Tuesday 13 September 2016

யோனிப்பொருத்தம் என்பது என்ன ?


திருமணப் பொருத்தங்களைப் பார்க்கும் போது திருமணம் செய்ய வேண்டிய ஆண் பெண் ஆகிய இருவரும் தாம்பத்திய உடலுறவுக்கு எந்த அளவுக்குப் பொருத்தமானவர்களாக இருப்பார்கள் என்பதை நிச்சயப்படுத்துவதாகும். இருவரும் உடலுறவு முறைகளிலும் எத்தகைய மனோபாவமும் மனநாட்டமும் உடையவர்கள் என்பதைத் தீர்மானிக்கவே இந்தப் பொருத்தம் பார்க்கப்படுகிறது. திருமண வாழ்வுக்கு அடித்தளமாக அமைவதில் உடல் உறவு ஒன்றே மிகவும் முக்கியமானதாகும். முன் காலத்தில் புத்திரப் பேற்றுக்காகவும் வம்சவிருத்திக்காகவும் மட்டுமே உடல் உறவை மேற்கொள்ள வேண்டும் என்று கருதி வந்தனர். ஆனால் ஆண் பெண் உடல்இச்சைக்காகவே பொரும்பாலும் உடலுறவை மேற்கொள்வது மக்களின் மனப்போக்காக உள்ளது. ஆண் பெண் மணவாழ்க்கையில் மன ஒருமைப்பாட்டுக்கு உடலுறவுச் சேர்க்கைப் பொருத்தம் மிகவும் முக்கியமாகும். இத்தகைய மன ஒருமைப்பாடு, ஆண் பெண் ஆகியவர்களின் வாழ்வுக்கு மிகவும் அவசியமானதாகும்

ஆண் பெண் அங்க அமைப்புகளின் உடன்பாடுபற்றியும் இந்த பெண்ணுக்கு இந்த ஆணுடன்தான் உடல் உறவுக்காகச் சேரும் தகுதியுண்டு என்பதும் யோனிபொருத்தால் மட்டுமே முன்னதாக நிச்சயிக்க முடிகிறது யோனி பொருத்தமில்லையென்றால் அத்தகைய ஆணும் பெண்ணும் ஜோடி சேர்வதற்கே தகுதியற்றவர்களாகும் போது அவர்கள் எப்படி திருமணம் செய்து கொள்வதற்குப் பொருத்தமுடையவர்கள் ஆவார்கள் பருவ வயதுடைய ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்து கொள்வதில் உள்ள பொறுப்புகளைவிட தாம்பத்திய உறவு விஷயத்தில்தான் அதிக்கவனமும் நாட்டமும் இச்சையும் இருப்பது இயற்கை கண்களுக்கும் காதுகளுக்கும் நாசிக்கும் வாய்க்கும் உடலிற்கும் ஆக ஐவகையான இந்திரியங்களும் ஏககாலத்தில் இன்பத்தை தருவது உடலுறவு இன்ப சுகமேயாகும் இத்தகைய சுகம் சிறப்பாக அமைந்தால்தான் தம்பதிகள் தாம்பத்திய சுகமனுபவிப்பதில் பொருத்தமானவர்களாக இருப்பார்கள் என்பதற்காகதான் யோனி பொருத்தம் பார்க்கப்பெறுகிறது.

இதற்கு ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு குறிப்பிடதக்க விலங்கையும் குறித்து அதை ஆண் பெண் என்றும் குறித்துள்ளனர் இந்தக் குறிப்பின்படியே யோனிப் பொருத்த்த்தை கண்டறிய வேண்டும் ஆண் பெண் உடலுறவு இச்சையை மிருகஇச்சையாக்க் கருதுகின்ற கருத்தின் அடிப்படையில்தான் இந்த மிருகங்களும் குறிக்கப்படுகின்றன இத்தகைய மிருகங்கள் ஒவ்வொன்றும் உடலுறவு முறையில் எந்த அளவுக்கு உடலுறவு கொள்கின்றனவோ அதனை ஆணுக்கு பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் ஈடு கொடுத்து அனுபவிக்க இயல வேண்டும்


இத்தகைய மிருகங்களின் பெயர்களை பார்த்தவுடனேயே இவற்றில் ஆண் பெண் எவை என்பதும் நட்பு பகை எவை என்பதும் தாமாகவே விளங்கிவிடும் இவற்றிலே ஆண் பெண் நட்சத்திரப்படி ஒன்று ஆணாகவும் மற்றொன்று பெண்ணாகவும் அமைந்துவிட்டால் அத்தகைய ஆணுக்கும் பெண்ணுக்கும் பொருத்தமுண்டு.

