Saturday 29 July 2017

அருள்மிகு உத்திராபசுபதீஸ்வரர் (கணபதீஸ்வரர்) திருக்கோயில், கணபதீச்சரம், திருச்செங்காட்டங்குடி , திருப்புகலூர் – திருவாரூர்


இறைவன் சிறுத் தொண்ட நாயனார்க்குப் பைரவர் திருக்கோலத்தில் வந்து பிள்ளைக்கறியமுது கேட்டு அருள்புரிந்த தலம்.   மந்திரபுரீசம், சக்திபுரீசம், இந்திரபுரீசம், ஆத்திவனம், பாஸ்கரபுரீம் என்னும் பல பெயர்கள் கொண்ட ஸ்தலம் ; சிறுத் தொண்டர் வாழ்ந்த மாளிகை இன்று கோயிலாக உள்ள ஸ்தலம்..

🌸🌷🌸🌷 BRS🌸🌷🌸🌷🌸

தொலைபேசி எண் :  +91- 4366 - 270 278, 292 300, +91-94431 13025.

💦🌿💦🌿  BRS 💦🌿💦🌿💦

மூலவர் : கணபதீஸ்வரர், உதிராபதீசுவரர், ஆத்திவனநாதர், மந்திரபுரீசுவரர், பிரமபுரீசுவரர், பாஸ்கரபுரீசுவரர்

உற்சவர் : உத்திராபசுபதீஸ்வரர்

அம்மன்/தாயார் : வாய்த்த திருகுகுழல் உமைநாயகி ( சூளிகாம்பாள்)

தல விருட்சம் : காட்டாத்தி, ஆத்தி

தீர்த்தம் : சத்திய தீர்த்தம், சூரிய தீர்த்தம், அக்கினி தீர்த்தம், சந்திர தீர்த்தம், இந்திர தீர்த்தம்,  இயம தீர்த்தம், வருண தீர்த்தம், வாயு தீர்த்தம், சீராள தீர்த்தம் என்னும் 9 தீர்த்தங்கள்.

ஆகமம்/பூஜை : காமீகம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : கணபதீச்சரம்

ஊர் : திருச்செங்காட்டங்குடி

பாடியவர்கள் : சம்பந்தர், அப்பர், அருணகிரியார்

🅱 தேவாரப்பதிகம்:🅱

தோடுடையான் குழையுடையான் அரக்கன்தன் தோளடர்த்த பீடுடையான் போர்விடையான் பெண்பாகம் மிகப்பெரியான் சேடுடையான் செங்காட்டங் குடியுடையான் சேர்ந்தாடும் காடுடையான் நாடுடையான் கணபதீச் சரத்தானே.  - திருஞானசம்பந்தர்

🌷 தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இது 79வது தலம்.🌷

🅱 திருவிழாக்கள் :🅱

🔵 சித்திரை பரணியில் பிள்ளைக்கறி சமைத்த விழா,

🔵 மார்கழி சதயசஷ்டியில் கணபதி விழா,

🔵 சிவராத்திரி,

🔵 திருக்கார்த்திகை,

🔵 ஐப்பசியில் அன்னாபிஷேகம்.

🅱 தல சிறப்பு:🅱
 
🎭 இத்தல மூலவர் சுயம்பு முர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

 🎭 மூலவர் கணபதீஸ்வரருக்கு வலப்புறம் தனிச்சன்னதியில் உத்தராபசுபதீஸ்வரர் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். காவியுடை அணிந்து, கையில் திருவோடு, திரிசூலம், உடுக்கை வைத்திருக்கிறார்.

🎭 சிவன் சிலையாக மாறியபோது நெற்றியில் சிறிய புடைப்பு இருந்தது. அதனை சிற்பிகள் செதுக்கவே ரத்தம் பீறிட்டது. கலங்கிய சிற்பிகள் பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ வைத்தவுடன் ரத்தம் நின்றது. தற்போதும் நெற்றியில் இந்த காயத்துடன் உத்திராபசுபதீஸ்வரர் காட்சி தருகிறார். சாயரட்சை பூஜையின்போது மட்டும் காயத்தில் பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ வைக்கின்றனர்.

🎭 சித்திரை, ஆடி, ஐப்பசி மற்றும் தை மாதப்பிறப்பன்றும், சித்திரை பரணி, வைகாசி திருவோணம், ஐப்பசி பரணி ஆகிய நாட்களில் 2 முறையும் என மொத்தம் வருடத்திற்கு பத்து நாட்கள் மட்டும் இவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

🎭 சிவபெருமான் ஆடிய நவதாண்டவங்களில் திருசெங்காட்டங்குடியில் ஆடியது உபயபாத நர்த்தனம் எனப்படுகிறது.

🎭 இத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம், தலவிருட்சம் ஆகிய நான்காலும் சிறப்புடையது.

🎭 கணபதி இறைவனை வழிபட்டதால் இக்கோயிலுக்கு "கணபதீச்சரம்" என்று பெயர். ஆலயம் கணபதீச்சுரம் எனவும், ஊர் திருச்செங்காட்டங்குடி எனவும் வங்கி வருகிறது.

🎭 விநாயகர், கயமுகாசூரனைக் கொன்ற பழிதீர இங்கு இறைவனை வழிபட்டார். அசுரனைக் கொன்றபோது அவனுடைய உடற்குருதி படிந்து இப்பகுதி செங்காடாக ஆயினமையின் 'செங்காட்டங்குடி' என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

🎭 சிறுத் தொண்டர் அருள் பெற்றத் தலம்.

🎭 மந்திரபுரி, செங்காடு, சத்தியபுரி, பிரமபுரி, தந்திரபுரி, ஆத்திவனம், பாஸ்கரபுரி, சமுத்திரபுரி, கணபதீச்சரம் ஆகிய ஒன்பது திருநாமங்களைக் கொண்டு விளங்குகின்றது.

🎭 இறைவன் அமர்ந்திருக்க, சிறுத்தொண்டர் அவரை அமுதுசெய்ய அழைக்கும் சிற்பம் இங்குள்ளது.

🎭 விநாயகர், பிரமன், வாசுதேவன், சூரியன், சந்திரன், சத்யாஷாட முனிவர், சிறுத்தொண்டர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோர் வழிபாடு செய்து பேறு பெற்ற தலம்.

🎭 நாயன்மார்கள் வரலாற்றில், சரவணத்துத் தனயரான முருகப் பெருமானுடன் கூட இறைவியாரும் இறைவரும் சோமாஸ்கந்தர் திருக்கோலம் காட்டி அருளியது இத்திருத்தலத்தில்தான் என்ற தனிச் சிறப்பு பெற்றத் திருத்தலமாகும்.

🎭 சுவாமி கருவறை அகழி அமைப்புடையது. மூலவர் கணபதீச்சரமுடையார்.
இங்கு பேழையில் மரகத லிங்கம் உள்ளது.

🎭 சிறுத்தொண்டர் பல்லவ மன்னனின் தளபதியாக 'வாதாபி ' சென்று சாளுக்கியரோடு போர் செய்து வாகை சூடி வந்தபோது உடன் கொண்டு வந்த (வாதாபி) விநாயகரை இக்கோயிலில்தான் பிரதிஷ்டை செய்துள்ளார்.

🎭 சிறுத்தொண்டர் மாளிகை இன்று கோயிலாகவுள்ளது. இங்குச் சிறுத்தொண்டர், உத்ராபதீஸ்வரர் (உற்சவ காலங்களில் வீதி உலா வருபவர் இவரே), திருவெண்காட்டு நங்கை அன்னம் பரிமாறும் கோலத்தில் திருவுருவங்கள் உள்ளன.

🎭 இத்தலத்தில் சில மருந்துப் பொருள்களும் சேர்த்து செய்யப்படும் சீராளங்கறி எனும் பிரசாதம் - அமுது படையல் விழா நாளன்று மட்டுமே கிடைக்கும்; மக்கட்பேறில்லாதவர்கள் உத்ராபதியாரை வழிபட்டு, இப்பிரசாதத்தை உண்டால் புத்திரப் பேறு அடையப் பெறுவர்.

🎭 கல்வெட்டுக்களில் இறைவன், 'செங்காடுடைய நாயனார் ', 'கணபதீச்சரமுடைய மகாதேவர் ', 'கணபதீஸ்வரமுடையார் ' எனவும்; தலத்தின் பெயர் "கயா மாணிக்க வளநாட்டு மருகல் நாட்டு திருச்செங்காட்டங்குடி" என்று குறிப்பிடபடுகிறது.

🎭  சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 142 வது தேவாரத்தலம் ஆகும்.

🅱 நடைதிறப்பு:🅱
 
 🔑  காலை 6.45 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.🔑

🅱 பொது தகவல்:🅱
 
🦋  கிழக்கு நோக்கியுள்ள 5 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் உள்ளது. கோயில் வாயிலில் சத்திய தீர்த்தம் எனப்படும் திருக்குளம் உள்ளது. கோபுரத்தின் உட்புறம் தல விருட்சமான ஆத்தி மரம் உள்ளது. இறைவன் அமர்ந்திருக்க, சிறுத்தொண்டர் அவரை அமுது செய்ய அழைக்கும் சிற்பம் இங்குள்ளது. முன் மண்டபத்தில் வலதுபுறம் அம்பாள் தனி சந்நிதியில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். உட்பிராகாரத்தில் பிட்சாடனர், சிறுத்தொண்டர், அவரது மனைவி திருவெண்காட்டு நங்கை, மகன் சீராளதேவர், அவரது வீட்டு பணியாள் சந்தனநங்கை ஆகியோர் மூலத் திருமேனிகளையும், 63 மூவர் திருமேனிகளையும் தரிசிக்கலாம். பிரம்மா, அர்த்தநாரீஸ்வரர், சித்தி விநாயகர், நால்வர், சங்கபதுமநிதிகள் ஆகிய சந்நிதிகள் அடுத்து உள்ளன. வாதாபி கணபதி தனிக்கோயிலில் எழுந்தருளியுள்ளார்.

🦋 இவ்வாலயத்திலுள்ள அஷ்டமூர்த்தி மண்டபம் கண்டு தொழத்தக்கது. துர்க்கை, வீரட்டலிங்கம், விஸ்வலிங்கம், புஜங்கலளிதர், கஜசம்ஹாரர், ஊர்த்துவதாண்டவர், காலசம்ஹாரர், கங்காளர், பிட்சாடனார், திரிபுராரி, பைரவர், விநாயகர் ஆகியோரின் அருமையான வேலைப்பாடுடைய மூலத் திருமேனிகள் இம் மண்டபத்தில் உள்ளன.

🦋 அட்ட வீரட்ட தலங்களிலுள்ள சுவாமிகளையும் இங்கு தரிசிக்கலாம். தனிச்சன்னதியில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், அசுர மயில் மீது அமர்ந்து காட்சி தருகிறார். அருணகிரியாரால் திருப்புகழ் பாடப்பெற்றவர் இவர்.

🦋 சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள துர்க்கை எட்டு கைகளில் ஆயுதம் ஏந்தி காட்சி தருகிறாள். இவள் ஒரு கையில் வில்லுடன் காட்சி தருவது சிறப்பு. சிறுதொண்டரை கைலாயத்திற்கு அழைத்துச் சென்ற சிற்பம், உள்ளது.

🦋 பிரகாரத்தில் அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, நால்வர், சங்கநிதி, பதுமநிதியுடன் நாகர், இரட்டை பைரவர் இருக்கின்றனர். நவக்கிரக மண்டபத்தில் சூரியன் மட்டும் உயர்ந்த பீடத்தில் காட்சி தருகிறார்.

🅱 பிரார்த்தனை:🅱
 
🌹 செய்த தவறுக்கு பிராயச்சித்தம் வேண்டுபவர்கள் இங்கு சுவாமியிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

🌹 தோஷம், மனக்குழப்பங்கள் நீங்கவும் இங்கு வணங்கலாம். கர்ப்பிணிகள் அம்பிகையிடம் வேண்டிக்கொள்ள சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.

 🅱 நேர்த்திக்கடன்:🅱
 
💥 சுவாமி, உத்திராபசுபதீஸ்வரர், அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்து, அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர.

🅱 தலபெருமை:🅱
 
🍄 உத்திராபசுபதீஸ்வரர்:🍄

🔥 ஐயடிகள் காடவர்கோன் என்ற பல்லவ மன்னர் (63 நாயன்மார்களில் இவரும் ஒருவர்) சிறுத்தொண்டருக்கு இறைவன் காட்சி கொடுத்து அருளியதைக் கேள்விப்பட்டார். சிறுத்தொண்டருக்குக் காட்சி கொடுத்த இறைவனை தானும் தரிசிக்க விரும்பி வேண்டினார். இறைவனும் "சித்திரை திருவோணத்தில் உத்திராபதி உருவம் அமைத்து குடமுழுக்கு செய்தால் யாம் சணபகப் பூ மணம் வீச காட்சி தருகிறோம்" என்று அருளினார். மன்னரின் ஆணைப்படி கொல்லர்கள் உத்தராபசுபதீஸ்வரருக்கு சிலை வடித்தபோது, எவ்வளவு முயன்றும் சரியாக அமையவில்லை. அப்போது அங்கு வந்த அடியவர் ஒருவர், சிற்பிகளிடம் தண்ணீர் கேட்டார். அவர்கள் சிலை சரியாக அமையாத கோபத்தில், உலோக கலவையை கொடுத்துவிட்டனர். அதை பருகிய அடியார், அப்படியே சிலையாக மாறினார். சிவனே சிலையாக அமைந்ததைக் கண்டு மகிழ்ந்த மன்னர், அச்சிலையை இங்கு பிரதிஷ்டை செய்தார். அவ்வேளையில் சிவன், செண்பகப்பூ மணம் கமழ காட்சி தந்தார். இந்த விழா சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தன்று நடக்கிறது. இதை, "செண்பகப்பூ விழா' என்று அழைக்கிறார்கள். இந்நாளில் சுவாமிக்கு பன்னீர் அபிஷேகமும், செண்பகப்பூ மாலையும் சாத்தி அலங்கரிக்கின்றனர்.

🅱 திருப்புகழ் தலம்: 🅱

🔥 இவ்வாலயத்திலுள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நானகு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

🅱 நான்கு அம்பாள்:🅱

🔥 முற்காலத்தில் இப்பகுதியை ஆட்சி செய்த மன்னர் ஒருவருக்கு குழந்தை இல்லை. சிவபக்தரான அவர் புத்திரப்பேறுக்காக சிவனை வேண்டி யாகம் நடத்தினார். சிவன் அசரீரியாக அம்பிகையே அவருக்கு மகளாக பிறப்பாள் என்றார். ஒருசமயம் வேட்டையாடச் சென்றபோது மன்னர் 4 பெண் குழந்தைகளை கண்டார். அக்குழந்தைகளை வளர்த்தார். அவர்கள் பிறப்பிலேயே சிவபக்தைகளாக திகழ்ந்தனர். தகுந்த பருவத்தில் அவர்களை மணந்து கொள்ளும்படி சிவனிடம் வேண்டினார். சிவனும் மணந்து கொண்டார். இந்த அம்பிகையர் நால்வரும் இப்பகுதியிலுள்ள நான்கு தலங்களில் காட்சி தருகின்றனர். இத்தலத்தில் அம்பிகை வாய்த்த திருகுகுழல் நாயகியாகவும், திருப்புகலூரில் கருந்தாழ்குழலியம்மை, கணபதீச்சரத்தில் சரிவார்குழலியம்மை, திருமருகல் தலத்தில் வண்டார்குழலியம்மையாகவும் காட்சி தருகிறாள்.

🅱 தனிக்கோயில் அம்பிகை:🅱

🔥 அம்பிகையர் நால்வருக்கும்,  "சூலிகாம்பாள்'  என்ற பொதுப்பெயர் உள்ளது. ஒருசமயம் இப்பகுதியில் வசித்த அம்பாள் பக்தையான ஏழைப்பெண் ஒருத்தி கர்ப்பமுற்றாள். ஒருநாள் இரவில் அவளது தாயார், ஆற்றைக் கடந்து வெளியில் சென்றுவிட்டாள். அன்றிரவில் பலத்த மழை பெய்யவே, அவளால் கரையைக் கடந்து வீடு திரும்பமுடியவில்லை. அப்போது அம்பிகையே அவளது தாயார் வடிவில் சென்று பிரசவம் பார்த்தாள். எனவே இந்த நான்கு தலங்களிலுள்ள அம்பிகைக்கும் "சூலிகாம்பாள்'  என்ற பெயரும் உண்டு. "சூல்'  என்றால் "கரு'வைக் குறிக்கும்.

🔥 பிரசவம் பார்த்துவிட்டு இரவில் தாமதமாக சென்றதால், அம்பிகை கோயிலுக்குள் செல்லாமல் வெளியில் நின்றுவிட்டாள். எனவே இந்த நான்கு தலங்களிலும் அம்பாள் சன்னதி வெளியில் தனியே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவளுக்கு அர்த்தஜாம பூஜையின்போது மட்டும் சம்பா அரிசி, மிளகு, சீரகம், உப்பு, நெய் கலந்த சாத நைவேத்யம் படைப்பது விசேஷம்.

🅱 வாதாபி கணபதி:🅱

🔥 ஒருசமயம் பரஞ்ஜோதி, போருக்குச் சென்றபோது அங்கிருந்த விநாயகரை வணங்கி போர் புரிந்தார், வெற்றி பெற்றார். வெற்றியின் அடையாளமாக விநாயகரை தமிழகத்திற்கு கொண்டு வந்தார். கஜமுகாசுரனை அழித்ததற்காக விநாயகர் தோஷ நிவர்த்தி பெற்ற இத்தலத்தில், பிரதிஷ்டை செய்தார். இதன்பிறகே தமிழகத்தில் விநாயகருக்கு உருவ வழிபாடு உண்டானதாக சொல்வர். எனவே இவரை "ஆதிவிநாயகர்' என்றும் அழைக்கிறார்கள். தனிச்சன்னதியில் இருக்கும் இந்த விநாயகர், இரு கால்களையும் மடக்கி அமர்ந்திருக்கிறார். சதுர்த்தி திதியில் விசேஷ பூஜை நடக்கிறது. விநாயகருக்கு சிவன் ஒரு மார்கழி மாத சதயம் நட்சத்திரத்துடன் கூடிய, சஷ்டி திதியன்று தோஷ நிவர்த்தி செய்ததாக ஐதீகம். இதன் அடிப்படையில் மார்கழி சதய நட்சத்திரத்தன்று சுவாமிக்கு விசேஷ பூஜை, வழிபாடு மற்றும் விநாயகர் புறப்பாடு நடக்கிறது.

🌺 சிறுத்தொண்டர் வரலாறு:🌺

🎸 இந்த நாயனாரின் இயற்பெயர் - பரஞ்சோதியார்; ஆயுர்வேதக்கலையும் அலகில் வட நூற்கலையும், தூய படைக்கலத் தொழிலும், பயின்றவர்; மதயானையையும், குதிரையையும் ஏறி நடத்துவிக்கும் ஆற்றலில் தேவர்களிலும், மண்ணுலகத்தோர்களிலும் மேம்பட்ட நிலையினர். பலகலைகளையும் பயின்றதன் முடிவாக சிவபெருமானின் கழல் அடைவதே ஞானம் என்ற உணர்வு ஓங்க, இறைவன் கழலுக்கு இவர்பால் பெருகிய அன்பு பள்ளத்தில் வீழும் நீர் போல அமைந்த பண்பினர். ஈசன் அடியார்க்கு இயல்பாகப் பணிசெய்யும் நலத்தவர்.

🎸 மன்னவனுக்குப் போர்த் தலைவராகச் சென்று பல நாடுகளை வென்று, பின் வாதாபியையும் வென்று, பெரும்பொருள் கொணர்ந்து குவித்தார். சிவனடிமைத் திறத்தினர் என்ற இவர் நிலை அறிந்த மன்னன், தன் தவறை உணர்ந்து நிறைந்த நிதிக் குவியல்களைக் கொடுத்து சிவத் தொண்டு சிறப்பாக செய்க என விடை கொடுத்து அனுப்பினான். முன்போல கணபதீச்சரத்தில் தொண்டுகள் செய்தார். சிவனடியார்களுக்கு சிறந்த பணி செய்ய திருவெண்காட்டுநங்கை என்ற நற்குண நங்கையை மணந்தார். சிவனடியார்களை நாள்தோறும் அமுது செய்வித்து அகமகிழ்ந்துப் பின் தான் உண்ணும் உயர்ந்த தவத்தை மேற்கொண்டு, நியதி வழுவாமல் வாழ்ந்து வந்தார். வரும் சிவனடியார்களை இனிய மொழிகள் கூறித் தாழ்ந்து வணங்கிப் போற்றி வழிபடுதலால் சிறுத்தொண்டர் என அழைக்கப்பட்டார். இவ்வாறு சிறந்த இவரது மனையறத்தின் வேராக விளங்கிய திருவெண்காட்டுநங்கை வழி சீராளர் எனும் மைந்தர் அவதரித்தார். இவரது செயற்கரிய பக்தியின் நிலையை உலகறியச் செய்யும் பெருங்கருணையுண்டன் வயிரவக் கோலத்துடன் திருச்செங்காட்டங்குடி வந்து சேர்ந்தார் சிவபெருமான்.

🎸 பெரும் பசியுடையவர் போல சிறுத்தொண்டர் இல்லம் சென்று "தொண்டனார்க்கு எந்நாளும் சோறளிக்கும் திருத்தொண்டர் வண்டார் பூந்தாரார் இம்மனைக் குள்ளாரோ?"  என வினவினார். இவரது கோலம் கண்டு, மாதவம் மிக்கவர் இவரென சந்தனத் தாதையார் உணர்ந்து அவரிடம்  "அமுது செய்விக்க எல்லையில் புகழ் அடியவரைத் தேடி அவர் சென்றுள்ளார்; எம்மை ஆளுடையவரே இல்லத்தில் எழுந்தருளி இரும்"  என்றார். "பெண்கள் தனித்திருக்கும் இடத்தில் தனியாக நாம் புகோம்"  என அகலும் நிலையில், திருவெண்காட்டுநங்கையார் முன்வந்து  "அம்பலவர் அடியவர் எவரையும் அமுது செய்விக்கக் காணாதவராய் தேடிப் போயுள்ளார்; உடன் வந்துவிடுவார்; எழுந்தருள்க!"  எனக் கூறினார். இறைவனார் அவரிடம் "ஒப்பில் மனையறம் புரப்பீர் உத்திராபதியுள்ளோம்; செப்பருஞ்சீர் சிறுத்தொண்டர் தமைக் காணச் சேர்ந்தனம் யாம்; எப்பரிசு அவர் ஒழிய இங்கு இரோம்; கணபதீச்சரத்தின் கண் வண்ணமலர் ஆத்தியின் கீழ் இருக்கின்றோம்; மற்றவர் தாம் நண்ணினால் நாமிருந்த பரிசுரைப்பீர்"  எனக் கூறி அகன்றார்.

🎸 அடியவர் எவரையும் காணாது வருந்தி மீண்ட சிறுத்தொண்டரிடம், மனைவியார் பயிரவர் கோலத்தில் வந்த அடியவர் விபரம் கூறினார். விரைந்து எய்தி பயிரவக் கோலம் கொண்டிருந்தவரைக் கண்டு திருப்பாதம் பணிந்து நின்ற சிறுத்தொண்டரை நோக்கி "நீரோ பெரிய சிறுத்தொண்டர்?!" என இறைவனார் வினவ, "நீறணிந்த அடியவருடன் போற்றப் போதேன்; ஆயிடினும் நாதன் அடியவர் கருணையோடு அப்படி அழைப்பர்"  எனச் சொல்லி  "அடியேன் மனையில் எழுந்தருளி அமுது செய்ய வேண்டும்" என்றார். அவரிடம் "பயிரவர் உத்திராபதியாகிய நாம் நிகழும் தவத்தீர், உமைக் காணும் படியால் வந்தோம்; எனக்குப் பரிந்தூட்டும் அரிய செய்கை உமக்கு இயலாது"  என்றார்.

