பாரதத்தில் அவதரித்த ரிஷிகளும் மகான்களும் நாள் தவறாமல், வேளை தவறாமல் சிவ பூஜை செய்து பெரும் பேறு பெற்றனர்.
இத்தகையவர்கள் மட்டுமின்றி, ஐந்தறிவுள்ள பல ஜீவராசிகளும் சிவபெருமானைத் துதித்து வணங்கி வந்துள்ளன என்பதைப் புராணங்கள் மூலம் அறிய முடிகிறது. மயில் பூஜித்துப் பேறு பெற்ற ஸ்தலங்கள்- மயிலாப்பூர்; மயிலாடு துறை. யானை பூஜித்துப் பேறு பெற்ற ஸ்தலம்- திருவானைக்கோவில். எறும்பு பூஜித்துப் பேறு பெற்ற ஸ்தலம்- (திருச்சிக்கு அருகே) திருஎறும்பூர் எனப்படும் திருவெறும்பூர்- இப்படி ஏராளமாகச் சொல்லலாம். அதுபோல் ராமாயணக் கதாபாத் திரங்களான வாலி, சுக்ரீவன், ஜடாயு போன் றோரும் சிவ பக்தியில் திளைத்து ஆங்காங்கே பூஜித்து வழிபட்டு வந்துள்ளனர். வாலி வழிபட்ட லிங்கங்கள், ‘வாலீஸ்வரர்’ என்ற திருநாமத்துடனும் (இந்த இதழ் ‘ஆலயம் தேடுவோம்’ - கோலியனூர் வாலீஸ்வரர் பற்றியதாகும்), சுக்ரீவன் பூஜித்து வழிபட்ட லிங் கங்கள், ‘சுக்ரீஸ்வரர்’ என்ற திருநாமத்துடனும் திகழ்கின்றன.
இங்குள்ள ஈஸ்வரன் பெயர்- ஸ்ரீசுக்ரீஸ்வரர். குரக்குத்தளி நாயனார், மிளகீஸ்வரர் என்றும் இவர் அழைக்கப்படுகிறார். அம்பாள் பெயர்- ஆவுடைநாயகி என்கிற கோவர்த்தனாம்பிகை.
ஸ்ரீசுக்ரீஸ்வரர் ஆலயத் தில் பிரதோஷ நந்தியாக இரட்டை நந்திகள் கம்பீரமாக வீற்றிருக்கின்றன. சாதாரணமாக, பிற கோயில்களில் ஒரு நந்திதான் பிரதோஷ நந்தியாக தனி மண்டபத்தில் இருப்பது வழக்கம். இங்கு ஏன் இரட்டை நந்தி? இதற்கு ஒரு கதை சொல்கிறார்கள்.
துவக்கத்தில், இந்த ஆலயத்தில் ஒரு நந்திதான் பிரதோஷ நந்தியாக இருந்து வந்ததாம். அப்போது இரவு நேரங்களில் விக்கிரமாக உள்ள இந்த நந்தி, மாடு போன்ற உருவம் எடுத்து அக்கம் பக்கத்து வயல்களில் மேயச் சென்றுவிடுமாம். மேய்ந்து முடித்த பின், மிகச் சாதுவாகக் கோயிலுக்குத் திரும்பி, நந்திதேவர் விக்கிரகத்துக்குள் ஐக்கி யமாகி விடுமாம். தினமும் இரவு நேரத்தில் பயிர் பச்சைகளை மேய்ந்துவிட்டுக் கோயிலுக்குத் திரும்பும் மாட்டைச் சம்பந்தப்பட்ட தோட்டக்காரர் கவனிக்கவில்லை. மாடு மேய வரும் நேரத்தில் அவருக் குத் தூக்கம் கண்களைச் சுழற்றும். கண் விழிக்கும்போது பயிர்கள் இருக்காது. வெகுவாகக் குழம்பினார். ‘எப்படி யாவது ஒரு நாள் விழித்திருந்து இதைக் கண்காணிக்க வேண்டும்’ என்று தீர்மானித்து வெகு ஜாக்கிரதையாக இருந்தார்.
