‘ராத்ரா’ என்ற சொல்லிலிருந்து வந்தது ‘ராத்திரி’. இதற்கு, ‘அளித்தல்’ என்பது பொருள். அதாவது, உழைத்துக் களைத்த உயிர்களுக்கு சுகமும் ஓய்வும் தரும் நேரம். உலக உயிர்களுக்கு ஒப்பற்ற மோட் சத்தை அளிப்பது. அளிப்பவர் சிவபெருமான். அதனால், சிவராத்திரி எனப்படுகிறது. சிவராத்திரி வழிபாட்டினால் இவ்வுலகில் வாழும்போதே நன்மைகளை அடைந்து, வீடுபேறும் பெறலாம்.
![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_ty5GF0wmY9cvVWCA6PbO8XPhRDhH7g5hf4VmMxHHm_p7X3tcrwe2CJS3AeAdv-QjW9oEop7mfT7-KrgIr_NblUsKExGT-2OF-UVNy9iRon33V9W-aqBpafro7bEYOoGr8H6Q=s0-d)
சிவராத்திரியின்போது பெருமானின் எட்டு நாமங்களை ஓயாமல் ஜபித்தல் அவசியம். அவை:
ஸ்ரீ பவாய நம: ஸ்ரீ சர்வாய நம: ஸ்ரீ ருத்ராய நம: ஸ்ரீ பசுபதயே நம: ஸ்ரீ உக்ராய நம: ஸ்ரீ மகாதேவாயை நம: ஸ்ரீ பீமாயை நம:
ஸ்ரீ ஈசாநாய நம:
![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_ty5GF0wmY9cvVWCA6PbO8XPhRDhH7g5hf4VmMxHHm_p7X3tcrwe2CJS3AeAdv-QjW9oEop7mfT7-KrgIr_NblUsKExGT-2OF-UVNy9iRon33V9W-aqBpafro7bEYOoGr8H6Q=s0-d)
மார்கழி மாத வளர் பிறைச் சதுர்த்தசி திருவாதிரை நட்சத்திரத்திலும், மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி செவ்வாய் அல்லது ஞாயிறோடு சேர்ந்து வரும் நாளிலும் நோற்கப்படும் சிவராத்திரி விரதம் மூன்றரைக் கோடி பலன் தரும்.
![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_ty5GF0wmY9cvVWCA6PbO8XPhRDhH7g5hf4VmMxHHm_p7X3tcrwe2CJS3AeAdv-QjW9oEop7mfT7-KrgIr_NblUsKExGT-2OF-UVNy9iRon33V9W-aqBpafro7bEYOoGr8H6Q=s0-d)
குருவிடமிருந்து சிவ தீட்சை பெற்று சிவபூஜை செய்ய உகந்தது சிவராத்திரி.
![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_vYdQZAeyEU7Hru40GoWm3gMmiMEzGZHtWXI8Efq8Hpkqmgij0kYvg6WDgrvwGliiiinadzqPQErbWCD3hOmEMMyKkofbr9AdWhDRacI8vYPcmGMYPGn27Q2WCv_5R2nQ=s0-d)
![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_ty5GF0wmY9cvVWCA6PbO8XPhRDhH7g5hf4VmMxHHm_p7X3tcrwe2CJS3AeAdv-QjW9oEop7mfT7-KrgIr_NblUsKExGT-2OF-UVNy9iRon33V9W-aqBpafro7bEYOoGr8H6Q=s0-d)
சிவராத்திரியின் நான்கு காலங்களிலும் பஞ்ச வில்வங் களைக் கொண்டு சிவலிங்கத்துக்கு பஞ்சமுக அர்ச் சனை செய்ய வேண்டும் என்று காரணாகமம் கூறுகிறது. இயலாத போது லிங்கோற்பவ காலத்திலாவது (மூன்றாவது காலம்) பஞ்சமுகார்ச்சனை செய்து, பஞ்சமுக (ஐவகை) தீபாராதனை மற்றும் பஞ்ச அன்னங்கள் நிவேதித்தல் வேண்டும்.
![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_ty5GF0wmY9cvVWCA6PbO8XPhRDhH7g5hf4VmMxHHm_p7X3tcrwe2CJS3AeAdv-QjW9oEop7mfT7-KrgIr_NblUsKExGT-2OF-UVNy9iRon33V9W-aqBpafro7bEYOoGr8H6Q=s0-d)
சிவ லிங்கம், விபூதிப் பை, ருத்திராட்சம், பொற் காசு, பசு, பூமி ஆகியவற்றை சிவராத்திரியன்று தானம் அளித்தல் நல்லது.
