Wednesday 20 September 2017

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! - 21



தொடர்ச்சி...
ழுவூர் தலத்துக்கென தனியே தேவாரப் பதிகங்கள் கிடைக்கப் பெறாவிடினும், பாடல்கள் பலவற் றில் கஜ சம்ஹார நிகழ்ச்சி சொல்லப் படுகிறது.
வழுவூர்- வீரட்டேஸ்வரர் திருக்கோயிலின் முன்னே 'பஞ்ச ப்ரும்ம தீர்த்தம்' உள்ளது. கோயிலுக்குள், மகா மண்டபத்தில் உள்ள தெற்கு நோக்கிய 'வீரட்டகாச சபை' யில் எட்டு கரங்களுடன், மிகப் பெரிய திருமேனியராக அருள்கிறார் கஜசம்ஹாரமூர்த்தி (வேழம் உரித்த விகிர்தர்). மேலிரண்டு கரங்கள், யானையின் உரித்த தோலை விரித் துப் பிடித்துள்ளன. வலது முன் கையில் சூலம், வலது பின் கரங்களில் கத்தி; உடுக்கை, இடது முன் கையில் கபாலம், இடது பின் கரங்களில் கேடயம்; பாம்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளார். யானையின் தலை மற்றும் முன்னிரண்டு கால்கள் பீடத்திலும், வால் மற்றும் பின்னிரண்டு கால்கள் சிவனாரின் தலைக்கு மேலும் உள்ளன.
தலைவிரித்த ஜடா மண்டலத்தில் கங்கையையும், சந்திரனையும் சூடியுள்ள கஜசம்ஹாரரின் வலக் கால், யானையின் தலை மீது இருக்க... உள்ளங் கால் தெரியும்படி இடக் காலை மடித்து வைத் துள்ளது போல் வடிவமைக்கப்பட்டுள்ள பஞ்ச லோகத்திலான இதுபோன்ற விக்கிரகத்தை வேறெங் கும் காண்பது அரிது!
பின்புறமும், முகமும் ஒன்றாகக் காணும் வகையில் ஒரே விக்கிரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலே சுடர்விடும் பிரபையும், இரு புறமும் பூத கணங்கள் சூழவும் உள்ளது. மூர்த்தியின் முகத்தில் கோபக்கனலைத் தாண்டவமாட வைத்திருக்கும் சிற்பியின் திறன் வியக்கத் தக்கது. இவருக்கு இடப் புறம் அம்பிகை; தன் வலது இடுப்பில் முருகனை ஏந்தியவாறு, அச்சத்துடன் விலகிச் செல்லும் கோலத்தில் நிற்கிறாள். கஜ சம்ஹார மூர்த்தியின் பின்புறச் சுவரில் மிகப் பெரிய சக்ர ஸ்தாபனமும் (யந்த்ரம்) முன்புறம் உள்ள பேழையில் ஸ்படிக லிங்கமும் உள்ளன. இவர் சந்நிதிக்கு அடுத்து, மோகினியுடன் காட்சி தருகிறார் பிட்சாடனர். அருகில் நடராஜர்.
இந்தக் கோயிலில் மாசி மாதம் பூசம், ஆயில்யம், மகம் ஆகிய மூன்று நாட்களில் கஜசம்ஹார ஐதீக உற்சவம் நடைபெறுகிறது. முதல் நாள் ஏக்ஷ£பந்தனம், யாகசாலை ஆரம்பம். பின்னர் சந்திரசேகர மூர்த்தி புறப்பாடு. 2-ஆம் நாள் காலை பிட்சாடனரும், மோகினியும் அருகில் உள்ள பெருஞ்சேரி என்ற கிராமத்துக்குச் செல்கின்றனர். அங்குள்ள ரிஷி தோப்பு, புராண ஐதீகப்படி தாருகாவன ரிஷிகள் யாகம் செய்த இடமாகும்.