ஒரு நாள் இரவில் மாடு உருவில் வந்த நந்திதேவர் மேய்வதை, கவனித்து விட்டார் தோட்டக்காரர். சடா ரெனப் பாய்ந்து சென்று மாட்டைப் பிடித்தார். மாடும் கொஞ்சம் திமிறியது. அந்த நேரத்தில் தன் இடுப்பில் வைத்திருந்த சிறு கத்தியை எடுத்து மாட்டின் இரண்டு காதுகளையும் அறுத்து விட்டார். ரத்தம் சொட்டச் சொட்டக் கோயிலை நோக்கி ஓடிய மாடு, நந்தி தேவர் விக்கிர கத்துக்குள் ஐக்கியமானது. பொழுது புலர்ந்தது. ஆனாலும், நந்திதேவரின் காதுகளில் இருந்து வடியும் ரத்தம் நிற்கவில்லை. கோயிலுக்கு வந்த பக்தர்கள், நந்திதேவருக்கு நேர்ந்த சோகத்தைப் பார்த்துப் பதறினர். சம்பந்தப்பட்ட தோட்டக்காரருக்கும் விஷ யம் போனது. அலறியபடி கோயிலுக்கு ஓடி வந்தார். நந்திதேவர் விக்கிரகத்தின் முன் விழுந்து கதறினார். கண்ணீர் விட்டார். மன்னிப்புக் கேட்டுப் புலம்பினார்.
‘‘தெரியாமல் செய்த இந்தச் செயலுக்கு, ஒரு பரிகாரம் செய் தால் சரியாகிவிடும்’’ என்று அவருக்குப் பெரியோர்களால் ஆலோசனை சொல்லப்பட்டது.
‘‘தெய்வ குற்றத்தில் இருந்து தப்பிக்க... எது சொன்னாலும் செய்யத் தயாராக இருக்கிறேன். சொல்லுங்கள்!’’ என்றார் தோட்டக்காரர்.
‘‘வேறு ஒரு புதிய நந்தி விக்கிரகம் வடித்து வைத்து விடு!’’ என்று ஊர்ப் பெரியவர்கள் சொன்னதும், சந்தோஷத்துடன் சம்மதித்தார்.
புது நந்தி விக்கிரகம் தயாரானது. காதறுந்த நந்தி இருந்த இடத்தில் புதியதை பிர திஷ்டை செய்துவிட்டுப் பழையதை அப்புறப்படுத்தத் தீர்மானித்தார்கள். பலரும் முயன்றும் காதறுந்த நந்தியை அங்கிருந்து அகற்ற முடியவில்லை. இரவு வேளை நெருங்கி விட்டதால், அனை வரும் அப்படியே கலைந்தனர்.
பழைய நந்தியை அப்புறப்படுத்தும் பணியைத் துவங்க மறு நாள் காலை கோயிலுக்கு வந்த பக்தர்கள் அதிர்ந் தனர். புதிய நந்தியைப் பிரதிஷ்டை செய்த இடத்தில், காதறுந்த பழைய நந்தி காணப்பட்டது. புதிய நந்தி பின்னுக்குப் போய்விட்டது. ‘இதென்னடா புதுக் குழப்பம்!’ என்று அனைவரும் திகைத்த வேளையில் ஓர் அசரீரி எழுந்தது. பழைய நந்தியின் வாக்காக அது வெளிப்பட்டது: ‘நான் முன்பு இருந்த இடத்திலேயேதான் இருப்பேன். என்னை வேறு எங்கும் மாற்ற முயற்சிக்க வேண்டாம். புது நந்தியும் எனக்குப் பின்னால் இருக்கட்டும். இருவருக்குமே இனி வழிபாடுகள் தொடரட்டும்.’
