகிறது. எனவே மந்திரங்களின் மூலம் பூஜா விதிகளைக் கூறும் தந்த்ர நூல்கள், யந்த்ரங்களின் விவரங்களையும், அவற்றை உபயோகிக்க வேண்டிய முறைகளையும் கூட வெளியிடுகின்றன. மந்திரங்களை ப்ரயோகித்துப் பலனடைய உதவும் தந்த்ரங்களாம் முத்திரைகமைச் சரியாக உபயோகிப்பதால், அம்மந்திரங்களுக்குரிய தெய்வங்கள் மகிழ்கின்றனர் என்பதும், முத்திரைகள் காட்டும்போது அவை யந்த்ரங்களோடு சம்மபந்தப்பட்டிருந்தால், அந்த யந்திரங்கள் தாங்கியுள்ள, தாங்க வேண்டிய, சக்திக்கான தேவதைகளும் திருப்தி அடைவது உறுதி.

4.14 முத்திரைகளுக்கு இன்னொரு முக்கியத்துவமும் உண்டு. பெரும்பாலான முத்திரைகள் அப்போது ஓதப்பட்டுக்கொண்டிருக்கும் மந்திரச் சொற்களின் பொருளையும், வழிபாட்டு உபாங்கத்தையும் அனுசரித்தே நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன. நடைபெறும் சிவ பூஜா கிரியைகளை, மந்திரங்களின் வாயிலாக அறிய முடியாதவர்களும்கூட, முத்திரைகளைக் கண்ணுற்று, அவற்றை ஊகித்து உணரலாம்.

4.15 இனி வரும் பக்கங்களில், சிவாலயங்களில் பயன்படுத்தப்பெறும் பல்வகையான முத்திரைகளில் சில, தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. முத்திரைகளின் சித்திரத்தைக் வைத்துக்கொண்டு, அவற்றில் பயிற்சியற்றோர் தேர்ச்சி பெறலாம் என்ற நோக்கில் அவை இங்கு சேர்க்கப்படவில்லை ! முத்திரைகளை பூஜா விதிகளோடு சேர்த்து, குரு மூலமாகத்தான் கற்றறிய வேண்டும்; அச்சிலேறி வருவதைப் பார்த்துக் கற்றுக் கொண்டு முத்திரைகளை ப்ரயோகிக்க இயலாது; ப்ரயோகித்தாலும் அவை பலன் தராதென்பதோடுகூட, அவ்வழி பெரும் தவறுங்கூட. இந்த புத்தகத்தில் காணப்படும் முத்திரைகளின் படங்களும் விளக்கமும், ஆலய வழிபாட்டிற்குச் செல்வோர், சிவாச்சாரியார் செய்யும் கிரியைகளின் பொருளை, முக்கியத்துவத்தை, உணர்ந்து கொள்ள உதவுவதற்காகவே அச்சேறி வருகின்றன.

முத்திரைகளின் விளக்கம்

1. குரு வந்தன முத்திரை : ஸுமுகம் : விரித்து, பக்க வாட்டில் சேர்ந்த இரு கைகளையும் உள்ளங்கைகள் நம் முகத்தைப் பார்க்குமாறு உயர்த்திப் பிடித்தல்.

2. குரு வந்தன முத்திரை : ஸுவ்ருத்தம் : ஸுமுக (1) முத்திரையில் விரல்களை மடக்குதல். கட்டைவிரல்கள் மேல் நோக்கி இருக்க வேண்டும்.

3. குரு வந்தன முத்திரை : சதுரச்ரம் : மேல் நோக்கியும் கீழ்நோக்கியும் கைகளை விரித்து (இடது கை கீழே) மணிக்கட்டு அருகே சேர்த்தல்.

4. குரு வந்தன முத்திரை : முத்கரம் : கட்டைவிரல்கள் தன்னை நோக்க, இடது முட்டி மீது வலது முட்டியை வைத்தல்.

5. குரு வந்தன முத்திரை : யோனி : இரு மோதி விரல்களையும், நடுவிரல்களின் பின்பக்கமாக வளைத்துக் கொண்டுவந்து, ஆட்காட்டி விரல்களால் பிடித்துக் கொள்ளவும்; இடது சுண்டுவிரலை வலது சுண்டுவிரலால் பிடித்துக் கொள்ளவும்; கட்டைவிரல் நுனிகளால் நடுவிரல்களின் நடுப்பகுதியைத் தொடவும்.

6. குரு வந்தன முத்திரை : ம்ருகீ : இரு கைகளின் கட்டை விரல், நடு விரல். மோதிர விரல்களை மடித்து நுனிகளைச் சேர்த்து, மற்ற விரல்களை நீட்டி, தலைக்கு மேல் பிடித்தல்.

7. அர்க்ய ஸ்த்தாபன முத்திரை : மத்ஸ்யம் : வலது உள்ளங்கை கீழ் நோக்க, இடது உள்ளங்கை அதனைத் தாங்க, கட்டை விரல்களை மட்டும் மீனின் செதில்களைப் போல் அசைத்துக் காட்டுதல்.

8. அர்க்ய ஸ்த்தாபன முத்திரை : அஸ்த்ரம் : வலது நடு விரல் மற்றும் ஆள்காட்டி விரல்களால் இடது உள்ளங்கையில் மும்முறை தட்டுதல்.

9. அர்க்ய ஸ்த்தாபன முத்திரை : அவகுண்டனம் : கைமுட்டிகளைக் கீழே காட்டி, வலது ஆட்காட்டி விரலால் ப்ரதக்ஷிணமாகவும், இடது ஆட்காட்டி விரலால் அப்ரதக்ஷிணமாகவும் இலக்கைச் சுற்றிக் காண்பித்தல்.

10. அர்க்ய ஸ்த்தாபன முத்திரை : தேனு - அம்ருதீகரணம் : ஒரு கையின் சுட்டு விரல் மற்றதின் மோதிர விரலைத் தொடவும், ஒன்றின் நடுவிரல் மற்றதின் ஆள்காட்டி விரலைத் தொடவும் செய்வது. (பால் இறங்கி நிற்கும் பசுவின்மடி போல் காணப்படும்.)

11. அர்க்ய ஸ்த்தாபன முத்திரை : காலினீ : இடது கை மேல் நோக்க, வலது கையைக் கவிழ்த்து, விரல்களை வளைத்துப் பிடித்தல். இடது கட்டை விரலும் வலது சுண்டுவிரலும் சேர்ந்து காணும் இடைவெறி மூலம் விசேஷார்க்யத்தப் பார்க்க உதவும் முத்திரை.

12. ஆவாஹனாதி முத்திரை : ஆவாஹனீ : ஸுமுக (1) முத்திரையில் கட்டை விரல்களால் மோதிர விரல்களின் அடிப்பாகத்தை தொட்டு அசைத்தல்.

13. ஆவாஹனாதி முத்திரை : ஸம்ஸ்தாபனீ (ஸ்தபனீ) : ஆவாஹனீ (12) போலவே கீழ் நோக்கிச் செய்தல்.

14. ஆவாஹனாதி முத்திரை : ஸந்திதாபனீ : கைமுட்டிகளை விரல்களின் நடுப்பகுதியில் சேர்த்து, கட்டை விரல்களை மேல் நோக்கிப் பிடித்தல்.

15. ஆவாஹனாதி முத்திரை : ஸந்நிரோதினீ : கட்டைவிரல்கள் உள்ளே மறைய, மற்ற நான்கு விரல்களின் நகங்கள் ஒன்றுக்கொன்று உரச, முட்டிகளைச் சேர்த்துப் பிடித்தல்.

16. ஆவாஹனாதி முத்திரை : ஸம்முகீகரணீ : விரல்கள் மடங்கிய நிலையில், கைமுட்டிகளை பக்க வாட்டில் சேர்த்து, நிமிர்த்திப் பிடித்தல்.

17. ஆவாஹனாதி முத்திரை : வந்தனீ : கைகூப்பி, விரல்கள் வளையாது, மார்புக்கு நேரே வந்தனம் செய்தல்.

18. ஆவாஹனாதி முத்திரை : தத்வம் : மற்ற விரல்கள் நிமிர்ந்திருக்க, இடது கை மோதிர விரல் நுனியைக் கட்டைவிரல் நுனியால் தொடுதல்.

19. ஆவாஹனாதி முத்திரை : சின் முத்திரை (அ) ஜ்ஞாந முத்திரை : வலது உள்ளங்கை வெளியே நோக்க, மூன்று விரல்கள் நிமிர்ந்திருக்க, ஆள்காட்டி விரல் நுனியைக் கட்டைவிரல் நுனியால் தொடுதல்.

20. ஆவாஹனாதி முத்திரை : ஸம்ஹாரம் (நிர்யாணம்) : இடக்கை கீழ் நோக்க, அதன் மேலே வலக்கையினை மேலே நோக்குமாறு வைத்து விரல்களைப் பிடித்துக்கொண்டு அசைத்துக் காட்டுதல்.

21. நியாஸ முத்திரை : முகம் : நான்கு வலக்கை விரல்களால் உதடுகளைத் தொடுதல்.

22. நியாஸ முத்திரை : கரசம்புடம் : ஸம்புடம் போல், கைகளை எதிர்முகமாகக் குவித்துப் பிடித்தல்.

23. நியாஸ முத்திரை : அஞ்ஜலி (நமஸ்காரம்) : இரண்டு கைகளையும் சேர்த்து, விரல்களை இணைத்து, பெருவிரல்கள் ஒன்றின் மேல் ஒன்றாகப் பின்னியுற வைப்பது.

24. நியாஸ முத்திரை : ஹ்ருதயம் : வலக்கையில் நடுவிலுள்ள மூன்று விரல்களால் இதயப் பகுதியைத் தொடுதல்.

25. நியாஸ முத்திரை : சிரஸ்: வலக்கையில் நடு மற்றும் மோதிர விரல் நுனிகளால் தலை உச்சியைத் தொடுதல்.

26. நியாஸ முத்திரை : சிகை : வலக்கை கட்டை விரல் நுனியால் சிகை (குடுமி) இருக்க வேண்டிய இடத்தைத் தொடுதல்.

27. நியாஸ முத்திரை : கவசம் : கைகளை மாற்றி, அனைத்து விரல்களாலும் தோள்களைத் தொடுதல்.

28. நியாஸ முத்திரை : நேத்ரம் : வலக்கையின் நடுவிலுள்ள மூன்று விரல்களால், இரு கண்கள், அவற்றின் நடுப்பகுதி ஆகியவற்றைத் தொடுதல்.

29. நியாஸ முத்திரை : அஸ்த்ரம் : வலது நடு விரல் மற்றும் ஆள்காட்டி விரல்களால் இடது உள்ளங்கையில் மும்முறை தட்டுதல்.

30. நியாஸ முத்திரை : ந்யாஸம் : வலது கை கட்டை விரலால் மடங்கிய மூன்று விரல்களைச் சேர்த்தபின், ஆட்காட்டி விரலால் அங்கங்களைத் தொடுவது.