அங்கு இருவருக்கும் அபிஷேகம்- தீபாரா தனை நடைபெறும். பின்னர், இருவரும் மாலை யில் திருக்கோயிலுக்குத் திரும்புகின்றனர். அன்றிரவு பிட்சாடனரும், மோகினியும் வசந்த மண்டபத்தில் எதிரெதிரே நிற்க, ஏக காலத்தில் தீபாராதனை செய்யப்படுகிறது. அப்போது, ஒரு தட்டியின் மறைவில் அலங்கரித்து வைக்கப்பட்ட ஐயப்பன் பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். பிட்சாடனருக்கும் மோகினிக்கும் குமாரனாக ஐயப்பன் அவதரித்ததை நினைவூட்டும் விதமாக, இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து கஜ சம்ஹாரமூர்த்திக்கு அபிஷேக- அலங்காரம் செய் யப்படுகிறது. பிறகு, சகல வாத்தியங்களும் முழங்க, பஞ்ச ப்ரும்ம தீர்த்தத்துக்கு வடகிழக்கு மூலையில் கஜ சம்ஹாரமூர்த்தி எழுந்தருள்கிறார். இதற்கு நேரெதி ராக பந்தலும் மறைவும் அமைக்கப்பட்டுள்ள அக்னி (தென்கிழக்கு) மூலையின் தென்மேற்குத் திசையில் அம்பிகை எழுந்தருள்கிறார்.
பின்னிரவில், சிவனாரை அழிக்க யாகத் தீயில் இருந்து தீ, பூதம், பாம்பு முதலியவற்றை ரிஷிகள் அனுப்பும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சுவாமிக்கு எதிரே உள்ள தட்டி மறைவில் இருந்து, பெரிய தீச்சட்டியை ஏந்தியவாறு ஒருவரும், வைக்கோல், அட்டை ஆகிய வற்றால் செய்த பெரிய பாம்பை ஏந்தியவாறு ஒருவரும் நடனமாடியபடி வருவர். இவர்கள் தீச்சட்டி, வைக் கோல் ஆகியவற்றை சுவாமிக்கு முன்னே வைக்கின்றனர்.
அடுத்து, பெரிய பூத வடி வம் தரித்து மற்றொருவர் ஆடி வருகிறார். பிறகு, பெரிய யானை வடிவத்தை ஒரு வண்டியில் ஏற்றி எடுத்து வருகின்றனர். அந்த யானை சிவபெருமானை விழுங்கி விட்டதாக கருதும் வகை யில், அதன் வயிற்றின் உட்பகுதியில் பெருமானை வைத்து மூடுகின்றனர். இதனால் எங்கும் இருள் சூழ் வதை குறிக்கும் வகையில், எல்லா விளக்குகளையும் அணைத்து விட்டு, இருளிலேயே யானையைக் குளத் தின் தென்மேற்கு முனைக்கு எடுத்து வருகின்றனர். உடலில், எரிச்சலும் வலியும் ஏற்பட்டு அந்த அவஸ்தையால் யானை குளத்தில் விழுந்து எதிர் முனையில் கரையேறுவதை இந்த நிகழ்ச்சி உணர்த்துகிறது.
அடுத்து, யானையின் உடல் பிளக்கப்பட்டு உள்ளே இருக்கும் கஜசம்ஹாரமூர்த்தியை வெளியே கொண்டு வருவர். உடனே விளக்குகள் ஏற்றப்பட்டு, தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் சுவாமியும் அம்பிகையும் நடனமாடியபடி ஆலயத்தை வலம் வருகின்றனர். இந்த வைபவம் அதிகாலை வரை விமரிசை யாகக் கொண்டாடப்படுகிறது. 3-ஆம் நாள் பஞ்ச மூர்த்திகளும் எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கின்றனர்.
சிவனாரின் மகேஸ்வர வடிவங் களில்- சோமாஸ்கந்தரும், கஜ சம்ஹாரரும் மட்டுமே உமை மற்றும் குமரனுடன் காட்சி தருகின்றனர். உயிர்கள், பெற வேண்டிய உன்னத நிலை யின் தத்துவ விளக்கமாக இந்த இரண்டு மூர்த்திகளும் அமைந்துள்ளன.