🎸 "சிவபெருமான் அடியவர் தலைப்படின் தேடமுடியாததில்லை"  எனச் சொன்ன சிறுத்தொண்டரிடம்  "ஆறுமாதத்திற்கு ஒருமுறைதான் உணவு கொள்வோம்; பசு வீழ்த்திட்டு உண்போம் அதற்கான நாள் இன்று; ஊட்ட உனக்கு அரிது"  என்றார். "விபரம் கூறினால் செய்வேன் எனக்கு அரியதில்லை"  என்றவரிடம் "ஐந்து வயதிற்குட்பட்ட உறுப்பில் குறையில்லாத குழந்தை, ஒரு குடிக்கு ஒரு மகனாகத் தந்தை அரியத் தாய் பிடிக்கும் போது அவர்கள் மனம் உவந்து குறையின்றி அமைக்கும் கறியே நாம் உண்பது" என்றார். "அடியேனுக்கு இதுவும் அரிதன்று, எம்பெருமான் அமுது செய்யப் பெறில்" என்ற சிறுத்தொண்டர் மனைவியாரிடம் விபரம் கூறினார். "பொருள் கொடுத்தால் குழந்தை தருவார் உளரோ?! குழந்தையை பெற்றோர் அரிவார் இல்லை; தாழாமல் நாம் பெற்ற மகனை அழைப்போம் நாம்" என்றார். பாடசாலையில் இருந்து சீராளனை அழைத்து வந்து அரியசெய்கை செய்து, அமுதாக்கி பயிரவர் கோலம் பூண்டுள்ள அடியவரை அமுதுக்கு எழுந்தருளச் செய்தபோது, "தலைக்கறி நாம் விரும்பி உண்பது"  எனத் தெரிவிக்க, சிறுத்தொண்டர் அது உதவாது என ஒதுக்கியதால் அஞ்ச, தாதியார் எதிர்பார்த்துத் தானே பக்குவம் செய்த தலைக்கறியை கொண்டு வந்து கொடுத்தார். "தனியே உண்ண மாட்டேன் ஈசன் அடியார் எவரேனும் இருப்பின் கொணர்க"  என்றார் அடியவர் சிறுத்தொண்டர் வெளியில் எவரையும் காணாது, மீள வந்து பயிரவக் கோலம் கொண்ட அடியவரிடம் "இகத்தும் பரத்தும் இனியாரைக் காணேன்; யானுந் திருநீறு சகத்தில் இடுவார் தமைக்கண்டே இடுவேன்" எனத் தாழ்ந்து இறைஞ்சினார். "உம்மைப் போல் நீறிட்டார் உளரோ?! எம்முடன் உண்பீர் நீர்"  என்றார். அடியவரை உண்ணத் தொடங்குவிக்கும் நோக்குடன் சிறுத்தொண்டர் உண்ணத் தொடங்க, பயிரவர் வேடத்திலிருக்கும் இறைவர் தடுத்தருளி "ஆறு மாதத்திற்கு ஒருமுறை உண்ணும் நான் உண்ணத் தொடங்கும் அளவு பொறாது, நாளும் உண்ணும் நீ முன்பு உண்பதென்?! உன் மகனை அழை" என்றார். "இப்போது உதவான் அவன்" என்றவரிடம்,  "நாடி அழையும்"  என்று பயிரவர் சொல்ல, தொண்டர் தன் மனைவியாருடன் வெளியே வந்து  "மைந்தா வருவாய்"  என அழைத்தார்; அவர் மனைவியார்  "செய்ய மணியே சீராளா! வாராய் சிவனார் அடியார் யாம், உய்யும் வகையால் உடன் உண்ண அழைக்கின்றார்" அழைத்தார். பாடசாலையினின்றும் வருபவன் போல் சீராளத்தேவர் ஓடிவர, எடுத்துத் தழுவிக் கணவன் கையில் கொடுக்க, இருவரும் உள்ள சென்றபோது, பயிரவர் மறைந்தருளி, மலை பயந்த தையலோடு சரவணத்துத் தனயரோடும் சோமாஸ்கந்தராக விண்ணில் காட்சியளித்து அவர்கள் அனைவருக்கும் சிவானந்த வீடுபேறு அருளினார் இறைவனார்.
 
🅱 தல வரலாறு:🅱
 
 ⛱  கஜமுகன் என்னும் யானை முகம் கொண்ட அசுரன், தேவர்களை துன்புறுத்தி வந்தான். தேவர்கள் கஜமுகாசுரனிடமுருந்து தங்களைக் காக்கும்படி சிவனை வேண்டினர். சிவபெருமான் கணபதியை அனுப்பி அசுரனை சம்ஹாரம் செய்தார்.

⛱ இதனால் கணபதிக்கு தோஷம் உண்டாகவே, பூலோகம் வந்து சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து தவமிருந்தார். சிவன் அவரது தோஷம் நீக்கியருளினார். மேலும் அவரது வேண்டுதலுக்காக அவர் தவமிருந்த இடத்தில் லிங்கமாக எழுந்தருளி கணபதீஸ்வரர் என்றும் பெயர் பெற்றார்.

 ⛱ இத்தலமும் கணபதீச்சுரம் என்று பெயர் பெற்றது. விநாயகரால் சம்ஹாரம் செய்யப்பட்ட கஜமுகாசுரனின் செங்குருதி (ரத்தம்) இப்பகுதியில் காடாய்ப் பெருகியமையால் இத்தலம் "திருச்செங்காட்டங்குடி" எனப் பெயர் பெற்றது.

🅱 சிறப்பம்சம்:🅱
 
Ⓜ அதிசயத்தின் அடிப்படையில்:

♻  இத்தல இறைவன் சுயம்பு முர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

♻  விநாயகப் பெருமான் கஜமுகாசுரன் என்ற அசுரனை அழித்தபோது, அவன் உடம்பிலிருந்து வெளிப்பட்ட இரத்தம் அந்த இடம் முழுவதும் பரவியதால் செங்காடு என்று பெயர் பெற்றது. இங்கு விநாயகப் பெருமான் அத்தி மரத்தின்கீழ் பூசித்த சிவலிங்கம் உள்ளது.

♻ இறைவனார், அடியார் பொருட்டு பூமியில் வந்து, தம் பாதம் தோய நடந்து அருள் செய்தத் திருத்தலங்களான சிதம்பரம், திருஆலவாய், திருவாரூர், திருக்கச்சூர் ஆலக்கோயில், திருகுருகாவூர் வெள்ளடை, திருஅம்பர்மாகாளம், திருமறைக்காடு, திருவாய்மூர், திருப்பஞ்ஞீலி, திருப்பெருந்துறை, திருச்சாய்க்காடு, திருவெண்ணைநல்லூர், திருநாவலூர் ஆகிய தலங்கள் வரிசையில் இத்தலம் இறைவன் உத்திராபதீஸ்வரராகத் தோன்றி, சிறுத்தொண்ட நாயனார் இல்லம் முதலாக கணபதீச்சர ஆலய ஆத்திமரம் வரை தனது பொற்பாதம் பதித்த சிறப்புடையது.

♻ இவ்வாலயத்திற்கு சம்பந்தர் பதிகங்கள் இரண்டு, அப்பர் பதிகம் ஒன்று ஆக மொத்தம் மூன்று பதிகங்கள் இருக்கின்றன. சம்பந்தர் திருநாகைகைகாரோணம், கீழ்வேளூர் ஆகிய திருத்தலங்களை தரிசித்துக் கொண்டு திருசெங்காட்டங்குடி வந்தார். சிறுத்தொண்டர் சம்பந்தரை வரவேற்று அவருடன் திருக்கோவிலை அடைந்து இருவரும் இறைவனைப் பணிந்தனர். சம்பந்தர் தனது இரு பதிகங்களில் ஒன்றான "பைங்கோட்டு மலர்ப் புன்னைப் பறவைகாள்" என்று தொடங்கும் பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் சிறுத்தொண்டர் இவ்வாலய இறைவனுக்கு செய்து வந்த பணியினைப் போற்றி சிறப்பித்துப் பாடியுள்ளார்.


🅱 இருப்பிடம்:🅱

✈திருவாரூர் மாவட்டத்திலுள்ள நன்னிலத்தில் இருந்து நாகூர் செல்லும் சாலை வழியில் திருப்புகலூர் அடைந்து, அங்கிருந்து தெற்கே திருக்கண்ணபுரம் செல்லும் சாலை வழியாகச் சென்று திருசெங்காட்டங்குடி தலத்தை அடையலாம்.

✈ நன்னிலத்தில் இருந்து சுமார் 28 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. திருசெங்காட்டங்குடியில் இருந்து அருகில் உள்ள திருமருகல், திருசாத்தமங்கை, திருப்புகலூர் ஆகிய மற்ற சிவஸ்தலங்களையும் தரிசிக்கலாம்.

✈ திருவாரூரில் இருந்து சன்னாநல்லூர் வழியாக 24 கி.மீ., தூரத்திலுள்ள திருப்புகலூர் சென்று அங்கிருந்து 4.5 கி.மீ. சென்று இக்கோயிலை அடையலாம்.

❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃
 🏹 தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்🏹
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

Thursday 27 July 2017

அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், சென்னிமலை – ஈரோடு

கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் நடந்த தலம் ; அருணகிரிநாதருக்கு படிக்காசு வழங்கிய தலம் ; முருகன் தன்னைத்தானே பூஜித்த தலம் ; இடும்பனுக்கு பொதிகை மலை செல்ல வழிகாட்டிய மிகவும் விசேஷமான தலம்..

🔵⚜🔵⚜ BRS🔵⚜🔵⚜🔵

தொலைப்பேசி : (04294) 250223, 292263, 292595.

🦋🎸🦋🎸 BRS🦋🎸🦋🎸🦋

மூலவர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி)
 
அம்மன்/தாயார் : அமிர்த வல்லி, சுந்தர வல்லி

தல விருட்சம் : புளியமரம்

தீர்த்தம் : இந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், இமையன் தீர்த்தம், காசியப தீர்த்தம், பட்சி தீர்த்தம், சிவகங்கை, மாமாங்க தீர்த்தம், வரடி தீர்த்தம், காளி தீர்த்தம், தேவி தீர்த்தம், செங்கழுநீர், வாவி விஷ்ணு தீர்த்தம், சாரதா தீர்த்தம், மார்கண்டேய தீர்த்தம் (தெப்பக்குளம்) முதலிய பல தீர்த்தங்கள் உள்ளன.
 
 ஆகமம்/பூஜை :  காரண, காமிக ஆகமம்

பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : புஷ்பகிரி, கரைகிரி, மகுடகிரி

ஊர் : சென்னிமலை
 
🅱 திருவிழாக்கள் :🅱
 
🌻 சித்திரை வருட பிறப்பு.

🌻 சித்ரா பௌர்ணமி.

🌻 வைகாசி விசாகம்.

🌻 ஆடி அமாவாசை.

🌻 ஆடி கிருத்திகை.

🌻 கந்தர் சஷ்டி - சூரசம்ஹாரம்.

🌻 கார்த்திகை தீபம்.

🌻 தைப்பூசம் - ரதம் உலா.

🌻 பங்குனி உத்திரம் - ரதம் உலா.
 
🅱 தல சிறப்பு:🅱
 
🎭 பச்சைப்பசேலென்ற மரங்கள் நிறைந்த நீண்ட திருமலையின் அடிவாரத்திலிருந்து 1749 அடி உயரத்தில் சென்னிமலை ஞான தண்டாயுதபாணி எழுந்தருளியுள்ள திருக்கோயில் அமைந்துள்ளது.

🎭 தண்டாயுதத்தை வலக்கரத்தில் ஏந்தி, இடது திருக்கரத்தை இடுப்பில் வைத்து, பேரொளியும், பேரழகும், பெருங் கருணையுமாக அழகு தரிசனம் தருகிறார் முருகப்பெருமான்.

🎭 இங்குள்ள முருகப்பெருமானுக்கு இரண்டு தலைகள் உள்ளன. இது போன்று எந்த தலத்திலும் கிடையாது. அக்னிஜாத மூர்த்தி என்பது இதுவாகும்.

🎭 மலைகளில் தலைமையானது என்று பொருள் தரும் சென்னி மலையில்தான் அழகு முருகன் இப்படி அற்புதக் காட்சி தருகிறார்.

🎭 இந்தக் கோயிலில், ஞான தண்டாயுதபாணியாக முருகப் பெருமான் திருக்காட்சி தந்தாலும், இரண்டு தேவியரும் தனிச் சந்நிதியில் அருள்கிறார்கள்.

🎭 மூலவர் ஞான தண்டாயுதபாணி சந்நிதிக்குப் பின்புறம் இருக்கும் படிக்கட்டுகளின் வழியாக மேலே சென்றால், வள்ளி, தெய்வானை ஆகியோரின் சந்நிதிகளைத் தரிசிக்கலாம். இருவரும் அமிர்தவல்லி, சுந்தரவல்லி என்ற பெயர்களுடன்  சென்னிமலையில் தவம் இருந்து முருகப் பெருமானை மணந்துகொண்டதாக ஐதீகம். இருவரின் திருமேனிகளும் பிரபையுடன் ஒரே கல்லில் வடிக்கப்பட்டிருப்பது சிற்பக்கலையின் தனிச்சிறப்பு.

🎭 மூலவர் செவ்வாய் அம்சமாகவும்   நவகிரஹங்களில் எட்டு கிரஹங்கள் அழகிய தேவ கோஷ்டங்களில்  பாங்குடன் அமைந்தும் அருள்பாலிக்கின்றனர்..

🎭 மலையாண்டவர் கோயிலுக்கு மேற்கே மாமுருகனை அடைய தவமிருந்து மாலையிட்ட வள்ளி தெய்வானையின் ஆலயம் அமைந்துள்ளது. ஒருகல்லில் வடிவமைக்கப்பட்ட இவ்விருவரின் கற்சிலைக்கு நடுவில் கீழே ஒரு அற்புத லிங்கமும் இச்சிலையிலே இருக்கிறது.

🎭  சிரகிரி என வழங்கப்படும் சென்னிமலை சுமார் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிராத்தனைச் சிறப்புமிக்க மலைக்கோயிலாகும்.

🎭 18 சித்தர்களுள் ஒருவரான புன் நாக்கு சித்தர் வாழ்ந்து முத்தியடைந்த திருத்தலம். அவர் தவமிருந்த குகை ஒன்றும் உள்ளது.

🎭 மூலவரை வழிபட்டாலே நவகிரகங்களை வழிபட்ட பலன் உண்டு.

🎭 ஸ்ரீஅருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்றுள்ளது.

🎭 முருகப் பெருமானால் அருணகிரிநாதருக்கு படிக்காசு வழங்கப் பெற்றத்திருத்தலம்.

🎭 இரண்டு காளை மாடுகளைப் பூட்டிய மாட்டு வண்டி ஒன்று இந்த மலை படிக்கட்டுகள் வழியே ஏறிச்சென்று மலை உச்சி அடைந்த சம்பவம் இங்கு சமீபத்தில் நடந்த அற்புதம்.

🎭  தேவராய சுவாமிகள் என்ற முருகபக்தர் இயற்றிய  'கந்த சஷ்டி கவசம்'  என்ற முருகன் மீதான கவசத்தை அரங்கேற்ற முருகனை வேண்டிய போது முருகனே கனவில் தோன்றி சென்னிமலை தலத்திலே வந்து அரங்கேற்றம் செய்ய அருளினார். அதன்படி இந்த சென்னிமலை தலத்திலே 'கந்த சஷ்டி கவசம்'  என்ற கவசமாலை அரங்கேற்றம் செய்யப்பட்டது.

🎭 தினசரி அபிஷேகம் மற்றும் நைவேத்திய  காரியங்களுக்கு திருக்கோயிலில் பராமரிக்கப்பட்டு வரும் இரண்டு அழகிய பொதி காளைகள் மூலம் தினமும் அடிவாரத்திலிருந்து திருமஞ்சனத் தீர்த்தம் மலைக்குக் கொண்டு செல்லும் சிறப்பு தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லாத தனிச்சிறப்பு.
 
🅱 நடை திறப்பு:🅱
 
🗝 தினசரி காலை 5:30 மணிக்கு  கோ பூஜை நடைபெற்ற பின்னர் மலைக்கோவில் சன்னதி காலை 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் வழிப்பாட்டிற்குத் தடையின்றி பகலில் நடை சாத்தப்படாமல் அர்ச்சனை பூஜை செய்யப்பட்டு, இரவு அர்த்தஜாம பூஜை முடிவுற்ற பின்னர் 8:15 மணிக்குச் சன்னதி நடை சாத்தப்பட்டு வருகிறது.🗝

🅱 பூஜை விபரம் :🅱

🍁 மூலவருக்கு தினசரி ஆறுகால பூஜை நடைபெறுகிறது.

☂ காலை 7:00 மணி - விளாபூஜை.

☂ காலை 8:00 மணி - கால சந்தி.

☂ பகல் 12:00 மணி - உச்சிகால பூஜை.

☂ மாலை 5:00 மணி - சாயரட்சை.

☂ இரவு 7:00 மணி - இராக்காலம்.

☂ இரவு 8:00 மணி - அர்த்தசாமம் பூஜை.

🅱 பொது தகவல்:🅱

💲 சஷ்டி விரத மகிகை:💲

🦋 கந்தர் சஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்யப்பட்ட இத்தலத்தில், பிரதி மாதம் வளர்பிறை சஷ்டி திருநாளிலும், ஐப்பசி மாதம் கந்தர் சஷ்டி திருவிழா, ஆறாம் நாளில் எண்ணற்ற பக்தர்கள், சந்தான பாக்கியம் வேண்டி விரமிருப்பது தொன்று தொட்ட நோன்பாகும். இதை முன்னோர்கள், சஷ்டியில் இருந்தால், அகப்பையில் வரும்' எனக்கூறுவர். குழந்தை வரம் வேண்டி முறையாக, சஷ்டி விரதம் கடைபிடிப்போருக்கு, சென்னிமலை ஆண்டவர் குழந்தைப்பேறு அருள்வது கண்கூடானது. குழந்தை வரம் வேண்டுவோரும், வரத்தின் பலன் கிடைத்த பின்னரும், குழந்தைகளோடு வளர்பிறை சஷ்டித்திருநாளில், ஆண்டவரை தரிசித்து செல்வது இன்னும் தொடர்கிறது.

🅱 சஞ்சீவி மூலிகைகள்:🅱

🦋 நோய் தீர்க்கும் வல்லமை கொண்ட, சஞ்சீவி மூலிகைகள் பல, சென்னிமலை மலையில் உள்ளன. இம்மலையில் வெண்சாரை, வெண்தவளை, கானாச்சுனை, கெயாத எட்டி, கரநொச்சி முதலிய சஞ்சீவி மூலிகைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

🦋 உடற்பிணி நீங்க வேண்டி, பல தலங்கள் சென்று வழிபட்டு, இத்தலத்தை வந்தடைந்து, சென்னிமலை ஆண்டவனை வணங்கி, நோய் நீங்க பெற்ற சோழ அரசரான சிவாலயச் சோழன், அதற்கு பரிகாரமாகவே, மலைக்கோவிலை அமைத்தார், என்பர்.

🅱 பிரார்த்தனை:🅱
 
🌹 ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருப்பவர்கள், கோயிலுக்கு வந்து முருகப்பெருமானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால், செவ்வாய் தோஷம் நீங்கிவிடும் என்பதும் பக்தர்களது நம்பிக்கை.

🌹 கல்யாணத்தடை நீங்குகிறது. குழந்தை பாக்கியம் கைகூடுகிறது. தவிர செவ்வாய் தோஷம் நீங்குகிறது. இத்தலம் பிரார்த்தனைத் தலங்களில் முக்கியமானது. நோய் நீக்கம், துன்ப நீக்கம், ஆயுள் பலம், கல்வி, அறிவு, செல்வம், விவசாயம் செழிப்பு ஆகியவற்றைப்பெற இத்தலத்தில் முருகனிடம் வேண்டுகிறார்கள்.

🌹 இயற்கை மூலிகை மரங்கள் செடி கொடிகள் நிறைந்த மலையாக இருப்பதால் இங்கு வரும் ரத்தகொதிப்பு ஆஸ்துமா நெஞ்சுவலி நோய்கள் உடையவர்கள் குணமாகிறார்கள். இது இத்தலத்துக்கு அடிக்கடி வந்து போகும் பக்தர்கள் அனுபவப்பூர்வமாக கண்ட உண்மை என தெரிவிக்கிறார்கள்.

🌹 திருமணமான தம்பதியர் சந்தான பாக்கியம் வேண்டி, மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபடுவதும், தீர்க்கசுமங்கலியாக இருப்பதற்குச் சந்நிதியின் முன்பு நின்று மாங்கல்யச் சரடு கட்டிக்கொள்வதும் வழக்கமாக இருக்கிறது. அதேபோல் இந்தக் கோயிலில் அமைந்திருக்கும் புளியமரத்தில் `சந்தானகரணி’ என்னும் ஸித்திப் பொருள் இருப்பதாகவும், அந்த மரத்தினடியில் மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள்.

🅱 நேர்த்திக்கடன்:🅱

💥 முருகனுக்கு பால், தயிர் அபிஷேகம் செய்யப்படுகிறது. தவிர காவடிஎடுத்தல், முடிக்காணிக்கை முதலியன, கிருத்திகை அன்னதானம், காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், முடி இறக்கி காது குத்தல் சஷ்டி விரதம் இருத்தல். தவிர சண்முகார்ச்சனை, முருக வேள்வி ஆகியவை செய்கிறார்கள். கார்த்திகை விரதம் இருத்தல். ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல், திருப்பணிக்கு பொருளுதவி செய்தல் ஆகியவை இத்தலத்துக்கு வருபவர்கள் முருகனுக்காக செய்யலாம்
 
🅱 தலபெருமை:🅱

🌻 கந்த சஷ்டி அருங்கேறிய ஸ்தலம்:🌻

🔥 உலகில் உள்ள முருக பக்தர்கள், தினமும் மனமுருகி பாராயணம் செய்யும், ஸ்ரீகந்தர் சஷ்டி கவசம்' இயற்றிய ஸ்ரீபாலன்தேவராய சுவாமிகள், காங்கேயம் நகரின் அருகில் உள்ள மடவிளாகத்தை சேர்ந்தவர். இவர், மைசூர் தேவராச உடையாரின் காரியஸ்தரில் ஒருவராவார். இவர் முருக பக்தர். ஐப்பசி மாதம், கந்த சஷ்டி அன்று, வேற்று மதத்தவர்களிடம் அனல்வாதம் (தான் எழுதிய நூலை சான்றோர்கள் முன், நெருப்பிலிட்டு, தீயில் கருகாமல் திரும்ப எடுத்து அரங்கேற்றுவது), புனல்வாதம் (கரைபுரண்டு ஓடும் ஆற்று வெள்ளத்தில், தான் எழுதிய நுõலை இட்டு, நீரில் எதிர்கொண்டு செல்லும் சுவடிகளை எடுத்து அரங்கேற்றுவது) செய்து, கந்த சஷ்டி கவசத்தை அரங்கேற்றம் செய்ய முருகனை வேண்டினார். அதற்கு உரிய ஆலயமாக சென்னிமலையை, முருகப்பெருமானின் அருளாணையால் உணர்ந்து, இங்கு கந்த சஷ்டி கவசத்தை சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக' என இத்தலத்து பெருமானை அழைத்து, அரங்கேற்றம் செய்து, பெருமைபடைத்தார்.

🥀 வானில் வந்தவர் இங்கேயே வாழ்ந்தார்:🥀

🔥 இறைவன் கிருபையும், அருளையும் மறுத்துரைப்பவர்கள், பொய் சொல்பவர்கள் நாவானது புண் பொருந்திய நாக்கு' எனக்கூறியவர் தன்னாச்சி அப்பன் சித்தர். 18 சித்தர்களில் ஒருவரான இவரை முனிவர் என்றும், புண் நாக்கு' சித்தர் என்றும் அழைத்தனர். பிற்காலத்தில் புண்ணாக்குச் சித்தர்' என்று பெயர் மருவியது. இவர், தனது நாக்கை பின்புறமாக மடித்து, அருள்வாக்கு சொல்லி வந்ததாலும், இவர் பின்நாக்கு சித்தர் என அழைக்கப்பட்டார். சித்தராக வானவீதி வழியாக பறந்து வந்த இவர், நிலையாக இவ்வாலயத்தில் இருந்து, சென்னிமலை சுப்ரமணியரை நினைத்து, யோக நிலையில் தவம் புரிந்தார். பின்னர் சென்னிமலையிலேயே, புண்ணாக்குச் சித்தர் சிவசமாதி அடைந்தார்.

🔥 அவர் சமாதி அடைந்த பின், அவருடைய சிலையை, தற்போதைய இடத்தில் நிறுவி, பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ஆண்டி வடிவில் அமைந்து அருள்பாலிக்கும் முருகனிடம், தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர் புண்ணாக்குச் சித்தர். சென்னிமலையில், 1,740 அடி உயரத்தில் குகை வடிவில் அமைந்துள்ள கோவிலில், இவர் அருள்பாலிக்கிறார். வள்ளி, தெய்வானை சன்னதிக்கு மேல், 800 அடி நீளப்பாதையில் கிழக்கு முகமாக இக்குகை உள்ளது. மக்கள் குறையைப் போக்கும் ஆலயமாக விளங்குகிறது. இக்குகை, பழனி வரை செல்வதாக நம்பப்படுகிறது.

