தேர்த்திருவிழா போன்ற சந்தர்ப் பங்களில் சோமாஸ்கந்தர் திருவுருவம் உலாக் காட்சியில் இடம்பெறும். ஒரே பீடத்தில் இடப் பக்கம் அம்மை, நடுவில் கந்தன், வலப் பக்கம் இறைவன் ஆகிய மூவரின் உருவங்களும் சேர்ந்திருக்கும் அமைப்பே சோமாஸ்கந்தர் எனப்படுகிறது. ‘அறுபத்துமூன்று நாயன் மார்களுள் சிறுத் தொண்டருக்கு மட்டுமே சோமாஸ்கந்தர் உருவத்தில் காட்சி கொடுத்தார் இறைவன்!’ என்று சேக்கிழார் பெருமான் பாடியுள்ளார்.
சோமாஸ்கந்தர் வடிவம் வந்தது எப்படி? சூரபத்மனால் துன்பப்பட்ட தேவர்கள், சிவபெருமானிடம் முறையிட்டனர். சூரபத்மனை அழிக்கத் திருவுளம் கொண்ட சிவபெருமான், தன் நெற்றிக் கண்ணிலிருந்து நெருப்புப் பொறிகளைத் தோற்றுவித்தார். அந்தப் பொறிகள் சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக மாறின. அந்த ஆறு குழந்தைகளையும் கார்த்திகைப் பெண் கள் எடுத்து வளர்த்தனர். சரவணப் பொய் கைக்குச் சென்ற பார்வதிதேவி, அந்த ஆறு குழந்தைகளையும் ஒன்றாக்கிச் சேர்த்து, தனக்கும் சிவபெருமானுக்கும் நடுவில் அமர்த்தினாள். இதுவே, சோமாஸ்கந்தர் வடிவம் ஆகும்.
புத்திரப் பேறு வேண்டி சிவனை நோக்கித் தவம் இருந்தார் திருமால். இறைவன் வரம் தந்தார். ஆனால், திருமால் தன்னை பூஜிக்காததால் சினங்கொண்ட பார்வதிதேவி, ‘அப்படிக் கிடைக்கும் புத்திரன் அழிவதாக!’ என சாபம் இட்டாள்.
உடனே திருமால், தன் தவறை உணர்ந்து அம்மையை வணங்கினார். ‘பிறக்கும் புத்திரன் இறைவன் நெற்றிக் கண்ணால் அழிந்து மீண்டும் உயிர் பெறுவான்!’ எனக் கூறினாள். எனவே, அன்று முதல் திருமால் திருப்பாற்கடலில் தாம் துயிலும் அரவணையில் மார்பிடத்தில் சோமாஸ்கந்தர் திருவுருவத்தை அமைத்து வழிபட்டார். திருமாலை வணங்கி வேண்டி வானுலகம் வளம் பெறுவதற்காக சோமாஸ்கந்தரைப் பெற்று வந்து வழிபட்டு வந்தான் இந்திரன். வலாசுரன் என்னும் அரக்கன் இந்திர லோகத்தைக் கைப்பற்ற முயன்றான். இந்நிலையில் முசுகுந்தச் சக்ரவர்த்தியின் துணை யுடன் அந்த அரக்கனை வென்றான் இந்திரன்.
அதற்காக முசுகுந்தச் சக்ரவர்த்திக்கு வேண்டிய தைத் தருவதாக வாக்களித்தான் இந்திரன். உடனே சோமாஸ்கந்தர் திருவுருவத்தைக் கேட்டார் முசுகுந்தன். தன்னிடம் உள்ள சோமாஸ்கந்தர் வடி வத்தைத் தர மனம் வராத இந்திரன், வேறு ஆறு சோமாஸ்கந்தர் திருவுருவங்களை வடிவமைத்து, மொத்தம் ஏழு சோமாஸ்கந்தர்களையும் காட்டி, அவற்றில் ஒன்றை எடுத்துக் கொள்ளுமாறு கூறினான். முசுகுந்தன் உண்மையான சோமாஸ்கந்தரை அடை யாளம் தெரிந்து எடுத்தார். அதன் பின் மீதி இருந்த ஆறு சோமாஸ்கந்தரையும் அவரிடமே கொடுத்து அனுப்பினான் இந்திரன்.
பழைய சோமாஸ்கந்தரை திருவாரூரிலும், மற்ற ஆறு சோமாஸ்கந்தர்களையும் முறையே நாகப்பட்டினம், திருநள்ளாறு, திருமறைக்காடு, திருக்காறாயில், திருவாய்மூர், திருக்கோளிலி (திருக்குவளை) ஆகிய தலங்களிலும் பிரதிஷ்டை செய்தார் முசுகுந்த சக்ரவர்த்தி. இந்த ஏழு தலங்களே, சப்தவிடங்கத் தலங்கள் எனப்படுகின்றன.
இவை உளியால் செதுக்கப் படாமல் இந்திர லோகத்தில் இருந்து கொண்டு வந்தவை. இந்த சோமாஸ்கந்தர்களை, ‘தியாகராஜர்’ என்றும் வழங்குகின்றனர்.
No comments:
Post a Comment