பேதவாதி சங்கற்ப நிராகரணம்
மறைகள் ஆகமத் துறைகள்மற்று எவையும்
நாசமில் பதிபசு பாசம்என்று உரைத்தல்
அயர்த்துஓர் குளிகைச் சயத்தால் தாமிரக்
காளித நாசம் பாசத்து ஏய்த்தல்
கூடாது அன்றியும் குளிகை சீருணம்
நீடாது அழித்த நிலைஇலை ஆதலின்
பேத வாதம் ஓதுதல் பிழையே
இன்னும் இன்உயிர் ஏமம் குளிகை
தன்னில் அன்னியம் தருவது திடமே
வீடுஇத் திறத்தினில் கூடக் கூடா
மறைகளும் ஆகமங்களும் மற்றும் உள்ள அருள் நூல்களும் பதி பசு பாசம் ஆகிய மூன்றும் என்றும் நிலைத்த பொருள்கள் என்று கூறுகின்றன. அவ்வாறு கூறுவதை மறந்து இரசகுளிகையைக் கொண்டு செம்பில் உண்டாகிய களிம்பு முற்றிலும் அழிதல் போலப் பாசங்கள் முற்றிலும் அழியும் என்று கூறுவது அருள் நூல்களின் கருத்துக்கு நேர் மாறானது. இரசகுளிகை செம்பைப் பொன்னாக மாற்றிற்று என்றால் செம்பு என்கிற பொருள் ஒழிந்து பொன்னாகிய புதிய பொருள் ஒன்று அங்கே தோன்றுகிறது என்றாகும். அவ்வாறு உயிரும் இல்லாமல் போய் அதனின்றும் மாறுபட்ட ஒரு பொருள் தோன்றிற்று என்று ஆகும். இவ்வாறு கூறுவதும் பிழையே ஆகும். மேலும் செம்பு வேறு இரசகுளிகை வேறு என்பதனால் இவை இரண்டும் நமக்குள் அந்நியமானவை என்பதும் தெளிவு. அந்நியப் பொருள் ஒன்று உயிரைச் சார்ந்து அதற்கு முத்தி நிலையைத் தரும் என்று கூறும் பேதவாதம் பிழையுடையதே.
சிவசமவாதி சங்கற்பம்
பாசமும் பசுவும் ஈசனும் என்றுஇம்
மூவகை உணர்வு தாம் முதன்மையவாய்ப்
பாச ஐம்புலன் தேசுற உணர்த்தப்
பசுத்தனி ஞானம் பொசித்திடும் அன்றே
இளைய ஞானி பிரிவுற எரியாச்
செந்தழல் தகுநெறி அந்தம் இல் உயிரும்
அறிவாய் ஒன்றும் அறியாது அன்றே
இவ்வாறு ஒழுகும் ஏனைய உயிர்க்கு
முன்னோன் தனது முதிர்ஒளி ஞானம்
அறியாப் பச்சைச் சிறுபுழுக் கவர்ந்த
வண்டுஎன உயிரைக் கொண்டிடும் உயிர்அது
தன்னை நோக்கித் தான்அது வாகி
ஐவகைத் தொழிலும் மெய்வகை உணர்வும்
பிரியா வாறு பெற்றுத்
திரியாப் பெரியோர் திரட்சிசேர்ந் திடுமே
பதி பசும் பாசம் எனப்படும் முப்பொருள்களுக்கும் அவ்வவற்றுக்குரிய அறிவுகள் தோற்றமில் காலம் தொட்டே உள்ளன. இவை முறையே பதி ஞானம் பாச ஞானம் என்பன. பாச ஞானம் என்பது உலகத்துப் பொருள்களைப் பற்றிய அறிவு அது உயிரினிடத்தே நிகழும். பசு ஞானம் என்பது உயிர் கருவிகளின் வாயிலாகத் தெளிவுற அறிந்த பொருள்களை நுகர்ந்திடும் தனி அறிவாகும். அது சகல நிலையில் நிகழ்வது. கேவல நிலையில் பாச ஞானம் நீங்கப் பசு ஞானம் எரியாத நெருப்புப் போலச் செந்தழலாகக் கிடக்கும். அந்நிலையில் உயிர்கள் எதனையும் அறியாதிருக்கும். கேவலத்திலும் சகலத்திலும் மாறி மாறி உழலும் உயிருக்கு. இறைவன் தன்னுடைய ஞானமாகிய பதி ஞானத்தை வழங்கியருளுவான். ஒன்றுமறியாது கிடக்கும் பச்சை நிறமுடைய சிறு புழுவைக் குளவி ஒன்று எடுத்துச் செல்வது போல இறைவனும் உயிரை எடுத்துக் கொள்வான். அந்தப் புழு அந்தக் குளவியையே நினைத்துக் கொண்டிருந்து சில நாட்களில் குளவியின் வடிவத்தோடே கூட்டை விட்டு வெளியேறுவது போல உயிரும் சிவ பெருமானையே நினைந்திருந்து சிவபெருமான் திருவடிகளைப் பெற்று அவன் ஆற்றும் ஐந்தொழில்களையும் தானும் ஆற்ற வல்லதாகி அவனுடைய மெய்யறிவைத் தானும் கைவரப் பெற்று, இதற்கு முன் இவ்வாறே லீட்டு நிலை எய்திய பெரியோர்களின் கூட்டத்தை விட்டு அகலாதிருக்கும்.