31. நிவேதன முத்திரை : க்ராஸம் : மேல் நோக்கும் இடது கையால், கிண்ணத்தில் அன்னம் இருப்பது போல் பாவனையாகக் காட்டுவது.

32. நிவேதன முத்திரை : ப்ராணன் : வலது கை நடுவிரலையிம் ஆள்காட்டி விரலையும் சேர்த்துக் கட்டை விரலுடன் பிடித்து, இடக்கையின் க்ராஸ முத்திரை மீது நிவேதனம் செய்வது போல ஆட்டிக் காண்பித்தல்.

33. நிவேதன முத்திரை : அபானன் : வலது கை மோதிர விரலையும் நடுவிரலையும் சேர்த்துக் கட்டை விரலுடன் பிடித்து, இடக்கையின் க்ராஸ முத்திரை மீது நிவேதன் செய்வது போல ஆட்டிக் காண்பித்தல்.

34. நிவேதன முத்திரை : வ்யானன் : வலது கை சுண்டு விரலையும் மோதிர விரலையும் சேர்த்துக் கட்டை விரலுடன் பிடித்து, இடக்கையின் க்ராஸ முத்திரை மீது நிவேதனம் செய்வது போல ஆட்டிக் காண்பித்தல்.

35. நிவேதன முத்திரை : உதானன் : வலது கை மோதிர விரலையும் ஆள்காட்டி விரலையும் சேர்த்துக் கட்டை விரலுடன் பிடித்து, இடக்கையின் க்ராஸ முத்திரை மீது நிவேதனம் செய்வது போல ஆட்டிக் காண்பித்தல்.

36. நிவேதன முத்திரை : ஸமானன்; வலது கையின் அனைத்து விரல்களையும் சேர்த்துப் பிடித்து, இடக்கையின் க்ராஸ முத்திரை மீது நிவேதனம் செய்வது போல ஆட்டிக் காண்பித்தல்.

37. கணேச வந்தன முத்திரை : தந்தம் : வலக்கையின் நடுவிரலை மட்டும் மேலே நீட்டி, மற்றவற்றை மடக்கிப்பிடித்தல்.

38. கணேச வந்தன முத்திரை : பாசம் : இரு கை முட்டிகளையும் ஆள்காட்டி விரல்களின் நுனிகள் தொடுமாறு சேர்த்து, கட்டை விரல் நுனிகளும் அவற்றைச் சந்திக்கச் செய்தல்.

39. கணேச வந்தன முத்திரை : அங்குசம் : வலக்கை நடு விரல் நேராக நீட்டப்படும்; ஆள்காட்டி விரல் அதன் நடுப்பகுதி வரை வந்து முன் நோக்கி வளையும்.

40.கணேச வந்தன முத்திரை : விக்னம் : இறுகப்பிடித்த வலக்கை முட்டி கீழ் நோக்க, நடு விரல் மட்டும் நீட்டப்படுவது.

41. கணேச வந்தன முத்திரை : பரசு: உள்ளங்கைகளை ஒன்றை ஒன்று நோக்க, குறுக்கு வாட்டில் சேர்த்து, விரல்களை நீட்டுதல்.

42. கணேச வந்தன முத்திரை : லட்டுகம் : கையிலடங்கிய லட்டு அல்லது கொழுக்கட்டையைக் காண்பிப்பது போன்ற பாவனை.

43. கணேச வந்தன முத்திரை : பீஜாபூரம் : மாதுளம்பழம் போலக் கையைக் குவித்துப் பிடித்தல்.

44. சிவ வந்தன முத்திரை : லிங்கம் : உயர்த்திய வலது கட்டை விரலை முதலில் இடது கட்டை விரலால் பற்றிக் கொண்டு, பிறகு மற்ற இடக்கை விரல்களாலும் சுற்றிப் பிடித்து, இறுதியாக வலது கைவிரல்களால் இடக்கையை இறுகப் பிடித்து, இதயத்தின் அருகே பரிசுத்தமான மனத்துடன் வைத்துக் கொள்வது.

45. சிவ வந்தன முத்திரை : யோனி : மோதிர விரல்களுடன் சேர்த்து நீட்டிய நடு விரல்களின் மேல், கட்டை விரல்களை வைத்தல்.

46. சிவ வந்தன முத்திரை : திரிசூலம் : மடக்கிய வலக்கை சுண்டு விரலைக் கட்டை விரலால் அழுத்திக்கொண்டு, மற்ற மூன்று விரல்களை நீட்டிக் காண்பித்தல்.

47. சிவ வந்தன முத்திரை : அக்ஷமாலா : வளைந்த வலக்கை ஆள்காட்டி விரல் நுனியைக் கட்டை விரல் நுனி தொட, மற்ற மூன்று விரல்களை நீட்டிக் காண்பித்தல்.

48. சிவ வந்தன முத்திரை : வரம் : கீழ் நோக்கி மலர்ந்து நீண்ட வலது கை.

49. சிவ வந்தன முத்திரை : அபயம் : மேல் நோக்கி மலர்ந்து நீண்ட இடது கை.

50. சிவ வந்தன முத்திரை : ம்ருகீ : இரு கைகளின் கட்டை விரல், நடு விரல், மோதிர விரல்களை மடித்து நுனிகளைச் சேர்த்து , மற்ற விரல்களை நீட்டி, தலைக்கு மேல் பிடித்தல்.

51. சிவ வந்தன முத்திரை : கட்வாங்கம் : கையின் ஐந்த விரல்களையும் மேல் நோக்கிச் சேர்த்து, சற்று வளைத்துப் பிடித்தல்.

52. சிவ வந்தன முத்திரை : கபாலம் : இடது கையில் மண்டை ஓடு இருப்பது போல் பாவனை செய்து, அந்தக் கையை இடது பக்கமாக பிøக்ஷ கேட்பது போல் நீட்டுதல்.

53. சிவ வந்தன முத்திரை : டமருகம் : சற்றே விரிந்த வலக்கை முட்டியை, நடு விரலை மட்டும் சற்றுத் தூக்கிப் பிடித்து, காதிற்கு அருகே உடுக்கு அடிப்பது போல பாவனை செய்தல்.

54. பொதுவான முத்திரை : சாபம் (வில்) : உயர்த்திய வலக்கை நடுவிரல் நுனியை, ஆட்காட்டி விரல் நுனியைத் தொடுமாறு செய்தல்.

55. பொதுவான முத்திரை : சங்கம் : இடது கைக் கட்டை விரலை வலது முட்டியால் பற்றிக்கொண்டு, வலக்கை கட்டை விரலைச் சங்கு ஊதுவதுபோல் பாவனை செய்தல்.

56. பொதுவான முத்திரை : கட்கம் : வலது கட்டைவிரலால் சுண்டு விரலையும் மோதிர விரலையும் சேர்த்துப் பிடித்துக்கொண்டு, மற்ற இரு (ஆள்காட்டி, நடு விரல்களையும் ஒன்றோடு ஒன்று சேராமல் நீட்டுதல், (ஆள்காட்டி, நடு) விரல்களைச் சேர்த்து வைத்து நீட்டுவதே கட்க முத்திரை என்றும் சேர்க்காமல் நீட்டுதல் கோவிடாண முத்திரை என்றும் கொள்வதுண்டு)

57. பொதுவான முத்திரை : சர்மம் (கேடயம்) : இடது கையைக் குறுக்காக நீட்டி விரல்களை மடக்குதல்.

58. பொதுவான முத்திரை : முஸலம் : இடது முட்டி மீது வலது முட்டியை வைத்தல்.

59. பொதுவான முத்திரை :  வீணா : விணை வாசிப்பது போல் கைகளால் பாவனை செய்து தலையையும் அசைப்பது.

60. பொதுவான முத்திரை : புஸ்தகம் : கை முஷ்டியைத் தன்னை நோக்கிப் பிடிப்பது.

61. பொதுவான முத்திரை : கும்பம் : வலது இடது கட்டை விரல்கள் பக்க வாட்டில் உரசுமாறு இரு கை முட்டிகளையும் சேர்த்து நீட்டுதல்.

62. பொதுவான முத்திரை : ப்ரார்த்தனா : இரு கை விரல்களையும் விரித்துப் பக்க வாட்டில் தன்னை நோக்கிச் சேர்த்து இதயத்தில் வைத்துக் கொள்ளுதல்

63. பொதுவான முத்திரை : பசுமுத்திரை : சுண்டு விரல்களின் அடிப் பகுதியை கட்டை விரல் நுனிகளால் தொட்டுக்கொண்டு, இருகைகளையும் ஒன்று சேர்த்துக் குவித்து வணங்குவது. இது முத்தேவியருக்கும் மிகவும் உகந்தது.

64. நிரீக்ஷண முத்திரை : கட்டை விரல் மோதிர விரலை வளைத்துப் பிடிக்க மற்ற விரல்களை நீட்டுவது.

65. அப்யுக்ஷண முத்திரை : விரல்களை சேர்த்து நீட்டி, கட்டை விரலை அவற்றுடன் இணைத்து, கவிழ்த்துப் பிடிப்பது. இது சோத்திக முத்திரை, மற்றும் கவிழ்ந்த பதாகை எனவும் வழங்கப்பெறும்.

66. கோவிடான முத்திரை : ஆள்காட்டி விரலையும், நடு விரலையும் இணையாமல் நீட்டி, சுண்டு விரல் மோதிர விரல்களை மடக்கி இவற்றை கட்டை விரல்லால் அழுத்திப் பிடிப்பது.

67. சோடிகா முத்திரை; விரல்களை மடக்கி, ஆள்காட்டி விரலால் கட்டை விரல் மத்தியில் விரல் துடிக்கத் தெறிப்பது.

68. சாண முத்திரை : நடுவிரல்கள் மூன்றையும் இணைத்து, மற்ற விரல்களை விலக்கி நீட்டுவது.

69 மஹா முத்திரை : கைவிரல்கள் நீண்டிருப்பது.

70. ப்ரஸன்ன முத்திரை : இரண்டு கைகளையும் கூப்பி, இரண்டு கட்டை விரல்களையும் இணைத்து, அவற்றின் நுணிகள் மோதிர விரலின் அடியில் பொருந்த, உள்ளே மடக்குவது. இதை ஆவாஹன முத்திரை எனவும் கூறுவர்.

71. அதிஷ்டான முத்திரை : இரண்டு கைக் கட்டை விரல்களாலும் உள்ளங்கையைத் தொடுவது.

72. உஷ்ணீக முத்திரை : கட்டை விரல் நுணியை ஆள்காட்டி விரல் நுணியால் தொடுவது.

73. யோக முத்திரை : நடுவிரல் நுணியை பெருவிரல் நுணியால் தொடுவது. இதை மோக முத்திரை என்றும் கூறுவர்.

74. ஆக்ர முத்திரை : சுண்டுவிரல் நுணியை பெருவிரல் நுணியால் தொடுவது.

75. கடா முத்திரை : இரண்டு கைகளையும் இணைந்து, நடு விரல்கள் மூன்றினாலும் உள்ளங்கைகளைத் தொடுவது.

76. உஷ முத்திரை : ஒரு கை மோதிர விரலால் மற்றொரு கையில் உள்ளங்கையைத் தொடுவது.

