சக்தி வழிபாட்டின் மேன்மையை நவராத்திரி என்ற பெயரில் ஞானநூல்கள் விவரிக்கின்றன. கடும் கோடைக்காலமும், மழைக்காலமும் (சித்திரை, வைகாசி - ஐப்பசி, கார்த்திகை) எமனின் கோரைப்பற்கள் என்கிறது ஸ்ரீதேவி பாகவதம். இந்தக் காலங்களில் தோன்றும் கொடுமையான பற்பல நோய்களில் இருந்து நம்மைக் காப்பவள் அம்பிகை. எனவேதான் இந்தக் காலகட்டங்களில், அம்பிகையை வழிபட்டு அவளின் திருவருளை அடைய வேண்டும் என்ற நோக்கில், நவராத்திரி வழிபாட்டு மகிமைகளையும், பலாபலன்களையும் வேத வியாசரும் சிறப்பாக விவரித்துள்ளார்.
நவராத்திரி பூஜை செய்வோர் அதற்கான ஏற்பாடுகளை, நவராத்திரி தொடங்குவதற்கு முதல் (அமாவாசை) நாளிலேயே, செய்து கொள்ள வேண்டும்.
சமதளமான ஓர் இடத்தை பூஜைக்காக தேர்வு செய்து, பசுஞ்சாணத்தால் மெழுகி, நான்கு மூலைகளிலும் தூண்கள் நட்டு, சிறு மண்டபம் அமைக்க வேண்டும். இதனுள் சதுர மேடை அமைத்து கோலமிட்டு, சுற்றிலும் செம்மண் இடவேண்டும். மேடையின் மீது ஆசனம் (பலகை) வைத்து, அதன் மேல் வெண்பட்டை விரித்து வைக்க வேண்டும். வெண்பட்டின் மேல்... சங்கு- சக்கரம், கதை மற்றும் தாமரையுடன் 4 திருக்கரங்களுடனோ அல்லது 18 கரங்கள் கொண்டவளா கவோ அம்பிகையின் திருவடிவை ஸ்தாபிக்க வேண்டும்.
பிறகு, தூய ஆடை- ஆபரணங்கள் மற்றும் மலர்களால் அம்பிகையை அலங்கரிக்க வேண்டும். அருகில்... நெல் அல்லது அட்சதை (முனை முறியாத அரிசியை) பரப்பி அதன் மேல் கலசம் வைக்க வேண்டும்.
கலசம் தயாரிக்கும் முறை தூய்மையான பித்தளைக் குடத்தின் மேல் நூல் சுற்றி, சந்தன- குங்கும திலகம் மற்றும் அட்சதையால் அலங்கரிக்க வேண்டும். பிறகு
கலசத்தின் உள்ளேயும் வெளிப்புறமும் சாம்பி ராணி தூபம் காட்டி, நெல் அல்லது அட்சதை மீது வைக்க வேண்டும்.
இதன் பிறகு, கலசத்தில் தூய நீரை நிரப்பி (கங்கா தீர்த்தம் இருந்தால், கலசத்தில் கலப்பது விசேஷம்), அதில் சந்தனம், பூ, பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ ஆகிய வாசனைப் பொருட்களைச் சேர்க்க வேண்டும் (தங்கம், ரத்தினங்கள் இருந்தால் கலச தீர்த்தத்தில் போடலாம்). பின்னர் கலசத்தின் மேல் மாவிலைக் கொத்து வைத்து, அதற்கும் மேல் தேங்காயும் கூர்ச்சமும் வைத்து, கலசத்துக்கு சிவப்பு வஸ்திரம் அணிவிக்க வேண்டும்.
வேத மந்திரங்களால் மந்திரித்து மங்கல வாத்தியங்கள் முழங்க கலச பூஜை செய்ய வேண்டும். தொடர்ந்து, ''அம்மா! என் சக்திக்குத் தகுந்தபடி நவராத்திரி விரதம் கடைப்பிடிக்கிறேன். எந்தவொரு இடையூறும் வராமல் அருள வேண்டும்!'' என்று அம்பிகையிடம் பிரார்த்தனை செய்து, பூஜையைத் தொடர வேண்டும்.
நவராத்திரி பூஜையின், 2-வது வழிமுறையான இதை, சுமேத முனிவர் கூறியதாக வியாசர் குறிப்பிடுகிறார்.
நவராத்திரி முதல் நாளன்று அதிகாலையில் எழுந்து நீராடி, வெண்மையும் தூய்மையும் கொண்ட ஆடை அணிந்து, நித்திய கர்மானுஷ்டானங்களை (அவரவர் தினசரி செய்யவேண்டிய சந்தியாவந்தனம், ஜபம் முதலானவற்றை) முடிக்க வேண்டும்.
பசுஞ்சாணத்தால் மெழுகப்பட்ட தூய்மையான இடத்தில், நல்லதோர் ஆசனத்தில் அமர்ந்து... ஆசமனம்- பிராணாயாமம் செய்த பிறகு, அன்றைய நாள்- நட்சத்திரம் முதலானவற்றை சொல்லி சங்கல்பம் செய்ய வேண்டும்.பின்னர், பூஜைக்குரிய பொருட்கள் மீது மந்திர தீர்த்தம் தெளித்து தூய்மை செய்ய வேண்டும்.
இதன் பிறகு யந்திர பூஜை!
யந்திர விவரங்கள் நல்ல தாமிரத் தகட்டில் வெண்மையான சந்தனத்தால் முதலில் அறுகோணம் வரைய வேண்டும். அதற்கும் வெளியே அஷ்டகோணம் வரைந்து, அதில் நவாட்சர மந்திரத்தின் அட்சரங்களை எழுதி யந்திரப் பிரதிஷ்டை செய்ய வேண்டும்.
யந்திரத்தை பூஜிக்கும் முறை அழகான சிறு மண்டபத்தில் வேத மந்திரங்கள் சொல்லி முறைப்படி ஒரு கலசத்தை பிரதிஷ்டை செய்து, அதன் மீது யந்திரத்தை வைக்க வேண்டும். கலசத்தைச் சுற்றி பார்லி தானியத்தைப் பரப்ப வேண்டும். பிறகு மலர்களால் அலங்கரித்து, தூப-தீபம் முதலான உபசாரங்கள் செய்து, காலை- மதியம்- இரவு என மூன்று காலங்களிலும் பூஜிக்க வேண்டும்.
பூஜை முடிந்ததும் நவாட்சரி மந்திரத்தை தியானித்து ஜபம் செய்ய வேண்டும். ஜபத்தில் 10-ல் ஒரு பங்கு ஹோமம், ஒரு ஹோமத்துக்குப் பத்து தர்ப்பணம் செய்ய வேண்டும். பத்து ஹோமங்கள் முடிந்த பின்னர், வேத வல்லுனர் ஒருவருக்கு உணவிட வேண்டும். பிறகு அம்பிகையின் மூன்று சரிதங்களையாவது பாராயணம் செய்து வழிபாட்டை முடிக்க வேண்டும். இந்த பூஜை முறையில்- அர்ச்சனைக்கு உரியவையாக; வில்வம், செவ்வலரி, சர்க்கரை கலந்த எள் ஆகியவற்றை விசேஷமாகச் சொல்வர்.
|
Saturday, 5 August 2017
நலம் தரும் நவராத்திரி வழிபாடு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment