Saturday 10 February 2018

அருள்மிகு வீரட்டேசுவரர் திருக்கோயில், வழுவூர் – நாகப்பட்டினம்

அஷ்டவீரட்டத் தலங்களில் கஜசம்காரம் நிகழ்ந்த தலம் ; தேவார வைப்புத் தலம் ; திருமாலின் வராக அவதார அம்சம் உடைய வராகி பூஜித்த கஜசம்ஹாரர், கிருத்தி வாசர், கரி உரித்த பெருமான் ஸ்தலம்.

🍁🌸🍁🌸 BRS🍁🌸🍁🌸🍁


தொலைபேசி எண் :  +91- 99437 98083

🌀🌱🌀🌱 BRS🌀🌱🌀🌱🌀

மூலவர் : கிருத்திவாசர் (வீரட்டேசுவரர்)

அம்மன் / தாயார் : பாலகுராம்பிகை, இளங்கிளைநாயகி

தலவிருட்சம் : தேவதாரு, வன்னி

தீர்த்தம் : பாதாளகங்கை, பஞ்சமுக தீர்த்தம்.

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : தாருகா வனம்

ஊர் : திருவழுவூர்

பாடியவர்கள்: திருஞானசம்பந்தர் ( வைப்புத்தலம்)

🅱 வைப்புத்தலப் பாடல்கள் : 🅱

 1. உஞ்சேனை மாகாளம் (6-70-8),

2. காவிரியின் கரைக்கண்டி (6-71-2).

🅱 திருவிழாக்கள் :🅱

🍁 மாசிமகம் - யானை சம்கார ஐதீக நிகழ்ச்சி -10 நாட்கள் திருவிழா - தினமும் இரண்டு வேளை வீதியுலா - 9ம் நாள் யானை சம்கார நிகழ்ச்சி - 10 ம்நாள் தீர்த்த வாரி - இத்திருவிழா இத்தலத்தில் நடைபெறும் மிகச்சிறப்பான திருவிழா ஆகும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.

🍁 மார்கழி - திருவாதிரை - 3 நாட்கள் திருவிழா

🍁 புரட்டாசி - நவராத்திரி திருவிழா - 10 நாட்கள் திருவிழா

🍁 கார்த்திகை சோம வாரங்கள் இத்தலத்தில் விசேஷமாக இருக்கும்,

🍁 இரவு தினந்தோறும் யந்திர பிரதிஷ்டைக்குப் பூஜை நடைபெறுகிறது. அமாவாசை தோறும் சுவாமி தீர்த்தம் கொடுத்தருள்கிறார்.

🍁 ஆடிப்பூரம், பௌர்ணமி பூஜை ஆகியவை இத்தலத்தில் வெகு விமரிசையாக நடக்கும். கந்தர் சஷ்டி, மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியவை தலத்தின் சிறப்பான விசேச நாட்கள் ஆகும்.

🍁 மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும்.

🍁 வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி,பொங்கல், தமிழ்,ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடக்கும்.

🅱 தல சிறப்பு:🅱

🌱 இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

💧 அட்ட வீரட்டத் தலங்களில் இது 6 வது தலம்.

🌱 சிவபெருமானின் உள்ளங்கால் தரிசனம் இத்தலத்தில் மட்டுமே பெறமுடியும்.

💧 சப்தகன்னியரில் வராகி வழிபட்ட தலம்.

🌱 அட்ட வீரட்டத்தலம்; எனினும் பாடல் பெற்ற தலத்தில் இஃது இடம் பெற வில்லை.

💧 இத்தலத்துக்குரிய கஜசம்ஹார மூர்த்தியும், அவர் எழுந்தருளியுள்ள ஞான சபையும் சிறப்பானவை.

🌱 இது பிப்பிலவனம், சமீவனம், தாருகாவனம், பதரிகாவனம் ஆகிய நான்கு வனங்களால் சூழப்பட்ட வீரட்டானம் என்று சொல்லப்படுகிறது.

💧 ஜேஷ்டா தேவி, நாகர்கள், பிடாரி, சப்த மாதாக்கள் வழிபட்ட லிங்கங்கள் பைரவர் சந்நிதிகள் உள்ளன.

🌱 கஜசம்ஹார மூர்த்தி அழகான மூர்த்தம்; அழகிய வேலைபாடமைந்தது.

💧 அம்பாள் திருமேனி - இடுப்பில் முருகனுடன் காட்சி. முருகன் ஒருவிரலை பக்கத்திலுள்ள மூர்த்தியைச் சுட்டும் நிலையில் இருப்பதும், அம்பிகை ஒரு பாதத்தைத் திருப்பி நடந்து செல்ல முயலும் அமைப்பில் இருப்பதும் கண்டு மகிழத்தக்கது. இவ்வமைப்பு தலபுராணம் தொடர்புடையது.

🌱 மூலவர் - சுயம்பு மூர்த்தி; நாகாபரண அலங்காரத்தில் அழகு மிளிர காட்சித் தருகிறார்.

💧 சுவாமி மண்டபத்தில் அட்ட வீரட்டச் செயல்கள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.

🌱 மாசி மகத்தில் பெருவிழாவும், கஜசம்கார ஐதீக நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

💧 இக்கோயிலில் 10 க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளன.

🌱 இது சோழநாட்டுத் தலம்.

💧 சனீசுவரனுக்கு தனி சந்நிதி உள்ளது.

🌱 இங்கு சனீசுவரன் கையில் வில்லோடு இருக்கிறார் என்பது சிறப்பம்சம்.

🅱 திறக்கும் நேரம்:🅱

🔑 காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 🔑

🅱 பொது தகவல்:🅱

🌺 இங்குள்ள தீர்த்தத்தில் 5 கிணறுகள் உள்ளன. இதற்கு பஞ்சமுக கிணறு என்று பெயர்.

🔥 இத்தலத்தில் யானையை பிளந்து சிவபெருமான் வீரச்செயல் புரிந்துள்ளார்.

🌺 சனீசுவரனுக்கு இங்கு சாப நிவர்த்தி ஆன தலம்.

🔥 சிதம்பர ரகசியப் பிரதிஷ்டைபோல இங்கும் கஜசம்கார மூர்த்திக்கு பின்னால் யந்திர பிரதிஷ்டை உள்ளது.

🌺 முதலில் நந்தி, பின்பு குளம், அதன்பிறகு மூலஸ்தானம் என்று வித்தியாசமான கோயில் அமைப்பை இங்கு மட்டுமே காண முடியும்.

🔥 கஜ சம்கார மூர்த்தி உள்ள இடம் ஞானசபை ஆகும்.

🌺 கஜசம்கார நடனம் நவ தாண்டவத்தில் ஊர்த்துவ தாண்டவமாகப் போற்றப்படும் நடன சபையில் ஞானசபை என்று இது கூறப்படும்.

🔥 யானையைப் பிளந்து வீரநடனமாடி வரும் அப்பாவைப் பார்த்து அம்பாளின் இடுப்பில் இருக்கும் முருகப்பெருமான் அதோ அப்பா வருகிறார் என்று சுட்டிக் காட்டியபடி உள்ளார்.

🌺 48000 மகரிஷிகள் இத்தலத்தில் தவம் செய்து ஞானோதயம் பெற்றனர் எனக் கூறப்படுகிறது.

🔥 தீர்த்தங்களில் சுவாமி சந்நிதிக்கு எதிரே உள்ள ஈசான தீர்த்தம் அல்லது பாதாள கங்கை விசேசமானது.

🌺 பிரளய காலத்திலும் அழியாமல் வழுவியதாதலின் வழுவூர் என்று ஆனது. இதிகாசங்களில் இத்தலம் தாருகா வனம் என்று குறிப்பிடப்படுகிறது.

🔥 திருஞான சம்பந்தர் எட்டு வீரட்டங்களைக் குறிப்பிட்டு அருளியுள்ள திருப்பாடல்களில் இத்தலத்தை குறிப்பாக அருளியுள்ளார்.

🌺 இது தேவார வைப்புத்தலம் என போற்றப்படுகிறது.

🔥 இத்தல விநாயகர் செல்வ விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்புரிகிறார்.

🅱 பிரார்த்தனை:🅱  

🌸 அமாவாசை தோறும் சுவாமி சந்நிதியில் உள்ள தீர்த்தத்தில் சுவாமி தீர்த்தம் கொடுத்தருள்கிறார். அந்நாளில் இத்தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபடுவோர்க்கு புத்திர தோசம் நீங்கி நன்மக்கட்பேறு வாய்த்து வருகிறது.

🌸 திருமண வரம் , குழந்தை வரம் ஆகியவற்றை பக்தர்கள் இத்தலத்தில் வேண்டிக் கொண்டால் நிச்சயம் நிறைவேறுகிறது.

🌸 இத்தலத்தின் சிறப்பு மூர்த்தியான கஜசம்கார மூர்த்திக்கு பின்புறம் தெய்வீக யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அந்த யந்திரத்தை வழிபட்டால் பில்லி , சூன்யம், ஏவல், மாந்திரீகம் ஆகியவை விலகி நன்மை பயக்கும்.

🌸 இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் கிருத்திவாசரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும்.மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி , உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

🅱 நேர்த்திக்கடன்:🅱

🌻 அமாவாசை அன்று தீர்த்தத்தில் நீராடி விட்டு சுவாமிக்கு அர்ச்சனைசெய்து வழிபடுகிறார்கள்

🌻 கல்யாணவரம் வேண்டுவோர் கல்யாண மாலை சாத்துதல்,

🌻 சுவாமிக்கு சங்காபிசேகமும்,கலசாபிசேகமும் செய்யலாம்

🌻 அம்மனுக்கு புடவை சாத்துதலும், அபிசேகம் செய்தலும், சந்தனகாப்பு சாத்துதலும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது.

🌻 சுவாமிக்கு மா மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம்.

🌻 மேலும்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகிவற்றை செய்யலாம்.சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம். தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம்.வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.

🅱 தலபெருமை:🅱

Ⓜ கஜசம்கார மூர்த்தி : Ⓜ

♻ இத்தலத்தின் விசேச மூர்த்தி இந்த கஜசம்கார மூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள மூர்த்தி போல் வேறு எந்த கோயில்களிலும் கஜசம்கார மூர்த்தியைக் காண முடியாது.

♻ திருவடியை யானையின் தலைமேல் ஊன்றி அதன் தோலைக் கிழித்துப் போர்த்தும் நிலையில் பெரிய திருவுருவத்தோடு கஜசம்காரமூர்த்தி விளங்குகிறார்.

♻ அருகில் குழந்தையான முருகனை தன் இடுப்பில் வைத்துள்ள உமையவள் அச்சத்தோடு திரும்பும் நிலையில் நிற்கிறார். கையிலுள்ள முருகனோ தன் தந்தையை ஆட்காட்டி விரலால் சுட்டிக்காட்டுகிறார்.

♻ சிவனுக்கும், நந்திக்கும் இடையில் பஞ்சபிரம்ம தீர்த்தம் அமைந்துள்ளது எங்குமில்லாத தனிசிறப்பு.

♻ இத்தீர்த்தத்தில் நீராடினால் குழந்தைப்பேறு கிட்டும். ஆணவம் நீங்கினால், ஞானம் கிடைக்கும். அம்மன் சன்னதி முன்புள்ள சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடினால் கல்வியறிவு பெருகும்.

♻ சிதம்பரத்தில் சிதம்பர ரகசிய பிரதிஷ்டை உள்ளது போல் இங்கும் கஜசம்ஹார மூர்த்திக்கு பின்னால் யந்திர பிரதிஷ்டை உள்ளது. அம்பாள் இளங்கிளை நாயகி எனப்படுகிறாள்.

♻ பெருமான், உமையஞ்ச ஆனையை உரித்ததை இத்திரு உருவத்தில் காணலாம். சுவாமியின் உள்ளங்காலை பக்தர்கள் இத்தலத்தில் மட்டுமே இந்த மூர்த்தியிடம் மட்டுமே தரிசனம் செய்யலாம்.

♻ சம்காரமூர்த்தி இருக்கும் இடம் ஞான சபை ஆகும்.

Ⓜ யானை : Ⓜ

🌤 அதி உன்னதமான அறிவாற்றலுக்கும், அளவற்ற வலிமைக்கும், வீரத்துக்கும் அடையாளம். சைவ உணவை மட்டுமே உட்கொள்ளும் பழக்கம் உடையது. காட்டு விலங்கு ஆயினும் மனிதருடன் நன்கு பழகும் யானை,சில நேரம் மதம் தலைக்கேறி தன்னை வளர்த்தவனையே கொன்றும் விடுகிறது. நமது சமய வழிபாட்டில் அறிவின் சின்னமாக யானை போற்றப்படுகிறது.

🌤 இறைவன், அறிவை விளக்கி நிற்கும் கோலத்தில்-யானை மீது பவனி வருபவனாகக் காட்டப்படுகிறார்.

🌤 அவர், அறியாமையையும் அகந்தையையும் அழிப்பவராக இருக்கும்போது யானையின் தோலை உரித்துக் கொல்பவனாகக் காட்டப் படுகிறார். இதற்கு, ‘சிவபராக்ரமம்‘ என்ற நூலில் அருமையான வரலாறு காணப்படுகிறது.

Ⓜ சனிபகவான் : Ⓜ

🌀 சூரிய மண்டலத்தில் விக்கிரம ராஜாவோடு சனி பகவான் யுத்தம் செய்கிறார். இதில் விக்கிரமராஜா தோற்றுப் போய்விடுகிறார்.

🌀 இத்தீர்த்தத்தில் வந்து விழுகிறார். தீர்த்தக்குளத்தில் குளித்து விட்டு சுவாமியை வழிபடுகிறார். சுவாமி அவருக்கு அருள் பாலிக்கிறார். சனி பகவான் சிவபெருமானிடம் மன்னிப்பு கேட்கிறார். இத்தலத்தில் சனிபகவானுக்கு தனி சந்நிதி உள்ளது.இங்குள்ள சனிபகவான் கையில் வில்லோடு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

🅱 கோவில் அமைப்பு : 🅱

🔘 இராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது - கிழக்கு நோக்கியது. அழகான ராஜகோபுரம். கோயிலின் முன்பு பஞ்சமுக தீர்த்தம் எனப்படும் குளம் உள்ளது. விசாலமான உள் இடம்.

🔘 உள்ளே நுழைந்தால் நந்தியும்,முன்னால் விநாயகரும் உள்ளனர். அடுத்துள்ள உள்வாயிலைத் தாண்டினால் வீரட்டேஸ்வர சுவாமி தரிசனம்.

🔘துவார கணபதி, துவாரசுப்பிரம ணியரை வணங்கி, வாயில் நுழைந்ததும் கவசமிட்ட கொடிமரம் உள்ளது. கொடி மரத்து விநாயகர் உள்ளார்.

🔘 கொடிமரத்தின் வலதுபுறம் சஹஸ்ரலிங்கமும், வலக்கோடியில் நூற்றுக்கால் மண்டபமும் உள்ளன.

🔘 உள் வாயிலில் உள்ள துவார கணபதியையும்,சுப்பிரமணியரையும் வணங்கி, இருபுறமும் சுதையாலான துவாரபாலகர்களையும் தொழுது, சென்றால் முன் மண்டபத்தை அடையலாம்.

🔘 உள் பிராகாரத்தில் வலம் வரும் போது, வரிசையாக சண்டேசுவரர், விநாயகர், நால்வர், இரு கணபதிகள், தொடர்ந்து அறுபத்து மூவரின் மூல உருவங்கள்,தல விநாயகர் ஆகியோர் உள்ளனர்.

🔘 அடுத்து, ‘உமைமுருகுடையான் சந்நிதி’ உள்ளது. தொடர்ந்து ஜேஷ்டாதேவி, நாகர்கள், பிடாரி, சப்தமாதர் வழிபட்ட லிங்கங்கள்,பைரவர்கள் சந்நிதிகள் உள்ளன.