நித்திய பூஜை


திருக்கோவில் நித்தியக் கிரியைகள் : ஆலயங்களில் நிகழ்வுறும் நித்தியக் கிரியைகள் நித்தியம், ஆகந்துக நித்தியம் என இரு வகைப்படும். நித்தியம் என்பது தினம் தினம் செய்யும் உஷத் காலம் போன்ற பூஜைகள். ஆகந்துக நித்தியம் எனப்படுவது ஒரு குறிப்பிட்ட தினத்தில் வந்து அமையும் சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சிகளையும் உள்ளடக்கி (சதுர்த்தி, ஷஷ்டி, சிவாரத்திரி, ப்ரதோஷம், பௌர்ணமி, விஷு, ஆடிப்பூரம், அன்னாபிஷேகம் போன்ற நாட்களில் ) செய்யப்படும் விரிவான நித்திய பூஜை (அம்சுமானாகமம்) (கவனம் : அத்தகு விசேஷ நாட்களில், நித்திய பூஜைகளுக்குப் பிறகு சிறப்பு வழிபாடுகள் நிகழ்ந்தால், அவை நைமித்திக பூஜைகளாகிவிடும்)

நேரக்குறிப்பு : கடிகை அல்லது நாழிகை என்பது தற்போது நாம் அனுசரிக்கும் நிமிஷங்களுள் இருபத்து நான்கு (24 நிமிடம்) கொண்ட கால அளவு. யாமம் அல்லது சந்தி என்பது ஏழரை நாழிகை (3 மணி நேரம்); 8 யாமம் என்பது ஒரு நாள் (ஒரு இரவும் பகலும் கொண்டது)

பூஜாக் காலங்கள் : திருச்செந்தூர் திருக்கோவிலில் பன்னிரு கால வழிபாடுகள் நடைபெறுவதாகக் கூறுவர். அஃதியலாவிடின், உஷத்காலம், காலசந்தி, உச்சிக்காலம், சாயரøக்ஷ, இரண்டாங்காலம் (இரவின் முதல் யாமம்), இரவு அர்த்த யாமம் ஆகிய ஆறு காலங்களிலாவது ஆலயபூஜை செய்வது சிறந்தது: அந்த அளவிற்கு வசதி இல்லாத திருக்கோவில்களில் மூன்று அல்லது இரண்டு கால பூஜைகள் மட்டும் நிகழ்த்துவிக்கப் பெறுகின்றன. இரண்டு காலங்கள் செய்வதனால், காலசந்தியும் சாயரøக்ஷயும் செய்திடல் வேண்டும். சூர்யோதயத்துக்கு முன் மூன்றேமுக்கால் நாழிகைக்குள் உஷத்கால பூஜை செய்யவேண்டும். காலசந்தி பூஜை (ப்ராத: காலம்) சூர்யோதயம் முதல் 10 நாழிகைக்குள் நடைபெறவேண்டும். சாயரக்ஷõ கால பூஜை (ப்ரதோஷ காலம்) சூர்யஸ்தமனத்திற்கு மூன்றேமுக்கால் நாழிகை முன்னதாகத் தொடங்கி, சூர்யாஸ்தமனம் ஆகும்போது நிறைவடையும். இரண்டாங்காலம் என்றழைக்கப்பெறும். இரவு முதல் யாம பூஜை அடுத்த மூன்றேமுக்கால் நாழிகைக்குள் செய்யப்படல் வேண்டும். அர்த்த யாம பூஜை என்பது, இரண்டாங்காலத்துக்குப் பிறகு, திருக்கோவில் நடை அடைப்பதற்கு மூன்றேமுக்கால் நாழிகை முன்னதாகத் தொடங்கிச் செய்யப்பட்டு ஆலயம் மூடுவதுடன் நிறைவடையும்.

பூஜா முறைகள்

உஷத்கால பூஜை :சிவாச்சாரியார், சூர்ய உதயத்துக்குக் குறைந்தது 5 நாழிகைகள் (2 மணி நேரம்) முன்பு எழுந்து வாக்கினால் தோத்திரமும் மனத்தினால் இறைவனது தியானமும் செய்துகொண்டு, இரண்டு நாழிகைக்குள் காலைக்கடன்களை முடித்துக்கொள்ளவேண்டும். பின்னர், ஸ்நானம் செய்து, வெண்மையான வேஷ்டி அங்கவஸ்த்ரம் உடுத்தி, விபூதி, ருத்ராக்ஷம் போன்ற சிவச் சின்னங்களை அணிந்து, ஆசமனம், அனுஷ்டானங்களை செய்துவிட்டு, ஆலயம் செல்ல வேண்டும். கோயில் வாயிலில் கைகால்களைக் கழுவிக்கொண்டு எதிர்ப்படும் நந்தி தேவரையும் துவாரபாலகர்களையும் ப்ரார்த்தித்து அவர்தம் அனுமதி வேண்டி, திருக்கோவில் வளாகம் புக வேண்டும். அங்கே சகளீகரணம் செய்து, சாமான்யார்க்யம் கூட்டி, அந்த அர்க்ய நீரினால் தன் மீதும் புறத்தே உள்ள பொருள்கள் மீதும் தெளித்து, அனைத்தையும் தூய்மையாக்க வேண்டும். இதைத் தொடர்ந்து ஆத்மார்த்த பூஜையாக கரந்யாஸம், ப்ராணாயாமம் செய்து, பூதசுத்தி, அந்தர்யாகம், சிவோகம்பாவனை ஆகிய மூன்று கிரியைகளைச் செய்ய வேண்டும். இவற்றால் அருச்சகர் சிவபூஜைக்குத் தகுதி வாய்ந்தவர் ஆகிறார். பின்னர், திருக்கோயில் வளாகம் காவல் காக்கும் பொறுப்புள்ளவரிடம் இருந்து பைரவர் ஸந்நிதியின் திறவுகோலைப் பெற்று, பைரவரின் நடையைத் திறக்க வேண்டும். ÷க்ஷத்திரபாலகரை (பைரவரை) பூஜித்து, பொறி நைவேத்யம் செய்து, முதல் நாள் இரவு ஒப்புவிக்கப்பட்டு இதுகாறும் அவர் வயம் இருக்கும் பள்ளியறைத் திறவுகோல் மற்றும் முத்திரா தண்டம் (சாவிக்கொத்து) ஆகியவற்றை அங்குச் முத்திரையால் எடுக்க வேண்டும். பின்னர், அனைத்து ஸந்நிதிகளையும் திறக்கச் செய்து அவற்றின் ஸாந்நித்யம் கலைக்கப்படாமல் வாத்தியங்கள், தோத்திரப் பாடல்கள் இசைக்க, பள்ளியறை சென்று, வெளியே இருந்து திருப்பள்ளி எழுச்சிப் பாடல்கள் இசைக்க வேண்டும். பின்னர் துவார பூஜை செய்து, கதவுகளைத் திறப்பதற்குக் காலகாலனது அனுமதியை வேண்டி, கதவில் திறவுகோல் நுழைவதற்குரிய துவாரத்தை பிந்து வடிவினாகத் தியானித்து, பின் அருச்சித்து, திறவுகோலை நாத வடிவினதாகத் தியானித்து பிந்துவினுள் செலுத்தி, சக்தி-சிவ மந்திரங்களை உச்சரித்த வண்ணம் பள்ளியறைக் கதவினைத் திறந்திடல் வேண்டும். பவித்ரமான அர்க்ய நீரினால் உட்புறம் முழுதும் தெளித்து, நிர்மால்யம் களைந்து, பாவனையால் ஸ்நானம் முதலானவை செய்வித்து, ஆசமநீயம் ஆகியவற்றை முறைப்படி அளித்து, அவரை வெளியே எழுந்தருளும் வண்ணம் வேண்டி நிற்றல் வேண்டும். பின்னர் சக்தியை (மனோன்மணியை) அங்கேயே விடுத்து, இறைவனை (பாதுகையை) மட்டும் சிவிகையில் (பல்லக்கில்) எழுந்தருளுச் செய்து, வலமாக எடுத்து வந்து, கருவறை சேர்ப்பிக்க வேண்டும். அங்கு மூல மூர்த்திக்கு முன் பூவைக் கையில் எடுத்துக் கொண்டு, மூலலிங்கத்தில் சேர்த்திடல் வேண்டும். பிறகு உஷத்கால பூஜையாக ஸ்தான சுத்தி செய்து, பூதேவியை வழிபட்டு, திரவ்ய சுத்தி செய்து, கணபதியை பூஜிக்க வேண்டும். பிறகு, ஸ்வாமி, ஸோமாஸ்கந்தர், மகேச்வராதிகள், அம்பாள் ஆகியோரை விதிப்படி பூஜிக்க வேண்டும். பூஜையின் முடிவில் சூர்யோதயம் ஆக வேண்டும்.

தீர்த்த ஸங்க்ரஹணம், காலசந்தி பூஜை : சிவபெருமான் அர்த்தயாம பூஜையின் முடிவில், சிவிகை மீதமர்ந்து கீதம், நர்த்தனம், வாத்ய கோஷங்களுடன் சயனாலயத்திற்குச் சென்றதும், பரமசிவனுடைய ஜடையிலுள்ள கங்கை, அங்கு பள்ளி அறையிலுள்ள மனோன்மணியம்மையை வணங்கி, வெகு வேகமாக அங்கிருந்து நீங்குவாள். மீண்டும் கங்கா தேவியை பரமசிவனுடைய ஜடாமகுடத்தில் சேர்க்கும் பொருட்டு செய்யப்படும் கிரியையே கங்காஹரணம் அல்லது தீர்த்த ஸங்க்ரஹணம் எனப்படும். தன்னை நன்றாகச் சுத்தி செய்து கொண்ட சிவாச்சாரியார், சுவர்ணம் முதலிய ஏதாவதொரு குடத்தில் நதியிலிருந்து நீரை நிரப்பி, மாவிலை தேங்காய் முதலியவற்றால் அலங்கரித்து, பரிசாரகரின் தலை மீது அந்தக் குடத்தை ஏற்றி, வாத்ய கோஷங்களுடன் உபசாரங்களுடனும் எடுத்து வந்து, சிவலிங்கத்தின்மீது விசர்ஜனம் செய்ய வேண்டும். இதன் பிறகே காலசந்தி பூஜை தொடங்கும். முதலில் சூர்ய பூஜையும், கணேச பூஜையும். பின்னர், பஞ்சகவ்யம், ஸ்நபன திரவியங்கள் செய்து வைத்துக்கொண்டு, த்வாரபூஜை, வ்ருஷபதேவர் பூஜை, வாஸ்துபூஜை, லிங்கசுத்தி ஆகியன செய்து, போகாங்க பூஜை செய்து, நைவேத்யம் முதலிய உபசாரங்கள் செய்ய வேண்டும். பின்னர் தேவி பூஜையும், பரிவார பூஜையும், தொடர்ந்து நித்யாக்னி கார்யம், ஸ்ரீபலி, நித்யோத்ஸவ நிகழ்ச்சிகள். நிறைவாக சண்டிகேச்வரர் பூஜை.

