Ⓜ அருள்மிகு மாணிக்கவண்ணர் திருக்கோயில், திருவாளப்புத்தூர் - நாகப்பட்டினம். Ⓜ
மூலவர்: மாணிக்கவண்ணர், ரத்னபுரீஸ்வரர்
உற்சவர்: சோமாஸ்கந்தர்
அம்மன்/தாயார்: பிரமகுந்தளாம்பிகை, வண்டமர்பூங்குழலி
தல விருட்சம்: வாகை (வைகை) மரம்
தீர்த்தம்: பிரம்மதீர்த்தம்
ஆகமம்/பூஜை: காமீகம்
பழமை: 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்: திருவாள்ஒளிப்புற்றூர், திருவாழ்கொளிபுத்தூர்
ஊர்: திருவாளப்புத்தூர்
பாடியவர்கள்: சுந்தரர், திருஞானசம்பந்தர்
🅱 தேவாரப்பதிகம்: 🅱
"சாகை ஆயிரமுடையார் சாமமும் ஓதுவதுடையார் ஈகையார் கடைநோக்கி இரப்பதும் பலபலவுடையார் தோகைமாமயிலனைய துடியிடை பாகமும் உடையார் வாகைநுண்துளி வீசும் வாழ்கொளி புத்தூர்உளாரே'. - திருஞானசம்பந்தர்
🔥 தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 29வது தலம்.
கடவுள் பக்தி, தர்ம சிந்தை, சகல கலைகளையும் அறியும் ஆர்வம், அமைதி, பிறருக்கு மனதாலும் தீங்கு நினையாத இயல்பு ஆகியவை உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணங்களாக இருக்கும்.
நட்சத்திர மாலை, இவர்கள் பல கலைகளையும் கற்றுத் தேர்ந்தவர்; ஆர்வமுள்ளவர்; சிந்தனை செய்பவர், கற்றறிந்தவர்களுக்கு நண்பர்; அருள் உடையவர்; உத்தமன் என்கிறது.
யவன ஜாதகம், ... தர்மவான், வீரர், செய்நன்றி மறவாதவர், நல்ல மனைவி வாய்த்தவர், அழகர் என்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ‘நேர் கொண்ட பார்வையும் நிமிர்ந்த நன்னடையும்’ கொண்டவர். நானிலத்தில் யாருக்கும் அஞ்சமாட்டார்கள். பேச்சில் பதிலடி தரத் தயங்க மாட்டார்கள். சமூக நலன் மீது அக்கறை கொண்டவர். விழிப்புஉணர்வு இயக்கங்களையும் சங்கங்களையும் தலைமை தாங்கி நடத்துவார்கள். வயோதிக வயதிலும் இளமையான சிந்தனை இவர்களுக்கு உண்டு. இளைஞர் கூட்டம் அலை மோதும்.
சனிக்கிழமையன்றும் டிசம்பர் 21 முதல் ஜனவரி 19 வரையும் பிறந்தவர்களுக்குரிய நட்சத்திரம், உத்திராடம். மேற்கண்ட நாளிலும், காலங்களிலும் உத்திராட நட்சத்திரத்தின் கதிர்வீச்சுகள் அதிக அளவில் படும். அந்தக் கதிர்வீச்சுகளை வாகை மரம் தனக்குள் சேகரித்து வைத்துக் கொள்கிறது.
உத்திராட நட்சத்திரம், வாகை மரத்துடன் தொடர்பு கொண்டது. இந்த நட்சத்திரத்தின் கெட்ட கதிர்வீச்சுகளை சுத்தம் செய்து ஆக்ஸிஜனாக மாற்றிக் கொடுக்கிறது வாகை. இம்மரத்தைத் தினமும் தொடுவதாலும், இதன் நிழலில் இளைப்பாறினாலும் உத்திராட நட்சத்திரத்தின் கெட்ட கதிர்வீச்சுகள் நீங்கிவிடுகின்றன.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை தாலுகா, திருப்புன்னத்துரிலிருந்து 8 கி.மீ. தூரத்தில் உள்ள இந்தத் திருத்தலம், திருவாழப்புத்தூர் என்றும் அழைக்கப்படுகிறது.