🎸 மாமாங்கத் தீர்த்தம் : 🎸

🔥 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வறட்சியான கோடை காலத்தில் சிறிதேனும்கூட மழையில்லாத கொடூரமான நேரத்தில் மலைக் கோயிலுக்கு தென்புறம் அமைந்துள்ள தீர்த்த விநாயகர் முன்பு திடீரென பொங்கி வழிந்தோடும் மாமாங்கத் தீர்த்தமானது அதிசயம் நிறைந்த தெய்வீகச் சிறப்பாக அமைந்து விடுகிறது.

🎸 சிரசுப் பூ உத்திரவு கேட்டல்:🎸

🔥 திருமணம், வரன்கள், விவசாயம், கிணறுவெட்டுதல், புதிய வியாபாரம் தொடங்கல், வியாதிகள் ஆகியவை குறித்து முடிவு செய்ய ஆண்டவர் முன்னால் அர்ச்சனை செய்து சிரசுப் பூ உத்திரவு கேட்டு நல்ல உத்திரவு கிடைத்தபின்பு காரியத்தை தொடங்குகிறார்கள். சிரசுப்பூ உத்திரவு நல்லபடியாக கிடைக்காவிட்டால் குறிப்பிட்ட செயல்களை பக்தர்கள் தொடங்குவதில்லை.

☔ சென்னிமலை ஆண்டவர் கோவிலின் அமைப்பு:☔

🌷 அடிவாரத்தில் இருந்து செங்குத்தாக இல்லாமல், பக்தர்கள் எளிதில் ஏறிச் செல்ல வசதியாக 1,320 படிக்கட்டுகள் அமையப் பெற்றிருக்கின்றன. அடிவாரத்தில் இருந்து சில படிகள் ஏறியதுமே கடம்பவனேஸ்வரர், கந்தர், இடும்பன் ஆகியோரின் சந்நிதிகளை ஒரே வரிசையில் தரிசிக்கலாம். பின்னர் தொடர்ந்து வள்ளியம்மன் பாதம் என்ற மண்டபத்தைக் கடந்து மேலே சென்றால், `முத்துக்குமார சாவான்' என்னும் மலைக் காவலர் சந்நிதி அமைந்திருக்கிறது. அதற்கடுத்ததாக வரும் ஆற்றுமலை விநாயகர் சந்நிதியையும் தரிசித்துவிட்டு, மேலே சென்றால், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி எழுந்தருளியுள்ள திருக்கோயிலை அடையலாம்.

🔥 கிழக்கு நோக்கி உள்ள சென்னிமலை ஆண்டவர் சன்னதிக்கு முன்பாக விநாயகர் சன்னதியும், வலது பக்கத்தில் மார்க்கண்டேசுவரர் மற்றும் உமையவல்லி அம்மனும், இடது பக்கத்தில் காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சி அம்மன் சன்னதிகளும் அமையப்பெற்றுள்ளது. மூலவர் சன்னதிக்கு நேர் பின்புறமாக சென்றால் வள்ளி, தெய்வானை சன்னதியும் அமைந்துள்ளது.

🌷 இங்கு தேவியர் இருவரும் தனிப்பெரும் கோவிலில் இருந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பது வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும். அதற்கு பின்புறம் சென்றால் மலையின் உச்சியில் 18 சித்தர்களில் ஒருவராக பின் நாக்கு சித்தர் சன்னதி (புண்ணாக்கு சித்தர்) உள்ளது. அங்கு கோவில் வேல்கள் நிறைந்து வேல் கோட்டமாக காட்சி அளிக்கிறது.

🌷 இதன் பின்புறம் சரவணமா முனிவரின் சமாதி கோவிலும் (குகை) உள்ளது. இப்படி பல சிறப்புகளை கொண்ட சென்னிமலை ஆண்டவர் கோவிலில் கடந்த 12–2–1984 அன்று உலகமே வியக்கும் வகையில் 1,320 படிக்கட்டுகள் வழியாக இரட்டை மாட்டு வண்டிகள் தங்கு தடையின்றி சென்று அதிசயத்தை நடத்தியுள்ளது. இதை லட்சக்கணக்கான மக்கள் நேரில் வந்து கண்டுகளித்தனர்.

🅱 தம்பிக்கு முதல் பூஜை:🅱

🔥 எல்லா கோயில்களிலும் விநாயகருக்கு முதல் பூஜை உண்டு. இங்கோ மூலவர் முருகனுக்கு நைவேத்ய பூஜை முடிந்த பின்பே, சந்நிதி விநாயகருக்கு பூஜை செய்யப்படும்.

🔥 முருகன் ஞானப்பழத்தால் கோபித்து வந்து மலைமேல் வீற்றிருப்பதால், அவரை சாந்தப்படுத்தும் வகையில் தொன்று தொட்டு இவ்வாறு நடக்கிறது.

🅱 தல வரலாறு:🅱

⛱  சென்னிமலைக்கு சுமார் 3 மைல் தூரத்தில் நொய்யால் ஆற்றின் கரையில் 'கொடுமணல்' என்ற கிராமம் உள்ளது.   தமிழ்நாட்டின் மாநில தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த இடம் ஒரு முக்கியமான தொல்பொருள் தளமாகும். ஒரு காலத்தில், இந்த கிராமம் ஒரு பெரிய நகரமாக இருந்தது, ஒரு குட்டி அரசரால் ஆளப்பட்டது என்று தொல்லியல் ஆய்வு கூறுகிறது. இந்த விஷயத்தில் ஆராய்ச்சிக் கட்டுரை இன்னும் வெளிப்படையான தகவல்களைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

⛱ பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நிலத்தில் ஒரு பண்ணையக்காரர் வசித்து வந்தார்,  அவரது பண்ணையில் நூற்றுக்கணக்கான பசுமாடுகள் இருந்தன, அதில் ஒரு வளம் மிக்க காராம்பாசுவும் இருந்தது.. ஒவ்வொரு நாளும் மாலை பசுக்கள் மேய்ப்பவன் அடைத்து வைப்பது வழக்கம். சில நாட்களாக ஒரு காராம் பசுவின் மடியில் பால் இல்லாமல் இருந்ததை வேலையாள் தன் எஜமானிடம் தகவல் தெரிவித்தான்.

⛱ தினசரி மாலையில் ஆவினங்கள் கூட்டாக தொட்டிக்கு திரும்பி வரும் போது, இந்த காராம் பாசு மற்றவர்களிடமிருந்து பிரிந்து, ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று, பால் முழுவதும் தானாகவே சொறியவிட்டு  பின் மறுபடியும் மாடுகள் கூட்டத்தில் சேர்ந்து வருவதை சிவ நாட்கள் கவனித்துவிட்டு, அந்த குறிப்பிட்ட இடத்தில் மண்ணை தோண்டி பார்க்க செய்தார்.

⛱ சுமார் 5 முதல் 6 அடி ஆழம் தோண்டியதும் எல்லோரும் அதிசயத்தக்க பூர்ண முகப் பொலிவுடன் ஒரு கற்சிலை தென்பட்டது. சிலை கண்டுபிடித்ததில் பண்ணையார் மகிழ்ச்சியடைந்தார். மேலும், அவர் சிலையை ஆராய்ந்த போது  அதன் முகம் பொலிவுடன் இருந்தாலும், இடுப்புக்கு கீழ் சரியான வேலைப்பாடின்றி இருந்தது. அக்குறையைப் போக்க அந்தப் பகுதியை சிற்பியைக் கொண்டு உளியால் வேலையைத் துவக்கினார். உளிபட்ட இடத்தில் ரத்தம் பீறிட்டது. பணியை நிறுத்திவிட்டனர். “ ”ஆண்டவர் அப்படியே இருக்க பிரியப்படுகிறார்”, என்று சென்னிமலையின் மேல் பிரதிஷ்டை செய்தனர். இவருக்கு “தண்டாயுதபாணி’ என்ற திருநாமம் இட்டனர். இன்று அத்தலமே சென்னிமலை  என்று அழைக்கப்படுகிறது. இன்றும் கூட மூலாவார் விக்ராஹத்தின் கீழ் பகுதி வேலைப்பாடற்றும் ஒரே வழியில் காணப்படுகிறது.

⛱ கோயில் 'சிவாலய சோழ' காலத்தில் 3000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பிரம்மஹத்தி தோஷத்தை அகற்றுவதற்காக இந்த மன்னர் நொய்யல் நதியில் நீராடும் சமயம்  இம் மலையைப் கண்டு படைகளுடன் மலை மீது ஏறி கோயிலுக்குள் நுழைந்தார். முருகன் 'அர்ச்சகர்' வடிவத்தில் தோன்றி, தன்னைத்தானே பூஜித்து மன்னருக்கு பிரம்மஹத்தி தோஷம் விடுவித்தார்.

⛱ திருக்கடவூரிலிருந்து இருந்து திருவிருந்தபுரத்தில் (பிடாரியூர்) தங்குவதற்கு 'தெய்வசிகாமணியார்' என்ற திருமறையவரை மன்னர் சிவாலய சோழர் கொண்டு வந்தார்.

⛱ சிவமறையோர் குலத்தில் பிறந்த சத்திய ஞானியை குருவாக கொண்ட சரவண முனிவர் சென்னிமலையில் வரலாற்றை அறிய விரும்பி முருகக் கடவுளை வழிபட்ட சமயம் அசரிரீ மூலம் முருகப் பெருமான் அருளியவாறு காஞ்சிபுரம் சென்று அங்கு வாழ் மறையவர்களிடம் செப்பேட்டிலிருந்து சிரகிரி வரலாற்றை  வேறு செப்பேட்டில் எழுதிக் கொண்டு சென்னிமலையில் செப்பேட்டில் உள்ளவாறு மகிமைகள் அணைத்தும் கண்டு மகிழ்ந்தார். முருகக்கடவுள் சரவண முனிவருக்கு ஆறுமுக வடிவமாகவும் , ஒருமுக வடிவமாகவும் காட்சியருளினார்.  சரவண முனிவர் சமாதி இம்மலைமேல் உள்ளது.

⛱ பழனியம்பதிக்கு முன் தோன்றிய சென்னிமலை சிவபெருமான் திருமணத்தின் போது, தென்கோடி மக்கள் அனைவரும், சிவ-பார்வதி திருமணக்கோலம் காண, வடகோடியில் குவிந்தனர். அப்போது வடதிசை தாழ்ந்து, தென்திசை உயர்ந்தது. இதை சமன் செய்ய, அகத்தியரை தென்கோடிக்கு, சிவபெருமான் செல்ல பணித்தார். சிவபார்வதியின் திருமணக்கோலத்தை தான் காண முடியாதா என, அகத்தியர் வருந்தினார். உனக்கு, அங்கேயே காட்சியளிப்பதாக, அருளினார். தென்திசை நோக்கி வந்த அகத்தியரை, சூரபத்மன் போன்ற அசுரர்களின் தலைவனான இடும்பாசுரன் எதிர்கொண்டு, அவரை வணங்கி, தன்னை சிஷ்யனாக ஏற்க வேண்டினார். அகத்தியரும், சிஷ்யனாக ஏற்றனார். தென்திசை நோக்கிய அவசர பயணத்தால், தன் சிவபூஜை எடுத்து வரும்படி, இடும்பனை, அகத்தியர் பணித்தார். வடதிசை சென்ற இடும்பனுக்கு, அம்மலையில், சிவபூஜை எங்குள்ளது எனத்தெரியாமல், சிவகிரி, சத்யகிரி என இரு மலைகளை, காவடியாக எடுத்து, சென்னிமலை வந்தார். அப்போது, சென்னிமலை துவாபர யுகத்தில், புஷ்பகிரியாக இருந்தது.

⛱ இடும்பனுக்கு, பொதிகைக்கு வழி அறியாத நிலையில், முருகப்பெருமான், ராஜகுமாரனாக காட்சியளித்து, பொதிகைக்கு வழிகாட்டிய இடமே புஷ்பகிரி எனும் சென்னிமலையாகும். இடும்பன் காவடியாக கொண்டு வந்த மலைதான், தற்போது பழனியம்பதியாக உள்ளது. இதனால், சென்னிமலையை, ஆதிபழனி என்பர். இங்கு மூலவர் தண்டாயுதபாணி கோலத்தில் வீற்றுள்ளார். இங்கு, தினமும், நடக்கும் கால பூஜைகளில், மூலவருக்கு நிவேத்திய பூஜைகள் முடிந்த பின்னரே, சன்னதி விநாயகருக்கு பூஜை செய்யப்படும். ஏனெனில், முருகப்பெருமான், பழத்தின் பொருட்டு, கோபித்து வந்து, மலையில் வீற்றிருப்பதால், அவரை சாந்தப்படுத்தும் பொருட்டு, தொன்றுதொட்டு இவ்வாறு பூஜைகள் இன்னும் நடக்கிறது.

🅱 சிறப்பம்சம்:🅱
 
Ⓜ அதிசயத்தின் அடிப்படையில்:

♻  புராணக் காலத்தில் அனந்தன் என்ற நாக ராஜனுக்கும் வாயு தேவனுக்கும் இடையில் ஒரு பலப்பரீட்சை நடந்தது. அனந்தன் மகாமேரு பர்வதத்தை உறுதியாகச் சுற்றிப் பிடித்துக் கொண்டான். அனந்தனின் பிடியிலிருந்து மேருமலையை விடுவிக்க வேண்டி, வாயுதேவன் எதிர்த்துத் தாக்கினார். அவ்வளவில் மேருமலையின் சிகரப் பகுதி முறிந்து, பறந்து சென்று பூந்துறை நாட்டில் விழுந்தது. அந்தச் சிகரப் பகுதி தான் சிகரகிரி, புஷ்பகிரி, மகுடகிரி என்றெல்லாம் அழைக்கப்பட்டு, தற்போது சென்னிமலை என்று அழைக்கப்படுகிறது.

♻ இந்த மலையில் தான் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,749 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது முருகப்பெருமான் அருளும் திருக்கோயில். இந்த ஊருக்கு மற்றுமொரு வரலாற்றுப் பெருமையும் இருக்கிறது. அது தமிழ்நாட்டின் மிக முக்கிய சுதந்திரப் போராட்டத் தியாகியான திருப்பூர் குமரன் பிறந்த ஊர் என்பதுதான்.

♻ சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்,  சிறந்த முருகப்பக்தரான சிவாலயச் சோழன் என்ற மன்னருக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்குவதற்காக, முருகப்பெருமானே நேரில் வந்திருந்து, தன்னைத்தானே பூஜித்து, மன்னனின் பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கியதாக ஒரு நம்பிக்கை காலம்காலமாகப் பக்தர்களிடையே நிலவுகிறது.

🅱 இருப்பிடம்:🅱

✈ ஈரோட்டில் இருந்து தாராபுரம் செல்லும் வழியில் சுமார் 28 கி.மீ தொலைவில் உள்ளது சென்னிமலை.

✈பெருந்துறையில் இருந்து 13 கி.மீ., மற்றும் இங்கூர் தொடர்வண்டி நிலையத்திலிருந்து 3 கி.மீ., தூரத்தில் உள்ளது.

❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃
 🏹 தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்🏹
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

அருள்மிகு நவநீதேஸ்வரர் திருக்கோயில், சிக்கல் - நாகப்பட்டினம்

வெண்ணெய் உகந்த சிவபிரான் எழுந்தருளிய தலம் ; சிவாலயத்தில், பெருமாளுக்கும் தனிச் சந்நிதி அமைந்துள்ள ஆலயம் ; சப்தவிடங்கத் தலமாக இல்லையெனினும் மரகதவிடங்கராக ஸ்ரீதியாகேசர் காட்சி தரும் கோயில் ; தாயைப் பணிகிற தனயனாக, முருகப்பெருமான் அருள்பாலிக்கிற க்ஷேத்திரம் ; சோழ தேசத்துக்கே உண்டான கட்டுமலைக் கோயில் அமைந்த தலம் ; கடல் நாகைக் காரோணத்தின் பஞ்சகுரோசப் பெரும்பதிகளில் ஒன்றான தலம்.....

🔵⚜🔵⚜ BRS🔵⚜🔵⚜🔵

தொலைபேசி எண் : 04365-245350

🦋🎸🦋🎸 BRS🦋🎸🦋🎸🦋

மூலவர் : நவநீதேஸ்வரர் (வெண்ணெய் பெருமான்)

உற்சவர் : சிங்கார வேலவர்

அம்மன்/தாயார் : சக்தியாயதாட்சி (வேல்நெடுங்கண்ணி)

தல விருட்சம் : மல்லிகை

தீர்த்தம் : க்ஷீர புஷ்கரிணி (பாற்குளம்)

ஆகமம்/பூஜை : காரண ஆகமம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : மல்லிகாரண்யம், திருச்சிக்கல்

ஊர் : சிக்கல்

பாடியவர்கள் : திருஞானசம்பந்தர் , அருணகிரிநாதர்

🅱 தேவாரப்பதிகம்:🅱

மடங்கொள் வாளைகுதி கொள்ளும் மணமலர்ப் பொய்கைசூழ் திடங்கொள் மாமறையோரவர் மல்கிய சிக்கலுள் விடங்கொள் கண்டத்து வெண்ணெய்ப் பெருமானடி மேவிய அடைந்துவா மும்மடி யாரவர் அல்லல் அறுப்பரே.  -திருஞானசம்பந்தர்

நீலம்நெய் தல்நில விம்மல ருஞ்சனை நீடிய
சேலுமா லுங்கழ னிவ்வனம் மல்கிய சிக்கலுள் வேலோண்  கண்ணியி னாளையொர் பாகன்வெண்ணெய்பிரான்
பாலவண் ணன்கழல் ஏத்தநம்
 பாவம்ப றையுமே. - திருஞானசம்பந்தர்

🌱 தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 83வது தலம்.🌱

🅱 திருவிழாக்கள் :🅱

🌻 கந்தசஷ்டி திருவிழா –ஐப்பசி மாதம் (சக்திவேல் வாங்குதல் வியர்க்கும் மகிமை)

🌻 சித்திரை பெருந்திருவிழா –(சித்திரை மாதம் )

🌻 தெப்பத்திருவிழா –தைப்பூசத்தன்று நடைபெறும்

🌻 மாதாந்திர கார்த்திகை

🌻 பிரதோசம்-சுவாமி புறப்பாடு

🌻 மாதாந்திர சங்கடகர சதுர்த்தி –விநாயகர் அபிஷேகம்

🌻 திருவாதிரை –நடராஜர் அபிஷேகம் –ஊடல்,வீதி புறப்பாடு

🌻 தமிழ் வருடப்பிறப்பு –சிங்காரவேலவர் அபிஷேகம்

🌻 மாசி மாதம் –மகா சிவராத்திரி (நான்கு காலமும் பூஜை நடைபெறும் )

🌻 வைகாசி விசாகம்-சிங்காரவேலவருக்கு சிறப்பு அபிஷேகம்

🌻 ஆடிப்பூரம் –அம்பாள் அபிஷேகம்

🌻 ஆடிக்கார்த்திகை-சிங்காரவேலவர் அபிஷேகம், இரவு -தங்க மயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா புறப்பாடு

🌻 விநாயகர் சதுர்த்தி-சுந்தரகணபதிக்கு சிறப்பு அபிஷேகம்

🌻 நவராத்திரி உற்சவம்-பள்ளியறை அம்மன் சிறப்பு அலங்காரம்

🌻 சரஸ்வதி பூஜை –எல்லா சுவாமிகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்

🌻 விஜயதசமி –சிங்காரவேலவர் தங்கக்குதிரை வாகனத்தில் அம்பு போடுதல்

🌻 ஐப்பசி பெளர்ணமி –சிவனுக்கு அன்னாபிஷேகம்

🌻 தீபக்கார்த்திகை-சிங்காரவேலவர் அபிஷேகம், இரவு –சொக்கப்பானை ஏற்றுதல்,சுவாமி வீதியுலா

🌻 பங்குனி கார்த்திகை-சிங்காரவேலவர் அபிஷேகம், இரவு –பவள ஆட்டுக்கிடா வாகனத்தில் சுவாமி வீதியுலா

🌻 பங்குனி உத்திரம் –சிங்காரவேலவருக்கு சிறப்பு அபிஷேகம்

🅱 தல சிறப்பு:🅱

🎭 இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

🎭 கந்தசஷ்டி திருநாளின் முதல் நாள் முருகன் இத்தல அம்மனிடமிருந்து வேல் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் இங்குள்ள அம்மனுக்கு வேல்நெடுங்கண்ணி என்ற பெயர் ஏற்பட்டது.

🎭 ஒருமுறை, பஞ்சத்தில் பிடியில் சிக்கிய தேவலோகப் பசு காமதேனு நாயின் ஊனைத் தின்றதால் ஏற்பட்ட சாபம் தீர்த்த தலம் சிக்கல்.

🎭 திலோத்தமையைக் கூடியதால் தன் தவவலிமையை இழந்த விசுவாமித்திர முனிவர் இழந்த தவவலிமையை திரும்பப் பெற்ற தலம் சிக்கல்.

🎭 முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு ஒரு அந்தணனைக் கொண்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷமும் சாபமும் நீங்கிய தலம் சிக்கல்.

🎭 ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் வேல் வாங்கும் விழாவில் சூரபத்மனை அழிப்பதற்காக தன் தாயிடம் வேல் வாங்கி முருகப்பெருமான் தன் கோவிலில் வந்து அமர்ந்த பிறகு, வேலின் வீரியம் தாங்காமல் சிக்கல் சிங்காரவேலருக்கு வியர்க்கும். பட்டுத்துணியால் துடைக்கத் துடைக்க முத்து முத்தாக வியர்வை துளிர்த்துக் கொண்டே இருக்கும் அற்புதம் இன்றளவும் நடைபெறும் தலம் சிக்கல்.

🎭 சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம் என்பது ஒரு பழமொழி.

🎭 இத்தலத்தில் கோயில் கொண்டுள்ள அம்பாள் வேல்நெடுங்கண்ணியிடம் வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்தார். இத்தலத்தில் கந்தசஷ்டி விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

🎭 எப்போதும் வற்றாத நீர்ப் பெருக்கையுடைய காவிரி நதி பாயும் நாடு சோழ நாடு “வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத்தலைய கடற் காவிரி”  என்று பட்டினப் பாலை என்னும் நூல் கூறுகிறது. அண்ணல் பாகத்தையாளுடைய நாயகி உண்ணெகிழ் கருணையின் ஒழுக்கம் போன்றது”  என்று சேக்கிழார் காவிரி நதியைப் போற்றுகிறார். சோழநாடு பூவினுள் பதுமம் போல்வது,கலைகளுள் ஞானம் போல்வது அறத்துள் இல்லறமே போன்று இலங்குவது. அத்தகைய நாட்டில் உள்ள சிவதத் தலங்களில் சிக்கல் ஒன்றாக விளங்குவது ஆம். அதன் பழம்பெரும் பெருமையை முறையாக காண்போம்.

🅱 திருநகர சிறப்பு: 🅱

🎭 அலைமகளும், மலைமகளும் நாமகளும் நண்ணியமர்ந்து நாளும் நாமலி புலவரேத்த நலந்தரும் தன்மை வாய்ந்தது திருச்சிக்கல் ஆகும்.

🎭 எண்ணரும் செல்வத்தோடு போகமும்எய்தி நாளும் நண்ணரும் ஒழுக்கம் வாய்ந்த நன்மக்கள் வாழும் தலமாகும்.

🎭 சோழ மண்டலத்தில் நடுவணமைந்த செம்மணியே போலுந் திகழ்வது,மங்கல்தொயும் மாடவீதிகளில் வேளாண் மாந்தர் திருமனைகள் எண்ணில உண்டு.வேளாளர்கள் வெண்ணீறு பூசித் திகழ உருத்திராக்கம் பூண்டு பொருந்தவே திருவைந்தெழுத் தோதிப்,புனல் மலராதி கொண்டு வேனேடுங்கண்ணி பாகனை யருச்சித் தேத்திப் பெருந்தமிழ் நலம் பாராட்டும் பெற்றிமை வாய்ந்தவர்கள் வருவிருந்தெதிர் கொண்டுள்ளம் மகிழ்ந்து முகமன் கூறித் திருமலராதி நல்கிச் சிவார்ச்சனை செய்வித் தன்பால் அருகினில் அமரச் செய்து இனிதினட்ட அறுசுவை யமுதமூட்டிப் பொருவது மடைகாய் நல்கிப் போந்ததோர் குறிப்புத் தேர்ந்தருள் புரிவர்.