உச்சிகால பூஜை : விக்நேச்வர பூஜை, புண்ணியாகம் (புண்ணியாஹவாசனம்) பூதசுத்தி, அந்தர்யஜனம், தியானம், ஸ்தானசுத்தி, விசேஷார்க்யம், த்ரவ்யசோதனை, மந்திரசோதனை, சிவாகம்பாவனை ஆகிய பூர்வாங்கக் கிரியைகள் முதலில், பின்னர், ஸ்நபன பூஜை செய்து, துவாரபாலகரை வணங்கி, உட்புகுந்து, ஆதாரசக்தி முதல் மானசாபிஷேகம் வரை முறையாக மூலவரை அர்ச்சிக்க வேண்டும். பிறகு அபிஷேகம், அலங்காரம்,  ஆவரண பூஜை, பிறகு, தூப தீப நைவேத்யங்கள். பிறகு நடேசர், சோமாஸ்கந்தர் முதலிய மூர்த்திகளுக்கும், தேவிக்கும் பூஜை, சில திருக்கோவில் சம்ப்ரதாயங்களில், தொடர்ந்து நித்யாக்னி கார்யம், ஸ்ரீபலி, நித்யோத்ஸவ நிகழ்ச்சிகள் உண்டு. பூஜையின் நிறைவாக, சிவ நிர்மால்யத்தைச் சிவசண்டேச்வரரிடம் சமர்ப்பித்தல்.

சாயங்காலத்தில் செய்யப்படும் பூஜை : ஸூர்யன் சாயும் காலத்தில் செய்யப்படுவது சாயுங்கால அல்லது சாயங்கால பூஜை. இதுவே நித்திய ப்ரதோஷ பூஜை எனவும் கூறப்படும். (நித்திய-நைமித்திக ப்ரதோஷ பூஜை என்பது க்ருஷ்ண-சுக்ல பக்ஷ த்ரயோதசி நாட்களில் சாயுங்காலத்தில் செய்யப்படும் சிறப்ப பூஜையாகும்). முதலில் கணேசருக்கும், நடராஜருக்கும் பூஜை. பின்னர் மூல லிங்கத்திற்கு தூப தீப நைவேத்யம் உள்ளிட்ட பூஜை. பிறகு சோமாஸ்கந்தர் முதலிய மூர்த்திகளுக்கும், தேவிக்கும் பூஜை.

இரண்டாங்கால பூஜை (இரவு முதல் யாம மகாசந்தி பூஜை) : முதலில் விக்நேச்வர பூஜை செய்து, பின்னர் ஸ்வாமி ஸந்நிதியில் துவார பூஜை; சிவோகம்பாவனை செய்து, ஐந்து ஆவரணங்களுடன் இறைவனைப் பூஜித்து, வ்யோமவ்யாபி மந்திரத்தினால் எண்ணெய் முதல் ஸ்நபனம் வரை அபிஷேகம்; அலங்காரம்; தூப தீப நைவேத்யம், ராஜோபசாரம்; தேவி பூஜை; பரிவாரங்களுக்கு பூஜை; தொடர்ந்து நித்ய அக்கினி காரியம், நித்யோத்ஸவம், ஸ்ரீபலி; நிறைவாக சண்டிகேச்வரர் பூஜை.

இரவு அர்த்தயாம பூஜை: த்வாரபூஜை கிடையாது; ஸ்நாபனம்; மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம்; பஞ்சாவரண பூஜை; அப்பம் ஈறாஜ நைவேத்யம்; தேவி பூஜை; போகசக்தி பூஜை; பின் ஸ்வாமி ஆலயத்தில் சந்த்ரசேகரர், ஸோமாஸ்கந்தர், நடேசர், மூல மூர்த்தி இப்படி ஒடுக்கக் கிரமமாய் பூஜித்துத் திரையிட்டு, பாதுகாராதன பிம்பத்தில் மூர்த்தியை ரஹஸ்யமாய் சம்யோஜித்து பூஜித்து, சிவிகையில் ஏற்றி, சகல உபசாரங்களுடன் பள்ளி அறையில் சேர்த்தல். பின் அம்பாள் ஆலயத்தில், திரையிட்டு, அங்குள்ள சயனாலய பிம்பத்தில் அல்லது பீடத்ரிகோணத்தில் சக்தியை ரஹஸ்ய பூஜையுடன் சம்யோஜித்து ஆராதனையை முடித்தல். பின்னர் சயனாலயத்தில் சுவாமி பாதுகையில் இடப்பக்கத்தில் சக்தி பிம்பத்தை எழுந்தருளச் செய்து, பள்ளியறை பூஜை; பால், பால் பாயஸம், வடை நைவேத்யம்; வாசனைப் பொருட்களுடன் கூடிய தாம்பூலம் சமர்ப்பணம்; திரை இட்டு, இறைவனைப் பள்ளி கொண்டருளும்படி தோத்திரப் பாடல்கள் இசைத்தல்; பள்ளியறை நடைஅடைத்தல். சண்டேச்வரர் பூஜை; பிறகு, . ÷க்ஷத்ரபாலகருக்கு (பைரவருக்கு) பூஜை செய்து, அவரிடம் முத்திரா தண்டத்தை (திருக்கோவில் சாவிக்கொத்து) ஒப்படைத்தல். பின்னர் பைரவர் ஸந்நிதி நடை அடைத்து அந்தச் சாவியை திருக்கோயில் வளாகம் காவல் காக்கும் பொறுப்புள்ளவரிடம் அளித்தல்.

பூஜா கால அளவு : ஒவ்வொரு காலத்திலும் செய்யப்படும் பூஜைக்கு ஆகக்கூடிய நேரம் : அபிஷேகத்திற்கு - 2 நாழிகை; அர்ச்சனைக்கு - 1 நாழிகை; நைவேத்யத்திற்கு - அரை நாழிகை; நித்யாக்னி கார்யம் - அரை நாழிகை; நித்யோத்ஸவம் - அரை நாழிகை; நர்த்தனம் முதலிய கலா உபசாரங்கள் - 1 நாழிகை.

நித்யாக்கினி காரியம் : இதற்காக ஸ்வாமி ஸந்நிதியில் குண்டம் அமைக்கப்பட்டிருக்கும். நிரீக்ஷணம், ப்ரோக்ஷணம், தாடனம், அப்யுக்ஷணம் ஆகிய நான்கு வகை கிரியைகளைச் செய்து புனிதமாக்கப்பெற்ற நீரினால் குண்டத்தை ப்ரோக்ஷணம் செய்து கலாமயமாகக் கற்பித்து, எண்வகை மலர்களால் அருச்சித்து, அவிச்சின்னமான (தடைப்படாது இருந்து வருகின்ற) அக்நியைத் தியானித்து, பரிதிகளையும் விஷ்டரங்களையும் (குண்டத்தில் படிகள்) உரிய இடத்தில் வைத்து, பரிதிகளில் ப்ரஹ்மா, விஷ்ணு, ருத்ரன், ஈமானன் ஆகியோரையும். விஷ்டரங்களில் இந்திரன் முதலிய திக்பாலகர்களையும் ஆவாஹனம் செய்து அருச்சித்து, அர்க்யம் கொடுத்து, சிருக்சுருவ ஸம்ஸ்காரங்களையும் ஆஜ்ய (நெய்) ஸமஸ்காரங்களையும் செய்தல் வேண்டும். கனன்று எழும் அக்கினியைச் சிவாக்கினியாகப் பாவித்து, அதன் நடுவேயுள்ள இதயத் தாமரை மலரில் சிவபிரானை ஆவரணங்களுடன் அருச்சித்து, மூலமந்திரம் மற்றும் பஞ்சப்ரஹ்ம மந்திரங்களால் ஆகுதி செய்து பூர்ணாஹுதி செய்திடல் வேண்டும். பின்னர், பரிதி விஷ்டரங்களில் அன்னத்தால் பலி; அங்கிருந்து புஷ்பங்களை அஞ்சலி முத்திரையால் எடுத்து, மூலவரிடம் கொண்டு சென்று, க்ஷமாபராத மந்திரம் கூறி, உற்பவ முத்திரையால் வணங்கி வரத ஹஸ்தத்தில் மலர்களை சமர்ப்பித்தல் வேண்டும்.

ஸ்ரீபலி : தினமும் மூன்று வேளைகள் இல்லாவிடினும், காலை - மாலை இரு வேளைகளிலுமாவது (அல்லது மிகக் குறைந்தபக்ஷமாக ஒரு வேளையாவது) நித்திய பலி இடுதல் வேண்டும். நாமாவளியின் இறுதியில் நம: என்று கூறி அருச்சித்தல் முறை; அவ்வாறே, நாமாவளியின் இறுதியில் ஸ்வாஹா என்று கூறி ஸ்ரீபலி இடுவது முறை. மற்றொருவர் பலி நாயகரைச் சுமந்து வர, பரிசாரகர் அன்னம் எடுத்து வர, சிவாச்சாரியார் ஒரு கையில் அர்க்ய பாத்திர நீரும், மற்றொன்றில் மணியும் எடுத்துச் செல்வார். இறைவன் ஸந்நிதி முன்னுள்ள துவாரபாலகரிடமிருந்து தொடங்கி, பலி பீடங்கள், திருநந்திதேவர் ப்ரதிஷ்டையாகியுள்ள இடங்கள், த்வஜஸ்தம்பதத்தின் அருகிலுள்ள பத்ரலிங்கம் என்றழைக்கப்பெறும் மஹாபலிபீடம். திக் பாலகர்கள். அனைத்துப் பரிவார தெய்வங்களுக்குமான பலிபீடங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் பூமியில் நீர் தெளித்துப் புனிதமாக்கி, பரிசாரகர் தரும் சுத்த அன்ன உருண்டைகளை வைத்து சிவாச்சாரியார் பலி இடுவதே ஸ்ரீபலி.

7. அபிஷேகம்


7.1 அபிஷேக தீர்த்தத்தில் போடுவதற்கு உகந்த திரவியங்கள் : பாதிரிப்பூ, உத்பலம், தாமரைப்பூ, அலரிப்பூ முதலியன.

7.2 அபிஷேகப் பொருட்களின் வரிசைக் கிரமம் : எண்ணெய், பஞ்சகவ்யம், மாவு, நெல்லிமுள்ளி, மஞ்சள்பொடி, பஞ்சாமிருதம், பால், தயிர், நெய், தேன், கரும்பின் சாறு, (பழங்கள்), பழ ரசங்கள், இளநீர், அன்னாபிஷேகம், சந்தனம், ஸ்நபனம்

7.3 அபிஷேக திரவியங்கள் தரும் பலன் : சுத்த நீர் - விருப்பங்கள் நிறைவேறும், மணம் உள்ள தைலம் - சுகம் தரும், பஞ்சகவ்யம் - பாவத்தைப் போக்கும், பஞ்சாமிர்தம் - செழிப்பினைத் தரும், நெய் - மோக்ஷம் அளிக்கும், பால் - வாழ்நாள் வளர்ச்சி, தயிர் - மக்கட் செல்வம் தரும், மாப்பொடி - கடன் ஆரோக்கியம் அளிக்கும், தேன் - சுகம் தரும், பழபஞ்சாமிர்தம் - செல்வங்கள் பெருகும், வாழைப்பழம் - பயிர் செழிக்கும், பல்லவம் - உலகை வயப்படுத்தும், மாம்பழம் - மகனுக்குச் சீர் சேர்க்கும், மாதுளை - கோபத்தை நீக்கும், கொளஞ்சி நாரத்தை - சோகத்தைப் போக்கும், நாரத்தை - ஒழுங்கு ஏற்படுத்தித் தரும், எலுமிச்சை - மரணபயம் நீக்கும், சர்க்கரை - பகை களையும், இளநீர் - இன்பங்கள் நல்கும், அன்னாபிஷேகம் - நாடாளும் வாய்ப்பு அளிக்கும், சந்தனக் குழம்பு - தொலையா நிதியம் (லலக்ஷ்மி கடாக்ஷம்) சேர்க்கும்.