யோனிப் பொருத்தம் பார்க்கும் முறை


எந்தெந்த நட்சத்திரம் எந்தெந்த மிருகத்தை குறிக்கும் அல்லது பிராணியைக்என்பதை குறிக்கும் என்பதை அறிவதற்கு ஒரு விவரமான பட்டியலே இருக்கிறது. அந்த பட்டியலை பார்த்து தெரிந்து கொண்டால் தான் இந்த நட்சத்திரத்திற்கு இந்த நட்சத்திரம் யோனிப் பொருத்தம் என்ற வகையில் பொருந்துமா பொருந்தாத என்பதை முடிவு செய்ய முடியும்

இந்த பொருத்தம் பார்ப்பது நவீன மனவியல் விஞ்ஞானத்தில் உடலுறவு பற்றிய மனவியல் உணர்வுகளை நிச்சயிப்பதோடு விஞ்ஞானப்படி ஆண் பெண் இருபாலரின் பாலுணர்வு மனநாட்டங்களில் தன் இனசேர்க்கை மிகுகாம வேட்கையெண்ணம் சுயதிருப்திஅடையும் மங்கையர் போக்கு போன்று பலவகை நுட்பங்களையும் அறிவிப்பதாகும்

யோனி பொருத்தப் பட்டியலில் ஒரு நட்சத்திரத்தில் பிராணி பசு என்றிருந்தால் மற்றொரு நட்சத்திரத்திற்குப் பிராணி எருது என்று குறிப்பிட்டிருக்கும் இதிலிருந்து அந்த மிருகத்தின் ஆண் பிராணி அல்லது பெண் பிராணி என்பதை அறிய முடியும்

ஒரு நட்சத்திரத்தின் மிருகம் மான் என்றிருக்கும் மற்றொரு நட்சத்திரத்தின் மிருகம் புலி என்றிருக்கும் மானுக்கும் புலிக்கும் எப்போதும் பகை என்பதை நாம் அறிவோம் இதுபோலத்தான் பகை யோனிகளாக உள்ள நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று பொருந்துவதில்லை

எனவே முதலில் இந்த யோனிப்பொருத்தப் பட்டியலைப் பார்த்த பிறகு தான் பொருத்த்தை பற்றிச் சிந்தித்து நிச்சயிக்க வேண்டும்

அடுத்து வரும் யோனிப் பொருத்த அட்டவணைப் பட்டியலில் எந்த நட்சத்திரத்திற்கு எந்த மிருக யோனி அல்லது பிராணியின் யோனி என்பது கூறப்பட்டுள்ளது.

யோனி என்பது புணர்ச்சி உறுப்புகளைக் குறிக்கும். தாம்பத்திய உறவில் ஈடுபடும் ஆண்,பெண் இருவருக்குமிடையே எந்த அளவிற்கு மன ஒற்றுமை, உடல் ஒற்றுமை இருக்கும் என்பதை கண்டறிய இந்த பொருத்தம் பார்க்கப்படுகிறது.

மனித யோனிகளின் தன்மைகளை மிருக யோனிகளின் தன்மையோடு ஒப்பிட்டு கூறியிருக்கிறர்கள் ரிஷிகள். தாம்பத்திய உறவில் ஈடுபடும் மனிதனின் எண்ணம்மற்றும் செயல்பாடுகள் அவர்களுடைய ஜென்ம நட்சத்திரத்திற்குரிய மிருகத்தின் செயல்பாடுகளை ஒத்திருக்கும் என்பது ரிஷிகளின் கருத்தாகும்.

நட்சத்திர யோனி விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

அசுவினி - ஆண் குதிரை
பரணி - ஆண் யானை
கார்த்திகை - பெண் ஆடு
ரோகிணி - ஆண் நாகம்
மிருகசீரிஷம் - பெண் சாரை
திருவாதிரை - ஆண் நாய்
புனர்பூசம் - பெண் பூனை
பூசம் - ஆண் ஆடு
ஆயில்யம் - ஆண் பூனை
மகம் - ஆண் எலி
பூரம் - பெண் எலி
உத்தரம் - எருது
அஸ்தம் - பெண் எருமை
சித்திரை - ஆண் புலி
சுவாதி - ஆண் எருமை
விசாகம் - பெண் புலி
அனுஷம் - பெண் மான்
கேட்டை - கலைமான்
மூலம் - பெண் நாய்
பூராடம் - ஆண் குரங்கு
உத்திராடம் - மலட்டு பசு (சில பஞ்சாங்கங்களில் கீரி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.)
திருவோணம் - பெண் குரங்கு
அவிட்டம் - பெண் சிங்கம்
சதயம் - பெண் குதிரை
பூரட்டாதி - ஆண் சிங்கம்
உத்திரட்டாதி - பாற்பசு
ரேவதி - பெண் யானை

மிருகங்களை மூன்று வகையாக பிரிக்கலாம் அவை:

1.தாவர உண்ணிகள்
2.ஊண் உண்ணிகள்
3. அனைத்துண்ணிகள்.

