கன்னியாகுமரி ரயில்நிலையம் அருகில், மரங்களும் செடிகளும் அடர்ந்து நிற்கும் ரம்மியமான சூழலில் அமைந்துள்ளது, அருள்மிகு குகநாதீஸ்வரர் திருக்கோயில். இத்திருக்கோயிலின் இறைவன் கோனாண்டேஸ்வரன் என்றும், குகனாண்டேஸ்வரன் என்றும் அழைக்கப்படுகிறார். இருப்பினும், இக்கோயில் கருவறை குகை போன்று அமைத்துள்ளதாலும், பிராகாரம் குறுகியிருப்பதாலும், குகநாதீஸ்வரர் என்றே பலராலும் அழைக்கப்படுகிறார். இறைவி பார்வதி. இக்கோயிலின் தலவிருட்சம் வில்வமரம்.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்து புதராகக் காட்சியளித்த இக்கோயிலின் பரிதாப நிலையை, கன்னியாகுமரி ரயில்நிலையப் பணியாளர் ஒருவர் பார்த்து மனம் வெதும்பி, தன் ரயில் நிலைய சகாக்களோடு சேர்ந்து அவற்றை வெட்டிச் சுத்தப்படுத்தி, கோயிலில் பூஜை நடப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்தார். அதன் பிறகே, பக்தர்கள் அங்கு வந்து போகத் தொடங்கினர்.
குமரி மாவட்டத்திலேயே மிக உயரமான சிவலிங்கம் இந்தத் திருக்கோயிலில்தான் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கோயிலின் உட்பிராகாரத்தில் நவகிரகங்கள் மற்றும் கன்னி விநாயகர், தட்சிணாமூர்த்தி, கால பைரவர், சண்டிகேஸ்வரர், துர்கை ஆகிய பரிவார மூர்த்தங்களுக்கான சந்நிதிகளும் அமைந்துள்ளன.
கன்னியாகுமரி பகவதியம்மன் திருக்கோயிலின் தலபுராணத்தில் குகன் (முருகன்) தன் தந்தையை (சிவன்) வழிபட்ட இடம் குகநாதீஸ்வரர் கோயில் என்று கூறப்பட்டுள்ளது. இந்தக் கருத்துக்கு வலுசேர்க்கும் விதமாக,

‘மகமெனும் குகன்தான் அந்த மகிமைசேர் குமரியங்கண்
அகமகிழ் தாதையான அரன்தனைத் தாபித்து
அன்பால்தகைமைசேர் உபசாரங்கள் தம்மொடும் பூசைசெய்து
குகன்தனை ஆண்ட ஈசன் எனும்பெயர்கூறிப் பின்னர்’