🎭 பேச்சாலும் ,எழுத்தாலும் ,பாட்டாலும் ,கூத்தாலும் பிறர் உவக்க ஒச்சுகவே மணிமுரசு வீதியெல்லாம் வரிசையுற உழவர் நிர்பீர்: ஏச்சாலும் எதிப்பாலும் வருகின்ற இன்னலுக்குள் இன்ப வெள்ளம் பாயச்சாதோ பொதுத்தொண்டு ? பைந்தமிழ் செய்யும் தொண்டு பருக வாரீர்”என்ற நம் கவிஞர் வாக்குப்படி அழைக்கும் செம்மனச் சீலர்கள் நிறைந்து வாழும் திருவீதிகளை உடையது.

🎭 அம்மனின் 64 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று.

🎭 விசுவாமித்திரர், அகத்தியர், காத்தியாயனர், நாரதர், முசுகுந்த சக்கரவர்த்தி ஆகியோர் இத்தலத்தில் வழிபாடு செய்துள்ளனர்.

🎭 சிவன், பெருமாள், முருகன், அனுமன் என நால்வரும் இத்தலத்தில் அருள்பாலிப்பது கோயில் தனி சிறப்பாகும்.

🎭 அருணகிரிநாதர் இத்தல முருகனை குறித்து திருப்புகழ் பாடியுள்ளார்.

🎭 கோச்செங்கட் சோழன் கட்டிய 72 மாடக்கோயில்களில் இதுவும் ஒன்று.

🎭 தேவர்கள், சூரபத்மனிடமிருந்து தங்களை காக்க முருகப் பெருமானுக்கு "திரி சதை' செய்து வேண்டிக் கொண்டனர். இதனால் முருகப்பெருமான் சூரனை அழித்து தேவர்களை காத்தார்.

🎭 சிங்கார வேலனுக்கு, அம்மன் தன் சக்தியை வேலாக வழங்கிய இத்தல முருகனுக்கு "சத்ரு சம்ஹார திரி சதை' அர்ச்சனை செய்தால் எதிரிகள் தொந்தரவு விலகி நலம் விளையும் என்பது நம்பிக்கை.

🎭 சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 146 வது தேவாரத்தலம் ஆகும்.

🅱 நடை திறப்பு:🅱

🗝 காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 🗝

🌻 பூஜைவிவரம் : ஆறுகால பூஜைகள்🌻

🅱 பொது தகவல்:🅱

🍁 இத்ததல விநாயகர், சுந்தர கணபதி என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.

🍁 எட்டுக்குடி, எண்கண், சிக்கல் ஆகிய மூன்று தலங்களில் விளங்கும் முருகப்பெருமான் ஒரே அமைப்புடைய மூர்த்திகளாக இருப்பதால் இவைகள் ஒரே சிற்பியால் வடிக்கப்பட்டது என்பர்.

🍁 கோயிலின் வடமேற்கு மூலையில் ஆஞ்சநேயருக்கு தனி சன்னதி உள்ளது.

🍁 கோலமயில் வாகனன் புகழ்பாடும் கோயிலில் திருமால், கோவவாமனர் எனும் திருநாமத்தோடு எழிற்கோலம் விளங்க அருள்கோலம் பூண்டு தனி சன்னதி கொண்டிருக்கிறார். அவருக்கு எதிரே அனுமனும் காட்சியளிக்கிறார்.

🅱 பிரார்த்தனை:🅱

🌹 கஷ்டங்கள் தீர இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

🅱 நேர்த்திக்கடன்:🅱

💥 பிரார்த்தனை நிறைவேறியதும் இத்தல இறைவன் வெண்ணெய்நாதருக்கு அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் உச்சிகால பூஜையின் போது வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்கின்றனர்.

🅱 தலபெருமை:🅱

🔥 “மூர்த்தி,தலம் ,தீர்த்தம் முறையாய் தொடங்கினர்க்கோர் வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே என்ற தாயுமானவர் வாக்குப்படி இறைவன் மூர்த்தியாகவும்,தலவடிவமாகவும் தீர்த்த வடிவினனாயும் விளங்குகின்றான்.

🔥 திருச்சிக்கல் மல்லிகை வனமாக முற்காலத்தில் விளங்கியது.மல்லிகை வனச் சூழலில் நடுவண் சிக்கல் ஞான நாயகன் இனிதமர்த்திருந்தான். கடனாகைக் காரோணத்தின் பஞ்சக் குரோசத் தலத்தில் ஒன்றாக இத்தலம் விளங்கியது.பின்பு ஒருசமயம் காமதேனுப்பசுவின் பால் பெருகியதால் உண்டான வெண்ணையை வசிட்ட முனிவர் சிவலிங்கமாக்கிப் பூசித்த இலிங்கமாக அமைந்த நற்சிறப்பினை வெண்ணெய் பிரானாக நாம் இப்போது காண்கிறோம்.உழுவலன்பு அமைத்து தலமெலாம் தரிசித்து ஓங்கு புன்னியயன்கோள நினைந்தோர். தழுவுசீர்ச் சிக்கலைத் தரிசித்தால் அப் பயன் பெறுவர் என்பது சாதகமாகும்.

🔥 விசுவாமித்திரர்,வசிட்டர்,அகத்தியர்,கார்த்திகேயனர்,நாரதர் முதலிய முனிவர்களும் இத்தலம் சார்ந்து வழிபட்டு பேறு பெற்றனர் என்னில் இத்தலத்தின் பெரும சொல்லொணாத நலத்தது ஆம்.திருச்சிக்கல் தலம் பரவுவார் பாவ முற்றோழிந்து துன்னிய பூதப் பிரேத பைசாசத் தொடரபுறச் சந்ததி பெருக.முன்னிய உலகனில் களித்து வாழ்ந்து இருந்து முத்தியின்பமும் அடைவர்.    

🅱 வேல்நெடுங்கண்ணி -சிறப்பு தொகுப்பு:🅱

 🌤 திருவருட் சக்தி :🌤

🎸 கோயில் அமைப்புத் தோன்றிப் பல்லாயிரம் ஆண்டுகளாயின. இத்துணை ஆண்டுகளாகப் பல கோடி மக்கள் ஆங்காங்கு எழுந்தருளியுள்ள திருவுருவத்தினை நோக்கி  தெய்வமே என்று நினைத்தும் வாழ்த்தியும் வணங்கியும் இருக்கிறார்கள்.அவர்களது தெய்வீக எண்ணங்கள் திருவுருவத்தில் படிந்து ஒன்றுடன் ஒன்று ஒன்றித் தெய்வீகச் சக்தி பெற்றுள்ளன.நன் மக்கள் நோக்கினின்றுந்ததிரளும் சக்தியைப் பார்க்கிலும் ஞானிகள் நோக்கினின்றுந்திரளும் சக்தி வல்லமை வாய்ந்தது .

🎸 இச்சக்தியிலும் பண்டை நற்றவத்தால் தோன்றிய பரமனைப் பக்தி செய்யுந் தொண்டர்களான நாயன்மார்கள் நால்வர் பெருமக்கள் நோக்கினின்றும் பிறப்பது சொல்லொணா ஆற்றல் வாய்ந்தது.அப்பர் ,சம்பந்தர் ,சுந்தரர் , மாணிக்கவாசகர் என்ற நால்வரும் தெய்வத் திருவருட் சக்தி மயமானவர் எல்லாம் வல்லவர். தங்கள் ஆன்ம நலனை மட்டும் கருதி வாழ்ந்தவர்களல்லர்.அவர்கள் தாங்கள் பெற்ற இன்பத்தை மற்றவரும் பெறுதல் வேண்டும் என்ற கருணையில் மூழ்கியவர்கள் அவர்கள் தமிழ் மறைகளை உலகுய்யத்தந்தனர்.

🎸  எண்ணத்தில் ஆற்றல் கோயில்களுக்குச் சென்று வழிபாடு நிகழ்த்தினார்கள்.அவர்களது தெய்வீகச் சக்தி நூல்களிலும் கோயில்களிலும் இறங்கியுள்ளது.நால்வர் அருளிய மறைமொழிகட்கு எவ்வளவு ஆற்றல் உண்டோ,அவ்வளவு ஆற்றல் அவர்தம் திருநோக்கம் பெற்ற கோயில்கட்குமுண்டு, அக்கோயில்களை விடுத்து அவரது நல்லெண்ணங்கள் நீங்கவே  மாட்டா,உலகிலுள்ள தீமைகள் எல்லாம் திரண்டு ஓருக்கொண்டு அக்கோயில்களைத் தாக்கினாலும்,அங்குள்ள அத்தீமைகளை எல்லாம் நீராக்கும் ஆற்றல் பெரியோர் நோக்குப் படிந்த கோயில்களுக்குண்டு மலைகள் அழியலாம். கடல்கள் அழியலாம்.உலகம் அழியலாம்.திங்கள் அழியலாம் .ஞாயிறு அழியலாம் .பிற அழியலாம்; பெரியோர் எண்ணங்கள் அழியோ.கோயில் கட்டிடங்கள் அழிந்தாலும் அவைகளைச் சூழ்ந்துள்ள நல்லெண்ணங்கள் அழியா . அவை மீண்டும் ஒரு காலத்தில் கோயிலாகும். கோயில் கல்லன்று; மண்ணன்று ;கண்ணமன்று; அஃது எண்ணம்; நல்லெண்ணம்;சக்தி வாய்ந்த எண்ணம்.தெய்வீகச் சக்தி வாய்ந்த எண்ணம். அவ்வெண்ணம் இந்நாளிலும் தியானதிற் சிறந்த அன்பர்கட்குப் பெருஞ்சக்தியை  உலகைத்திருத்தும் வல்லமையை –கடவுட்டன்மையை வழங்கி வருகிறது .

🎸 இத்துணைச் சிறப்பு வாய்ந்த கோயில் வழிபாட்டு இடையீடின்றி வளர்ந்தோங்கல் வேண்டும்.அதற்கு முட்டு நேரின் உலகம் இன்னலுறும். அவ்வின்னலைப் போக்கவும் வழிபாட்டையே கடைப்பிடித்தல் வேண்டும். வழிபாடே தியானயோகம் தவம்.  

🎸  இதனைக் கண்டு பொறுக்கமாட்டாத அவுணர்  கோன் அண்டபித்திகையின் வாயிலை அடைத்து அறை கூவினான்.முருகனும் அங்குச் சென்றார் .பிரிதிவி அண்டம் முழுவதும் சென்றான் .முருகனும் அங்கங்குச் சென்று பெருதார்.அவை வெந்து சாம்பலாயின . மனம் உடைந்த சூரபன்மன் தன் தாயாகிய மாயையை எண்ணினான்.மாயையும் வந்தாள். அவளிடம் தமது குறைகளை எல்லாம் கூறி , “இறந்தவர் அனைவரும் எழ ஒரு வழி கூறுக. என வேண்டினான்.

🎸 மாயை“மைந்தா“ இந்நிலை எய்தியும் தேவரை விட நீ விரும்பவில்லை பன்னிரு கரத்து அறுமுகக் கடவுளோடு மேலும் சண்டை செய்ய விரும்புவாயாயின் உன் செல்வமெல்லாம் தொலையப் பெறுவாய் அவரை பாலனென்று எண்ணாதே.அவர் கரத்திலுள்ள ஞான சக்தி உன்னைக் கொல்லப்போகிறது.இன்று நான் சொல்வது காதில் ஏறாது உன் விருப்பம் போல் இறந்தவர்கள் எழும்ப வேண்டுமானால் பெரும்புறக் கடலின்   அருகில் அமுத சீத மந்திர கூடம் என்ற ஒரு மலை இருக்கிறது.அதனைக் கொணர்ந்தால் அனைவரும் எழுவர் என்று கூறி மறைந்தாள் .சூரபன்மன் மகிழ்ந்து தேரிலிருந்து இறங்கி சிங்க வாகனத்தில் ஏறிக்கொண்டு இந்திர மாஞாலத் தேரை நோக்கி “நீ சென்று அம்மலையைக் கொணர்க”எனப்பணித்தான்.அது அங்ஙனமே சென்று கொணர்ந்தது.அனைவரும் உயிர் பெற்றெழுந்தனர். சிங்கமுகன் முதலியோர் மீண்டும் அறுமுகப்பண்ணவனை வளைத்துப் போரிட வந்தனர்.முருகன் புன்முறுவல் பூத்து உருத்திர பாசு பதத்தை ஏவி அனைவரையும் அழைத்தார்.

🎸 சூரபன்மன் இந்திரமாஞாலத் தேரை நோக்கி நீ வீரவாகுதேவர் முதலிய வீரர்களையும்,பூதச் சேனைகளையும் தலைவர்களையும் வாரிக்கொண்டு போய் அண்டத்துச்சியிலே வைத்துக் கொண்டிருப்பாயாக என ஆணை தந்தான்.அதுவும் அவ்வண்ணமே செய்தது.முருகன் ஒரு கணையை ஏவி ,நீ அதன் ஆற்றலை யழித்து இங்கே கொணர்க .என அந்தக்கனையும் அவ்வாறே செய்து திருமுருகன் முன் கொணர்ந்தது வீரவாகுதேவர் முதலியோர் முருகனை வணங்கி அவர் பக்கலையடைந்தனர்.

🎸 இந்திர மாஞாலத் தேர் மீண்டும் சூரபன்மன் பக்கம் செல்ல எழுந்தது.முருகன்,”அவன் அழிவது உறுதி .அங்கே போகாதே,இங்கேயே நில்” என்று அதட்டினார்.அது அவ்வண்ணமே நின்றுவிட்டது.  இது கண்ட சூரபன்மன் பெருங்கோபங்கொண்டு கனைப் போர் புரிந்தான்.முருகனும் ஆயிரங் கணைகளை அனுப்பி அவன் வில்லத் துணித்தார்.சூரன் முத்தலைச் சூலத்தை ஏவினான்.அதனையும் முருகன் ஆயிரங்கோடி கணைகளால் பயனற்ரொழியச் செய்து குவிசப் படையை ஏவி அதனைப் பிடித்து வரச்செய்தார்.

🎸 சூலம் வலியயொடுங்கி முருகன் கரத்திலிருந்து,முருகன் இரண்டாயிரம் கணைகளை  ஏவி அவன் ஏறியிருந்த சிங்கத்தை கொன்றார் .சூரபன்மன் மாயா வாதத்தால் சக்கரவாளப் பறவையாக மாறி ஆகாயத்தில் பறந்து திரிந்து போர் செய்தான்.இந்திரன் ஒரு மயிலாக வடிவெடுத்து முருகனுக்கு வாகனமாயினான்.முருகன் அதன் மீது ஏறி ஆகாயத்தில்  சென்று சண்டையிட்டார்.சக்கரவாளப் பறவையாகிய சூரபன்மன் முருகனுடைய வில்லை கடித்துத் துணிக்க வந்தான்.முருகப் பெருமான் ஞான வாளால் அவனை வெட்டினார்.அதனுடைய பறவை வடிவம் மாறியது .சூரபன்மன் விசுவரூபம் எடுத்து கடல்களைத்தூர்த்தான்.கதிர்கள் வரும் வழிகளை அடைத்தான்.முருகன் ஏழு கணைகளால் அவன் செய்யும் பாணத்தை அழித்தார். தீயுரு எடுத்தான். புயல் வடிவானான்.

🎸 எல்லாவற்றையும் இறைவன் கணைகளே சென்று அளித்தன .சூரபன்மன் பல தேவவடிவங்கொண்டு பொருதான்.அவற்றையும் அம்பாலேயே அழித்தார் .சூரபன்மன் போர்க்களத்திலே தனித்து நின்றான்.முருக்கடவுள் உலகெலாம் தானாய் நிற்கும் உயர் பெரு வடிவங்கொண்டு அருள்மிகு சிங்கார வேலவராய் நின்றாய் அந்த இடம் இச்சிக்கல் தலமென உய்த்துணரக் கிடக்கின்றது.

🎸 சூரபன்மன் சிங்காரவேலவனை வியந்து நோக்க,முருகன் அவனுக்குச் சிறிது நல் உணர்ச்சியை நல்கினார்.சூரபன்மன் நிமிர்ந்து பார்த்தான்.இதுகாறும் அத்தகைய திருவுருவத்தைக் கண்டதில்லை. ஆயிரமாயிரம் கதிர்களை வீசிப் பரப்புகின்ற தேசுத் திருவுருவம் தன் முன்னே நிற்பதைப் பார்த்தான்.ஒருவனுக்கு அடிபணிந்து வளையவும் வியந்து அண்ணாந்து பார்க்கவும் அவனுக்குத் தெரியாது.நின்றால் நின்றபடியே பார்க்கும் தகைமையன்.

🎸  இப்போது மிக மிக உயரமாக இருக்கிற முருகப்பெருமானின் திருவுருவத்தை அண்ணாந்து பார்த்தான் பார்க்கும்போது இதுகாறும் இத்தகைய பேருருவுத்தைக் கண்டிலோமே என்ற வியப்பு உண்டாகியது. ”யாரோ சிறிய குழந்தை ஒரு மயிற்குஞ்சின் மீது ஏறி வருகிறதென்று அல்லவா நினைந்தேன் ! இவ்வளவு பெரிய அழகுத் திருவுருவத்தை உடையவன் முருகன் என்பதை இந்நாள் வர நினைத்திலேனே” என்று எண்ணி ஏங்குகிறான்.
    ‘கோலமா மஞ்சைமீதிரற் குலவிய குமரன் தன்னைப்
   பாலனென் றிருந்தேன் அந்நாள் பரிசிவை யுணர்ந்திலன்
   மாலயன் தனக்கும் ஏனை வானவர் தமக்கும் யார்க்கும்
   மூலகா ரணமாய் நின்ற மூர்த்தி இம் மூர்த்தி அன்றோ’
என்று வியப்பு அடைகிறேன்.இது முதற் தோற்றத்தில் உண்டான வியப்பு . தான் சிறுவன் என்று கருதிய திருவுருவம் எல்லாப் பொருளுக்கும் மூலகாரணமாக இருக்கிற மூர்த்தியாக தோன்றியவுடன் தோற்றிய வியப்பு.அதற்குப் பின்னர் அவன் தன்னுடைய கண்ணால் அப்பெருமானது ரூப லாவண்யத்தை நுகரப் போகிறான்.

🎸 மெல்ல ஒவ்வோர் உறுப்பாக கண் உலவுகிறது.எல்லை கட்டி காணவொண்ணாத பரப்பும் எல்லை கட்டிச் சொல்ல முடியாத அழகும் உடைய அந்தத் திருவுருவத்தின் திருவடி முதல் திருமுடி வரையில் தன் கண்ணை ஓச்சுகிறான். பக்கத்தில் ஓட்டுகிறான். திருக்கரங்களின்  முடிவு காணவில்லை. திருமேனியின் எல்லை காணவில்லை. அழகை அனுபவித்து  முழுமையும் காணமுடியவில்லை. இந்த நிலையில் எம்பெருமானுடைய திருவழகில் ஈடுபடுகிறான்.

🎸  உலகம் அறியாமையால் காமனைப் பேரழகன் என்று சொல்கிறது. அழகுக்குத்தலை எல்லை மன்மதன் என்று மயங்கிச் சொல்கிறார்களே! அந்த மன்மதன் எம்பெருமானுக்கு முன்னாள் நிற்க முடியுமா? எம்பெருமானுடைய திருவுருவம் முழுமையிலும் உள்ள அழகு கிடக்கட்டும். அதன் திருவடியின் கண்ணே உள்ள அழகின் ஒரு பகுதிக்காவது ஆயிரம்கோடி மன்மதன்களுடைய அழகு எல்லாம் ஒன்றுச் சேர்ந்து உருவம் எடுத்தாலும் ஒப்பாகுமா? என்று ஈடுபட்டு அந்த அழகை வியக்கிறான்.

      “ஆயிரம் கோடி காமர் அழகெலாந் திரண்டொன்றாசி
                மேயின எனினும் செவ்வேன விமலமாம் சரணந்தன்னில்
      தூயஇவ் வெழிலக் காற்றாதென்றிடின் இணைய தொல்லேன்
       மாயிரு வடிவிற் கெல்லாம்  யார் வகுக்க வல்லார்”

🎸  முருகனை இவ்வகையில் பலவாறு  போற்றிப் புகழ்ந்தான். உண்மை ஞானம் சிறிது கைவரப் பெற்றான். அதனால் “என்றும் மீளா ஆளாகவேயிருக்க எனக்கு ஆசை; ஆனால் என் மானம் என்னைத் தடுக்கிறது. என் செய்வேன்” என்று பலவாறு தோத்தரித்துத் தன் குற்றத்தை உணர்ந்து வருந்தினான். அப்போது முருகன் மீண்டும் மயில் வாகனத்தின் மீது பண்டைய பாலக உருவில் காட்சியளித்தார். சூரபன்மன்  மனம் முன்போல் அறியாமை மிக்கவனாகி மாயை மந்திர வலியால் கதிரவனும் ஒளி மழுங்கும் பேரிருள் வடிவாக வானிற் கிவம்பித் தேவர்களை வருத்தினான். தேவர்கள் “தேவர்கள் தேவே “ ஓலம். மூவரும் ஆகி நின்ற மூர்த்தியே !ஓலம்,ஓலம்”, என்று ஒலிமிட்டனர் முருகன் தமது அன்யையாம் சிக்கல் வேல்நெடுங்கண்ணியிடம் சக்தி வேற்ப்படையினைப் பெற்றார் . (இன்றும் வேல்நெடுங்கண்ணி இடம் வாங்கும் ஐதீகக் காட்சி நடைபெறுகிறது. வில் வாங்கிய பின் அருள்மிகு சிங்காரவேலவன் மீது வியர்வைத் துளிகள் காணப்படும்.)

🎸  சிக்கல் அருள்மிகு சிங்காரவேலவர் ஆகிநிற்கும் முருகன் தமது திருக்கரத்திலுள்ள சக்தி வேற்படையை நோக்கி சூரன் மார்பை பிளந்து விரைவில் மீளுதி” என்று ஏவினார். அவ்வேல் சென்று அவன் கொண்ட. இருள் வடிவத்தை அழித்தது. சினங்கொண்ட சூரபன்மன் கடல் நடுவில் ஒரு பெரிய மாமரமானான். வேற்படை அங்கும் சென்று மாமரமாக இருந்த அவனை வெட்டி வீழ்த்தியது.மீண்டும் எழுந்து சூரபன்மன் வாட்போர் செய்ய வந்தான்.

🎸  வேற்படை அவன் மார்பைப் பிளந்து உடலை இரு துண்டாக்கிக் கடலில் தள்ளியது. தேவ கங்கையில் மூழ்கித் தேவதேவன் திருக்கரத்தை அடைந்தது. சூரபன்மன் அழியா வரம் பெற்றவன் ஆதலின் மீண்டும் எழுந்தான். போர்ச் செருக்குக் கொண்டான். கோழியும் மயிலும் ஆனான். முருகன் முன்பு வந்தான். அருள்மிகு சிங்காரவேலவர் ஞான நோக்கருளினார். பரிசவேதியால் இரும்பு பொன்னானது போல அருள்மிகு சிங்காரவேலவனின் பார்வையால் சூரன் பகைமை நீக்கி நல்லறிவு பெற்றான். கொடியாகவும், ஊர்தியாகவும் இருக்க அருள் வேண்டினான்.

🎸 அருள்மிகு சிங்காரவேலவரும் அவ்வாறே நல்லருள் புரிந்தார். கோழியைக் கொடியாகவும், மயிலை ஊர்தியாகவும் கொண்டார். தேவர்கள் ஆரவாரம் செய்தனர். தோத்திரம் செய்தனர். போர்களத்திலேயே அருள்மிகு சிங்காரவேலவர் அனைவருக்கும் அருள் வழங்கினார்.

🎸 அறுபடை வீடுகளில் குன்று தோறாடலும் ஒன்று. அவ்வகையில் இத்தலம் கட்டுமலை ஆதலின் ஆறுபடை வீடுகளுள் ஒன்றாகக் கருதலாம் என்பர்.

🅱 கோவிலின் அமைப்பு:🅱

🍁  சிக்கல் சிங்காரவேலர் என்று இந்தத் தலத்து முருகக் கடவுள், பிரசித்தி பெற்றுள்ளார். எனவே, 'முருகன் கோயில்’ என்றே அனைவருக்கும் அடையாளம் தெரிகிறது. ஸ்காந்த புராணத்தின் தீர்த்த ஸம்ஹிதையில் உள்ள வசிஷ்டாஸ்ரம மகாத்மியத்தில் கூறியுள்ள தகவல்கள், இங்கேயுள்ள கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. 'வடக்கில் வாரணாசியைப் போல், தெற்கில் இங்கு தெய்வங்கள் அனைவரும் கூடுகின்றனர்; வாரணாசியில் இறந்தால் முக்தி; இங்கேயோ, சிவலிங்கத்தைக் கண்டாலே முக்தி’ என சிக்கல் தலம் குறித்த செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

🍁 ஏழு நிலை ராஜகோபுரம்; அருகில் மூன்று நிலையில் இன்னொரு கோபுரம். ஏழுநிலை கோபுரம் சிவாலயத்துக்கும், மூன்று நிலை கோபுரம் பெருமாள் கோயிலுக்கும் வழியாக அமைந்துள்ளன. உள்ளே நுழையும்போதே, மனதுள் கேள்வி வருகிறது... அதென்ன சிக்கல்? யாருக்குச் சிக்கல்?

🍁 வசிஷ்ட மாமுனிவர், இங்கு சிவனாரைப் பூஜித்து காமதேனுவைக் கிடைக்கப் பெற்றார். அதனிடமிருந்து பால் பொங்கிவர, அதில் இருந்து வெண்ணெயை எடுத்து, அந்த வெண்ணெய்யால் சிவலிங்கம் பிடித்து வழிபட்டாராம்!  பூஜை முடிந்ததும், வெண்ணெய் லிங்கத்தை அசைக்கக்கூட முடியவில்லை. பூமியில் வெண்ணெய் சிக்கிக் கொண்டதால், ஊருக்கு சிக்கல் எனப் பெயர் அமைந்தது!

🍁 கதையின் சுவாரஸ்யத்தை அசைபோட்டபடியே, உள்ளே நுழைந்ததும் கார்த்திகை மண்டபம், வசந்த மண்டபம் என்றெல்லாம் அழைக்கப்படுகிற அழகிய மண்டபத்தைக் காணலாம். கார்த்திகைத் திருநாளில், சிங்காரவேலவர் இங்கு எழுந்தருளி அருள் பாலிப்பார். மண்டபத்தில் நிலைக்கண்ணாடியும் உள்ளது. ஆகவே சிங்காரவேலவரை முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் பார்த்துப் பார்த்து பரவசத்துடன் தரிசிக்கலாம்.

🍁 அடுத்து, வெளிப்பிராகாரத்தை அடைகிறோம். இதில் பெரும்பகுதி நந்தவனமாகவே உள்ளது. வடமேற்கில், ஸ்ரீஅனுமனுக்கு தனிச்சந்நிதியும் உண்டு. 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், இந்த ஆலயத்துக்கு திருப்பணிகள் செய்த கருமுத்து அழகப்பச் செட்டியார் அவர்களின் விருப்பப்படி, சமீபகாலங்களில் அமைத்த சந்நிதி இது! ஸ்ரீஅனுமனுக்கு அமுது கட்டி வழிபட்டால், நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பர்.

🍁 வடக்குத் திருச்சுற்றில், பெருமாளுக்கான தனிக்கோயில். ஸ்ரீகோலவாமனப் பெருமாள் என்பது திருநாமம். மாவலியைச் சந்திக்க வாமனராக அவதரித்த போது, சிவனாரின் அருளைப் பெறுவதற்காக இங்கே எழுந்தருளினாராம்! தலத்தில் உள்ள, கயாசரஸ் தீர்த்தத்தை எடுப்பித்து, அதில் அனுதினமும் நீராடி, திருநீறும் ருத்திராக்ஷமும் அணிந்து, சிவனாரைப் பணிந்து, மாவலியை அழிக்கும் ஆற்றலைப் பெற்றாராம் ! ஆகவே, இவருக்கு கயா மாதவன் என்றும் கோலவாமனர் என்றும் திவ்விய நாமங்கள். தாயார் - ஸ்ரீகோமளவல்லித் தாயார்.

🍁 ஆதியில், முசுகுந்தச் சக்கரவர்த்தி, இந்த ஆலயத்தைக் கட்டியதாகக் கூறுவர். இக்ஷ்வாகு குல மன்னனாக அயோத்தியில் ஆட்சி புரிந்த முசுகுந்தர், நேர்மையாளர். ஒருமுறை, இவருடைய குதிரைக் குளம்பு ஏற்படுத்திய காயத்தால் இறந்து போனார் ஒருவர். இதில் துடித்துப் போன முசுகுந்தர், தாம் செய்த பாவத்துக்குப் பரிகாரமாக, சிவத் தலங்களைத் தரிசிக்கப் புறப்பட்டார். பல தலங்களுக்குச் சென்றார்; பலனேதும் கிடைக்கவில்லை. குல குருவான வசிஷ்டரை நாடினார். வெண்ணெய் நாதரான சிவனாரின் மகிமையை ஏற்கெனவே உணர்ந்திருந்த வசிஷ்டர், சிக்கல் தலத்தில், பால் தீர்த்தத்தில் நீராடி, சிவனாரை வழிபடும்படி அறிவுறுத்த, அதன்படியே செய்தார்; தலத்துக்குச் சென்ற கணத்தில், பாவங்கள் அகலுவதை உணர்ந்த முசுகுந்தர், மரத்தடியில் எழுந்தருளியிருந்த வெண்ணெய்நாதருக்கு கோயில் எழுப்பி, பிராகாரங்கள் அமைத்து, விதானங்கள் செப்பனிட்டுத் திருப்பணிகள் செய்தார்.

🍁 அடுத்து, உள்வாயில் ஒருபுறம், ஸ்ரீவிநாயகர்; இன்னொரு புறத்தில் ஸ்ரீதண்டபாணி. உள்ளே நுழைந்தால், உள்பிராகாரம். இங்கே தான் கொடிமரம் உள்ளது. தெற்குச் சுற்றில், பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன வாகனங்கள்! சிங்காரவேலவரின் சிறப்பு வாகனங்களான மயில், ஆடு, குதிரை ஆகிய வாகனங்கள் தங்கத்தால் தகதகக்கின்றன. அடுத்து, ஸ்ரீவிநாயகர் மற்றும் அறுபத்து மூவர்.

🍁 மேற்குச் சுற்றில், ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீகாசி விஸ்வநாதர் மற்றும் ஸ்ரீகார்த்திகை விநாயகர். அட... இப்படியரு விசேஷ திருநாமம், எதற்காம் ? கந்தக் கடவுளை வளர்த்தவர்கள், கார்த்திகைப் பெண்கள், அல்லவா ? அவர்கள், அதாவது கார்த்திகைப் பெண்கள், 'கந்தனை சரியான முறையில் வளர்க்க எங்களுக்கு உதவுங்கள்’ என விநாயகரை வழிபட்டார்களாம். அதனால், கார்த்திகை விநாயகர் எனத் திருநாமம் அமைந்ததாம் !

🍁 இவர்களை அடுத்து, ஸ்ரீஆறுமுகருக்கான தனிக்கோயில்; மயிலேறியாக அவர் காட்சி தரும் அழகே அழகு ! சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட சந்நிதி. வடமேற்கு மூலையில், ஸ்ரீகஜலட்சுமி சந்நிதி. வடக்குச் சுற்றில், ஸ்ரீபைரவர் மற்றும் நவக்கிரக சந்நிதிகள்.

🍁 வலத்தை நிறைவு செய்து கொடிமரத்தை அடையலாம்.. இங்கேயுள்ளது முன்மண்டபம்; நமக்கு வலப்பக்கத்தில் அம்பாள் சந்நிதி மற்றும் பள்ளியறை உள்ளன. எதிரில் படிகள்; இந்தப் படிகளில் (பன்னிரண்டு படிகள்) ஏறிய பிறகு, மூலவரின் சந்நிதியை அடையவேண்டும். இதனைக் கட்டுமலை என்பார்கள். கட்டுமலை சந்நிதிகளை தேவகோட்டம் என்றும் சொல்வார்கள். படிகளுக்கு அருகில் ஸ்ரீசுந்தரகணபதி காட்சி தருகிறார். அவரை வணங்கிவிட்டு, மூலவரைத் தரிசிக்கப் படிகள் ஏறினால் முன்னதாக, சோமாஸ்கந்தரான ஸ்ரீதியாகேசரின் அற்புதத் தரிசனம்.

🍁 திருவாரூர் பகுதியில் சப்த விடங்கத் தலங்களில் இந்தத் தலம் அடங்காது. சோமாஸ்கந்தர் சந்நிதியில், மரகத லிங்கம் ஒன்றும் உள்ளது; மரகதவிடங்கர் என்று திருநாமம். அடுத்து, மூலவர் சந்நிதி. ஸ்ரீநவநீதேஸ்வரர், ஸ்ரீவெண்ணெய்நாதர், ஸ்ரீவெண்ணெய்ப்பிரான், ஸ்ரீவெண்ணெய்லிங்கேஸ்வரர், பால்வெண்ணெய்நாயனார் எனப் பல திருநாமங்கள், சிவனாருக்கு!

வானுலாவு மதி வந்துலவும்
மதின்மாளிகை தேனுலாவு மலர்ச்சோலை மல்குந்திகழ் சிக்கலுள்
வேனல் வேளை விழித்திட்ட வெண்ணெய்ப்  பெருமானடி
ஞானமாக நினைவார் வினையாயின நையுமே
முன்னுமாடம் மதில்மூன்றுடனே எரியாய்விழத்
துன்னுவார் வெங்கணைஒன்று செலுத்திய சோதியான்
செந்நெல் ஆகும் வயல்சிக்கல் வெண்ணெய்ப் பெருமானடி
உன்னி நீடும் மனமே நினையாய் வினை ஓயவே... - என்று திருஞானசம்பந்தரால், துதிக்கப் பெற்ற பெருமான் இவர்தாம் ! லிங்கத் திருமேனி; சதுரபீட ஆவுடையார்; குட்டையான பாணம்; வெண்ணெயால் குழைக்கப் பெற்றவர் என்பதால், குழைவாகவே காட்சி தருகிறார்.

🍁 கடவுள் எங்கே இருக்கிறார் ? பாலில் படுநெய்யாக மறைய நின்றிருக்கிறார். பாலுக்குள்ளே, வெண்ணெயும் நெய்யும் இருந்தாலும், பாலைப் பார்க்கும் போது, இவற்றைக் காணவா முடிகிறது?! நமது அகப் பாற்கடலில் தான், ஆண்ட வனும் குடிகொண்டிருக்கிறார்.

🍁 ஆனால், அந்த அதிசயத்தை உணராமலே, ஆண்டவனை எங்கெங்கோ தேடுகிறோம் வசிஷ்டர் போன்ற மாமுனிவர்கள், உள்ளம்  எனும் பாற்கடலைக் கடைந்து, உள்ளிருக்கும் சிவத்தை வெளிப்படுத்தி, வெண்ணெய்யாக்கி வழிபட்டனர். 'இறைவா, எங்களுக்கும் வெண்ணெய்யாக வசப்படு. திரண்டு வந்து ஆட்கொள் அப்பனே’ எனப் பணிவோம்.

🅱 தல வரலாறு:🅱

⛱ புராணகாலத்தில் மல்லிகைவனம் என்று அழைக்கப்பட்ட இத்தலத்தில் வசிஷ்ட முனிவர் ஆசிரமம் அமைத்துக் கொண்டு இத்தலத்து சிவபெருமானை வழிபட்டு வந்தார். அக்கால கட்டத்தில் விண்ணுலகத்திலிருக்கும் காமதேனு பசு, பஞ்ச காலத்தில் மாமிசம் தின்று விட்டதாகவும், இதை அறிந்த சிவன், பசுவை புலியாக மாறும் படி சபித்ததாகவும் கூறப்படுகிறது. வருந்திய புலி இறைவனிடம் மன்னிப்பு கேட்டது. மனமிறங்கிய சிவன், "பூலோகத்தில் மல்லிகாரண்யம் என்ற தலத்தில் நீராடி, அங்குள்ள இறைவனை பூஜித்தால் சாபம் விலகும்,'' என்றார்.

⛱ தற்போதுள்ள ஆலயத்தின் மேற்குப் பக்கம் உள்ள பாற்குளம் என்றும் க்ஷீரபுஷ்கரணி என்றும் சொல்லப்படும் தீர்த்தத்தில் தன் பாவம் தீர நீராடியது. காமதேனு குளித்தபோது அதனுடைய பால் பெருகி குளம் முழுக்கப் பாலாக மாறியது. அங்கு வந்த வசிஷ்ட முனிவர் பால் குளத்தைப் பார்த்து அதில் இருந்து வெண்ணையை எடுத்து சிவலிங்கமாக்கி அதற்கு பூஜை செய்தார். பூஜையை முடித்தபின் அந்த சிவலிங்கத்தை வேறு இடத்தில் வைக்க எண்ணி அதை எடுக்க முயன்றார். அது இயலாமல் அந்த வெண்ணை லிங்கம் அவர் கையில் சிக்கிக் கொண்டது. அதனாலேயே இத்தலம் சிக்கல் என்ற பெயருடன் விளங்குகிறது என்று புராண வரலாறு கூறுகின்றது. வெண்ணெய் லிங்கத் திருமேனியான இறைவன் வெண்ணைப் பிராண் என்றும், நவநீத நாதர் என்றும் அழைக்கப்படுகிறார். வழிபாடு முடிந்தவுடன் இந்த லிங்கத்தை பெயர்த்து எடுக்கும் போது அது வராமல் சிக்கலை ஏற்படுத்தியதால் இத்தலம் "சிக்கல்' என்றழைக்கப்பட்டது.

🅱 சிறப்பம்சம்:🅱

Ⓜ அதிசயத்தின் அடிப்படையில்:

♻ இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

♻ கந்தசஷ்டி திருநாளின் முதல் நாள் முருகன் இத்தல அம்மனிடமிருந்து வேல் வாங்கியதாக கூறப்படுகிறது.

♻ சம்பந்தர் பெருமான் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய இப்பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

♻ சிக்கலுக்கு அருகிலுள்ள தேவார வைப்புத் தலம் ஆழியூர். (நாகப்பட்டினம் - திருவாரூர் சாலையில் கீழ்வேளூருக்கும் சிக்கலுக்கும் இடையே உள்ள ஆழியூர் ஒரு தேவார வைப்புத் தலம். இறைவன் பெயர் கங்காளநாதர். இறைவி பெயர் கற்பகவல்லி. சாலை ஓரத்திலேயே ஊர் உள்ளது. ஆழியூரிலிருந்து 2 கி.மி. தொலைவில் திருக்கண்ணங்குடி திவ்யதேசம் வைணவத் தலமும் உள்ளது.)

🅱 இருப்பிடம்:🅱

✈ திருவாரூர் - நாகப்பட்டினம் சாலையில், நாகப்பட்டினத் துக்கு முன்னதாக (சுமார் 4 கி.மீ. முன்னதாகவே) உள்ளது சிக்கல். பேருந்து வசதிக்கு குறைவே இல்லாத திருத்தலம்.

❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃
🏹 தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்🏹
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், மாங்காடு - காஞ்சிபுரம்

அம்மன் ஈசனை நோக்கி ஒற்றைக்காலில் அக்னிதவம் இருந்த தலம் ; சிவ பார்வதி  திருக்கல்யாண வைபவத்திற்காக  சீர்வரிசையுடன் வந்த திருமால் வலது கரத்தில் பிரயோக சக்கரத்துடன் வீற்றிருந்த திருக்கோலத்தில் காட்சி  அளிக்கும் தலம் ; பக்தர்கள் தங்கள் எண்ணம் ஈடேறினால் அம்பாளுக்கு புடவை சாற்றி வழிபடும் மிகவும் விசேஷமான அம்மன் திருத்தலம்..

🔵⚜🔵⚜ BRS🔵⚜🔵⚜🔵

தொலைப்பேசி :  +91- 44 - 2627 2053, 2649 5883.

🦋🎸🦋🎸 BRS🦋🎸🦋🎸🦋

மூலவர் : காமாட்சி (ஆதி காமாட்சி, தவக்காமாட்சி).
 
அம்மன்/தாயார் : காமாட்சி

தல விருட்சம் : மாமரம்

ஆகமம்/பூஜை :  காமிக ஆகம

பழமை : 2000-3000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : சூதவனம்

ஊர் : மாங்காடு
 
🅱 திருவிழாக்கள் :🅱
 
🌻 சித்திரை வருட பிறப்பு.

🌻 சித்திரைத் திருவிழா -10 நாட்கள்.

🌻 ஆனித்திருமஞ்சனம்

🌻 நவராத்திரி.

🌻 மாசி மகம்,.

🌻 மகாசிவராத்திரி.
🌻 தீபாவளி , பொங்கல்

🅱 தல சிறப்பு:🅱
 
🎭 காமாட்சி என்றதும் அனைவருக்கும் காஞ்சீபுரம்தான் நினைவுக்கு வரும். ஆனால் காமாட்சி முதலில் மாங்காட்டில் தவம் இருந்த பிறகே காஞ்சீபுரத்துக்கு எழுந்தருளினாள் என்று காஞ்சிப்புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

🎭 அம்பிகை முதன் முதலாக தவம் செய்த இடம் என்பதால் மாங்காடு "ஆதி காமாட்சி தலம்' எனப்படுகிறது.

🎭 மாங்காட்டில் காமாட்சி அம்மன் சிவனை நோக்கி தவம் இருக்கும் கோலத்தில் காட்சித் தருகிறாள்.

🎭 அன்னை பார்வதி தேவி எத்தனையோ தவம் இருந்துள்ளாள். அதில் மிகக் கடுமையான தவமாக மாங்காட்டில் இருந்த தவம் கருதப்படுகிறது.

🎭 மாங்காடுக்கு வடமொழியில் “ஆம்ராரண்யம்” என்று பெயர். அம்ரம் என்றால் மாமரம். அரண்யம் என்றால் காடு. எனவே ஆம்ராரண்யம் என்று அழைக்கப்பட்டது.

🎭 காமாட்சி வருவதற்கு முன்பே மாங்காடு புண்ணிய பூமியாக இருந்ததாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

🎭 மாங்காடு தலத்தில் பார்கவர், மார்க்கண்டேயர் ஆகிய மகரிஷிகள் தவம் இருந்து பலன் பெற்றுள்ளனர்.

🎭 மாங்காட்டில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு காமாட்சியம்மன் ஆலயத்தை சோழ மன்னர்கள் கட்டினார்கள். அவர்களால் கருவறை, அர்த்த மண்டபம் கட்டப்பட்டது.

🎭 விஜயநகர பேரரசு மன்னர்கள் இத்தலத்தில் பல்வேறு திருப்பணிகள் செய்துள்ளனர். மகா மண்டபம், சபா மண்டபம் அவர்கள் கட்டியதுதான்.

🎭 இவ்வாலயத்தில் ஆதிசங்கரர் நிறுவிய அர்த்தமேரு ஸ்ரீசக்கரமே மூலஸ்தானமாக உள்ளது.

🎭 அபிசேகம் பஞ்சலோக காமாட்சிக்கும், அர்ச்சனை ஸ்ரீ சக்ரத்துக்கும் செய்யப்படுகிறது.

🎭 மாங்காடு தலம் மிகச் சிறந்த பிரார்த்தனை தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

🎭 இத்திருக்கோவிலில் “எலுமிச்சம்பழம் கொண்ட ஆறு வார வழிபாடு” பக்தர்களால் பெரிதும் கடைப்பிடிக்கப்படுகிறது.

🎭 செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இத்தலத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

🎭 மாங்காடுக்கு சூதவதனம், மாலை என்ற பெயர்களும் உண்டு.

🎭 மாங்காடு காமாட்சிக்கு ஆதிகாமாட்சி, தபஸ் காமாட்சி என்றும் பெயர்கள் உண்டு.

🎭 இத்தலத்தில் ஆதிசங்கரர் நிறுவிய அர்த்தமேரு சக்கரம், சந்தனம், அகில், பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ, கோரோசனம், சிலாஜித், ஜடாமாஞ்சீ, கச்சோலம் ஆகிய 8 வகையான கந்தங்களைக் கொண்டது.

🎭 மாங்காடு காமாட்சிக்கும் ஒற்றை மாமரத்துக்கும் தொடர்பு உண்டு. ஆனால் ஏனோ இத்தலத்தில் ஒற்றை மாமரம் இல்லை.

🎭 மாங்காடு கோவிலில் அரசர்கள் காலத்தில் செதுக்கி வைக்கப்பட்டுள்ள ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன. அந்த கல்வெட்டுகளில் 8 கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள… Read more                      
[17:20, 7/20/2017] +91 99712 78934: 🙏🏽 தினம் ஒரு திருக்கோவில்:🙏🏽

🍁🌤🍁🌤 BRS🍁🌤🍁🌤🍁

அம்மன் ஈசனை நோக்கி ஒற்றைக்காலில் அக்னிதவம் இருந்த தலம் ; சிவ பார்வதி  திருக்கல்யாண வைபவத்திற்காக  சீர்வரிசையுடன் வந்த திருமால் வலது கரத்தில் பிரயோக சக்கரத்துடன் வீற்றிருந்த திருக்கோலத்தில் காட்சி  அளிக்கும் தலம் ; பக்தர்கள் தங்கள் எண்ணம் ஈடேறினால் அம்பாளுக்கு புடவை சாற்றி வழிபடும் மிகவும் விசேஷமான அம்மன் திருத்தலம்..

🔵⚜🔵⚜ BRS🔵⚜🔵⚜🔵

அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், மாங்காடு - காஞ்சிபுரம்

தொலைப்பேசி :  +91- 44 - 2627 2053, 2649 5883.

🦋🎸🦋🎸 BRS🦋🎸🦋🎸🦋

மூலவர் : காமாட்சி (ஆதி காமாட்சி, தவக்காமாட்சி).
 
அம்மன்/தாயார் : காமாட்சி

தல விருட்சம் : மாமரம்

 ஆகமம்/பூஜை :  காமிக ஆகம

பழமை : 2000-3000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : சூதவனம்

ஊர் : மாங்காடு
 
🅱 திருவிழாக்கள் :🅱
 
🌻 சித்திரை வருட பிறப்பு.

🌻 சித்திரைத் திருவிழா -10 நாட்கள்.

🌻 ஆனித்திருமஞ்சனம்

🌻 நவராத்திரி.

🌻 மாசி மகம்,.

🌻 மகாசிவராத்திரி.

🌻 தீபாவளி , பொங்கல்

🅱 தல சிறப்பு:🅱
 
🎭 காமாட்சி என்றதும் அனைவருக்கும் காஞ்சீபுரம்தான் நினைவுக்கு வரும். ஆனால் காமாட்சி முதலில் மாங்காட்டில் தவம் இருந்த பிறகே காஞ்சீபுரத்துக்கு எழுந்தருளினாள் என்று காஞ்சிப்புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

🎭 அம்பிகை முதன் முதலாக தவம் செய்த இடம் என்பதால் மாங்காடு "ஆதி காமாட்சி தலம்' எனப்படுகிறது.

🎭 மாங்காட்டில் காமாட்சி அம்மன் சிவனை நோக்கி தவம் இருக்கும் கோலத்தில் காட்சித் தருகிறாள்.

🎭 அன்னை பார்வதி தேவி எத்தனையோ தவம் இருந்துள்ளாள். அதில் மிகக் கடுமையான தவமாக மாங்காட்டில் இருந்த தவம் கருதப்படுகிறது.

🎭 மாங்காடுக்கு வடமொழியில் “ஆம்ராரண்யம்” என்று பெயர். அம்ரம் என்றால் மாமரம். அரண்யம் என்றால் காடு. எனவே ஆம்ராரண்யம் என்று அழைக்கப்பட்டது.

🎭 காமாட்சி வருவதற்கு முன்பே மாங்காடு புண்ணிய பூமியாக இருந்ததாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

🎭 மாங்காடு தலத்தில் பார்கவர், மார்க்கண்டேயர் ஆகிய மகரிஷிகள் தவம் இருந்து பலன் பெற்றுள்ளனர்.

🎭 மாங்காட்டில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு காமாட்சியம்மன் ஆலயத்தை சோழ மன்னர்கள் கட்டினார்கள். அவர்களால் கருவறை, அர்த்த மண்டபம் கட்டப்பட்டது.

🎭 விஜயநகர பேரரசு மன்னர்கள் இத்தலத்தில் பல்வேறு திருப்பணிகள் செய்துள்ளனர். மகா மண்டபம், சபா மண்டபம் அவர்கள் கட்டியதுதான்.

🎭 இவ்வாலயத்தில் ஆதிசங்கரர் நிறுவிய அர்த்தமேரு ஸ்ரீசக்கரமே மூலஸ்தானமாக உள்ளது.

🎭 அபிசேகம் பஞ்சலோக காமாட்சிக்கும், அர்ச்சனை ஸ்ரீ சக்ரத்துக்கும் செய்யப்படுகிறது.

🎭 மாங்காடு தலம் மிகச் சிறந்த பிரார்த்தனை தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

🎭 இத்திருக்கோவிலில் “எலுமிச்சம்பழம் கொண்ட ஆறு வார வழிபாடு” பக்தர்களால் பெரிதும் கடைப்பிடிக்கப்படுகிறது.

🎭 செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இத்தலத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

🎭 மாங்காடுக்கு சூதவதனம், மாலை என்ற பெயர்களும் உண்டு.

🎭 மாங்காடு காமாட்சிக்கு ஆதிகாமாட்சி, தபஸ் காமாட்சி என்றும் பெயர்கள் உண்டு.

🎭 இத்தலத்தில் ஆதிசங்கரர் நிறுவிய அர்த்தமேரு சக்கரம், சந்தனம், அகில், பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ, கோரோசனம், சிலாஜித், ஜடாமாஞ்சீ, கச்சோலம் ஆகிய 8 வகையான கந்தங்களைக் கொண்டது.

🎭 மாங்காடு காமாட்சிக்கும் ஒற்றை மாமரத்துக்கும் தொடர்பு உண்டு. ஆனால் ஏனோ இத்தலத்தில் ஒற்றை மாமரம் இல்லை.

🎭 மாங்காடு கோவிலில் அரசர்கள் காலத்தில் செதுக்கி வைக்கப்பட்டுள்ள ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன. அந்த கல்வெட்டுகளில் 8 கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

🎭 கல்வெட்டுகளில் மாங்காட்டின் பெயர் “அழகிய சோழ நல்லூர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

🎭 சிவபெருமானின் உத்தரவை ஏற்று பார்வதி தேவி, கன்னிப் பெண்ணாக மாங்காட்டில் எழுந்தருளியதால் இத்தலத்தில் கன்னிப்பெண்கள் மனம் உருகி அம்பாளை வழிபட்டு என்ன வரம் கேட்டாலும் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

🎭 அன்னை காமாட்சியை வழிபட்டால் கிரக தோஷங்கள் அனைத்தும் விலகி ஓடி விடும்.

🎭 இத்தலத்து தங்கரதம் 17.5 கிலோ எடை அளவு தங்கத்தால் செய்யப்பட்டதாகும். இது தமிழகத்தில் உயரமான தங்க ரதங்களில் ஒன்றாகும்.

🎭 மாங்காடு காமாட்சியை முன்பு பூஜை வைத்த ஏகாம்பரம் குருக்கள் பார்த்து இருப்பதாக செவி வழி செய்தி ஒன்றுள்ளது.

🎭 கோவில் உள் பிரகாரத்தில் ஆதிசங்கரரின் உருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
 
🅱 நடை திறப்பு:🅱
 
🗝 காலை 6 மணி - 1.30 மணி, மாலை 3 - இரவு 9.30 மணி வரையிலும் திறந்திருக்கும். ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பகலில் நடை அடைக்கப்படுவதில்லை.🗝

🅱 பொது தகவல்:🅱

🦋 ஒருகாலத்தில் மாமரங்கள் நிறைந்து மாமரக்காடாக விளங்கியதால் இத்தலம் மாங்காடு எனும் பெயர் பெற்றது.

🦋  மாங்காடு கோயிலிலிருந்து சற்றுதூரத்தில், வெள்ளீஸ்வரர் கோயில் உள்ளது. சுக்கிரனின் மற்றொரு பெயர் வெள்ளி. இந்த ஈஸ்வரன், நவக்கிரக கோயிலான கஞ்சனூர் சுக்ரபுரீஸ்வரர் கோயில் போன்று சுக்கிரனுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கோயிலாகும்.

 🦋 காஞ்சிபுரத்தைப் போல, மாங்காட்டில் காமாட்சிக்கே முக்கியத்துவம் என்பதால், வெள்ளீஸ்வரர் கோயிலில் அம்பாள் இல்லை. அம்பாளின் பாதம் மட்டுமே இருக்கிறது.

🦋  வெள்ளீஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகர், கைகளில் நெற்கதிரும், மாங்கனியும் வைத்திருக்கிறார். விவசாயிகள் இவருக்கு மாங்கனி மற்றும் நெல் நைவேத்யமாக படைத்து வழிபடுகிறார்கள். இதனால், விவசாயம் செழிப்பதாக நம்பிக்கை. கோஷ்டத்தில் உள்ள மற்றொரு விநாயகர் கையில் குடை, சாமரத்துடன் நின்ற கோலத்தில் உள்ளார்.

🦋 தேவி கிழக்குத்திசை நோக்கி தனிச் சந்நிதியில் காட்சி தருகிறாள். சப்தகன்னிகைகள், மாங்கனியுடன் வீற்றிருக்கும் விநாயகர், ஒற்றைக் கல்லால் உருவான முருகப்பெருமான், வள்ளி தெய்வானை, காமாக்ஷி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

🦋 கையிலே கணையாழி, இருபுறமும் ஸ்ரீதேவி, பூதேவி, வைகுந்தவாசன், தேவியின் மண வைபவத்திற்குச் சீர்வரிசை செய்வதற்காக காமாக்ஷி கோவிலில் எழுந்தருளியுள்ளார்.

🦋 அம்பாள் அந்தஸ்தில் ஸ்ரீசக்ரம் பொதுவாக மூலஸ்தானத்தில் அம்பிகைதான் பிரதான தெய்வமாக (மூலவர்) வணங்கப்படுவாள். ஆனால், இக்கோயிலில் அர்த்தமேரு ஸ்ரீசக்ரமே அம்பாளாக கருதி வணங்கப்படுகிறது. ஸ்ரீசக்ரத்திற்கு பின்புறம் அம்பாளின் உற்சவர் சிலை இருக்கிறது. இவளுக்கே அபிஷேக, அலங்காரங்கள் செய்யப்படுகிறது.

🅱 பிரார்த்தனை:🅱
 
🌹 இத்தலத்தில் ஆறு வார வழிபாட்டு முறை நடைமுறையில் உள்ளது. வாரத்தில் ஏதேனும் ஒருநாளில் எலுமிச்சைக் கனியுடன் அம்மனைத் தரிசித்து பின்னர் அதே கிழமைகளில் தொடர்ந்து ஆறு வாரங்கள் (அதாவது ஒரு மண்டலம் ) வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடுகிறது.

🌹 அம்பாள் இத்தலத்தில் தவம் புரிந்து பின்னர் இதன் பயனால் காஞ்சியில் மணந்து கொண்டமையால் கன்னிப் பெண்கள் மஞ்சள் கயிற்றைக் கட்டி வழிபட்டால் மணக்கோலம் பூணுவர். ஆண்களுக்கும் இது பொருந்தும்.

🌹 புத்திர பாக்கியம் இல்லாதோர் தொட்டில் கட்டி வழிபட்டால் வீட்டிலே குழந்தைக்குதொட்டில் கட்ட அன்னை அருள்புரிவாள்.பணி இல்லாதோரும் ஆறு வாரம் வழிபட்டால் பலன் கிடைக்கும். பல்லாயிரக்கணக்கோர் ஆறு வார வழிபாட்டால் பலனடைந்து வருகின்றனர்.

🌹 உத்தியோக உயர்வு , உடல் சார்ந்த குறைகள் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்திற்கு பக்தர்கள் பெருமளவில் வருகின்றனர்.

🅱 நேர்த்திக்கடன்:🅱

💥 அம்மனுக்கு (ஸ்ரீஅர்த்தமேருஸ்ரீசக்கிரம்)புடவை சாத்துதல், பால் அபிசேகம்,அன்னதானம் செய்தல் ஆகியவை தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகள் செய்தல் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர்.
 
🅱 தலபெருமை:🅱

🍁 ஸ்ரீஅர்த்தமேரு ஸ்ரீசக்ரம் ஆதிசங்கரர் :🍁

🔥 இக்கோயிலிலுள்ள அர்த்தமேரு ஸ்ரீசக்ரம் மிகவும் விசேஷமானது. 43 திரிகோணங்கள் கொண்ட இச்சக்ரம், * "அஷ்டகந்தம்'* என்னும் எட்டு வகையான மூலிகைகளால் செய்யப்பட்டது. எனவே இதற்கு அபிஷேகம் கிடையாது.

🔥 சந்தனம், புனுகு, சந்தனம் சாத்தி, குங்கும அர்ச்சனை செய்கின்றனர். இச்சக்ரத்திற்கு விஜயதசமியன்று அஷ்டகந்த மூலிகை சாத்தப்படுகிறது. அன்று ஒருநாள் மட்டும் இதனை தங்க கவசத்தில் தரிசிக்கலாம். மற்ற நாட்களில் வெள்ளி கவசம் சாத்தப்பட்டிருக்கும்.

🔥 இத் திருக்கோயிலில் ஸ்ரீ சக்ரத்திற்கே முக்கிய பிராதானம்.மூலிகைகளால் ஆனதால் அபிசேகம் கிடையாது.குங்கும அர்ச்சனை விசேசமானது.இந்த அர்த்தமேரு ராஜ யந்திரமாகும்.இதற்கு கூர்மம்(ஆமை) உருவத்தை அடித்தளமாக்கி அதன் மேல் மூன்று படிக்கட்டுகள் கட்டி அதற்கு மேல் 16 இதழ் தாமரை அதற்கும் மேல் 8 இதழ் தாமரை அமைத்து அதன்மேல் ஸ்ரீ சக்ர யந்திரம் வரையப்பட்டுள்ளது.இந்தர அர்த்தமேரு மிகப்பெரியது.இம்மாதிரி வேறு எங்குமே இல்லை.இதற்கு 18 முழப்புடவை அணிவிக்கிறார்கள்.

🍁 அன்னையின் தவக்கோலம் : 🍁

🔥 ஐந்து குண்டங்களில் தீ வளர்த்து நடுக்குண்டத்தில் தனது இடது காலின் கட்டை விரலின் நுனிப்பகுதி அக்னியில் படுமாறும் வலது காலை இடது காலின் தொடைக்கு மேற்புறமாயும் இடது கையை நாபிக் கமலத்திற்கு அருகிலும் வலது கையில் ஜபமாலையுடன் தனது சிரசிற்கு மேலும், அழகிய கண்களை மூடிய நிலையிலும் அம்பாள் தன்னை ஐயனுடன் இணைத்துக் கொள்ள மாங்காடு திருத்தலத்தில் கடும் தவம் புரிந்தார்.இத்தலத்தில் பஞ்சாக்னி மத்தியில் ஸ்ரீ காமாட்சி அம்மன் தவம் புரியும் அற்புத காட்சி உற்சவ சிற்பமாக உள்ளது கறிப்பித்தக்கது..

🍁 நான்கு அம்பாள் தரிசனம் :🍁

🔥 மூலஸ்தானத்தில் அம்பாளாக பாவித்து வணங்கப்படும் ஸ்ரீசக்ரம், அதற்கு பின்புறம் பஞ்சலோகத்தால் ஆன ஆதிகாமாட்சி மற்றும் முன் மண்டபத்தில் பஞ்சாக்னியில் தவம் செய்யும் காமாட்சி என இங்கு மூன்று அம்பாளை தரிசிக்கலாம். இதுமட்டுமின்றி ஆதிகாமாட்சி அருகில், சிறிய காமாட்சி விளக்கும் எரிந்து கொண்டிருக்கிறது. இந்த விளக்கையும் அம்பிகையாகவே கருதி வழிபடுகிறார்கள். இவ்வாறு இக்கோயிலில் நான்கு அம்பிகைகளையும் முன் மண்டபத்திலிருந்து ஒரே சமயத்தில் தரிசிக்கலாம் என்பது விசேஷம். மூலஸ்தானத்திலுள்ள அம்பாள், வலக்கையில் கிளி வைத்து, தலையில் பிறைச்சந்திரனை சூடியிருப்பது சிறப்பம்சம்.

🍁 "ஒத்தக்கால்ல நின்னு சாதிச்சுட்டான்'னு சொல்வது ஏன்? : 🍁

🔥 குழந்தைகள் அடம்பிடித்து எதையாவது வாங்கி விட்டாலும் சரி.., அவர்களே தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று விட்டாலும் சரி..."ஒற்றைக்காலில் நின்று சாதித்து விட்டான்' என்று சொல்வது வழக்கம். இந்த பேச்சு வழக்கு காமாட்சியம்மனை மையப்படுத்தியே வந்தது. அம்பாளை, சிவன் பூலோகத்திற்கு அனுப்பியபோது அவள் இங்கு தவமிருந்தாள். ஆனால், சிவனது தரிசனம் கிடைக்கவில்லை. எனவே, தீயின் மத்தியில் நின்று பார்த்தாள். அதற்கும் அவர் மசியவில்லை. பின்னர் ஒற்றைக்காலில், ஊசிமுனையில் நின்று தவம் செய்ய ஆரம்பித்து, அவரது தரிசனம் பெற்றாள். இறைவனை கண்ணால் பார்த்தால் தான் நம்புவேன் என சிலர் விதண்டாவாதம் பேசுவர். இறைதரிசனம் அவ்வளவு எளிதில் கிடைக்காது. ஈசனின் மனைவியே அவரைப் பார்க்க ஒற்றைக்காலில் நிற்க வேண்டி இருக்கிறது என்றால், சாதாரண மானிடர்களான நமக்கு எவ்வளவோ பக்குவம் வேண்டும்!

🍁 கணையாழியுடன் பெருமாள்: 🍁

🔥 சிவன், அம்பாளுக்கு அருள்புரிய இங்கு வந்தபோது, திருமாலும் தன் தங்கைக்கு திருமணச்சீர் கொண்டு வந்தார். ஆனால், சிவனின் கட்டளைப்படி அம்பாள் காஞ்சிபுரம் செல்லவே திருமாலும் கிளம்பினார். அப்போது மார்க்கண்டேயர் இங்கேயே தங்கும்படி அவரிடம் வேண்டினார். எனவே திருமால், வைகுண்டப்பெருமாளாக இங்கு எழுந்தருளினார். பிரயோக சக்கரத்துடன் இருக்கும் இவர், சீர் கொண்டு வந்ததன் அடையாளமாக கையில் கணையாழி (மோதிரம்) வைத்திருக்கிறார். இவரை, "சீர் பெருமாள்' என்றும் அழைக்கிறார்கள்.

🍁 நிறைமணி தரிசனம்: 🍁

🔥 பவுர்ணமியன்று மாலையில் இங்கு நவகலச ஹோமம் நடக்கிறது. ஒன்பது கலசங்களில், ஒன்பது சக்திகளை ஆவாஹனம் செய்து ஹோமமும், ஸ்ரீசக்ரத்திற்கு புஷ்பாஞ்சலியும் செய்கின்றனர்.

🔥 புரட்டாசி பவுர்ணமியில் இங்கு நடக்கும் நிறைமணி தரிசனத்தில் இனிப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள், தானியம் இவற்றால் அர்த்தமண்டபம், தபஸ் மண்டபம் மற்றும் முன் மண்டபத்தை அலங்காரம் செய்கின்றனர். இந்த தரிசனம் கண்டால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.


🅱  முத்தேவியருடன் தங்கத்தேர்: 🅱

🌷 தினமும் மாலையில் இக்கோயிலில் தங்கத்தேரில் அம்பிகை, சரஸ்வதி, லட்சுமி மூவரும் உலா வருகின்றனர். சப்தமாதர்களில் ஒருத்தியான பிராஹ்மி தேரோட்டியாக முன்புறம் இருக்கிறாள். தேரைச்சுற்றிலும் நவகன்னியரும் இருக்கின்றனர். மகாமண்டபத்திற்கு மத்தியில் அணையா குத்து விளக்கு இருக்கிறது. இதற்கு இடதுபுறம் தபஸ் காமாட்சி சன்னதி உள்ளது.

🅱 தல வரலாறு:🅱

⛱  கயிலாய மலையின் பனிச்சிகரங்கள் சூழ்ந்த இடத்தில் பரமேஸ்வரன் அமர்ந்திருந்தார். அலகிலா விளையாட்டுடையவனாகிய ஈசனுடன் விளையாட தேவி பார்வதி விழைந்தாள். ஈசனின் கண்களை தம் மலர்க்கரங்களால் பொத்தினாள். முக்கண்ணனின் இருகண்களாக இருப்பவர்கள் சந்திர, சூரியர்கள் அல்லவா?

⛱ தேவி ஈசனின் கண்களைப் பொத்திய நேரம் ஒரு கணம்தான். ஆனால், தேவகணம், மானுடர்க்குப் பல காலமாயிற்றே!

⛱ சந்திர, சூரியரின் இயக்கம் நின்றது. பூவுலகம் செயலிழந்தது. இச்செயலினால் தேவி சிறிது காலம் தவம் செய்து மீண்டும் இறைவனோடு இருப்பதற்கு திருவுளங்கொண்டாள்.

⛱ தவம் செய்துதான் மீண்டும் தம் நாயகனைப்பெற வேண்டும் என்பதால் மாமரங்கள் சூழ்ந்த பதியை அடைந்தாள். ‘ஆமாரண்யம்’ என்று அழைக்கப்பட்ட தலம் மாங்காடு. அங்கு பஞ்சாக்னியின் நடுவே தேவி பார்வதி தவக்கோலம் கொண்டாள். சுற்றிலும் அக்னி குண்டங்கள். நடுவில் உள்ள குண்டத்தில் அக்னி கொழுந்துவிட்டு எரிந்தது. அதில் காமாக்ஷி ஈசனை அடைய வேண்டும் என்ற பெருவிருப்பம் கொண்டவளான தேவியாக தன் இடக்கால் கட்டை விரலை அக்னியில் ஊன்றி, வலக்காலை மடித்து இடக்காலின் மீது படிய வைத்த நிலையில் கடுந்தவம் புரிந்தாள். வலக் கரத்திலே ஜபமாலை தாங்கி சிரஸின் மீது வைத்திருந்தாள். இடக்கரம் சின் முத்திரையுடன் நாபிக்கமலத்தின் மீது படிந்திருந்தது. தியான நிலையில் இருவிழி மூடி மோனத்தவம் புரியும் மோகன வடிவாக காமாக்ஷி திகழ்ந்தாள். (இன்றும் இக்காட்சியைக் இத்தலத்தில் காணலாம்.)

⛱ தேவியின் திருக்கரம் பற்றி அழைத்துவர மாங்காட்டை நோக்கி ஈசனும் புறப்பட்டார். தேவியை நாடி ஓடோடி வந்த சிவனின் திருவடிகள் மாங்காட்டை நெருங்கியதும் அசையாமல் நின்று விட்டன. சிவநாமம் உச்சரித்து தவமிருக்கும் மாமுனிவன் குரல் கேட்டு உலகம்மையை நெருங்காமல் உறைந்துபோய் நின்று விட்டார். இடைவிடாமல் சிவமந்திரத்தை உச்சரித்து கடுந்தவமிருக்கும் மாமுனிவர் சுக்கிர முனிவனாவார்.

⛱ திருமால் வாமன அவதாரத்தின்போது மகாபலி சக்கரவர்த்தி தானதர்மங்கள் செய்யும்போது திருமால் வாமன வடிவத்தில் வந்து தானம் கேட்டார். அசுர குருவாகிய சுக்கிராச்சாரியார் தானம் கேட்க வந்திருப்பது சிறுவனல்ல மகாவிஷ்ணவே என்பதை உணர்ந்து மகாபலி சக்கரவர்த்தியிடம் “தானம் கொடுக்காதே” என்று கூறுகிறார்.

⛱ வாமன வடிவில் வந்த திருமால் மூன்றடி மண் கேட்க, “நீங்கள் கூறும் தானத்தைக் கொடுக்கிறேன்” என்று கூறி கெண்டியிலிருந்து நீரை வார்த்துக் கொடுக்க முனைய அந்த கெண்டியின் துளை வழியில் அசுரகுரு சுக்கிராச்சாரியார் கருவண்டு வடிவத்தில் உருமாறித் தடுத்தார். வாமன அவதாரத்தில் வந்த மகாவிஷ்ணு தன்னிடம் வைத்திருந்த தர்ப்பைப் புல்லினால் துளைப்பகுதியில் குத்தியவுடன் அதில் மறைந்திருந்த சுக்கிராச்சாரியார் வெளிவந்தார். அப்போது சுக்கிராச்சாரியாரின் ஒரு கண் பார்வையை இழந்து விட்டது.

⛱ தானம் கொடுப்பவர்கள் கொடுப்பதை யாரும் தடுக்கக் கூடாது என்பதை இந்நிகழ்ச்சியின் வாயிலாக அறிய முடிகிறது. பிறகு திருமாலிடம் சுக்கிரன் மன்னிப்புக் கேட்டு தன்னுடைய பார்வையை திரும்பவும் தருமாறு கோரிக்கை விடுத்தார். அதற்கு திருமால் “இப்பூவுலகில் மாங்காடு என்னும் தலத்தில் பார்வதிதேவி காமாட்சியாக வடிவெடுத்து பஞ்சாக்னி வளர்த்து தவம் செய்கிறாள். அவளது தவத்தை பூர்த்தி செய்ய இறைவன் பூவுலகம் வருவார்.

⛱ நீ மாங்காடு சென்று தவமிருந்தால் அத்தருணத்தில் உன் விழிக்கு பார்வை கிடைக்கும்” என்று கூறினார். பின்னர் சுக்கிராச்சாரியார் மாங்காட்டுக்கு வந்து சிவலிங்கம் அமைத்து இறைவனுக்கு பூஜை செய்யச் சுக்கிர தீர்த்தக்குளம் ஒன்றை உருவாக்கி சிவனை எண்ணி தவம் செய்தார். இறைவன் கயிலாயத்தில் இருந்து இப்பூவுலகில், கடும் தவம் புரிந்த காமாட்சி அம்மனுக்கு காட்சி தர வந்தார்.

⛱ வரும் வழியிலேயே சுக்கிர முனிவர் சிவனை வழிபடுவது அறியவே, சுக்கிர முனிவரின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், முனிவரின் முன்தோன்றி அருள்புரிந்து சுக்கிர முனிவருக்கு பார்வை கொடுத்தார். “உன் கடுந்தவம் என்னை மிகவும் ஈர்த்தது” எனக்கூறி ஈசன் தொண்டருள் அடக்கம் என்பதை மெய்ப்பிக்க அவருக்கு நல்லருள் புரிந்ததுடன், அவரது விருப்பத்தின் பேரில் அங்கேயே கோயில் கொண்டு அமர்ந்து விட்டார்.

⛱ ஈசன் சுக்கிராச்சாரியாருக்கு கண் பார்வை இத்தலத்தில் கிட்டியதால் ஒரு கண் பார்வை மாறு கண் பார்வை, மங்கலான பார்வை, பார்வை இழப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த தலத்திற்கு வந்து வெள்ளீஸ்வரரை வழிபட்டு சென்றால் பலன் பெறுவது நிச்சயம் என்கிறார்கள். சுக்கிரனுக்கு வெள்ளி என்ற ஒரு பெயர் உண்டு. எனவே அவருக்கு அருள் புரிந்ததையட்டி ‘வெள்ளீசுவரர்’ என்ற திருநாமத்துடன் இன்றும் கோயில் கொண்டிருப்பதைக் காணலாம். அதேபோல வடமொழியில் சுக்கிரனுக்கு பார்கவன் என்ற பெயர் உண்டு. அதையட்டி இந்த வெள்ளீசுவரர் வடமொழியில் ‘பார்கவேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார்.

⛱ எளியோர்க்கும், வறியோர்க்கும் கடுந்தவம் முனைவோர்க்கும் காட்சி தரும் இறைவன் அம்மையை மட்டும் “மீண்டும் தவம் செய்வாய். காஞ்சிபுரத்துக்கு வந்து தவத்தை தொடர்வாய்” என்று கூறி அங்கு அம்மையை மணம் புரிவதாக அசரீரியாய்க் கூறி மறைந்தார். இதனால் மனம் மகிழ்ந்து அம்பாள் காஞ்சிக்கு சென்றாள். தவம் செய்த கோலத்தால் மாங்காட்டில் அம்பாளின் பெயர் தவக்காமாட்சி என்றானது. மணலில் சிவனின் உருவத்தைச் செய்து திருமணம் செய்ய அம்பாள் வேண்டினாள். நல்ல பங்குனி உத்திர நாளில் திருமணம் நடந்தது.