7.4 பஞ்சகவ்யம் : கோமயம் (பசுஞ்சாணம்), கோஜலம், நெய், தயிர், பால், இவைகளைக் கலந்து, பஞ்சப் பிரம்மத்தினால் பூஜித்து, பிறகு அபிஷேகத்துக்கு உபயோகிக்க வேண்டும்.

7.5 பஞ்சாமிர்தம் இரு வகை : (1) ரஸ பஞ்சாமிர்தம் - ஏலக்காய் முதலிய வாசனைப் பொருட்கள் சேர்த்த நீருடன் பால், தயிர், நெய், சர்க்கரை, தேன் இவைகளைச் சேர்த்துச் செய்யப்படுவது. (2) பல (பழ) பஞ்சாமிருதம் - மேற்குறிப்பிட்ட பொருட்களுடன், முக்கனியும் (வாழை, பலா, மா) மற்றுமுள்ள பழங்களையும் கூட்டிச் செய்வது

7.6 நாகப்பழம் : மாதுளை, எலுமிச்சை, புளி, கொய்யா, வாழை, நெல்லி, இலந்தை, மா, பலா - ஆகிய பழங்கள் பூஜைக்குச் சிறந்தவை.


மலர்கள்

8.1 காலங்களுக்கேற்ற புஷ்பங்கள் : காலை : தாமரை, பொரசு, துளசி, நவமல்லிகை, நந்தியாவட்டை, மந்தாரை, முல்லை, சண்பகம், புன்னாகம், தாழை, நண்பகல் : வெண்தாமரை, அரளி, பொரசு, துளசி, நெய்தல், வில்வம், சங்கபுஷ்பம், மருதாணி, கோவிதாரம், ஒரிதழ். மாலை : செந்தாமரை, அல்லி, மல்லிகை, ஜாதி, முல்லை, மருக்கொழுந்து, வெட்டிவேர், கஜகர்ணிகை, துளசி, வில்வம்.

8.2 அஷ்ட புஷ்பங்கள் : அறுகு, சண்பகம், பன்னாகம், நந்தியாவட்டை, பாதிரி, ப்ரஹதி, அரளி, தும்பை இலைகள்.

8.3 எடுக்கப்பட்ட புஷ்பங்களின் உபயோக நாட்கள் : தாமரை - 5 நாட்கள், அரளி - 3 நாட்கள், வில்வம் - 6 மாதம், துளசி - மூன்று மாதம், தாழம்பூ - 5 நாட்கள், நெய்தல் - 3 நாட்கள், சண்பகம் - 1 நாள், விஷ்ணுக்ரந்தி - 3 நாள், விளாமிச்சை - எப்போதும்.

8.4 உபயோகப் படுத்தக் கூடாத புஷ்பங்கள் : கையில் கொண்டு வந்தது, தானாக விழுந்தது, கொட்டை (ஆமணக்கு) அல்லது எருக்க இலைகளில் கட்டிக் கொண்டு வந்தது, வாசனை அற்றது, மயிர் கலந்து கிடந்தது, புழு இருந்தது, மிகக் கடுமையான வாசனை உள்ளது, வாடியது, நுகரப்பட்டது, தானாக மலராமல் செயற்கையாக மலரச் செய்யப்பட்டது, அசுத்தமான முறையில் எடுத்து வரப்பட்டது, ஈர வஸ்திரத்துடன் எடுத்து வரப்பட்டது. யாசித்துப் பெறப்பட்டது, பூமியில் விழுந்து கிடந்தது ஆகியன. பொதுவாக, மலராத மொட்டுக்கள் (சம்பக மொட்டு நீங்கலாக) பூஜைக்கு உதவா.

8.5 துளசி, முகிழ், சண்பகம், தாமரை, வில்வம், கல்ஹாரம், மருக்கொழுந்து, மருதாணி, தருப்பை, அருகு, அஸிவல்லி, நாயுருவி, விஷ்ணுக்ரந்தி, நெல்லி - ஆகிய செடி கொடி, மரங்களின் இலைகள் (பத்ரங்கள்) பூஜைக்கு உதவும்.

8.6 அக்ஷதை, வெள்ளெருக்கு, ஊமத்தை இவை விஷ்ணு பூஜைக்கு ஆகாது. செம்பருத்தி, தாழம்பூ குந்தம், கேஸரம், குடஜம், ஜபா புஷ்பம் இவை சிவனுக்கு சுகாது. அறுகு, வெள்ளெருக்கு மந்தாரம் - இவை அம்பாளுக்குக் கூடாது. துளசி விநாயகருக்கு ஆகாது.

8.7 புஷ்பங்களைக் கவிழ்த்துச் சாத்தக்கூடாது; ஆனால் புஷ்பாஞ்சலியின்போது மலர்கள் கவிழ்ந்து விழுவது தவறல்ல. புஷ்பச் சேதம் செய்யக் கூடாது. அதாவது, ஒரு மலரை சிறிது சிறிதாகக் கிள்ளியோ வெட்டியோ பயன்படுத்தக் கூடாது.

அலங்காரம்


9.1 ஆவுடையாருக்கு வஸ்த்ரம் : காலஸந்தி பூஜையிலே வெள்ளை வஸ்த்ரமும், உச்சிகால பூஜையின்போது சிவப்பு வஸ்த்திரமும், சாயரøக்ஷ பூஜை காலத்தில் மஞ்சள் வண்ண வஸ்த்ரமும், அர்த்யாம பூஜையின்போது எல்லா வஸ்திரங்களும் சாத்தலாம்.

9.2 பழமையானது, கிழிந்ததும், வெடித்ததும், எலி கடித்ததுமான வஸ்திரங்களை விலக்க வேண்டும்.

9.3 கவச மந்திரத்தினால் பூணூலும், ஹ்ருதய மந்திரத்தினால் வஸ்திரமும் சாத்த வேண்டும். வாசனைத் திரவியங்களோடு கூடிய சந்தனம் சாத்த வேண்டும்.

9.4 அருக, கோஷ்டம், குங்குமம், கற்பூரம், பன்னீர் இவைகள் கலந்த சந்தணத்தை இறைவனுக்குச் சாத்த வேண்டும்

9.5 இலிங்கத்தின் சிரஸில் ஒருபோதும் புஷ்பம் இல்லாமல் இருக்கக் கூடாது.

9.6 கனிஷ்டை (சுண்டு விரல் அல்லது சிறு விரல்), அனாமிகை (மோதிர விரல் அல்லது அணி விரல்) விரல்களுக்கு இடையில் புது மலரை வைத்துக் கொண்டு, அங்குஷ்டம் (கட்டை விரல் அல்லது பெரு விரல்), தர்ஜனி (சுட்டு விரல் அல்லது ஆள்காட்டி விரல்) விரல்களால் நிர்மால்யத்தைக் களைய வேண்டும்; அப்படிக் களையும்போது, முன்விரலில் இடுக்கி வைத்துள்ள புதுமலரைச் சாத்த வேண்டும் (மத்யமை என்று கூறப்படும் நடு விரல் அல்லது பாம்பு விரல் இந்தக் கிரியையில் பயன் படுத்தப்படுவதில்லை.)

உபசாரங்கள்


10.1 உபசாரங்கள் மூன்று விதம் : ஸாங்கம், உபாங்கம், ப்ரத்யங்கம். (1) ஸாங்கம் : ஸ்நானம் (அபிஷேகம்), பாத்யம், ஆசமனம், வஸ்திரம், ஆபரணம், வாஸனை, சந்தணம் பூசுதல், அர்க்யம், புஷ்பம் சாத்துதல் (2) உபாங்கம் : தூப-தீபம், ஸாயரøக்ஷகளில் விபூதி சாத்துவது, கொடை, சாமரம், கண்ணாடி, நிருத்தம், கீதம் ஆகியவற்றை தெரிவிப்பது (3) ப்ரத்யங்கம் : நைவேத்யம் செய்தல், ஸ்ரீபலி, ஹோமம் செய்தல், நித்யோத்ஸவம், சுருகோதகம், ஸ்வஸ்திவாசனம்.

10.2 ÷ஷாடச உபசாரங்கள் : உபசாரம் செய்யும் முறை : 1. ஆவாஹனம், 2. ஸ்தாபனம் 3. பாத்யம் 4. ஆசமநீயம் 5. அர்க்யம் 6 அபிஷேகம் 7 வஸ்த்ரம் சாத்துதல் 8 ஆபரண, புஷ்ப அலங்காரம் 9. தூபம் - தீபம் 10. நிவேதனம் 11. பலி இடுதல் 12. ஹோமம் செய்தல் 13. இசை, கீதம் 14. ஸ்ரீபலி நாயகர் எழுந்தருளல் (உலா) 15. நர்த்தனம் 16. உத்வாஸனம் (தோத்திரப் பாடல்கள் ஓதுதல்), நித்யோத்ஸவம்.

10.3 ஆவாஹநம் : அலங்காரத்திற்குப் பிறகு, சிவபெருமானை ஸத்யோஜாத மந்திரத்தினால் ஆவாஹநம் பண்ண வேண்டும்; பிறகு வாமதேவ மந்திரத்தினால் ஸ்தாபநம்; அகோர மந்திரத்தினால் ஸந்நிதாநம்; தத்புருஷ மந்திரத்தால் ஸந்நிரோதநம்; ஈசான மந்திரத்தினால் ஸம்முகீகரணம் (நன்முகத்தைக் காட்டியருள வேண்டுதல்) பண்ணவேண்டும்.

10.4 ஆவாஹனம் : அன்புடன் தனக்கு எதிர்முகமாக இருக்கச் செய்தல். பூஜை முடியும் வரை, தயை கூர்ந்த இலிங்கத்தில் அல்லது கலசத்தில் எழுந்தருளி இருக்க வேண்டும் என்று ப்ரார்த்திப்பதே ஆவாஹனம்.

10.5 ஸ்தாபனம் : பக்தியினால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இறைவனை நிலைகொள்ளச் செய்யும் கிரியை.

10.6 ஸந்நிதானம் : இறைவா ! நான் என்றும் உன்னுடையவன்; என்னை ஆட்கொண்டு அருள் செய்து, என் கிரியைகளுக்கு ஆசி வழங்கு எனக் கோருவது.