🔘 அடுத்து வள்ளி தெய்வயானை சுப்பிரமணியரும், பக்கத்தில் பாலசுப்பிரமணியரும், கஜலட்சுமியும் உள்ளனர்.இவற்றையடுத்து பிராகாரச் சுற்றில் விக்கிரமசோழன் அருள் பெற்ற வரலாறு,அழகான வண்ண ஓவியங்களாக எழுதப்பட்டுள்ளன. இந்த ஓவியங்களும் தற்போது அழிந்த நிலையில் உள்ளன.

🔘 தொடர்ந்து பிராகாரத்தில் சனிபகவான்,பைரவர், சூரியன், சந்திரன், நவக்கிரகங்கள் உள்ளன.

🔘 முன்மண்டபத்தில் வலப்பால் பிட்சாடனர் உருவம் உள்ளது. பெரிய அருமையான திருமேனி. பக்கத்தில் மோகினி உருவம் உள்ளது. வாயில் நுழைந்ததும் வலப்பால் ‘கஜசம்ஹாரமூர்த்தி’ தரிசனம் தருகின்றார்.

🔘 இம்மூர்த்தி மிகவும் அழகு வாய்ந்ததாக உள்ளது. யானையின் தோலுரித்து, யானையை அழித்து, சிரசின் மீது சுற்றியவண்ணம், இறைவன் வீர நடனமாடுகின்றார். யானையின் வால்புறம் சிரசின் மீது தெரிகிறது. திருமேனி ஓங்கார வடிவில் அமைந்துள்ளது. கைவீசி திருவடிகள் முருக்கியவாறு, மடித்து, திருவடியின் உட்புறம் (புறங்கால் பகுதி) தெரியுமாறு நடனமாடுவது அற்புதம்.

🔘 புறங்கால் தரிசனத்தை இங்கு, இம்மூர்த்தியில் கண்டு தொழுது களிக்க முடிகிறது. இத்திருமேனிக்குப் பக்கத்தில் அம்பாளின் திருமேனி அதியற்புதத்தோடு திகழ்கின்றது. ஒரு பாதத்தைச் சற்று திருப்பி, நடந்து செல்ல முயலும் கோலத்தில் உள்ளது. அம்பாளின் இடுப்பில் முருகப்பெருமான் காட்சி தருகின்றார். அவருடைய ஒரு விரல் பக்கத்தில் உள்ள மூர்த்தியைச் சுட்டிக் காட்டும் அமைப்பில் உள்ளது. இதுவும் உற்று நோக்குவார்க்கு மகிழ்ச்சியளிக்கும்.

🔘 தன் கணவன் இல்லாமையால், வழியின்றித் திகைத்த அம்பிகை, தன் தந்தை வீட்டிற்குச் செல்வதற்கு முயன்றார். அப்போது இறைவன் எழுந்து வெளிப்படவே, குமரனாகிய முருகப் பெருமான், தன்தாய்க்கு, ‘இதோ தந்தையார்’ என்று சுட்டிக் காட்டினாராம். (வீட்டிற்குச் செல்ல புறப்படும் நிலையில் திருவடியைத் திருப்பி நிற்கும் அம்பிகையின் நிலையும்,தந்தையைச் சுட்டிக் காட்டும் அமைப்பில் இடுப்பில் உள்ள முருகனின் அமைப்பும் கண்டு வியத்தற்குரியது)

🔘 வெளியே வந்தால் நேரே மூலவர் தரிசனம். கிழக்கு நோக்கியது, சுயம்புத் திருமேனி. நாககவசத்தில் தரிசிக்க மிகவும் அருமை.

🔘 சுவாமி சந்நிதிக்கு இடப்பால் அம்பாள் சந்நிதி உள்ளது.தனிக்கோயில், அம்பாள் நின்ற கோலம், அபய வரதத்துடன் கூடிய அட்சமாலை, பத்மம் ஏந்திய நான்கு திருக்கரங்கள்.

🔘 ஆலயத்தில் நாடொறும் ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன. சுவாமி மண்டபத்தில் அட்ட வீரட்ட ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

🅱 வராஹி: 🅱

🌤 பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர்.

🌤 அந்தகாசுரன் என்பவனை அழிக்க, சிவன் தனக்கு உதவியாக சப்தமாதர்களைத் தோற்றுவித்ததாக மத்ஸ்யபுராணம் சொல்கிறது.

🌤 சும்பன், நிசும்பன் என்ற அரக்கர்கள் வதத்தின்போது, தனக்கு உதவியாக சப்தமாதர்களை சக்திதேவி தோற்றுவித்ததாக மார்க்கண்டேய புராணம் கூறுகிறது.

🌤 சப்தமாதர்களில் வாராஹியை தனிதெய்வமாக வழிபடும் முறை பழங்காலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ளது.

🌤 இவள் கருப்பு நிறம், பன்றி முகம், பெருவயிறுடன், ஆறு கைகளுடன் இருப்பதாக ஸ்ரீதத்வநிதி என்றநூல் வர்ணிக்கிறது.

🌤 வராஹியின் வரத, அபயஹஸ்தம் தவிர மற்ற கைகளில் சூலம், கபாலம், உலக்கை, நாகம் தாங்கியிக்கிறாள்.

🌤 சதுர்த்தி, சஷ்டி, அஷ்டமி, தசமி, துவாதசி, அமாவாசை திதிகள் வாராஹி வழிபாட்டிற்கு உகந்தவை.

🌤 சோழ அரசர்களின் இஷ்ட தெய்வமாக விளங்கிய வாராஹிக்கு தஞ்சை பெரியகோயிலில் சந்நிதி உள்ளது.

🌤 வாராஹி மாலை என்னும் நூலை எழுதிய சுந்தரேசர், சோழ மன்னரான குலோத்துங்கனின் படையில் குதிரைப்படைக்குத் தலைமை வகித்தவர். வாராஹியை வழிபடுபவருக்கு எதிரிகளின் தொல்லை நீங்கி, வளமான வாழ்வு உண்டாகும்.

🌤 இதில் ஒவ்வொரு கன்னியரும் ஒவ்வொரு சிவாலயங்களுக்கு சென்று சிவனின் அருளாசி பெற்றுள்ளனர். வராகி வழிபட்ட தலம் இத்தலமே.

🅱 தல வரலாறு: 🅱

🎭 தாருகாவனத்தில் வாழ்ந்த ரிஷிகள், ‘வேதங்களில் கூறப்பட்டுள்ள யாக -ஹோமங்களைச் செய்தாலே போதும்; கடவுள் வழிபாடு தேவை இல்லை.யாக விதிகளைக் கடைப்பிடித்து அதனை ஒழுங்காகச் செய்து விட்டால்,அதற்குக் கட்டுப்பட்டு அந்த யாகத்துக்கு உரிய தேவர்கள், யாகம் செய்தவர்களுக்கு வேண்டியதைத் தர கடமைப்பட்டவர்கள் ஆகிறார்கள்‘ என்ற கர்வத்தினால் சிவ வழிபாடும் அவசியம் இல்லை என்று கருதி,சிவபெருமானை அவமதிப்பவர்களாக இருந்தனர்.

🎭 ‘யாகத்தைத் தவிர வேறு தெய்வமில்லை‘ என்று கர்ம காண்டத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்ததால் அவர்கள் ‘கர்ம காண்டவாதிகள்‘ எனப்பட்டனர்.அவர்களது கர்வத்தை அகற்றி, உண்மையை உணர்த்த திருவுளம் கொண்டார் சிவபெருமான். அதன்படி திருமால், பெண் வேடத்தில் - மோகினியாக உடன் வர, தான் திகம்பரராக திருமேனி கொண்டு, ஆடியும், பாடியும் வரும் குள்ள பூதங்கள் சூழ தாருகாவனத்தை அடைந்தார் சிவனார்.

🎭 திகம்பரரின் பிரகாசமான அழகையும், வாலிப வனப்பையும் கண்டு அவரது பேரழகில் மயங்கிய ரிஷி பத்தினிகள், அவரைப் பின்தொடர்ந்தனர். மோகினி வடிவம் கொண்ட திருமால், ரிஷிகள் தவம் செய்யும் யாகசாலைக்குச் சென்று ஆடிப் பாடினார். மோகினியின் பேரழகில் தங்களை மறந்த ரிஷிகள் தம்வசம் இழந்தனர். அவர்கள் மனத்தில் மோகாக்னி மூண்டிருந்ததால், தாம் வளர்த்த யாகாக்னியை முற்றிலும் மறந்தனர். அந்த வேளையில் ஆணழகனான திகம்பரர் ஆடியும் பாடியும் அங்கு வர, அவர் பின்னால் முனிவர்களது மனைவியரும் உடன் வருவதைக் கண்டனர்.

🎭 ”நாங்கள் தவம் செய்யும் இடத்துக்கு ஏன் வந்தாய் ?” என்று திகம்பரரை நோக்கி ரிஷிகள் கேட்கவும், தாமும் தம் மனைவி மோகினியுடன் அங்கே தவம் செய்ய வந்ததாகக் கூறி, சிரித்தார்.

🎭 ”இவள் உன் மனைவியா ? மற்றவர்களை மயக்கித் திரிகிறாளே. நன்றாக இருக்கிறது இவள் கற்பு” என்று பரிகசித்தனர் ரிஷிகள். உடனே திகம்பரர், ”நீங்கள் உங்கள் மனைவியோடு வாழ்ந்து கொண்டுதானே தவம் செய்கிறீர்கள்.உங்கள் மனைவியரது மன அடக்கத்தையும், கற்பின் திறனையும்தான் இப்போது நீங்களே பார்க்கிறீர்களே. நீங்கள் மட்டும் என்ன ? என் மோகினியிடம் மயங்கி, உமது யாககாரியங்களை விட்டு ஓடி வந்து விட்டீர்கள். என் மனைவியின் கற்புக்கு என்ன பங்கம் வந்து விட்டது ?” என்று கைகொட்டி சிரிக்கவும், ரிஷிகள் செய்வதறியாது திகைத்தனர்.

🎭 பிறகு, மோகினியுடன் அங்கிருந்து புறப்பட்ட திகம்பரர் வசிஷ்ட மகரிஷியின் ஆசிரமத்துக்குச் சென்றார். வந்தவர்கள் யார் என்று உணர்ந்த வசிஷ்டர் தம்பதியினர் அவர்களுக்கு ஆசனம் அளித்து, அமரச் செய்து பூஜை செய்தனர்.பிறகு, சிவபெருமானும் திருமாலும் தமது இருப் பிடம் சென்றனர்.

🎭 தம்மை அவமதித்த திகம்பரரது செயலையும், தம் மனைவியரது மன அடக்கம் கேலிக்கு உள்ளாக்கப்பட்டதையும் கண்ட ரிஷிகள் கோபம் கொண்டனர். தீய வேள்வி ஒன்று செய்து, அதிலிருந்து பெரிய பூதத்தைத் தோற்றுவித்து திகம்பரரை கொன்றுவிடத் திட்டமிட்டனர். அதன்படி அவர்கள் தொடங்கிய யாகத்தில் முதலில் ஒரு நெருப்புக் கோளம் வந்தது. அதை, திகம்பரரை அழிக்கும்படி ஏவினர் ரிஷிகள். திகம்பரராகிய சிவபெருமான் அதைத் தம் கையில் ஏந்தினார்.

🎭  தொடர்ந்து அவர்கள் அனுப்பிய பாம்பு, டமருகம் ஆகியவற்றையும் கைகளில் ஏந்தி, மண்டையோட்டை மாலையாகவும் அணிந்தார் சிவனார். இவை தவிர, யாகத்திலிருந்து அவர்கள் அனுப்பிய சிங்கத்தை உரித்து, தமது கச்சாக அணிந்தார். பிறகு, பெரிய கருவண்டு ஒன்றை அனுப்பினர். சிவ பெருமான், ஹூங்காரம் செய்து அதனைத் தமது நடனத்துக்கு சுருதி கூட்டுமாறு செய்தார். வலிமையான பூதத்தை அவர்கள் ஏவ, அதைத் தனக்கு ஏவலனாக ஆக்கினார்.

🎭 அறியாமையின் வடிவானவனும்,அநேக நோய்களை உண்டு பண்ணுபவனுமாகிய ‘முயலகன்‘ என்ற குட்டை பூதத்தை அனுப்பினர். பெருமான் அவனைத் தமது திருவடியின் கீழ் பாத மனையாக்கிக் கொண்டு, அவன் மேல் நடனமாடினார். தங்களது முயற்சி எதனாலும் சிவபெருமானை அடக்க முடியாத முனிவர்கள், யாகத் தீயிலிருந்து மிகப் பெரிய முரட்டு யானையைத் தோற்றுவித்து அனுப்பினர்.அது கயிலைக்குச் சென்று, அங்கு யோகத்தில் ஆழ்ந்திருந்த சிவபெருமானைப் பற்றி எடுத்து தம் வாயில் போட்டு விழுங்கியது. சிவபெருமான் சிறிது நேரம் திருவிளையாடல் செய்யச் சித்தம் கொண்டார்.

🎭 அப்போது உலகமெங்கும் இருள் சூழ்ந்தது. தேவர்கள் பயந்தனர். தாருகாவனத்து ரிஷிகள் வெற்றிக் களிப்பில் ஆடினர். சிவபெருமான் யானையின் வயிற்றில் கொடிய வெப்பத்தை உண்டாக்கினார். அது வயிற்று வலியால் துடித்துப் புரண்டது. பல இடங்களிலும் அலைந்து திரிந்து இறுதியில் பஞ்சப்பிரம்ம தீர்த்தத்தில் வீழ்ந்தது.

🎭 பெருமான் தமது உடலைப் பெருக்கி யானையின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளி வந்தார். அதன் தோலை உரித்து அதைப் போர்வையாகப் போர்த்திக் கொண்டார். இதனால் அவர் “கஜசம்ஹாரர், கிருத்தி வாசர், கரி உரித்த பெருமான்” என்று புகழப் பெற்றார்.

🎭 தீய வேள்விக்குத் துணை நின்ற வேத புருஷன், மான் வடிவம் கொண்டு சிவபெருமான் காலில் வீழ்ந்து, தன்னை மன்னிக்குமாறு வேண்ட,அந்த மானைத் தம் இடக்கரத்தில் ஏந்தி, எந்த நேரமும் தமது காதில் வேதம் ஓதுமாறு பணித்தார்.

🎭 வேத புருஷனும், யாக புருஷனும் தங்களை விட்டு விலகியதாலும்,சிவபெருமான் மற்றும் திருமாலை நிந்தித்த பாவத்தாலும் தீய வேள்வியின் பயனாலும் கடுமையான ஜுரம், நடுக்கம் முதலியன அடைந்து வருந்திய தாருகாவனத்து ரிஷிகள் இறுதியில் சிவனைச் சரணடைந்தனர். ஈசன் அவர்களை மன்னித்து சிவஞானம் உபதேசித்தார்.

🎭 சிவபெருமான் யானையை உரித்து, அதன் தோலைப் போர்வையாக அணிந்து கொண்டது, அட்ட வீரட்டச் செயல்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. இது,சிவமகா புராணங்களிலும், திருமுறைகளிலும் விரிவாகக் குறிப்பிடப் பெறுகிறது.

🎭 சில்பரத்தினம், சுப்ரபேதாகமம், அம்சுமத் பேதாகமம் முதலிய சிவாகமங்களில் கஜ சம்ஹார மூர்த்தியின் வடிவமைப்பு விளக்கப்பட்டுள்ளன.

🎭 அஷ்ட வீரட்டத் தலங்களில் ஒன்றான வழுவூரில், கஜசம்ஹாரம் நிகழ்ந்ததாக தல புராணம் விவரிக்கிறது. ‘வழுவை‘ என்பதற்கு யானை என்றும் ஒரு பொருள் உண்டு.