⛱ ஆனால் திருமணத்திற்காக செல்லும் போது, அக்னியை அணைக்க அம்பாள் மறந்து விட்டாள்.அன்னையைச் சூழ்ந்திருந்த பஞ்சாக்னி அணையவில்லை. தேவியும் அதை விட்டுச் சென்றதும், அக்னி, அப்பிரதேசத்தைத் தன் சிவந்த நாக்குகளால் பற்றிக் கொண்டான். பசுமைக் காடாக இருந்த மாமரத் தோப்புகள் பற்றி எரிந்தன. நீர் வறண்டு, புல் பூண்டு முளைக்காத பிரதேசமாக விளங்கியது. வெகுகாலம் இந்நிலை நீடித்தது.

⛱ சுற்று வட்டார கிராமங்களும் பாதிப்படைந்தன. இந்நிலையில் சனாதன தர்மத்தைக் காக்க, பரமேஸ்வரரின் திருவருள் சங்கரராக அவதரித்து ஆசேது இமாசலத்துக்குத் திக்விஜயம் செய்தார். அவ்வாறு வரும் வழியிலெல்லாம் ஜனங்களின் துர்பிக்ஷங்களைப் போக்கியருளினார்.

⛱ மாங்காட்டின் நிலையைக் கேள்வியுற்றார். தேவியின் உக்ரத்தைத் தணிக்கவும், அப்பிரதேசம் செழுமை பெறவும் ஸ்ரீசக்ரம் ஒன்றைப் பிரதிஷ்டை செய்தார். ‘அஷ்டகந்தம்’ என்னும் எட்டு வகையான மருந்துப் பொருள்களால் ஆனது அந்த ஸ்ரீசக்ரம்.

🅱 சிறப்பம்சம்:🅱
 
Ⓜ  அதிசயத்தின் அடிப்படையில்:

♻ அம்மன் ஈசனை நோக்கி ஒற்றைக்காலில் அக்னிதவம் இருந்த இடம். இத்தலத்தில் தவம் இருந்து விட்டு பின்புதான் காஞ்சியில் ஏகாம்பரேஸ்வரரை திருமணம் செய்து கொண்டார்.

♻ அபிசேகம் பஞ்சலோக காமாட்சிக்கும், அர்ச்சனை ஸ்ரீ சக்ரத்துக்கும் செய்யப்படுகிறது.

♻ இக்கோவிலில் வெள்ளிக்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் மிக விசேஷமானவை. சுக்ரபகவான் இத்தலத்தில் தேவியை வழிபட்டுள்ளதால் சுக்ரவார பூஜை சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. மாங்காடு காமாக்ஷி அம்மன் கோவிலை சோழர்கள் கட்டியதாகக் கூறப்படுகிறது. கோவில், அமைப்பில் சிறியதாக இருப்பினும் சக்தி வாய்ந்தது. அருட் பிரசாதம் வழங்கும் தேவியைத் தரிசிக்க கன்னிப் பெண்கள் கூட்டம் அதிகம்.

♻ தேவிக்கு எந்நாளும் திருநாளே. ஆடிப்பூரத்தன்று அம்மானை வளையல் சாத்தி வழிபடக் கூடும் கூட்டம் கணக்கிலடங்காது. ஒன்பது நாளும் கொலு வீற்றிருக்கும் நவராத்திரி, மாங்காடு கோவிலில் நடைபெறும் உற்சவமாகும். பங்குனி உத்திரமும் சிறப்பானவை.

♻ வெள்ளிக் கிழமைகளிலும் பௌர்ணமி திதியிலும் அம்மனுக்குக் கோலாகலமான ஊஞ்சல் உற்சவமும், பின்பு தங்கரதத்தில் பவனியும் நடைபெறுகின்றன.

🅱 இருப்பிடம்:🅱

✈பூந்தமல்லிக்கும், குன்றத்தூருக்கும் நடுவில் மாங்காடு உள்ளது. சென்னையில் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் இங்கு வர மாநகர பஸ் வசதி உள்ளது.

❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃
 🏹 தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்🏹
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில், திருவையாறு - தஞ்சாவூர்

முக்தியளிக்கும் மூலத்தானங்களில் இதுவும் ஒன்று ; முழுமுதற் கடவுளான சிவபெருமான் சிறப்பாக எழுந்தருளியுள்ள இடமாக திருக்கயிலாய மலை கருதப்படுகிறது. இந்தத் திருக்கையிலாயம் சென்று இறைவனை தரிசிப்பது இயலாய காரியமானதால் இத்தலமேகுவோர்க்கு ஈசன் திருவடி நிழல் கிட்டும் என்பது திண்ணம்..

🔵⚜🔵⚜ BRS🔵⚜🔵⚜🔵

தொலைபேசி : +91-436 -2260 332, 94430 08104

🦋🎸🦋🎸 BRS🦋🎸🦋🎸🦋

மூலவர் :  ஐயாறப்பன் , பஞ்சநதீஸ்வரர்

அம்மன்/தாயார் :  தர்மசம்வர்த்தினி, திரிபுரசுந்தரி

தல விருட்சம் :  புன்னை, பாடலி, வில்வ மரம்

தீர்த்தம் :  காவிரி, சூரிய புஷ்கரணி தீர்த்தம்(அயனரி தீர்த்தம்), நந்தி தீர்த்தம்.

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

ஊர் : திருவையாறு

பாடியவர்கள்:  திருநாவுக்கரசர் , திருஞானசம்பந்தர் , சுந்தரர்

🅱 தேவாரப்பதிகம்: 🅱

''புலன் ஐந்தும் பொறி கலங்கி நெறி மயங்கி அறிவு அழிந்திட்டு ஐம்மேல் உந்தி அலமந்த போதாக அஞ்சேல் என்றுஅருள் செய்வான் அமருங் கோயில்வலம் வந்த மடவார்கள் நடமாடமுழவு அதிர மழையென்று அஞ்சிச்சில மந்தி அலமந்து மரமேறி முகில் பார்க்கும் திருவையாறே''.  –  திருஞானசம்பந்தர்

🎸  தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 51 வது தலம். 🎸

🅱 திருவிழாக்கள் :🅱

🌻 மகா சிவராத்திரி

🌻 சித்திரைப்பெருந்திருவிழா (சப்தஸ்தான பெருவிழா)

🌻 ஆடி அமாவாசை (அப்பர் கயிலாயக் காட்சி திருவிழா)

🅱 தல சிறப்பு:🅱

🎭 இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

🎭 ஐயாறப்பன் ஜடாமுடி கருவறையின் பின்பக்கமும் பரந்து விரிந்து கிடப்பதாக ஐதீகம்.சிவபெருமானின் ஜடா முடியை மிதிக்கக்கூடாது என்பதால் சன்னதியை சுற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது

🎭 ஐந்து ஆறுகள் சேரும் இடம் என்பதால், இப் பெயர் பெற்றது.

🎭 சப்த ஸ்தான தலங்களுள் முதன்மையானது.

🎭 காவிரிக்கரையில் காசிக்கு சமமாகக் கருதப்படும் 6 சிவஸ்தலங்களில் திருவையாறும் ஒன்றாகும். மற்ற 5 சிவஸ்தலங்கள் 1. திருவெண்காடு, 2. சாயாவனம், 3. மயிலாடுதுறை, 4. திருவிடைமருதூர் மற்றும் 5. திருவாஞ்சியம்.

🎭 நந்தி தேவர் திருமண உற்சவமும், சித்திரைப் பெருவிழா உற்சவமும் இன்றும் சிறப்பாக நடைபெறுகிறது.

🎭 நந்திதேவர் இப்பதியில் ஏழுகோடி முறை உருத்திர ஜபம் செய்து இறைவனால் தீர்த்தமாட்டப் பெற்றார். அது ஐந்து தீர்த்தங்களாகப் புகழ் பெற்றன. அந்த ஐந்து தீர்த்தங்களின் காரணமாக திருவையாறு என அழைக்கப்படுகின்றது.

🎭 இறைவர், நந்திதேவருக்கு சுயம்ப்ரகாசை என்னும் பெண்ணைத் திருமணம் செய்துவைத்த தலம். இதனைச் சுற்றி ஏழூர்த் தலங்கள் (சப்தஸ்தானம்) இதனோடு தொடர்புடையன.

🎭 அப்பர் பெருமானுக்குக் கயிலைக் காட்சி அருளிய தலம்.

🎭 சுந்தரரும் சேரமான் நாயனாரும் தரிசிக்க வரும்போது, காவிரியின் இரு மருங்கிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, சுந்தரர் பதிகம் பாட, வெள்ளம் ஒதுங்கி நின்று வழி தந்த பதி.

🎭 இத்திருக் கோயிலுள் ஐயாறப்பர் கோயில், தென் கயிலைக் கோயில், ஒலோகமாதேவீச்சரம் ஆக மூன்று கோயில்கள் உள்ளன.

🎭 கோயில் என்றாலே சுவாமி சன்னதியை சுற்றுவது முக்கியமான அம்சம்.ஆனால், திருவையாறு ஐயாறப்பன் கோயிலில் சுவாமி சன்னதியை சுற்றக்கூடாது என்ற தடை உள்ளது.

🎭 சூரிய புஷ்கரணி, சந்திர புஷ்கரணி, கங்கையாறு, பாலாறு, நந்திவாய்நுரை இவை ஐந்தும் இங்கே கலப்பதால் இத்தலம் “பஞ்சநதம்” எனப் பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது.


🎭 சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 51 வது தேவாரத்தலம் ஆகும்.

🎭 அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது தர்ம சக்தி பீடம் ஆகும்

🎭 இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது

🅱 நடைதிறப்பு: 🅱

🗝 காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். .🗝

🅱 பொது தகவல்:🅱

🦋 இத்திருக்கோவில் முதன் முதலாக "பிரியவிரதன்" எனும் சூரிய வம்ச  சக்ரவர்த்தியால் திருப்பணி செய்யப்பட்டதாக வரலாறு.  கி.மு. முதலாம் நூற்றான்டில் வாழ்ந்த  சோழப்பேரரசன் "கரிகாற்பெருவளத்தான்" இவன் காடு கெடுத்து நாடாக்கி வளம் பெருக்கியவன்,  கல்லணை கட்டி, காவிரிக்கு கரை எழுப்பி, இமயத்தே புலி பொறித்து வெற்றியுடன் வரும் வழியில்,  ஐயாற்றை அடைந்ததும், அவன் ஏறி வந்த தேர் பூமியில் அழுந்தி இடம் பெயரவில்லை.

🦋  "இதன்  அடியில் ஏதோ ஓர் சக்தி ஈர்க்கிறது"  என உணர்ந்து காட்டை அழித்து பூமியை அகழ்ந்தான்.  அடியில்  சிவலிங்கம், சக்தி, விநாயகர், முருகன், சப்த மாதர்கள், சண்டர், சூரியன் திருஉருவங்களும் யோகி  ஒருவரின் சடைகள் பரந்து, விரிந்து, புதைந்து வேரூன்றி காணப்பட்டன.  மேலும் அகழவே,  நியமேசர் எனும் அகப்பேய் சித்தர் கண்டுபிடிக்கப்பட்டது. அவரும் கருணை கூர்ந்து கரிகாலனிடம்,  "தேவர்களும், நந்தீசரும் வழிபட்ட மகாலிங்கத்திற்கும் கோவில் எடுப்பாயாக" எனக் கூறி எவராலும்  வெல்லற்கரிய தண்டமொன்றும் அளித்து கோவில் கட்டுவதற்கு வேண்டிய பொருளும் நந்தியின்  குலம் படியில் கிடைக்கு என அருள் புரிந்தார்.

🦋 அது போலவே கரிகாற்சோழன் சிறப்பாக கோவில்  கட்டி, குடமுழுக்கும் செய்து, நிவந்தங்களும் அளித்தான்.  கரிகாற் சோழனுக்கு ஐயாறப்பரே என்ற  எல்லாம் வல்ல சித்தர் வடிவில் வந்து, சுயம்பு வடிவில் உள்ள தன் இருப்பிடத்தை காட்டி கோவில்  கட்ட செய்தான்.  ஆதரமாக, கர்ப்பகிரகத்தில் விரிசடை படர்ந்திருப்பதால் சென்று மிதிக்ககூடாது என்பதும், சோழனால் கட்டப்பட்ட செம்பிய மண்டபமே செப்பேச மண்டபமாகி இருப்பதும் -கரிகாலசோழன், அவர் மனைவி, இருவரின் சிலைகள் இருப்பதும் கண்டு உணரலாம்.

🦋 இவ்வாலயத்தின் மூலத்தானம் அமைந்திருக்கும் ஐயாறப்பர் சந்நிதி அகப்பேய்சித்தர் சித்தம் கொண்டு ஸ்தாபித்ததாகத் தலவரலாறு கூறுகிறது. மூலத்தான விமானத்தின் மேல் பகுதியில் காணப்படும் பல்வகைச் சித்தர்களின் திருவுருவங்கள் இதற்குச் சான்று பகர்கின்றனர். இது தவிர ராஜராஜ சோழனின் பத்தினியான ஓலோக மாதேவியாலும், ராஜேந்திர சோழனின் பத்தினியான பஞ்சவன்மா தேவியாலும் இங்கு வட கைலாயம், தென் கைலாயம் என இரு ஆலயங்களை நிர்மாணம் செய்யப்பட்டிருக்கின்றன.

🦋 பல்லவர், சோழர், பாண்டியர், நாயக்கர், மராட்டியர் காலங்களில் இவை வெட்டப்பட்டவை. மூலத்தானம் பல்லவர்களாலும், மூன்றாம் திருச்சுற்று விக்கிரம சோழனாலும் எழுப்பபெற்றமை தெரிகிறது. மேலை கோபுரம், முதல் சுற்று, நடை, திருமாளிகை பத்தி, சூரிய புஷ்கரணி, தென்கோபுரம் ஆகியவை பின்னாளில் அறம் காக்கும் மரபுடையோரால் கட்டப்பட்டவை.

🦋 முதல் இராஜராஜ சோழன் காலத்தில் இத்தலத்துக்கு “பொய்கை நாட்டுத் திருவையாறு”  எனப் பெயர் வழங்கியது. இப்போது நினைத்தால் அதிசயிக்க வகையில் அந்நாளில் நிர்வாகத் துறையில் இவ்வாலய நிர்வாகப் பொறுப்பில் இருந்த பெண் அதிகாரியை “அதிகாரிச்சி”  எனும் சொல்லால் அழைத்திருக்கின்றனர். அபிஷேகம் செய்யப்பட்ட நீரை அகற்றும் பணி செய்வோரை “நிர்மால்ய நீர் போக்குவான்”  என அழைத்தனர். தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள் காலத்தில் கோவிந்த தீக்ஷதர் வழிகாட்டுதலில் இங்கு காவிரிக் கரையில் பல படித்துறைகள் கட்டப்பட்டன. அப்படிக் கட்டப்பட்ட படித்துறைகளில் புஷ்யமண்டபப் படித்துறை சிறப்பு வாய்ந்தது.

🦋 திருநாவுக்கரசர் ஐயாறப்பரைப் பாடும்போது “ஓசை ஒலியெல்லாம் ஆனாய் நீயே”  எனக் குறிப்பிடுகிறார். அப்பரின் இந்த வாக்கியத்தை மெய்ப்பிப்பது போல இவ்வாலயத்தின் மேலைப் பிரகாரத்தில் நின்று குரல் கொடுத்தால் அவ்வொலி ஏழு முறை எதிரொலிக்கும் அதிசயமும் இங்கே இருக்கிறது. கரிகால் சோழனின் தேர் இங்கு அழுந்த அங்கு தவத்திலிருந்த அகப்பேய்சித்தர் உணர்த்தியபடி இவ்வாலயம் எழுப்பப் பட்டதாகத் தல வரலாறு சொல்கிறது.

🦋 திருவையாற்று சப்தஸ்தானத் தலங்களில் இது முதன்மையான தலம். சிலாத முனிவரின் மகனாகப் பிறந்து, ஈசன் அருளால் சிரஞ்சீவித்துவம் பெற்று, கணங்களுக்குத் தலைவருமான நந்தி பகவான் தன் திருமணத்திற்குப் பிறகு திருவையாறு ஐயாறப்பர் கோயிலைச் சுற்றியுள்ள ஏழு தலங்களுக்கும் தன் இல்லாளுடன் சென்று ஈசனைத் தொழுதாராம். அச்சிறப்பின் சம்பிரதாயமாக, இன்றும் சித்திரைத் திருவிழாவின் கடைசி நாளன்று திருவையாறு ஐயாறப்பர் கோயிலின் உற்சவர் திருவையாறைச் சுற்றியுள்ள ஏழு தலங்களுக்கு பவன் வருவது வழக்கம் அவை திருவையாறு சப்த ஸ்தானத் தலங்கள் எனப்படும். அவையாவன:
🌻 1.திருவையாறு,
🌻 2.திருப்ப ழனம்
🌻 3. திருச் சோற்றுத்துறை.
🌻 4. திருவேதிக்குடி
🌻 5.திருப் பந்துருத்தி,
🌻 6. திருக்கண்டியூர்; மற்றும்
🌻 7. திருநெய்த்தானம் - ஆகியவையாகும்.

🦋 இங்கு கோயில் கொண்டுள்ள ஐயாறப்பருக்கு செம்பொற்ஜோதி, செப்பேசர், கயிலைநாதர், பிராணதார்த்திஹரர் எனும் பெயர்களும் உண்டு. இவை தவிர திருவையாறுடைய மகாதேவர் என்றும் இறைவியை உலகுடைய நாச்சியார் என்றும் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. ஐயாறப்பர் லிங்கத் திருமேனி சுயம்புவானதால் இங்கு புனுகு சட்டம் மட்டுமே சார்த்தப்படும், இவருக்குத் தீண்டாத்திருமேனி நாதர் என்னும் பெயரும் உண்டு.

🦋 திருக்கடவூரில் மார்க்கண்டனின் உயிரைக் காக்க சிவபெருமான் காலனை உதைத்த வரலாறு நமக்கெல்லாம் தெரியும். அதுபோலவே இந்தத் தலத்தில் சுசரிதன் எனும் அந்தணச் சிறுவனின் உயிரைக் காக்க சிவபெருமான் தன் தென்வாயில் காப்போனான ஆட்கொண்டாரைக் கொண்டு எமனை தண்டித்த வரலாறும் இங்கு உண்டு. எனவே இவ்வாலயத்தில் சஷ்டியப்தபூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம் போன்ற நிகழ்ச்சிகளை இறைவன் சந்நிதியில் செய்து கொள்வது சிறப்பு.

🅱 பிரார்த்தனை:🅱

🌹 திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

🅱 நேர்த்திக்கடன்:🅱

💥 சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

🅱 தலபெருமை:🅱

🔥 இங்கே அம்பாள் அறம் வளர்த்த நாயகி எனப்படுகிறாள். ஆண்கள் தர்மம் செய்வதைவிட குடும்பத்தில் உள்ள பெண்கள் தர்மம் செய்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.அந்த அடிப்படையில் உலக உயிர்களுக்கெல்லாம் படியளக்கும் நாயகியாக, பெண்களுக்கு தர்மத்தின் அவசியத்தை எடுத்துக்காட்டும் விதத்தில் தருமசம்வர்த்தினி என்ற பெயரில் அம்பாள் இங்கே எழுந்தருளி உள்ளாள்.எல்லா நாட்களும் நல்ல நாட்களே என்பதை வலியுறுத்தும் வகையில் அஷ்டமி திதியில் இரவு நேரத்தில் அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது.

🍁 சிவனுக்கு வடைமாலை:🍁

🔥 ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்துவார்கள். ஆனால் ஈசுவரனுக்கு ஒரு கோயிலில் வடைமாலை சாத்துகிறார்கள். இத்தலத்தில் தெற்கு கோபுர வாயிலில் வீற்றிருக்கும் ஆட்கொண்டேஸ்வரருக்கு வடைமாலை சாத்தும் வழக்கம் இன்றும் நடைபெறுகிறது. சிலசமயங்களில் லட்சம் வடைகளைக் கொண்ட மாலைகள்கூட சாற்றப்படுவதுண்டு.

🅱 ஆமையை மிதித்த தெட்சிணாமூர்த்தி:🅱

🔥 இங்குள்ள தட்சினமூர்த்தி ஸ்ரீஹரிகுருசிவயோக தட்சினாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். வலது கரங்களில் கபாலம், அபய முத்திரையும், இடது கரங்களில் சூலம், வேதச்சுவடிகள் தாங்கியும் ஸ்ரீதட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். மகாவிஷ்ணுவுக்கு குருவாக இருந்து ஸ்ரீதட்சிணாமூர்த்தி வேதங்களை உபதேசித்த ஒப்பற்ற திருத்தலம் திருவையாறு ஸ்ரீபஞ்சநதீஸ்வரர் திருக்கோயில். திருவீழிமிழலையில் கண்மலரிட்டு அர்ச்சனை செய்து ஸ்ரீசக்கரத்தைப் பெற்ற திருமால், வேதங்களின் பெருமைகளை உணர்ந்து, இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீதட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெற்றார் என்று தலபுராணம் கூறும். இங்குள்ள தட்சினாமூர்த்தியின் பாதத்தின் கீழே கூர்மம் (ஆமையின் உருவம்) அமைந்திருப்பது ஒரு சிறப்பம்சமாகும். குரு ஸ்தலம் எனப் போற்றப்படுகிற இந்தக் கோயிலில், மாதந்தோறும் உத்திரட்டாதி நட்சத்திர நாளில், குரு பகவானுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இதில் கலந்துகொண்டு, அபிஷேகம் செய்து ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு விளக்கேற்றி வழிபட்டால், சகல தோஷங்களும் நீங்கி, சந்தோஷம் நிலைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

🔥 ஆலயத்தின் தென்கோபுர வாசலில் உள்ள ஆட்கொண்டார் சந்நிதி மிகவும் முக்கியமானது. இச்சந்நிதியில் எப்போதும் குங்கிலியம் இங்கு மணந்து கொண்டே இருக்கும். பக்தர்கள் இங்குள்ள குண்டத்தில் குங்கிலியம் அர்ப்பணிப்பார்கள்.


🔥 சுந்தரரும், சேரமான் பெருமானும் திருவையாறு வரும் போது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிகொண்டிருந்தது. கலங்கி அக்கரையில் நின்ற சுந்தரர் பதிகம் பாட, இக்கரையில் இருந்த விநாயகர் "ஓலம் ஓலம்" என்று குரல் கொடுத்து காவிரியில் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்தி அவரை அழைத்து வந்ததால் இங்குள்ள விநாயகர் ஓலமிட்ட விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.
மூன்றாம் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் நின்று வடக்கு நோக்கி ஐயாறா என்று அழைத்தால் ஏழு முறை அது எதிரொலிக்கும். திருவையாறு செல்பவர்கள் இதனையும் அனுபவியுங்கள்.


🔥 நவக்கிரகங்களில் இது சூரிய ஸ்தலமாகும். சூரியபகவான் இத்தலத்தில் பூஜித்துள்ளார். இக்கோயில் ஐந்து பிரகாரங்களை கொண்டது. இங்குள்ள முக்தி மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்தால் மனம் நிம்மதி கிடைக்கிறது. சூரியன் இந்த கோயிலில் மேற்கு திசை நோக்கி உள்ளார்.

🅱 திருப்புகழ் தலம்: 🅱

🔥 இத்தலத்தில் முருகப்பெருமான் வில், வேல், அம்பு ஆகிய படைக்கலங்களுடன் வில்லேந்திய வேலவனாக "தனுசுசுப்ரமணியம்" என்ற பெயருடன் விளஙகுகிறார். இவர் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு நின்ற திருக்கோலத்தில் பின்புறம் மயில் விளங்கக் காட்சி தருகின்றார். மயிலின் முகம் தெற்கு நோக்கி உள்ளது. அருகில் இருபுறமும் தேவியர் எழுந்தருளியுள்ளனர். அருணகிரிநாதரின் திருப்புகழில் இத்தல முருகப்பெருமான் மீது ஒரு பாடல் உள்ளது.