அருகில் உள்ள இலுப்பைப்பட்டு தலத்துக்கு பாண்டவர்கள் வந்தனர். அவர்களில் அர்ஜுனன் மட்டும் மேற்கில் இருந்த வாகை மரக் காட்டில், ஒரு மரத்தடியில் போய் அமர்ந்தான். அவனுக்குக் கடும் தாகம். அப்போது முனிவர் ஒருவர் அங்கு வர, ''சுவாமி, தாகமாக இருக்கிறது. இங்கே தண்ணீர் எங்கு கிடைக்கும்?'' என்று கேட்டான். முனிவர், தன் கையிலிருந்த தண்டத்தினால் நீர் நிலை (தண்ட தீர்த்தம்) உண்டாக்கி, தண்ணீர் வழங்கியருளினார். உடனே அர்ஜுனன், தன்னுடைய உடைவாளை முனிவரிடம் கொடுத்து விட்டு, தண்ணீரை இரு கைகளாலும் அள்ளிக் குடித்தான். பின்னர் திரும்பிப் பார்த்தால், முனிவரைக் காணோம். முனிவரின் காலடிச் சுவட்டைத் தொடர்ந்து, தேடி அலைந்தான். முனிவராக வந்தது இறைவனே. அவர், ஒரு வாகை மரத்தடியில் புற்றில் இருந்த வாசுகி பாம்பிடம் உடைவாளை கொடுத்துவிட்டு, ஆலயத்தை அடைந்தார். பிறகு, இது இறை விளையாட்டு என உணர்ந்த அர்ஜுனனும் இறைவனை தொழுதான். அவனிடம் உடைவாளைத் தருமாறு வாசுகிப் பாம்பை பணித்தார் இறைவன். இதனால், இந்தத் தலம், 'திருவாள் அளி புற்றூர்’ என வழங்கலாயிற்று. பிறகு, திருவாழ் கொளிபுத்தூர் என்றாகி, தற்போது திருவாழப்புத்தூர் எனப்படுகிறது.
கடும் பஞ்சத்தில் உலகம் தவித்தபோது, தானியங்கள், ரத்தினங்கள், மழை ஆகியவற்றைத் தந்தருளியதால் இங்கேயுள்ள இறைவனுக்கு ஸ்ரீரத்தினபுரீஸ்வரர் எனும் திருநாமம் அமைந்தது. இங்கேயுள்ள ஸ்ரீதுர்கை மிகவும் சாந்தமானவள். மகிஷாசுரமர்த்தினியாக அவதரித்தவள், வதம் முடிந்ததும், சாந்தம் கொண்ட தலம் இதுவாம்! ஸ்ரீபிட்சாடனர், ஸ்ரீநடராஜர், ஸ்ரீசிவகாமி, ஸ்ரீசனி பகவான் (இங்கு நவக்கிரகங்கள் இல்லை), வாசுகி பாம்பு ஆகியோர் அருளும் தலம் இது. இங்குள்ள வாகை மரத்தைச் சுற்றி வந்து வணங்கினால், குழந்தை பாக்கியம் உண்டாகும் என்கின்றனர். துர்கா பரமேஸ்வரி அசுரனை அழித்து வெற்றி பெற்ற அடையாளமாக தல விருட்சமான 'வாகை’ போற்றி வணங்கப்படுகிறது.
வாகையின் இலைகளை அரைத்துக் கண்களில் வைத்துக் கட்டினால், கண் நோய்கள் குணமாகும். இதன் இலைகளைக் கஷாயமாக்கிச் சாப்பிட் டால், மாலைக்கண் நோய் சரியாகும். இதன் பூக்களை அரைத்து, பாம்புக்கடி விஷ முறிவுக்குப் பயன்படுத்துவர். தவிர, கட்டிகள், வீக்கங் களைக் குணமாக்கவும் வல்லது இது. வாகை மரப்பட்டை ரத்தமூலம், சீதபேதி ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இந்த மரத்திலிருந்து கசியும் பிசின், பெண்களின் வெள்ளைப்படுதல் முதலான நோய்களைக் குணப்படுத்துகிறது. உஷ்ண உடல் உள்ளவர்கள், வாகை மரத்தால் தயாரிக்கப்படும் மருந்துகளில் பசும் நெய் கலந்து சாப்பிட, உடற்சூடு தணியும். குறிஞ்சிப் பாட்டில், 'வடவனம் வாகை வான்பூங்குடசம்’ என வாகையைக் குறிப்பிட்டுள்ளனர். வெற்றி பெற்றவர்களை 'வாகை சூடியவர்கள்’ எனப் போற்றுகிறார் நச்சினார்க்கினியர்.