🎭 வழுவை- யானையை உரித்த ஊர்- வழுவூர் என்பர்.

🅱 சிறப்பம்சம்:🅱

Ⓜ அதிசயத்தின் அடிப்படையில்:

♻ இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

♻ சப்தகன்னியரில் வாராகி வழிபட்ட தலம் இது.

♻ அட்ட வீரட்டத் தலங்களில் இது 6 வது தலம்.

♻ சிவபெருமானின் உள்ளங்கால் தரிசனம் இத்தலத்தில் மட்டுமே பெறமுடியும்.

🅱 இருப்பிடம்: 🅱

✈ மயிலாடுதுறை - மங்கநல்லூர் பேருந்துச் சாலையில் எலந்தங்குடியை அடுத்து உள்ள நெய்க்குப்பையில் வழுவூர் கைகாட்டியில் இறங்கிச் சென்றால் எளிதில் கோயிலை அடையலாம்.

🌀🌻🌀🌻 BRS🌀🌻🌀🌻🌀

🍄 தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்🍄

சிவன் வடிவமைத்த காசி - 03

Image result for varanasi images

பிரம்மதேவர் முன்னொரு காலத்தில் தான் சிருஷ்டி செய்த சரஸ்வதியை நோக்கி; அவளது பேரழகு காரணமாக, நீ என்னை அணையவேண்டும். நீயே என் மனைவி நானே உன் கணவன் ! என்று சொன்னார். அதற்கு கலைமகளான சரஸ்வதி இது என்ன விந்தை நீயே என்னை படைத்து விட்டு நீயே என்னை மணப்பதாகக் கூறுவது தகுமா, தகுமமா ? என்று நிராகரித்து, மனந்தாளாமல், புத்திரி என்றும் பாராமல் தகாத வார்த்தைகளைக் கூறிய உன் ஒரு வாயானது. இப்படியே துர்ப்பாஷைகளையே பேசிக் கொண்டிருந்து பின் ஒரு காலத்தில் சிவபெருமானால் தண்டனையடையட்டும் என்று சாபமிட்டாள். அந்தச் சாபத்தாலேயே சிவபெருமானை மற்ற முகங்கள் துதிக்க அந்தச் சிரம் மட்டுமே அவரை நிந்தித்து அவரால் அறுத்து எறியப்பட்டது !

சிவபெருமான் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் தன்னை தோத்திரஞ் செய்தவர்களுக்கும் பாபத்தை நீக்கும் வன்மையை உடையவராக இருக்கும்போது தான் பிரம்மன் தலையைக் கொய்த தோஷத்தை நிவர்த்தித்துக் கொள்ளச் சக்தியின்றிப் போகுமா ? இல்லை ஆயினும் அவ்வாறு நடித்துக்காட்டிய காரணத்தையும் சொல்லுகிறேன் கேளுங்கள்.

உலக சிரேஷ்டன் செய்த காரியத்தைப் பிறர் நற்கருமம் என்று அங்கீகரிப்பது பிரமாண பூர்வமாகும். ஆகவே சிவபெருமான் தான் பிரமச் சிரச்சேதம் செய்த காலத்தில் அக்கபாலம் ஒட்டிக் கொண்டதேயென்று தீர்த்த யாத்திரை செய்து பிரம கபாலத்தை விலக்கினார். இது உலகினருக்காகச் செய்த நடிப்பு !

இதனால், காசி க்ஷேத்திரம் பாபங்கள் அனைத்தையும் போக்கடிக்கத் தக்க உத்தம க்ஷேத்திரமாகும். இந்தக் கபாலம் விழுந்த இடம் கபாலமோசன தீர்த்தம் எனப்படும். நிக்ரகா நிக்கிரக சமர்த்தராய்ச் சகல பிரமாண்டங்களையும் சிருஷ்டித்துக்காத்து சங்கரிக்கும் சிவபெருமானின் சங்கற்பமும் நடக்கையும் யாவன் அறியவல்லவன் ? அவர் செய்த செயல்கள் அநேகம் !

மன்மதனைத் தகனஞ் செய்தார். எனினும் தனது உடலிலேயே வாம பரகத்தில் பார்வதிதேவியை அமர்த்தியிருப்பது எங்கே ?

கண்டத்திலே விஷத்தைத் தரித்திருந்தும் மிருத்யுஞ்சயராய் இருப்பது எங்கே ?

தான் பிட்சை ஏற்கும் திகம்பரரேயாயினும் தன்னை அடைந்தோருக்கு சகல ஐஸ்வரியங்களையும் அநுகிரகிப்பது எங்கே ?

தான் பைசாசங்களை சைன்னியமாக வைத்துக் கொண்டு இருந்தும் தன்னை அண்டியவர்களுக்கு ரத, கஜ, துரகபதாதிகள், என்ற சதுரங்க சேனையை அனுக்கிரஹிப்பது எங்கே ?

தன் உடலில் கபாலமாலை அணிந்திருந்தும் தன் பக்தர்களுக்கு முத்து பவளம் முதலிய மாலைகளைக் கொடுக்கிறார். தான் மயான சாம்பலைப் பூசியிருந்தும் தன் பக்தர்களுக்கு சந்தனம் முதலிய பரிமள சுகந்தத்தைக் கொடுக்கிறார்.

 தான் எருதை வாகனமாக கொண்டிருந்தும் தன்னை துதிப்பவர்க்கும் தனக்கு தொண்டு செய்வோருக்கும் யானை, குதிரை முதலிய வாகனங்களைக் கொடுக்கிறார்.

தான் சர்ப்பாபரணங்களை அணிந்திருந்தும் பக்தர்களுக்கு மகர குண்டலாதி ஆபரணங்களைக் கொடுக்கிறார். தான் ஜடாதரராக இருந்தும் தம் அன்பர்களுக்குக்கிரீடம் முதலான சகலபொருட்களையும் கொடுக்கிறார்.

தான் யானைத்தோலை அணிந்திருந்தும் பக்தர்களுக்கு சீனி சீனாம்பரங்களை உதவுகிறார். இவையே அன்றித் தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்கு அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப, இகபர போகங்களை கொடுக்கிறார்.

ஆகையால் அவர் மகிமைகளைத் தெரிந்து கொள்ள ஒருவருக்கும் சக்தி கிடையாது இந்தப் பஞ்சக்குரோச விஸ்தீரணமுடைய காசி க்ஷேத்திரத்தைவிட திரிலோகங்களிலும் சிறந்த க்ஷேத்திரம் ஒன்றும் இல்லை. அத்தகைய திருத்தலமே இல்லாவிட்டால் சிவபெருமானே அங்கு எந்த காலத்திலும் எழுந்தருளியிருந்து, அங்கே மடிபவர்களின் செவிகளில் தாரக மந்திரோபதேசம் செய்து, அவர்களுக்கு முக்தியளிக்க முடியுமா ?

Image result for varanasi images

விஸ்வேஸ்வரலிங்க மூர்த்தமாகச் சிவபெருமான் எப்பொழுதிலிருந்து காசி க்ஷேத்திரத்தில் கோயில் கொண்டிருக்கிறாரோ அது முதல் காசி க்ஷேத்திரம் சிறப்புடையதாயிற்று. இந்தக் காட்சி மகத்துவத்தைக் கேட்பவர்கள், சகலவித சாம்ராஜ்யங்களையும் அடைவார்கள் ! இனி புனித பயணம் தொடங்கவோம்…

நிஜமான காசி யாத்திரையும்... 
‘கல்யாண பாவ்லா’ காசி யாத்திரையும் ! 

இறைவன் ஜோதி வடிவானவன்.

‘தீப மங்கள ஜோதி நமோ நம’ என்று துதிக்கிறார் அருணகிரிநாதர்.

‘உலகெலாம் உணர்ந்து ஓதர்க்கரியவன் அலகில் சோதியன்’ என்று சிவபிரானைப் போற்றி, தன் புராணத்தைத் தொடங்குகிறார் சேக்கிழார் பெருமான்.

ஜோதிவடிவான இறைவனுக்கு பாரதத்தில் பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் திருத்தலங்கள். இதில் முதலாவதும் சிறப்பானதும் - காசி. புண்ணியத் தலங்கள் எல்லாவற்றிலும் மணிமுடி போன்றது.

காசியை நினைக்க முத்தி காசியென்றுரைக்க முத்தி

காசியைக் காண முத்தி காசியில் வசிக்க முத்தி

காசியைச் சூழ முத்தி காசியைக் கேட்க முத்தி

காசியில் வசித்தோர் தம்மைக் கண்டு தாழ்ந் திடுதன் முத்தி.

 இப்படிப் புகழ் கொண்ட காசி என்ற சொல்லுக்கு ஒளிமயமானது என்பது பொருள். காசி, காஞ்சி, மதுரா, மாயா (ஹரித்துவார்), அவந்திகா (உஜ்ஜயினி), அயோத்தி, துவாரகை ஆகிய ஏழும் முத்தித் தலங்கள்.

இவற்றினுள் காசிக்கு மட்டும் ஏனிந்த பெயர், புகழ், பெருமை, மகிமை, புனிதம், புண்ணியம் ?

 ‘காசிக்கு நிகரான பதியுமில்லை;
கங்கைக்கு நிகரான நதியுமில்லை’ 

என்று பாமரரும் பக்தியுணர்வோடு ஏற்றிப் புகழும் இந்தத் திருத்தலத்தைத் தரிசிப்பதற்குக் கூட, பூர்வ புண்ணியம் இருந்தால் மட்டுமே பாக்கியம் கிடைக்கும் என்கிறார்களே, ஏன் ?

 காரணம் பல...

மனித வாழ்வோடு மிகவும் நெருங்கிய தொடர்புடையது தான் நிற்கும்; நிலைக்கும். காசி நகரம் இந்தியா முழுவதும் புகழ் மணம் பரப்பி நிற்கக் காரணம். மனித வாழ்க்கையோடு அந்நகருக்கு இருக்கும் நெருங்கிய தொடர்புதான்.

இந்துக்கள் மட்டுமல்லாது ஏனைய சமயத்தினரும் காசியை - அதன் சிறப்பை நன்கறிவர்.

மனித வாழ்வில் பல பிரிவுகள் - அதனுள்ளும் பலப்பல கூறுகள் - உள்ளன. அதில் தலையாயது எது ?

குடும்ப வாழ்க்கை, துறவு மனம், மரணம் - இந்த மூன்றும்தான் மனிதனின் பெரும்பகுதி வாழ்க்கையை ஆக்கிரமித்துக் கொள்கின்றன அல்லது ஆளுமை செலுத்துகின்றன.

துறவைப் பொருத்தவரை காசிக்குப் பெரிய பங்கில்லை. பலரும் காசியைத் தரிசிக்க வருகிறார்களே தவிர, அவர்கள் அங்கேயே தங்கிவிடுவதில்லை. துறவு வாழ்வை மேற்கொள்ளாமல், ஆனால் பற்றற்ற மனநிலையில் இல்லறத்திலேயே இருப்போரும் வந்து வணங்குகின்றனர். வாழ்வின் தொடக்க நிலையில் இருப்போரும் குடும்பத்துடன் பக்தியின் காரணமாக வந்து வழிபடுகின்றனர்.

ஞானத்தேடல், பாவம் போக்குதல் என்று அவரவர் நோக்கில் வந்து தொழும் தலம் இது.

ஒருவன் குடும்ப வாழ்வை மேற்கொள்ளும்போதே காசி க்ஷேத்திரம் அவனுக்கு நினைவூட்டப்படும் சடங்கும் நம்மிடையே திருமணத்தின்போது உண்டு.

பிரம்மச்சாரி ஒருவன், ஒரு பெண்ணைத் தன் வாழ்க்கைத் துணையாகக் கைப்பிடித்து இல்லறத்தில் நுழையும்போதே, அவன் தன் குடும்பத்திடம் கோபித்துக்கொண்டு காசிக்கு யாத்திரை புறப்படுவதாகவும், கையில் குடையுடன் அப்படி அவன் பாவனை பண்ணிக்கொண்டு சில அடி தூரம் சென்றதும், ஏனையோர் அவனைச் சமாதானப்படுத்தி திரும்ப அழைத்து வருவது போலவும் திருமணச் சடங்கில் ஒரு நிகழ்ச்சி உண்டு. இன்றும் பலரது திருமணங்களில் இது ஒரு அம்சமாக உள்ளது.

இல்லற வாழ்வின் தொடக்கத்திலேயே காசியின் பிணைப்பை இந்த தேசத்தினர் கைக்கொண்டிருந்ததற்கு இது சான்று.

Image result for varanasi images

சரி, பாவம் போக்க காசிக்குப் போவது ஏன் ?

 இன்பம் துய்க்கும் விருப்பம் என்பது எல்லா உயிர்களுக்கும் படைப்பிலேயே வைக்கப்பட்டுள்ளது. ஆனால் உலக வாழ்வின் போக்கிலோ அதற்கு ஏராளமான தடைகள். மனிதன் இவ்வகைத் தடைகளைத் தாண்டியோ தகர்த்தோ தன் இச்சையைப் பூர்த்தி செய்துகொள்ள முனையும்போது அறிந்தோ அரைமனதுடனோ, தவிர்க்க இயலாத சில தவறுகளைச் செய்து விடுகிறான்.

பிறகு ஒரு நேரத்தில், அவன் தன் மனசாட்சி என்னும் துலாக்கோலில் தனது செயலையும் அதன் விளைவையும் எடை இட்டுப் பார்க்கும்போது அவன் உள்ளம் குற்றஉணர்வால் அமைகிறது. வேறுவகையில் அவனுக்கு ஏற்படும் இயல்பான துன்பங்களும்கூட, தனது முந்தைய பாவச் செயல்களின் பிரதிபலிப்பே என்று எண்ணி வருந்தி மனம் நைந்து போகிறான். அவனது செயலூக்கம் குன்றி விடுகிறது. தனது பாவங்களின் சுமை தனது வாரிசுகளையும் வதைக்குமோ என்று அஞ்சுகிறான்.

 இதிலிருந்து அவன் மனம் தேற, அமைதி கொள்ள என்ன வழி ?

தன் தவறுகளுக்கு பரிகாரம் ஒன்று இருப்பதாக அவன் நம்பும்போது, மனித மனம் ஆறுதல் அடைகிறது; அமைதி பெறுகிறது.

தனது தவறுகளுக்குத் தண்டனை தரும் சக்தி எதுவோ அதனிடம் பாவமன்னிப்பு கோரி பரிகாரம் பெற மனம் துடிக்கிறது. அதனால் தண்டனை குறைக்கப்படும் அல்லது மன்னிப்பு வழங்கப்படும் என்பது நம்பிக்கை.

அதற்குரிய இடம்தான் காசி. 

பாவங்களைப் போக்கி மனிதனைக் குற்ற உணர்விலிருந்து மீட்டெடுத்து, அவனது எஞ்சிய வாழ்வை அவனுக்கும் பிறருக்கும் பயனுள்ளதாக நல்வழியில் செலுத்தத்தக்க சக்தி கொண்டதுதான் காசித் தலமும் கங்கை நதியும்.

பாரத சமுதாயம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்த நம்பிக்கையோடு தரிசித்தும், வணங்கியும், வழிபட்டும் தமது பாவச் சுமைகளைப் போக்கி, மனதின் களங்கக் கறையைக் கழுவிப் புனிதம் பெறுகிறது; சுகம் பெறுகிறது.

இந்த சம்பிரதாயத்தை ஏற்று, கடைத்தேற விரும்பும் எல்லா மனிதர்களாலும் காசிக்குச் சென்றுவிட முடியுமா ?

பொருள் இல்லாதவர்களால் முடியாது. பொருள் இருந்தும் ஆரோக்கியம் இல்லாதவர்களால் முடியாது.

Related image

நடமாட இயலாதவர்களால் முடியாது.

பொருளும் சக்தியும் இருந்தும் நம்பிக்கையான வழித்துணை இல்லாதவர்களால் முடியாது.