இன்றைக்கும், ஸ்ரீசுக்ரீஸ்வரைப் பார்த்தபடி முன்னால் இருக்கும் நந்திதேவர், காதுகள் இல்லாமலேயே காட்சியளிக்கிறார். பிற்பாடு பிரதிஷ்டை செய்யப்பட்ட நந்திதேவர், இவருக்குப் பின்புறமாகக் காட்சி தருகிறார். நந்தி மண்டபத்தில் மராமத்து வேலைகள் நடந்து வருவதால், இந்த நந்திதேவர் விக்கிரகங்களைத் தற்போது கீழே வைத்திருக்கிறார்கள். பிரதோஷ வேளைகளில் இந்த இரண்டு நந்திதேவர்களுக்குமே அபி ஷேக- ஆராதனைகள் நடந்து வருகின்றன. இரட்டை நந்திதேவர்கள் இருப்பதால் இங்கு பிரதோஷ வேளையில் திரளான பக்தர்கள் கூடி வழிபடுவது சிறப்பு.
‘‘நந்தியின் (மேய வந்த மாட் டின்) காதுகளை அறுத்த அந்தத் தோட்டக்காரரின் வம்சாவளியி னர் இன்னமும் இதே ஊரில் வசித்து வருகிறார்கள். இதில் ஒரு சோகம் என்னவென்றால், அவரது குடும்பத்தில் பிறக்கும் முதல் குழந்தை ஏதோ ஒரு விதத்தில் ஊனமாகவே இருந்து வருகிறது. அந்த ஊனம் மிகச் சிறிய அளவில்கூட இருக்கிறது. எத்தனையோ நூற்றாண்டுக ளுக்கு முன் வயல் காட்டில் மேய்ந்த மாட்டின் (நந்திதேவர்) காதுகளைக் கத்தியால் அறுத்த துயர நிகழ்வால் இது போன்ற ஒரு சோகம் அந்தக் குடும்பத்தில் தொடர்வதாகச் சொல்கிறார்கள். ஏதோ ஒரு சத்தியத்துக்குக் கட்டுப்பட்டது மாதிரி இது நடந்து வருகிறது’’ என்றார் இதே ஊரில் வசித்து வரும் ஒரு பெரியவர்.
ஸ்ரீசுக்ரீஸ்வரர் ஆலயத்தின் பெரும்பாலான கட்டுமானம் கருங்கல்லால் ஆனது. தஞ்சை ஸ்ரீபிரகதீஸ்வரர் ஆலய கோபுர நிழல், தரையில் விழாது என்பார்கள். அதேபோல் இந்த ஆலய ஸ்ரீசுக்ரீஸ்வரரின் விமான கோபுர நிழலும் தரையில் விழாதாம். அந்த வகையில் அமைத்திருக்கிறார்கள். யுகங்களைக் கடந்த இந்த ஸ்ரீசுக்ரீஸ்வரருக்கு, தற்போதுள்ள ஆலயக் கட்டுமானம் சுமார் 700 ஆண்டுகளுக்கு முந்தையதாம். பழைமையின் அமைப்பு மாறாமலும் புதிய பூச்சுகள் எதையும் பூசிக் கொள்ளாமலும் காட்சி தருகிற இந்தக் கோயிலை, மத்திய அரசின் தொல்பொருள் துறை, தனது நிர்வாகத்தின் கீழ் வைத்துள்ளது. ஆலயப் பிராகாரத்திலும் சுற்றுப் புறத்திலும் முட்செடிகள் அடர்ந்து காணப்படுகின்றன.
ஆலயம் தொடர்பான ஏராளமான கல்வெட்டுகள் கண்டறியப்பட் டுள்ளன. நிலம் மற்றும் மான்யம் தந்த மன்னர்கள், சிற்றரசர்கள் குறித்த விவரங்களை இதன் மூலம் அறிய முடிகிறது. அந்த நாளில் மைசூர் அரண்மனைக் குடும்பத்துக்கும் இந்த ஆலயத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்ததாம். மைசூர் சாம்ராஜ் உடையார் இந்தக் கோயிலுக்கு வருகை தந்திருக்கிறாராம். சுக்ரீஸ்வரர் ஆலயத்துக்குக் கும்பா பிஷேகம் நடந்து சுமார் 85 வருடங்களுக்கு மேல் இருக்குமாம். தற்போது இரு கால பூஜை நடந்து வருகிறது. விசேஷ காலங்களில் மூன்று கால பூஜை நடைபெறுவது வழக்கம்.
