ஆவணி மாதம் வரும் விநாயக சதுர்த்தி மட்டுமின்றி, கணபதி பெருமானின் பேரருளைப் பெற்றுத் தரும் விரதங்கள், இன்னும் பல உண்டு. மகத்துவமான பலன்களை அருளும் அந்த விரதங்களை இங்கே பார்ப்போம்.
* வெள்ளிக்கிழமை விரதம்: இந்த விரதத்தை வைகாசி மாதம் வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் அனுஷ்டிக்கவேண்டும். விரதத்தைத் தொடங்கும்போதே எத்தனை வெள்ளிக்கிழமைகள் விரதம் இருக்கவேண்டும் என்பதை சங்கல்பம் செய்துகொள்ளவேண்டும்.
அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு தூய ஆடைகளை உடுத்திக்கொண்டு விரதத்தை தொடங்கவேண்டும். பூஜையறையில் கலச ஸ்தாபனம் செய்து, அந்தக் கலசத்தில் விநாயகரை எழுந்தருளச் செய்யவேண்டும். பின்னர் கரும்பு, விளாம்பழம், சர்க்கரை, பலாப்பழம் ஆகியவற்றை நைவேத்தியம் செய்து வணங்கவேண்டும். அன்று முழுவதும் எதுவும் உண்ணக்கூடாது. இரவு படுக்கப்போவதற்கு முன்பு சிறிதளவு பழமும் பாலும் உண்ணலாம் வெள்ளிக்கிழமை விரதம் முடியும் நாளில் மகேஸ்வர பூஜை செய்து, அடியார்களுடன் சேர்ந்து உண்ண வேண்டும். இந்த விரதத்தை அனுஷ்டித்து அத்திரி மகரிஷி சந்திரனையும் துர்வாசரையும் பிள்ளைகளாகப் பெற்றார். குபேரன் சங்க- பதும நிதிகளைப் பெற்றார்.

*பிள்ளையார் நோன்பு: கார்த்திகை மாதம் கிருஷ்ணபட்ச பிரதமை தொடங்கி மார்கழி மாத சஷ்டி திதி வரையில் 21 நாட்கள் அனுஷ்டிக்கப்படும் விரதமாகும்.
இந்த விரதம் இருக்கும்போது, இருபத்து ஒன்று இழைகளைக் கொண்ட நூலை ஆண்கள் வலது கை மணிக்கட்டிலும், பெண்கள் இடது கை மணிக்கட்டிலும் காப்பாகக் கட்டிக் கொள்ளவேண்டும். விரத நாட்களில் தினமும் விநாயகருக்கு அபிஷேக ஆராதனைகளை சிறப்பான முறையில் செய்யவேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான பட்சணம் செய்து விநாயகருக்கு நைவேத்தியம் செய்யவேண்டும். முதல் இருபது நாட்கள் ஒருவேளை மட்டும் உணவு உண்ணலாம். நிறைவுநாளில் அன்று முழுவதும் உணவு இல்லாமல் உபவாசம் இருந்து மறுநாள் காலை யில் பாரணை செய்து விரதத்தை பூர்த்தி செய்யலாம். இந்த விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலம் எப்படிப்பட்ட பெரிய சோதனைகளில் இருந்தும் விடுபடலாம் என்பது நம்பிக்கை.
* சங்கடஹர சதுர்த்தி விரதம்: ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தி அன்று வருவது சங்கடஹர சதுர்த்தி. இந்த விரதத்தை மாசி மாதம் கிருஷ்ணபட்சத்தில் வரும் சதுர்த்தி திதியில் தொடங்கி ஒரு வருட காலத்துக்கு அனுஷ்டிக்கவேண்டும். விரதநாளில் எதுவும் உண்ணாமலும் இரவு உறங்காமலும் விநாயகரின் மகிமைகளை விவரிக்கும் புராணங்களைப் படித்தபடி விநாயகரின் தியானத்திலேயே மனதைச் செலுத்தவேண்டும்.
இப்படி ஒரு வருட காலம் சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுஷ் டித்தால் கடன், பகை, நோய் போன்ற அனைத்து துன்பங்களும் நீங்கும். சந்திரன் இந்த விரதத்தை அனுஷ்டித்து, பிணி நீங்கப்பெற்றான். இந்த விரதத்தை முதன்முதலில் அங்காரகன் அனுஷ்டித்ததால், இது அங்காரக சதுர்த்தி என்றும் அழைக்கப்படும்.
இந்த விரதங்களைத் தவிர பெண்கள் மட்டுமே பிரத்தியேகமாக அனுஷ்டிக்கும் இரண்டு விரதங்கள் பற்றியும் செவிவழிச் செய்தியாக சொல்லப்பட்டு வருகின்றன.
* வெள்ளிப் பிள்ளையார் விரதம்: இந்த விரதத்தை ஆடி மற்றும் தை மாத வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் அனுஷ்டிப்பர். அன்று அதிகாலை மூன்று மணிக்கே எழுந்து எண்ணெய் தேய்த்து நீராடி, சுத்தமான உடை உடுத்திக் கொண்டு விரதத்தைத் தொடங்கவேண்டும். கன்றின் சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து தாழை மடல், நெற்கதிர் ஆகியவற்றைப் பரப்பி கொழுக்கட்டை நைவேத்தியம் செய்து பூஜையை முடிப்பர். அதன் பயனாக துன்பம் நீங்கி, நிறைந்த செல்வம் பெற்று சிறப்பான வாழ்க்கையைப் பெறலாம்.

* செவ்வாய்ப் பிள்ளையார் விரதம்: தை அல்லது ஆடி மாதம் செவ்வாய்க் கிழமை தொடங்கி இத்தனை செவ்வாய் என்று நிர்ணயம் செய்துகொண்டு விரதம் இருப்பர். ஆண்களை வெளியில் அனுப்பிவிட்டு எல்லா பெண்களும் ஒரு பெண்ணின் வீட்டில் ஒன்று சேருவார்கள்.
ஒவ்வொருவரும் தேவையான அளவுக்கு நெல்லைக் கொண்டு வந்து கொடுப்பார்கள். அனைவரும் தூய்மையாக நீராடிவிட்டு, தாங்கள் கொண்டு வந்த நெல்லை அரிசியாக்கி, அரிசியைக் களைந்து மாவாக்குவார்கள். அந்த மாவை உப்பு இல்லாமல் பிசைந்து தேங்காயை சிறு சிறு துண்டுகளாக்கி அதில் போட்டு தேங்காய் உடைத்த நீரையே மாவில் விட்டுப் பிசைந்து கொழுக்கட்டை செய்து வைக்கோல் பரப்பி நீராவியில் வேகவைப்பார்கள்.
பின்னர் கன்றின் சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து, நைவேத்தியம் செய்துவிட்டு, தூபம் தீபம் காட்டி விநாயகரை வழிபடுவர். பின்னர் அவரவர் பங்குக்கு உண்டான கொழுக்கட்டையை உண்பார்கள். பொழுது விடிவதற்கு முன்பாகவே பூஜைக்கு பயன்படுத்திய பொருட்கள், சாணத்தில் பிடித்து வைத்த பிள்ளையார் அனைத்தையும் நீர்நிலைக்கு எடுத்துச் சென்று வழியனுப்பி வைப்பார்கள்.

No comments:
Post a Comment