தாவர உண்ணிகளை இரண்டு வகைகளாக பிரிக்கலாம் அவை:
1. கொம்புள்ளவை
2. கொம்பில்லாதவை

ஆடு, எருது, பசு, எருமை, மான், இவை கொம்புள்ள தாவர உண்ணிகளாகும்.

குதிரை,யானை இவை கொம்பில்லாத தாவர உண்ணிகளாகும்.

நாய்,பூனை, புலி,சிங்கம், நாகம்,சாரைஇவை ஊண் உண்ணிகளாகும்.

எலியும் குரங்கும் அனைத்து உண்ணிகளாகும்.

கொம்புள்ள தாவர உண்ணிகள் அனைத்திற்கும் புணர்ச்சி உறுப்பு கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கும். இதுபோல் கொம்பில்லாத தாவர உண்ணிகள் அனைத்திற்கும் புணர்ச்சி உறுப்பு கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கும்.

ஊண் உண்ணிகள் அனைத்திற்கும் புணர்ச்சி உறுப்பு ஏறக்குறைய ஒரே மாதிரிதான் இருக்கும்.

எலி, கீரி போன்ற அனைத்து உண்ணிகளுக்கு புணர்ச்சி உறுப்பு ஒரே மாதிரியாக இருக்கும்.

நாகம்,சாரை போன்ற ஊண் உண்ணிகளுக்கு புணர்ச்சி உறுப்பு ஒரே மாதிரிதான் இருக்கும்.

மனிதர்களின் யோனி பேதங்கள் மிருகங்களின் யோனி பேதங்களை ஒத்திருக்கும் என்பது ரிஷ்களின் கருத்தாகும். ஆண்,பெண் இருவருடைய யோனி பேதங்களை அவர்களுடைய ஜென்ம நட்சத்திரம் மூலமாக கண்டறிந்து அவை பரஸ்பரம் இணைவதற்கு ஏற்றவைதானா என்பதை கண்டறிவது யோனிப்பொருத்தம் பார்ப்பதின் நோக்கமாகும்.

மிருகங்கள் புணர்ச்சியில் ஈடுபடும்போது குண பேதங்கள் காணப்படும். உதாரணமாக ஆடுகள் அடிக்கடி புணர்ச்சியில் ஈடுபடும். ஆனால் புணர்ச்சி நேரம் மிகவும் குறைவுதான். நாய்கள் அடிக்கடி புணர்ச்ச்சியில் ஈடுபடுவதில்லை, ஆனால் புணர்ச்சி நேரம் அதிகமாகும்.

பூனை, புலி,சிங்கம் போன்ற மிருகங்கள் புணர்ச்சியின்போது மிகவும் ஆக்ரோஷமாக செயல்படும்.

யானை,நாகம் போன்றவை மறைவான இடத்தில் மட்டுமே புணர்ச்சியில் ஈடுபடுபவை.

அவரவர் ஜென்ம நட்சத்திரத்தை தெரிந்துகொண்டால் அவரின் எண்ணம் மற்றும் செயல்பாடுகள் புணர்ச்சியின்போது எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்ளலாம்.

தாவர உண்ணிகளுக்கும் அனைத்துண்ணிகளுக்கும் ஊண் உண்ணிகள் பகையாகும்.

கொம்புள்ள தாவர உண்ணிகள் கொம்பில்லா தாவர உண்ணிகளுக்கு பகையாகும்.

ஒரே வகையை சேர்ந்த மிருகங்களின் யோனிகள் பரஸ்பர நட்பாகும்.

வெவ்வேறு வகையை சேர்ந்த மிருக யோனிகள் பரஸ்பரம் பகையாகும்.

இதன் அடிப்படையில் மிருக யோனிகளின் பகை விவரம் தரப்பட்டுள்ளது.

குதிரை X எருமை
குதிரை X பசு
யானை X சிங்கம்
ஆடு X குரங்கு
பாம்பு கீரி
பூனை X நாய்
பசு X புலி
எருமை X புலி
மான் X புலி
எலி X பூனை
எலி பாம்பு
மான் X நாய்

No comments:

Post a Comment