போக்குவரத்து எளிதாகவோ, இன்றுள்ளது போன்ற எந்திர வாகன வசதியோ இல்லாத காலத்தில் ஒருவர் காசி சென்று திரும்புவது எளிதான காரியமல்லவே. மேலும், காசியைக் காண முடியாதவர்கள் மனம் தளரக் கூடாதல்லவா ? இதன் காரணமாகவே இந்தியாவில் வேறுபல தலங்களைக் காசிக்கு இணையான தலங்களாக அமைத்தனர்.

 உதாரணமாக தமிழ்நாட்டில் திருவாஞ்சியம், திருச்சாய்க்காடு (சாயாவனம்), தென்காசி உள்ளிட்ட சில தலங்களைக் காசிக்கு இணையான தலம் என்று கொண்டனர்.

ஆயினும் இவை எதுவும் காசிக்கு இணையானதுதானே தவிர, காசிக்கு மேலானது என்று குறிக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சிலபேர், காசியும் காசிக்கு இணை என்று சொல்லப்படும் தலமும் ஒன்றாகி விடுமா என்று விதண்டாவாதம் பேசலாம். நம்பிக்கையைப் பழிப்பதை விட, அதனால் வரும் பயனை எண்ணிப் பாராட்டுவதே நல்லது. மனோதத்துவ நிபுணர்கள் ஆதரிக்கும் கருத்தும் அதுவே.

                                                    - புனித பயணம் வ(ள)ரும்..

சிவன் வடிவமைத்த காசி - 2

ஏன் காசி ? 

இதை நாம் கவனித்துப் பார்த்தால், எல்லையில்லாமல் வளர வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. இது வெறும் ஆசையாய் இருந்தால் போதாது என்று, அதை நிறைவேற்றிக் கொள்வதற்குத் தேவையான கருவியாய் காசி உருவாக்கப்பட்டது. இது ஒரு சக்தி உருவம். இந்த உருவத்திற்கு ஏற்றாற்போல், அதைச் சுற்றி ஒரு ஊர் தானாக உருவானது.

அதனால் காசி என்பதை ஊராகப் பாக்காமல், அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும். இந்த மகத்தான வாய்ப்பை உணர்ந்துதான் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மக்கள் காசியைப் போற்றி வந்தனர்.

இதை மதம் சம்பந்தப்பட்ட இடமாக நினைப்பது மிகக் குறுகிய கண்ணோட்டம். இது மதம் சம்பந்தமட்ட இடமல்ல. ஒவ்வொரு மனிதனிற்கும் இருக்கும் ஏக்கத்தை விஞ்ஞானப்பூர்வமாக அணுகி, அதை நிறைவேற்றுவதற்காக, முறையான தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்ட சக்தி யந்திரம், இந்த காசி.

Related image

இன்றளவும் ஆன்மீக வாய்ப்பை அள்ளி வழங்கும் இடமாக அறியப்பட்டாலும், இசை, கலை, கல்வி, கைவினைப்பொருட்கள், பட்டு நெசவு என பல்வேறு துறைகளிலும் காசி புகழ் பெற்றிருக்கிறது. ஆயுர்வேதம் கூட காசியில்தான் எழுதப்பட்டது.

யோக அறிவியலின் தந்தையாக போற்றப்படும் பதஞ்சலி முனிவர் இங்குதான் யோக சூத்திரத்தினை இயற்றினார். துளசிதாசரின் ராமசரிதம் மானசம் உருவானதும் இங்குதான்.

இசையில் தலைசிறந்த பாடகர்களும், கணிதத்தில் புகழ்பெற்றவர்களும் வாழ்ந்த இடம் காசி. இந்தியாவின் தலைசிறந்த சித்தார் மேதை பண்டிட் ரவிசங்கர், ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர் உஸ்ஸாத் பிஸ்மிலாகான் போன்ற பெருமைக்குரிய கலைஞர்களை உலகுக்கு வழங்கியதும் காசியே.

ஆர்யபட்டா போல் நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடிய மேதைகள் எல்லாம் இப்பகுதியிலிருந்து வந்தவர்கள்தான். இவர்கள் எல்லாம், உயிரோட்டம் நிறைந்திருந்த காசியின் கலாச்சாரத்தில் உருவானவர்கள்.

 காசி என்னும் கருவியால், இத்தனை புத்திசாலித்தனமும், திறனும் இங்கு தோன்றியது. இதன் மூலம், சாதாரணமாக ஒரு மனிதன் அணுகமுடியாத பரிமாணங்களை எல்லாம் இவ்விடத்தில் வாழ்பவர்களால் அணுக முடிந்தது. இவை அத்தனையும் பிரபஞ்சத்தை தர்க்கரீதியாக பார்த்து, உருவாக்கப்பட்டவை அல்ல.

இப்பிரபஞ்சத்தை, அது எப்படி இருக்கிறதோ அதை அவ்வாறே பார்த்தனர். இப்படி படைப்பின் தன்மையை, அது இருக்கும் நிலையிலேயே பார்ப்பவர்களின் புத்திசாலித்தனம், நம்பமுடியா அளவிற்கு பண்பட்டு முதிர்ச்சி அடைகிறது.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், “இந்தியக் கணிதவியலின் துணை இன்றி, இன்றைய விஞ்ஞானம் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது”. இப்படிப்பட்ட கணிதம் தோன்றியது உயிரோட்டம் நிறைந்த காசியிலே, காசி எனும் மகத்தான யந்திரத்தின் துணையிலே !

சிவனின் ஏக்கம்: 

காசி நகரம் உருவானபின், அதை சரியாக பராமரிக்க வேண்டும் என்பதால், ஒரு அரசனின் கையில் அந்நகரை ஒப்படைக்க முடிவு செய்தார்கள். ஆனால் அதற்கான நிபந்தனை, தேவர்களும், முக்கியமாக சிவனும் காசிக்கு வரக்கூடாது என்பது தானாம். சிவன் காசிக்கு வந்துவிட்டால், பிறகு எல்லோரும் அவரையே பின்பற்றுவர். அரசனிற்கு அப்புறம் என்ன மரியாதை இருக்கப் போகிறது ? இதற்கு ஒப்புதல் கொடுத்ததும், ஆட்சி கைமாறியது.

 சிவனும் கைலாயத்தில் இருந்தார். ஆனால் பார்வதியை மணந்தபின், பார்வதியால் கடுங்குளிர் தாங்க முடியாது என்பதால், மலையை விட்டு கீழிறங்க வேண்டிய கட்டாயம் சிவனிற்கு ஏற்பட்டது. தங்குவதற்கு சரியான இடம் தேடியவர், காசியைப் பார்த்ததும், அவருக்கு வேறு எங்கு தங்குவதற்கும் மனம் ஒப்பவில்லையாம். ஆனால் அவர் காசிக்குள் வருவதற்குத் தடை இருக்கிறதே !

அதனால் காசிக்குள் வருவதற்கு அவர் பல தந்திரங்களையும் கையாண்டு, ஒன்றும் பலிக்காமல், கடைசியாக காசி மன்னன் திவோதாசனுக்கு முக்தி ஆசை காட்டி, அவருக்கு முக்தி வழங்கி அதன் பின்னே தான் அவர் காசிக்குள் வரமுடிந்ததாம். உள்ளே வந்தவர், இனி காசியை விட்டுப் பிரியேன் என்று சொன்னாராம். அதனால் அங்கு ‘அவிமுக்தேஷ்வரா’ எனும் கோவிலும் உண்டு.

இக்கதைகள் அனைத்தும் காசியில் வாழ ஒவ்வொருவரும் எவ்வளவு ஏங்குவர் என்பதை நாம் புரிந்து கொள்வதற்காக சொல்லப்பட்டது.

கண்ணுக்குப் புலப்படுகிற(திரிஸ்யம்) இந்த பிரபஞ்சமானது உண்டாவதற்கு முன்னதாகவே அவிமுக்தமாகிய காசி க்ஷேத்திரம் உண்டாகிவிட்டது. அந்தக் காசியின் பிரபாவம் காசி கண்டம் முதலிய நூல்களில் சொல்லப் பட்டிருக்கிறது.

பிரமதேவர் சிவ கட்டளையை ஏற்று உலக படைப்பைத் தொடங்கினார். சராசரரூபமாகப் படைக்கப்பட்ட அண்டம் முழுவதும் சிவபெருமானுடைய சுத்த தேஜஸே வியாபித்தது அது முதல் படைப்பானது கிரமமாக நிகழலாயிற்று. இவ்விதம் படைக்கப்பட்ட பிரமாண்டத்தின் பரிமாணம் ஐம்பது கோடி யோசனை விஸ்தீரணம் என்று முனிவர்களால் மதிப்பிடப்பட்டுள்ளது.

ஜலத்திலிருந்த அந்தப் பிரமாண்டமானது ஜலத்தின் மீது கப்பல் போலவும் தயிரின் மேல் ஏடுபோலவும் அஷ்டதிக்கு கஜங்களால் தாங்கப்பட்டு நிலைத்து நின்றது அந்தப் பிரமாண்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு நடுவில் உள்ளது. மத்தியலோகம் என்றும் மற்ற இரண்டு பாகங்களும் ஊர்த்துவலோகம் அதோலோகம், என்றும் சொல்லப்பட்டன.

 மத்தியலோகம் பூலோகம் என்றும் அதோலோகம் அதலம், விதலம், சுதலம், தராதலம், ரஸாதலம், மஹாதலம், பாதலம், என்றும் சொல்லப்பட்டன. பூலோகத்தின் மேலேயுள்ள ஊர்த்துவலோகம், புவர்லோகம், ஸ்வர்லோகம், மஹாலோகம் ஜனலோகம் தபோலோகம், சத்திய லோகம் என்றும் சொல்லப்பட்டன.

 பாதாள லோகங்கள் ஏழும் ஒன்றின் கீழ் ஒன்றாகவும் சுவர்க்கலோகங்கள் ஒன்றின் மேல் ஒன்றுமாக முறையே விளங்கும்.

தங்கள் புண்ணியங்களுக்கேற்ப ஸ்வர்க்க லோகங்களிலும் பாவஞ் செய்தவர்கள் தங்கள் பாவங்களுக்கு ஏற்ப அதோலோகங்களிலும் வசிப்பார்கள் இந்த பூலோகத்தில் ஏழு கடல்களும் ஏழு தீவுகள் மேருமுதலான குலபர்வதங்களும் கங்கை முதலான புண்ணிய நதிகளும் விசித்தரமான பல புண்ணிய வனங்களும் இருக்கின்றன. இதுவே படைப்புக் கிரமம்.

மற்ற புண்ணிய க்ஷேத்திரங்களில் எல்லாம் சாரூப்ய (இறைவனுருப் பெறும்) முக்தியும், காசியில் மட்டுமே சாயுஜ்யம்(இறைவனோடு ஒன்றிப்பு) என்னும் உத்தம முக்தியும் பெறப்படும்.

பஞ்சக்குரோச பரிமாணமுடையதும் கோடி பிரமஹத்திகளைப் போக்கடிப்பதுமான இந்த காசி க்ஷே த்திரம் கதியில்லாதவர்களுக்கெல்லாம் கதியாக அமைந்திருக்கிறது. தேவர்களும் காசிமாநகரிலே மடிய விரும்புவார்கள்.

Related image

பிரம்ம, விஷ்ணுக்கள், சித்த வித்யாதரர் முனிவர், மனிதர்கள் முதலான யாவரும் விரும்பி வணங்கத்தக்கதே காசித்தலமாகும் அதன் சிறப்பை நூறு ஆண்டுகள் சொன்னாலும் சொல்ல முடியாது.

இச்சையால் சகுணரும் சுயமாக நிர்க்குணராயுமுள்ள சிவபெருமான் ஒருசமயம் இந்த காசிக்கு வந்து பாவங்களைப் பரிகரிக்கத்தக்க தன் ஸ்வரூபமான அவிமுக்த லிங்கத்தை யாவருக்கும் காண்பித்து அந்த அவிமுக்த மகாத்மியத்தைச் சொன்னார். அதனை விவரமாகச் சொல்ல இயலாது. பிரம்மனே அநேக கோடி வருஷங்கள் சொல்வதானாலும் சொல்லி முடியாது.

அவிமுக்த க்ஷேத்திர அதிபதி பார்வதிதேவி சமேதராக வந்த சிவபெருமானை தரிசித்து அநேகம் ஸ்தோத்திரங்களுடன் நமஸ்காரஞ் செய்து எம் பெருமானே ! நான் உன் அடிமை என்னிடம் தயை வைக்கவேண்டும் உலகிற்கு நலம் செய்யும் காரணமாகத் தாங்கள் இங்கு எழுந்தருளியிருக்க வேண்டும். என்று பிரார்த்தனை செய்து சிவபெருமானின் திருவடிகளைப் பற்றி கண்களில் ஆனந்த பாஷ்பம் சொரிய தேவதேவரே ! இந்த நகரத்தை ராஜதானியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

எக்காரணத்தாலும் எக்காலத்திலும் இந்த நகரத்தை நீங்காது இருந்து எங்களுக்குத் தரிசனம் அளித்து எங்களைக் கிருதார்த்தர்களாக்க வேண்டும். இத்தலத்தில் இறங்கும் எல்லாப் பிராணிகளையும் முக்தியடையச் செய்ய வேண்டும் ! என்று பிரார்த்தித்தான்.

அதற்கிணங்கச் சாம்பமூர்த்தி தன் பரிவாரங்களுடன் லோகோபகார நிமித்தமாக அங்கேயே கோயில் கொண்டருளினார். அவர் தம் பிரம்ம கபாலத்தை அந்தக் காசியில் பிரதிஷ்டை செய்ய வந்தவராதலின், அவ்வரசனின் வேண்டுகோளுக்கு இணங்க தாம் கருதி வந்தபடியே அவ்விடத்தில் வசித்திருக்க உடன்பட்டார்.

 சிவபெருமானிடத்தில் பிரம்ம கபாலம் எப்படி வந்தது ? 

சூதமுனிவரின் குருநாதரான வியாச மகரிஷி எனக்கு இந்த விஷயத்தைப் பற்றிக் கூறியிருக்கிறார்.

பூர்வத்தில் ஒரு காலத்தில் சிவபெருமான் உலகக்ஷேமங்களை விசாரிக்கத் திருவுள்ளம் கொண்டார். எனவே, அவர் சகல உலகங்களிலும் சஞ்சரித்துக் கொண்டு பிரமலோகத்தையடைய, பிரம்ம தேவர் அவரை எதிர் கொண்டு வரவேற்று அர்க்கிய பாத்திய ஆசமனாதிகளால் பூஜித்து தம்முடைய நான்கு திருமுகங்களாலும் துதித்தார்.

அப்போது அவரது ஐந்தாவதாகிய ஒருமுகம் சிவபெருமானை குறை கூற அதைக் கேட்ட சிவபெருமான் பிரம்மனுடைய நான்கு முகங்களும் துதித்ததற்காக மகிழ்ந்து ஐந்தாவது முகம் செய்த தூஷணைக்கு விசனமடைந்து, ஆஹா! இந்த துஷ்டமுகத்தை நிவர்த்திக்க வேண்டும் என்று பாம்பு கடித்த விரலை அறுத்தெறிவதால் அந்த விஷவேகம் தீர்ந்து விடுவது போல், முழுவதும் நற்குணமுடைய பிரம்மதேவனது ஐந்தாவது முகம் மட்டுமே தீச்செயல் புரிந்ததால் அம்முகத்தை நீக்குவதால் அவன் முற்றிலும் நற்குணம் உடையவனாவான் என்று கருதி பிரமதேவனின் நலனுக்காகவே அதை அகற்றத் தீர்மானித்து, தம் நெற்றி விழியில் அக்னிச் சுவாலை தோன்ற பிரமனை நெருங்கி, அவனது ஐந்தாவது சிரத்தைத் தம் திருவிரலின் நகத்தால் கொய்தார்.

