Wednesday, 2 August 2017

அன்னாபிஷேகம் என்ன சிறப்பு ?

 
சாம வேதத்தில் ஓர் இடத்தில், ‘அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ’ என்று கூறப்பட் டுள்ளது. அதாவது, எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள், அன்ன வடிவில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அம்மை பார்வதி, எல்லா ஜீவராசிகளுக்கும் படியளக்கும் அன்ன பூரணியாக காசியில் அருட்காட்சி தருகிறாள். இறைவனின் அருவுருவமான லிங்க மூர்த்திக்கு அன்னம் சார்த்தி வழிபடும் தினமே, அன்னாபிஷேக நாள். ஐப்பசிப் பௌர்ணமி நாள்.
பல்குஞ் சரந்தொட்டு எறும்பு கடையானதொரு பல்லுயிர்க் குங் கல்லிடைப் பட்டதேரைக்கும் அன்றுற் பவித்திடும் கருப் பையுறு சீவனுக்கும் மல்குஞ் சராசரப் பொருளுக்கும் இமையாத...
சிவாலயங்களில் சாயரட்சையின்போது பரம கருணைக் கடலாம் ஐயன் சிவபெருமானின் அருவுருவமான லிங்கத் திருமேனிக்கு அன்னா பிஷேகம் செய்யப்படுகிறது.
பௌர்ணமியன்று, சந்திரன் தனது பதினாறு கலைகளுடன் முழுமையாக விளங்குகிறான். அன்று அவனது கலை, அமிர்தக் கலையாகும். ஐப்பசிப் பௌர்ணமியன்று, புது நெல்லைக் கொண்டு அன்னம் படைத்து சிவனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு போஜனம் அளிப்பது பெரும் புண்ணியத்தைத் தர வல்லதாகும். சிவன் பிம்ப ரூபி. அவரது மெய்யன்பர்கள் பிரதிபிம்ப ரூபிகள். பிம்பம் திருப்தி அடைந்தால், பிரதி பிம்பமும் திருப்தி பெறும். அனைவருக்கும் அன்னம் பாலிக்கும் அந்த அன்னபூரணியை, தன் வாம பாகத்தில் கொண்ட அந்த மாதொரு பாகனை அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால், உலகில் பஞ்சம் வராது என்பது உண்மை.
தில்லையில் அனுதினமும் காலை பதினோரு மணியளவில் ரத்ன சபாபதிக்கு அன்னாபிஷேகம் நடத்தப்பட்டு, அந்த அன்னம் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. எனவேதான், இந்தத் தலத்தை அப்பர் பெருமான், ‘அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம்!’ என்று சிறப்பித்துப் பாடினார்.
அன்னாபிஷேகத்தன்று எம்பெருமானின் மேனியில் சாற்றப்படும் ஒவ்வொரு பருக்கை அன்னமும் ஒரு சிவலிங்கம். எனவே, அன்று சிவ தரிசனம் செய்தால் கோடி சிவ தரிசனம் செய்வதற்குச் சமம். அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் உண்டால், பலன் நிச்சயம் உண்டு என்பது ஐதீகம்.
இனி, அன்னாபிஷேகம் எவ்வாறு நடைபெறுகிறது என்று பார்ப்போமா? ஐப்பசிப் பௌர்ணமியன்று காலையில் எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. பின் எம்பெருமானின் திருமேனி முழுவதும் அன்னம் சாற்றுதல் நடைபெறுகிறது. சாயரட்சை பூஜை, அன்னாபிஷேகம் கொண்ட பெருமானுக்கு நடைபெறுகிறது. பின் இரண்டாம் காலம் வரை அன்னாபிஷேகராக அருட்காட்சி தருகிறார் எம்பெருமான். இரண்டாம் கால பூஜை முடிந்த பின் அன்னம் கலைக்கப்பட்டு, பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. பொதுவாக அபிஷேகம் செய்த அன்னத்தை ஓடும் நீரில் கரைப்பது வழக்கம். குறிப்பாக லிங்கத்தின் மீது இருக்கும் அன்னத்தை விடுத்து, மற்ற இடங்களில் உள்ள அன்னத்தை எடுத்து தயிர் கலந்து பிரசாதமாகக் கொடுக்கின்றனர். மீதமான அன்னம் திருக்குளத்திலோ அல்லது கடலிலோ கரைக்கப்படுகிறது. எம்பெருமானின் அருட்பிரசாதத்தை நீர்வாழ் உயிரினங்களுக்கும் படைக்க வேண்டும் என்பதால் இவ்விதம் செய்யப்படுகிறது.