சிவசமவாதி சங்கற்ப நிராகரணம்
சேர்ந்த மும்மை வாய்ந்த ஞானமும்
ஒருகால் அன்றித் திரிவுற நிற்கில்
ஒண் பொருள் காணும் பண்பினுக்கு ஒருகால்
பரிதியும் மதியும் எரிதரு விளக்கும்
வேண்டல் இன்றே காண்தகு காலை
ஒன்றுஒன்று ஆகநின்று அறிவுறும் எனில்
அன்னியம் அறியா மன்உயிர் பொறிபுலன்
தானோ அறியா தலைவர்க்கு உலகினை
ஆனா அறிவால் அறியவேண் டின்றே
கொழும் தழல் தகுமேல் அழுந்திடும் அவத்தையில்
திரியாத் தலைவன் தெரியாத் தன்மைவந்து
எய்தல் ஆகா மெய்யுறு பொருட்கு
முன்னர்க் கீடம் தன்என எடுத்த
வேட்டுவன் இயல்பு கூட்டல் பெறாதே
வண்டுஇறும்பு எடா உட்கொண்டு அது தனக்கு
மந்திர வாதம் தந்ததும் இலதே
எடுத்திடும் அதனால் அடுத்தது என்று அறையில்
கருமயிர்க் குட்டி இருசிறைப் பறவை
ஆயினது எடுத்த தாயர் சாற்றிலரே
பிறவிப் பேதத் துறை இவை கிடக்க
ஏயும் இத்திறன் ஆயும் காலை
யோகத் தகுதி ஆகத் தகுமே
ஞானம் இன்மை என்று ஓதுவது எவன்எனில்
உயிரும் உணர்வும் பயிலுதல் இன்றி
வேட்டுவன் உருவம் மென்புழு உணர்வு
கூட்டுத லால்உருக் கூடுத லானும்
முத்தியில் இறையில் பற்றுதல் இன்றித்
தன்னுரு அணைந்த பின் அதன் நினைவு
மாறுத லானும் ஊறுடைத்து அன்றே
ஈசனது இயல்பு அருள்எய்து உயிர்இயற்றல்
பேசுதல் தவறுஎனப் பெருமறை அறைய
ஐந்தொழில் உயிரும் தந்திடல் தகுமே
ஆவதுஎன் முன்னாள் நாவலர் பெருமான்
பண்டுஒரு முதலை உண்ட மைந்தனை
வரவழைத்தனன் என்றாய் பிழைப்பு இலது அதூஉந்
தந்திட வேண்டும் என்றனர் அன்றே
இன்னவை கிடக்க முன்னவன் தன்மை
எய்தினர் எல்லாச் செய்தியும் செய்வர்
இரும்புஎரி எய்தித் தரும்செயல் தகவுஎனில்
பொருள்நிலை கிடக்க ஒரு திட்டாந்தப்
பேறே ஆயின் சீறாக் கதுவிய
புனல்ஒரு புடைசேர் கனல்தகும் ஆயினும்
வேறுஒரு பொருளை நீறுஆக் கிலதே
நெருப்புஎனும் இதனின் உருத்தனி காட்டுக
அங்கியும் ஒன்றைத் தங்கி நின்று அல்லது
தன்தொழில் நடத்தாது என்றுஅறி இனிநீ
இரும்பு அனல் செய்தி தரும்பரிசு உளதே
அதுஎன் ஓர் அலகை பொதிதரும் காலை
அதன் செயல் அனைத்தும் இவன் செயல் ஆமால்
அவன் இவன் ஆகில் இவன் அவன் செய்திக்கு
என் அவை என்னில் பின்னுரு செயலும்
அதன் செயல் அன்றி இவன்செயல் ஆகில்
இவன் செயல் பேயின்தன் செயல் ஆகி
இருந்த வாஎனத் தெரிந்திட வேண்டும்
தெரியாது ஆயின் புரியில் கடும் கனல்
எரிந்தது என்னும் இதுதகும் அன்றியும்
அவன்இவன் ஆகில் இவன் அவன் செய்தி
என்று செய்வான் ஒன்றிய மதத்தாய்
எல்லாம் அறிதல் செல்லாது உயிர்கள்
சிற்றறிவு எனும் இச் சொல் தவறு ஆகும்
என்பது என் அலகை தன்பதம் அடைந்தோர்
