சிவகாசியிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சிற்றூர் வெம்பக்கோட்டை. அருள்மிகு மீனாட்சியம்மையுடன் சொக்கலிங்க ஸ்வாமி கோயில் கொண்டிருக்கும் இந்த ஊரை, காசிக்கு நிகராகக் கொண்டாடுகிறார்கள் சிவபக்தர்கள்!
சுமார் 1,100 ஆண்டுகளுக்கு முன்னர், பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கோயில் இது. பின்னர் வந்த காலங்களில் - சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு, இப்பகுதி மேட்டுக்காடு, நத்தத்து மேடு என்னும் குறுநிலங்களாகப் பிரிந்திருந்தது. அத்தருணம் நத்தத்துமேடு என்னும், இத்தலம் அமைந்த பகுதியினை செம்புலிங்கராஜா என்னும் குறுநில மன்னர் ஆண்டு வந்தார். அவருக்குப் பின், அவரது தத்துப்பிள்ளை களான கண்டியச் சேதுபதியும், பாண்டியச் சேதுபதியும் இப்பகுதியை ஆட்சிபுரிந்தனர்.
கனவில் தோன்றிய மீனாட்சியம்மை!
அவர்கள் இருவரும் ஒவ்வொரு நாளும் குதிரையில் பயணப்பட்டு மதுரை சென்று, அங்கு அருள்புரியும் மீனாட்சி அம்மனைத் தரிசித்த பின்பே காலை உணவு உட்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அப்படியொரு நாள், இருவரும் மதுரைக்குப் பயணப்பட்டுக்கொண்டிருக்க, செல்லும் வழியில் இருந்த அர்ஜுனா நதியில் வெள்ளம் கரைபுரண்டது. பல நாழிகை காத்திருந்தும் வெள்ளம் வடியாததால், மனம் சோர்வுற்ற மன்னர்கள் இருவரும் களைப்பில், அருகிலிருந்த மரத்தடியில் படுத்து உறங்கினர்.

அவர்களின் கனவில் தோன்றிய அம்பாள், ‘இனி என்னைத் தேடி வரவேண்டாம். நீங்கள் இருக்கும் பகுதியிலேயே வெண் புற்கள் அதிகம் வளர்ந்த, தலையில் வெண்புல்லுடன் இருக்கும் கழுகு (கருடன்) வட்டமிடும் இடத்தின் கீழே எனக்குக் கோயில் இருக்கிறது. அதற்குத் திருப்பணிகள் செய்து வழிபட்டால், உங்களுக்கு உற்ற துணையாக இருப்பேன்’ என அருளிச் சென்றாள். இச்செய்தியை மன்னர்கள் இருவரும் தங்கள் பணியாளர்களிடம் சொல்லி, இந்தத் தலத்தைக் கண்டறிந்து திருப்பணிகள் செய்ததாகச் சொல்கிறது தல வரலாறு. இதனால் இங்கு இருக்கும் அம்பாளின் திருநாமம் ‘மீனாட்சி’; இறை வனின் பெயர் ‘சொக்கலிங்க ஸ்வாமி’.
இத்திருத்தலம் இருக்கும் பகுதி ‘யானைப் புற்கள்’ எனப்படும் வெண்ணிறப் புற்கள் அதிகம் உள்ள பகுதி என்பதால், இவ்வூருக்கு ஆரம்பத்தில் ‘வெண்புல் கோட்டை’ எனும் காரணப் பெயர் அமைந்து, அதுவே பின்னர் ‘வெம்பக்கோட்டை’ என மருவியது. இத்தலம் பாண்டியர்களால் கட்டப்பட்டது என்பதற்குச் சான்றாக, இங்குள்ள தூண்களில் மீன் சின்னம் பொறிக் கப்பட்டுள்ளது.
காசிக்கு நிகரான திருத்தலம்
காசியில் கங்கை உத்தரவாகினியாக ஓடுவது போன்று, இந்தத் தலத்தின் அருகில் பாயும் வைப்பாறும் உத்தரவாகினியாக பாய்கிறது. அத்துடன், காசியில் உள்ளது போன்றே இங்கேயும் கோயிலுக்கு நேராக மயானம் அமைந்திருக்கிறது. ஆகவே, இவ்வூரை காசிக்கு நிகராகப் போற்றுகின்றனர் பக்தர்கள். உத்தராயனம், தட்சிணாயனம் ஆகிய இரு காலங்களில், முதல் மூன்று நாட்கள், காலையில் சூரியன் உதிக்கும்போது சூரிய ஒளி நேராக சிவன் மீது படும்படி ஆலயம் அமைந்திருப்பது மற்றொரு சிறப்பு!
தொழிலில் நஷ்டம் அடைந்தவர்கள், 48 நாட்கள் தினமும் இங்கு தொடர்ந்து வந்து, இங்குள்ள இறைவனை வேண்டிச் செல்ல, தொழில் விருத்தியாகும் என்பது நம்பிக்கை.
இது தவிர, ஒவ்வொரு மாதமும் நடைபெறும் பெளர்ணமி விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள, திருமண வரம் வேண்டுபவர்களுக்கு வரன் அமையும். மேலும், ‘இந்தக் கோயிலுக்கு வந்து திருமணம் செய்து கொள்ளும் தம்பதி எவ்வித சண்டை-சச்சரவுகளிலும் ஈடுபடாமல், காலம் முழுக்க மனம் ஒருமித்து வாழ்வார்கள்’ என்கிறார்கள் ஊர்ப் பெரியவர்கள்.

நவராத்திரி, வைகாசி விசாகம், பெரிய கார்த்திகை ஆகிய தினங்கள் இங்கு வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இத்தலத்தில் ஒவ்வொரு நாளும் இரு வேளை பூஜை மற்றும் ஒவ்வொரு மாதமும் விசேஷ தினங்களில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெறுகின்றன.
ஒவ்வொரு நாளும் இத்தலத்தின் நடை, காலை 6 மணியிலிருந்து 9.30 மணி வரையிலும், மாலை 4 மணியிலிருந்து 8 மணி வரையிலும் திறந்திருக்கும். மற்ற விசேஷ தினங்களில் கூடுதலான நேரம் திறந்திருக்கும்.
No comments:
Post a Comment