என்னும் கந்தபுராண வரியை மேற்கோள் காட்டுகிறார்கள்.
கல்வெட்டுக் குறிப்புகள்
கி.பி. 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று, இத்திருக்கோயிலில் உள்ளது. அதில், இத்திருக்கோயில் இறைவனை ‘ராஜராஜப் பாண்டிநாட்டு உத்தமசோழ வளநாட்டு புறத்தாயநாட்டு அழிக்குடி ராஜராஜேஸ்வர முடையார்’ என நீண்ட அடைமொழியோடு குறிப்பிடப்பட்டுள்ளது. பிற்காலச் சோழர்களின் ஆட்சி கன்னியாகுமரி பகுதியில் நிலவியபோது இந்த குகநாதீஸ்வரர் கோயிலுக்கு திருப்பணிகள் செய்யப்பட்டதாகக் கல்வெட்டுக் குறிப்பில் காணப்படுகிறது. எனவே, கி.பி.10-ம் நூற்றாண்டுக்கு முன்பே இக்கோயிலில் வழிபாடுகள் நடந்திருக்கலாம் என்று கல்வெட்டு ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
இக்கோயிலில், முதலாம் ராஜேந்திரன், இரண்டாம் ராஜேந்திரன், முதலாம் ராஜாதிராஜன் ஆகிய மன்னர்களின் காலத்தைச் சேர்ந்த சில கல்வெட்டுகள் உள்ளன. அவற்றில் ஒரு கல்வெட்டில், ‘ஒரு செவ்வாய்க்கிழமையில் பூச நட்சத்திரத்தன்று கோயிலின் முக மண்டபத்தில் சபை கூடியது; பக்தர்களும் கூடினர்; இவர்களின் முன்னிலையில் கங்கைகொண்ட சோழபுரத்தைச் சேர்ந்த வியாபாரி ஆச்சான் மாற்றிலி என்பவன் இத்திருக்கோயிலுக்கு நன்கொடை கொடுத்தான்’ என்ற செய்தி குறிப்பிடப் பட்டுள்ளது. இந்தக் கோயிலிலுக்கு நிவந்தங்கள் அளித்ததவர்கள் விவரமும் கல்வெட்டில் முழுமையாகக் குறிக்கப் பட்டுள்ளது.
இளநீர் அபிஷேகம்!
கோடையில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போது, கோடை வெப்பம் நீங்கி, நாட்டில் நல்ல மழைபெய்ய வேண்டி இக்கோயிலில் 1008 இளநீர் அபிஷேக பூஜை வெகுவிமரிசையாக நடைபெறுவது மிகச் சிறப்பு. திரளான பக்தர்கள் கலந்துகொள்ளும் இந்த பூஜையில் அபிஷேகம் செய்யப்பட்ட இளநீரை பாட்டில்களில் நிரப்பி, பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்குவர்.
இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று 1008 சங்காபிஷேகம் நடப்பது வழக்கம். அன்றைய தினத்தில் கணபதி ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம், கோமாதா பூஜை, சங்கு பூஜை ஆகியவை தொடர்ந்து நடைபெறும். அன்றைய தினம் 12.30 மணிக்கு ரிஷப வாகனத்தில் நடராஜர் எழுந்தருளி, மேளதாளம் முழங்க கோயிலின் வெளிப்பிராகாரத்தைச் சுற்றி பவனி வரும் நிகழ்ச்சி வெகு பிரபலமாகும்.
ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தன்று நடைபெறும் அபிஷேகம் வெகு சிறப்பானது. அன்றைய தினம் விரதமிருந்து குகநாதீஸ்வரரை வழிபட்டால், குடும்ப பிரச்னைகள் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.
கார்த்திகை மாதம் சோமவாரம் திங்கட் கிழமை மூலவருக்கு சிறப்பு ஆராதனை நடைபெறும். அப்போது கிரிதாரை, நெய் தாரை, இளநீர்தாரை போன்ற நேர்ச்சை அபிஷேகங்கள் தொடர்ச்சியாக நடைபெறும். பொதுவாக, ஆண்களைவிட பெண் பக்தர்களே இக்கோயிலுக்கு அதிக அளவில் வருகின்றனர். பெண் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறி னாலே குடும்பம் தழைக்கும் என்பது இத்திருக் கோயிலுக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை.

தாலித் தங்கம் கிடைத்தது...
பல வருடங்களுக்கு முன்பு, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தனது மகளின் திருமணத் தாலி செய்வதற்காக தங்கக் காசுகள் வாங்கிக்கொண்டு இக்கோயிலுக்கு வந்துள்ளார். அப்போது அவர் வாங்கி வந்திருந்த தங்கக் காசுகள் தொலைந்துவிட்டன. உடனே, அவர் மூலவரிடம் அழுது முறையிட்டு, மனமுருகி வேண்டினார். அடுத்த சில மணி நேரத்தில், யாரோ ஒரு நபர் அந்தத் தொலைந்த தங்கக் காசுகளைக் கொண்டுவந்து அர்ச்சகரிடம் கொடுத்துவிட்டுச் செல்ல, அர்ச்சகர் இவரை அழைத்து அவற்றை ஒப்படைத்தார். அன்றிலிருந்து, குகநாதீஸ்வரரிடம் மனமுருகி வேண்டினால், நமது வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும் என்பது இப்பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமண வரம் கிட்டாத பெண் கள் தொடர்ந்து இக்கோயிலுக்கு வந்து வழிபட்டால், திருமணத் தடை நீங்கி நல்ல வரன் கிட்டும் என்பது ஐதீகம்.

நடை திறந்திருக்கும் நேரம்:
காலை 5.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் திருக்கோயில் நடை திறந்திருக்கும்.
No comments:
Post a Comment