கொண்ட வாறு கண்டனம் என்னில்
மூங்கை அந்தர் உற்றுஓங்கிய குணம்குறி
செய்ததென் இன்னும் பவ்வம் உற்று அழுந்தினும்
நாழி கொள்ளாது ஆழியில் அலைபுனல்
அதனால் கருத்து முதல்உளது ஆக
வேண்டும் அன்றே ஈண்டு இனி அமையும்
எல்லாம் எனும்இச் சொல்லாம் படும்பொருள்
அனைத்தும் தாக்காத் தனிப்பரத்து உற்றவர்க்கு
எவ்வகை உணர்வு செய்வதென செப்புக
ஒன்றின் ஒன்றாம் ஒன்றாது உலகில்
நின்ற போது உயிர் நேராம் அன்றே
முத்தி உற்ற நற்றவர் அவையிடைச்
சேர்வர் என்றனை சார்தரு முத்தி
சாலோக் கியமோ சாயுச்சியம் எனில்
பந்தம் உற்ற கந்துஅல கழித்த
அறிவினோடு அறிவு பிரியாப் பெற்றி
வேண்டும் என்றதற்கு ஈண்டுஇவர் இவ்வாறு
இருப்பர் என்பதற்கு உருத்தான் வேண்டும்
அண்ணலது அருளில் நண்ணினர் இருப்பினும்
சீவன் முத்தர்என்று ஓதினர் அகன்று
நீங்கியும் உருவம் நீங்காது ஆயின்
ஓங்கிய முத்தியாவது என் உரைக்க
செடிஉடல் அணுகாக் குடிலை கொடுக்கும் என்று
ஓதினை நீயே பேதாய் பகட்டுஉரல்
ஒளிர்சினை முச்சித் தளிர்எனும் இதுதகும்
இச்சா ரூபம் நச்சினர் என்னில்
மும்மலத்து ஏதும் இன்மையது அன்றே
இதுவளர் முத்திப் பதமென இயம்புவர்
ஈங்கு இவை நிற்க
பதி பசு பாசம் என்ற மூன்றனுக்கும் மூவகை ஞானங்கள் உள. அவை மூன்றும் ஒருங்கு நின்ற போதே பசுவாகிய உயிர் ஒன்றே அறியும் என்று உரைத்தாய். அதனை நுணுகிப் பார்த்தால், சூரியனும் வெண்ணிலவும் சுடர்விடும் விளக்கும் ஆகிய மூன்றின் துணைகொண்டே கண் ஒரு பொருளைக் காணுதல் கூடும் என்று கூறுவதைப் போன்று உள்ளது உனது வாதம். உண்மையில் இம் மூன்றில் ஏதாவது ஒன்றின் துணையைக் கொண்டே கண்ணால் பொருளைக் காண இயலும் என்பது கண்கூடு. பதி ஞானம், பசு ஞானம், பாச ஞானம் எனும் மூன்றும் தனித்தனியே நின்று பொருள்களை அறிதல்கூடும் என்பதும் பொருந்துமாறு இல்லை. ஏனெனில் அறிவற்ற பொருள்கள் ஆகிய பாசக் கூட்டம் உயிர்களை விட்டு லேறாக நிற்றலின் உயிர்களின் அறிவாகிய பசுஞானம் கருவிகளின் துணைகொண்டல்லது அவற்றை அறியமாட்டா. நிலைபெற்ற உயிரின் துணையின்றி ஐம்பொறிகளும் அவற்றின் வழிவரும் பாச ஞானத்தை விளங்கிக்கொள்ள மாட்டா. ஏனெனில் ஐம்பொறிகள் அறிவற்றவை. முற்றறிவுடைய இறைவனுக்கோ புதிதாக ஒன்றை அறிய வேண்டுவதும் இல்லை. ஒவ்வொள்றாகச் சுட்டியறிய வேண்டுவதும் இல்லை கருவிகள் அனைத்தும் நீங்கிய நிலையில் உயிர் எரியாத தணல் போன்று கிடக்கும் எனக் கூறினாய். தன்னைவிட்டு ஒருபோதும் நீங்காத இறைவனை அந்த நிலையிலும் உயிர் அறிவதில்லையே அதற்குக் காரணம் யாது?
