Sunday 31 December 2017

அருள்மிகு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில், தலைஞாயிறு (திருக்கருப்பறியலூர்) - நாகப்பட்டினம்.

தருமம் செய்ய உகந்த சிவஸ்தலம் ; எழுபத்திரண்டு சித்தர் பெருமக்கள் தொழுத திவ்விய க்ஷேத்திரம் ; இத்தல ஈசனை தொழுதால் நூற்றி எட்டு விஷ்ணு புண்ணிய க்ஷேத்திரங்களைத் தொழுத பெரும் புண்ணியம் சேரக்கூடிய ஸ்தலம் ; சிவனின் திருப்பாதத்தை சேர விரும்பும் பக்தர் தொழுதெழ வேண்டிய சிவ திவ்விய க்ஷேத்திரம்.

🔥🔱🔥🔱 BRS🔥🔱🔥🔱🔥

தொலைப்பேசி : +91- 4364 - 258833 , 203678 ;9443190169

🌱🏵🌱🏵 BRS🌱🏵🌱🏵🌱

மூலவர் : குற்றம் பொறுத்தநாதர் (அபராதசமேஸ்வரர் )

 அம்மன்/தாயார் : கோல்வளை நாயகி (விஜித்ர வலையாம்பிகை )

 தல விருட்சம் : கொடி முல்லை

தீர்த்தம் : சூரிய புஷ்கரிணி, பொற்றாமரை, இந்திர தீர்த்தம்

ஆகமம்/பூஜை : காரண, காமிய ஆகமம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : கருப்பறியலூர், கர்மநாசபுரம், மேலைக்காழி

ஊர் : தலைஞாயிறு

பாடியவர்கள்: சம்பந்தர், சுந்தரர்
 
🅱 தேவாரப்பதிகம்:🅱

சுற்றமொடு பற்றுஅவை துயக்குஅற அறுத்துக்
குற்றம்இல் குணங்களொடு கூடும் அடியார்கள்
மற்று அவரை வானவர்தம் வான்உலகம் ஏற்றக்
கற்றவன் இருப்பது கருப்பறிய லூரே. -திருஞானசம்பந்தர்

🌱 தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 27வது தலம்.

🅱 திருவிழாக்கள் :🅱
 
🌻 திருக்கார்த்திகை, திருவாதிரை ஆகிய நாட்களில் சுவாமி புறப்பாடு.

🌻 சிவனுக்குரிய அனைத்து விசேஷங்களும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
 
🅱 தல சிறப்பு:🅱

🌱 இத்தல இறைவன் சுயம்புமூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.

🌱 திருஞானசம்பந்தர், சுந்தரர் இருவருமே தங்கள் பதிகங்களில் இக்கோவிலை "கொகுடிக்கோயில்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

🌱 சூரியபகவான் இத்தலத்தில் வழிபட்டதால் 'தலைஞாயிறு' என வழங்கப்படுகிறது.

🌱 இத்திருத்தலத்தில் செய்யப்படும் தரும செயல்கள் யாவும் ஒன்றுக்கு பத்தாக பலன் தருகின்றன.

🌱 இத்தல இறைவனை வசிஷ்டரால் பூஜிக்கப்பட்டவர்.

🌱 இத்தல ஈசனை தொழுதால் நூற்றி எட்டு விஷ்ணு புண்ணிய க்ஷேத்திரங்களைத் தொழுத பெரும் புண்ணியம் சேரும் என்கின்றார் அகத்தியர்.

🌱 வசிஷ்டர், தயரத சக்கரவர்த்தியின் குலகுரு. ராமசந்திர மூர்த்தியால் பூஜிக்கப்பட்டவர். இதனை அழகுற அகத்தியன் பேசுகின்றார்.

“தயரதன் தங்குலகுரு வசிட்டங் கொண்டாடி
யுருச் செய் செய்குற்றமே பொறுத்தானை
தொழுதெவார் தமக்கு யெண்ணற்ற மாலவன
ம்பலந் தொழுதெழு புண்ணியங் கூடுமன்றோ.”
(செய்குற்றம் என்பது செய்த குற்றம், செய்யும் குற்றம் அன்றி இனி திட்ட மிட்டு செய்யப்போகும் குற்றத்தையும் பொறுத்துக் காப்பவன் என்று பொருள்.)

🌱ஆதித்ய பகவான் கொலுவிருந்த தலம் என்பதினால், அகத்தியன் இத்திருத்தலத்தை ‘தலை ஞாயிறு’ என்றார். இன்றளவும் இப்பெயரே வழங்குகின்றது.

🌱 இத்திருக்கோயிலின் சிறப்பை, மாண்பை கோல மகரிஷிகள் விவரிக்கின்றார்.

🌱 “அட்டநவ சித்தர் கொண்டாடிடும் தலம்
யீண்டு தொழுதக்கால் அன்னை கரு
தங்கலிலை சத்தியமே.” - என்றார்.

🌱 “குடமுனி உலோபமுத்திரையோடு மேலைக்
காழி யுறைவானை தொழுதவாறு தொழுதுய்ய
பிறவி பல பெற்று புண்ணியஞ் செய்துமே” - என்கிறார் இடைக்காடனார் எனுஞ் சித்தர்.

🌱 உலோப முத்திரை, அகத்திய முனிவரின் துணைவியார். சிலருக்கு கருவிலே சிசுக்கள் கலைவது உண்டு. சிலருக்கு குழந்தைகள் பிறந்த உடன் இறப்பதும், சில குடும்பத்தில் சிசு மரணம் ஏற்படுதலும், சில குடும்பங்களில் விபத்துகளினால் துர்மரணம் நிகழ்வதும் உண்டாகின்றன. இவை எல்லாம் ‘ஆலாள’ என்ற தோஷத்தினால் நிகழ்கின்றன. இத்தோஷங்களை கோயில்களில் பிரார்த்தித்துத்தான் போக்க வேண்டுமே அல்லாமல் பரிகாரம், சிரார்த்தம் போன்றவற்றால் நீக்க இயலாது.

🌱 ‘ஆலாள’ தோஷமறுபட ஓராயிரத்தெட்டு சிவன் அம்பலங்களில் ஒரு முகூர்த்த நாழிகை உளமுருகி பிரார்த்திக்க வேண்டும். அப்படி இயலாதவர்கள், இந்தக் குற்றம் பொறுத்த நாதர் திருவடியை கணப்பொழுது கருத்து ஒருமித்து தொழுதால் தொலையும் என்கின்றார் கருவூர்ச் சித்தர்.

🌱 “கரும நாசமாக வாலாளப் பீடை
யறுபட்டே துர்சுவப் பனமுடனே
யகால காலனண்டாது வோட
சிசுச் சாக்காடகற்ற கருவாவான்
மேலைக் காழி யுறை அபராதசமேசனே.”

🌱 இத்திருக்கோயில் கரும நாசனி என சித்தர் பெருமக்களால் போற்றப்படும் திவ்விய தலம்.

🌱 தேவர்கள், இத்திருத்தலத்தை ‘கர்ம நாசபுரம்’  என்ற பெயரால் அழைத்தனர்.

🌱 ‘ஆலாள’ தோஷம் அறுபட, மற்றைய சிசு மரணம் விலக அபராதசமேசனை தொழுவீரே என்றார்.

🌱 அருள்மிகு குற்றம் பொறுத்த ஈஸ்வரனுக்கு ‘அபராதசமேசுவரர்’ என்ற பெயரும் உண்டு. இது அகத்திய முனிவரும் அருள்மிகு தட்சிணாமூர்த்தியும் சேர்ந்து வணங்கி வாழ்த்திய பெயராகும்.

🌱 சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 27 வது தேவாரத்தலம் ஆகும்.
 
🅱 நடை திறப்பு:🅱
 
🔑 காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.🔑

🅱 பொது தகவல்:🅱

💡இத்தல விநாயகர் சித்தி விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.

💡சீர்காழி சட்டை நாதர் கோயில் அமைப்பை போலவே இக்கோயிலும் மலைக்கோயில் அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. எனவே இத்தலத்தை "மேலைக்காழி' என்பர்.

💡 கோயிலின் முதல் தளத்தில் உமா மகேஸ்வரரும், இரண்டாவது தளத்தில் சட்டைநாதரும் அருள்பாலிக்கின்றனர். சண்டிகேஸ்வரர் மனைவியுடன் வீற்றிருக்கிறார்.

🅱 பிரார்த்தனை:🅱
 
⚖ குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும், குழந்தை பிறந்து, இறந்து விடும் தோஷம் உள்ளவர்களும், ஆண் வாரிசு வேண்டுபவர்களும், பெண் வாரிசு வேண்டுபவர்களும் இத்தல இறைவனிடம் வேண்டிக்கொள்கின்றனர்.

🅱 நேர்த்திக்கடன்:🅱

❀ பிரார்த்தனை நிறைவேறியதும் இத்தலத்தில் உள்ள தெட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்கின்றனர்.
 
🅱 தலபெருமை:🅱

🔥விசித்திராங்கன் என்ற மன்னன் தன் மனைவி சுசீலையுடன் குழந்தை பாக்கியம் வேண்டி இங்கு வந்து வழிபாடு செய்தான். இறைவன் அருளால் அவனுக்கு குழந்தை பிறந்தது. இதனால் மகிழ்ந்த மன்னன் இத்திருக்கோயிலை அழகுற கட்டினான் என்பது வரலாறு.

🔥இத்தலத்தில் செய்யும் அறச்செயல்கள் ஒன்றுக்கு பத்தாக பெருகும் என்பதை பிரம்மன் வசிஷ்டருக்கு கூறினார். அதனால் வசிஷ்டர் இங்கு லிங்கம் அமைத்து வழிபட்டு மெய்ஞானம் பெற்றார் என தல புராணம் கூறுகிறது.

🔥 72 மகரிஷிகள் இங்கு வழிபாடு செய்து முக்தி பெற்றுள்ளனர். இத்தலத்தில் வந்து வழிபடுபவர்கள் அடுத்த ஜென்மத்தில் தாயின் கருவில் தங்கமாட்டார்கள். அதாவது அவர்களுக்கு அடுத்த ஜென்மம் கிடையாது.

🔥 சிவனின் பாதத்தில் சேர்ந்துவிடுவார்கள் என்பது ஐதீகம். எனவே தான் இத்தலம் "கருப்பறியலூர்' என வழங்கப்படுகிறது.

🔥 அனுமன் தோஷம் நீங்கிய தலம் ராவண யுத்தத்தில் ராவணனை கொன்ற தோஷம் நீங்க ராமர், சிவபூஜை செய்ய நினைத்தார். எனவே அனுமனிடம் "இரண்டு நாழிகைக்குள் ஒரு சிவலிங்கம் கொண்டு வா'' என்றார்.

🔥 உத்தரவை ஏற்ற அனுமன் வட திசை நோக்கி சென்றான். குறிப்பிட்ட நேரத்திற்குள் அனுமன் வராததால் ராமர் மணலால் லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவரது பிரம்மஹத்தி தோஷமும் நீங்கியது.

🔥 ராமர் பூஜை செய்த தலம் ராமேஸ்வரம் ஆனது. தான் வருவதற்குள் லிங்கம் பிரதிஷ்டை செய்ததை அறிந்த அனுமன் வருந்தினான். அத்துடன் அந்த லிங்கத்தை தன் வாலினால் கட்டி இழுத்தான். ஆனால் முடியவில்லை. இப்படி செய்ததால் அனுமனுக்கு சிவபாராதம் ஏற்பட்டது.

🔥சிவனை குறித்து தவமிருந்தால் சிவபாராதம் நீங்கும் என ராமர், அனுமனுக்கு யோசனை கூறினார். அனுமனும் அவ்வாறே செய்ய, சிவன் தோன்றி, "அனுமனே! நீ கன்மபுரம் எனப்படும் தலைஞாயிறு சென்று வழிபாடு செய்தால் இந்த தோஷம் விலகும்,'' என அருள்பாலித்தார்.

🔥அனுமனும் அதன் படி தலைஞாயிறு வந்து வழிபட்டு தோஷம் நீங்க பெற்றார். அதன் பிறகு சிவனின் கருணைக்கு வியந்து இத்தலத்தின் வடகிழக்கில் தன்பெயரால் ஒரு லிங்கம் அமைத்து அதை வழிபாடு செய்ய ஆரம்பித்தார். இத்தலம் தற்போது "திருக்குரக்கா' என வழங்கப்படுகிறது.

🅱 கல்வெட்டுகள்:🅱

🍄 இக்கோயில் வளாகத்திலிருந்து 19 கல்வெட்டுகள் படியெடுக் கப்பட்டுள்ளன. அவற்றுள் ஐந்து கல்வெட்டுகள் மூன்றாம் இராஜராஜருக்குரியவை. இரண்டு கல்வெட்டுகள் மூன்றாம் குலோத்துங்கரின் ஆட்சிக்காலத்தில் வெட்டப்பட்டவை.

🍄 இரண்டாம் இராஜாதிராஜரின் இருபதாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்றும் கிருஷ்ணதேவராயரின் கல்வெட்டொன்றும் இங்குள்ளன. நான்கு கல்வெட்டுகள் உருவச் சிற்பங்களின் பெயர்களைத் தருவனவாக அமைந்துள்ளன.

🍄 ஒரு கல்வெட்டு கோட்டப் பிள்ளையாரைச் சுந்தரப் பிள்ளையார் என்று அழைக்கிறது. இரண்டு கல்வெட்டுகள் விக்கிரமசோழ வேளார் திருமலை திருமஞ்சண மண்டபம், குற்றம்பொறுத்த ஈசுவரர் கோயிலின் பெருமண்டபம் ஆகியவற்றை எடுப்பித்த தகவலைப் பகிர்ந்துகொள்கின்றன.

🍄 மூன்று கல்வெட்டுகள் மன்னர் பெயரின்றிக் கிடைத்துள்ளன.

🍄 பெரும்பாலான கல்வெட்டுகளில் பார்வதிபாகர் கோயிலாகக் குறிக்கப்படும் இவ்வளாகம், இராஜாதிராஜ வளநாட்டுத் திருக்கழுமல நாட்டு அகரம் ஸ்ரீகுலோத்துங்கசோழன் தனி நாயகச் சதுர்வேதிமங்கலத்தில் இருந்தது. இக்கோயிலிலிருந்து படியெடுக்கப்பட்டிருக்கும் கல்வெட்டுகளில் ஒன்றிலேனும் தலைஞாயிறு, பறியலூர் எனும் ஊர்ப்பெயர்கள் கோயிலிருக்கும் இடத்தைச் சுட்டுவனவாக இடம்பெறாமை வியப்பளிக்கிறது.

🍄 உய்யக்கொண்டார் வளநாடு, அமரநாடு எனும் வருவாய்ப் பிரிவுகளுடன் ஆறு ஊர்ப்பெயர்களை இக்கல்வெட்டுகளில் இருந்து பெறமுடிகிறது.

🍄 நான்கு கல்வெட்டுகள் அரச ஆணைகளாக விளங்கிய போதும் மூன்றாம் குலோத்துங்கரின் இரண்டு கல்வெட்டுகளில் மட்டுமே திருமந்திர ஓலைநாயகமாக நெறியுடைச்சோழ மூவேந்தவேளாரும் கையெழுத்திட்டவர்களாகக் குருகுலராயர், மழவராயர், விழிஞத்தரையர், வயிராதராயர், வேணாடுடையார், மலையப்பராயர், காடுவெட்டி, நரசிங்கபன்மர், அமரகோன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

🅱 கோவில் அமைப்பு:🅱

🌸 தருமையாதீனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இவ்வாலயம் கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது.

🌸 உள்மண்டபம் வெளவால் நெத்தி மண்டப அமைப்பில் காணப்படுகிறது. பிராகாரத்தில் சீர்காழியிலிருப்பது போல உயர்ந்த தனிக்கோயிலாகச் சட்டைநாதர் சந்நிதி உள்ளது.

🌸 மேலேறிச் சென்று தோணியப்பரைத் தரிசித்து அதற்கும் மேலே சென்று சட்டை நாதரைத் தரிசிக்க செங்குத்தான மரப்படிகளை ஏறவேண்டும்.

🌸 இதனாலேயே இத்தலம் மேலைக்காழி என்றழைக்கப்படுகிறது. தோணியப்பர் சந்நிதியை இத்தலத்தில் கர்ப்பஞானேஸ்வரர் கர்ப்பஞானபரமேஸ்வரி சந்நிதி என்றழைக்கின்றனர்.

🌸 தலமரமான கொகுடிமுல்லை லிங்கோத்பவருக்கு எதிரில் காணப்படுகிறது.

🌸 கருவறையில் சிவபெருமானும் உமையும் சுகாசனத்தில் சுதையுருவங்களாய் உள்ளனர். சடைமகுடம், சிற்றாடை, கழுத்தணிகள், மகர குண்டலங்கள் செவிப்பூக்கள், தோள், கை வளைகள் அணிந்துள்ள தோணியப்பரின் பின்கைகளில் மானும் மழுவும். வல முன் கை காக்கும் குறிப்பில் இருக்க, இட முன் கை கடகத்தில் உள்ளது. இறைவன், இறைவியின் கீழிறக்கிய பாதம் இருத்தத் தாமரைத் தளங்கள் காட்டப்பட்டுள்ளன.

🌸 இறைவனின் இடப்புறமுள்ள இறைவி கரண்டமகுடம், பட்டாடை அணிந்து, வலக்கையை கடகத்திலும் இடக்கையை இருக்கையின்மீதும் இருத்திக் காட்சிதருகிறார்.

🅱 தல வரலாறு:🅱

⚜ ராவணனின் மகன் மேகநாதன். இந்திரனை போரில் வென்றதால் இவனுக்கு "இந்திரஜித்' என்ற பெயர் ஏற்பட்டது. ஒரு முறை இந்திரஜித் வானத்தில் புஷ்பக விமானம் மூலம் பறந்து கொண்டிருந்தான். வழியில் விமானம் தடைபட்டு நின்றது. கீழே பார்த்தபோது சிவாலயத்தின் மீது பறந்ததை உணர்ந்தான் . இதனால் இந்த தடை ஏற்பட்டது என அறிந்தான்.

⚜ இதனால் வருந்திய இந்திரஜித் இத்தல தீர்த்தத்தில் நீராடி இறைவனை பூஜித்தான். இவனது கவலை நீங்கி விமானம் மறுபடியும் பறந்தது. இப்படிப்பட்ட அற்புத லிங்கத்தை இலங்கைக்கு கொண்டு செல்ல முயன்றான். அது முடியாமல் போனதால் மயங்கி விழுந்தான்.