அந்தப் பிரம்ம சிரமானது சிவபெருமானைப் பின் தொடர்ந்தது. அவர் காசியையடைந்த போது அது அவரை விட்டுவிலகியது இந்த இரண்டு காரணங்களினால் சிவபெருமான் காசியில் அமர்ந்தார்.

சர்வலோகங்களுக்கும் பிதாமகனான பிரம்மதேவர் உலகத் தலைவரான சிவபெருமான் தம் இருக்கைக்கு வந்ததைக் கண்டு அவரை உபசரித்தார் என்றீர்கள் பிரமனோ மகாசாந்த சீலர் அப்படியிருந்தும் அவர் தமது நான்கு வாயினாலும் துதித்து ஐந்தாவதான ஒரு வாயினால் மட்டும் சிவபெருமானைத் தூஷிக்கக் காரணம் என்ன ?

                                                             - புனித பயணம் வ(ள)ரும்..

சிவன் வடிவமைத்த காசி - 1

Related image


உலகமெல்லாம் நிறைந்த பரம்பொருளே எல்லா உயிரும் நீயே எல்லா செல்வங்களும் நீயே உனது அருள் எப்போதும் எங்களைக் காத்து நிற்கிறது இந்த உண்மையை நாங்கள் உணர அருள்புரிவாய்.

பிரபஞ்சமே பராசக்தியே உன்னில் பிறந்து உன்னில் வளரும் எங்களை உன்னதமாக்கி அருள்புரிவாய் !

இந்திய தேசத்தின் பெருமை என்பது உலகுக்கே வழிகாட்டும் அதன் ஆன்மிகம்தான். இந்தியா முழுவதிலும் அமைந்துள்ள எண்ணற்ற புனித நதிகளும், பழம் பெரும் ஆலயங்களும் மக்களை நல்வழிப்படுத்தி அவர்களது உடலையும் ஆன்மாவையும் சுத்திகரித்து வழிநடத்தும் மகத்துவம் கொண்டவையாகத் திகழ்கின்றன.

அப்படி மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ள எல்லா புண்ணியத் தலங்களும், புனித நதிகளுமே புராதனப் பெருமை பெற்றவைதான் என்றாலும் இவற்றுள் வடக்கையும், தெற்கையும் இணைக்கும் விதமாக ஒட்டுமொத்த இந்துக்களின் இதயத்திலும் எண்ணத்திலும் ஆத்மாவிலும் உறைந்து பதிந்து கிடக்கும் புனிதத்தலங்களுள் முக்கியமான சிறப்புத் தலங்கள் இரண்டு.

ஒன்று வடக்கே காசி ! இரண்டு, தெற்கே இராமேஸ்வரம் ! 

இந்துவாகப் பிறந்த ஒவ்வொருவருடைய ஆசையும் கனவும் ஒன்றே ஒன்று தான் !

வாழ்நாளில் ஒருமுறையாவது காசி, இராமேஸ்வர யாத்திரை மேற்கொள்ளவேண்டும் என்பது தான் அது !

மண் புனிதம்... நீர் புனிதம்... காற்று புனிதம்... ஒளி புனிதம்... !!

இமயத்தின் உச்சியில் இறைவனின் காலடியில் உற்பத்தியாகும் கங்கை, பொங்கிப் பிரவாகித்து இதோ தனது பூம்புனலால் காசியை அபிஷேகம் செய்ய ஓடிவருகிறாள்.

பூமிப் பந்தின் அச்சாணி என தன் ஜோதிர்லிங்க வடிவை ஆகாயத்துக்கும் அதலபாதாளத்துக்குமாக ஊடுருவி நிற்கும் அந்த உலகநாதனின் ஊர் காசி.

காசியின் மண் புனிதம், நீர் புனிதம், காற்று புனிதம், ஒளி புனிதம் ! அந்தத் தலம் - அருளுக்கு நிவேதனம் ! அன்பினுக்குக் கோயில் ! நெஞ்சின் இருளுக்கு ஞாயிறு ! காசியின் மண்ணை மிதித்தோர் தங்கள் ஊழ்வினை அறுத்தோர் !

ஒவ்வோர் இந்துவுக்கும் காசி - தந்தையின் நிழல்... தாயின் மடி...

இதோ காசி நகர் வந்துவிட்டது !

கதிரொளியை அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாக எதிரொலித்து காசியை வண்ணமயமாக்கி நிற்கிறாள் கங்கை நல்லாள்.

 எங்கும் சிவசிவ மந்திரம்...

எங்கும் திருத்தொண்டர் கூட்டம்...

எங்கும் நமசிவாய நாமம்...

 காசிநாதன் திருவடி காண ஆலயம் நோக்கி நடக்கும் பக்தர் கூட்டம்.

கங்கையில் நீராடி பாவம் போக்கிப் பளிங்கெனத் தெளிந்து கரையேறும் அன்பர் கூட்டம். இவர்களோடு சேர்ந்து இனி நாமும் காசியைக் காண்போம் வாருங்கள்...

சிவனை ஈர்த்த காசி 

சிவன் வடிவமைக்க, பிரம்மனும், விஷ்வகர்மாவும் காசியை உருவாக்கியதாய் புராணக் கதைகள் சொல்கின்றன. காசியின் கட்டமைப்பும், அதில் கையாளப் பட்டிருக்கும் யுக்திகளும், அதன் நேர்த்தியும், அதை வடிவமைத்தவரின் கணித நுண்ணறிவை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. இன்றளவிலும் நம்மை வியப்பில் ஆழ்த்தும் மிகப் பிரம்மாண்டமான கட்டமைப்பைக் கொண்டுள்ளது காசி. அப்படியென்ன அற்புதமான வடிவியல் அது.. ?

காசியை, ‘ஒளிப் பிழம்பு’ என்பார்கள். அதோடு காசி என்பது தரையில் இல்லை, அது சற்றே உயரத்தில், சிவனின் திரிசூலத்தின் மீது இருக்கிறது என்றும் சொல்வர். இதற்குக் காரணம், ‘காசி’ என்பதற்கு நிலத்தில் ஒரு பொருள் உருவமும், அதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கிய சக்தி உருவம் இம்மண்ணை விட்டு சற்றே உயரத்தில் இருக்குமாறும் அமைத்தார்கள். இந்த சக்தி உருவம் தரையில் இல்லாமல், மேலே நிறுவப்பட்டிருப்பதால், காசி தரையில் இல்லை, சற்று மேலே உள்ளது என்றார்கள்.

இதை எந்த அளவிற்கு விஞ்ஞானம் என்று ஒப்புக்கொள்வீர்கள் என சொல்ல முடியாது. இருப்பினும், அமெரிக்காவில் இருந்து வந்த சிலரும், சில ருஷிய விஞ்ஞானிகளும் ‘கிர்லியன் ஃபோடோகிரஃபி’ என்ற தொழில்நுட்பம் வாயிலாக காசியைப் படம் பிடித்தார்கள். அந்தப் படங்களில், விண்வெளியில் இருந்து காசிக்கு பல அணுத்துகள்கள் வருவதாகத் தெரிகிறது. இதை வெளிச்சத்தின் தூறல்கள் என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் இதுவே நம் அனுபவத்தில், நாம் உணர்ந்து அறிந்த உண்மை.

காசி என்பது 168 மைல் பரப்பளவில் அமைக்கப்பட்ட ஒப்பற்ற, நினைத்தற்கே அரிய சக்தி யந்திரம். வருடத்தின் எல்லா நாட்களும், ஒரு நாளின் எல்லா மணிநேரமும் ஓய்வின்றி செயல்படும் ஒப்பற்ற சக்திநிலை. இதுபோல் ஒரு மாபெரும் யந்திரம் அதற்கு முன்பு செய்யப்பட்டதும் இல்லை, அதற்குப் பின் யாரும் முயற்சி செய்யவும் இல்லை.

Related image


சிவன் வடிவமைத்த காசியின் வடிவியல்... !!

168 மைல் சுற்றளவில் 468 சக்தி மையங்கள். அவற்றில் 108 அடிப்படை சக்தி மையங்கள். இதில் 

54 ஆண்தன்மை நிறைந்த சக்தி வடிவங்கள், 54 பெண் தன்மை நிறைந்த சக்தி மையங்கள்

 காசி நகரின் வெளி வட்டம், ‘சௌராசிக்ரோஷி யாத்ரா’ 168 மைல் சுற்றளவு, 

144 சக்திமையங்கள் இந்த வெளிவட்டத்துள் இன்னும் 4 சிறிய வட்டங்களாக, ‘பஞ்சக்ரோஷி யாத்ரா’ 55 மைல் சுற்றளவு, 

108 சக்தி மையங்கள் ‘நகரப் பிரதிக்ஷனா’, 16 மைல் சுற்றளவு, 

72 சக்தி மையங்கள் ‘அவிமுக்த’, நகரைச் சுற்றி 4 சுற்றுகள், 72 சக்தி மையங்கள் ‘அந்த்த க்ருஹ’ காசி விஸ்வநாதர் கோவிலைச் சுற்றி 7 சுற்றுகள், 72 சக்தி மையங்கள் என ஐந்து வட்டங்களில் 468 சக்தி மையங்கள் அமைக்கப்பட்டது. 

இந்த ஒவ்வொரு வட்டத்திலும், வெவ்வேறு அளவிலான சக்தி தீவிரம் இருக்கும். உள்ளே செல்லச் செல்ல, சக்தியின் தீவிரம் அதிகரிக்கும். இது உடலின் பஞ்சகோஷ அமைப்பை குறிப்பதாகவும் இருக்கிறது. 

காசி விஸ்வநாதர் கோவிலும் இதே அமைப்பில் ஆனால் சிறிய அளவில் அமைக்கப்பட்டது. அது மிக மிக நுணுக்கமாக, பலவற்றைக் கணக்கில் கொண்டு அமைக்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து நடந்த படையெடுப்பில் இது தகர்க்கப்பட்டு, இன்று அவ்விடத்தில் மசூதி அமைந்து, இன்றைய கோவில் ஒரு ஓரமாக சின்ன இடத்தில் நிற்கிறது. 

நம் உடலில் மொத்தம் 72000 நாடிகள். இங்கு அமைக்கப்பட்ட சக்தி மையங்களில் தேவையான அளவிற்கு மூலைகளும், கோணங்களும் உருவாக்கி, அவை 72000 மாக பெருகுவதற்கு வழி செய்தனர். கோவிலும் சரி, நகரமும் சரி இதை ஒத்தே இருந்தன. 

ஏன் 5 ? 

பஞ்சபூதங்கள் 5 என்பதாலும், சிவன் பூதேஷ்வரா என்பதாலும், இந்நகரை 5 இன் அடிப்படையில் அமைத்தார்கள். 

 ஏன் 468 ? 

நிலவின் சுழற்சிக் கணக்கில், மூன்று வருடத்திற்கு ஒரு முறை 13 மாதங்கள் இருக்கும். நம் சூரிய குடும்பத்தில் இருப்பது 9 கோள்கள். 4 திசைகள் அல்லது பஞ்சபூதங்களில் ‘ஆகாஷ்’ தவிர்த்து நான்கு அடிப்படைக் கூறுகள். ஆக, 13 x 9 x 4 = 468 சக்தி ஸ்தலங்கள். 

பஞ்ச பூதங்களில் ஆகாஷைத் தவிர்த்ததற்குக் காரணம், நம் உடலின் அமைப்பில், நீர் 72%, நிலம் 12%, காற்று 6%, நெருப்பு (உடல் சூடு) 4%, ஆகாஷ 6%. இதில் மற்ற நான்கையும் நாம் சரியான வழியில் பார்த்துக் கொண்டால் போதும். ஆகாஷ பற்றி நாம் ஏதும் செய்வதிற்கில்லை. 

 ஏன் 108 ? 

நம் உடலில் இருக்கும் சக்தி சக்கரங்கள் 114. இதில் 2 நம் உடல் தாண்டி இருக்கிறது. மீதம் இருக்கும் 112ல், 4 சக்கரங்களுக்கு நாம் ஏதும் செய்ய அவசியம் இருக்காது. மற்ற 108ம் சரியாய் இருந்தால், இந்த நான்கும் தானாய் மலர்ந்திடும். இந்த 108ல் 54 பிங்களா (ஆண்தன்மை), 54 ஈடா (பெண் தன்மை). அதனால் 108 அடிப்படை சக்தி ஸ்தலங்களில் 54 சிவன், மற்றும் 54 தேவி கோவில்கள் அமைக்கப்பட்டன.

காசி நகர அமைப்பே வடிவியல் (geometry) அளவிலும் கணிதவியல் அளவிலும் மிகக் கச்சிதமான, அற்புதமான வடிவமைப்பு. பிரபஞ்சத்தின் சிறு அம்சமான மனிதனும், அந்தப் பிரபஞ்சமும் தொடர்பு கொள்வதற்கான மிக நேர்த்தியான அமைப்பு. இது முழு உயிரோட்டத்தில் இயங்கும் ஒரு மாபெரும் மனித உடலின் பிரதிபலிப்பு. 

முழு உயிரோட்டத்தில், முழுமையான சக்தி அமைப்பில் ஒரு உடல் இயங்கினால், அதுவே பிரபஞ்சத்தை அவனிற்குத் திறந்து வைக்கும். இப்படி பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ளக் கூடிய இடமாகத்தான் காசியை உருவாக்கினார்கள். இங்கே ஒருவர் வாழமுடிந்தால், பிரபஞ்சத்துடன் இவ்வழியில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிந்தால், எவர் தான் காசியை விட்டு வெளியேற சம்மதிப்பார் ? 

468 கோவில்களில், 108 போக, மீதத்தில் 56 விநாயகர் கோவில்கள், 64 யோகினி கோவில்கள், 12 சூரியன் கோவில்கள், 9 நவதுர்கை கோவில்கள், 9 சண்டி கோவில்களும் அடங்கும். இதில் 56 விநாயகர் கோவில்கள் 8 திசைகளில், 7 பொதுமையம் கொண்ட வட்டத்தில் அமைக்கப் பட்டிருக்கிறது. இந்த வட்டத்தில் நடக்க ஆரம்பித்தால், இதன் முடிவு காசி விஸ்வநாதர் கோவிலில் முடியும். 

அதோடு சூரியனின் 12 கோவில்களும் தக்ஷிணாயனத்தில் இருந்து உத்தராயணத்திற்கு நகரும் சூரியனின் திசையை ஒத்து இருக்கிறது. இப்படி படைப்பை உற்று நோக்கி, ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ற வகையில் இயங்கும் வண்ணம் காசி அமைக்கப் பட்டது. 

இது தவிர சிவன், சப்தரிஷிகளை உலகின் வெவ்வேறு மூலைக்கு அனுப்பிய போது, அவர்கள் அவரைப் பிரிய மனமில்லாமல் ஏங்கியதால், அவர்களுக்கு ‘சப்தரிஷி’ பூஜையை கற்பித்து, அதை அவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்தால், சிவனுடன் இருக்கும் உணர்வைப் பெறுவார்கள் என்றும் சொல்லி அனுப்பினாராம். இன்றளவிலும் இப்பூஜை விஸ்வநாதர் கோவிலில் இரவு 7 மணியளவில் நடைபெறுகிறது. அப்பூஜையை உணர்ந்தால் தான் புரியும். 

அப்பூஜையை செய்பவர்களுக்கு அதன் மகத்துவம் தெரியவில்லை எனினும், அதைச் சிறிதும் பிசகாமல் செய்வதால், அவ்விடத்தில் நம்பற்கரிய சக்தி உருவாகிறது. அக்காலத்தில், இந்தப் பூஜை ஒரே நேரத்தில், காசியின் 468 கோவில்களிலும் செய்யப்பட்டது. இதன் தாக்கத்தை வார்த்தைகளில் அடக்கிட முடியாது. இப்படியொரு மாபெரும் உயிரோட்டத்தில் காசி திளைத்திருந்ததை நாம் அனுபவிக்காமல் போனது, நம்முடைய மிகப்பெரும் துரதிர்ஷ்டம் ! 