ஆலயத்தின் பரம்பரை அர்ச்சகர்களாக இருந்து வருபவர்கள் எஸ்.நல்மணி குருக்கள், எஸ். நாகராஜ குருக்கள், டி.எம். சிவகுமார் குருக்கள், ஆர். கணேச மூர்த்தி குருக்கள் ஆகியோர்.
இனி, ஆலய தரிசனம் செய்வோம்.
தெற்கு வாசல் வழியாக உள்ளே நுழைகிறோம்.
பலிபீடம். கொடிமரம் இல்லை. ஒரு சந்நிதியில் அம்மன் விக்கிரகம் ஒன்று காணப்படுகிறது. பத்ரகாளி அம்மன் என்கிறார்கள். இந்தப் பகுதியை ஆண்ட முகுந்தபுரி ராஜாவின் குலதெய்வம் பத்ரகாளி. எனவே, ஆலய முகப்பில் பத்ரகாளியை வைத்து வழிபட்டு வந்திருக்கிறார்களாம். இந்தச் செய்தியை வலுப்படுத்தும் விதமாக, பத்ரகாளியம்மனின் உற்சவர் விக்கிரகம் கூட இன்றும் பாதுகாப்பாக இருக்கிறது. இதை அடுத்து, இரட்டை நந்திகள். தாண்டிச் செல்கிறோம்.
மாடக்கோயில் அமைப்பு. படிகள் ஏறித்தான் ஸ்ரீசுக் ரீஸ்வரர் மற்றும் ஆவுடைநாயகியை தரிசிக்க முடியும். முதலில், பிராகார வலம் வருவோம். கோஷ்ட மூர்த்தி கள் தரிசனம். பிராகாரச் சுவரின் அடிப்பாகத்தில் சிவலிங்கத்தை பூஜை செய்யும் சுக்ரீவன் வடிவம் புடைப்புச் சிற்பமாகக் காணப்படுகிறது. நடன விநாயகர். தட்சிணாமூர்த்தி, நான்கு கரங்களுடன் இடக் கால் மடித்து அமர்ந்த நிலையில் அற்புதமாகக் காட்சி தருகிறார். முயலகன், முனிவர்கள் பூஜை என தட்சிணாமூர்த்திக்கு உண்டான சகல அம்சங்களும் ஒருங்கே பெற்ற விக்கிரகம். நடுச் சுற்றில் மகாவிஷ்ணு கோஷ்டம் வெறுமையாகக் காட்சி தருகிறது. கடை சிச் சுற்று கோஷ்டத்தில் இருக்க வேண்டிய பிரம்மா, துர்க்கை போன்றவர்களும் இல்லை. ‘‘கோஷ்ட மூர்த்திக ளைக் களவாடிச் சென்று விட்டார்கள்’’ என்றார் உள்ளூர்க்காரர் ஒருவர்.
பிராகார வலத்தின்போது, நான்கு கைகள் மற்றும் மயில் வாகனத்துடன் கூடிய முருகன் சந்நிதி, இடக்கால் மடக்கி அமர்ந்திருக்கும் சண்டிகேஸ்வரர் சந்நிதி, நான்கு கைகள் மற்றும் நாய் வாகனத்துடன் கூடிய பைரவமூர்த்தி சந்நிதி ஆகியவை காணப்படுகின்றன. வில்வ மரம் உண்டு. தவிர பிராகாரத்தில் லிங்கங்களுடன் கூடிய ஐந்து சந்நிதிகள் தனித் தனியாக உள்ளன.