10.7 நிரோதம் : தான் செய்யும் கிரியையின் முடிவு வரை தகைந்து இருக்குமாறு இறைவனைக் கோருவது.

10.8 ஆவாஹனத்தின் போது பாத்யம், ஆசமனீயம், அர்க்யம் இவைகளைக் கொடுக்க வேண்டும்.

10.9 எவை, எங்கே? : பாத்யத்தை பாதத்திலும், ஆசமனத்தைக் கையிலும், அர்க்யத்தை சிரஸ்ஸிலும் கொடுக்க வேண்டும். சந்தணப்பூச்சை சரீரத்திலும், சிரஸ்ஸில் கிரீடத்தை வைத்து அதன்மேல் புஷ்பத்தையும் வைக்க வேண்டும். மூக்குக்கு அருகில் தூபத்தையும், நேத்திரத்துக்கு அருகில் தீபத்தையும் காட்ட வேண்டும். அந்நத்தையும், தாம்பூலத்தையும் கையில் கொடுக்க வேண்டும்.

10.10 விளாமிச்சம்வேர், சந்தணம், அறுகு, வெண்கடுகு - இவை நான்கும் பாத்ய நீரில் சேர்ப்பதற்கு உரியவை. ஏலக்காய், கிராம்பு, பச்சைக் கற்பூரம், நாவற்பழம், ஜாதிக்ககாய், இவை ஆறும் ஆசமனீய நீரில் சேர்க்கக்கூடிய திரவியங்கள். எள், நெல், தருப்பை நுனி, ஜலம், பால், அக்ஷதை, வெண்கடுகு, யவம் இவை எட்டும் அர்க்ய நீரோடு சேர்க்ககூடிய திரவியங்கள்.

10.11 பாத்யம், அர்க்யம், ஆசமனீயம் கொடுக்க வேண்டிய காலங்கள் : அபிஷேக ஆரம்பம், அபிஷேக முடிவு, நைவேத்ய ஆரம்பம், நைவேத்ய முடிவு, தூவ-தீபங்கள் காட்டும் நேரம் - இந்த 5 சமயங்களின் முடிவு, பூஜையின் முடிவு - இந்த 3 காலங்களில் அர்க்யமும் கொடுக்க வேண்டும். அர்க்யம் கொடுக்கும் காலம், பூச்சுப் பூசம் காலம், அபிஷேக காலம் - இந்த மூன்று கால்ஙகளிலும் சந்தணமும் கொடுக்க வேண்டும்.

10.12 ஆவாஹனம், அர்க்யம், அபிஷேகம், தூபம், பூசும் காலம், நைவேத்யம், விசர்ஜனம் இந்த ஏழு காலங்களில் அஷ்ட புஷ்பம் சாத்த வேண்டும்.

10.13 தீப ÷ஷாடசோபசாரம் : 1. தூபம் 2. ஏகதீபம் (உருக்களி) 3. அலங்கார தீபம் (1,3,5,7,9 அல்லது 11 அடுக்குகள் கொண்ட தீபம். புஷ்ப தீபம், மஹா தீபம் என்றும் அழைக்கப் படுவதுண்டு ) 4. நாக தீபம், 5. வ்ருஷப தீபம் (நந்தி தீபம்) 6. புருஷா ம்ருக தீபம் 7. சூல தீபம் 8. கூர்ம (ஆமை) தீபம் 9. கஜ (யானை) தீபம் 10. ஸிம்ஹ தீபம் 11. வ்யாக்ர (புலி) தீபம் 12. கொடி தீபம் 13. மயூர தீபம் 14. பஞ்ச தட்டுடன் பூர்ண கும்ப தீபம் 15. நக்ஷத்ர தீபம் 16. மேரு தீபம். (இவற்றுள் சிலவற்றை விடுத்து, ஸூர்யன், சந்திரன், வ்ருக்ஷம் (மரம்) ஆகிய தீபங்களாலும் உபசரிப்பதுண்டு)

10.14 சுளுகேதகம் : மூ மந்த்ர ஜபம் எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவு செய்து, ப்ரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து, பிறகு ஹே பரசேம்வரா ! என்னுடைய பக்தியை, பூஜையை ஏற்றுக் கொள்வீராக ! என்று ப்ரார்த்தனை செய்து, எல்லா பூஜையின் பலனையும் தீர்த்தத்துடன் ஸ்ரீ சிவ பெருமான் கையில் கொடுக்க வேண்டும். தக்ஷிண ஹஸ்தத்தை நான்கு அங்குலமாகக் குறுக்கி, அந்தக் கையிலே புஷ்பம், தீர்த்தம் எவைகளை எடுத்து,  ஸ்ரீ சிவபெருமான் திருவடியினடியில் விடவேண்டும். இது சுளுகோதகம். பிறகு சந்தணம் புஷ்பம் இவைகளைக் கையில் வைத்துக், ஸம்ஹிதா மந்திரம் ஜபித்து, அதை சிவபெருமானுக்குச் சாத்தவேண்டும். (காரண ஆகமம் - பூஜாவிதி படலம் - ச்லோகம் 439-442). ÷ஷாடச உபசாரங்களுக்குப் பிறகு தேங்காய் பழம் தாம்பூலம் நிவேதனம் செய்து, கற்பூர ஹாரத்தி செய்தபின், சிவாச்சாரியார் சுளுகோதக சமர்ப்பணம் செய்து ப்ரார்த்திக்க வேண்டும். மூல மந்திரத்தை இயன்ற அளவு ஜபம் செய்து, அம்மந்திரத்தை கையில் புஷ்பத்துடன் சேர்த்து கவச மந்திரத்தினால்  அவகுண்டனம் செய்து, தீர்த்தத்தைக் கீழே விட்டு, சுவாமியின் வரத ஹஸ்தத்தில் புஷ்பத்தைச் சேர்த்து ஜப சமர்ப்பணம் செய்வதே சுளுகோதகம் என்பது. இவ்வாறு செய்யாத பூஜை பயனற்றதாகும்.

10.15 பூஜையின் ஆரம்பம், அபிஷேகத்தின் முடிவு, அர்ச்சனையின் முடிவு - இக்காலங்களில் தூபம், நெய்கலந்த தீபம் காண்பிக்கவேண்டும்.

10.16 தூபம் - பாபத்தைப் போக்கும்; தீபம் - பகைவரை அழிக்கும்; கடதீபம் - சாந்தி அளிக்கும்; நீராஜனம் - மேலுலகப் பலன் அளிக்கும்; விபூதி - மூவுலகிற்கும் ரøக்ஷ; கண்ணாடி - லோக விருத்தி; குடை - நீண்ட ஆயுள்; சாமரம் - பாக்கியம்; சுருட்டி, விசிறி - மங்களம்.

10.17 தீபாராதனை செய்யும் முறை : தீபத்தின்மேல் புஷ்பத்தை வைத்து நீரீக்ஷணம், ப்ரோக்ஷணம் செய்ய வேண்டும்; பின்னர், பஞ்ச ப்ரம்மத்தை நியாஸித்து, திக்பந்தனம், அவகுண்டனம் செய்து, திரிசூல முத்திரை காட்டி, மந்திர நிவர்த்தியின் பொருட்டு நேத்திரத்தின் நேரில் தீபத்தையும், நாசிக்கு நேரில் தூபத்தையும் கொடுக்க வேண்டும்.

10.18 சுவாமியின் முகத்திற்கு நேராகவும், மூக்கிற்கு நேராகவும், மார்புக்கு நேராகவும், வயிற்றுக்கு நேராகவும், கால்களுக்கு நேராகவும் - ஒவ்வொரு இடத்திலும் ஓம் (படத்தினைப் பார்க்க) உருவம் போல மூன்றுமுறை காண்பிக்க வேண்டும்.

நைவேத்யம்


11.1 வண்டு மலரை முகர்ந்து தேனைப் பருகி, அந்தத் தேனை திருப்பித் தருகிறது;  மலரின் மணமோ சுவையோ தண்மையோ நீரோட்டமோ கெடுவதில்தல. அதுபோல இறைவர்க்கு நிவேதித்த பிரசாதங்களின் ரஸம் போவதில்லை. மேகம் சூர்ய கிரகணங்களைக் கொண்டு நீரைக் குடித்து, அதையே பிறகு மழையாகப் பொழிகின்றது, அவ்வாறே, இறைவன் நிவேதனத்தைத் தன் பார்வையால் ஏற்றுக் கொண்டு, கருணை மழை பொழிந்து, நம்மைக் காக்கிறான்.

11.2 அபிஷேகத்தில் நிறைவு, அர்ச்சனையின் முடிவு ஆகிய இரண்டு சமயங்களில் நைவேத்யம் செய்ய வேண்டும்

11.3 மந்த்ராந்நம், நைவேத்யம் : மந்த்ரம் என்பது ரஹஸ்யம். பல்லிலும், உதட்டிலும், முகவாய்க்கட்டிலும் உற்பத்தி ஆவதால் மந்த்ரங்கள் ரஹஸ்யம் எனப்படுகின்றன. எந்த அந்தமானது ரஹஸ்யமாக நிவேதிக்கப்படுகிறதோ அதற்கு மந்த்ராந்நம் என்று பெயர். அத்தகைய மந்த்ராந்தமாகிய மஹாநிவேதனத்தை ஒரு பாத்திரத்தில் முக்காலியின் மேல் வைத்து, அதைச் சுற்றி, பாகம் பண்ணப்பட்ட (சமைக்கப்பட்ட) பதார்த்தங்களைத் தனித் தனிப் பாத்திரங்களில் வரிசையாக வைத்து, அவற்றை ஒன்றொன்றாகச் சோதனை செய்து, ஹ்ருதய மந்திரத்தினால் ப்ரோக்ஷிக்க வேண்டும். அந்த நிவேதனத்தை அம்ருதமயமாகப் பாவித்து, தேனு முத்திரை காட்டி, புஷ்பத்தை வைத்து, நைவேத்யத்தை ஸ்வாமியினுடைய தக்ஷிண ஹஸ்தத்திலே கொடுத்து, தீர்த்த பானத்தையும் கொடுக்க வேண்டும்.

11.4 மயிர், புழு, மணல், உமி இவை கலந்துள்ள அரிசிச்சோறு (அன்னம்) நைவேத்யத்திற்கு ஆகாது ; அரை அரிசிச் சோறு, குழைந்த அன்னம், துர்நாற்றம் உள்ள அன்னம் ஆகியவையும் கூடாது; மிகச் சூடாக நிவேதனம் செய்யக்கூடாது.

11.5 ஈசான முகத்திற்கு சுத்த அன்னமும், தத்புருஷ முகத்திற்கு சர்க்கரைப் பொங்கலும், அகோர முகத்திற்கு எள் அன்னமும், வாமதேவ முகத்திற்கு தயிர் அன்னமும், ஸத்யோஜாத முகத்திற்கு வெண்பொங்கலும் படைப்பது சிறந்தது.

