Tuesday 22 August 2017

5 வண்ணங்கள்... பவர்ஃபுல் பலன்கள்!


‘காய்கறி மற்றும் பழங்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும் இந்தியர்கள், போதுமான அளவில் அவற்றைத் தங்களது உணவுகளில் சேர்த்துக்கொள்வது கிடையாது. வட இந்தியர்களைவிடத் தென் இந்தியர்களே அதிகமாகக் காய்கறி, பழங்களைச் சேர்த்துக்கொள்கின்றனர்’ என்கிறது இந்தியன் கவுன்சில் ஃபார் ரிசர்ச் ஆன் இன்டர்நேஷனல் எகனாமிக் ரிலேஷன்ஸ் (ICRIER) என்கிற அமைப்பு. டெல்லி, குர்கான் (Gurgaon), நொய்டா, மும்பை, சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய நகரங்களில் வாழும் மத்தியதர வகுப்பினர் மற்றும் உயர் மத்தியதர வகுப்பினரிடையே எடுக்கப்பட்ட சர்வே இது. ‘ஒரு நபர் தினமும் 400 கிராம் காய்கறி மற்றும் பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்கிறது உலக சுகாதார நிறுவனம். அதாவது, தினசரி ஐந்து முறை காய்கறி, பழங்களை தங்கள் உணவில் எந்த வகையிலாவது சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால், இந்தியர்களோ இரண்டு முறை (Servings) காய்கறிகளையும், 1.5 முறை (Servings) பழங்களையும் சேர்த்துக்கொள்கின்றனர்.

நகர்ப்புறவாசிகள் சராசரியாக காய்கறி மற்றும் பழங்களை எடுத்துக்கொள்ளும் அளவு...
*சென்னை இதில் முதல் இடத்தில் பிடித்திருப்பது ஆறுதலான விஷயம்.

*வேலைக்குச் செல்பவர்களைவிட வீட்டில் இருப்போர் அதிக அளவில் காய்கறி, பழங்களைச் சாப்பிடுகின்றனர்.
சிவப்பு

சத்துக்கள்: லைக்கோபீன், எலாஜிக் ஆசிட், குவர்சிடின், ஹெஸ்பெரிட்டின் (Hesperetin), அந்தோசியானிடின் (Anthocyanidin).
பலன்கள்: ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிஃபங்கல் உட்பொருட்களைக் கொண்டுள்ளன. சிறுநீரகப் பாதையைப் பாதுகாக்கும். இதயநோய், ப்ராஸ்டேட் பிரச்னை வராமல் தடுக்கும். புற்றுநோயை செல்களை எதிர்க்கும்.

பர்ப்பிள்

சத்துக்கள்: ஃபிளவனாய்டு, ஃபீனோலிக் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் (Phenolic antioxidants), ரெஸ்வெரட்ரால் (Resveratrol), ஆந்தோசியானின் (Anthocyanin).
பலன்கள்: இதயம், மூளை, எலும்புகள், ரத்த நாளங்கள், நினைவுத்திறன் ஆகியவற்றுக்கு நல்லது. புற்றுநோயை எதிர்க்கும். முதுமையைத் தாமதப்படுத்தும்.

பச்சை


சத்துக்கள்: சல்ஃபோரஃபேன் (Sulforaphane), ஐசோதியோசயனேட் (Isothiocyanate), இ்ண்டோல்ஸ் (Indoles), ஐசோஃபிளவோன்ஸ் (Isoflavones).
பலன்கள்: கண்கள், ஈறுகள், ரத்த நாளம், நுரையீரல், கல்லீரல், செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். காயங்களைக் குணப்படுத்த உதவும். எலும்புகளை உறுதியாக்கும். சருமத்துக்கு எலாஸ்டிசிட்டி தன்மையைத் தரும். இதயச் செயல்பாடுகள் மேம்பட உதவும்.
வெள்ளை

சத்துக்கள்: அலிசின், குவர்சிடின், இ்ண்டோல்ஸ், குளுக்கோசினோலேட் (Glucosinolate).
பலன்கள்: எலும்புகள், ரத்த ஓட்டம், ரத்தநாளங்கள் செயல்பாட்டை ஆரோக்கியமாக்கும். இதயநோய், புற்றுநோய் வராமல் தடுக்கும். எலும்பு அடர்த்தி குறைதல் நோயைத் தடுக்கும். ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். உடலில் உள்ள நச்சுக்களை நீக்க வெள்ளை நிற காய், கனிகள் உணவுகள் உதவும்.

மஞ்சள்

சத்துக்கள்:
 ஜிஸாந்தின் (Zeaxanthin), ஆல்பாகரோட்டின், பீட்டாகரோட்டின், லுட்டின்.
பலன்கள்: பார்வைத்திறன் மேம்படும். நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும். உடல் வளர்ச்சிக்கு உதவும். சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதயத்துக்கு நல்லது.

போதுமான அளவு காய்கறி, பழங்களை எடுத்துக் கொள்ளாததற்கான காரணங்கள்...
இலக்கு: ஒரு நாளைக்கு 400 கிராம் காய்கறி மற்றும் பழங்களைச் சாப்பிட வேண்டும். தினமும் இரண்டு வண்ண காய்கறி, பழங்களைச் சாப்பிடுவது நல்லது.

No comments:

Post a Comment