2ம் படி: நத்தை, அட்டை முதலான மெள்ள ஊர்ந்து செல்லும் ஈரறிவு படைத்த உயிரினங்கள்.
3ம் படி: எறும்பு, பூரான் போன்ற மூன்றறிவு உயிரினங்கள்
4ம் படி: பறவைகள் முதலானவை.
5ம் படி: பசு, யானை முதலான ஐந்தறிவு கொண்ட விலங்கினங்கள்.
6ம் படி: மனிதர்கள் இடம்பெறலாம். வணிகர், குறவன் குறத்தி முதலான பொம்மைகள்.
7ம் படி: தெய்வ அவதாரங்கள், நவகிரகங்கள் முதலான தெய்வ பொம்மைகள்.
8ம் படி: மும்மூர்த்தியரும் தேவியருடன் விளங்கும் பொம்மைகள் இடம்பெறலாம்.
9ம் படி: இதில் ராஜராஜேஸ்வரியின் வடிவம் பிரதானமாக இடம்பெற வேண்டும். பூரண கலசமும் வைப்பார்கள்.
அன்னமும் அளித்தாள் கலைவாணி!
பராசக்தியை அன்னபூரணியாக வணங்குவோம். லட்சுமி தேவியையும் அன்னலட்சுமி என்று சிறப்பிக்கிறோம். அதேபோன்று அன்னை கலைவாணியும் அன்னம் அளித்து மகிழ்ந்திருக்கிறாள். அவள் அமுதசுரபி எனும் அள்ளக்குறையாத உணவு தரும் பாத்திரத்தை ஆபுத்திரனுக்கு கொடுத்ததாகவும், அதைக் கொண்டு அவன் உலகமக்களின் பசிப்பிணி தீர்த்ததாகவும் மணிமேகலை கூறுகிறது.
சரஸ்வதி குடியிருக்கும் கோயிலை கலைநியமம் என்பார்கள். மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் உள்ள சரஸ்வதி சந்நிதி கலைநியமம் என்றே வழங்கப்படுகிறது. இங்கே சிந்தாதேவி என்ற திருநாமத்துடன் அருள்வழங்கும் சரஸ்வதியே ஆபுத்திரனுக்கு அருள்பாலித்தவளாம்.
No comments:
Post a Comment