11.6 தாம்பூலத்தின் நுனியில் லக்ஷ்மி, மத்தியில் ஸரஸ்வதீ, பின்பகுதியில் மூதேவி ஆகியோர் உள்ளதாக ஐதீகம். எனவே, பின்பாகத்தை நீக்கிவிட்டு தான் வெற்றியையை நிவேதனம் செய்ய வேண்டும்.

11.7 ஜலம் உள்ள தேங்காயைத்தான் உடைத்து நிவேதனம் செய்ய வேண்டும்; சமமாக இரு பாதியாக உடைப்பதே சிறந்தது; குடுமி இல்லாமல் உடைத்தால் அரசுக்கு கேடு; முழுக் குடுமியும் உள்ளதாக உடைத்தால் நாட்டுக்கு கேடு; எனவே, கொஞ்சம் குடுமி உள்ளதாகச் செய்துகொண்டு உடைக்க வேண்டும்; உடைத்த பின்னர், அந்தச் சிறிதளவு குடுமியையும் நீக்கி விட்டு நிவேதனம் செய்ய வேண்டும்.

11.8 நந்திக்கு நிவேதனம் : அரிசியையும், பயத்தம் பருப்பையும், வெல்லத்தையும், திருகின தேங்காயையும் ஒன்றாகக் கலந்து ப்ரதோஷ காலத்தில் நந்தி தேவருக்கு விசேஷமாக நைவேத்யம் செய்திடல் வேண்டும்

11.9 திரை இடுதல் : பூஜையின் போது, நிவேதன காலத்தில் திரை இடாவிட்டால், பாபிகள் அதைப் பார்க்க நேரிட்டு, அதனால் அந்த நிவேதனமும், அது அங்கமாக உள்ள பூஜையும் பலனற்றதாகப் போய்விடும்.

மணி அடித்தல்

12.1    அபிஷேகத்தில் ஆரம்பம், அபிஷேகத்தில் முடிவு, அர்ச்சனையின் முடிவு, நைவேத்யத்தின் ஆரம்பம், உத்ஸவத்தில் ஆரம்பம், உத்ஸவத்தின் முடிவு, நர்த்தனத்தின் முடிவு - இக்காலங்களில் மட்டுமே பெரிய மணி அடிக்க வேண்டும்,

12.2 கர்ஷணம் முதலான கிரியைகளின் ஆரம்பம்,
விக்னேச்வர பூஜை, புண்யாஹவாசன ஆரம்பம் ஆகிய காலங்களில் கை மணி அடிக்க வேண்டும்; தூப - தீபம் காட்டும்போதும், பலி காலத்திலும் இடைவிடாமல் கைமணி ஒலிக்க வேண்டும்.

12.3 மணி நாத கிரமம் : 1 அடி; மோக்ஷம் 2-அடி: போகம், 3-அடி : சகல ஸித்தி, புண்யாஹவாசனம், தூப-தீபம் நைவேத்யம், பலி ஆகிய காலங்களில் 2-அடி அடிக்கலாம்; தீபாரதனையின்போது (விரைவாக) 1-அடி அடிக்க வேண்டும்; மற்ற தேவைக்கு 3-அடி அடித்து பெரிய மணி நாதம் எழுப்ப வேண்டும்.

மறை ஓதுதல்


13.1 அபிஷேகம், நைவேத்யம், தூப-தீபம் ஆகிய காலங்களில் வேத கோஷம் செய்யவேண்டும்.

13.2 அபிஷேகம், நைவேத்யம், தூப-தீபம் பூஜையின் முடிவு ஆகிய காலங்களில் பக்தர்கள் ஸ்தோத்ரங்கள் பாடலாம்.

13.3 வேதங்கள் ஓதிய பின் (அல்லது வேதங்கள் ஒதிக் கொண்டிருக்கும்போதே, மண்டபத்தின் மற்றோர் பகுதியிலிருந்து) தமிழ் மறைகளாம் பன்னிரு திருமுறைப் பாடல்களையும் மற்ற தோத்திரப் பாடல்களையும் ஓத வேண்டும்.

13.4 ஓதுவார்கள் : திருமுறைகளைப் பண்ணோடு ஓதுபவர்கள் ஓதுவார்கள் அல்லது ஓதுவார் மூர்த்திகள் என்று பெயர் பெறுவர்.

13.5 பண்; திருஞான சம்பந்தப் பெருமானுக்கு யாழ் வாசித்த திருநீலகண்ட யாழ்ப்பாணரின் வழி வந்த, இசை வல்ல ஒரு பெண்மணியார் திருமுறைகளுக்கு ஏற்ப பண்கள் அமைத்ததாக வரலாறு. முன்னர் இருந்த 103 பண்களில் இக்காலம் பயிலப் பெறுபவை ஏறத்தாழ 23 பண்களே.

13.6 இசை மரபு ஒப்புமை : தமிழிசைப் பண்களில் வரும் ஏழு இசைகளுக்கு இணையான ஸ்வரங்கள் - 1 இளி - ஸ - ஷட்ஜம் 2 விளரி - ரி - ரிஷபம் 3. தாரம் - க - காந்தாரம் 4. குரல் - ம - மத்திமம் 5. துத்தம் - ப - பஞ்சமம் 6. கைக்கிளை - த - தைவதம் 7. உழை - நி - நிஷாதம்.

13.7 பாடலுக்குரிய இராகங்கள் - திருவாசகப்
பாடல்கள் அனைத்தையும் மோஹந ராகத்திலும், திருவிசைப்பா - திருப்பல்லாண்டு பாடல்கள் அனைத்தையும் ஆநந்தபைரவி ராகத்திலும், பெரியபுராணப் பாடல்கள் அனைத்தையும் மத்தியமாவதி ராகத்திலும் பாடுவதே மரபு. மாற்றிப் பாடுவது முறையல்ல.

13.8 பண்களுக்குரிய இராகங்கள் : பண்கள் குறிப்பிடப்பட்டுள்ள திருமுறைப்பாடல்களை, அப்பண்களைக் கற்றுணர்ந்தவர் அவ்வாறே இசைப்பதே முறை. தமிழிசை கற்றியாதார், தமிழிசைப் பண்களுக்கு ஒத்த கருநாடக மரபு இராகங்களிலும் இசைக்கலாம்.

தமிழிசைப் பண்   அதற்கொத்த இராகம்
1. நட்டபாடை (நைவளம்)  நாட்டை, கம்பீர நாட்டை
2. தக்கராகம்   காம்போதி
3. தக்கேசி   காம்போதி
4. பழந்தக்கராகம்   சுத்தசாவேரி
5. குறிஞ்சி   ஹரிகாம்போதி
6. வியாழக்குறிஞ்சி  ஸெளராஷ்ட்ரம்
7. அந்தாளிக்குறிஞ்சி  சாமா
8. மேகராகக் குறிஞ்சி  நீலாம்பரி
9. யாழ்மூரி   அடாணா
10. காந்தாரம்   நவரோஸ்
11. பியந்தைக் காந்தாரம்  நவரோஸ்
12. கொல்லி   நவரோஸ்
13. கொல்லிக் கௌவாணம்  நவரோஸ்
14. இந்தளம்   மாயாமாளவகொளளை
15. சீகாமரம்   நாதநாமக்ரியா
16. நட்டராகம்    பந்துவராளி
17. சாதாரி   பந்துவராளி
18. செவ்வழி   யதுகுலகாம்போதி
19. காந்தார பஞ்சமம்   கேதார கொளை
20. பஞ்சமம்   ஆகிரி
21. பழம்பஞ்சரம்  சங்கராபரணம்
22. கௌசிகம்   பைரவி
23. புறநீர்மை (நேர்திறம்)  பூபாளம், பௌளை
24. செந்துருத்தி (செந்திறம்)  மத்யமாவதி
25. திருக்குறுந்தொகை  மாயாமாளவகொளை
26. திருத்தாண்டகம்  ஹரிகாம்போதி
27. திருநேரிசை   நவரோஸ் (ஸாமகான இசை போல)
28. திருவிருத்தம்   பைரவி, சங்கராபரணம், அல்லது ஒத்த ராகங்கள்.

ப்ரதக்ஷிணம்

14.1 எவன் பூஜையைச் செய்துவிட்டு, நிறைவாக ப்ரதக்ஷிணம் செய்யவில்லையோ அவனுக்கு அந்தப் பூஜையயின் பலன் கிடைக்காது; அவன் விளம்பரத்திற்காகவே பூஜை செய்தவனாகிறான். எனவே பூஜை நிறைவாக பக்தியுடன் அவசியம் ப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும்.

14.2 விநாயகருக்கு - ஒரு ப்ரதக்ஷிணம், சூர்யனுக்கு - இரண்டு ப்ரதக்ஷிணங்கள், சிவனுக்கு - மூன்று ப்ரதக்ஷிணங்கள், அம்பாளுக்கும், விஷ்ணுவுக்கும் - நான்கு ப்ரதக்ஷிணங்கள், அரசமரத்திற்கு - ஏழு ப்ரதக்ஷிணங்கள். உச்சி காலத்துக்குப் பிறகு அரசமரத்தை ப்ரதக்ஷிணம் செய்வது தவறு.

பூஜை இல்லாவிடில்...

15.1. பூஜை செய்ய வகுக்கப்பட்டுள்ள முறைகளே ஐயனின் ஐந்தொழில் திறனைப் போற்றும் வகையில் அமைந்துள்ளன; 1. படைத்தல் - அபிஷேகம். 2. காத்தல் - நைவேத்யம் 3. ஸம்ஹாரம் - பலி போதல் 4. திரோபாவம் - தீபாராதனை 5. அனுக்ரஹம் - ஹோமம், பூஜைகளைச் செவ்வனே செய்யவிடின் ஐயன் ஐந்தொழில் புரிந்து நமக்கேன் அருள வேண்டும் ?

15.2. பூஜை இல்லாவிடில் ரோகமும், புஷ்பம் இல்லாவிடில் குல நாசமும், சந்தனம் இல்லாவிடில் குஷ்டிரோகமும், ஜலம் இல்லாவிடில் துக்கமும், தூபம் இல்லாவிடில் சுகத்தின் நாசமும், தீபம் இல்லாவிடில் பொருள் நாசமும், நைவேத்யம் இல்லாவிடில் பஞ்சமும், மந்திரம் இல்லாவிடில் தரித்திரமும், வஸ்திரம் இல்லாவிடில் மகா ரோகமும், ஹோமம் இல்லாவிடில் குல நாசமும், பலி இல்லாவிடில் கிராம நாசமும், நெய் இல்லாவிடில் மரணமும், வில்வம்-அறுகு-அக்ஷதை இல்லாவிடில் பகைவர் பயமும், மணி இல்லாவிடில் செவிட்டுத்தன்மையும், முத்திரை இல்லாவிடில் அசுர பயமும், நித்திய அக்கினி இல்லாவிடில் அரசர்க்கும் நாட்டுக்கும் தீங்கும், மற்ற திரவியங்கள் இல்லாவிடில் தேவதைகளுக்குக் கோபம் ஏற்பட்டு அதனால் ஒவ்வா விளைவுகளும் உண்டாகும்.

