Wednesday, 2 August 2017

எத்தனை எத்தனை பிரதோஷங்கள் !

 
பி ரதோஷ வழிபாடு இன்றைக்கு மிகவும் பிரசித்தி பெற்றதாக இருக்கிறது. சிவாலயங்களில் எண்ணற்ற பக்தர்கள் அந்த வேளையில் கூடி, நந்திதேவரையும், ஸ்ரீபரமேஸ்வரரையும் தரிசித்து நலம் பெறுகின்றனர். பிரதோஷ வழிபாடுகளில் சிலவற்றைப் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
நித்தியப் பிரதோஷம்: தினமும் சந்தியா காலத் தில் மாலை 4:30 முதல் 7:30 மணிக்குள்- அதாவது சூரிய அஸ்தமனத்துக்கு முன் மூன்றேமுக்கால் நாழிகைகள் (90 நிமி டங்கள்); சூரிய அஸ்தமனத்துக் குப் பின் மூன்றே முக்கால் நாழி கைகள் (90 நிமிடங் கள்) என்கிற இந் தக் காலத்தில் சிவாலயம் சென்று வணங்குவது நித்தியப் பிரதோஷம்.
திவ்வியப் பிரதோஷம்: பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும் சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது, திவ்வியப் பிரதோஷம் ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக- ஆராதனை செய்தால் பூர்வ ஜென்ம வினை முழுவ தும் நீங்கும்.
தீபப் பிரதோஷம்: சனிக் கிழமையும் திரயோதசி திதியும் இணைந்து வருகிற தினம் மகா பிரதோஷம். அன்று முறை யாக விரதம் இருந்து சிவாலயம் முழுவ தும் விளக்கேற்றி வழிபட வேண்டும். நம்மால் முடிந்த அளவுக்குப் பித்தளை யால் ஆன காமாட்சி விளக்குகளை வாங்கி ஏழைகளுக்கு தானம் செய்தால் வாடகை வீட்டில் உள்ளவர்களுக்கு சொந்த வீடு அமையும். தீபங்களால் அலங்கரிக்கப்படுவதால் இது தீபப் பிரதோஷ வழிபாடு.
சப்தரிஷி பிரதோஷம்: பிரதோஷ காலத்தில் முறையாக பூஜையை முடித்த பின், வானம் முழுமை யாகத் தெரியும் இடத்தில் நின்று கவனித்தால், சப்த ரிஷி மண்டலம் என்ற நட்சத்திரக் கூட்டம் ‘ஹ்’ வடி வில் தெரியும். அந்த ரிஷிகளை வணங்கினால், அவர் களது ஆசீர்வாதம் கிடைக்கும். இதுவே சப்தரிஷி வழிபாடு.
ஏகாட்சர பிரதோஷம்: வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை ‘ஏகாட்சர பிரதோஷம்’ என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின், விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.
அர்த்தநாரி பிரதோஷம்: வருடத்தில் இரண்டு முறை மகா பிரதோஷம் வந் தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.
திரிகரண பிரதோஷம்: வருடத்துக்கு மூன்று முறை மகா பிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
பிரம்மப் பிரதோஷம்: ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். பிரம்மாவுக்கு திருவண்ணாமலையில் ஏற்பட்ட சாபம் நீங்குவதற்காக அவர் ஒரு வருடத்தில் நான்கு முறை சனிக்கிழமையும், திரயோதசியும் வரும்போது முறையாக பிரதோஷ வழிபாடு செய்து சாப விமோசனம் பெற்றார். நாமும் இந்த பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.
அட்சரப் பிரதோஷம்: வருடத் துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள், ‘நான்’ என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.
கந்தப் பிரதோஷம்: சனிக் கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு.
சட்ஜ பிரபா பிரதோஷம்: ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, ‘சட்ஜ பிரபா பிரதோஷம். தேவகியும் வசுதேவரும் கம்சனால் சிறையிடப் பட்டனர். ஏழு குழந்தைகளை கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகாபிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணன் பிறந்தான். நாம் இந்த விரதத்தைக் கடைப் பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.
அஷ்டதிக் பிரதோஷம் : ஒரு வருடத்தில் எட்டு மகாபிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்டதிக்குப் பாலகர்களும் மகிழ்ந்து- நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.
நவக்கிரகப் பிரதோஷம்: ஒரு வருடத்தில் ஒன்பது மகாபிரதோஷம் வந்தால், அது நவக்கிரக பிரதோஷம்.
இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக்கிரகங்களின் அருளும் கிடைக்கும்.
துத்தப் பிரதோஷம்: அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்த பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் குருடரும் கண் பார்வை பெறுவார். முடவன் நடப்பான். குஷ்டரோகம் நீங்கும். கண் சம்பந்தப்பட்ட வியாதியும் குணமாகும்.
ஒவ்வொரு பிரதோஷ தினத்தன்றும் விரதம் இருந்து, சிவாலயம் சென்று வழிபட்டால் எல்லா நன்மைகளையும் அடையலாம். 

No comments:

Post a Comment