Saturday, 5 August 2017

சிவ[நவ] தாண்டவம்!

வராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகை தாண்டவம் ஆடினாராம் சிவபெருமான். இந்த தாண்டவங்களில் இருந்து நவ துர்கைகள் தோன்றியதாக ஞான நூல்கள் விவரிக்கின்றன.
ஆனந்த தாண்டவம் வலக் காலை ஊன்றி, இடக் காலைத் தூக்கி சிவனார் ஆடிய ரிஷிமண்டல கோலத்தில் தோன்றியவள் ஸ்ரீசைலபுத்ரி.
ஸந்தியா தாண்டவம் பகலும் இரவும் சந்திக்கும் வேளையில்... இடக் கால் விரலால் சிவனார் இடும் கோலம் ஸப்த ஒலிக்கோலம். இதிலிருந்து தோன்றியவள் கூஷ்மாண்டா.
திரிபுர தாண்டவம் ஈசனின் இடக் கால் பெருவிரலால் வரையப்பட்டது, அஷ்டவகைக் கோலம். இதில் தோன்றியவள் பிரம்மசாரிணி.
ஊர்த்துவ தாண்டவம் திருவாலங்காடு தலத்தில் தன்னுடன் ஆடிய காளியை தோற்கடிக்க சிவனார் ஆடிய தாண்டவம். ஒரு காலை தரையில் ஊன்றி, மறு காலை தோளுக்கு இணையாக உயர்த்தி சிவனார் ஆடிய இந்த பிரணவக் கோலத்தில் இருந்து தோன்றியவள் சந்த்ரகாந்தாதேவி.
புஜங்க தாண்டவம் பாற்கடலின் ஆலகால விஷத்தை சிவனார் அருந்த, அவரின் கழுத்தைப் பிடித்து, விஷம்
உள்ளே இறங்காமல் தடுத்தாள் பார்வதி. இதனால் ஈசனுக்கு நீலகண்டன் என்றும் பெயர் உண்டு. அப்போது ஏற்பட்ட புஜங்க தாண்டவத்தில் தோன்றியவள் ஸ்கந்தமாதா.
முனி தாண்டவம் பதஞ்சலி மிருதங்கம் வாசிக்க, சிவனார் ஆடிய ஆட்டம். அப்போது நெற்றிக் கண்ணில் தோன்றியவள் காத்யாயினி.
பூத தாண்டவம் கஜாசுரனைக் கொன்று யானைத் தோல் போர்த்தி ஆடிய ஆட்டம். இந்தக் கோலத்தில் தோன்றியவள் காலராத்திரி.
சுத்த தாண்டவம் தண்டகாரண்ய முனிவர்களின் அல்லல்கள் நீங்க, அசுரர்களை அழித்து ஆடிய ஆட்டம். இதில் தோன்றியவள் மகாகௌரி.
சிருங்கார தாண்டவம் நவ ரசங்களையும் வெளிப்படுத்தும் சிவ நடனம்; இந்த நவரசக் கோலத்தில் தோன்றியவள் சித்திராத்திரி.

No comments:

Post a Comment