⚜ இந்த செய்தியை கேட்ட ராவணன் இத்தல சிவனின் திருவடியில் விழுந்து, தன் மகனின் குற்றத்தை பொறுத்து அருளுமாறு வேண்டினான். இறைவனும் அருள் செய்தார். எனவே இத்தல இறைவன் "குற்றம் பொறுத்த நாதர்' எனப்படுகிறார்.

⚜ இத்தலத்தில் மற்றுமொரு வரலாறும் செல்லப்படுகிறது.

⚜ ஒருமுறை இந்திரன் இறுமாப்புடன் கயிலைக்குச் சென்றான். அப்பொழுது இறைவர் பூதவடிவாய் அவன்முன் தோன்றினார். இந்திரன் இறைவன் என்றறியாமல் அவர் மீது வச்சிராயுதத்தை எறிந்தான். அதன்பின் இறைவர் என்று அறிந்து தன்பிழையைப் பொறுத்தருளுமாறு வேண்டினான்.

⚜ இறைவனும் இந்திரனின் குற்றத்தைப் பொறுத்தருள் செய்தமையால் குற்றம் பொறுத்த நாதர் என்று இத்தல இறைவனுக்கு பெயர் ஏற்பட்டது என்று தலவரலாறு கூறுகிறது.

🅱 சிறப்பம்சம்:🅱
 
Ⓜ அதிசயத்தின் அடிப்படையில்:

♻ இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

♻ குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும்,  குழந்தை பிறந்து, இறந்து விடும் தோஷம் உள்ளவர்களும், ஆண், பெண் வாரிசு வேண்டுபவர்களும் வழிபடவேண்டிய தலம்.

♻  வெண்குஷ்டம், மேக நோய், சொரி, சிரங்கு, தேமல், சூரிய வெப்பத்தினால் தோன்றும் தோல் நிற மாற்றந் தரும் பிணிகளிலிருந்து விடுபட இந்த குற்றம் பொறுத்த நாதனைக் வழிபடுங்கள் என்கிறார் சட்டை முனிச்சித்தர்.

🅱 இருப்பிடம்:🅱

✈ வைத்தீஸ்வரன் கோவிலிலிருந்து (8 கி.மீ) மணல் மேடு செல்லும் வழியில் தலைஞாயிறு உள்ளது.

🌀🌻🌀🌻 BRS🌀🌻🌀🌻🌀

🍄 தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்🍄

அருள்மிகு வண்டார்குழலி உடனுறை வடாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவாலங்காடு – திருவள்ளூர்

நடனக்கலைகளில் தேர்ச்சி பெற விரும்புவர்கள் வணங்க வேண்டிய சிவஸ்தலம் ; காரைக்கால் அம்மையார் முக்தியடைந்த திருத்தலம் ; சிவபெருமான் நடனமாடிய அற்பூதமான ஷேத்திரம்..

🍁🌸🍁🌸 BRS🍁🌸🍁🌸🍁

தொலைபேசி எண்கள் : +91- 44 -27872074 , 27872443

🌀🌱🌀🌱 BRS🌀🌱🌀🌱🌀

மூலவர் : வடாரண்யேஸ்வரர், தேவர்சிங்கப்பெருமான், ஆலங்காட்டு அப்பர்,  ஊர்த்துவ தாண்டவர்

உற்சவர் : நடராசர்

அம்மன்/தாயார் : வண்டார்குழலி, மகாகாளி

தல விருட்சம் : பலா மரம் , ஆலமரம் என்றும் சொல்லப்படுகிறது.

தீர்த்தம் : 'சென்றாடு தீர்த்தம்' ("செங்கச்ச உன்மத்ய மோக்ஷபுஷ்கரணி")  ; முக்தி தீர்த்தம் ( மிகப் பெரிய குளம், கரையில் நடனமாடித் தோற்ற காளியின் உருவம் உள்ளது).

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : பழையனூர், ஆலங்காடு

ஊர் : திருவாலங்காடு

பாடியவர்கள்: திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர், காரைக்கால் அம்மையார், அருணகிரி நாதர், கச்சியப்ப சிவாச்சாரியார், இராமலிங்க அடிகள்

🅱 தேவாரப்பதிகம்:🅱

கூடினார் உமைதன் னோடே குறிப்புடை வேடங் கொண்டு சூடினார் கங்கையாளைச் சுவறிடு சடையர் போலும் பாடினார் சாமவேதம் பைம்பொழில் பழனை மேயார் ஆடினார் காளி காண ஆலங்காட்டு அடிகளாரே.  - திருநாவுக்கரசர்

🌀 தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 15வது தலம்.

🅱 திருவிழாக்கள் :🅱

🍁 மார்கழி திருவாதிரை இங்கு மிக சிறப்பு.

🍁 பங்குனி உத்திரத்தில் பெருவிழா.

🍁 இது தவிர சிவனுக்குரிய அனைத்து விசேஷங்களும் இங்கு கொண்டாடப்படுகிறது.

🅱 தல சிறப்பு:🅱

🌱 சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

💧 நடராசப்பெருமானின் ஊர்த்தவ தாண்டவத் தலம்.

🌱 நடராஜப்பெருமான் நித்தமும் நடமாடும் பஞ்ச சபைகளுள் இது ரத்தின சபை.

💧 பஞ்ச சபைகளில் நடராஜர், இங்கு மட்டுமே எட்டு கைகளுடன் காட்சி தருகிறார்.

🌱 இறைவனால் அம்மையே என அழைக்கப்பெற்று சிறப்பிக்க பெற்ற காரைக்கால் அம்மையார், தன் தலையால் நடந்து வந்து நடராஜரின் திருவடியின் கீழிருந்து, சிவனின் ஆனந்த இன்ப வெள்ளத்தில் திளைத்திருக்கும் திருக்கோயில் இது.

💧 இங்குள்ள ஊர்த்துவதாண்ட சிவபெருமானின் செப்புத்திருமேனி சோழர்காலத்தியது ஆகும்.

🌱 வடாரண்யேஸ்வரரை ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில் தரிசனம் செய்தால் எல்ல வகையான இன்பங்களும் கிடைக்கும் என்கிறது தல புராணம்.

💧 காரைக்கால் அம்மையார் அருளிய மூத்த திருப்பதிகம் பெற்ற சிறப்புடையது.

🌱 தாமரை மலர் விரித்தாற் போல் அமைந்து அதன் மேல் அமைந்துள்ள "கமலத்தேர்' இங்கு தனி சிறப்பு.

💧 சபையில் பெரிய ஸ்படிக லிங்கமும், சிறிய மரகதலிங்கமும்; திருமுறைபேழையும் உள்ளன.

🌱 சுந்தரர் பதிகம் கல்வெட்டில் பதிக்கப்பட்டிருப்பதை, சபையை வலம் வரும்போது காணலாம்.

💧 சிவனும் காளியும் ஊர்த்துவ தாண்டவம் ஆடிய இடம்.

🌱 விமானம் செப்புத் தகட்டால் செய்யப்பட்டுள்ளது.

💧 வேளாளர்கள் பழையனூர் நீலிக்குக்கொடுத்த வாக்குப்படி உயிர் கொடுத்து, உண்மையை நிலை நாட்டிய இடம்..

🌱 சிவன் கோவிலாக இருந்தாலும், பெருமாள் கோவில்களைப் போல தீர்த்தம் தருகின்றனர். காளியுடன் சிவன் போட்டி நடனம் ஆடியபோது, அதன் உக்கிரம் தாங்காத தேவர்கள் மயக்க நிலைக்குச் சென்றனர். தன் தலையிலிருந்த கங்கையைத் தெளித்து, அவர்களை எழுப்பினார் சிவன். இதனடிப்படையில் தீர்த்தம் தரப்படுகிறது.

💧 அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காளி சக்தி பீடம் ஆகும்.

 🌱 சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 248 வது தேவாரத்தலம் ஆகும்.

🅱 நடைதிறப்பு :🅱

🔑 காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 🔑

🅱 பூசைக்காலம் : 🅱

🌀 காலசந்தி

🌀 உச்சிக்காலம்

🌀 சாயரட்சை

🌀 அர்த்தஜாமம்

🅱 பொது தகவல்:🅱

🎭 வடஆரண்யம் என்றால் ஆலமரக்காடு என்று பொருள்படும். பண்டையக் காலத்தில் இத்தலம் ஆலமரங்கள் நிறைந்திருந்த காடாக காட்சியளித்ததால் இப்பெயர் பெற்றது. இறைவன் வடாரண்யேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார்.

🎭 திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் கி.பி.11-ஆம் நூற்றாண்டில் முதலாம் இராஜேந்திர சோழனால் திருப்பணி செய்யப்பட்டது.

🎭 முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தில் வெளியிடப்பட்ட திருவாலங்காட்டுச் செப்பேடுகள் இங்குள்ள தாய்த்தெய்வத்திற்கு நிலக்கொடையளித்த செய்தியைக் குறிப்பிடுகிறது.

🅱 பிரார்த்தனை:🅱

🌸 நடனக்கலைகளில் தேர்ச்சி பெற விரும்புவர்கள் வணங்க வேண்டிய தலம்.

🌸 கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமையை பலப்படுத்தும் தலம்.

🌸 திருமணத்தடை, சனி கிரக தோஷம் நீக்கும் தலம்.


🅱 நேர்த்திக்கடன்:🅱

🌻 மார்கழி திருவாதிரையில் சிவனுக்கு அபிஷேக ஆராதனை செய்தல்.

🅱 தலபெருமை:🅱

🌀 தேவர்களை, அசுரர்கள் கொடுமை செய்த போது, தவத்தில் இருந்த சிவனை எழுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மன்மதனை, அவர் மீது மலர் அம்பு வீசச் செய்தனர். கோபத்துடன் அவர் நெற்றிக் கண்ணைத் திறக்க, மன்மதன் பஸ்பமானான். சிவனின் உக்கிரம் தாங்காத தேவர்களும், மகரிஷிகளும் கோபம் தணியும்படி வேண்டினர். அவர்களுக்கு காட்சி தந்த சிவன், ஒரு ஆலமரத்தடியில் லிங்க வடிவில் எழுந்தருளினார். இதனால், இந்த ஊருக்கு, “திருவாலங்காடு’ என்றும், சுவாமிக்கு, “வடாரண்யேஸ்வரர்’ (ஆலங்காட்டு அப்பர்) என்றும் பெயர் ஏற்பட்டது.

🌀 நடராஜர் ஆகாய வெளியாக இருப்பதை, “சிதம்பர ரகசியம்’ என்பது போல, ஆலங்காட்டிலும் ஒரு ரகசியம் புதைந்து உள்ளது.

🅱 காரைக்கால் அம்மையார்: 🅱

🌀 காரைக்கால் அம்மையார் இங்கு தான் முக்தி அடைந்ததாக சொல்லபடுகிறது.காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதி.பரமதத்தன் என்ற வணிகரை மணந்து கொள்கிறார்.வணிக விஷயமாக அவரை சந்தித்த நபர் அளித்த இரண்டு மாம்பழங்களை வீட்டுக்கு கொடுத்து அனுப்புகிறார்.அந்த சமயம் பார்த்து ஒரு சிவனடியார் புனிதவதியின் வீட்டுக்கு வருகிறார்.

🌀 சிவ பக்தையான புனிதவதி சிவனடியாருக்கு மதிய உணவு படைக்கிறார்.அப்பொழுது தன கணவர் அனுப்பிய இரண்டு மாம்பழங்களில் ஒன்றை கொடுக்கிறார்.புனிதவதியின் விருந்தோம்பலில் மகிழ்ந்த சிவனடியார் ஆசீர்வாதம் செய்து விட்டு செல்கிறார். மதிய உணவின் பொழுது மிச்சம் இருந்த ஒரு மாம்பழத்தை கணவனுக்கு கொடுக்கிறார். அதன் சுவையில் மயங்கி பரமதத்தர் இன்னொரு மாம்பழம் கேட்கிறார்.

🌀 என்ன செய்வதென்று அறியாத புனிதவதி சிவபெருமானிடம் வேண்டுகிறார்.என்ன அதிசயம்! அவர் கையில் ஒரு மாம்பழம் தோன்றுகிறது.அதை கணவனுக்கு கொடுக்கிறார். அவர் இந்த மாம்பழம் முதல் பழத்தை விட சுவையாக இருக்கிறதென்று சொல்கிறார். அதை பற்றி அவர் விசாரிக்க புனிதவதி உண்மையை சொல்கிறார்.

🌀 இதை கேட்ட புனிதவதியின் கணவர் தான் அவருக்கு கணவராக இருப்பதற்கு யோக்கியதை அற்றவர் என்று கருதி அவரை விட்டு செல்கிறார். தன் உடலை வருத்தி பேய் உருக் கொண்டு அம்மையார் தலையால் நடந்து திருக்கயிலாயம் சென்றடைந்தார்.

🌀 தலையால் நடந்து வருவதைக் கண்ட அன்னை பார்வதி சிவபெருமானிடம் தெரிவித்தார். பெருமான் புனிதவதியாரை ‘அம்மையே’ என்றழைக்க அம்மையார் சிவபெருமானை ‘அப்பா’ என்றழைத்தார். என்னவரம் வேண்டுமென்று வினவ, அம்மையார், பிறவாமை வரம் வேண்டுமென்றும் மீண்டும் பிறந்தால் ஐயனை மறவாதமனம் வேண்டுமென்றும், ஐயனின் திருவடியின் கீழ் இருக்க வேண்டுமென்றும் வேண்டினார்.

🌀 ‘அம்மையார் திருவாலங்காட்டில் சென்றமர்க' என்று இறைவன் அருளினார்.

🌀 அம்மையாரும் தலையால் நடந்து திருவாலங்காடு சென்றமர்ந்து இறைவனின் புகழ்பாடுகின்றார். திருவாலங்காட்டில் காரைக்கால் அம்மையாருக்கு சிவ பெருமான் காட்சியளித்து முக்தி கொடுக்கிறார்.

🌀 காரைக்காலம்மையார் திருவாலங்காட்டு முத்தபதிகம் 22-ம், திருவிரட்டை மணிமாலையென 20-ம் அற்புத திருவந்தாதி 101 பாடல்களுமென 143 பாடல்களைப் பாடியுள்ளார்.

🅱 கல்வெட்டு : 🅱

🌀 முதலாம் இராஜேந்திர சோழனால் தானமளிக்கப்பட்ட செய்தியைக் கூறும் திருவாலங்காட்டு செப்பேடுகள் இத்தலத்திற்கு உரியதாகும். சோழர் செப்பேடுகளில் பெண் தெய்வத்திற்கு கொடுத்த நிலக்கொடையை எல்லைகளைக் கூறி ஆவணப்படுத்தப்பட்ட செப்பேடு இதுவாகும்.

🌀 நடராசப் பெருமான் திருவரங்கில் அண்டமுற நிமிர்ந்தருளிய நாயனார் என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இப்பெருமானுக்கு வத்ஸ்ராசன் என்பவன் விளக்கெரிக்க நிலம் அளித்துள்ளான். இங்குள்ள மண்டபம் ஒன்று, மூன்றாம் குலோத்துங்கன் காலத்து அம்மை அப்பன் பழி அஞ்சிய பல்லவராயன் என்பவனால் கட்டப்பட்டது.

🌀 இவ்வூரில் உள்ள தென்னையும், பனையும் சான்றார்களால் கள் இறக்கப்படாதவை என்னும் குறிப்புக் காணப்படுகிறது. இது கொண்டே மதுவிலக்குக் குறிப்பு அக்காலத்திலும் நடைமுறையில் இருந்ததை அறிந்து மகிழ்வோமாக.

🌀 பழையனூரைக் கங்கை கொண்ட சோழனும் இராசேந்திரசோழன் திருவாலங்காடுடைய மகாதேவருக்குத் தானமாகக் கொடுத்துள்ளான். இதனை இராஜேந்திர சோழன் வெளியிட்ட திருவாலங்காடு செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. பழையனூர் என்பது திருவாலங்காட்டுத் தலத் திற்கு ஒரு கல் தொலைவில் உள்ளது.

🌀 அரசியலார் படியெடுத்த கல்வெட்டுக்கள் 52 உள்ளன. இத்தலம் வடகரை மணவிற்கோட்டத்து மேல்மாலை பழையனூர் நாட்டுத் திருவாலங்காடு என்றும், ஜெயங்கொண்ட சோழமண்டலத்து மேல்மாலையாகிய பழையனூர் நாட்டுத் திருவாலங்காடென்றும் வழங்கப்படுகின்றது. பெருமான் திருவாலங்காடு உடைய நாயனார் எனக் குறிப்பிடப்படுகிறார்.

🌀 இத்தலத்துள் ஏதோ ஒரு மண்டபத்தை மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் இருந்த அம்மையப்பன் பழியஞ்சிய பல்லவராயன் கட்டினான்.(468 of 1905) நடராஜப்பெருமான் திருவரங்கில் அண்டம் உற நிமிர்ந்தருளிய நாயனார் எனக் குறிப்பிடப்படுகிறார். இவருக்கு இலத்தூர்நாட்டு அரும்பாக்கத்துக் குன்றத்தூர்க் கோட்டத்து அறநிலை விசாரகன் திரைலோக்கிய மன்னன் வத்ஸராஜன் என்பவன் விளக்குக்காக நிலமளித்தான்.(482 of 1905) அம்மை வண்டார் குழலி நாச்சியார் எனவும், பிரமராம்பாள் எனவும் குறிப்பிடப்படு கிறார்.(495 of 1905)

🌀 ஏனைய கல்வெட்டுக்கள் நிலம் விற்றதையும், தண்ட நாயகருக்கு உத்தரவிட்டதையும் அறிவிப்பன. 477, 476 என்ற விஜய நகர அரசர் கல்வெட்டுக்கள் இம்மடி தர்மசிவாச்சாரியார், பொன்னம் பல சிவாச்சாரியார். அனந்தசிவாச்சாரியார், இவர்களுக்கு விழா நடத்த உத்திரவு அளித்துப் பொன் கொடுத்ததையும் உணர்த்துகின்றன. பராந்தகசோழன் I காலமுதல் விஜயநகர அரசர் காலம் வரையுள்ள இக்கல்வெட்டுகளால் இத்தலத்தின் தொன்மையை அறியலாம்.

🅱 சிற்பங்கள் : 🅱

🌀 கருவறையில் இலிங்க வடிவில் இறைவன் உள்ளார்.

🌀 ஊர்த்துவ தாண்டவமாடும் ஆடல்வல்லான் செப்புத்திருமேனி இங்கு உள்ளது சிறப்பு. இந்த திருமேனி சோழர் காலத்தியது.

🌀 காரைக்கால் அம்மையாரின் சுதைச்சிற்பம் மதில் வாயிலில் காட்டப்பட்டுள்ளது.

🌀 காளியின் செப்புத்திருமேனி தனித் திருமுன் கொண்டு விளங்குகிறது.

🌀 இராஜகோபுரத்தின் தளங்களில் சுதைச் சிற்பங்கள் உள்ளன.

🌀 16 கால் மற்றும் 100 கால் மண்டபங்களின் தூண்களில் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன.

🌀 கருவறை விமானத்தின் தேவக்கோட்டங்களில் தெற்கில் தென்முகக் கடவுளும், மேற்கில் அண்ணாமலையாரும், வடக்கில் நான்முகனும் காட்சியளிக்கின்றனர்.

🌀 அர்த்தமண்டப வெளிப்புறச் சுவர் கோட்டங்களில் தெற்கில் ஆடல் கணபதியும், வடக்கில் துர்க்கையும் காட்டப்பட்டுள்ளனர்.

🌀 மேலும் உட்புறசுற்றில் திருமகள், பூமகள் உடன் விஜயராகவப் பெருமாள், கணபதி, அகோர வீரபத்திரர், முருகன், ஏழுகன்னியர், தேவார மூவர், மாணிக்கவாசகர், காரைக்கால் அம்மையார், கார்க்கோடகர், மூஞ்சிகேச முனிவர், பதஞ்சலி, சூரியன், சந்திரன் ஆகியோரின் சிற்பங்கள் காணப்படுகின்றன.

🅱 கோயிலின் அமைப்பு : 🅱

🍁 கிழக்கிலுள்ள 5 நிலை இராஜகோபுரம் அழகிய சுதை வேலைப்பாடுகளுடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. கோபுர நுழைவு வாயிலுக்கு இடதுபறம் ஒரு சிறிய சந்நிதியில் அருள்மிகு வல்லப கணபதி காட்சி தருகிறார்.

💧 கோயிலின் முன்னால் பதினாறுகால் மண்டபம் உள்ளது. முகப்பு வாயிலில் வரசித்தி விநாயகரும், ஊர்த்துவ தாண்டவமும், ரிஷபாரூடரும், வலதுபுறம் ஒரு சிறிய சந்நிதியில் ஸ்ரீவள்ளி, ஸ்ரீதெய்வானையுடன் அருள்மிகு ஸ்ரீசண்முகர் காட்சி தருகிறார்.காளியும் உள்ள சுதை சிற்பங்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன.

🍁 உள் நுழைந்தால் நான்குகால் மண்டபம் உள்ளது. உள்கோபுரம் ஐந்து நிலைகளுடன் கிழக்கு நோக்கியுள்ளது. உள்ளே நுழைந்தவுடன் வலப்பால் சித்த வைத்திய சாலை நடைபெறும் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. இம் மருத்துவச்சாலை தேவஸ்தானச் சார்பில் நடைபெறுகிறது. திங்கள், வியாழன் காலை வேளைகளில் மக்கள் வந்து மருத்துவம் பெற்றுச் செல்கின்றனர். இம் மண்டபத்தில் தான் நடராசர் அபிஷேகம் நடைபெறுகிறது.

💧 கோபுர வாயிலில் வல்லபை விநயாகர் துதிக்கையுள்ளிட்ட பதினோரு கரங்களடன் காட்சி தருகின்றார். மறுபுறம் வள்ளி தெய்வயானையுடனாகிய ஆறுமுகர் சந்நிதி.

🍁 வெளிப் பிரகாரத்தில் சந்நிதி ஏதுமில்லை. சந்தன மரங்கள் உள்ளன. கோபுரவாயில் நுழைந்ததும் செப்புக் கவசமிட்ட கொடிமரம் உள்ளது. வலப்பால் துவஜாரோகண (கொடியேற்ற) மண்டபம், இடப்பால் சுக்கிரவார மண்டபம்.

💧 அடுத்துள்ள ஊள் கோபுரம் மூன்று நிலைகளையுடையது. கோபுரத்தில் ஊர்த்துவ தாண்டவம், பிரம்மா, நந்தி மத்தளம் வாசித்தல், காரைக்காலம்மையார் பாடுதல், ரிஷபாரூடர், கஜசம்ஹாரமூர்த்தி, காரைக்காலம்மையார் வரலாறு முதலியவை சுதையில் சிற்பங்களாக அமைக்கப்பட்டள்ளன.

🍁 வலப்பால் திருக்கல்யாண மண்டபம் உள்ளது. உள்ளே நுழைந்தால் எதிரில் மதிற்சுவர்மீது பஞ்ச சபைகள் உரிய நடராச தாண்டவத்துடன் வண்ணத்தில் சுதை சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

💧 கோபுரத்தில் உள் பக்கத்தில் தசாவதாரச் சிற்பங்கள், கண்ணப்பர் கண்ணை அப்புவது, அரிவாட்டாய நாயனார் மனைவியுடன் செல்வது, முதலிய சிற்பங்கள் உள.

🍁 பிராகாரத்தில் வலமாக வரும்போது ஆருத்ரா அபிஷேக மண்டபம் - இரத்தினசபை வாயில் உள்ளது. சபைக்கு எதிரில் நிலைக்கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது. வலமாக வரும்போது ஆலங்காடு என்னும் பெயருக்கு ஏற்ப மூலையில் பெரிய ஆலமரம் உள்ளது.

💧 அடுத்து அம்பாள் சந்நிதி உள்ளது - தெற்கு நோக்கியது, நினற் திருக்கோலம். இக்கருவறையில் கோஷ்டமூர்த்தங்கள் இல்லை. சிற்பக் கழையழகு வாய்ந்த கல்தூண்கள் காண அழகுடையவை. உற்சவத் திருமேனிகள் பாதுகாக்கப்பட்டள்ளன. அவற்றுள் - பிட்சாடனர், விநாயகர், காரைக்காலம்மையார் (தாளமிட்டுப் பாடும் அமைப்பில்,) சுநந்த முனிவர், கார்க்கோடகன், நால்வர் முதலியவை சிறப்பானவை.

🍁 இரத்தின சபை அழகு வாய்ந்தது. நடராசப் பெருமானின் ஊர்த்துவதாண்டவச் சிறப்பு தரிசிக்கத் தக்கது. அண்டமுற நிமிர்ந்தாடும் பெருமான் 'ரத்ன சபாபதி' என்று அழைக்கப்படுகிறார்.

💧 சிவகாமி, காரைக்காலம்மையார் திருமேனிகள் உள்ளன. பக்கத்தில் பெரிய ஸ்படிகலிங்கமும், சிறிய மரகதலிங்கமும் (சபையில்) உள்ளன. இவற்றிற்கு நான்கு கால அபிஷேகமுண்டு. திருமுறைப்பேழை உள்ளது. இரத்தினச் சபையை வலம் வரலாம். வலம் வரும்போது சாளரத்தில் சண்டேசுவரரின் உருவம் உள்ளது.

🍁 சுந்தரர் பதிகம் கல்வெட்டில் திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்துக் கட்டளையாகப் பொறிக்கப்பட்டுள்ளது. இரத்தினச் சபையின் விமானம் செப்புத் தகடு வேயப்பட்டு ஐந்து கலசங்களுடன் விளங்குகிறது.

💧 மூலவரைத் தரிசிக்க உள் பிராகாரத்தில் செல்லும்போது சூரியன், அதிகார நந்தி, விஜயராகவப் பெருமாள் தேவியருடன், சண்முகர், அகோர வீரபத்திரர், சப்த கன்னியர், நால்வர், காரைக்காலம்மையார், கார்க்கோடகன், முஞ்சிகேசமுனிவர், உருவங்கள் முதலிய சந்நிதிகள் உள்ளன.

🍁 கருவறை நல்ல கற்கட்டமைப்புடையது. கோஷ்ட மூர்த்தமாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரமன், துர்க்கை ஆகியோர் உளர். துர்க்கைக்குப் பக்கத்தில் துர்க்கா பரமேஸ்வரர் உருவம் ஒன்று கோஷ்ட மூர்த்தமாகவுள்ளது.

💧 சண்டேசுவரர் சந்நிதி உள்ளது - பஞ்சபூதத்தலலிங்கங்கள் உள்ளன. சஹஸ்ரலிங்கம் தரிசிக்கத் தக்கது. சுப்பிரமணியர், கஜலட்சுமி, பாபஹரீஸ்வர லிங்கம் முதலிய சந்நிதிகளும் உள. உபதேச தக்ஷிணாமூர்த்தி உருவம் மிக்க அழகுடையது. பைரவர் வாகனமின்றி காட்சி தருகின்றார். ஆலயத்துள் அறுபத்து மூவர் சந்நிதிகள் இல்லை.

🍁 மூலவர் சந்நிதி வாயிலில் விநாயகரும் முருகனும் உள்ளனர். நேரே மூலவர் காட்சி தருகிறார். வலப்பால் ஆனந்தத் தாண்டவ நடராஜர் திருமேனி - சப்பரத்திலுள்ளது. தெற்கு நோக்கியது. எதிரில் வாயிலுள்ளது. நடராசாவுக்குப் பக்கத்தில் மூலையில் சுரங்கப்பாதை உள்ளது. மூடியுள்ள கல்லைத்தூக்க இருவளையங்களையும் மேலே வைத்துள்ளார்கள். சுரங்கம் எங்குச் செல்கிறதோ ? தெரியவில்லை.

💧 துவார பாலகர்களைத் தாண்டிச் சென்றால் மூலவர் தரிசனம். சுயம்பு மூர்த்தி. மூலவருக்கு மேல் உருத்திராக்க விதானம் - திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்துப்பணி உள்ளது.

🍁 மூலவரின் பக்கத்தில் போக சக்தி அம்மன் உற்சவத் திருமேனி உள்ளது. சிவலிங்கத் திருமேனியின் மீது கோடுகள் அமைந்துள்ளன.

💧 ஊருக்குப் பக்கத்தில் காளிகோயில் உள்ளது. இத்தலத்திற்குத் தொடர்புடைய 'பழையனூர்' கிராமம், பக்கத்தில் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. இறைவன், இறைவி சந்நிதிகள் உள்ளன. இங்குள்ள இறைவன் - அம்மையப்பர், இறைவி -ஆனந்தவல்லி. மேற்கு நோக்கிய சந்நிதி.

🍁 பழையனூருக்குச் செல்லும் வழியில், திருவாலங்காட்டிலிருந்து ஒரு கி.மீ.ல் பழையனூர் வேளாளர்கள் எழுபதுபேர் தீப்பாய்ந்து செட்டிப்பிள்ளைக்குத்ந்த வாக்குறுதியைக் காத்த 'தீப்பாய்ந்த மண்டபம்' உள்ளது, திருவாலங்காட்டுப் பேருந்து நிலையத்திலிருந்து பார்த்தாலே மண்டபம் தெரிகின்றது. இங்குள்ள தொட்டியின் உட்புறத்தில் இவர்களுடைய உருவங்கள் செதுக்கப்பட்டள்ளன. யாகம் வளர்த்து இறங்குவது போனற் சிற்பம் உள்ளது. இதன் எதிரில் கிழக்கு நோக்கிய சந்நிதியாகச் 'சாட்சி பூதேஸ்வரர்' காட்சியளிக்கின்றார். எதிரில் தீப்பாய்ந்த இடம் உள்ளது.

💧 தீப்பாய்ந்த வேளாளர்களின் மரபில் பழையனூரில் தற்போதுள்ளவர்கள் நாடொறும் திருவாலங்காடு வந்து இறைவனைத் தரிசித்துச் செல்லும் மரபை நெடுங்காலமாகக் கடைப்பிடித்து வருகின்றார்கள். சதாகாலமும் சேவைக்கு வந்து செல்லும் இவர்கள், இம்மரபைத் பிற்காலத்தோரும் அறியும் வகையில் "கூழாண்டார் கோத்திரம் சதாசேர்வை" என்று கல்லில் பொறித்து, அக்கல்லை, கோயிலின் முன் வாயிலில், உயர்ந்த படியைத் தாண்டியவுடன் முதற்படியாக வைத்துள்ளனர்.

🍁 இம்மரபினரின் கோத்திரமே 'கூழாண்டார்கோத்திரம்'. அதாவது தாங்கள் கூழ் உணவை உண்டு, விளைந்த நெல்லை இறைவனுக்குச் சமர்ப்பித்தவர்கள் என்பது பொருளாம். சிவப்பற்றினை உணர்த்தும் இச்செய்தி நெஞ்சை நெகிழவைக்கின்றது.

💧 கல்வெட்டில் நடராசப்பெருமானின் பெயர் 'அரங்கில் அண்டமுற நிமிர்ந்தருளிய நாயனார்' என்று குறிக்கப்பட்டுள்ளது.

"கேடும்பிறவியும் ஆக்கினாரும் கேடிலா
வீடுமாநெறி விளம்பினார்எம் விகிர்தனார்
காடுஞ்சுடலையும் கைக்கொண்டு அல்லில்கணப்பேயோ (டு)
ஆடும் பழையனூர் ஆலங்காட்டுஎம் அடிகளே."

🅱 திருவாலங்காட்டுச் செப்பேடுகள்: 🅱

🌀 தமிழகத்தின் சரித்திரத்தின் முக்கியமான பகுதியை வெளிப்படுத்திய செப்பேடுகள் திருவாலங்காட்டில் கிடைத்தன. ஒரு பெரிய வளையத்தில் சேர்த்து சோழ முத்திரையுடன் தமிழிலும், வடமொழியிலும் பொறிக்கப்பட்ட சாசனங்களுடன் கிடைத்த அந்த 22 செப்பேடுகள், சோழ வம்ச சரித்திரத்தை நன்கு புலப்படச் செய்தன. இவை, சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கின்றன.

🅱 மாந்தீஸ்வரர் 🅱

🌀 இத்தலத்தின் வெளிப் பிராகாரத்தில் உள்ள மாந்தீஸ்வரர் சந்நிதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. சனி பகவானின் இரண்டு மைந்தர்களில் ஒருவர் மாந்தி. ஒருமுறை, மாந்தி தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க திருவாலங்காடு திருத்தலம் வந்து ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து, ஒரு மண்டலம் இறைவனை வழிபட்டு தனது தோஷம் நீங்கப்பெற்றார். மாந்தி வழிபட்ட சிவலிங்கம் மாந்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது.

🌀 ஆலயத்தில் மாந்தீஸ்வரருக்கு சிறப்புப் பரிகார பூஜைகள் நடைபெறுகின்றன. மாந்தீஸ்வரருக்கு பரிகார பூஜைகள் செய்வதன் மூலம், அஷ்டம சனி (8-ல் சனி), அர்த்தாஷ்டம சனி (4-ல் சனி) ஜன்ம சனி ஆகியவற்றால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். ஒருவரின் ஜாதகத்தில் 1, 2, 4, 8, 12 ஆகிய இடங்களில் மாந்தி இருந்தால் அது தோஷமாகக் கருதப்படுகிறது.

🌀 அத்தகைய தோஷம், இங்கு மாந்தீஸ்வரருக்கு பரிகார பூஜை செய்வதால் நீங்கும். மேலும், திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணமும் நடைபெறும். கடன் தொல்லை நீங்கி நிம்மதி ஏற்படும்.

🅱 தல வரலாறு:🅱

🔥 சும்பன், நிசும்பன் என்ற இரு அசுரர்கள் ஆலமரங்கள் அதிகமாக உள்ள காட்டில் தங்கி தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் துன்பம் விளைவித்து வந்தனர். இதனால் பாதிப்படைந்தவர்கள் சிவ பார்வதியிடம் சென்று முறையிட்டனர். பார்வதி தேவி தன் பார்வையால் காளியை தோற்றுவித்து அரக்கர்களை அழித்து விட்டு, அவளையே ஆலங்காட்டிற்கு தலைவியாக்கினாள்.

🔥 அரக்கர்களை அழித்து அவர்களது ரத்தத்தை உண்ட காளி, பல கோர செயல்களை புரிந்தாள். இதனால் முஞ்சிகேச கார்க்கோடக முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க சிவன் கோர வடிவம் கொண்டு ஆலங்காட்டை அடைந்தார்.

🔥 அவரை கண்ட காளி, ""நீ என்னுடன் நடனமாடி வெற்றிபெற்றால் இந்த ஆலங்காட்டை ஆளலாம்,''என்றாள். சிவனும் காளியுடன் ஊர்த்துவ தாண்டவம் ஆடினார். அப்போது தன் காதில் இருந்த மணியை கீழே விழவைத்து, பின் அதை தன் இடக்கால் பெருவிரலால் எடுத்து மீண்டும் தன் காதில் பொருத்தினார்.

🔥 இதைக்கண்ட காளி, இது போன்ற தாண்டவம் தன்னால் ஆட இயலாது என தோற்று விடுகிறாள். அப்போது காளியின் முன் இறைவன் தோன்றி,""என்னையன்றி உனக்கு சமமானவர் வேறு யாரும் கிடையாது. எனவே இத்தலத்தில் என்னை வழிபாடு செய்ய வருபவர்கள், முதலில் உன்னை வழிபாடு செய்த பின் என்னை வழிபட்டால் தான் முழு பலன் கிடைக்கும்,''என்று வரமளித்தார். அன்றிலிருந்து காளி தனி கோயில் கொண்டு அருள்பாலிக்கிறாள்.

🅱 சிறப்பம்சம்:🅱

Ⓜ அதிசயத்தின் அடிப்படையில்:

♻ இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

♻ திருவாலங்காட்டைப் பற்றி பாட மறந்ததை இறைவன் நினைவூட்டியதால் ஞானசம்பந்தர் இறைவனை உணர்த்திப் பதிகம் பாடினார்.

♻ இங்குள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் சித்த வைத்திய சாலை உள்ளது.

♻ கோஷ்ட மூர்த்தங்களில் துர்க்கைக்கு பக்கத்தில் துர்க்கா பரமேஸ்வரர் உருவம் ஒன்று கோஷ்டமூர்த்தமாக உள்ளது.

♻ பஞ்சபூத தல லிங்கங்கள் உள்ளன.

🅱 இருப்பிடம்: 🅱

✈சென்னை - அரக்கோணம் ரயில் பாதையில் உள்ள திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இருந்து 4 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் கோவில் உள்ளது.