                                                    - புனித பயணம் வ(ள)ரும்..

Friday 9 February 2018

இராமேஸ்வரம் - 7

Image result for இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்

திருப்புல்லாணி 

திருப்புல்லாணி, இராமநாதபுரம் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தூரத்திலுள்ளது.

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பட்ட திருத்தலம் திருப்புல்லாணி ஆதிஜகன்னாத பெருமாள் கோயில்.

Related image

வைணவர்களின் 108 திருப்பதிகளில் ஒன்றான திருப்புல்லாணி திருத்தலத்தில் தான் ஸ்ரீராமபிரான் தர்ப்பை புல்லின் மேல் படுத்திருந்தாராம். சமுத்திரராஜனின் வருகைக்காகக் காத்திருந்தாராம். அவன் வரத் தாமதப்படுத்தியதால் கோபம் கொண்டு அவன் கர்வத்தை அடக்கி அனுமனின் உதவியுடன் சேதுப் பாலத்தைக் கட்டியதாக ஒரு கதை உண்டு.

Related image

இங்கு ஸ்ரீ ராமன் தர்ப்ப சயனக் கோலத்தில் காட்சி தருவது சிறப்பானதாகும். திருப்புல்லாணி ஸ்ரீ இராமன் தரிசனத்துடன் ராமேஸ்வரம் ஸ்ரீஇராமநாத சுவாமியின் புனித யாத்திரை நிறைவடைகிறது.

★★★★★★★★★★★★★★★★



உங்கள் கவணத்திற்கு…..


மூலவர்: இராமநாதசுவாமி, இராமலிங்கேஸ்வரர்

அம்மன்/தாயார்: பர்வதவர்த்தினி, மலைவளர்காதலி 

Related image

தீர்த்தம்: கோயிலுக்கு உள்ளே 22 தீர்த் தங்களும், கோயிலுக்கு வெளியே 36 தீர்த்தங்களும் உள்ளன. 

புராணபெயர்: கந்தமாதன பர்வதம், திருவிராமேச்சுரம் 

ஆலயத்தின் காலகட்டம்: சுமார் 1000-2000 வருடங்கள் பழமையான திருக்கோயில்.



எங்கே உள்ளது: இராமநாதபுரம் மாவட் டம். மதுரையில் இருந்து 200 கி.மீ. தூரத்தில் இராமேஸ்வரம் உள்ளது.

எப்படிச் செல்வது: இரயில் மூலம் இராமேஸ்வரம் வரலாம். சென்னை, மதுரை, கோவை என்று பரவலாக தமிழகத்தின் எல்லா இடங்களில் இருந்தும் நேரடிப் பேருந்துகள் வருகின்றன. விமானம் மூலம் வருபவர்கள் மதுரை விமான நிலையத்தில் இறங்கி அங்கிருந்து வரலாம். 

எங்கே தங்குவது: இராமேஸ்வரத்திலேயே நல்ல பெரிய ஹோட்டல்கள், விடுதிகள் உள்ளன. தேவஸ்தான விடுதிகளும், சத்திரங்களும் கூட இருக்கின்றன. 

தரிசன நேரம்: காலை 4 மணிமுதல் 1.00 மணி வரை, மாலை 3.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை. 


Rameshwaram ramanatha temple

இராமேஸ்வரம் ஆலயத்தில் நாள்தோறும் நடைபெறும் பூஜைகள்: 

காலை 5.00 மணி - பள்ளியறை தீபாராதனை

காலை 5.30 மணி - ஸ்படிகலிங்க பூஜை

காலை 5.45 மணி – திருவனந்தல்

காலை 7.00 மணி - விளார் பூஜை

முற்பகல் 10.00 மணி – காலசந்தி

பிற்பகல் 12.00 மணி - உச்சிகால பூஜை

மாலை 6.00 மணி – சாயரட்சை

இரவு 9.00 மணி - அர்த்தசாம பூஜை

இரவு 9.30 மணி – பள்ளியறை


பண்டிகைகள் விழாக்கள்: 

இராமநாத சுவாமி கோயிலின் திருவிழாக்கள், ஒவ்வொன்றும் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன. 

மாத விழாவாகக் கார்த்திகை நாள்கள் சுப்பிரமணியருக்கு நடைபெறும். இந்த விழாவின் போது மயில்வாகனத்தில் கார்த்திகேயனை எழுந்தருளச் செய்து இரவு 8 மணிக்குமேல் 9 மணிக்குள் வீதிஉலாவாக எடுத்து வருவார்கள். 

பிரதோஷ நாள்களில் இராமநாதசுவாமி ரிஷப வாகனத்தில் மூன்றாம் பிராகாரத்துக்குள் வலம் வருவார். 

Image result for இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்

வாராவாரம் வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு மேல் தங்கப் பல்லக்கில் பர்வதவர்த்தினி மூன்றாம் பிராகாரத்தில் வலம்வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குவாள். 

சிறப்பு விழாவாகக் கருதப்படுபவை சங்கராந்தி தை(புஷ்ய) மாத முதல் நாள் விழா, மகா கிருத்திகை (திருக்கார்த்திகை தினம்) தெப்போற்சவம் தை மாத பெளர்ணமியன்று பஞ்சமூர்த்தி உற்சவம்.

வைகுண்ட ஏகாதசி, ராம நவமி தினங்களில் இராமருக்கு உற்சவம் நடைபெறும்.

ஆடி, தை மாத அமாவாசை தினங்களில் ஸ்ரீகோதண்டராமர் கருட வாகனத்தில் அக்னி தீர்த்தத்துக்கு எழுந்தருளி சேவை சாதிப்பார், தீர்த்தம் கொடுப்பார். 

இவைபோக,

மகா சிவராத்திரி: 

ரிஷப வாகனத்தில் இராமநாதர் எழுந்தருளி தரிசனம் தருவார். இந்த விழா 10 நாட்கள் நடைபெறும். 

வசந்தோற்சவம்: 

இதுவும் 10 நாள்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. வைகாசி சுக்ல சஷ்டி வைகாசி (மே, ஜூன்)யில் தொடங்கி வைசாக பெளர்ணமி தினத்தன்று நிறைவுபெறும். 

இராமலிங்கப் பிரதிஷ்டை உற்சவம்: 

 ரிஷப வாகனத்தில் சுவாமி எழுந்தருள்வார். மூன்று நாள்கள் நடைபெறும் இந்த உற்சவம், ஜேஷ்ட சுக்ல சுத்த சஷ்டியில் ஆரம்பித்து அஷ்டமியில் முடிவடையும். பக்தர்கள் கண்டிப்பாகக் கலந்து கொண்டு காணவேண்டிய உற்சவம்.

திருக்கல்யாண உற்சவம்: 

வெள்ளி ரதத்தில் ரிஷப வாகனராக சுவாமி காட்சியளிப்பார். இந்த உற்சவத்தின்போது தபசு நாளில் தங்கப்பல்லக்கில் சயனம் சாதிக்கும் திருக்கல்யாண நாளாகப் போற்றப்படுகிறது. 

நவராத்திரி விழா: 

தசரா, விஜயதசமி எனப் போற்றப்படும் இந்த விழா 10 நாள் கள் கொண்டாடப்படுகிறது.

கந்த சஷ்டி (சஷ்டி நாள்): 

ஆறுநாள்கள் அமோகமாக நடைபெறும் விழா.

ஆருத்திரா தரிசனம்: 

பத்து நாள்கள் விமரிசையாகக் கொண்டாடப்படும் விழா. திருவாதிரையன்று ஏழு திரைகள் அமைத்து சபாபதி பெருமான் சந்நிதியில் விமரிசையாக பூஜை நடைபெறும். 

இது தவிர, சீதையின் நினைவாக ஒவ்வொரு ஆங்கில மாதம் 2ஆம் தேதியன்று அம்பிகையை ஒரு மேடையில் எழுந்தருளச் செய்து பஞ்ச விளக்குகள் 108 ஏற்றிப் பூஜை செய்யப்படுகிறது. சுமங்கலி, கன் னிப் பெண்கள் இந்தப் பூஜையில் கலந்து கொள்வார்கள்.

சீரும் சிறப்பும் மிக்க இந்த விழா நாள்களில் இராமேஸ்வரத்தில் தங்கி ஏதாவது ஒரு விழாவையாவது பூரணமாகத் தரிசிப்பவர்களுக்கு சிவபெருமான் அருள்கடாட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Related image

 சரி, வெளியூரிலிருந்து இத்தலத்துக்கு வருபவர்கள் எங்கே தங்கலாம் ? 

இராமேஸ்வரம் பக்தர்கள் தங்குமிடம் பக்தர்கள் வந்தால் தங்குவதற்கான விடுதிகள், இராமேஸ்வரத்தில் நிறையே இருக்கின்றன. நல்ல வசதிகளுடன் அமைந்திருக்கின்றன.

ஆலயத்துக்குச் சொந்தமான யாத்திரிகர்கள் தங்கும் விடுதிகள் பத்துப் பதினைந்து விடுதிகள் உள்ளன. நவீன வசதிகளுடன் கூடிய விடுதிகளைக் குறைந்த வாடகையில் தேவஸ்தானம் அளித்து வருகிறது. இது தவிரவும் ஆலயத்துக்கு அருகிலும் சுற்றுவட்டாரத்திலும் அநேக சத்திரங்களும், ஹோட்டல்களும், ஏராளமான லாட் ஜுகளும் இருக்கின்றன.

devipattinam-rameshwaram

    - திருத்தல புனித யாத்திரை நிறைவடைகிறது..

இராமேஸ்வரம் - 6

22 தீர்த்தங்களை தவிர ஆலயத்துக்கு வெளியேயும் ஏராளமான தீர்த்தங்கள் உள்ளன. அவைகள்:

Image result for ராமேஸ்வரம் 22 தீர்த்தங்கள்

1. வேதாளவரத தீர்த்தம்
2. பாபவிநாச தீர்த்தம்

3. பைரவ தீர்த்தம்

4. சுபிதீர்த்தம்

5. சீதாகுண்டம்

6. மங்கள தீர்த்தம்

7. அமிர் தவாபி தீர்த்தம்

Related image

8. ருணவிமோசன தீர்த்தம்

9. லட்சுமணத் தீர்த்தம்

10. ராம தீர்த்தம்

11. சீதா தீர்த்தம்

12. சுக்ரீவன் தீர்த்தம்

13. அங்கத்தீர்த்தம்
14. ஜாம்பவ தீர்த்தம்

15. கந்தமாதன தீர்த்தம்

16. தருமதீர்த்தம்

17 வீமன் தீர்த்தம்

18. அருச்சுனன் தீர்த்தம்

19. நகுல தீர்த்தம்
20. சகாதேவ தீர்த்தம்
Related image
21. திரெளபதி தீர்த்தம்

22. பிரம்ம தீர்த்தம்

23. அனுமகுண்ட தீர்த்தம்

24 அக்னி தீர்த்தம்

25. நாகதீர்த்தம்

26. அகஸ்திய தீர்த்தம்

27, ஜடாயுதீர்த்தம்

28. தனுஷ்கோடி தீர்த்தம்

29. தேவதீர்த்தம்
30. கஜன தீர்த்தம்

31. சரவண தீர்த்தம்
Related image

32. குமுதம் தீர்த்தம்

33. ஹரன் தீர்த்தம்
34. கனகள் தீர்த்தம்

35. பண்கள் தீர்த்தம்

36. விப்ஷண தீர்த்தம்

ராமேஸ்வரத்தில் தங்கி மேற்கண்ட எல்லா தீர்த்தங்களிலும் நீராடி சகல பாபதோஷங்களிலிருந்தும் நிவர்த்தி பெறலாம்.

ராமேஸ்வரத்தில் தரிசனம் செய்ய மேலும் சில முக்கிய இடங்கள் :

கந்தமாதன பர்வதம் ஸ்ரீ ராம பாத தரிசனம்

ராமேஸ்வரத்திலிருந்து வடக்கே 2 மைலில் கந்தமாதன பர்வதம் உள்ளது. இயற்கையாக அமைந்த உயரமான மணல் மேட்டில் 30 அடி உயரத்தில் பாறைக் கற்களால் உருவாக்கப்பட்ட தளத்தின் மீது இக்கோயில் அமைந்துள்ளது. இதன் உள்ளே ஸ்ரீ ராமனின் திருப்பாதங்கள் உள்ளன. இந்த உயரமான மண்டபத்தின் மீது இன்னொரு மண்டபத்தையும் எழுப்பியுள்ளார்கள்.


Image result for கந்தமாதன பர்வதம்
இந்த மண்டபத்தின் மீது ஏறிநின்று பார்த்தால், ராமேஸ்வரத் தீவின் நான்கு புறங்களையும் காணலாம். நகரின் அழகிய தோற்றத்தையும் தீவிலுள்ள வேறு சில பகுதிகளையும் தெளிவாகப் பார்க்க முடிகிறது. வட இந்திய யாத்திரிகர்கள் இந்த புனிதமான இடத்தை ‘ஸ்ரீ ராமஷருகா’ என்று பக்தி மேலிட அழைக்கிறார்கள்.

ராமேஸ்வரம் ராமநாதர் ஆலயத்தில் நடைபெறும் வசந்த உற்சவத்தின் இரண்டாம் திருநாளன்று ஸ்ரீ ராமநாதசுவாமியும் அம்பாளும் இங்கே வந்து பூஜைகளை ஏற்றுத் திரும்புகின்றனர்.

Related image

கந்தமாதன பர்வதம் பற்றி புராணங்களிலும் வரலாறுகளிலும் குறிப்புகள் உள்ளன. முருகக் கடவுளை எதிர்த்துநின்ற சூரபத்மனைக் கந்தவேளின் தளபதியான வீரபாகு இங்கு தான் சந்தித்தார் என்று கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

தவிறவும் பராக்கிரம பாண்டியனுக்கு உதவுவதற்காக கி.பி. 1169ல் இலங்கை மன்னன் அனுப்பி வைத்த படைவீரர்கள் இங்கேதான் தரை இறங்கினர் என்ற வரலாற்றுத் தகவலும் உண்டு.

ஸ்ரீ ராமபிரான் பாதத்தைத் தன்மீது பதிய வைத்துக் கொண்ட பெருமையை இந்த கந்தமாதனப் பர்வதம் பெற்றிருப்பதுதான் இந்த இடத்தின் சிறப்பம்சம் !

கோதண்டராமர் கோயில் ! 

ராமேஸ்வரத்தின் கிழக்கே அமைந்துள்ளது கோதண்டராமர் கோயில். இந்தத் கோயிலும் புராணத்துடன் தொடர்புடையதுதான்.

விபீஷணன் இங்கு வந்துதான் ஸ்ரீ ராமரைச் சந்தித்து சரணாகதி அடைந்தான். அப்போது லட்சுமணன் விபீஷணனுக்கு முடிசூட்டிய இடம்  இது. கோதண்டம் என்ற ஒப்பற்ற வில்லை ஏந்திநின்றபடியே விபீஷணனுக்கு ராமன் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாகவே, இந்த கோயிலுக்கு கோதண்டராமர் கோயில் என்று பெயர்.

kothandaramar temple-rameshwaram

ராமேஸ்வர ஆலயத்தில் ராமலிங்க பிரதிஷ்டை விழா (மே ஜூன்) நடை பெறும்போது ராமேஸ்வரத்திலுள்ள உற்சவமூர்த்தியான ஸ்ரீராமர் தங்கரதத்தில் எழுந்தருளி, இங்கே விபீஷண பட்டாபிஷேகத்துக்காக வருகிறார்.

அதற்கு முதல்நாள் ராமேஸ்வரம் கடைத் தெருவிலுள்ள திட்டகுடி என்னும் பகுதியில் ராவணவதம் நிகழ்ச்சி நடைபெறும். விபீஷண பட்டாபிஷேகத்துக்கு மறுநாள் ராமேஸ்வரத்தில் ராமலிங்கம் பிரதிஷ்டை விழா வெகு விமரிசையாக நடைபெறும்.

அனுமார் கோயில் 

ராமேஸ்வரத்திலிருந்து வடபுறம் உள்ளது இக்கோயில் ஸ்ரீ ராமரின் சிவலிங்க பிரதிஷ்டைக்காகக் காசி சென்று ஆத்ம லிங்கத்தைக் கொண்டு வந்த அனுமனின் செயலைப் போற்றுவதற்காக எழுப்பப்பட்டுள்ளது இந்தச் சிறிய கோயில்.

மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது என்பதைப் போல சிறிய கோயிலில் இந்த அனுமன் எழுந்தருளியிருந்தாலும் ராமபக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றித் தருபவராக விளங்குகிறார்.

ஏகாந்த ராமர் கோயில் 

இந்தத் திருக்கோயில், ராமேஸ்வரத்திலிருந்து மேற்கே பாம்பனுக்குச் செல்லும் நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ளது.

இந்த ஆலயம் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததாம். இந்தப் பகுதிக்கு வந்த வடநாட்டு பக்தர் ஒருவர் திருப்பணி செய்து ஆலயத்தை மேம்படுத்தியுள்ளார். ஆலயத்தின் உள்ளே ஒரு மகாமண்டப மும் அதையொட்டிய இறைவனின் கருவறையும் சிறப்பாகக் காணப்படுகிறது.

கருவறைக்குள் எழுந்தருளியிருக்கும் மூர்த்திகளான ராமர், லட்சுமணன், சீதா பிராட்டி, அனுமார் ஆகியோரின் கற் சிற்பம் கலையம்சத்துடன் காணப்படுகிறது.

வில்லேந்திய ஸ்ரீ ராமபிரானின் திருமேனி அழகைக் காண கண்கோடிவேண்டும். சீதாப்பிராட்டி, லட்சுமணன் திருமேனியும் அவ்வாறே அழகுற விளங்குகின்றன.

நித்தியப்படி பூஜை மிகவும் சிறப்பாக நடத்தப்படுகிறது.

இங்கு லட்சுமணன், விபீஷணன், சுக்ரீவன், அனுமனுடன் கடற் பாலம் அமைப்பது குறித்து ஏகாந்தமாக ஆலோசனையில் ஈடுபட்டிருந்த போது, கடலின் இரைச்சல் அதிகமாக இருந்ததாம். "இரைச்சலிடாதே" என்று கடலுக்கு உத்தரவு போட்டாராம் ராமர். அன்றிலிருந்து இங்கே கடல் அமைதியாகக் காணப்படுகிறது!

சிறந்த ராமபக்தரும், இசைமேதையுமான தியாகராஜ சுவாமிகள் இந்த ஏகாந்த ராமரின் மேல் பாடியுள்ள இரண்டு கீர்த்தனைகள் மிகச் சிறந்தவை.

 நம்புநாயகி அம்மன் கோயில் 

ராமேஸ்வரத்தின் தெற்கே, தனுஷ்கோடி செல்லும் தேசிய நெடுஞ்சாலைக்கு மேற்கே 2. கி.மீ. தூரத்தில் கோயில் கொண்டிருக்கிறாள் நம்புநாயகி அம்மன்.

ராமேஸ்வரத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அன்னை பர்வதவர்த்தினியின் மற்றொரு வடிவமாக இவள் விளங்குகிறாள் என்கிறார்கள். எல்லைத் தெய்வமான இந்த நம்புநாயகி, நாடிவரும் பக்தர்களின் சகலவிதமான குறைகளைப் போக்கி அருள்கிறாள் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே காணப்படுகிறது.

இந்த அம்மனுக்கு மாசிமாதத்தில் இரண்டு நாட்கள் மிக விமரிசையாக திருவிழா கொண்டாடப்படுகிறது.

கடந்த முந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அம்மன் கோயில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமியின் திருக்கோயிலுக்கு உட்பட்டுதான் இருக்கிறது.

அக்காமடம் தங்கச்சிமடம் 

பத்தினிப் பெண்டிர் இருவரின் செயலைப் போற்றும் விதமாக எழுந்தவைதான் இந்த ஊர்கள்.

சேதுபதி மன்னர்கள் பெரும்பாலும் சிவனின் பக்தர்களாகவே இருந்து வந்திருக்கின்றனர். அப்படி ஒரு சிவனடியாராகவே தன் வாழ்வைக் கொண்டவர் இராமநாதபுரம் சேதுபதி மன்னரான விஜயரகுநாத சேதுபதி.

சீனிநாச்சியார், லட்சுமிநாச்சியார் என்ற தன் இரண்டு பெண்களையும் தண்டத் தேவர் என்பவருக்கு மணம் முடித்துக் கொடுத்தார் முத்துவிஜயரகுநாத சேதுபதி.

சேது யாத்திரைக்கு வரும் பக்தர்களைக் கவனிப்பதற்காகவே தன்னுடைய மருமகனான தண்டத்தேவரை இராமேஸ்வரத்துக்கு ஆளுநராக நியமித்தார்.

பாம்பனிலிருந்து இராமேஸ்வரம் வரை செல்லஅந்தக் காலத்தில் சரியான சாலை வசதி கிடையாது.

இது குறித்து யோசித்து தண்டத்தேவர், புதிய சாலை ஒன்றை அமைக்க இங்கு வரும் யாத்ரிகர்களிடம் சிறிய தொகையை வரிப்பணமாக வசூலித்தார்.

இந்தச் செய்தி மன்னர் காதுக்குப் போனது. புதிய சாலை அமைப்பது நல்ல விஷயம்தான் என்றாலும் தன்னிடம் ஒப்புதல் பெறாமல் வரிவசூல் செய்ததன் மூலம் சிவ பக்தர்களுக்குத் தொந்தரவு கொடுத்து சிவத் துரோகம் புரிந்துவிட்டாரே என்று வெகுண்டு எழுந்தவர், தண்டத் தேவருக்கு மரண தண்டனை வழங்கிவிட்டார்.

தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு தண்டத் தேவரின் மரணத்தைக் கேள்விப்பட்ட அக்கா தங்கை இருவரும் தண்டத் தேவரின் சிதைக்கு வந்து, அதில் விழுந்து உடன்கட்டை ஏறிவிட்டனர். இப்படி இவர்கள் உயிர்விட்ட இடம் தீப்பாஞ்சகாணி. இன்றும் இந்த இடம் தங்கச்சிமடம் அரண்மனைக்கு எதிரே உள்ளது.

இந்த இரு சகோதரிகளின் தியாகத்தைக் கருத்தில் கொண்டு இரண்டு ஊர்களாகப் பிரிந்து அக்காள் மடம் தங்கச்சிமடம் என்று வழங்கப்பட்டு வருகிறது. தங்கச்சிமடத்தில் தான் தண்டத்தேவரின் அரண்மனை உள்ளது.

சீக்கிய மடம்: 

சீக்கிய குருவான குருநானக் ஒருமுறை இலங்கை சென்று திரும்பும் வழியில் இராமேஸ்வரம் தீவில் வந்து இறங்கினாராம். இந்தப் புனிதத் தலத்திலேயே சிலகாலம் தங்கியும் இருந்து இருக்கிறார்.

இராமேஸ்வரத்தில் அவர் தங்கியிருந்த இடத்தைப் பிற்காலத்தில் அவரது தொண்டர்கள் சிலர் கல்லினால் உருவாக்கப்பட்ட அழகிய மண்டபமாகக் கட்டியிருக்கிறார்கள்.

குருத்வாரா அல்லது உதாசிமடம் என்று சீக்கியர்களால் இந்த இடம் போற்றப்படுகிறது. உதாசி என்றால் சீக்கிய உபாசகர் என்று அர்த்தம். எனவே அந்தப் பெயரைக் கொண்டதாகவே இந்த இடம் வழங்கப்படுகிறது.

ஆபில் காபில் தர்ஹா: 

பொதுவாகவே இராமேஸ்வரம் மத நல்லிணக்க பூமியாகவே திகழ்கிறது. ராமேஸ்வரத்தில் பல நூற்றாண்டுகளாக முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் இடையில் நல்ல நேச உறவு தொடர்ந்து நீடித்து வருகிறது. இதற்கு முக்கியமான காரணம் ஒன்று உள்ளது. அதாவது டெல்லியை ஆண்ட அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதியான மாலிக் காபூர் தென்னாட்டின் மீது படையெடுத்து ஆலயங்களை வரிசையாகச் சூறையாடினான். அவனது மதுரைக் கோயில் கொள்ளையை அடுத்து இராமேஸ்வரம் கோயிலையும் கொள்ளையிட வந்துவிட்டால் என்ன செய்வது என்று ராமேஸ்வரம் கோயில் அர்ச்சகர்கள் அச்சமடைந்தனர்.

அப்பொழுது ராமேஸ்வரத்து மரைக்காயர் சிலர் அர்ச்சகர்களுக்கு ஆறுதல் கூறியதுடன் ராமேஸ்வரம் கோயில் திருமேனிகளையும் திருவாபரணங்களையும் அர்ச்சகர்களையும் தங்களது படகுகளில் ஏற்றிச் சென்று பக்கத்திலுள்ள தீவு ஒன்றில் பத்திரமாக ஒளித்து வைத்தனராம். மாலிக்காபூர் திரும்பி டெல்லி சென்ற பிறகே கோயில் திருமேனிகளையும் திருவாபரணங்களையும் அர்ச்சகர்களையும் ராமேஸ்வரத்தில் பத்திரமாகச் சேர்ப்பித்தார்கள்.

Image result for ஆபில் காபில் தர்ஹா

அந்த நல் உறவு காலம் காலமாக தொடர்ந்து வருகிறது.

ஆபில் காபில் தர்கா இராமேஸ்வரத்தில் இஸ்லாமியர்களின் புனித இடமாகப் போற்றப்படுகிறது. இந்த தர்ஹாவின் தீப, தூப செலவுகளுக்காகப் புதுக்கினம் (எக்கக்குடி) என்ற கிராமத்தையே மான்யமாகக் கொடுத்து உள்ளார் ஓர் இந்து மன்னர் .

இந்த தர்ஹா ராமேஸ்வரத்தின் ரயில் நிலையத்துக்குத் தெற்கே உள்ளது.


                               - திருத்தல யாத்திரை வ(ள)ரும்..


இராமேஸ்வரம் - 5

Image result for ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் நந்தி
மலைவளர் காதலி !

பர்வதவர்த்தினி ராமநாத சுவாமியின் பத் தினி. அழகிய தமிழில் "மலைவளர் காதலி” என்று இவள் மீது பதிகம் பாடியுள்ளார் தாயுமானவர். தாயுமானவர் ஒருமுறை, பெரிய போர்ப் படைக்குத் தலைமை ஏற்று இந்த சேதுவுக்கு வந்தாராம் ! எதற்காக ?

ராமேஸ்வரம் ராமநாதர் ஆலயத்தில் விலையுயர்ந்த நகைகளும் பொருட்களும் சிலைகளும் இருக்கின்றன என்பதை டச்சுக்காரர்கள் எப்படியோ அறிந்து கொண்டார்கள். திரிகோணமலைக்குச் சென்று அங்கே உள்ள கோயிலைத் தகர்த்துக் கொள்ளையடித்துவிட்டு அப்படியே ராமேஸ்வரத்திலும் கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டினார்கள்.

இந்தச் செய்தி தாயுமானவருக்குத் தெரியவந்தது. கிட்டத்தட்ட முப்பதாயிரம் பேருடன், அவர்களுக்குத் தளபதியாக பொறுப்பேற்று ராமேஸ்வரத்துக்கு வந்திறங்கினார் தாயுமானவர். அம்பிகை பர்வதவர்த்தினியின் சந்நிதிக்குச் சென்றார். அவளின் எழிலார்ந்த திருவுருவத்தைக் கண்டு பரவசமடைந்து பாடல் புனையத் தொடங்கினார். திருட்டுக் கூட்டம் திரும்பிப் போய்விட்டது.

அந்தப் பாடலை அம்பாள் சந்நிதியின் தென்புறச் சுவரில் வெள்ளைச் சலவைக் கல்லில் வடித்துப் பதித்து வைத்திருக்கிறார்கள்.

இந்த பர்வதவர்த்தினியை வழிபட்டால், குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அம்பாளின் கருவறை ஈசன் சந்நிதிக்கு வலப்புறமாக அமைந்திருப்பது சிறப்பு. ராமேஸ்வரம், திருவானைக்கா, மதுரை, திருமயிலை கபாலீச்சரம் ஆகிய தலங்களில் மட்டுமே அம்பாள் வலப்புறமாகக் குடிகொண்டு இருக்கிறாள்.

பர்வதவர்த்தினி வலமாகவும், அன்னை விசாலாட்சி இடப்புறமாக இந்த இரு லிங்கக் கோயில்களை இங்கே மட்டும்தான் தரிசிக்க முடியும்.

மலைவளர் காதலியான அம்பாளின் சந்நிதியிலுள்ள ஸ்ரீ சக்ரத்தைத் தரிசித்து ஆசிபெறுவது சிறப்பானதாகும்.

அம்பிகையின் அழகு உருவம் !

இத்திருத்தலத்தில் மிகவும் சிறப்பானதாகப் போற்றப்படுகிறது பள்ளிஅறை பூஜை.

 பள்ளியறை, அம்பாள் சந்நிதியின் வட கிழக்கு மூலையில் அமைந்துள்ளது. கண்ணாடியால் ஆனதாக இந்த மாடம் காட்சியளிக்கிறது.

ராமநாதர் சந்நிதியில் உள்ள, தங்கத்தால் ஆன ராமநாதர் விக்ரகத்தை பள்ளியறைக்கு ஒவ்வொரு நாளும் இரவு எழுந்தருளச் செய்வார்கள்.

பள்ளியறையில் இதேபோல தங்கத்தால் ஆன அம்பாள் பள்ளியறை நாயகியாய் விளங்குகிறாள்.

ராமநாதரும் அம்பிகையும் திருப்பள்ளி கொள்வதையும் திருப்பள்ளியெழுச்சி பெற்று மீள்வதையும் பூஜையாகவே கொண்டாடுகிறார்கள்.

அதாவது இரவில் சயன பூஜையும் அதிகாலையில் திருப்பள்ளியெழுச்சி பூஜையும் செய்தபின் ராமநாதரை மூலஸ்தானத் துக்கு எழுந்தருளச் செய்யும் வைபவம் நடைபெறுகிறது.

Rameshwaram ramanatha temple

இந்த இரண்டு பூஜைகளுமே பரவசமூட்டு கின்றன. பள்ளியறையில் திருப்பள்ளியெழுச்சி பூஜையின் போது பக்தர்கள் நீராடி வந்து துதிபாடி தரிசனம் செய்கிறார்கள். அப்படி தரிசனம் செய்ய வரும் அநேக வட இந்திய பக்தர்கள் அழகே உருவான அன்னைக்குக் கால் கொலுசு அணிவித்து மகிழ்கிறார்கள்.

இந்தப் பள்ளியறை நாயகியான அம்பிகையின் உருவம் நேர்த்தியாக அமைந்திருப்பது தனிச் சிறப்பு.

எப்போதும் வலதுகரம்தான் இறைவனின் தோள் சேரும்படி அமைந்திருப்பது வழக் கம். அப்போது வலக்கையுடன் முகமும் மார்பும் அம்பிகை மீது சரிவது போலிருக்கும்.

ஆனால், இங்கே அம்பிகை வலக்கைப் பக்கமாகச் சாயாமல் இடதுபக்கமாகச் சாய்ந்திருக்கும் தோற்றம் கொண்டவளாகக் காணப்படுகிறாள். இதனால் வலது கரத்தை இறைவனின் கையுடன் இணைக்கும் போது முகம் இடதுபுறமாக விலகிப்புது மணப்பெண் நாணி ஒதுங் குவது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. இந்த எழில்மிக்க காட்சி மிகவும் ரசமாக இருக்கிறது.

அம்பிகையின் உருவம் நெளிவு எதுவுமின்றி அடிமுதல் நுனிவரை ஒரே நேர்கோடாக அமைந்திருக்கிறது இப்படி அமைந்திருப்பதை ‘நிர்ப்பங்க வடிவம் என்பார்கள்.

தங்க பந்தனம் என்று சொல்லப்படும் தங்க ஆபரணங்கள் சார்த்தப்பட்ட திருக்கோலத்தில் இங்கே அம்பிகை ஜொலிக்கிறாள். நான்கு கரங்களில் இரண்டில் மலர்களை ஏந்தியும் அபயகரமும், வரத கரமும் கொண்டு உபய பாவனையில் காட்சிதரு கிறாள் அம்பிகை.

பிரம்மாண்ட நந்தி

அம்பிகையின் கோயிலில் இருந்து ராம நாதர் சந்நிதிக்கு வரும் வழியில் உள்ளது நந்தி மண்டபம். சிவதீர்த்தம் வழியாகவும் நந்தி மண்டபம் வரலாம். தஞ்சாவூர், திரு விடைமருதூர் ஆலயங்களில் உள்ள நந்தி போன்றே பிரம்மாண்டமாக இருக்கிறார் நந்திதேவர்.

கி.பி. 16ஆம் நூற்றாண்டில் மதுரை மன்னர் விஸ்வநாத நாயக்கர் ஆட்சியின் கீழ் குறு நில மன்னராக இருந்த சின்ன உடையான் சேதுபதி கட்டத்தேவர் என்பவர் நந்தி மண்டபத்தையும் இன்னும் சில திருப்பணிகளையும் செய்து இருக்கிறார்.

Image result for ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில்

இந்த மண்டபத்திலுள்ள நந்தியின் நீளம் 22 அடி:அகலம் 12 அடி உயரம் 17 அடி. இந்த நந்திச் சிற்பம் செங்கல் மற்றும் சுண் ணாம்பு கலந்து கட்டப்பட்ட சுதைச் சிற்பம் இந்த நந்தி சிற்பத்தின் இருபுறத்திலும் மதுரை மன்னர்களான விஸ்வநாத நாயக் கர், கிருஷ்ணப்பநாயக்கர் ஆகியவரின் உருவங்களும் உள்ளன. நந்தியின் பின்புறம் கொடிமரம் !

இந்த மண்டபத்தின் எதிரே கிழக்கில் நவக்கிரக சலவைக்கல் மேடை இந்த நவக்கிரக மேடைக்கும் முருகன் சந்நிதிக்கும் இடையே ஒரு மேடையில் பெரிய எண்ணெய்க் கொப்பரைச் சட்டியுள்ளது. நரக வேதனையைத் தவிர்க்க வேண்டிக் கொள்ளும் இடம்.

இது கிழக்குப் பார்த்த சந்நிதி. எனவே வாசலில் சூரியன் தேவியுடன் இருக்கிறார். சூரியனின் எதிரே சோமாஸ்கந்தர் மண்டபம் உள்ளது. மகாமண்டபம் என்றும் சொல்லப்படுகிறது.

இருபத்திமூன்றாவது தீர்த்தமாகக் கருதப்படும் சர்வ தீர்த்தம் இங்கே இருக்கிறது. மற்றும் சபாபதி, அம்பலவாணர், சிதம்பரேசர் என்று நடராஜப் பெருமானின் சந்நிதிகள் அமைந்திருக்கின்றன.

கணங்கள் குழுமியிருக்கும் இடத்தில் நடனம் ஆடுபவர் சபாபதி

ஆகாசத்தில் நடனம் ஆடுவர் சிதம்பரேசர்

யோகியர் மட்டுமல்லாமல் எல்லோருக்கும் காட்சி தந்து ஆடுபவர் அம்பலவானர்.


சகஸ்ரலிங்கதரிசனத்தை இங்கே காணலாம். இதுவும் ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாகவே கருதப்படுகிறது. இந்த லிங்கத்தை இங்கே பிரதிஷ்டை செய்தது விபீஷணன் என்று சொல்லப்படுகிறது.

அனுமன் கொண்டு வந்த லிங்கத்துக்கே முதல் பூஜை

அடுத்ததாக உள்ளது, காசிவிஸ்வநாதர் சந்நிதி. 

காசியில் விஸ்வநாதர் சந்நிதி தண்ணிர் நிரம்பிய தொட்டி போன்ற அமைப்பில் உள்ளது போலவே இங்கேயும் விஸ்வநாதரின் கருவறை நீர் விட்டு நிரப்பும் அமைப்பாகவே இருக்கிறது.

அனுமன் கொண்டுவந்த இந்த லிங்கத்துக்கும் அன்னை விசாலாட்சிக்கும் முதல் பூஜை என்ற பெருமையை அளித்தவர் ஸ்ரீ ராமபிரான்.

இந்தக் காசிவிஸ்வநாதர் பூஜை முடிந்த பின்தான் இராமலிங்கம் என்று போற்றி வணங்கப்படுவதும் ஸ்ரீ ராமர் பூஜை செய்த பெருமை கொண்டதுமான இராமநாதருக்குப் பூஜையைத் தொடங்குகிறார்கள்.

இதோ இராமநாத சுவாமியின் மூலஸ்தானம். இங்குள்ள லிங்கம் சீதையால் உருப்பெற்று ஸ்ரீ ராமனால் பூஜை செய்த புனிதம் கொண்டது. 

முன் மண்டபத்தில் உள்ள கேடகம் (ரதம்) ஒன்றில் ஸ்ரீ ராமபிரான், சீதாப்பிராட்டி, அனுமன், சுக்ரீவன் ஆகியோரின் விக்கிரகங்களைத் தரிசிக்கலாம். 

Image result for ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் நந்தி

இங்கே ஆஞ்சநேயர் இரண்டு கைக ளிலும் லிங்கத்தை அணைத்தபடியும், அனுமன் திரும்பி வந்ததை ராமனிடம் தெரிவிக்கும் தோரணையில் சுக்ரீவன் தலைவணங்கி வாய்பொத்திநிற்பதையும் காணமுடிகிறது.

அழகிய வேலைப்பாடுகள் கொண்ட தூண்களை உடைய முன் மண்டபம் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கிறது.

சுவாமிக்கு முன்னால் மரகத ஸ்படிக லிங்கம் வைத்துத்தான் அபிஷேகம் நடக்கிறது. அந்த ஸ்படிக லிங்கத்தின் வழியே மூலவரான இராமலிங்கத்தைத் தரிசிப்பது சிறப்பானதாகும்.

ஐந்து தலைநாகம் குடைபிடித்த கவசம் கம்பீரமாகக் காட்சிதருகிறது. 

திருமேனியில் ருத்திராட்சமாலை, பதக்கங்களுடன் பீடத்தில் காட்சித் தருகிறார் இராமலிங்கம். இரண்டு புறத்திலும் மேலங்கி பட்டு மடிப்பு வீசிய பாவனையில் வீற்றிருக்கிறார்.

 ஓங்கார வடிவில் 9 தங்க விளக்குகள். 25 விளக்குகள் கொண்ட வெள்ளிச் சுடர்விரியும் திருவாட்சி அழகுக்கு அழகு சேர்ப்பதாக விளங்குகிறது. 

இராமநாதரின் சந்நிதிக்குள் விழிமூடி மனம் வழியே இறைவனைத் தரிசித்து இந்தப் பிறவியில் நாம் செய்த பாவ புண்ணியங்களை அவர் முன் சமர்ப்பித்து மனம் உருக வேண்டிக் கொண்டால் வினைகள் விடுபட்டுப் போகின்றன.

இறைவனின் திருமேனியைக் கண்குளிரக் கண்டு சேவித்து மனம் லேசாகிப் பரவச நிலை பெறுவதே சுகானுபவம்தான்.

புனிதத் தீர்த்தங்களும், நீராடல் பலன்களும்…! 

Image result for ராமேஸ்வரம் புனிதத் தீர்த்தம்

இராமநாத சுவாமியின் திருக்கோயிலுக்குள் 22 தீர்த்தங்கள் இருக்கின்றன. அவை களின் பெருமையையும் அமைந்துள்ள இடத்தையும், நீராடினால் கிடைக்கும் பலன்களைப் பற்றியும் பார்ப்போம். 

Image result for ராமேஸ்வரம் 22 தீர்த்தங்கள்

1. மகாலசுஷ்மிதீர்த்தம்: இது கோயிலின் பிரதான வாசலில் அனுமன் சன்னிதிக்கு எதிரில் தெற்கு பக்கத்தில் உள்ளது. இதில் நீராடினால் சகல ஐஸ்வர்யமும் பெறலாம். 

2. சாவித்திரி தீர்த்தம்: அனுமன் கோயிலுக்கு மேல்புறம் உள்ளது. இதில் நீராடி னால் சகல நோய்களும் தீரும். 

3. காயத்ரி தீர்த்தம்: அனுமன் கோயிலுக்கு மேல்புறம் உள்ளது. இதில் நீராடினால் பிறர் தந்த சாபத்திலிருந்து விடுபட லாம். 

Image result for ராமேஸ்வரம் புனிதத் தீர்த்தம்


4. சரஸ்வதி தீர்த்தம்: அனுமன் கோவிலுக்கு மேல்புறம் உள்ளது. கலைகள் வளரும். வித்தைகள் கைகூடும்.

5. சேது மாதவ தீர்த்தம்: இது மூன்றாம் பிராகாரத்தின் மேற்கு பகுதியில் உள்ள தெப்பக்குளம். இதில் நீராடினால் லஷ்மி கடாசுஷ்ம் பெறலாம்.

6. நள தீர்த்தம்: மூன்றாம் பிராகாரம் மேற்கு பகுதியில் உள்ள சேது மாதவர் சன்னிதிக்கு தென்புறம் உள்ளது. இதில் நீராடுவதால் சூரிய தேஜஸை அடைந்து சொர்க்கலோக பதவி அடைவர்.

Related image

7. நீல தீர்த்தம்: மூன்றாம் பிராகாரம் மேற்கு பகுதியில் உள்ள சேது மாதவர் சன்னிதிக்கு வடபுறம் உள்ளது. இதில் நீராடுவதால் சமஸ்த யாகம் செய்த பலனையும் அடைந்து சொர்க்கலோக பதவி அடைவர். 

8. கவாய தீர்த்தம்: இத்தீர்த்தம் மூன்றாம் பிராகாரம் சேது மாதவர் சன்னிதியின் முன்புறம் உள்ளது. இத்தீர்த்தத்தில் நீராடுவதால் உயர் பதவிகிட்டும். தேக ஆரோக்கியம் கிடைக்கும்.

 9. கவாட்ச தீர்த்தம்: இது மூன்றாம் பிராகாரம் சேது மாதவர் சன்னிதியின் முன்புறம் கவாய தீர்த்தத்திற்கு அருகில் உள்ளது. இதில் நீராடுவதால் நரகத்துக்குச் செல்ல மாட்டார்கள். மன வலிமை, தேக ஆரோக்கியம் கிட்டும். செய்த பாவம் குறையும்.

10. கந்தமாதன தீர்த்தம்: சேது மாதவர் சன்னிதியின் முன்பகுதியில் உள்ளது. இதில் நீராடுவதால் மகாதரித்திரம் நீங்கி ஐஸ்வர்ய சித்தியும் பெறுவர். 

11. சங்கு தீர்த்தம்: இராமநாதசுவாமி கோயில் பிரதான வாசல் உட்புறம் தெற்கு பக்கத்தில் இரண்டாம் பிராகாரத்தில் இதில் நீராடுவதால் செய்நன்றி மறந்த சாபம் நீங்கப்பெறும். 

12. சக்கர தீர்த்தம்: இராமநாதசுவாமி கோயில் பிரதான வாசல் உட்புறம் உள்ள இரண்டாம் பிராகாரத்தின் வடபுறம் உள்ள கருவூலத்தின் கீழ்புறம் உள்ளது. இதில் நீராடுவதால் ஊனம், குருடு, செவிடு ஆகியவை நீங்கி செளக்கியம் பெறுவர்.

13. பிரம்மாத்திர விமோசன தீர்த்தம்: இது இரண்டாம் பிராகாரம் வடக்கு பக்கத்தில் பைரவர் சன்னிதி அருகில் உள்ளது. இதில் நீராடுவதால் பிரம்மஹத்திதோஷங்களும், பாவங்களும் நிவர்த்தியாகும். பில்லி சூனியமும் நீங்கும். 

14. சூர்ய தீர்த்தம்: இந்தத் தீர்த்தம் இரண்டாம் பிராகாரத்தில் உள்ள கருவூலத்தில் மேற்கு பக்கம் அமைந்துள்ளது. இந்தத் தீர்த்தத்தில் நீராடுவதால் நடக் கப் போவதை அறியும் ஆற்றல் ஏற்படும். நோய்கள் தீரும். 

15. சந்திர தீர்த்தம்: இது இரண்டாம் பிராகாரத்தில் உள்ள கருவூலத்தின் மேற்கு பக்கம் உள்ளது. இதில் நீராடுவதால் உணவுக்குக் கஷ்டமில்லாத வாழ்க்கை அமை யும். நோய் நொடி விலகும். 

16. கங்காதீர்த்தம்: இத்தீர்த்தம் திருக் கோயிலின் இரண்டாம் பிராகாரத்தில் அமைந்துள்ளது. இதில் நீராட அரசியல் செல்வாக்கு மேலோங்கும். 

17. யமுனா தீர்த்தம்: திருக்கோயிலின் இரண்டாம் பிராகாரத்தில் அமைந்துள்ளது. இதில் நீராடினால் ராஜ வாழ்க்கை அமையும். 

18. கயா தீர்த்தம்: இந்தத் தீர்த்தமும் திருக்கோயிலின் இரண்டாம் பிராகாரத்தில் தான் அமைந்துள்ளது. இதில் நீராட வம்ச விருத்திகிட்டும். 

19. சாத்யாம்ருத தீர்த்தம்: திருக்கோயிலின் அம்பாள் சன்னிதியின் மூலஸ்தான நுழைவாயிலின் அருகே உள்ள அஷ்டல சுஷ்மி சன்னிதியின் தெற்கு பக்கம் உள்ளது. இதில் நீராடினால் தேவதா கோபம் பிராமண சாபம் நிவர்த்தியாவதுடன், மோட்ச பிராப்தி ஆகியவை கிடைக்கும். 

20.சிவதீர்த்தம்: இந்த தீர்த்தம் சுவாமி சன்னிதி நுழைவாயில் மற்றும் அம்மன் சன்னிதி நுழைவாயில் ஆகியவற்றுக்கு இடையே நந்திதேவருக்கு தென்புறம் அமைந்துள்ளது. இதில் நீராடினால் சகல செளபாக்கியமும் கிடைக்கும். 

21. சர்வ தீர்த்தம்: இந்தத் தீர்த்தம் முதல் பிராகாரத்தில் ராமநாதசுவாமி சன்னிதி முன் உள்ளது. இதில் நீராடினால் பிறவிக் குருடு, நோய், நரை திரையும் நீங்கி சுகம் பெறலாம்.

Image result for ராமேஸ்வரம் 22 தீர்த்தங்கள்

22. கோடி தீர்த்தம்: விசாலாட்சி அம்மன் சன்னிதியின் அருகில், ராமர் தன் வில்லால் உருவாக்கிய கோடி தீர்த்தம் அமைந்துள்ளது. இதில் நீராடினால் உலக ஞானம் பெறலாம். கல்வியறிவு கிட்டும்.

Related image

                                              - திருத்தல யாத்திரை வ(ள)ரும்..