யுகம் யுகமாக இருந்து வரும் இந்த ஈஸ்வரன் கோயில், ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு சிறப்பைப் பெற்றதாக விளங்கி வருகிறது. துவாபர யுகத்தில் பஞ்ச லிங்க க்ஷேத்திரமாகப் பெரும் புகழுடன் விளங்கியது இந்த ஆலயம். அக்னி லிங்கம், மிருத்யு லிங்கம், வாயு லிங்கம், ஆகாச லிங்கம், ஜல லிங்கம் போன்றவை பஞ்சலிங்கங்கள்.
மூலவரை தரிசிக்க படிகள் ஏறி, உள்ளே செல்கிறோம். முதலில், நடராஜர் மண்டபம். இந்தக் கோயிலுக்குரிய நடராஜர் மற்றும் சிவகாமியின் ஐம்பொன் விக்கிரகங்கள் மிகுந்த சிறப்பு வாய்ந்தவை. ‘‘சுமார் இருபத்தஞ்சு வருடங்களுக்கு முன் னால் ஐந்து திருடர்கள் இந்தக் கோயிலுக்குள் புகுந்து விட்டனர். மதிப்பு மிக்க நடராஜர் மற்றும் சிவகாமி விக்கிரகங்களை திருடிச் செல் வது அவர்கள் இலக்காக இருந்திருக்கிறது. சிவகாமி விக்கிரகத்தை எப்படியோ தூக்கி விட்டனர். ஆனால், நடராஜர் விக்கிரகத்தை தூக்கிக் கொண்டு போக முடியவில்லை. எனவே, நடராஜரை மட்டும் அப்படியே பிராகாரப் பாதையில் போட்டுவிட்டு, சிவகாமியைத் தூக்கிக் கொண்டு போய் விட்டார்கள் (இந்த சிவகாமி விக்கிரகமும் பிற்பாடு கிடைத்து விட்டது). அதன்பின் பாதுகாப்பு கருதி அரசாங்கமே, அங்கிருந்த விக்கிரகங்களை திருப்பூர் ஈஸ்வரன் கோயிலில் கொண்டுபோய் வைத்து விட்டது.
இப்போதும் இந்த ஆலயத்தின் உற்சவர் விக்கிரகங் கள் அனைத்தும் திருப்பூர் ஈஸ்வரன் கோயிலில்தான் இருக்கின்றன. நடராஜர், சோமாஸ்கந்தர், பத்ரகாளி யம்மன், பிரதோஷ நாயகர், விநாயகர் போன்ற மேலும் சில விக்கிரகங்களும் இருக்கின்றன. ஏதாவது விசேஷம் என்றால், உற்சவர் விக்கிரகங்களை அனு மதி பெற்று திருப்பூரில் இருந்து கொண்டு வந்து விசே ஷங்களை நடத்தி வருகிறோம்’’ என்றார் ஆலயப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் அன்பர் ஒருவர்.
அப்படி பஞ்சலோகத்தாலான நடராஜர் விக்கிரகத் தைக் கொண்டு வந்து நடத்தப்படும் திருவாதி ரைத் திருநாள் உற்சவம் (ஆருத்ரா தரிசனம்), இங்கு விசேஷமான ஒன்று. அன்றைய தினம் சுமார் 5,000 பேர்வரை கூடுவார்களாம்.
இங்கிருந்து நேராகக் காட்சி தருகிறார் ஸ்ரீசுக்ரீஸ்வரர். உள்ளே நுழைகிறோம். கரு வறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் என்று அனைத்தும் விசாலமாக இருக்கிறது. விநாயகர், சுக்ரீவன் போன்றோரின் சிலா வடிவங்களை வணங்கி ஸ்ரீசுக்ரீஸ்வரரை தரிசனம் செய்கிறோம். மூலஸ்தானத்தில் கிழக்கு நோக்கிய ஈஸ்வரர். பெரிய ஆவுடையார். பெரிய பாணம். தனி விமானம். லிங்கத்துக்கு அபிஷேகம் செய்யும்போது எத்தனை லிட்டர் நல்லெண்ணெயை ஊற்றினாலும் அத்தனையையும் லிங்க பாணம் அப் படியே உறிஞ்சி விடுமாம். எண்ணெய் துளிக்கூட கீழே சிந்தாது. அபிஷேகம் செய்த சில நிமிடங்கள் கழித்து சுக்ரீஸ்வரரைப் பார்த்தால் எண்ணெய் அபி ஷேகம் ஆகி ஏதோ மாதக் கணக்கில் ஆனவர் மாதிரி வெறுமையாகக் காட்சி தருவாராம்!