✈திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் செல்லும் பேருந்தில் சென்று திருவாலங்காடு நிறுத்தத்தில் இறங்கினால் கோவில் மிக அருகிலேயே இருக்கிறது.

✈திருவள்ளூரில் இருந்து 18 கி.மி. தொலைவிலும், அரக்கோணத்தில் இருந்து 14 கி.மி. தொலைவிலும் திருவாலங்காடு தலம் உள்ளது.

✈திருவாலங்காடு என்ற பெயரில் தமிழ்நாட்டில் இரண்டு ஊர்கள் உண்டு. இரண்டு ஊர்களிலும் வட ஆரண்யேச்வர் கோவில் உண்டு. இரண்டு ஆலயங்களிலும் வண்டார்குழலி என்பது தான் அம்மன் பெயர்..இரண்டும் புகழ் பெற்ற இரண்டு சிவ ஸ்தலங்கள் ஆகும். இரண்டாவது திருவாலங்காடு மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் உள்ளது.

🌀🌻🌀🌻 BRS🌀🌻🌀🌻🌀

🍄 தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்🍄

அருள்மிகு மங்களேஸ்வரி சமேத மங்களநாதர் திருக்கோயில், உத்தரகோசமங்கை - ராமநாதபுரம் (2)

இம்மையில் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். மறுமையில் முக்தி கிடைக்கும் சிவ பூமி ; மண் தோன்றியபோதே மங்கை தோன்றிய பெருமைகுரிய சிவ கைலாயம் ; ஈசன் தேவிக்கு வேத ரகசியங்களை உபதேசித்த ஷேத்திரம் ; மரகதத் திருமேனியாய்  ஆடல்வல்லான் குடியிருக்கும் ஸ்தலம்.

🍁🌸🍁🌸 BRS🍁🌸🍁🌸🍁

தொலைபேசி எண் : +91-4567 221 213

🌀🌱🌀🌱 BRS🌀🌱🌀🌱🌀

மூலவர் : மங்களேசுவரர், மங்களநாதர், காட்சிகொடுத்தநாயகர், பிரளயாகேசுவரர்.

உற்சவர் : நடராசர்

அம்மன்/தாயார் :  மங்களேசுவரி, மங்களாம்பிகை, சுந்தரநாயகி

தல விருட்சம் :  இலந்தை

தீர்த்தம் : அக்கினி தீர்த்தம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : உத்தரகோசமங்கை

ஊர் : உத்தரகோசமங்கை

பாடியவர்கள் : மாணிக்கவாசகர் , அருணகிரி நாதர்

🅱 திருவிழாக்கள் :🅱
   
🍁 சித்திரை மாதம் திருக்கல்யாண விழா 12 நாட்கள்,

🍁 மார்கழி திருவாதிரை திருவிழா 10 நாட்கள் நடக்கின்றன.

🍁 வைகாசி மாதம் வசந்த உற்ஸவம்,

🍁 ஆனி மாதம் பத்துநாள் விழா,

🍁 ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம்,

🍁 மாசி மகாசிவராத்திரி ஆகியவை இத்தலத்தில் நடைபெறும் முக்கிய விழாக்கள்.
   
🅱 தல சிறப்பு:🅱

🌱 இறைவன் சுயம்புவாக ஒரு இலந்தை மரத்தடியில் தோன்றினார். அந்த மரம் இன்னும் உள்ளது.

💧 வேறு எந்த தலத்திலும் காண முடியாத அற்புதமான மரகத நடராஜர் சிலை இங்கு உள்ளது.

🌱 உலகில் உள்ள 1087 சிவாலயங்களிலும் இருக்கும் அருட் சக்திகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் சகஸ்ரலிங்கம் இங்குள்ளது.

💧 இத்தலத்தில் மாணிக்கவாசகர் லிங்கவடிவில் காட்சி தருகிறார்.

🌱 ஈஸ்வரத் தலங்களிலேயே இங்கு மட்டும் தான் இறைவனுக்கு தாழம்பூ சார்த்தலாம்.

💧 சிவனுக்கு  புனுகு சாத்தப்பட்டு ஸ்படிகலிங்கத்திற்கு அபிஷேகம் நடைபெறுவது சிறப்பு.

🌱  வருடம் முழுவதும் நடராஜருக்கு  சந்தன காப்பு சாத்தப்பட்டிருக்கும். வருடத்தில் ஒரு நாள் ஆருத்ரா தரிசனத்தன்று சந்தனக்காப்பு கலையப்பட்டு மக்கள் தரிசிப்பர்.

💧 வேதத்தின் இரகசியங்களை உமையம்மைக்கு ஈசன் அருளிய புண்ணிய திருத்தலம்.

🌱 சிவனின்  மிக பழமையா உறைவிடம் என்று சொல்லப்படுகிறது.

💧 இங்குள்ள சபை இரத்தினசபை எனப்படுகிறது.

🌱 ஆதி காலத்தில் இந்த தலம் சிவபுரம்,‘தெட்சிண கைலாயம்‘, சதுர்வேதி மங்கலம், இலந்தி கைப் பள்ளி, பத்ரிகா ஷேத்திரம்,பிரம்மபுரம், வியாக்ரபுரம், மங்களபுரி, பதரிசயன சத்திரம், ஆதி சிதம்பரம் என்றெல்லாம் வேறு வேறு பெயர்களில் அழைக்கப்பட்டது.

💧 திருவாசகத்தில் 38 இடங்களில் இத்தலம் புகழ்ந்து பாடப்பட்டுள்ளது.

🌱 அருணகிரிநாதரின் திருப்புகழ் பெற்ற தலம்.

💧 தட்சிண கயிலாயம், பத்ரிகாரண்யம் (இலந்தைவனம்) வியாக்ரபுரம், ஆதி சிதம்பரம், பிரமபுரம், சதுர்வேதபுரி, மங்களபுரி முதலியன இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள்.

🌱 இங்குள்ள நடராசமூர்த்தி ஆதிசிதம்பரேசர் என்றழைக்கப்படுகிறார்.

💧 இக்கோவில் சிதம்பரம் கோவிலுக்கு  முன்பே தோன்றியது.  எனவே உத்திர கோசமங்கைக்கு ஆதி சிதம்பரம் என்ற ஒரு பேரும் உண்டு.

🌱 திருவிளையாடல் புராணத்தில் வரும் ‘வலை வீசி மீன் பிடித்த படலம்‘ இத்தலத்தில்தான் நடந்தது.

💧 சிவபெருமானால் பரத நாட்டிய கலையை உலக மக்களுக்கு முதல் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட திருத்தலமாகும்.

🌱 ஈசன் ஈஸ்வரி பிறந்த ஊரான உத்திரகோச மங்கையில் ஒரு முறை பக்தர்கள் வந்து மிதித்தால் சொர்க்கம் செல்லுவது நிச்சயாமாகும்.

💧 உத்தர கோசமங்கை திருத்தலமானது ஸ்ரீராமருக்கு ஈசன் சிவலிங்கம் வழங்கி சேது சமுத்திரத்தில் பாலம் போட உத்தரவு வழங்கிய இடமாகும்.

🌱 இத்தலத்தில் மாணிக்கவாசகர் பாடிய பொன்னூஞ்சல் பாடலை குழந்தைகளை தாலாட்டும்போது பாடினால், குழந்தைகள் உயரமாகவும், உன்னத மாகவும் வாழ்வார்கள் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும்

💧 ராமாயண காலத்திற்கு முன்பு இருந்தே, இந்தக் கோவில் சிறப்பு பெற்று விளங்கியதாக அறியப்படுகிறது. ராவணனும், அவர் மனைவியான மண்டோதரியும் வழிபட்டு வரம் பெற்றத் தலம் இது என்று கூறப்படுகிறது.

🌱 எல்லாத் தலங்களிலும் இறைவனும், இறைவியும் சமேதராக இருப்பார்கள். இங்கு இருவருக்கும் தனித்தனி சன்னிதியும், தனித்தனி விமானமும், ராஜகோபுரமும் உள்ளன.

💧 மங்களநாதர் என்ற திருப்பெயரானது, இறைவன் தனக்குத்தானே சூட்டிக்கொண்ட பெயராகும். ராவணனுக்கு மங்கள நாண் அணிவிக்கும் பாக்கியத்தை, இத்தலத்தில் இருந்தே அருள்பாலித்தமையால், இறைவன் ‘மங்களநாதர்’ ஆனார்.

🌱 நாடொறும் உச்சிக் காலத்தில் நடைபெறும் ஸ்படிகலிங்க, மரகதலிங்க, அன்னாபிஷேகம் காணக் கொடுத்து வைக்க வேண்டும்.

💧 நடராசருக்குரிய ஆறு அபிஷேகக் காலங்களிலும் இச்சந்நிதியில் இறைவன் தாண்டவமாடிக் காட்சித் தரும் ஐதீகம் நடைபெறுகிறது.

🌱 பிராகார அழகு இராமேஸவரத்தை நினைவூட்டுகிறது. தூண்களில் பிட்சாடனர், ஊர்த்துவர் சிற்பங்கள் உள்ளன.

💧 நடராசப் பெருமானுக்கு ஆதிசிதம்பரம் எனப்படும் அற்புதத் தனிக்கோயில், கோயிலுக்கு உள்ளேயே குளத்தின் எதிரில் உள்ளது. இக்கோயில் அகழி அமைப்புடையது. எனவே சந்நிதிக்கு உட்செல்ல மரப்படிகள் அமைக்கப்பட்டுள்ளன. தெற்கு நோக்கிய சந்நிதி. அக்கினி மத்தியில் நடராசப் பெருமான் ஆடுவதாகச் சொல்லப்படுகிறது.

🌱 அம்பிகை காண இங்கு அறையில் ஆடிய நடனத்தைத்தான் அம்பலவாணர், தில்லையில் அம்பலத்தில் ஆடினார் என்று சொல்லப்படுகிறது.

💧 இங்குள்ள கூத்தப்பிரான் - நடராசர் அதி அற்புதமானவர். ஐந்தரை அடி உயரம் - முழுவதும் மரகதத் திருமேனி. விலை மதிப்பிட முடியாத இப்பெருமான் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பிலேயே அடியவர்க்குக் காட்சியளிக்கிறார்.

🌱 இப்பெருமான் உலாவருவதில்லை. பெருமான் திருமேனியை உள்வைத்தே சந்நிதி கட்டப்பட்டுள்ளதால் திருமேனியை வௌ¤க் கொணரவும் இயலாது. (உலாவருவதற்கான மூர்த்தம் தனியே உள்ளது.)

💧 மார்கழித் திருவாதிரையில் இப்பெருமானுக்கு மிகப்பெரிய அபிஷேகம் சிறப்பாக நடைபெறுகிறது. இதைச் செய்பவர்கள் திருப்புத்தூர் வள்ளல் ஆறுமுகம் பிள்ளையவர்களின் குடும்பத்தினர். அன்று ஒரு நாள் மட்டுமே சந்தனக்காப்பு முழுவதும் களையப்பட்டு, இரவு அபிஷேகங்கள் கண்கொள்ளாக் காட்சியாக - அற்புதமாக நடைபெறுகின்றன. வாழ்நாளில் ஒருமுறையேனும் இந்நாளில் கட்டாயமாகச் சென்று தரிசிக்க வேண்டும்.

🌱 அபிஷேக ஆராதனைகள் முடிந்த பிறகு மீண்டும் சந்தனக்காப்பு சார்த்தப்படும். அக்காப்பிலேயே அடுத்த மார்கழித் திருவாதிரை வரை பெருமான் காட்சித் தருகிறார்.

💧 நடராசரைத் தொழுது முன் மண்டபம் வந்தால், அங்குள்ள சிறிய மேடையில்தான் உச்சிக் காலத்தில் ஸ்படிக, மரகத லிங்கங்களுக்கு அபிஷேகம் செய்கின்றனர். இதைத் தரிசிக்கும்போதே வலப் பக்கச் சாளரத்தின் வழியே கைகூப்பிய நிலையில் உள்ள மாணிக்கவாசகரையும், இடப்பால் திரும்பி உமாமகேசுவரரையும் ஒருசேரத் தரிசிக்கலாம். இந்த அமைப்பு எண்ணி இன்புறத் தக்கது.

🌱 உமாமகேசுவரர் சந்நிதிக்குச் சென்று தரிசித்துவிட்டு மறுபுறமுள்ள படிகள் வழியே இறங்கிப் பிராகார வலமாக வந்தால் திருப்பதிகங்கள் எழுதப்பட்டுள்ளமையும், குருந்தமர உபதேசக் காட்சி சந்நிதியும் கண்டு இன்புறலாம். கல்லில் குருந்தமரம் செதுக்கப்பட்டு கீழே அமர்ந்து இறைவன் (குருமூர்த்தமாக) உபதேசிக்க, எதிரில் மாணிக்கவாசகர் உபதேசம் பெறும் காட்சி நம்மை மெய்ச்சிலிர்க்க வைக்கிறது.

💧   மரகதக் கல் நடராஜர் மீது சாத்தப்பட்டு எடுத்துத் தரப்படும் சந்தனத்தை வெந்நீரில் கரைத்து குடித்தால் தீராத நோய்கள் கூட தீரும் என்பது நம்பிக்கை!

🅱 நடைதிறப்பு :🅱
   
🔑 காலை 5:00 மணி முதல் 12:45 மணி வரை, மாலை 3:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை திறந்திருக்கும்.🔑

🅱 பூசைக்காலம் : 🅱

🌀 காலை 5.30 மணிக்கு உஷத் காலம்

🌀 8 மணிக்கு கால சாந்தி

🌀 10 மணிக்கு உச்சிக் காலம்

🌀 மாலை 5 மணிக்கு சாயரட்சை

🌀 இரவு 7 மணிக்கு இரண்டாம் காலம்

 🌀 இரவு 8 மணிக்கு அர்த்தஜாம பூஜைகள் நடத்தப்படுகிறது.

🔥 மங்களநாதருக்கு தினமும் காலை 6 மணிக்கு, மதியம் 12.30 மணிக்கு, மாலை 5.30 மணிக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது. 🔥

🅱 பொது தகவல்:🅱

🌺 பாண்டிய நாட்டில் உள்ள தலம்.

🌺 மிகவும் பழமையான திருக்கோயில். இத்தலத்தின் பழமையை உணர்த்துவதாக "மண் தோன்றியபோதே மங்கை தோன்றியது" என்னும் பழமொழி இப்பகுதியில் வழங்குகிறது.

🌺 இத்தலத்தின் வரலாற்றுப் புராணத்தில் இராவணனின் மனைவி மண்டோதரியின் பெயர் குறிக்கப் படுவதாலும்; சுவாமி மூலத்தான மதிலில் உள்ள கல்வெட்டுக்களில் மண்டோதரியின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதாலும், இக்கோயிலின் பழைமை புலனாகிறது.

🌺 சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் "இலவந்திகைப் பள்ளி" என்பது உத்தரகோச மங்கையைக் குறிக்கும் என்பாரும் உளர்.

🌺 மேற்குறித்த கல்வெட்டில் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன் பெயரும் செதுக்கப்பட்டுள்ளது.

🌺 உத்தரம் - உபதேசம்; கோசம் - ரகசியம்; மங்கை - பார்வதி. பார்வதி தேவிக்கு இறைவன் வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசித்தமையால் இத்தலம் உத்தரகோசமங்கை என்னும் பெயர் பெற்றது.

🌺 மாணிக்கவாசகருக்கு உருவக் காட்சிதந்த சிறப்புடைய தலம்.

🌺 இலந்தை மரத்தடியில் எழுந்தருளிய மங்கைப்பெருமான் என்று இப்பெருமான் போற்றப்படுகிறார்.

🌺 இத்தலத்தில் சுவாமியை அம்பாள் பூசிப்பதாக ஐதீகம்.

🌺 சொக்கலிங்கப் பெருமான் பரதவர் மகளாகச் சபித்துப் பின் சாபவிமோசனம் செய்து அம்பாளை மணந்து கொண்டு இத்தலத்திலேயே அம்பாளுக்கு வேதப்பொருளை உபதேசம் செய்து, இங்கிருந்த அடியார் சிவயோகிகள் முதலிய பல்லாயிரவர்க்கும் ஞானோபதேசம் செய்து முத்தி நல்கி, பின்னர் அம்பிகையுடன் மதுரை சேர்ந்ததாக மதுரைப்புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

🌺 மங்கள நாதர் தலத்தில் திருமணம் செய்தால் நிறைய மங்களம் உண்டாகும் என்பது ஐதீகம். எனவே முகூர்த்த நாட்களில் நிறைய திருமணங்கள் இத்தலத்தில் நடைபெறுகின்றன.

🌺 இராமநாதபுர சமஸ்தான ஆளுகைக்கு உட்பட்ட தலம்.

🌺 நடராசர் கோயிலுக்குப் பக்கத்திலேயே சஹஸ்ர லிங்கக் கோயில் உள்ளது.

🌺 இங்குள்ள நடராஜர் திருமேனி, மரகதத்தால் ஆனது. இந்த மரகதத் திருமேனியை மார்கழி மாதம் நடைபெறும், ஆருத்ரா தரிசனத்தின் போது மட்டுமே காண முடியும். மற்றபடி வருடம் முழுவதும் இந்த நடராஜர், சந்தனக் காப்பு அலங்காரத்திலேயே காட்சியளிப்பார். எனவே வீதி உலா வருவதற்கும், நித்திய அபிஷேகத்திற்காகவும், பஞ்சலோகத்தால் ஆன மற்றொரு நடராஜர் திருமேனி இங்கு இருக்கிறது.

🌺 ஆனந்த தாண்டவம் ஆடும் நடராஜர், இங்கு தனது பள்ளியறையில் அம்பாளுக்காக தனிமையில் நடனம் ஆடினார் என்பது தல வரலாறு. இதன் பிறகே சிதம்பரத்தில் நடராஜர், நடனக்காட்சியை அரங்கேற்றியதாக கூறப்படுகிறது. வாழ்வில் ஒரு முறையேனும், இந்த மரகத மேனியனை தரிசனம் செய்து வருவது வாழ்வில் சிறப்பு தருவதாக இருக்கும்.

🌺 சிதம்பரத்தைப் போலவே இங்கேயும் நடராஜர் பெருமான் தான் விசேஷம். இங்கே உள்ள பஞ்சலோக நடராஜர் மிகவும் வித்தியாசமானவர். இவர் வலது புறம் ஆண்கள் ஆடும் தாண்டவமும், இடது புறம் பெண்கள் ஆடும் நளினமான கலைப்படைப்பாக உள்ளார். இந்த விக்கிரகத் திருமேனியையும் கல்வெட்டுக் குறிப்புகளையும் பார்க்கும் போது, நடராஜர் சிலையும் தொன்மையானது எனப் புலப்படுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்!

🌺 கோயில் வாசலில் விநாயகப்பெருமானும், முருகப்பெருமானும் இடம் மாறியுள்ளனர் என்பது வித்தியாசமான அமைப்பாக விளங்குகிறது. அதேபோல், முருகனுக்கு வாகனமாக யானை உள்ளது. முருகப்பெருமானுக்கு இந்திரன் தனது ஐராவதத்தை இத்தலத்தில் அளித்தான் என்று ஆதி சிதம்பர மகாத்மியம்’ எனும் புராதனமான நூல் விவரிப்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்!

🅱 பிரார்த்தனை:🅱  

🌸 அம்பாள் மங்களேஸ்வரியை வணங்கினால் தடைபட்ட திருமணங்கள் நடக்கும். சுவாமியையும், அம்பாளையும் காலையில் வணங்கினால் முன்வினை பாவங்கள் நீங்கும். மதியம் வணங்கினால் இப்பிறவி பாவங்கள் தீரும்.

🌸 மாலையில் தரிசித்தால் ஆயுள் அதிகரிப்பதுடன் தொழில் மேன்மையும், பொருள் பெருக்கமும் ஏற்படும்.

🌸 முன்னோர் சாபம், திருமணத் தடை, குழந்தைப் பேறு இல்லாமை, கல்வியில் தடை, வெளிநாட்டுப் பயணத்தில் தாமதம் போன்ற இடையூறுகளில் இருந்து விடுபட, இத்தல இறைவன் வழிவகை செய்கிறார்.

🅱 நேர்த்திக்கடன்:🅱
   
🌻  சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
   
🅱 தலபெருமை:🅱

 🎭  பொதுவாக, ஒரு கோயிலுக்கு சென்றால் ஒருமுறை வணங்கி விட்டு, உடனேயே திரும்பி விடுகிறோம். ஆனால் ஒரே நாளில் மூன்று வேளையும் சென்று தரிசித்து பலனை அடையத்தக்க  வகையிலான கோயில் ஒன்று ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் உள்ளது.

🎭 நடராசருக்குரிய ஆறு அபிஷேகக் காலங்களிலும் இச்சந்நிதியில் இறைவன் தாண்டவமாடிக் காட்சித் தரும் ஐதீகம் நடைபெறுகிறது.

🎭  இறைவனின் முடியைக் கண்டதாக தாழம்பூவின் சாட்சியுடன் பொய் சொன்ன பிரம்மா இத்தலத்தில் வணங்கிணார். இறைவன் இலந்தை மரத்தடியில் தோன்றி சாப விமோசனம் அளித்தார். அந்த மரம் இன்னும் உள்ளது.

🎭  நடராசப் பெருமானுக்கு ஆதிசிதம்பரம் எனப்படும் அற்புதத் தனிக்கோயில்.

🎭 கோயிலுக்கு உள்ளேயே குளத்தின் எதிரில் உள்ளது. இக்கோயில் அகழி அமைப்புடையது. எனவே சந்நிதிக்கு உட்செல்ல மரப்படிகள் அமைக்கப்பட்டுள்ளன.

🎭 தெற்கு நோக்கிய சந்நிதி. அக்கினி மத்தியில் நடராசப் பெருமான் ஆடுவதாகச் சொல்லப்படுகிறது.

🎭 அம்பிகை காண இங்கு அறையில் ஆடிய நடனத்தைத் தான் அம்பலவாணர், தில்லையில் அம்பலத்தில் ஆடினார் என்று சொல்லப்படுகிறது.

🅱 தாழம்பூ: 🅱

🎭 ஒருமுறை நான்முகனுக்கும், திருமாலுக்கும் ‘யார் பெரியவர்?’ என்ற போட்டி நிலவியது. சிவபெருமான் அக்னி பிழம்பாக உயர்ந்து நிற்க, ஒருவர் அடியையும், மற்றொருவர் முடியையும் தேடிச் செல்வது என்றும், யார் முதலில் அடியையோ, முடியையோ பார்த்து வருகிறார்களோ, அவரே பெரியவர் என்று முடிவு செய்யப்பட்டது.

🎭 பிரம்மன் முடியைத் தேடியும், விஷ்ணு அடியைத் தேடியும் புறப்பட்டனர். அப்போது ஈசனின் முடியில் இருந்து பல நூற்றாண்டு காலமாக தாழம்பூ ஒன்று கீழே வந்து கொண்டிருந்தது. வழியில் அந்த தாழம்பூவை சந்தித்த பிரம்மன், ஈசனிடம் வந்து தான் முடியை கண்டுவிட்டதாக பொய் சாட்சி சொல்லும்படி கூறினார். தாழம்பூவும் இறைவனிடம் வந்து பொய் சாட்சி சொன்னது. இதையடுத்து இறைவன், தாழம்பூ தன்னுடைய பூஜையில் இடம்பெறாது என்று சாபம் கொடுத்தார்.

🎭 அந்த சாபம் நீங்குவதற்காக தாழம்பூ, உத்தர கோச மங்கை திருத்தலத்தில் உள்ள இறைவனை நினைத்து தவம் இருந்து பூஜை செய்தது. இதையடுத்து அதன் சாபத்தை நீக்கி, ‘இத்தலத்தில் தாழம்பூ பூஜையில் பயன்படுத்தப்படும்’ என்று இறைவன் அருளியதாகவும் தல வரலாறு தெரிவிக்கிறது.

🅱 தல வரலாறு:🅱

🔥 சிவபெருமான் மண்டோதரிக்கு, அவளுடைய தவத்தை ஏற்றுக் காட்சி தந்தருளப் பெருமான் உள்ளங்கொண்டார். தன்பாலிருந்து ஐம்புலனும் அடக்கி அருந்தவம் புரிந்து வந்த ஆயிரம் முனிவர்களைப் பார்த்து "மண்டோதரிக்கு  அருள் செய்ய யாம் இலங்கை மூதூர் செல்கின்றோம். நீவிர் அனைவரும் இத்தலத்தை விட்டு அகலாது இருப்பீராக! எம்மால் ஒப்படைக்கப்படும் இவ்வேதாகமச் சுவடிகளை கைவிடாது காத்து வருவீராக! இலங்கையரசன் இராவணனால் எப்போது எம்திருமேனி தீண்டப்படுகிறதோ, அப்போது அதற்கு அடையாளமாக, இத்திருக்குளத்தின் நடுவே அக்கினிப் பிழம்பு தோன்றும்" என்று வானொலியாக அருள் செய்தார்.

🔥 மாதர்குலத் திலகமாக விளங்கிய மாதரசி மண்டோதரி தன் உள்ளத்தில் எவ்வடிவில் இறைவனை நினைத்துத் தவமிருந்தாளோ அவ்வடிவத்தையே ஏற்று, அழகிய திருவுரக் கொண்டு இறைவன் சென்று அவளுக்குக் காட்சி தந்தார். தரிசனம் பெற்ற மாதரசி, தன்னை மறந்து, பரவசமாகி, கண்களாரக் கண்டு கைகளாரத் தொழுது பிரமித்துப் போய் அசையாது நின்றாள். அப்போது வெளியே சென்றிருந்த இராவணன் உள்ளே வந்தான். இறைவனும் அழகான குழந்தையாக மாறிக் காட்சித்தர்.

🔥 இராவணன் அக்குழந்தையைக் கண்டு அதன் அழகில் மயங்கி 'யார் பெற்றதோ இது' என்று வினவினான். மண்டோதரி,* "யாரோ ஒரு தவமகள் வந்து இக்குழந்தையைத் தந்து சென்றாள்"* என்றாள்.

🔥 குழந்தையின் உடம்பில் மாறிமாறித் தோன்றிய வண்ணத்தைக் கண்டு உள்ளம் வியப்புற்ற இராவணன் அக்குழந்தையைக் கையாலெடுத்துத் தழுவி மகிழ்ந்தான். அவ்வளவில் - இறைவன் திருமேனியை இராவணன் தீண்டியதால் - குளத்தில் அக்கினிப் பிழம்பு தோன்றியது. அதுகண்ட முனிவர்கள் செய்வதறியாது திகைத்து, அதில் வீழ்ந்து மறைந்தனர். அவர்களுள் ஒருவர் மட்டும் தம் அறிவால் உணர்ந்து, இறைபணியில் நிற்றலே கடமையென்று முடிவு செய்து, அத்தீர்த்தத்தின் கரையிலேயே அமர்ந்திருந்தார்.

🔥 மூதாட்டி ஒருத்தி வந்து மண்டோதரியிடமிருந்து குழந்தையைப் பெற்றுச் சென்றாள். இறைவன் திரும்ப வந்து குளக்கரையில் இருந்தவர் மூலமாகச் செய்தியறிந்தார். மூழ்கிய 999 பேர்களுக்கும், மூழ்காதிருந்த வருக்குமாக ஆயிரவருக்கும் இறைவன் உமையோடு விடைமீதமர்ந்து காட்சி தந்து தம் சந்நிதியில் தம்முடன் அவர்களை இருத்திக் கொண்டார். இதனால் பெருமானுக்குக் "காட்சி கொடுத்த நாயகன்" என்ற பெயரும் வழங்கலாயிற்று.

🔥 ஆயிரவர்களும் ஒவ்வொரு இலிங்கவடிவில் இறைவனோடு ஒன்றினர் - அதுவே சஹஸ்ரலிங்கமாகத் தரிசனம் தருகின்றது. இக்கோயிலை வலம் வந்து வழிபடுவோர் எல்லாச் சித்திகளையும் அடைவர் என்பது தலவரலாறு.

🅱 சிறப்பம்சம்:🅱

Ⓜ அதிசயத்தின் அடிப்படையில்:

♻  இறைவன் சுயம்புவாக ஒரு இலந்தை மரத்தடியில் தோன்றினார். அந்த மரம் இன்னும் உள்ளது.

♻  உத்தரகோச மங்கை கோவிலில் முக்கிய திருப்பணிகளை பாண்டிய மன்னர்களே செய்தனர். பாண்டிய மன்னர்கள் ஆட்சி அதிகாரத்தில் சிறந்து இருந்த போது, அவர்களது. தலைநகராக சிறிது காலத்துக்கு உத்திரகோசமங்கை இருந்தது..

♻  திருவாசகத்தில் 38 இடங்களில்  புகழ்ந்து பாடப்பட்டுள்ள ஸ்தலம்.

♻  மாணிக்கவாசகருக்கு உருவக் காட்சி தந்த சிறப்புடைய தலம்.

♻  மாணிக்கவாசகப் பெருமான், வேதவியாசர், காகபுஜண்டரிஷி, மிருகண்டு முனிவர், வாணாசுரன் ஆகியோர் வழிப்பட்ட திருத்தலம்..

♻ காகபுஜண்ட முனிவருக்கு கவுதம முனிவரால் ஏற்பட்ட சாபம் இத்தலத்தில்தான் நீங்கியது. சிவனடியார்கள் 60 ஆயிரம் பேர் இங்கு ஞான உபதேசம் பெற்றனர் என்கிறார்கள்.

🅱 இருப்பிடம்: 🅱

✈ மதுரை - இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில்; பரமக்குடி, சத்திரக்குடி முதலியவற்றைத் தாண்டி, (இராமநாதபுரத்திற்கு 10 கி.மீ. முன்பாகவே) வலப்புறமாக பிரிந்து செல்லும் தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் சென்று, உத்தரகோசமங்கை இருப்புப்பாதை சந்திக் கடவைத் (Railway level crossing) தாண்டி, 7-கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். சாலை பிரியுமிடத்தில் கோயில் பெயர்ப் பலகையுள்ளது. கோயில் வரை வாகனங்கள் செல்லும்.

🌀🌻🌀🌻 BRS🌀🌻🌀🌻🌀

🍄 தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்🍄

Thursday 28 December 2017

மணிவாசகரும், ஆவுடையார் கோயிலும் - திருவாதிரைச் சிறப்பு

CHIDAMBARAM_-_N

ஆவுடையார் திருக்கோயிலிருக்கும் சுவாமி ஆத்மநாதர். அம்பாள் யோகாம்பாள். மூர்த்தி மாணிக்கவாசகர். இங்கு, சிவதீர்த்தம், அக்கினி தீர்த்தம், தேவதீர்த்தம், முனிவர் தீர்த்தம், அசுர தீர்த்தம், வாயு தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம், நாராயண தீர்த்தம், பிரம தீர்த்தம், அறுபத்து நான்கு கோடித் தீர்த்தம், வெள்ளாறு, திருத்தொட்டித் தீர்த்தம் போன்றவையாகும். காமதேனுப் பசு வழிபட்ட மகிழமரம் தலவிருட்சமாக உள்ளது.
பொதுவாக, சிவபெருமான் திருக்கோவில்களில், இராஜகோபுரத்தை அடுத்து முதலில் பலிபீடம், நந்தி, கொடிமரம் இருக்கப் பெறும். மேலும், கோவில்களில் நடைபெறும் நாள்பூசை, விழாக்களில் நாதசுரம், மேளம், பேரிகை, சுத்தமத்தளம் முதலிய வாத்தியங்கள் முழங்கப்படுவது உண்டு. இத்தகைய வாத்திய ஒலிகளை ஆவுடையார் திருக்கோயிலில் கேட்க முடியாது. திருச்சின்னம், சங்கு, மணி முதலியவற்றின் ஒலிகள் மட்டுமே ஒலிக்கச் செய்யப்படும்.
சிவன் இத்தலத்தில் கருவறையில் அரூபமாகவும், அருவுருவமாக குருந்தமர வடிவிலும், (தலவிருட்சமாக) உருவமாக மாணிக்கவாசகராகவும் அருளுகிறார்கள். இங்கு குருந்தமரத்தை சிவனாகக் கருதுவதால், கார்த்திகை சோமவாரத்தில் இந்த மரத்தின் முன்பாக நூற்றியெட்டு சங்காபிஷேகம்  நடக்கிறது. மூலஸ்தானத்தில் சதுர வடிவ ஆவுடையார் மட்டுமே இருக்கிறார். இதன்மீது ஒரு குவளை சார்த்தப்பட்டிருக்கிறது. குவளை உடலாகவும், குவளையினுள் இருப்பது ஆத்மாவாகவும் கருதப்படுகிறது. இதன் காரணமாக தானதாலும், ஆத்மாக்களை காத்தருள்பவர் என்பதாலும் சுவாமிக்கு “ஆத்மநாதர்” என்று பெயர் உண்டானது.  
ஆறு கால பூஜையின்போதும், இவருக்கு நூற்றியெட்டு மூலிகைகள் கலந்த தைல முழுக்கு நடப்பது மிகச் சிறப்பு. தட்சனின் யாகத்திற்கு சிவனை மீறிச் சென்றதற்கு மன்னிப்பு பெறுவதற்காக, அம்பாள் இத்தலத்தில் அரூப வடிவில் தவம் செய்தாள். எனவே, இங்கு அம்பாளுக்கும் விக்ரகம் இல்லை. அவள் தவம் செய்த போது, இப்பதியில் பதிந்த பாதத்திற்கு மட்டுமே பூஜை  நடக்கிறது. இந்த பாதத்தைப் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக, கண்ணாடியில் பாதம் பிரதிபலிக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
அம்பாள் சன்னதி எப்போதும் அடைத்தே இருக்கும் என்பதால், சன்னதி முன்புள்ள ஜன்னல் துவாரம் வழியாகத்தான் பாதத்தை தரிசிக்க முடியும். ஆவுடையார் கோயிலில் நவக்கிரக சன்னதி இல்லை. ஆனால், நவக்கிரகத் தூண்கள் வைக்கப்பட்டுள்ளன. சூரிய, சந்திர கிரகணங்களின்போது எல்லாக் கோயில்களிலும் பூஜை செய்யமாட்டர்கள். ஆனால், இந்த ஆவுடையார் கோயிலில் கிரகண நாளிலும் ஆறு கால பூஜை நடக்கிறது. 
ஆவுடையார் கோவிலில்தான் மாணிக்கவாசகர் திருவாசகம் எழுதினார். இங்குள்ள தேர் தமிழகத்திலுள்ள பெரிய தேர்ககளுள் ஒன்றாகும். திருவில்லிப்புத்தூர் திருநெல்வேலி, திருவாரூர் ஆவுடையார்கோயில் ஆகிய ஊர்களில் உள்ள  தேர்கள்தான் தமிழகத்தில் உள்ள கோயில்களின் தேர்களில் மிகவும் பெரிய தேராகும். இந்த ஆவுடையார்கோயில் தேரை இழுக்க சுமார் ஐயாயிரம் பேர் கூடினால்தான் இழுக்க முடியும். இதில் அதன் அடங்காத் தன்மையின் வெளிப்பாடு.
அபூர்வ சிற்பங்கள்
டுண்டி விநாயகர் சிற்ப உருவம், உடும்பும் குரங்கும், கற்சங்கிலிகள், சங்கிலியின் நுனியில் பாம்பு ஒன்று பின்னிக்கொண்டு தலையினைக் காட்டுவது. இரண்டே தூண்களில் ஓராயிரம் கால்கள்.
ஆயிரத்தெட்டு சிவாலயங்களில் உள்ள இறைவன் இறைவியர் திருவுருவங்கள். பலநாட்டுக் குதிரையின் சிற்பங்கள். அனைத்து நட்சத்திர உருவச் சிற்பங்கள். நடனக்கலை முத்திரை பேதங்கள்.
சப்தஸ்வரக் கற்தூண்கள். கூடல்வாய் நிழல் விழும் பகுதி பசுமாட்டின் கழுத்து போன்று காணப்படுபவை.
கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெருமகனார் பாடி வைத்த "கடல் கிழக்கு தெற்கு கரைபெரு வெள்ளாறு குடதிசையில் கோட்டைக் கரையாம் - வடதிசையில் ஏனாட்டுப் பண்ணை இருபத்து நாற்காதம் சோனாட்டிற் கெல்லையெனச் சொல்" எனவும், "வெள்ளாறது வடக்காம் மேற்குப் பெருவெளியாய் தெள்ளார் புனற்கன்னி தெற்காகும் - உள்ளாரஆண்ட கடல் கிழக்காம் ஐப்பத்தறு காதம் பாண்டிநாட் டெல்லைப் பதி'" என்றும், கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெருமகனார் பாடிவைத்த "தெற்கு கரை பெரு வெள்ளாறு வெள்ளாறு வடக்காம் என்று வருகின்ற சோழ நாட்டின் தெற்கு எல்லையாகவும் பாண்டிய நாட்டின் வடக்கு எல்லையாகவும் இருந்து சிறப்புப் பெற்ற அந்த வெள்ளாறு இன்றளவும் குன்றாச் சிறப்போடு விளங்குகிறது."
அதற்குக் காரணம் கவிச்சக்கரவர்த்தி கம்பனால் பாண்டிய நாட்டின் எல்லையென கூறப்பட்டுள்ள வெள்ளாற்றின் தென்கரையிலே பாண்டிய நாட்டு மன்னனாகிய அரிமர்த்தன பாண்டியரின் அமைச்சராக இருந்த மாணிக்கவாசகரால் எழுப்பப் பெற்ற திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோயில் இன்றளவும் வாழ்வாங்கு வாழ்ந்து வளரும் தமிழ்கலைக்குக் கட்டியம் கூறுவது போல அமைந்திருப்பதே ஆகும்.
ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே எழுப்பப்பட்ட இந்தக் கவிபாடும் கலைக் கூடத்தின் சிறப்புகளை ஒரு சிறு பதிகத்தில் சொல்லி அடக்கி விட முடியாது. அடங்காமை என்று கூறுவார்களே, அந்த அடங்காமை இந்த ஆவுடையார் கோயிலுக்கு மிகவும் பொருந்தும். புதிதாகக் கோவில்கள் கட்டுகிற ஸ்தபதியார்கள் கூட ஆவுடையார்கோயில் சிற்ப அடங்கலுக்குப் புறம்பாக என்று தங்களது ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு எழுதுவதிலிருந்தே இந்தக் கோயிலின் கலைத்திறன் வேறு எந்தக் கோயிலிலும் அடங்காது என்பது தெளிவாகும்.
தமிழகத்திலுள்ள ஆலயங்கள் எல்லாவற்றிலுமே உருவ வழிபாடுதான் நடைபெற்று வருகின்றன. ஆனால் இந்த ஆத்மநாதர் ஆலயத்தில் மட்டுந்தான் அருவ வழிபாடு நடைபெற்று வருகிறது. மூலஸ்தானத்தில் எந்த விதச் சிலையும் கிடையாது. அப்படிப் பார்த்தாலும் இது மற்ற கோவில்களில் அடங்காத கோயில் என்பது சொல்லாமலே விளங்கும். ஆவுடையார் கோயிலை பூதம்தான் கட்டிற்று என்று இவ்வட்டார மக்களின் நம்பிக்கை. பெரிய பாறைகளைக் கொண்டு வந்து தூண்கள் அமைத்தும் சிலைகள் வடித்தும் கொடுங்கைக் கூரைகள் இணைத்தும் மதில் சுவர்கள் கோபுரங்கள் எழுப்பியும் கட்டிவிக்கப்பட்டுள்ளது.
கோயிலின் தாழ்வாரத்திலுள்ள கொடுங்கைகள் கல்லை தேக்கு மரச்சட்டம் போல் இழைத்து அதில் (கம்பிகளை இணைத்துச் சேர்த்து அதிலே குமிழ் ஆணிப்பட்டை ஆணிகள் அறைந்திருப்பது போல) எல்லாமே கல்லில் செய்து அதன் மீது மெல்லிய ஓடு வேய்ந்திருப்பது போல செய்திருப்பது சிற்பக்கலை வியக்கத்தக்க ஒப்பற்ற திறனாகும். ஒரு கல்லுக்கும் மறு கல்லுக்கும் எப்படி எந்த இடத்தில் இணைப்பு சேர்க்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தாழ்வாரம் எனப்படும் கொடுங்கைக்கூரையானது மொத்தம் பதிமூன்றரை அடி நீளமும் ஐந்தடி அகலமும் இரண்டரையடி கனமும் உள்ளதாகும். இந்த இரண்டரையடி கனத்தை இப்படி தாழ்வாரக் கூரையாக்கி செதுக்கிச் செதுக்கி ஒரு அங்குல கன்னமுள்ள மேலோடு அளவிற்குச் சன்னமாக ஆக்கப்பட்டிருக்கிறது.
திருவலஞ்சுழி பலகணி, திருவீழிமழலை வௌவால்நத்தி மண்டபம், ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயில் கொடுங்கை போன்ற கட்டிடப்பணி தவிர்த்து பிற வகையிலான கட்டட அமைப்புகளை கட்டித்தருவதாக கட்டிடக்கலைஞர்கள் உறுதி கூறுவதாகக் கூறுவதுண்டு. இதன்மூலமாக கட்டிடக்கலை நுட்பத்தை உணர முடியும். திருவலஞ்சுழி பலகணி (சன்னல்) மிகவும் நேர்த்தியாகவும் நுட்பமானதாகவும் அமைக்கப்பட்டிருக்கும். திருவீழிமிழலை வௌவால்நத்தி மண்டபத்தில் வௌவால்களால் தொங்க முடியாது. ஆவுடையார்கோயில் கொடுங்கை மிகவும் மெல்லியதாக இருக்கும். இதே மண்டபத்தில் பத்திலிருந்து பதினைந்து வளையங்கள் வரையான வளையங்கள் கொண்ட ஒரே கல்லிலான கற்சங்கிலி செதுக்கப்பட்டு உயரத்தில் பொறுத்தித் தொங்க விடப்பட்டுள்ளது. இங்கு வருகின்ற பக்தர்களுக்கு மற்ற கோயில்களைப் போல தீப ஆராதனையினைத் தொட்டு வணங்க அனுமதிப்பதும் இல்லை.
மாணிக்கவாசகர் சோதியிலே கலந்துள்ளார் என்பதாலேயே தீபம் தருவதில்லை. இங்கு, புழுங்கல் அரிசியினால் நெய்வேத்தியம் செய்யப்படுகிறது. ஆறு கால பூசைக்கும் தொடர்ந்து அமுது படைத்துக் கொண்டிருப்பதனால் ஆயிரக்கணக்கான வருடங்களாக இங்கு உள்ள அமுது படைக்கும் அடுப்பின் நெருப்பு அணைந்ததேயில்லை. சமயக் குரவர்கள் நால்வருள் மணிவாசகர் ஒருவர். சிவனடியார்கள் பலர் இருந்தாலும் சிவனுக்கு மிக நெருக்கமானவர்களுள் முக்கியமானவர்களுள் இவரும் ஒருவர். 
பாண்டியவள நாட்டில் வைகை ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் "திருவாதவூர்" என்னும் ஊரில் அமாத்தியர் மரபில் சம்புபாத சரிதருக்கும், சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் வாதவூரர். இவர் ஒன்பதாம் நூற்றாண்டைச் சார்ந்தவர். பதினாறு வயதுக்கு முன்னமே இவர் கல்வி, கேள்வி, ஒழுக்கம், அறிவு, ஆற்றல் இவற்றில் சிறந்து விளங்கினார். இவர் வேத வித்தகர். நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை, பொழுதேனும் கூறிக் கொண்டிருப்பார். இவரது அறிவாற்றலைப் பற்றி கேள்விப்பட்ட மன்னன் அரிமர்த்தன பாண்டியன், இவரை வரவழைத்து அமைச்சர் பதவியை அளித்து "தென்னவன் பிரமராயன்" என்ற பட்டத்தை கொடுத்துப் பணிசெய்ய பணித்தான்.
பதவி, செல்வம் அனைத்தும் இருந்தும் இவை மட்டும் வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை சிந்தித்த வாதவூரர், சைவ சித்தாந்தத்தை ஆராய்ந்து சிவ வழிபாட்டை பின்பற்றி ஒழுகினார். ஒருசமயம், சோழநாட்டில் நல்ல குதிரைகள் வந்திருக்கின்றன என்று கேள்விப்பட்ட மன்னன் வாதவூராரை குதிரைகள் வாங்கி வரும்படி பணித்தான். அதற்குத் தேவையான பொன்னைக் களஞ்சியத்தில் இருந்து எடுத்துக் கொண்டு படைவீரர்களுடன் புறப்பட்டார். அப்போது, சிவபெருமான் தன் திருவிளையாடலை நிகழ்த்த முடிவு எடுத்து விட்டார்.


அவர் ஒரு குருவைப் போல வேடம் பூண்டு திருப்பெருந்துறை என்னும் தலத்தில் போய் ஒரு குருந்த மரத்தடியில் அமர்ந்து கொண்டார். திருப்பெருந்துறையை அடைந்து விட்ட வாதவூரார் இங்கேயே தங்கும் படி தன் படையினருக்கு உத்தரவிட்டார். வாதவூரர் ஆத்மநாதர் கோயிலுக்குள் சென்றார். இங்கு மூலஸ்தானத்தில் லிங்கத்திருவுரு கிடையாது. ஆண்டவன் உருவமில்லாது இருக்கிறார் என்று தத்துவம். ஆவுடையார் மட்டும் இருக்கும். மேலே லிங்கத்திருவுரு கிடையாது. லிங்கத்திருவுரு இருக்க வேண்டிய இடத்தில், ஒரு குவளையை கவிழ்த்து வைத்திருக்கிறார்கள்.
வாதவூரர் இங்குள்ள புஷ்கரணியில் நீராடி, உடலெங்கும் வெண்ணீறு பூசி, சிவப்பழமாக, கோயிலுக்குள் சென்று உருவமற்ற இறைவனை, மனதுக்குள் உருவமாக்கி உருகி உருகி வணங்கினார். அதன்பின், பிரகாரத்தை வலம் வந்தார். பிரகாரத்திலுள்ள குருந்தமரத்தடியில் தெட்சிணாமூர்த்தியாய் அமர்ந்திருந்த சடை தாங்கிய சிவத்தொண்டரைக் கண்டார். இவர் முன் நெடுஞ்சான் கிடையாய் விழுந்து வணங்கி பாமாலை பாடினார். இவர் தான் சிவம் என்று வாதவூராருக்கு உறுதியாகத் தெரிந்து விட்டார் போல....... இதற்கேற்றாற் போல், தன் திருவடியைத் தூக்கிய சிவன், தன் முன்னால் பணிந்து விழுந்து கிடந்த வாதவூராரின் சிரசில் வைத்துத் தீட்சை வழங்கினார்.
அவரது திருவடி பட்டதோ இல்லையோ, வாதவூரார் மெய் சிலிர்த்து பாடல்களைப் பாடத் தொடங்கிவிட்டார். பாடல்களைக் கேட்டு இறைவன் உருகிப் போன இறைவன்................
அப்பா!" நீ செந்தமிழால் என்னைத் பாடினாய். ஒவ்வொரு வரியும் முத்து... இல்லை இல்லை...... மாணிக்கம் போல் ஒளிர்ந்தன. நீ மாணிக்கப்பப்பா"..மாணிக்கவாசகனப்பா...நீ மாணிக்கவாசகன் என்றார் இறைவன்.
அன்றுமுதல் வாதவூரார் மாணிக்கவாசகர் ஆகினார். மாணிக்கவாசகருக்கு மீண்டும் ஆசியளித்து விட்டு, சிவன் மறைந்துவிட்டார். சிவன் காட்சி தந்த இந்த ஊரிலேயே தங்கியிருந்து சிவகைங்கர்யம் செய்ய மாணிக்கவாசகர் முடிவு செய்தார். படையினரை அழைத்த மாணிக்கவாசகர், குதிரை வாங்குவதற்கான ஏற்பாடுகளை நான் செய்து விட்டேன். குதிரைகளுடன் நான் ஆடிமாதத்தில் மதுரைக்கு வருவதாக மன்னரிடம் போய்ச் சொல்லுங்கள். இப்போதே நீங்கள் எல்லாரும் ஊருக்கு புறப்படுங்கள் என்றார். 
அமைச்சரின் கட்டளையை ஏற்று ஊருக்குப் புறப்பட்டனர். பின்பு, தான் கொண்டு வந்த பணத்தைக் கொண்டு கோயில் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்தினார். கையில் இருந்த செல்வம் கோவிலாகி நின்று வேகமாகக் கரைந்து போயின. இதனிடையே ஆடிமாதம் பிறந்துவிட்டது. குதிரை வாங்க வந்த ஞாபகமே மாணிக்கவாசகருக்கு மறந்து போனது. அவர் எப்போதும் சிவாயநம..சிவாயநம என உச்சரித்தபடியே இருந்தார்.
பாண்டியமன்னன், அமைச்சரின் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தான். திருப்பெருந்துறையில் அவர் தங்கியிருக்கிறார் என்பதை ஏற்கனவே வந்த படைவீரர்கள் மூலம் தெரிந்திருந்த மன்னன், அவருக்கு ஒரு வீரன் மூலமாக ஓலை அனுப்பினான். ஓலையைப் படித்த பிறகு தான், அவருக்கு பழைய நினைவே திரும்பியது. நேராக ஆத்மநாதர் சன்னதிக்கு ஓடினார் மாணிக்க வாசகர். ஐயனே! மன்னன் என்னை நம்பி, குதிரை வாங்க அனுப்பினான். நானோ, உனக்குத் திருப்பணி செய்து அச்செல்வத்தை செலவழித்து விட்டேன். இப்போது, குதிரைகளுடன் அங்கு நான் சென்றாக வேண்டுமே! அதற்கு நீ தான் வழிகாட்ட வேண்டும் என்று இறைஞ்சினார்.
அப்போது அசரீரி ஒலித்தது. கவலைப்படாதே மாணிக்கவாசகா! விரைவில் குதிரைகளுடன் வருவதாக பதில் ஓலை அனுப்பி வை. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன், என்றது அக்குரல். இறைவனின் குரல் கேட்ட மாணிக்கவாசகர், அவர் சொன்னபடியே மதுரைக்கு குதிரைகளுடன் வருவதாகப் பதில் ஓலை அனுப்பினார். அரிமர்த்தன பாண்டியனும் ஓலையைப் படித்து மகிழ்ந்தான். மன்னன் குறிப்பிட்டிருந்த காலம் நெருங்கியது. குதிரைகள் எப்படி வரும் என்ற கவலையில் இருந்த மாணிக்கவாசகரின் கனவில்,.......
மாணிக்கவாசகா! நீ உடனே மதுரைக்குச் செல். நான் குதிரைகளுடன் வருகிறேன், என்றார். இறைவனை வேண்டி வணங்கிக் கொண்டு, மாணிக்கவாசகர் பாண்டியநாட்டுக்கு கிளம்பினார். அரண்மனைக்குச் சென்ற மாணிக்கவாசகரிடம், அமைச்சரே! குதிரைகள் எங்கே? எத்தனை குதிரை வாங்கினீர்கள்? என்று கேட்ட மன்னனிடம், அரசே! தாங்கள் இதுவரை பார்த்திராத குதிரை வகைகள் வரிசையாக வந்து சேரும், என்று பதிலளித்தார் மாணிக்கவாசகர். 
நீண்டநாட்களாகியும் குதிரைகள் வராததால் மன்னனுக்கு சந்தேகம் ஏற்பட்டு, நம்மை ஏமாற்றிய இவனைச் சிறையில் அடைத்து சித்ரவதை செய்யுங்கள், என ஆணையிட்டான். காவலர்கள் வாதவூரரின் முதுகில் பெரிய பாறாங்கற்களை ஏற்றி கொடுமைபடுத்தினர். அரசுப் பணத்தைக் கொள்ளையடித்ததாக ஒப்புக்கொள்ளாவிட்டால் தண்டனை மேலும் அதிகரிக்கும் என்று எச்சரித்து சென்றனர். இதற்குள் மன்னன் விதித்த கெடு காலமான ஆடி முடிந்து ஆவணி பிறந்துவிட்டது. அம்மாதத்தில் வரும் மூலம் நட்சத்திர நாளன்று சிவபெருமான் நந்தீஸ்வரரை அழைத்தார். நந்தி! என் பக்தன் மாணிக்கவாசகன், குதிரை வாங்கித்தராத குற்றத்திற்காக பாண்டியநாட்டு சிறையில் அவதிப்படுகிறான். 

நீயும், நம் பூதகணத்தவர்களும் காட்டிலுள்ள நரிகளை குதிரைகளாக்கி அங்கு கொண்டு செல்லுங்கள். நான் குதிரை வீரனாக உங்களுடன் வருகிறேன், என்றார். நந்தீஸ்வரரும் மகிழ்ச்சியுடன் அவ்வாறே புறப்பட்டுச் சென்றார். ஆயிரக்கணக்கான குதிரைகள் மதுரை நகருக்குள் அணிவகுத்து வந்தது பற்றி மன்னனுக்கு தகவல் சென்றது. அந்த அழகான, விலைமதிக்க முடியாத குதிரைகளைக் கண்டு மன்னன் மகிழ்ந்தான். அன்று இரவே, அந்த குதிரைகள் அனைத்தும் நரிகளாக மாறி ஊளையிட்டன. தன்னை ஏமாற்றி விட்ட மாணிக்கவாசகரை சுடுமணலில் நிற்க வைத்தான் மன்னன்.
தூரத்தில் தெரிந்த மீனாட்சியம்மன் கோபுரத்தைப் பார்த்து, இறைவா! இதென்ன சோதனை! குதிரைகள் ஏன்  நரிகளாகிய மர்மம் என்ன? இத்தகைய கொடுமைக்கு ஏன் என்னை ஆளாக்கினாய்? என்று கண்ணீர் உகுத்தார் மாணிக்கவாசகர். உடனே, சுடுமணல் நிறைந்து கிடந்த அந்த ஆற்றில்  திடீரென வெள்ளம் பெருகி வந்தது. காவலர்கள் அடித்து பிடித்துக் கொண்டு கரைக்கு ஓடினர். ஆனால், மாணிக்கவாசகரைக் கட்டியிருந்த கற்கள் உடைந்து விடுபட்டன. எழுந்தார். அவர் நின்ற பகுதியில் மட்டும் வெள்ளம் அவரது பாதங்களை நனைத்துக்கொண்டு மூழ்கடிக்காமல் ஓடியது.
மன்னனின் செவிகளில், அப்போது அசரிரீ ஒலித்தது. அரிமர்த்தனா! திருவாதவூராரின் பொருட்டு இந்த லீலைகளைப் புரிந்தது நானே! என்றார். தனது தவறை உணர்ந்து மாணிக்கவாசகரிடம் மன்னிப்பு கேட்ட மன்னன், மீண்டும் அமைச்சர் பொறுப்பேற்கும்படி வேண்டினான். மாணிக்கவாசகரோ அதை ஏற்காமல் அவனை ஆசிர்வதித்து விட்டு, தில்லையம்பலமாகிய சிதம்பரத்துக்குப் புறப்பட்டுச் சென்று விட்டார். அங்கு வேதியர் போல அமர்ந்திருந்த சிவபெருமான், மாணிக்கவாசகர் பாடப்பாட ஓலைச்சுவடியில் எழுதினார்.
எழுதி முடித்த சிவபெருமான் அந்த ஓலைச்சுவடியின் மேல் மணிவாசகன் சொன்ன திருவாசகத்தை எழுதியது அழகிய திருச்சிற்றம்பலமுடையான் என்று கையொப்பமிட்டு சிதம்பரம் கனகசபையில் வைத்து விட்டு மறைந்து விட்டார். அப்போது தான் மாணிக்கவாசகருக்கு தான் கூறிய திருவாசகத்தை எழுதியது சிவபெருமான் என்பது தெரியவந்தது. ஞானநெறியைப் பின்பற்றிய மணிவாசகர் முப்பத்திரண்டு ஆண்டுகள் வாழ்ந்து ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் சிவனடி சேர்ந்தார்.
சிதம்பரத்தில், மணிவாசகர்
மார்கழித் திருவாதிரை உற்சவம் சிதம்பரத்தில் மிக விசேசமாக நடக்கும். இத்திருவிழாவில் ஒரு தனி விசேசம் என்னவென்றால், மாணிக்கவாசகருக்கு பத்து நாட்களிலும் சாயுங்கால தீபாராதனையின் போது மாணிக்கவாசகரை சுவாமியின் திருச்சந்நிதிக்கு எழுந்தருளச் செய்து திருவெம்பாவை பாட்டுகள் பாடிச் சுவாமிக்குத் தீபாராதனை நடைபெறும். நாள்தோறும் காலை விழாவில் மாணிக்கவாசகரையும் எழுந்தருளச் செய்வர். பத்தாம் நாள் தரிசனம் முடிந்தவுடன் மாணிக்கவாசகருக்கும் தீபாரதனை நடைபெறும். சுவாமிக்கு விடையாத்தித் திருவிழா முடிந்த மறுநாள் மாணிக்கவாசகருக்கும் விடையாத்தித் திருவிழா நடைபெறும். 
சிதம்பரத் தேரும், சேந்தனாரும்
'திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி அளி' என்பது சொல்வழக்கு. திருவாதிரை தினத்தன்று, தில்லை நடராஜரை நினைத்து விரதம் இருந்து களி செய்து சிறிதேனும் உண்பது நன்மை பயக்கும். திருவாதிரை தினத்தில் களிக்கும் தனி இடம் உண்டு. அத்தகைய சிறப்பான இடத்தை ‘களி’ பிடித்ததற்கான நேர்த்தி சேந்தனாரைச் சாரும். 
சேந்தனார் வரலாறு!
சிதம்பரத்தில் சேந்தனார் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் பட்டினத்தாரிடம் கணக்குப்பிள்ளையாக வேலை பார்த்து வந்தார். சேந்தனாரும், அவரது மனைவியும் சிறந்த சிவபக்தர்களாக விளங்கினர். தினமும் உணவு உட்கொள்ளும் முன்பாக சிவதொண்டர் களுக்கு உணவிட்ட பின்னரே அவர்கள் இருவரும் சாப்பிடுவார்கள். தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பதை உணர்ந்திருந்தனர் இருவரும். தவிர இயல்பாகவே, அந்த தம்பதியரிடம் ஈகை குணம் இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில் பட்டினத்தார் அனைத்தையும் துறந்து துறவு வாழ்வுக்கு திரும்பி விட்டார். இதனால் அவரது சொத்துக்களை ஏழைகளுக்கு பகிர்ந்தளித்தார் சேந்தனார். இதில் தனக்கென்று எதுவும் எடுத்துக் கொள்ள வில்லை. விறகு வெட்டி அதனை விற்பனை செய்து அதில் வரும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை நடத்தினர்  சேந்தனார் தம்பதியர். 
களி
அந்த ஏழ்மை நிலையிலும் சிவ தொண்டர்களுக்கு உணவளித்த பின்னரே தாங்கள் உண்ணும் நற்குணம் பெற்றவர்களாக சேந்தனாரும் அவர்மனைவியும் திகழ்ந்தனர். ஒருநாள் கடுமையான மழையின் காரணமாக விற்பனைக்காக கொண்டு சென்ற விறகுகள் ஒன்று கூட விற்பனையாகவில்லை. விறகுகளை விற்காததால் வீட்டில் சமையல் செய்ய இயலவில்லை. சிவதொண்டர்களுக்கு உணவளிக்க முடியாதோ? என்ற கவலையுடன் வீடு திரும்பினார் சேந்தனார். அவரது மனைவி வீட்டில் இருந்த உளுந்தை அரைத்து மாவாக்கி அதில் சுவையான களி சமைத்தார். பின்னர் தாங்கள் சமைத்த உணவுடன் சிவதொண்டர் யாராவது வருவார்களா? என்று காத்திருக்க தொடங்கினர்.
சேந்தனாருக்கு மனது ஒரு நிலையில் இல்லை. ‘இந்த மழைக்கு யார் வந்து உணவு கேட்கப் போகிறார்கள்? அப்படியே உணவுக்காக ஏதாவது ஒரு அடியார் வந்தாலும் கூட, அவருக்கு இந்த களி பிடிக்குமோ?, பிடிக்காதோ? அவர்கள் இதனை சாப்பிடுவார்களா? என நினைத்து கவலை கொண்டார். இதே மனநிலையுடன் தம்பதியர், அடியார் வருகைக்கு வெகு நேரம் காத்திருக்க தொடங்கினர். அப்போது ஒரு சிவ தொண்டர், சேந்தனாரின் வீட்டு வாசலில் மழைக்காக ஒதுங்கினார். பின்னர் அந்த அடியார், சேந்தனாரிடம், ‘ஐயா! உங்கள் வீட்டில் உண்பதற்கு ஏதாவது உணவு இருக்கிறதா?
என்று கேட்டார். 
இதனால் மகிழ்ச்சி அடைந்த சேந்தனார், அந்த அடியாரை வீட்டிற்குள் அழைத்துச் சென்று மனைவியிடம் களியை எடுத்து பரிமாறும்படி கூறினார். களியை சாப்பிட்ட அடியார் ஆனந்தத்தில் ஆர்ப்பரித்து, மிக அருமையான சுவை! இதற்கு முன் இந்த மாதிரி உணவை சாப்பிட்டதில்லை இந்த களி, அமிர்தத்தையும் மிஞ்சிடும் சுவையில் இருக்கிறது என்று கூறினார். இதனை கேட்டதும் மனவருத்தத்தில் இருந்த சேந்தனாருக்கும், அவரது மனைவிக்கும் ஆனந்தம் தாளவில்லை. அந்த அடியார் மேலும் பேசத் தொடங்கினார். நீங்கள் சமைத்துள்ள இந்த களி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இன்னும் கொஞ்சம் இருந்தால் கொடுங்கள். நான் அடுத்த வேளைக்கு வைத்து சாப்பிட்டுக் கொள்கிறேன்’ என்று கூறினார்.
மூலவர் மேல் களி
சமைத்ததே கொஞ்சம்தான். நாம் சாப்பாட்டிற்கு என்ன செய்வது’ என்று சேந்தனார் எண்ணவில்லை. அடியாரின் ஆனந்தமே முக்கியம் என்று நினைத்து இருந்த மீதக் களியையும் வளித்தெடுத்து கொடுக்கும்படி மனைவியிடம் கூறினார். கணவரின் சொல்படியே மீதமிருந்த களியை பொட்டலமாக கட்டி அடியாரிடம் கொடுத்து விட்டு அன்றைய தினம் பட்டினிக் கிடந்தனர் தம்பதியர். மறுதினம் காலை வழக்கம் போல், தில்லை நடராஜப் பெருமான் கோவில் சன்னிதியை திறந்த அர்ச்சகருக்கு, அங்கு கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நடராஜரின் திருவாயிலும் திருமேனியெங்கும் களி அப்பி இருந்தது. கருவறை முழுவதும் சிதறியும் கிடந்தது.
யார் கருவறைக்குள் புகுந்தது. களியை யார் நடராஜரின் மேனியில் அப்பியது என்று தெரியாமல் பதற்றம் அடைந்தார். இது பற்றி ஊர் முழுவதும் தெரியவந்தது. பின்னர் இந்த பிரச்னையை அரசரிடம் கொண்டு சென்றனர். அவர்கள் கூறியதை கேட்ட அரசருக்கு அதிர்ச்சி ஏற்படவில்லை, மாறாக ஆச்சரியம் ஏற்பட்டது. ஏனெனில் முன்தினம் இரவு அரசனின் கனவில் தோன்றிய சிவபெருமான், ‘நீ தினமும் எனக்கு படைக்கும் உணவை விட, இன்று சேந்தனார் என்ற தொண்டன் கொடுத்த களி, அமிர்தம் போல் இருந்தது’ என்று கூறியது அரசனுக்கு நினைவுக்கு வந்தது. 

அதுவரை ஏதோ கனவு என்று நினைத்திருந்த அரசன் இப்போது, அது நிஜம் என்பதை உணர்ந்து கொண்டான். உடனடியாக சேந்தனார் யார் என்றும், அவரை தேடி கண்டு வரும்படியும் பணியாளர்களுக்கு உத்தரவிட்டான். ராஜாங்க பணியாளர்கள், சேந்தனாரை தேடிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் சிதம்பர நடராஜ பெருமானுக்கு தேர் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தன. விழாவில் அரசரும், மக்களும் கலந்து கொண்டனர். சேந்தனாரும் அந்த விழாவில் ஓரிடத்தில் நின்று கொண்டிருந்தார் மக்களோடு மக்களாக. ஆனால் அவர்தான் சேந்தனார் என்பது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அப்போது முன்தினம் பெய்திருந்த மழையின் காரணமாக, சென்று கொண்டிருந்த தேரின் சக்கரம் மண்ணில் புதைந்து அழுந்தி நின்று போயின.
திருப்பல்லாண்டு
தேர் மண்ணில் அழுந்தி உருள மறுத்தது அனைவருக்கும் இது ஏதோ ஒரு அபசகுனம் என் எண்ணினர். ஆனால், இறைவன் நடத்தும் விளையாட்டு இது என்று யாருக்கும் தெரியவில்லை. மன்னனின் படையும் ஊர்மக்களும் எவ்வளவு முயன்றும் தேர் சக்கரத்தை மண்ணில் இருந்து விடுவிக்க முடியவில்லை. யானைகள் முட்டித் தள்ளிய போதும், தேரானது இம்மியளவும் உருளவில்லை. இதனால் அரசரும், மக்களும் செய்வதறியாது திகைத்து நின்றனர். அந்த நேரத்தில், ‘சேந்தனாரே! நீர்  பல்லாண்டு பாடுக' என்று வானிலிருந்து ஒரு அசரீரி ஒலிக்க, இது  அனைவருக்கும் கேட்டது.
இது இறைவனின் திருவிளையாடல் என்று அப்போதுதான் அனைவரும் அறிந்து கொண்டனர். இறைவனின் அசரீரிக் குரலைக் கேட்ட சேந்தனாரோ, ‘இறைவா! அடியேன் என்ன பாடுவது?, எனக்கு பதிகம் பாடத் தெரியாதே!’ எனும்போதே தன்னையுமறியாமலே பாடலை பாடிக் கொண்டிருந்தார்.
‘மன்னுகதில்லை வளர்க நம்பக்தர்கள் வஞ்சகர் போயகல’ என்று தொடங்கி, ‘பல்லாண்டு கூறுதுமே’ என்று பதிமூன்று பாடல்களை பாடி முடித்து தேரின் வடத்தைப் பற்றினார்..
இந்த பாடல்களை கேட்டு மனமகிழ்ந்த இறைவன், மண்ணில் புதைந்திருந்த தேர் சக்கரத்தை விடுவித்தார். தேர் நகரத் தொடங்கியது. அதுவும் வெகு சுலபமாக நகரத் தொடங்கியது. தேரை பஞ்சு மூட்டையை இழுத்துச் செல்வது போல் பக்தர்களின் கரவொலியில் நகன்று நிலை வந்து சேர்ந்தது. 
திருவிளையாடல்
அதுவரை நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மன்னன், சேந்தனாரிடம் நேராக சென்று, ‘தங்கள் வீட்டில் விருந்துண்டது அந்த ஈசன்தான். என் கனவில் தோன்றிய இறைவன், நீங்கள் கொடுத்த களி அமிர்தத்தை விட சுவையாக இருந்ததாக என்னிடம் வந்து கூறினார் என்று சொன்னார். நீங்கள் தான் சேந்தனார் என்பதையும் இறைவன் எனக்கு காண்பித்து கொடுத்து விட்டார் என்று கூறி தனது மகிழ்ச்சியைக் கூறி அவரை வணங்கிக் கொண்டார். இறைவனே தன் வீட்டிற்கு வந்து களியை உண்டது கேட்டு சேந்தனாரின் உள்ளம் பூரித்துப் போனது. சேந்தனாரின் வீட்டிற்கு சிவதொண்டராக சென்று சிவபெருமான் முதன் முதலில் களி சாப்பிட்ட தினம் ‘திருவாதிரை திருநாள்’ ஆகும். ஆகையால் தான் திருவாதிரை திருநாளில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தின் போது தில்லை நடராஜருக்கு, களி நைவேத்தியம் படைக்கப்படுகிறது.
திருவாதிரை நோன்பு
திருவாதிரை நோன்பு  என்பது திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நிறைமதி நாளில் உபவாசம் இருந்து நோற்கும் ஒரு நோன்பாகும். அத்துடன், திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய பத்துத் தினங்களின் இறுதி நாளாகவும் மார்கழித் திருவாதிரை அமைந்திருக்கின்றது. சிவனுக்குரிய நட்சத்திரம் திருவாதிரை ஆகும். இவ்விரதம் சிவனுக்கு மிகவும் உகந்தது. இதனை ஒட்டியே சிவபெருமானை ஆதிரையின் முதல்வன் என்றும் ஆதிரையான் என்றும் கூறுவர்.
ஆருத்ரா தரிசனம்
மார்கழி மாதம் தஷிணாயனத்தின் இறுதி மாதமாகும். மார்கழி மாதத்தில் தில்லைச் சிதம்பரத்தில் கோவில் கொண்டருளிய நடராஜப் பெருமானைத் தரிசிக்க தேவர்கள் ஒன்றுகூடுவதாக ஐதீகம் உண்டு.
தேவர்களுக்கு இம்மாதம் அதிகாலைப் பொழுதாகும். இக்காலத்தில் (வைகறையில்) சுவாமியைத் தரிசனம் செய்வது உத்தமமாகக் கருதப்படுகின்றது. அக்காலத்தைப் பிரம்ம முகூர்த்தம் என்றும் அழைப்பர்.
மார்கழி மாதம் திருவாதிரை நாளன்று நடராசருக்குச் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். அவற்றுள் சிதம்பரத்தில் நடப்பது மிகவும் சிறப்புடையது. திருவாதிரை தினத்தில் தில்லை நடராஜப் பெருமான் ஆரோகணித்து தேரில் வீதி வலம் வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். இதை ஆருத்ரா தரிசனம் செய்வதற்காக செல்வர். ஆருத்ரா என்பது ஆதிரையைக் குறிக்கும் சொல். இக்காட்சியியைக் கண்டு தரிசிக்க பிறநாடுகளில் இருந்தும் அடியார் கூட்டம் வருடந்தோறும் இங்கு வருவது வழக்கம் இருக்கிறது. சிதம்பரம் பஞ்சபூதத் தலங்களில் ஆகாயம் என்றும் நடராஜப் பெருமானைத் தரிசிக்க முத்தி கிடைப்பதாகவும் சொல்லப்படுகின்றது. சைவர்களுக்கு மார்கழி மாதம் திருவாதிரை திருவெம்பாவை நோன்பினாலும், விநாயகர் சஷ்டி விரதத்தாலும் பெருமை பெறுகின்றது.
சைவர்களுக்கு மட்டுமல்லாமல் வைஷ்ணவர்களுக்கும் இம்மாதம் சிறப்புக்குரியது. சுவர்க்க வாயிலில் ஏகாதசி விரதம் இம்மாத்திலேயே கடைப்பிடிக்கப்படுகின்றது. கண்ணன் கீதையில், 'மாதங்களில் நான்
மார்கழி' என்று கூறியுள்ளார். ஆண்டாளும் தனது திருப்பாவையில் 'மார்கழி மாதத்து மதி நிறைந்த நன்னாள்' என வர்ணிக்கின்றாள். இதனை சிறப்புடைய மார்கழி மாதத்து ஆதிரை நாள் என்று அழைக்கப்படும்.
சிதம்பர சிறப்பு
தாருகா வனத்து முனிவர்கள் சிவபெருமானை நிந்தித்து ஒரு பெருவேள்வி நடத்தினர். சிவனார் பிச்சாடனர் வேடமேற்று பிச்சை எடுக்க முனிவர்களின் இல்லங்களுக்குச் சென்றார். முனிபத்தினிகள் தம்மை மறந்து பிச்சாடனராகிய சிவபெருமான் பின்னே செல்லலாயினார். இதனால் வெகுண்ட முனிவர்கள் வேள்வித்தீயில் மதயானை, முயலகன், உடுக்கை, மான், தீப்பிழம்பு என்பவற்றைத் தோற்றுவித்து சிவனின் மீது ஏவினர். சிவனார் மதயானையைக் கொன்று, அதன் தோலை அணிந்தார். மற்றவைகளைத் தானே தரித்துக் கொண்டு முயலகன் மீது வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி நடனமாடி, முனிவர்களுக்கு உண்மையை உணர்த்தினார். இதுவே ஆருத்திரா தரிசனம் என்பர்.
ஆனந்த நடனம் கண்ட பதஞ்சலி முனிவர்
உலக இயக்கத்திற்கு காரணியாக விளங்குவது இறைவனின் இயக்கமே. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களின் வாயிலாக உலகை அவன் இயக்கச் செய்து திருநடனம் அருளுகின்றான். அவனின் ஒவ்வொரு அசைகின்ற அசைவினால்தான் இவ்வுலகம் இயங்குகிறது என்பது புராணங்களே எடுத்துத்தரும் உண்மைகள். எனவேதான் *"அவனின்றி அணுவும் அசையாது"*  ( அவன் இல்லாது எதுவுமே அசைவதில்லை.) என சொல்கிறோம். 
சிவபெருமான் நூற்றியெட்டு நடனங்கள் புரிந்திருக்கிறார். அவற்றுள் நாற்பத்தெட்டு நடனங்கள் ஈசன் தனியாக ஆடியது. இந்நடனங்களில் மிக சிறப்பு வாய்ந்த நடனம் திருவாதிரைத் திருத் தினத்தன்று சிவபெருமான் ஆடிய தாண்டவமாகும். தில்லை கொண்ட  சிதம்பர நடராஜர் கோவிலில் மார்கழி மாத திருவாதிரை தினத்தில் நடராஜர் நடன கோலத்தில் காட்சியளிப்பது *ஆருத்ரா தரிசனம்* என்று அழைக்கப்படுகிறது. இந்த தினத்தில் தில்லை நடராஜரின் திருநடனத்தை காண்பதற்கு கோடிக்கண்கள் பத்தாது.
மார்கழி மாதம் என்பது தேவலோகத்தவர்களுக்கு வைகறை (அதிகாலை) பொழுதானதாகும். இந்த நேரத்தில் காலைக் கடன்களை முடித்து நீராடி, இறைவனை தரிசிப்பது சிறப்பு வாய்ந்தது. எனவேதான் மார்கழி மாதத்தில் நடைபெறுகின்ற திருவாதிரை ஆருத்ரா தரிசனத்தைக் காண தேவ லோக தேவர்கள் அனைவரும் சிதம்பர நகருக்கு வருவார்கள். 
"ஆருத்ரா" என்றால் நனைக்கப்பட்டவை எனப் பொருள். பதஞ்சலி முனிவர் மற்றும் வியாக்ரபாதர் ஆகிய  இருவரும், திருவாதிரை திருத் தினத்தில் சிவபெருமான் ஆடிய நடனத்தை காண வேண்டுமென்பதற்காக தவத்தை மேற்க் கொண்டனர். இவர்களின் தவத்திற்கு பணிந்த ஈசன், தில்லையில் மார்கழி மாதம் திருவாதிரை தினத்தன்று தனது திருநடனத்தைக் காட்டி, கருணையால் இரு முனிவர்களையும் நனைத்த நிகழ்வே "ஆருத்ரா தரிசனம்" ஆகும்.
ஒருசமயம் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த மாலன், திடீரென மகிழ்ச்சியில் திளைக்கத் தொடங்கினார். அவர் முகத்தில் தென்பட்ட சந்தோஷமானது பவுர்ணமி நிலவை போன்று பளிச்சிட்டன.
தன்மீது பாந்தமாக படுத்திருக்கும் மாலன் இன்று ஏன் இவ்வளவு மகிழ்வு கொள்கிறார் என நினைத்த ஆதிசேஷன், அதற்கான காரணத்தை மாலனிடமே கேட்டார். திருவாதிரை திருநாளன்று சிழபெருமான் நடராஜராக ஆடியத் திருத் தாண்டவத்தை நினைத்துப் பார்த்தேன். மகிழ்ச்சியானேன் என்றார் மாலன். பரந்தாமனை இப்படி மகிழ்ச்சி காணச்செய்த அந்தத்  திருநடனத்தை,  தானும் காண வேண்டுமே என நாட்டம் கொண்டான் ஆதிசேஷனும். தன் ஆவலை பரந்தாமனிடம் கூற , மாலன் ஆசி கூறி போய் வர அனுமதிக்கிறார். ஆதிசேஷன் பாதி முனிவவுருவமும், பாதி சர்ப்பவுருவமுமாக மாறி பதஞ்சலி முனிவர் ஆனார். பின்னர் நடராஜரின் திருநடனத்தைக் காண வேண்டி, ஈசனை நினைத்து தவமியற்றினார். பதஞ்சலி முனிவரின் தவம் உச்சஸ்தானம் வரை நீண்டியது. அதனால் அவர் தன்னை (தன் நிலை) மறந்து தவத்திலிருந்தார்.
அப்போது,..... பதஞ்சலி!  பதஞ்சலி!! என சன்னமான குரலில் அழைத்தார் ஈசன்.  குரலொலி கேட்டு கண்விழித்தார் பதஞ்சலி முனிவர். கண் திறந்த போது தன் முன்னே சர்வேசபெருமான் நிற்பதைக்.கண்டார். ஆனந்தித்தார். தாழ் பணிந்தார். தொழுதேத்தினார். 
தவத்தின் நோக்கத்தைக் கூற எத்தனித்த முனிவனை.... கைகளால் தளர்த்தி ஆசீர்வதித்த ஈசன்,..........அறிந்தவை அவருக்கா தெரியாது போயிற்று. ஆளும் இறைவனுக்கு ஆளுகையின் திண்ணம் தெரியாதா என்ன?" 
ஈசனே கூனினார்.....
பதஞ்சலியே! உன்னைப் போன்றே, வியாக்ர பாதனும் திருவாதிரை திருநடனம் காண வேண்டி, என்னை நினைத்து உன் போலும் கடுந்தவம் செய்கிறான். எனவே நீங்களிருவரும் தில்லை வந்து திருவாதிரை திருநடனம் கண்டு மகிழ்வீராக! எனக்கூறி மறைந்தார்.
ஈசன் கூறியபடி, பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதரும்  தில்லை பதிக்குச் சென்றனர். அங்கு வைத்து மார்கழி மாதம் திருவாதிரை நாளன்று தன் திருநடனத்தை அவர்களிருவருக்கும் காட்டியருளினார் சிவபெருமான். இந்தத் தரிசனமே *ஆருத்ரா தரிசனம்* என அழைக்கப் பெறுகிறது. எனவேதான்  தில்லை சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று, ஈசனின் திருநடனத்தைக் காண்பது விஷேசம். இந்தத் திருவாதிரை தினத்தில் தில்லை சிதம்பரம் சென்று அங்கு நடனத்தைக்காணச் செல்லுங்கள். இத்திருநடனத் தரிசனத்தைக் காண்பீராவர்க்குஇப்பிறவியில் ஏற்பட்ட பாவங்கள் விலகும்! இன்பமான வாழ்வு அமையும்!. முக்திக்கு வழி கோலும்.


- கோவை கு.கருப்பசாமி

பலா’பலன் !! (மிதுன ராசிக்கு உகந்த விருட்சம் )

அருள்மிகு பூவணநாதர் திருக்கோயில் , திருப்புவனம் - சிவகங்கை

மூலவர் : புஷ்பவனேஸ்வரர், பூவணநாதர்

அம்மன்/தாயார் : சௌந்தரநாயகி, மின்னனையாள்

தல விருட்சம் : பலா

தீர்த்தம் : வைகை, மணிறகர்ணிகை

ஆகமம்/பூஜை : இங்கு தினமும் 6 கால பூஜை நடக்கிறது.

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருப்பூவணம்

ஊர் : திருப்புவனம்

பாடியவர்கள் : அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர்

🅱 தேவாரப்பதிகம்:🅱

தன்னடியார்க்கு அருள்புரிந்த தகவுதோன்றும் சதுர்முகனைத் தலையரிந்த தன்மை தோன்றும் மின்னனைய நுண்ணிடையாள் பாகந் தோன்றும் வேழத்தின் உரிவிரும்பிப் போர்த்தல் தோன்றும் துன்னியசெஞ் சடைமேலோர் புனலும் பாம்பும் தூயமா மதியுடனே வைத்தல் தோன்றும் பொன்னனைய திருமேனி பொலிந்து தோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே. திருநாவுக்கரசர்

♻ தேவாரப்பாடல் பெற்ற பாண்டியநாட்டு தலங்களில் இது 11வது தலம்.

முக்கனிகளுள் ஒன்றான பலா, மிதுன ராசிக்காரர்களுக்குப் பலனும் பலமும் தரும் முக்கியமான விருட்சம் ! மிதுன ராசி, புதன் கிரகத்துடன் தொடர்புகொண்டது. எனவே, மிதுன ராசிக்காரர்கள், புதன்கிழமை பிறந்தவர்கள் மற்றும் மே 21 முதல் ஜூன் 20-ஆம் தேதி வரை பிறந்தவர்களுக்கு அதிக அளவு பலன் தரக்கூடியது பலா மரம். இவர்கள் அனைவரும் தங்கள் வீட்டில் பலா மரத்தை நட்டு வளர்க்கலாம்.

புஷ்பவனகாசி, பிதுர்மோக்ஷபுரம், பாஸ்கரபுரம், லட்சுமிபுரம், பிரமபுரம், ரசவாதபுரம் எனப் போற்றப்படும்
சவுந்திரநாயகி சமேத புஷ்பவனேஸ்வரர் பல அற்புதங்களை நிகழ்த்தியவர். பூவனம் என்பதால் இவ்வூர் திருப்புவனம் ஆயிற்று.

வழிபடுவோர் வினைகளை தீர்ப்பவராக புஷ்பவனேஸ்வரர் விளங்குகிறார். மூர்த்தி, தலம் தீர்த்தம் மூன்றிலும் பெருமையுடைய இக்கோயிலின் ஸ்தல விருட்சமாகப் போற்றப்படுகிறது பலா.

சிவகங்கை மாவட்டம் மதுரையிலிருந்து 18 கி.மீ., தொலைவில் ராமேஸ்வரம் செல்லும் வழியில்  திருப்புவனத்தில் உள்ளது இந்தத் திருக்கோயில்.

திருப்புவனத்தில் பொன்னனையாள் என்ற நடனமாது வாழ்ந்து வந்தார். தனது கலை ஞானத்தால் ஈட்டிய செல்வத்தை எல்லாம் சிவனடியார்களுக்கு அமுது படைத்தே காலம் கழித்தாள். சிவ பக்தையான அவளுக்கு அவ்வூரில் உள்ள பூவணநாதரை சொக்க தங்கத்தில் வடிக்க ஆசை இருந்தது.

இவளது ஆசையை நிறைவேற்ற சிவனே சித்தராக மாறி இவள் வீட்டிற்கு சென்று வீட்டிலுள்ள செம்பு, ஈயம், பித்தளை பாத்திரங்களை இரவில் நெருப்பிலிட்டால் பொன்னாக மாறும் என கூறினார்.

பொன்னனையளும் அன்று இரவு செம்பு, ஈயம், பித்தளை பாத்திரங்களை நெருப்பிலிட அவை பொன்னாக மாறின. அந்த பொன்னை கொண்டு பூவனநாதரை உருவாக்கினாள்.

அப்போது பூவணநாதர் திருமேனி அழகில் சொக்கி, அவர் கன்னத்தை கிள்ளி பொன்னனையாள் முத்தமிட்டாள். அவள் பதித்த நகக்குறி இன்றும் இங்குள்ள உற்சவரிடம் காணப்படுகிறது.

🅱 புஷ்பமாக மாறிய அஸ்தி  :🅱

புராண காலத்தில் தர்மயக்ஞன் என்பவன் தன் தந்தையின் அஸ்தியை காசியில் இருந்து ராமேஸ்வரம் கொண்டு செல்லும் வழியில் இத்தலத்தில் சற்று ஓய்வு எடுக்கும் போது அவனுடன் வந்தவர் கலசத்தை திறந்து பார்க்க புஷ்பமாக இருந்ததாம். தான் பார்த்த இந்த காட்சியை தர்மயக்ஞனிடம் அப்போது அவன் கூறவில்லை. ஓய்வு முடிந்து ராமேஸ்வரம் சென்று கடலில் அஸ்தியை கரைக்க கலசத்தை திறந்த போது அஸ்தியாகவே இருந்தது.

இதனால் அதிர்ச்சியுற்ற உடன் வந்தவன், திருப்பூவனத்தில் தான் பார்த்த காட்சியை தர்மயக்ஞனிடம் சொல்ல, மறுபடியும் அஸ்தி கலசத்துடன் அங்கிருந்து திருப்பூவனத்திற்கு வந்தனர். அங்கு வந்து பார்த்த போது கலசத்தில் அஸ்தி புஷ்பமாக மாறி இருந்ததாம்.

காசியிலும், ராமேஸ்வரத்திலும் அஸ்தியாக இருந்தது இங்கு புஷ்பமாக இருந்ததால் காசி நகரத்தை விட 16 மடங்கு புண்ணியம் தரும் இடமாக இத்தலம் போற்றப்படுகிறது. இதை "காசிக்கும் வீசம் அதிகம்' எனும் சமயபெரியோர்கள் கூற்றிலிருந்து அறியலாம்.

காசிக்கு செல்ல முடியாதவர்கள் இங்குள்ள வைகையில் அஸ்தியை கரைத்து மோட்ச தீபம் போடும் வழக்கம் இன்றளவும் நடந்து வருகிறது.

Ⓜ வழி விட்ட நந்தி:Ⓜ

திருஞான சம்பந்தர் திருப்புவனத்திற்கு வந்த போது ஆற்றுமணல் எல்லாம் சிவலிங்கங்களாக காட்சியளித்தனவாம். அதன் மீது கால் வைக்க அஞ்சிய சம்பந்தர் வைகையாற்றின் மறுகரை மீதிருந்தபடியே சிவனை பாடினார். அப்போது நந்தி லிங்கத்தை மறைத்திருந்தது.

உடனே சம்பந்தர் சிவனை வேண்ட, சம்பந்தருக்காக நந்தியை சற்று விலகி தன்னை மறைக்காமல் இருக்கும்படி சிவன் கேட்டு கொண்டாராம். அதன்படி நந்தி சற்று விலகி இருப்பது தனிச்சிறப்பாகும்.

பலாவின் தாயகம் இந்திய தேசம்தான். கிறிஸ்து பிறப்புக்குச் சுமார் 300 வருடங்களுக்கு முன் வாழ்ந்த கிரேக்க வரலாற்று அறிஞர் தியோபிராஸ்டிஸ் என்பவர், 'இந்தியாவில் உள்ள ரிஷிகள், பலாப்பழத்தை உணவாகச் சாப்பிட்டு வந்தனர்' என்று தனது பயணக்குறிப்பில் தெரிவித்துள்ளார். இத்தனை பழைமை வாய்ந்த பலா, மருத்துவக் குணங்களும் கொண்டது!

பலா இலையைப் பக்குவப் படுத்திச் சாப்பிட்டால் பெரும் வயிறு, படை முதலானவை நீங்கும். இலைக் கொழுந்தை அரைத்துச் சிரங்குகளில் பூசிக்கொள்ள, உடனே குணம் பெறலாம்.

இதன் இலைகளை எரித்து, அந்தச் சாம்பலை ஒரு சிட்டிகை எடுத்து தினமும் காலையில் சாப்பிட்டு வர, அல்சர் மற்றும் வயிற்றுப் புண்கள் குணமாகும்.

நெரிக்கட்டிகள், கழலைக் கட்டிகள்மீது பலாவின் பால், பிசினுடன் சிறிது காடி (வினிகர்) கலந்து பூசினால், தானாகவே பழுத்து உடையும்.

பலா வேர் மற்றும் இலையைச் சேர்த்து அரைத்து இரண்டு கிராம் தேனில் கலந்து, பெண்கள் சாப்பிட்டுவர, தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.

மாலைக்கண் நோய், காயங்கள், சொறி, சிரங்கு, தேமல், கல்லீரல் வீக்கம், அஜீரணம், வாயுத் தொல்லை, விஷப்பூச்சிக் கடி, பல் வலி போன்ற பல நோய்களை நீக்கிக் குணமாக்கும் வல்லமை பலாவுக்கு உண்டு.

பலவு என்றும், வேர்ப் பலா, ஆலடிப்பலா, கோட்டுப் பலா என்றும் சங்க இலக்கியங்களில் பலாவைப் பற்றிக் கூறப்பட்டுள்ளன.

திருப்புவனம் பூவணநாதர் கோயிலில் மட்டுமின்றி     சீர்காழி தாடாளன் கோயில், கொல்லிமலை ஸ்ரீஆறுமுகப்பெருமான் ஆலயம், திருச்சி திருமங்கலம் ஸ்ரீசமயா தீஸ்வரர் ஆலயம், குற்றாலம் ஸ்ரீகுரும்பலா ஈசர் கோயில் ஆகிய தலங்களிலும் பலா மரம் தல விருட்சமாகப் போற்றப்படுகிறது.

🅱 தாயாரை தரிசித்தால் திருமண தடை விலகும் !🅱

4 யுகங்களைக் கடந்த கோயில், ரசவாதம் செய்த படலம் எனும் 36-வது திருவிளையாடல் நிகழ்ந்த தலம், தேவாரப்பாடல் பெற்ற 201 வது தேவாரத்தலம் எனும் பெருமைமிகு திருக்கோயில்.

புஷ்பவனக் காசி என்று போற்றப்படும் இந்தத் தலத்தில் பித்ருக்களுக்கான கடமையைச் செய்வது கூடுதல் பலனைத் தரும்.  இந்தத் தலத்தில் கோபுர விநாயகர், குடைவரை விநாயகர், அனுமதி பெற்றுக் காரியத்தில் இறங்க அனுக்ஞை விநாயகர், மகா கணபதி, இறந்த முன்னோரின் ஆத்மா சாந்தி பெறவும், யாகம் சிறப்புறவும் அருளும் விநாயகர்கள், சூரியனார் வழிபட்ட பாஸ்கர விநாயகர், இரட்டை விநாயகர் உட்பட 14 விநாயகர்கள் அருள்பாலிக்கின்றனர்.

சூரியனின் சாபம் நீங்கப் பெற்ற தலம் என்கிற பெருமையும் திருப்புவனம் தலத்துக்கு உண்டு.

விநாயகருக்கு அருகில் சூரிய தீர்த்தம் உள்ளது. இந்தத் தீர்த்தத்தைத் தலையில் தெளித்துக் கொண்டு, பாஸ்கர விநாயகருக்கு அருகம்புல் சமர்ப்பித்து வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கி, சவுபாக்கியத்துடன் வாழலாம் என்பது நம்பிக்கை.

சௌந்தரநாயகி தாயார், பக்தர்களின் குறைகளைப் பரிவுடன் தீர்த்து வைப்பவள். ஒன்பது வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து வந்து தாயாரை அர்ச்சித்துத் தரிசித்து, ஸ்தல விருட்சமான பலாமரத்தையும் வணங்கி வழிபட்டால், ஆயுள் விருத்தியாகும்; திருமணத் தடை அகலும்; புத்திர பாக்கியம் கிடைக்கும்; கல்வியில் சிறந்து விளங்க பெறுவர்.