சர்வ சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றாலும் தமிழகத்தின் நெற்களஞ்சி யமான தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயங்களில் இது சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆலயங்களில் எம்பெருமானின் லிங்கத் திருமேனி பெயருக்கேற்றாற் போல பெரியதாகையால் (கங்கை கொண்ட சோழ புரத்தில் லிங்கத்தின் ஆவுடையார் 43 முழம் சுற்றளவு கொண்டது) காலையிலேயே அன்னாபிஷேகம் தொடங்குகிறது. அறுவடை யான புத்தம் புதிய அரிசி, மூட்டை மூட்டை யாக வந்து குவிகிறது. 100 மூட்டை வரை அபிஷேகத்துக்குத் தேவைப்படுகிறது. உழவர் பெருமக்கள், கோயிலுக்கு இலவசமாக நெல்லை வழங்குகின்றனர். அத்தனை அன்னமும் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. அதன் மூலம் சமைக்கப்பட்ட அன்னம் கொப்பரை கொப்பரையாக வந்து கொண் டிருக்கும். எம்பெருமானின் திருமேனி மீது சிறிது சிறிதாக அன்னம் சாற்றப் படுகிறது. எம்பெருமானின் திருமேனி முழுவதும் அன்னாபிஷேகம் ஆக, மாலை நேரம் ஆகும். பின்னர் பூஜைகள் முடிந்து அர்த்தசாமத்துக்குப் பின் அன்னம் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப் படுகிறது.
அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெறும் மற்றோர் இடம் குட முருட்டி ஆற்றின் தென்கரையில் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகிலுள்ள செந்தலை என்னும் தலம். இங்கு எழுந்தருளியுள்ள மீனாட்சி சுந்தரேஸ் வரருக்கு அன்னாபிஷேகத்தன்று முதலில் பகல் 11 மணிக்கு திருநீறு அபிஷேகமும் பிறகு மற்ற அபிஷேகங்களும் நடைபெறுகின்றன. மாலை ஐந்து மணிக்கு எம்பெருமானின் திருமேனி முழுவதும் அன்னம் மற்றும் காய்கறிகளால் அலங்காரம் செய்யப்படுகிறது. பூர்ண அலங்காரத்தில் விளங்கும் எம்பெருமானுக்கு ஷோடச உபசாரங்களும் சிறப்பு தீபாராதனையும் நடைபெறுகிறது. இரவு 9 மணி அளவில் மீனாட்சி சுந்தரேஸ்வரரின் அன்னா பிஷேகத் திருமேனியின் மீது பூரண சந்திரன், சாப விமோசனம் அளித்து தன்னை ஜடா முடியில் சூடிய சந்திரசேகரனை- தனது அமிர்தக் கலைகளால் தழுவுகிறான். சந்திரன் வழிபடும், இந்த மீனாட்சி சுந்தரேஸ்வரரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அர்த்தசாம பூஜையின்போது வழிபட்டு நன்மை அடைகின்றனர். பொதுவாக அன்னத்தை, எம்பெருமானின் மேனி முழுவதும் சாற்றுவது எளிமையான அலங்காரம். ஆனால், பல ஆலயங்களில் அன்னத் தில் எம்பெருமானின் ஒரு முகம் அல்லது ஐந்து முகங்களை அலங்காரம் செய்கின்றனர். சில ஆலயங்களில் அன்னத்துடன் காய்கறிகள் மற்றும் பழங்கள், பட்சணங்கள் ஆகியவற்றையும் கலந்து அலங்காரம் செய்கின்றனர். இன்னும் சில ஆலயங்களில் கருவறைப் படியிலிருந்து ஆவுடையார் வரைக்கும் படிகள் அமைத்து, அவற்றில் காய்கறிகளையும், பழங்களையும், பட்சணங்களையும் கொலுவாக அமைத்து அலங்காரம் செய்கின்றனர்.
சென்னை அசோக் நகரில் அமைந்துள்ள கருமாரி திருபுரசுந்தரி ஆலயத்தில் திரியம்பகேஸ்வரருக்கு மிகவும் நூதனமான முறையில் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. ஒரு வருடம் எம்பெருமானின் மூன்று கண்களைக் குறிக்கும் வகையில் மூன்று லிங்கங்களாக அலங்காரம் செய்திருந்தனர். ஒரு வருடம் பஞ்ச பூதத் தலங்களைக் குறிக்கும் வகையில் ஐந்து லிங்கங்களை அமைத்து அலங்காரம் செய்தனர். ஒரு வருடம் 12 ஜோதிர்லிங்கங்களைக் குறிக்கும் வகையில் 12 லிங்கங்களாக அலங்காரம் செய்திருந்தனர். சென்னை வடபழனி வேங்கீஸ்வரர் ஆலயத்தில் கயிலாய மலையை அன்னாபிஷேகத்தன்று தரிசனமா கக் காட்டினர். சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள மகாலிங்கேஸ்வரர் யோகியாக அலங்கரிக்கப் பட்டிருந் தார். சென்னை மேற்கு மாம்பலம் முருகாஸ்ரமத்தில் பாலமுருகனுக்கும் அன்னாபிஷேகம் நடைபெறுகி றது. காஞ்சியில் காமாட்சியம்மன் ஆலயத்தில், அன்ன பூர்ணே சதாபூர்ணே சங்கர பிராண வல்லபே க்ஞான வைராக்ய சித்யர்த்தம் பிக்ஷ£ம் தேஹி ச பார்வதி
என்று நாம் வழிபடும் அன்னபூரணிக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
வாடாமல் உயிரெனும் பயிர் தழைத்து ஓங்கிமிக அருள் மழை பொழிந்தும் இன்ப வாரிதியிலே நின்ன தன் பெனுஞ் சிறகால் வருந்தாமலே யணைத்து கோடாமல் வளர் சிற்றெறும்பு முதல் குஞ்சரக் கூட்ட முதலான சீவ கோடிகள் தமக்கு புசிக்கும் புசிப்பினை குறையாமலே கொடுக்கும்
அந்த சர்வேஸ்வரனை வருடத்தில் ஒரு நாள் மட்டுமே அன்னாபிஷேக கோலத்தில் - அற்புதத் திருக்கோலத்தில் தரிசித்து நன்மையடைவோமாக!

No comments:

Post a Comment