அத்தனை சிறப்புள்ள அக்னி சொரூப ஸ்ரீசுக்ரீஸ்வரரை அருள் வேண்டி உளமார வணங்கி அம்மன் சந்நிதிக்குச் செல்கி றோம். இறைவனுக்கு வலப் பக்கம் சந்நிதி கொண்டு விளங்குகிறார் அம்பாள். பெரிய திருவாச்சியோடு கூடிய சிலா விக்கிரகம் ஆவுடைநாயகி. அபய- வரதத்துடன் கூடிய நான்கு கைகளோடு அருள் பாலிக்கும் அற்புத வடிவம். புன்னகை ததும்பும் முகம். ஆவுடையாரின் மேல் அம்மன் இங்கு காட்சி தருவது சிறப்பு. அம்மனுக்குத் தனி விமானம் உண்டு. அம்மனின் சந்நிதியில் வெம்மையையும் மீறிய ஒரு குளிர்ச்சி தெரிகிறது. அம்மன் சந்நிதியும் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் என விசாலமாகவே இருக்கிறது. ஸ்ரீசுக்ரீஸ்வரர் ஆலயத்துக்கு வரும் பெரும்பாலான அன்பர்கள், வழிபாட்டுப் பொருட்களுடன் சிறு மிளகுப் பொட்டலத்தையும் கொண்டு வரு கிறார்கள். ஏன் இந்த மிளகுப் பொட்டலம்?
ஆலய அர்ச்சகர் நாகராஜ குருக்கள் நம்மிடம் சொன்னார்: ‘‘ஆதிகாலத்தில் இந்த ஊர் முகுந்தனூர் என்றும் முகுந்தபுரி என்றும் அழைக்கப்பட்டது. மிளகு இந்தப் பகுதிகளில் பிரமாதமாக விளைந்தது. விளைந்த மிளகுகளை மூட்டை மூட்டைகளாகக் கட்டி, வண்டிகளில் ஏற்றி அக்கம் பக்கத்து ஊர்களுக்குச் சென்று விற்று வருவார்கள். பக்கத்து ஊரைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட வியாபாரியைச் சோதனை செய்ய விரும்பி னார் சிவபெருமான். மாட்டு வண்டியில் அந்த ஆள் மிளகு மூட்டையுடன் இந்த ஊரைக் கடக்கும்போது சாதாரண வழிப் போக்கன் மாதிரி குறுக்கிட்டார் சிவ பெருமான். ‘வீட்டுல உடம்பு சுகம் இல்ல. வைத்தியத்துக்குக் கொஞ்சம் மிளகு வேணும். கொடுப்பா’னு கேட்டார். அந்தக் காலத்துல மிளகு, விலை அதிகமுள்ள பொருள். அதை எதுக்கு இந்த ஆளுகிட்ட இலவசமா கொடுக்கணும்னு தீர்மானிச்ச வியாபாரி, ‘மிளகு இல்லேப்பா... இந்த மூட்டைங்க அத்தனையும் பாசிப் பருப்பு’னு சொல்லிட்டுப் பயணத் தைத் தொடர்ந்தார். வழிப்போக்கனா வந்த சிவ பெருமானும் அந்த இடத்தை விட்டு அகன்றார்.