பில்லி சூனியம் அகலும்!
''சாந்த சொரூபினியாக ஸ்ரீதுர்கை அருளாட்சி செய்யும் தலம் இது. ராகு காலத்தில் இவளை வணங்கினால், நவக்கிரக தோஷம் அகலும்; பில்லி சூனியம் விலகும்; கொடிய ரோகங்கள் நிவர்த்தியாகும்; பிள்ளை வரம் கிடைக்கும். இந்தத் தலத்து இறைவன் சந்நிதிக்கு முன்னே திருமணம் முடிப்பது விசேஷம். அவர்களுக்கு அனைத்துச் செல்வங்களையும் அருளுவார் ஈசன் என்பது ஐதீகம்''
|
🅱 உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு ஏற்ற ஸ்தலம். 🅱
Ⓜ அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் (மீனாட்சி சுந்தரேஸ்வரர்) திருக்கோயில் கீழப்பூங்குடி- சிவகங்கைⓂ
மூலவர்: பிரம்மபுரீஸ்வரர் (சுந்தரேஸ்வரர்)
அம்மன்/தாயார்: பிரம்மவித்யாம்பிகை (மீனாட்சி)
இத்தலம் சிவகங்கையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் உள்ள (12 கி.மீ.,) ஒக்கூர் சென்று, அங்கிருந்து பிரியும் சாலையில் 3 கி.மீ., சென்றால் பூங்குடியை அடையலாம்.(மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் என்றால் தான் அனைவருக்கும் தெரியும்.) மதுரையில் இருந்து (45 கி.மீ.,) இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை நேரடி பேருந்து வசதி உண்டு.
‘உத்திராடத்தில் பிள்ளையும் ஊரோரத்தில் கழனியும்’ என்றொரு பழமொழி உண்டு. இந்த பழமொழிக்கேற்ப ஊருக்கு அருகில் எப்போதும் சொத்து வாங்கும் யோகம் பலருக்கு உண்டு. உத்திராடத்தின் முதல் பாதம் தனுசு ராசியில் இடம்பெறும். மீதியுள்ள மூன்று பாதங்களும் மகர ராசியில் இடம்பெறுகின்றன.
முதல் பாதத்தில் பிறந்தவர்களை, நட்சத்திர அதிபதியாக சூரியனும், ராசியாதிபதியாக குருவும், பாதத்தின் அதிபதியாக குருவும் சேர்ந்து ஆட்சி செய்கிறார்கள். இதனால் கம்பீரப் பொலிவும் தெளிவும் இவர்களிடம் மிகுந்து காணப்படும். நட்சத்திர நாயகனின் சொந்த தசையாக இருப்பதால் சிறிய வயதிலேயே முதிர்ச்சியோடு இருப்பார்கள். மணவாழ்க்கை சிறப்பாக அமையும். 28, 31 வயதுகளில் ஒரு முக்கிய திருப்புமுனை ஏற்படும். பின்னர் இவர்கள் வாழ்க்கை மிக சிறப்பாகவே இருக்கும்.
உத்திராடம் இரண்டாம் பாதத்தை மகரச் சனியே ஆளும். அதாவது இரட்டை சனியின் சக்தி மிகுந்திருக்கும். மென்மையானவர்கள், உண்மையானவர்கள். எதையும் மூடி மறைத்து செய்யும் குணம் இல்லாதவர்கள். திறந்த புத்தகம் மாதிரி இருப்பார்கள். ஏமாற்ற நினைப்பதில்லை. இந்த நல்ல குணத்தாலேயே பல்வேறு பிரச்சனைகளை சந்திப்பதுண்டு. யாரையும் முழுமையாக நம்புவது கிடையாது. நம்பிக்கை வைப்பது கடவுளிடம் மட்டும் தான். அவசரம் காட்டுவதில்லை. மெதுவாக செய்து முடிப்பதால் மற்றவர்கள் இவர்களை சோம்பேறிகள் என்று கூட சொல்வதுண்டு. கோபம் வந்தால் கூட எதிராளியின் மீது கடுமையான வார்த்தைகளை பிரயோகிப்பதில்லை.