உயிரும் இறைவனும் கூடி இருக்கும் முத்தி நிலைக்கு ஒன்றும் அறியாத புழுவைக் குளவி ஒன்று தூக்கிச் சென்று தன்வடிவாக்கின தன்மையைக் கூறினாய். இந்த உவசை பொருத்தமானது அன்று. இறைவன் உயிருக்கு மந்திர உபதேசம் வழங்குவது போலக் குளவி புழுவுக்கு உபதேசிப்பதில்லை. அறிவற்ற புழுவுக்கு வீடுபேற்றில் வேட்கை கொண்ட உயிரையும் உபதேசம் வழங்கி ஆட்கொள்ளும் இறைவனுக்குக் குளவியையும் எவ்வாறு உவமை கூற முடியும்?
குளவி புழுவைத் தீண்டி எடுத்ததே அதற்கு உபேதசம் ஆயிற்று என்று நீ கூறுவாயாகில், கம்பளிப் பூச்சி தன் வாயினால் நூற்ற நூலால் கூடு கட்டி, அதற்குள் சிலநாள் இருந்து பின்னர், பெரிய இறகுகளோடு கூடிய பறவையாய் மாறியதற்கு அதன் தாயின் உபதேசமே காரணம் என்று கூற வேண்டும். அப்படி யாரும் சொல்லுவதில்லை. இவையெல்லாம் பிறப்பின் வேறுபாடே தவிர வேறு அல்ல. பிறப்பின் வேறுபாடு வினைப்பயனுக்கு ஈடாக வாய்த்ததே அன்றி வீடு பேற்று நிலைக்கு ஒப்புமை ஆகாது. ஏனெனில் புழு குளவியானது போல, உயிர் சிவ வடிவம் பெற்றது என்னில் அது ஒரே வடிவாய சாரூப நிலையைக் குறிக்குமே யன்,றி, சாயுச்சிய நிலையைக் குறிக்காது. யோகத்தின் பயன் சாரூபம் என்றும் ஞானத்தின் பயன் சாயுச்சியம் என்றும் பெரியோரால் கூறப்படுவதால் இது வீடுபேற்று நிலைக்கு ஒப்பாகாது. இந்த உவமை, குளவியின் வடிவைப் புழு அடைகிறது என்பதால் இந்தப் புழு குளவியாகும் வரை அதனை நினைத்திருந்து பின்னர் மறந்து விடுதல் போல வீட்டு நிலையில் உயிர் இறைவனை மறந்திருக்கும் என்றாகித் தவறாய் முடியும். முத்தி நிலையில் சிவ பரம் பொருளோடு கூடி அதனையே நுகர்ந்து இன்புறும் என்பதற்கும் இந்த உவமை பொருந்தாது. புழு தன் உருமாறிக் குளவியானவுடன் அதன் உணர்வும் மாறுதல் அடையும். உயிரின் உணர்வு முத்தி நிலையிலும் மாறுபடாது. ஆகையினாலே இந்த உவமை பொருத்தமற்றது என்பது புலனாகும்.
இறைவனுடைய பேராற்றலை அவனுடைய அருளைப் பெற்ற உயிரும் பெறும் என்று கூறுவது பெருந்தவறு என்று மறைகள் எல்லாம் எடுத்து முழங்கவும் அதனை மறந்து விட்டு முத்தி பெற்ற உயிர் ஐந்தொழிலும் ஆற்றும் வல்லமை பெறுகிறது என்று நீ கூறுவது பெரும் பிழை. முன்னொரு காலத்தில் சுந்தர மூர்த்தி நாயனார் முதலையுண்ட பாலனை மீட்டும் படைத்துத் தரவில்லையா? குளமும் இல்லை. நீரும் இல்லை முதலையும் இல்லை. ஆயினும் குளத்தைத் தோற்றுவித்து நீரால் நிரப்பி முதலையை வரவழைத்து அதனால் விழுங்கப்பட்ட பாலனை உரிய வளர்ச்சியோடு சுந்தர மூர்த்தி நாயனார் மீட்டுத் தந்த வரலாறு அருளாளர்கள் ஐந்தொழிலும் ஆற்றுவார்கள் என்பதற்குச் சான்றாகும் என்று கூறிகிறாய். அந்த வரலாற்றில் பிழை இல்லை. ஆனால் நீ அதனைப் புரிந்து கொண்டது தான் பிழையானது நாவலர் பெருமான் கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே என்று இறைவனை வேண்டினார். அவ்வேண்டுகோளை ஏற்று இறைவன் தான் பிள்ளையை மீட்டு அளித்தனனே தவிர, நம்பி ஆரூரரே அழைத்தார் என்று வரலாறு கூறவில்லை.
முத்தி நிலை எய்தியவர்கள் இறைவனின் தன்மையை எய்தி அவன் செய்யும் ஐந்தொழிலையும் தாமே செய்வர் என்பதற்கு. நெருப்பைச் சேர்ந்த இரும்பும் நெருப்பின் தன்மையை அடைந்து பிற பொருள்களைச் சுடுவது போல என்று உவமை அதன் வெப்பத்தைப் பெற்றுக் கொதிக்கின்ற நீர் வேறு எந்தப் பொருளையும் சுட்டுச் சாம்பல் ஆக்குவதை யாரும் கண்டதில்லையே? நெருப்பைப் பற்றித் தான் பேச்சே தவிர நெருப்போடு சேர்ந்த பொருளைப் பற்றி நான் பேசவில்லை என்று நீ மறுப்பாய் ஆயின், நெருப்பு என்ற ஒரு தனிப் பொருளை எங்கேனும் கண்டதுண்டா? தீ என்பது ஏதாவது ஒரு பொருளை எங்கேனும் கண்டதுண்டா? தீ என்பது ஏதாவது ஒர பொருளைப் பற்றிக் கொண்டு தான் தன் செயலைச் செய்யுமே தவிர அது தனித்து நின்று இயங்கவல்லது அன்று. இந்த உண்மையை உணர்ந்து கொள். இரும்பும் தீயைச் சார்ந்து வெப்பத்தைப் பெறுமே யன்றி மற்றொரு பொருளை எரிப்பதுண்டோ? அங்ஙனம் இருக்க அதனை ஓர் எடுத்துக் காட்டாகக் கொள்வது எப்படி? பேயால் பிடியுண்
் பேய் செய்த செயல்களை எல்லாம் செய்வது போல, அருள் பெற்ற உயிர்கள் இறைவனுடைய செயல்களைச் செய்யும் என்று நீ கூறுகிறாய். இந்த உவமையும் பொருத்தம் அற்றதே. உயிரை இடம் கொண்டு இறைவன் தன் செயல்களை ஆற்றுவதற்கு ஒரு காரணமும் இல்லை. அன்றியும் பேய் பிடித்தவன் அப்பேய் தன்னை விட்டு நீங்கிய பிறகு செய்கிற செயல்கள் எல்லாம் அவன் செயல்களே யன்றிப் பேயின் செயல்கள் ஆகமாட்டா. இதிலிருந்து பேயின் செயல் வேறு பிடியுண்டவன் செயல் வேறு என்பதனைத் தெரிந்து கொள்கிறோம். அது போலவே இறைவன் செயல்கள் வேறு வீடு பேறு பெற்ற உயிர்களின் செயல்கள் வேறு என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வைக்கோற் புல் எரிந்தது என்று நாம் சொல்லும் போது எரிக்கும் தன்மை வைக்கோலுக்கு உண்டு என்று நாம் கொள்வதில்லை. எரிக்கும் தன்மை நெருப்புக்கே உண்டு. அதனால் வைக்கோற் புல் எரிபட்டது என்று நாம் அறிந்து கொள்கிறோம். அவ்வாறே உயிரில் கலந்து நிற்கும் இறைவனின் செயல் இறைவனுக்கே உரிமை உடையது அல்லாமல் உயிர்க்கு உரியது அன்று.
இறைவன் முற்றறிவினன் என்பதும் உயிர்கள் சிற்றிவுடையன என்பதும் அருள் நூல்களுள் வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளன. உயிரும் இறைவனைப் போல முற்றறிவு பெறும் எனும் கொள்கை தவறானது. நீ கூறிய பேயும், பேயால் பிடியுண்டவனும் என்ற உவமை மற்றொரு வகையாலும் மறுக்கப்படும். ஊமையுமாய்க் குருடனுமாய் இருப்பவன் ஒருவனை, அவ்விரு குறைகளுமற்ற பேய் ஒன்று பிடித்துக் கொண்டாலும் அவனால் பேசவும் இயலாது. பார்க்கவும் இயலாது. ஆகவே இறைவனின் செயல் எல்லாம் அவன் அருள் பெற்ற உயிர்க்கும் உண்டு என்று சொல்லுவது பொருந்தாது எல்லையற்ற நீர்ப்பரப்பு உடைய கடலில் நாழியைக் கொண்டு சென்று முகந்தால் அது நாழிதான் கொள்ளுமே யன்றிக் கடல் முழுவதையும் கொள்ளாது. உயிருக்கு உள்ள சிற்றறிவு இறைவன் திருவருளோடு பொருந்தி மேலும் விளக்கம் பெறும் என்பதுதான் பொருந்துமே ஒழிய, உயிரின் சிற்றறிவே முற்றறிவாகி விடும் என்பது பொருந்தாது. எனவே உன் கொள்கையைக் கைவிடுக. எல்லாம் அறியும் என்னும் போது இறைவனை முழுவதுமாக அறியும் தன்மை சிற்றறிவுக்கு இல்லை என்பதனை மறத்தல் கூடாது. முத்தி நிலையில் உயிரும் சிவமும் ஒன்றாகும் எனல் வேண்டா. சீவன் முத்தனாய் இருக்கும் நிலையிலேயே ஒன்றாகும் என்று கூறுவாய் ஆயின், அந்த நிலையிலும் உயிர் இறைவனை ஒத்திருக்கவில்லை. எனவே உயிரும் இறைவனும் என்றைக்கும் ஒரு தன்மையை உடையனவாக இருப்பன வல்ல.
முத்தி பெற்றவர் தம் போல் முத்தி பெற்ற பெருமக்களுடன் கூடி இருப்பர் என்று கூறினாய். அப்படிக் கூடியிருக்கும் நிலை சாலோக நிலை என்று கூறப்படுமே தவிர அதனை சாயுச்சிய நிலை என்று கூற இயலாது. பரமுத்தியாகிய சாயுச்சியத்தில் கட்டுக்களை விட்டு நீங்கி உயிர் இறைவனோடு பிரிப்பின்றி இருக்கும் என்று கூறப்படும் இலக்கணத்திற்கு இது மாறுபடும். வீடு பெற்றோர் அனைவரும் கூடி ஒருங்கே இருப்பர் எனக் கூறினால் அவர்களுக்கு உடல் உண்டு என்று ஆகும். அண்ணலின் அருளால் அவர்கள் உடல்களை நண்ணியிருப்பினும் அவரைச் சீவன் முத்தர் என்றே கூறுதல் வேண்டும். அவ்வுடலோடு கூடிய முத்தியும் உயர்ந்த முத்தி என்று கூறுவதற்கில்லை. அவர்களின் உடல் அசுத்த மாயையினால் ஆனதன்று சுத்த மாயையால் ஆனது என்று நீ கூறினாய். இது எவ்வாறு இருக்கிறது என்னில் வேப்ப மரத்தில் அடி மரம் தான் கசக்கும் உச்சியில் உள்ள தளிர் கைக்காது என்பது போல் உள்ளது. அவ்வீடு பேற்றை அடைந்தவர்கள் தங்கள் விருப்பத்தினால் உடலை விரும்பி ஏற்றுக் கொண்டனர் என்றால் அவர்களுக்கு மும்மலங்களில் ஒன்றேனும் அகன்றதில்லை என்று ஆகும். எனவே நீ கூறும் முத்தி நத முத்தியே அன்றிப் பரமுத்தி ஆகாது.
மும்மை வாய்ந்த ஞானம் பதிஞானம், பசுஞானம், பாசஞானம் என மூன்று திறப்பட்ட ஞானம். ஒருகால் ஒரு நேரத்தில் கீடம்புழு. வேட்டுவன்குளவி. இறும்புகம்பளிப்பூச்சி. கருமயிர்க் குட்டி என்றதும் அது. நாவலர் பெருமான்சுந்தர மூர்த்தி நாயனார். சீறாக்கதுவிபொங்கி எழுகின்ற. அலகை பேய். மூங்கைஊமை. அந்தர்அந்தகர். குருடர். பவ்வம்கடல். செடி உடல்குறை உடைய உடம்பு. குடிலைதூயமாயை, பகட்டுரல்பெரிய உரல் போன்ற அடி மரம். முச்சிஉச்சி.

No comments:
Post a Comment