மிளகு மூட்டைகளை விற்க வேண்டிய அங்காடி வந்ததும், மூட்டைகளை விற்பதற்குப் பிரிக்க முற்பட்டான் வியாபாரி. பிரித்தவன் அதிர்ந்தான். உள்ளே இருந்தவை அனைத்தும் பாசிப் பயறு. எதுவும் புரியாத குழப்ப நிலையில் அடுத்த மூட்டையைப் பிரித்தான். அதுவும் பாசிப் பயறு. இப்படி ஒவ்வொரு மூட்டையாகப் பிரித்தான். எல்லாமே பாசிப் பயறு. ‘ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது’ என்பதை உணர்ந்தவன், எங்கே இந்த விபரீதம் நடந்திருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தான். அப்போதுதான் முகுந்தபுரியைக் கடக்கும்போது ஒரு ஆசாமி வலிய வந்து மிளகு கேட்ட விஷயம் நினை வுக்கு வந்தது. அத்தனை பாசிப் பயறு மூட்டைகளையும் வண்டியில் ஏற்றிக் கொண்டு திரும்பினான். முகுந்தபுரியில் வழிப்போக்கனாக சிவபெருமான் வந்து மிளகு கேட்ட இடம் வந்தபோது, ‘நில்!’ என்ற பெருங் குரல் அவனைத் தடுத்து நிறுத்தியது. நின்றவன், குரல் வந்த திசையைப் பார்த்தான்.
வழிப்போக்கன் நின்று கொண்டிருந்தான். கலகல வெனச் சிரித்தவன் அடுத்த கணம், சுக்ரீஸ்வரராக தரி சனம் தந்தார். வியாபாரி அரண்டு போய் வண்டியை விட்டு இறங்கி, எம்பெருமான் காலடியில் விழுந்து கதறினான். தனது செயலுக்கு மன்னிப்புக் கேட்டான். மன்னித்த இறைவன், ‘உன்னைச் சோதிக்கவே இவ் வாறு செய்தோம். நான் உன்னிடம் கேட்ட மிளகை எனக்கு (சுக்ரீஸ்வரருக்கு) வை. பூஜித்த பின், அதை வாங்கி ஒரே ஒரு மிளகை மட்டும் பிரசாதமாகச் சாப்பிடு. உன் முகத்தில் உள்ள மருவெல்லாம் மாயமாகும்’ என்றார். அதேபோல் அவனும் செய்து பலனடைந்தான். அதன்பின், இங்கு அர்ச்சனை செய்ய வருபவர்கள் முகத்தில் மரு இருந்தாலும் இல்லா விட்டாலும் மிளகுப் பொட்டலம் வைத்து வழிபடுவது வாடிக்கை ஆகிப் போனது!’’
நாம் கோயிலுக்குப் போயிருந்தபோது அங்கு வந்திருந்த பார்வதி என்ற திருப்பூர்ப் பெண்மணி, அர்ச்சனைப் பொருட்களோடு மிளகுப் பொட்டலத்தையும் கொண்டு வந்திருந்தார். பார்வதி, ‘‘எனக்கு முகத்துல ஏராளமான மரு இருந்தது. இங்கே வந்து பிரார்த்தனை பண்ண பிறகு அதனோட வீரியமெல்லாம் குறைஞ்சிடுச்சு’’ என்றார்.
திருப்பூர் பக்தர் பேரவை, சதகோடி நமசிவாய கமிட்டி, சைவப் பெருமக்கள் பேரவை, பிரதோஷ கமிட்டி சார்பாகச் சுற்றுவட்டார மக்கள் ‘திருவிளக்கு வழிபாடு பூஜை’யை ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத் தில் சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள்.
யுகங்கள் பல கண்ட அந்த ஈஸ்வரரின் விளையாட்டு களுக்கு ஏது எல்லை?! அந்த பிரமாண்ட சுக்ரீஸ்வ ரரின் அருளைப் பெற்று ஆனந்தமாக வாழ்வோம்!
|
Wednesday, 2 August 2017
யுகங்கள் கடந்த ஸ்ரீசுக்ரீஸ்வரர்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment