Saturday 23 September 2017

உங்கள் பி.எம்.ஐ எவ்வளவு?


ல்லியோ, பருமனோ, எது சரியான உடல் அளவு என்று நிர்ணயிக்க உதவுவது பாடி மாஸ் இண்டெக்ஸ் (பி.எம்.ஐ). அதாவது, நம் உயரத்துக்கு ஏற்ற எடையில் இருக்கிறோமா எனக் கண்டறிய உதவும் கணக்கீடு. 15 நாட்களுக்கு ஒரு முறை பி.எம்.ஐ அளவீட்டை சரிபார்த்துக்கொண்டோம் என்றால், எந்த நோயும் நம்மை சீக்கிரம் நெருங்குவதைத் தடுக்க முடியும்.

பி.எம்.ஐ பரிசோதனையை எப்படிச் செய்வது?
பி.எம்.ஐ ஃபார்முலா
உயரம் பொதுவாக செ.மீட்டரில்தான் அளவிடப்படும்.
ஒரு மீட்டர் என்பது 100 செ.மீ.
165 செ.மீ உயரம் இருந்தால், அதை மீட்டருக்கு மாற்றும்போது 165-ஐ 100 ஆல் வகுத்தால், 1.65 மீட்டர் என்று வரும்.
ஒருவரது உயரம் 1.65 மீட்டர், எடை 73 கிலோ என்றால், அவரது பி.எம்.ஐ கணக்கீடு என்பது,
 பி.எம்.ஐ = 73/ (1.65 x 1.65) அவரது பி.எம்.ஐ எண்: 26.81

No comments:

Post a Comment