Friday, 11 August 2017

ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் திருக்கோலங்கள்!

ல்லால மரத்தடியில் சீடர்களுடன், சிவாலயங் களின் தென்புறத்தில் அமர்ந்து அருள் பாலிக் கும் தென்முகக் கடவுள் ஸ்ரீதட்சிணாமூர்த்தி. இவர், ஒரு சில திருத்தலங்களில் மாறுபட்ட வடிவங்களிலும் காட்சி அளிக்கிறார். அவற்றில் சில:
 சனி பகவான் அருள் புரியும் குச்ச னூர் திருக்கோயிலில், யானை மீது, ராஜ தோரணையில் வடக்கு நோக்கி அமர்ந் திருக்கிறார் ஸ்ரீதட்சிணாமூர்த்தி.
 திருவீழிமிழலை ஸ்ரீகல்யாண சுந்த ரேஸ்வரர் கோயிலில் தேவ கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தியின் பாதம் முயல கன் மீது இல்லாமல், தாமரை மலர் மீது பதிந்திருக்கிறது.
 வேலூர் மாவட்டம், அரக்கோணம்- பேரம்பாக்கம் பாதையில் உள்ள தக்கோலம் தலத்தில் வலக் கால் பாதத்தைத் தரையில் ஊன்றி, இடக் காலை மடித்து அமர்ந்திருக் கிறார். தலையைச் சற்றுச் சாய்ந்த நிலையில் காட்சி தரும் இவரின் திருக்கரங்களில் வலப்புற முன் கை சின்முத்திரை காட்ட... வலப்புறப் பின் கையில் ருத்தி ராட்ச மாலை, இடப்புற முன் கையில் சுவடி, இடப்புறப் பின் கையில் ஞான தீபத்துடன் காட்சி தருகிறார்.
 திருவையாறு பஞ்சநதீஸ்வரர் திருக்கோயிலில் தென்திசை நோக்கி இருந்தாலும், மேல் நோக்கிய வலக் கரத்தில் கபாலமும், கீழ் நோக்கியுள்ள வலக் கரத்தில் சின்முத்திரையும், மேல் நோக்கியுள்ள இடக் கரத்தில் சூலமும், கீழ் இடக்கரத்தில் சிவஞான போதத்துட னும், திருவடியின் கீழ் ஆமையின் மேல் திருப் பாதம் பதித்தும் அருள் புரிகிறார் சிவயோக தட்சிணாமூர்த்தி.
 தஞ்சை- திருக்கருகாவூர் பாதையில் உள்ள தென்குடித்திட்டையில், சுவாமிக்கும் அம்பாளுக்கும் இடையில் தனிச் சந்நிதி கொண்டு ராஜ குருவாக நின்ற கோலத்தில் அருள் புரிகிறார் ஸ்ரீதட்சிணாமூர்த்தி.
 மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள வள்ளலார்கோவில், உத்திரமாயூரம், ஊத்துக் கோட்டை அருகில் உள்ள சுருட்டப்பள்ளி, பண்ருட்டி அருகில் உள்ள திருவாமூர், திருவாரூர் மாவட்டம் திருக்கைச் சின்னம் ஆகிய தலங்களில் நந்தி மீது அமர்ந்து மேதா தட்சிணாமூர்த்தியாக அருள் புரிகிறார்.
 சென்னை- திரிசூலம் கோயிலில் வீரா சன நிலையில் காட்சி தருகிறார்.
 ஆந்திராவில் அனந்தப்பூர் மாவட்டம் ஹேமாவதி என்ற இடத்தில் குந்திய- யோக நிலையில் காட்சி தருகிறார் ஸ்ரீதட்சிணாமூர்த்தி.
 காஞ்சி- கயிலாசநாதர் கோயில், நாகலாபுரம், வேதநாராயணபுரம் ஆலயம், திருப்பூந்துருத்தி ஆகிய தலங்களில் கையில் வீணையுடன் காட்சி தருகிறார் ஸ்ரீதட்சிணாமூர்த்தி.
 கோவில்பட்டி- சங்கரன்கோவில் பாதை யில் உள்ள வெட்டுவானம் சிவன் கோயி லில், மிருதங்கம் வாசிக்கும் நிலையில் ஸ்ரீதட்சிணா மூர்த்தி காட்சி தருகிறார்.
விழுப்புரம் மாவட்டம் மடப்பட்டு வட்டத்தில் உள்ள திருநாவலூர்- திருநாவலேஸ்வரர் ஆலய கோஷ்டத்தில் ரிஷபத்தின் முன்னால் நின்று வலக் கையை ரிஷபத்தின் மீது ஊன்றி, மறு கையில் ஓலைச் சுவடி ஏந்தி, நின்ற நிலையில் காட்சி தருகிறார் ஸ்ரீதட்சிணாமூர்த்தி.

No comments:

Post a Comment