Wednesday 4 October 2017

ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்! - 47

டுத்தவரைப் புண்படுத்தாதவர்கள், தானும் மகிழ்ச்சியாக இருந்து, அடுத்தவரையும் மகிழ்ச்சியடையச் செய்பவர்கள், பெற்றோருக்கும் பெரியோருக்கும் மரியாதை தருபவர்கள், அறிவுக் கூர்மையுடன் செயல்படுபவர்கள்... உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள். வியாழக் கிரகம் மற்றும் மீன ராசியுடன் தொடர்பு கொண்டது உத்திரட்டாதி. வியாழக்கிழமை மற்றும் பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் மார்ச் 20-ஆம் தேதி வரை பிறந்தவர்களை உத்திரட்டாதி நட்சத்திரம் ஆட்சி செய்கிறது.
இந்த நட்சத்திரத்தின் நல்ல கதிர்வீச்சுகளை உள் வாங்கி, நன்மை தரும் வேலையைச் செய்கிறது முல்லை (மல்லிகை மற்றும் வேம்புகூட இதே பலன்களைத் தருபவை!). நாகை மாவட்டம் சீர்காழி- பூம்புகாருக்கு அருகில் உள்ள திருப் பல்லவனேஸ்வரம் கோயிலின் ஸ்தல விருட்சம்- முல்லை. இறைவன்- ஸ்ரீபல்லவனேஸ்வர ஸ்வாமி; அம்பாள்- ஸ்ரீசௌந்தரநாயகி.
'காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே...’ என்று பட்டினத்தாருக்கு சிவபெருமான் அருளிய தலம் இது! இங்கு இவருக்குத் தனிச் சந்நிதி உள்ளது. காலவ மகரிஷியும் காசிப முனிவரும் பூஜித்துப் பேறுபெற்ற தலம் என்கிறது ஸ்தல புராணம். கோயிலுக்கு எதிரில் ஜானவி தீர்த்தம்; உள்ளே சூரியன், பட்டினத்தார், தல விநாயகர், ஸ்ரீசுப்ரமணியர், அகத்தியர், சம்பந்தர், பைரவர் ஆகியோருக்குச் சந்நிதிகள் என அழகுறத் திகழ்கிறது ஆலயம். ஞானசம்பந்தர் பாடிப் பரவிய தலம் என்கிற பெருமையும் உண்டு, இந்தக் கோயிலுக்கு.  
இங்கு, ஸ்ரீபாலமுருகன் அருகில் அமர்ந் திருக்க, குகாம்பிகையாக உமையவள் காட்சி தரும் விக்கிரகத் திருமேனி அற்புதம். இந்தத் தலத்தின் விருட்சமான முல்லை, வாயுத் தொல்லை, சளியை அகற்றும்; சிறந்த வலி நிவாரணியும்கூட! இந்தப் பூக்களை முகர்ந்தால், மூளை சுறுசுறுப்பாகும். முல்லை இலைக் கஷாயத்தில் வாய் கொப்புளித்தால், பல் வலி தீரும்; வாய் துர்நாற்றம் நீங்கும். முல்லை வேரினை நீரில் வேகவைத்துக் குடித்தால், தடைப்பட்ட மாதவிலக்கு சீராகும். பூக்களுடன் எள் கலந்து எடுத்த எண்ணெயைக் கொண்டு, உடலில் மசாஜ் போல் தடவிக் கொண்டால், நரம்புத் தளர்ச்சி பிரச்னை நீங்கும்.
திருக்கருகாவூர், திருக்கருப்பறியலூர், வடதிருமுல்லைவாயில் ஆகிய ஊர்களின் ஆலயத்தில் முல்லைக் கொடியும், திருவுசாத்தா னம், திருஇலம்பையங்கோட்டூர் ஆகிய ஆலயங் களில்  மல்லிகையும், திருக்கடவூரில் பிஞ்சிலம் எனும் பெருமல்லிகையும் தல விருட்சங்கள்!

No comments:

Post a Comment