![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_ty5GF0wmY9cvVWCA6PbO8XPhRDhH7g5hf4VmMxHHm_p7X3tcrwe2CJS3AeAdv-QjW9oEop7mfT7-KrgIr_NblUsKExGT-2OF-UVNy9iRon33V9W-aqBpafro7bEYOoGr8H6Q=s0-d)
ஈசன், உமையவளைத் தன் மடி மீது அமர்த்திக் கொண்டு, அவருக்கு ஆகமங்களின் நுண்பொருளை விளக்கிய காலம் சிவராத்திரி.
![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_ty5GF0wmY9cvVWCA6PbO8XPhRDhH7g5hf4VmMxHHm_p7X3tcrwe2CJS3AeAdv-QjW9oEop7mfT7-KrgIr_NblUsKExGT-2OF-UVNy9iRon33V9W-aqBpafro7bEYOoGr8H6Q=s0-d)
மகா சிவராத்திரியில் தரிசிக்க வேண்டிய ஸ்தலங் கள் நான்கு. அவை: கோகர்ணம் (கர்நாடக மாநிலத்தில் ஹுப்ளிக்கு அருகிலுள்ளது), ஸ்ரீசைலம் (ஆந்திர மாநிலத்தில் கர்னூல் மாவட்டத்தில் நந்தியாலுக்கு அருகேயுள்ளது), காளஹஸ்தி மற்றும் திருவைகாவூர் (கும்பகோணத்துக்கு வடமேற்கே கொள்ளிடக் கரையில் அமைந்துள்ளது)
![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_ty5GF0wmY9cvVWCA6PbO8XPhRDhH7g5hf4VmMxHHm_p7X3tcrwe2CJS3AeAdv-QjW9oEop7mfT7-KrgIr_NblUsKExGT-2OF-UVNy9iRon33V9W-aqBpafro7bEYOoGr8H6Q=s0-d)
சிவராத்திரி இரவில் நாகராஜனான வாசுகியும், அவனைச் சார்ந்த நாகங்களும், நான்கு ஸ்தலங்களில் வழிபட்டு பேறு பெற்றதாகக் கூறப்படுகிறது. அவை: நாகூர், நாகப்பட்டினம், திருநாகேஸ்வரம், குடந்தை.
![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_ty5GF0wmY9cvVWCA6PbO8XPhRDhH7g5hf4VmMxHHm_p7X3tcrwe2CJS3AeAdv-QjW9oEop7mfT7-KrgIr_NblUsKExGT-2OF-UVNy9iRon33V9W-aqBpafro7bEYOoGr8H6Q=s0-d)
கிருத யுகத்துக்கு முன் தோன்றிய பிரளயத்தில் உமையவளும், திரேதா யுகத்துக்கு முன் தோன்றிய பிரளய இரவில் முருகப் பெருமானும், துவாபர யுகத்துக்கு முன்பு நிகழ்ந்த பிரளய இரவில் விநாயகரும், கலி யுகத்துக்கு முன்னே நடைபெற்ற யுகப் பிரளய இரவில் திருமாலும் சிவலிங்கத்தை அர்ச்சித்துப் பேறு பெற்றனர்.
![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_ty5GF0wmY9cvVWCA6PbO8XPhRDhH7g5hf4VmMxHHm_p7X3tcrwe2CJS3AeAdv-QjW9oEop7mfT7-KrgIr_NblUsKExGT-2OF-UVNy9iRon33V9W-aqBpafro7bEYOoGr8H6Q=s0-d)
சிவபெருமான் நெருப்புத் தூணாக நின்றதும், அவரின் அடியையும் முடியையும் தேடி, பிரம்மனும் திருமாலும் தோற்ற கதை பல புராணங்களில் இடம் பெற்றுள்ளது. என்றாலும், தத்துவ நோக்கில் நம் சான்றோர் சில விளக்கங்களை இதற்கு அளித்துள்ளார்கள்.
அதாவது, படைப்புக் கடவுளான பிரம்மன் கல்விக்கு அதிபதி. காக்கும் கடவுளான திருமால் செல்வத்துக்கு அதிபதி. சிவபெருமானை கல்வியாலும், செல்வத்தினாலும் அளவிட முடியாது என்பதே ‘அடி முடி தேடிய’ கதையின் தத்துவ நோக்கம்.
எல்லை மீறினால் கல்வி அகங்காரமாகிறது. செல்வம் அதிகமானால் செருக்கு ஏற்படுகிறது. அகங்காரத்தால் பிரம்மனும், செல்வச் செருக்கால் திருமாலும், தாமே பெரியவர் என்று போட்டியிட்டதாலேயே சிவபெருமா னைக் காண முடியாது போயிற்று.
ஆக, சிவபெருமானை அன்பினாலும், உலக உயிர்களுக்குச் செய்யும் தொண்டினாலுமே அடைய முடியும் என்பதை உணர்த்துவதே சிவராத்திரியின் தத்துவம்.
No comments:
Post a Comment