அறியாமையால் உயிர்களுக்கு விளை யும் துன்பங்களை நீக்கி, அறிவை விளக்கி மேன்மை பெற வைப்பதே கஜ சம்ஹார தத்துவம். கஜசம்ஹாரர் திருவடிவில், ஞான ஒளியாகத் திகழ்கிறான் இறைவன்.
குமரக் கடவுள்- ஞானமயமான சிவனிடம் இருந்து தோன்றியவர் என்றாலும், உயிர்களின் இடையே வீற்றிருந்து, உயிர்களுக்கு உண்மையை உணர்த்தும் ஞானபண்டிதனாக விளங்குகிறான். இதை உணர்த்தும் வகையில் அவன், உமையம்மையின் இடுப்பில் இருந்து, இறைவனைச் சுட்டிக் காட்டுவது போல் வடிவமைத்துள்ளனர். இந்த வடிவமே வழுவூரில் அமைந்துள்ளது.
'யானை வடிவில் இருந்த கயாசுரனை சம்ஹாரம் செய்து, அவன் தோலை போர்த்திக் கொண்டார் ஈசன். அவர் மணிகர்ணிகை நதிக்கரையில் லிங்கமாக எழுந்தருளி 'க்ருத்திவாசேஸ்வரர்' என அழைக்கப் படுகிறார்' என்கிறது காசி கண்டம் எனும் நூல். காசி நகரில் வ்ருத்தகால பைரவர் சந்நிதிக்கு அருகில் உள்ளது க்ருத்திவாசேஸ்வரர் ஆலயம். இங்கு உள்ள எல்லா மூர்த்தங்களுக்கும் தலைமையானவ ரான இவரை வணங்கினால், காசியின் அனைத்து சிவாலயங்களையும் தரிசித்த பலன் உண்டு என்பர்.
திருவாரூர்- வேதாரண்யம் வழியில் உள்ள திருத் துறைப்பூண்டி பவ ஒளஷதீஸ்வரர் கோயிலிலும் கஜ சம்ஹாரரை தரிசிக்கலாம். இங்கு, தெற்கு நோக்கிய பெரிய சந்நிதியில் கல் திருமேனியாகக் காட்சி தருகிறார் கஜ சம்ஹாரர். 5 முகங்கள் (அதாவது முன்புறம் மூன்று முகங்கள், பின்புறம் இரு முகங்கள் இருப்பதாக ஐதீகம்) மற்றும் 10 கரங்களுடன் மிகப் பெரிய திருமேனி. சிவனாரின் காலடியில் வலப் பகுதியில்- பைரவர் மற்றும் குலோத்துங்கச் சோழனும், இடப் புறம்- சூரியனும் உள்ளனர். அருகில் பெரிய வடிவில் அம்பிகை; இடுப்பில் குமரனுடன் காட்சி தருகிறாள். அவளின் திருமுகத்தில், சிவனாரது வெற்றியைக் கண்ட பெருமையும், மகிழ்ச்சியும் தெரிகிறது. இந்த மூர்த்திக்கு சதுர்த்தசி திதி மற்றும் மகா சிவராத்திரி தினங்களில் அபிஷேகம் நடைபெறுகிறது.
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலில் மூலவர் படம்பக்க நாதர் சந்நிதி வாயிலில், வலப் புறம் உள்ள துவாரபாலகரின் ஜடா மகுடத் தில் நடராஜர் வடிவமும், இடப் புறம் உள்ள துவாரபாலகரின் ஜடையின் முன்உச்சியில் கஜசம்ஹாரர் உருவமும் அமைக்கப்பட்டுள்ளது. பேரூர், திருச் செங்காட்டங்குடி, மதுரை ஆகிய தலங்களில் அமைந்துள்ள கஜசம்ஹாரர் வடிவங்களும் வெகு அற்புதம்!
- (தரிசனம் தொடரும்)

No comments:

Post a Comment