15.3. 1. சந்தனம் இல்லையென்றால் பயம் உண்டாகும். 2. ஆபரணம் இல்லையென்றால் தரித்ரம் உண்டாகும். 3. புஷ்பம், தூபம் இல்லையென்றால் ராஜ்யம் க்ஷீணிக்கும். 4. தீபம் இல்லையென்றால் தனம் இல்லாதொழியும். 5. நைவேத்தியம் இல்லையென்றால் க்ஷõமம் (பஞ்சம்) உண்டாகும். 6. அக்நிகார்யம் இல்லையென்றால் சங்கடங்கள் உண்டாகும். 7. பலி இல்லையென்றால் ஆள்பவர்களுக்குக் கெடுதல் உண்டாகும். 8. ந்ருத்தம் (கலை நிகழ்ச்சிகள்) இல்லையென்றால் துக்கம் உண்டாகும். 9. மந்திரங்கள் இல்லையென்றால் மரணபயம் உண்டாகும். 10. கிரியைகள் இல்லையென்றால் வியாதிகள் உண்டாகும்.


ஆலயங்களில் செய்யத் தகாதவை

1. பிறருடைய அன்னத்தைப் புசித்த தினத்தில், இறைவனை ஆலயத்தில் வந்து தரிசிப்பது.
2. பிறர் பொருளைக் கொண்டு சுவாமிக்கு நைவேத்யம் செய்வது
3. வீட்டில் செய்துவரும் நித்திய பூஜையை நிறுத்திவிட்டு ஆலயம் செல்வது
4. ஒருவரைக் கெடுப்பதற்காக சுவாமியை வேண்டிக் கொள்வது
5. தம்பதிகளின் உடலுறுவுக்குப்பின் ஸ்நானம் செய்யாமல் ஆலயம் ப்ரவேசிப்பது
6. ஸ்த்ரீகள் ரஜஸ்வலையாகக்கூடிய நாட்களைக் கணக்கிட்டுக் கருத்தில் கொள்ளாது, அந்நாட்களில் ஆலயம் செல்லுதல்
7. மாதவிடாய்ப் பெண்டிருடன் பேசிக் கொண்டு இருந்தவரோ, அருகில் சென்றவரோ ஸ்நானம் செய்யாமல் ஆலயம் செல்வது.
8. மரணத்தினால் தீட்டு உள்ளவர்கள் ஆலயம் செல்வது
9. பிணத்தைப் பார்த்தவர்கள், பிணத்தோடு உடன் சென்றவர், மரணத்தினால் தீட்டு உள்ளவர்களைத் தீண்டியவர்கள் ஆகியோர் ஸ்நானம் செய்யாமல் ஆலயம் செல்வது.
10. மலஜலங்களை அடக்கிக் கொண்டு ஆலயம் செல்லுதல்.
11. மலஜலம் கழித்தபின் சுத்தி செய்துகொள்ளாமல் ஆலயம் புகுதல்.
12. கருப்பு வஸ்திரம் தரித்துக் கோயிலுக்குச் செல்லுதல், பூஜை செய்தல்
13. கோபத்துடன் ஆலயம் செல்லுதல், பூஜை செய்தல்
14. துவஜஸ்தம்பமும் பலிபீடமும் கடந்து உள்ளே சென்றபிறகு, எங்கேயாவது கீழே விழுந்து நமஸ்காரம் செய்தல்
15. பகவானுக்கும் நந்திக்கும் இடையே குறுக்காக நடத்தல் அல்லது பிரதக்ஷிணம் செய்தல்
16. ஈர வஸ்திரங்களையோ, விழுப்பு வஸ்திரங்களையோ அணிந்து ஆலயம் செல்லுதல்
17. சாப்பிட்டுவிட்டுக் கோயிலுக்கு வழிபாட்டிற்காகச் செல்லுதல்
18. இடுகாடு அல்லது சுடுகாடு சென்று வந்த நாட்களில் ஆலயம் செல்லுதல்
19. புலாலோ, வெங்காயம், பூண்டு போன்றவற்றையோ உண்ட நாட்களில் திருக்கோயில் செல்லுதல்
20. கால் அலம்பாமல் ஆலயத்திற்குள் அடியெடுத்து வைத்தல்
21. மூர்த்திகளைத் தொடுதல்.
22. மூர்த்திகளின் அருகில் கற்பூரம் ஏற்றுதல், அல்லது தீபம் ஏற்றுதல்
23. கோயில் உள்ளே தீபத்தினை விரலால் தூண்டுதல், கைகளைச் சுவரிலும் மற்றுள்ள இடங்களிலும் துடைத்தல்.
24. எச்சில் துப்புதல்
25. நைவேத்யம் ஆகும்போது பார்த்தல்
26. சிவ நிர்மால்யங்களை மிதித்தல் அல்லது தாண்டுதல்
27. விமானம், த்வஜஸ்தம்பம், பலிபீடம், விக்ரஹம் ஆகியவற்றின் நிழலை மிதித்தல்
28. உடலின் மேல் பாகத்தை புருஷர்கள் மூடிச் செல்லுதல்
29. நெற்றிக்கு விபூதி இடாமை
30. சிகை (குடுமி) இல்லாமை
31. தலைமயிரை அவிழ்த்துத் தொங்கவிடுதல்
32. தலைமயிரை ஆற்றுதல்
33. மூக்கைச் சிந்துதல்
34. தும்முதல்
35. கோட்டுவாய் (கொட்டாவி) விடுதல்
36. வாயில் எதையேனும் அடக்கியிருத்தல்
37. பேசுதல்
38. வேகமாக வலம் வருதல்
39. தீபம் அணையும்படி மூச்சுக் காற்று விடுதல்
40. மற்ற ஆலயங்களை பற்றி இங்கு கூறுதல்
41. கை-கால்களை நீட்டிக் கொண்டு உட்காருதல்
42. படுத்தல்
43. உறங்குதல்
44. சிரித்தல்
45. அழுதல்
46. அடித்தல்
47. சண்டையிடுதல்
48. எச்சில் துப்புதல்
49. மலஜலம் கழித்தல்
50. விளையாடுதல்
51. விக்ரஹங்களுக்குப் பின்புறத்தைக் காட்டி
நிற்றல்
52. தாம்பூலம் தரித்தல்
53. வாஹனத்தின் மீதமர்ந்தோ, பாதரøக்ஷயுடனோ ஆலயத்துள் செல்லுதல்
54. உற்சவ காலங்களில் விழாக்களைக் கண்டு களித்துவிட்டு, இறை வணக்கம் செய்யாதிருத்தல்
55. தெரிந்து தெரியாமலும் தகாதவற்றைச் செய்தல்
56. உடல் சுத்தம் இல்லாதபோது தொழுதல்
57. ஒரு கையை மட்டும் தூக்கிக் கும்பிடுதல்
58. அப்பிரதக்ஷிணமாகச் சுற்றுதல்
59. மூர்த்திகளுக்கு எதிரில் காலை நீட்டி உண்ணல்
60. தின்பண்டங்களைச் சுவைத்துக்கொண்டிருத்தல்
61. பொய் பேசுதல்
62. உரத்துப் பேசுதல்
63. வாதம் செய்தல்
64. எதையோ நினைத்து வருத்தத்துடன் அழுதல்
65. சண்டை சச்சரவுகளில் ஈடுபடுதல்
66. தன்னை உயர்வாக எண்ணிக்கொண்டு, தன்னை அணுகுபவர்க்கு அருள் புரிதல்
67. தன்னை உயர்வாக எண்ணிக்கொண்டு, மற்றவர்க்குச் சாபம் அளித்தல்
68. ஆடவர் பெண்டிரை நோக்கியும், பெண்டிர் ஆடவரை நோக்கியும் கடும் சொற்களைக் கூறுதல்
69. கம்பளம் முதலியவற்றால் உடலை மறைத்துக் கொள்ளுதல்
70. நர ஸ்துதி செய்தல்
71. பிறரை இழிவு படுத்துதல்
72. அபானவாயு விடுதல்
73. அமங்கலச் சொற்களைக் கூறுதல்
74. வசதிகள் இருந்தும், அவற்றிற்கேற்ப சிறப்பான இறைப்பணிகளும் வழிபாடுகளும் செய்யாமல், நடுத்தரமான அல்லது அதற்கும் குறைவான வகையில் அவற்றைச் செய்தல்
75. கடவுளுக்கு நிவேதனம் செய்யப்படாததைப் புசித்தல்
76. அந்தந்தக் காலகட்டத்தில் விளையும் பழங்கள் போன்ற பொருள்களை இறைவனார்க்கு அளிக்காமல் இருத்தல்
77. வேறு வகைகளில் பயன்படுத்திய பிறகு, எஞ்சியதைக் கடவுளுக்கு அளித்தல்
78. ஸந்நிதிக்குப் பின்புறத்தில் அமர்ந்திருத்தல்
79. ஆலயத்துள், பிறரை வணங்குதல்,
80. ஆலயத்தில் கண்ட தனது ஆசிரியரைக் காணாதது போல் இருத்தல்
81. தற்பெருமை பேசுதல்
82. எந்த ஒரு ஆலயத்தையும் சார்ந்த எந்த ஒரு தேவதையையும் இழிவு படுத்திப்பேசுதல்


குருவே சரணம்!

17.1 கோவிலுக்குள் சிவாச்சாரியாரிடம் இருந்துதான் விபூதி வாங்கிக் கொள்ள வேண்டும்; அது சிவனிடமிருந்தே பெற்றுக் கொள்வதற்குச் சமம். மற்றவரிடமிருந்து பெற்றுக் கொள்வதும், தானே எடுத்துக் கொள்வதும் பாபச் செயல்கள்

17.2 சிவாலயத்துள் சிவாச்சார்யாரே குரு; அவருக்கும் அவரது குருவே துணை; அனைவருக்கும் குருவாம் ஐயனே அவன் இருப்பிடத்தில் நிகழும் அனைத்திற்கும் சாக்ஷி.

17.3 எங்கே எப்படி யார் பூஜை செய்தாலும், அந்த பூஜை முறைகளை நமக்கு உபதேசித்த கருவை அவர் நினைவு கூர்தல் அவசியம். பூஜைக்கு முக்கியம் குரு பாதம், மந்திரத்திற்கு முக்கியம் குரு வார்த்தை, த்யானத்திற்கு முக்கியம் குரு வடிவம், மோக்ஷத்துக்கு முக்கியம் குரு தயை.

17.4 எனவே, கீழ் வரும் ச்லோகங்களைச் சொல்லித்தான் எந்த பூஜையையும் தொடங்க வேண்டும்.

ஓம் குருர்ப்ரஹ்மா குருர்விஷ்ணு: குருர்தேவோ மஹேஸ்வர:
குருஸ்ஸாக்ஷõத் பரப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீ குரவே நம:
குரவே ஸர்வ லோகானாம் பிஷஜே பர ரோகிணாம்
நிதயே ஸர்வ வித்யானாம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே நம:
ஸதாஸிவ-ஸமாரம்பாம் ஸங்கராச்சார்ய-மத்யமாம்
ஆஸ்மத்-ஆசார்ய-பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்
குரு சரணாரவிந்தாப்யாம் நமோ நம:

No comments:

Post a Comment