🅱 அப்பர் கண்ட கைலாயம்: 🅱

🔥 திருநாவுக்கரசர் கைலாயம் சென்று சிவபெருமானை தரிசிக்க விரும்பினர். காசியில் தன்னுடன் வந்த அடியார்களை தங்கியிருக்குமாறு சொல்லிவிட்டு தனித்துப் புறப்பட்டார். கைலாயப் பயணம் மிகவும் கடினமாக இருந்ததால் முதலில் நடந்து சென்ற அவர் பிறகு நடக்க முடியாமல் தவழ்ந்து செல்லத் தொடங்கினார். திருநாவுக்கரசர் படும் சிரமத்தைப் பார்த்த இறைவன் அவரை ஆட்கொள்ள நினைத்தார். திருநாவுக்கரசர் மேலும் பல காலம் தமிழ் பேசும் நல்லுலகில் இருந்து பல பாடல்களைப் பாடவேண்டும் எனக் கருதினாரோ என்னவோ, அவரை வழியிலேயே தடுத்து நிறுத்தி, இந்தப் பூதவுடலுடன் கயிலை செய்வது சாத்தியமில்லை என்று சொன்னர். அதற்கு அப்பர் “ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டல்லால், மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்” என மறுத்தார். அருகில் ஒரு குளத்தை ஏற்படுத்தி ஒரு முனிவர் வேடத்தில் அவரை நெருங்கி கைலாயம் செல்லும் வழியில் உள்ள சிரமங்களை எடுத்துக் கூறி திரும்பிச் செல்லும்படி கூறினார். இறந்தாலும் கைலைநாதனைக் காணாமல் ஊர் திரும்ப மாட்டேன் என்ற உறுதியுடன் இருந்த திருநாவுக்கரசரை ஆகாயத்தில் இருந்து அசரீரியாக அழைத்த சிவபெருமான் அப்பரிடம் ஆங்கிருந்த ஒரு பொய்கையில் மூழ்கி திருவையாற்றில் கயிலைக் காட்சியைக் காண்பாயாக!” எனப் பணித்தார். (அங்குள்ள குளத்தில் மூழ்கி திருவையாற்றில் எழுவாய்! அங்கே உனக்கு கைலாயக் காட்சி தருகிறேன் என்று அருளினார்.’) அவ்வண்ணமே பொய்கையில் மூழ்கிய அப்பர், திருவையாற்றில் ஒரு நீர்நிலையில் எழுந்திருக்க அங்கே சிவன் பார்வதி தேவியுடன் ரிஷப வாகனத்தில் தோன்றி கயிலை காட்சி அருளினார்..

மாதர் பிறைகண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
போதோடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாம லையா றடைகின்றபோது
காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்
கண்டேனவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன் - என்ற பாடலுடன் தொடங்கும் பதிகம் பாடி இறைவனை தரிசித்தார். இந்த வரலாற்றை உணர்த்தும் வகையில் ஆலயத்தின் வெளிப் பிரகாரத்தில் உள்ள வடகைலாயம் (ஓலோகமாதேவீச்சரம்), தென்கைலாயம் ஆகிய இரண்டும் காண வேண்டிய ஒன்றாகும். ஆடி அமாவாசை தினத்தில் இங்கு நடைபெறும் கயிலைக் காட்சித் திருவிழா மிகவும் புகழுடையதாகும். அதனால்தான் திருவையாற்றைத் தென் கயிலாயம் என அழைக்கின்றனர்

🅱 இறைவன் ஆதி சைவராக வந்தது:🅱

🔥 திருவையாற்றில் இறைவனுக்கு பூஜை செய்யும் உரிமை பெற்றவர்கள் 24 பேர் இருந்தனர். அவர்களில் ஒருவர் காசி யாத்திரை மேற்கொண்டார். நெடுநாள் ஆகியும் அவர் திரும்பி வராததால் அவருக்குரிய நிலபுலன்கள் மற்ற சொத்துக்களை தமக்கே உரிமை என்று ஏனைய 23 ஆதி சைவ அந்தணர்களும் கைப்பற்றிக் கொண்டனர். காசி யாத்திரை சென்ற ஆதி சைவரின் மனைவியும், மகனும் இறைவனிடம் நடந்ததை முறையிட்டு வேண்டினார்கள். அவர்களுக்கு அருள் புரியவும் மற்ற அந்தணர்களுக்கு பாடம் புகட்டவும் எண்ணிய சிவபெருமான் காசிக்குச் சென்ற அந்தணர் உருவத்தில் கங்கை நீருடன் ஐயாரப்பர் ஆலயத்திற்கு வந்து இறைவனுக்கு பூஜையும் செய்தார். மனைவியும், மகனும் மகிழ மற்ற 23 அந்தணர்களும் ஒடுங்கிப் போயினர். சில நாட்கள் கழித்து உண்மையான அந்தணர் காசியில் இருந்து கங்கை நீருடன் திரும்பிவர, இருவரில் யார் உண்மையான ஆதி சைவர் என்ற குழப்பம் ஏற்பட்டது. உண்மை அறியும் பொருட்டு யாவரும் கூடியிருக்க முதலில் வந்த ஆதி சைவர் திடீரென்று மறைந்துவிடுகிறார். வந்தவர் சிவபெருமானே என்று எல்லோரும் உணர்கின்றனர். இவ்வாறு ஆதி சைவராக வந்து தனக்குத் தானே பூஜை செய்து கொண்டவர் இத்தலத்து இறைவன் ஐயாரப்பர்.

🅱 கோவில் அமைப்பு:🅱

🍁 திருவையாறு சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் 7 நிலைகளையுடைய ராஜகோபுரமும், 5 பிரகாரங்களும் உள்ள ஒரு பெரிய கோவிலாகும்.

🍁 திருவையாறு மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முச்சிறப்பும் உடைய தலமாகும்.

🍁 முதல் பிரகாரத்தில் எழுந்தருளியுள்ள தக்ஷிணாமூர்த்தம் மிகச் சிறப்புடையது.

🍁 இரண்டாம் பிரகாரத்தில் சோமஸ்கந்தருக்கு தனி ஆலயம் உள்ளது. அருகில் உள்ள ஜப்பேசுரமண்டபத்தில் பஞ்சபூதலிங்கங்களும், சப்தமாதர்களும், ஆதிவிநாயகரும், நவகிரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. மேலும் இச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர், சோமச்கந்தர், தட்சினாமூர்த்தி, நடராஜர் ஆகிய திருவுருவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

🍁 மூன்றாம் பிரகாரத்தில் கிழக்கிலும் தெற்கிலும் இருகோபுரங்கள் உள்ளன. நான்காம் பிரகாரத்தில் சூரியபுஷ்கரணி தீர்த்தமும், அப்பர் கைலாயக் காட்சி கண்ட வடகயிலாயம் அமைந்துள்ளன. இச்சுற்றின் 4 புறமும் கோபுரங்கள் இருக்கின்றன.

🍁 ஐந்தாம் பிரகாரத்தில் கிழக்கு நோக்கிய ஐயாரப்பன் சந்நிதியும் திரிபுரசுந்தரி சந்நிதியும் இருக்கிறது. சுவாமி சந்நிதியிலும், அம்பாள் சந்நிதியிலும் தனித்தனியாக ராஜகோபுரங்கள் உள்ளன.

🍁 இறைவன் சந்நிதி கருவறை விமானத்தின் பின்புறக் கோஷ்டத்தில் அமைந்துள்ள அர்த்தநாரீஸ்வரர் சிற்பம் சற்று மாறுபட்டது. வழக்கமாக இந்த அர்த்தநாரீஸ்வரர் சிற்பங்களில் சிவபெருமான் வலப்புறமும், உமையம்மை இடப்புறமும் தான் காணப்படுவர். ஆனால் இங்கு சிவன் இடப்புறமும் உமை வலப்புறமும் அமைந்திருப்பதைக் காணலாம். மேலும் இறைவன் கருவறையை சுற்றி வர முடியாது என்பதும் இத்தலத்தின் முக்கிய அம்சம், இறைவனின் கருவறையில் விரிசடை படர்ந்திருப்பதால் அதை சென்று மிதிக்கக் கூடாது என்பதால் கருவறை சுற்றுப் பிராகாரத்தை வலம் வரக்கூடாது என்பது இத்தலத்தில் கடைபிடிக்கப்படுகிறது.


🍁 இத்தலத்திலுள்ள வடகயிலாயம், தென்கயிலாயம் ஆகிய இரு சந்நிதிகள் முக்கியமானவை.. இக்கோவிலின் மூன்றாம் பிரகாரத்தின் வடபுறம் "ஓலோக மாதேவீச்சுரம்" என்ற கற்கோவில் உள்ளது. இது "வட கைலாயம்" எனப்படும். அப்பர் கைலாயக் காட்சி கண்ட வடகயிலாயம் முதல் இராஜராஜசோழனின் பட்டத்தரசி உலகமகாதேவியால் எழுப்பப்பட்டது.

🍁 மூன்றாம் பிரகாரத்தின் தென்புறம் "தென் கைலாயம்" எனப்படும் கற்கோவில் உள்ளது. இது முதலாம் இராஜேந்தர சோழனின் மனைவிகளில் ஒருவரான பஞ்சவன்மாதேவியால் பழுது பார்க்கப்பட்டு திருப்பணி செய்யப்பட்டுள்ளது.. சந்நிதி முன்னுள்ள சொக்கட்டான் மண்டபம், கீழைக் கோபுரத்திற்கு அருகிலுள்ள நூற்றுக்கால் மண்டபம் ஆகியவை கட்டட, சிற்பக்கலைச் சிறப்பு மிக்கவை.

🍁 இறைவனுக்கும், இறைவிக்கும் கிழக்கு நோக்கியவாறு உள்ள சந்நிதிகளைக் கொண்டு தனித்தனி கோவில்கள் உள்ளன.

🍁 மூலவர் ஐயாரப்பர் ஒரு சுயம்பு லிங்கமாகும். இந்த லிங்கம் ஒரு பிருத்வி லிங்கம் ஆகையால் அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஆவுடையார் மேல் மட்டுமே அபிஷேகம் செய்யப்படும். லிங்கத் திருமேனிக்கு புனுகுச் சட்டம் மட்டுமே சாத்தப்பெறும்.

🍁 திருக்கச்சி ஏகம்பம் ஆலய மூலவர் ஏகாம்பரநாதரும் ஒரு பிருத்வி லிங்கம் ஆதலால் அங்கும் புனுகுச் சட்டம் மட்டுமே சாத்தப்பெறும். திருவாரூர் ஆலய மூலவர் வன்மீகநாதரும் ஒரு பிருத்வி லிங்கம் என்பது குறிப்பிடதக்கது.

🍁 இறைவி தர்மசம்வர்த்தினி காஞ்சி காமாட்சியைப் போன்றே இறைவனிடம் இருநாழி நெல் பெற்று 32 அறங்களையும் செய்தமையால் அறம் வளர்த்த நாயகி என்றும் அறியப்படுகிறாள். இத்தலத்தில் இறைவி இடக்கரம் இடுப்பில் ஊன்றியுள்ளபடியும், மேல் இரு கரங்களில் சங்கு சக்கரம் போன்றவையுடன் காணப்படுவதால் இத்தலத்தில் அம்பிகை மஹாவிஷ்னு ஸ்வரூபத்தில் தோற்றமளிக்கிறாள்.

🅱 தல வரலாறு: 🅱

⛱ நந்தீஸ்வரருக்கும், நந்திகேசருக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ள வேண்டும். நந்தீஸ்வரர் சிவபெருமானின் முன் காளை வடிவில் இருப்பவர். நந்திகேசர் திருக்கைலாய பரம்பரையை உருவாக்கியவர். தருமபுரம் ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம் ஆகியவை திருக்கைலாய பரம்பரையை சேர்ந்தவை.

⛱ சிலாத முனிவர் என்பவர் மக்கட்பேறு இல்லாததால் மிகவும் வருந்தி, ஐயாறப்பனை வேண்டினார். அதற்கு சிவபெருமான் அவர் முன்தோன்றி "சிலாதரே! நீர் புத்திரகாமேஷ்டி யாகம் செய். யாகம் செய்து பூமியை உழும்போது ஒரு பெட்டி கிடைக்கும். அதில் ஒரு புத்திரன் இருப்பான். அவனுக்கு ஆயுள் பதினாறு. அவனை எடுத்துக்கொள்" என்றார்.

⛱ அப்படியே அந்த முனிவரும் யாகம் செய்ய ஒரு பெட்டியும் அதில் நான்கு தோட்கள், மூன்று கண்கள், சந்திரனை அணிந்த முடியோடு ஒரு மூர்த்தி இருக்கக்கண்டார். "பெட்டியை மூடித்திற" என்ற அசரீரி கேட்க சிலாத முனிவரும் அங்ஙனமே செய்தார். இப்போது பெட்டிக்குள் ஓர் அழகிய குழந்தை இருக்கக்கண்டார். சிலாத முனிவர் அக்குழந்தையை எடுத்து செப்பேசுவரர் எனப்பெயரிட்டு அன்போடு வளர்த்து வந்தார். அந்த குழந்தைக்கு கல்வியைப் புகட்டினார். பதினான்கு வயதிற்குள் அது சகலகலைகளிலும் தேர்ச்சி பெற்று விளங்கியது.

⛱ இந்தக் குழந்தைக்கு மார்க்கண்டனைப் போல பதினாறு வயதுதானே என்று நினைவுக்கு வந்தது. அந்தக் குழந்தை ஐயாறப்பனைப் பூசித்து கடுந்தவம் புரிந்தது. நீருக்குள் நின்று அக்குழந்தை தவமியற்றியதால் அங்கிருந்த மீன்கள் முதலானவை அவர் உடலை அரித்துத்தின்றன. பெற்றோர் வருந்தினர். அந்தக்குழந்தையின் கடுந்தவத்தை மெச்சி இறைவன் காட்சி கொடுத்து, அதற்கு எல்லா பேறுகளையு வரங்களையும் கொடுத்துமறைந்தார்.

⛱ அப்போதுவெரும் எலும்புக்கூடாக மட்டும் காட்சியளித்த அந்தக்குழந்தையின் பரிதாபநிலைகண்டு ஈசன் அந்த எலும்புக்கூட்டுக்கு கங்கைநீர், மேகநீர், பிரமனின் கமண்டலநீர், அம்மையின் தாய்ப்பால், இடபதேவரின் வாய்நுரைநீர் இவை கொண்டு தாமே அபிஷேகம் செய்ய, அந்தக் குழந்தை சூரியப்பிரகாசத்துடன் புதியப்பொலிவுடன் எழுந்தது.

⛱ சிலாத முனிவர் பிறகு வியாக்ரபாத முனிவருடைய மகளும், வசிஷ்டமுனிவரின் பெளத்திரியும், உபமன்யு முனிவரின் தங்கையுமான சுயம்பிரகாசை எனும் பெண்ணைத் தன்மகனுக்கு பங்குனிமாதத்தில் புனர்பூசநக்ஷத்திரத்தில் திருமணம் செய்வித்தார். செப்பேசர் எனும்பெயர் கொண்ட அந்த இளைஞன் கயிலையில் சிவகணங்களுக்குத் தலமைப்பதவியையும், முதல் வாயிலைக்காக்கும் உரிமையையும், சிவாச்சாரியாருள் முதல்வராக இருந்து பணிபுரியும் வரத்தைப் பெற்று வாழ்ந்தார்.

⛱ இறைவனிடம் இருந்து நந்தி எம்பெருமான் என்று பட்டம் பெற்ற இவர்தனது திருமணவயதில் திருமழபாடியில் பிறந்த வியாக்கிரபாதர் என்பவரின் மகள் சுயம்பிரபை என்ற பெயர் கொண்ட பெண்ணை மனைவியாக ஏற்றுக்கொண்டவர். சுயஜ்ஜை என்ற பெயரும் இந்த பெண்ணுக்கு உண்டு.  நந்தி எம்பெருமான் சுயம்பிரபை இருவரின் திருமணம் திருமழபாடியில் நடைபெற்றது. நந்தி என்ற சொல்லுக்கு எப்போதும் ஆனந்த நிலையில் இருப்பவர் என்று பொருள்படும். இவர் ஒரு சித்தர். இளமையும் திட்பமும் வாய்ந்தவர். சாந்தமானகுணம் படைத்தவர். தர்மத்தின் வடிவமாய்த் திகழ்பவர். ஒப்புவமை இல்லாத பெருமை நிறைந்தவர். பிரமன், திருமால், இந்திரன், தேவர்கள் மற்றும் முனிவர்களால் போற்றி துதிக்கப்படுபவர். ஐந்தெழுத்தாம் சிவாயநம: என்னும் உருவத்தைக் கொண்டவர். பக்தியில் சிவபெருமானுக்கு சமமானவர். பஞ்சாட்சரத்தின் வடிவமானவர். ஒப்பில்லாத நான்கு வேதங்களையும் நான்கு பாதங்களாகக் கொண்டவர். ஊழிக்காலத்தில் இறைவனுக்கு வாகனமாக இருந்து அவரைத் தாங்கும் பேறு பெற்றவர். நிரந்தரமான இடத்தை உடையவர்.

⛱ வில்லாளிகளில் மேன்மை உடையவர். பிறரால் வெற்றி பெற முடியாதவர். பூஜிக்கத் தக்கவர்களில் முதல்வர். அனைவருக்கும் சிறந்தவர். எக்காலத்திலும் சிவபெருமானை வணங்கிய தோற்றத்துடனும், அவரது திருமுகத்தைப் பார்த்துக் கொண்டும் இருக்கும்படியான வரத்தைப் பெற்றவர். நந்தி எம்பெருமான் இறைவனிடத்தில் (சிவனிடத்தில்) சென்று தேவர்களின் குறைகளை முறையிட்டு அவர்களின் துன்பத்தைப் போக்கியவர். அதனால் தான் பிரதோஷகாலத்தில் நந்தி எம்பெருமானுக்கு முதலில் பூஜை நிகழ்கிறது. சிவதரிசனத்தில் முதலாவதாக நாம் செய்ய வேண்டியதும் மிக முக்கியமானதாகவும் கருதப்படுவது நந்தி எம்பெருமானை தரிசிப்பது ஆகும். நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே இறைவனை தரிசிப்பது நம் வேண்டுகோளை நந்தி எம்பெருமான் ஈசனுக்கு தகுந்தநேரத்தில் பக்குவமாக எடுத்துச்சொல்லி நிறைவேற்றிவைப்பார் என்பதால்தான். நந்தி எம்பெருமானுக்கு திவ்விய வடிவமும் நெற்றிக்கண்ணும், நான்குபுயங்களும், கையில்பிரம்பும், உடைவாளும், சடைமுடியும், சந்திரகலையும், நீலகண்டமும், யானையுரியும், இருபுயங்களில்மானும் மழுவும் உண்டு.

⛱ மான்வேகத்தைக் குறிக்கிறது மழுவீரத்தைக் குறிக்கிறது என்பர் எல்லா உயிர்களையும் ஒரு காலத்தில் ஓய்வு படுத்துதல் மகாசங்காரம் எனப்படும். இந்த அதிகாரம் நந்தி எம்பெருமானுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. நந்தி எம்பெருமான் சிவனிடத்தில் இருந்து சிவ ஆகமங்களைத் தெரிந்து நமக்கு அருளினார் என்பர். தப்பிதம் செய்தாரை தண்டிக்கும் அதிகாரம் இவருக்கு உண்டு. இவர் சிவ சன்னதியில் காவல் பூண்டுள்ளார். அவரின் அனுமதி பெற்றுத்தான் சிவபெருமானை வணங்க வேண்டும். நந்தி எம்பெருமான் தக்ஷயாகத்தில் பழித்துப்பேசிய தக்ஷனையும் உடனிருந்த தேவர்களையும் சபித்தார். இவர் சிவயோகத்தில் மிகவல்லவர். திருக்கயிலாயத்தில் திருமந்திரம் என்னும் நூலை எழுதிய திருமூலருக்கு நந்திஎம்பெருமான் ஒன்பதுவேத ஆகமங்களை விளக்கி அருளினார். அதன்பின் திருமூலர் பூலோகத்துக்கு வந்து மூவாயிரம் ஆண்டுகள் சிவயோகம் புரிந்தார். திருமூலர் தான் எழுதிய திருமந்திரம் என்னும் நூலில் நந்திஎம்பெருமானை சைவசமயத்திற்கு தனிநாயகன் என்று குறிப்பிடுகின்றார். மேலும், சிவபெருமானின் சீடர்களில் முதல்நிலை உடையவர் என்றும் அவரால்தான் நான் ஆசிரியன் ஆனேன் என்றும் குறிப்பிடுகின்றார்.

⛱   நந்தி எம்பெருமானுக்கு சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர், பதஞ்சலி, சிவயோகமாமுனி, வியாக்கிரமர் என்ற ஏழுபேர் மாணவர்களாக இருந்தனர். எட்டாவது மாணவராக திருமூலர் வருகின்றார். நந்திஎம்பெருமானின் மாணவர்களாக விளங்கிய மேற்குறித்த எட்டுபேரும் சைவசமயத்தின் மேன்மையை விளக்கவும், சிவ வழிபாட்டைப் பரப்பவும் சிவபரம் பொருளின் பெருமையைப் பற்றியும், நந்திஎம்பெருமானின் மரபைப்பற்றியும், தங்கள் அனுபவத்தின் மூலம் எடுத்துச்சொல்ல நமது புனிதநாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று வந்தனர். ருத்திரன், தூயவன், சைலாதி, அக்னிரூபன், மிருதங்கவாத்ய ப்ரியன், சிவவாஹனன், கருணாகரமூர்த்தி, வீரமூர்த்தி, தனப்ரியன், கனகப்ரியன், சிவப்ரியன் போன்றவை நந்தி எம்பெருமானின் இயற்பெயர்கள். நந்திதேவர் இங்கு ஏழுகோடி முறை ருத்ரஜபம் செய்து இறைவனால் தீர்த்தமாடப் பெற்றார். அது ஐந்து தீர்த்தங்களாகப் புகழ் பெற்றன. அந்த ஐந்து தீர்த்தங்களின் பெயராகவே இத்தலம் திருவையாறு என அழைக்கப்படுவதாகவும் சொல்வர்.

🅱 சிறப்பம்சம்:🅱

Ⓜ  அதிசயத்தின் அடிப்படையில்:

♻ திருவையாற்றுக்கு உரிய சிறப்பு ஆடி அமாவாசை அப்பர் கயிலாயக் காட்சி திருவிழா, "யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது'' என்ற அப்பரின் திருவாக்கின்படி நாமும் இந்நாளில் திருவையாற்றில் திருக்கயிலைக் காட்சியைக் காண்போம். அருள்மிகு அறம் வளர்த்த நாயகி அருள்மிகு ஐயாறப்பருடன் அப்பர் பெருமானுக்கு திருக்கயிலாயக் காட்சி கொடுத்தருளும் அந்த பக்திப்பரவசமான காட்சியை காணக் கண்கோடி வேண்டும். திருவையாற்றில் கயிலைக் காட்சி கண்டால் கயிலாயம் தரிசித்த புண்ணியம் பெறலாம். மேலும் திருக்கயிலைக்கு யாத்திரை மேற்கொண்டவர்கள் திருவையாற்றுக்கு வந்து தரிசித்தால் கயிலையை தரிசித்ததன் புண்ணியம் முழுமையாக கிடைக்கும்.

♻ இவ்வூரில் சித்திரை மாதம் பெளர்ணமி விசாகத்தில் “ஸப்த ஸ்தானப் பெருவிழா” நடைபெறுகிறது. இவ்வேழூர் இறைவனும் அம்மையப்பராகக் கண்ணாடிப் பல்லக்கில் எழுந்தருளி அருள்புரியும் காட்சியை ஆயிரக்கணக்கானோர் ஒவ்வோராண்டும் கண்டு களிக்கின்றனர். இவ்வூருக்கு மற்றொரு சிறப்பும் உண்டு. அது, “அரியலால் தேவியில்லை ஐயன் ஐயாறனார்க்கே” என்கிற திருமுறை வாக்கின்படி இங்கு அம்பிகை தர்மசம்வர்த்தினி அரியின் அம்சமாகக் கருதப்படுதலால் இங்கு திருமாலுக்கென்று தனி ஆலயம் எதுவும் இல்லை.

♻ இங்குள்ள தியான மண்டபம் கட்டப்பட்ட விதம் அபூர்வமானது. சுண்ணாம்பு மற்றும் கருப்பட்டி கலந்து இது கட்டப்பட்டது. இந்த பொருட்களை சேகரித்து வைக்க மிகப்பெரிய குழிகள் தோண்டப்பட்டிருந்தன. இதைக் கட்டியவர்களுக்கு தங்கமும் வெள்ளியும் கூலியாகத் தரப்பட்டதாம். இவற்றையும் இரண்டு குழிகள் தோண்டி போட்டுவைத்திருந்தனர். ஒருவர் தன்னால் முடிந்த அளவு இவற்றை அள்ளிச் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்த நான்கு குழிகளும் இப்போதும் உள்ளன.

🅱 இருப்பிடம்:🅱

✈ திருவையாற்றின் மையப்பகுதியில் இத்தலம் அமைந்துள்ளது. தஞ்சாவூரில் இருந்து 10 கி.மி. தொலைவில் திருவையாறு இருக்கிறது. தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்ல நகரப் பேருந்து வசதி உள்ளது.

❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃
 🏹 தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்🏹
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°