தலைமைப் பண்பு மேலோங்கியிருக்கும். சாகச விளையாட்டுகளில் ஈடுபடுவார்கள். படிப்பை விட விளையாட்டுத்துறையில்தான் கவனம் திரும்பும். இவர்களுக்கு பொதுவாக நிர்வாகம், அக்கவுன்ட்ஸ் போன்ற படிப்புகள் ஏற்றவை. பதினொன்றாம் வகுப்பிலிருந்து கல்லூரி முடியும் வரை செவ்வாய் தசை இருப்பதால் கெமிக்கல், சிவில், எலெக்ட்ரானிக்ஸ், எம்.பி.ஏ. போன்றவை மிகச் சிறந்த வாழ்க்கையை அமைத்துத் தரும். கேட்டரிங் டெக்னாலஜி தேர்ந்தெடுத்தால், ஒரு ஓட்டலுக்கே அதிபராகலாம் உத்திராடம் இரண்டாம் பாதத்தினர்.
புராணங்கள் சொல்வதன்படி, சிவனுக்கு ஐந்து தலைகள் இருந்தன. இதே போல, பிரம்மாவுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. மேலும், படைக்கும் தொழிலையும் செய்ததால், சிவனை விட தானே உயர்ந்தவர் என கருதினார். இதனால், சிவன் அவரது ஒரு தலையைக் கொய்தார்.
சிவபாவத்திற்கு ஆளான பிரம்மா, தவறுக்கு மன்னிப்பு கிடைக்க பல தலங்களில் சிவபூஜை செய்தார். அவ்வாறு பூஜித்த தலங்களில் இதுவும் ஒன்று. பிரம்மாவிற்கு அருளியதால் சிவனுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. அம்பாள் பிரம்ம வித்யாம்பிகை எனப்பட்டாள். பூங்குடியாள் என்றும் பெயருண்டு. இக்கோயில் காலப்போக்கில் அழிந்து விட்டது. அதன்பின் புதிதாக கோயில் எழுப்பப்பட்டது. சிவனுக்கு சுந்தரேஸ்வரர் என்றும், அம்பிகைக்கு மீனாட்சி என்றும் பெயர் சூட்டப்பட்டது.
பவுர்ணமியன்று சிவனுக்கு விசேஷ பூஜை உண்டு. சித்திரை பிறப்பன்று காலையில் விசேஷ ஹோமம் நடக்கும். அப்போது, அன்றிரவில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடாவர். மதுரையில் மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் நடக்கும் நாளில், இங்கும் திருக்கல்யாணம் நடக்கும். மார்கழி திருவாதிரையன்று இரவில் அம்பாள் சன்னதியில் அதிகமான பூக்களை நிரப்பி விசேஷ பூஜை நடக்கும் விசேஷமான சிவத்தலம்.
தனிச்சன்னதியிலுள்ள நடராஜர், ஆடுவதற்கு தயாரான நிலையில் அள்ளிமுடிந்த ஜடாமுடியுடன் காட்சி தருகிறார்.
இங்குள்ள பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் விசேஷ பூஜை உண்டு.
சிவன் சன்னதிக்கு பின்புறம் கோஷ்டத்திலுள்ள லிங்கோத்பவருக்கு திருக் கார்த்திகையன்றும், சிவராத்திரி இரவில் மூன்றாம் காலத்திலும் விசேஷ பூஜை நடக்கும்.
ஆடம் என்றால் முதலில் தோன்றியது என்று பொருள். 27 நட்சத்திரங்களில் மூத்த நட்சத்திரமாக உத்திராடம் விளங்குகிறது. எனவே தான் முதன் முதலில் தோன்றிய உத்திராட நட்சத்திர தேவியான பூங்குடியாளை 26 நட்சத்திர தேவியரும் பாதபூஜை செய்வதாக கூறப் படுகிறது. (உத்திராடம் முதல் நட்சத்திரம் என்பதால் தான், இந்த நட்சத்திரத்தின் அதிதேவதையாக முழு முதல் கடவுளான விநாயகர். உத்திராடம் நட்சத்திரத்தினருக்கு ஏற்படும் சகலதோஷங்கள் நீங்கவும், வாழ்வில் முன்னேற்றம் பெறவும் அந்த நட்சத்திர நாளில் வந்து வழிபடலாம். அன்று சிவனுக்கு விசேஷ பூஜை உண்டு.
No comments:
Post a Comment