36. மாயை தனைஉதறி வல்வினையைச் சுட்டுமலம்
சாய அமுக்கிஅருள் தான் எடுத்து நேயத்தால்
ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான்அழுத்தல்
தான்எந்தை யார்பரதம் தான்
பதவுரை
மாயை தனை உதறி (பக்குவ ஆன்மாவின் உணர்விலிருந்து) மாயா மலத்தை நீங்கச் செய்து,
வல்வினையைச் சுட்டு அவ்வுயிரைத் தொடரும் வலிய கன்ம மலத்தைச் சுட்டெரித்து,
மலம் மூல மலமாகிய ஆணவ மலத்தை
சாய அதன் ஆற்றல் கெடும்படி
அமுக்கி மெலிவித்து அடக்கி,
அருள்தான் எடுத்து பிறப்பு இறப்புக்களில் சுழன்று வந்த அந்நிலையினின்றும் எடுத்து அருள் நிலையில் வைத்து
நேயத்தால் பெருங்கருணையினால்
ஆனந்த வாரிதியில் பேரின்பக் கடலில்
ஆன்மாவை அவ்வுயிரை
அழுத்தல் தான் அழுந்தும்படி செய்தலே
எந்தையார் எம் தந்தையாகிய சிவபெருமான்
பரதம்தான் இயற்றும் திருக்கூத்து ஆகும்.
பொழிப்புரை
துடியை அசைத்தல் பக்குவம் எய்திய உயிரின் உணர்விலிருந்து மாயையை உதறி விலக்குவதாகும். நெருப்பை ஏந்தியுள்ள கை அவ்வுயிரைத் தொடரும் வலிய வினையைச் சுடுவதாயிருக்கும். ஊன்றிய திருவடி ஆணவ மலத்தை வலிகெட்டு நிற்கச் செய்வதாகும். எடுத்த திருவடி பிறப்பு இறப்புக்களில் சுழன்று வந்த அவ்வுயிரை அந்நிலைகளினின்றும் உயர்த்தி அருள் நிலையில் வைப்பதாகும். எடுத்த அத்திருவடியின் வளைவும், அதனைக் காட்டி நிற்கும் வீசிய கையும், யான் எனது என்னும் செருக்கு அற அடங்கி நில் என்னும் பொருள்பட அமைத்த திருக்கையும் உயிரைப் பேரின்பத்தில் அழுத்தும் குறிப்பு உடையவை ஆகும்.
விளக்கம்
திருக்கூத்தினைத் தரிசிக்கும் முறை
சிவனது திருக்கூத்தினைக் காணுங்கால், அதில் உதறிய கையை மாயையை உதறும் கையாகக் காணுதல் வேண்டும். வீசி அணைத்த கையை வருக என்று அழைத்து அருள் வழங்கும் கையாகக் காணுதல் வேண்டும். அமைத்த கையை இனிதிருக்க எனத் தேற்றம் தரும் கையாகக் காணுதல் வேண்டும். தீ ஏந்திய கையை வினைகள் கெடந்திருவருள் வழி நிற்கச் செய்யும் கையாகக் காணுதல் வேண்டும். ஊன்றிய திருவடியை மலத்தை மிதித்து நிற்கும் திருவடியாகக் காணுதல் வேண்டும். திருக்கூத்தினை உண்மையில் தரிசிக்கும் முறைஇதுவாகும்.
இனி, ஆனந்த நடனம்
இவ்வுலகில் பக்குவ ஆன்மாக்களுக்குச் சீவன் முத்தி நிலையில் பேரானந்தத்தை இடையறாது தருகின்ற கூத்து இதுவாகும்.
37. மோனந்த மாமுனிவர் மும்மலத்தை மோசித்துத்
தான் அந்த மானிடத்தே தங்கியிடும் ஆனந்தம்
மொண்டுஅருந்தி நின்றுஆடல் காணும்அருள் மூர்த்தியாக்
கொண்டதிரு அம்பலத்தான் கூத்து
பதவுரை
மோன அந்தம் மோனம் ஆகிய முடிநிலையில் நிற்கும்
மா முனிவர் உயர்ந்த ஞானிகள்
மும் மலத்தை மும் மல வாசனையை
மோசித்து அறவே நீக்கி,
தான் யான் என்னும் செருக்கு
அந்தம் ஆன இடத்து அழிந்து முடிந்து போன நிலையில்
தங்கியிடும் விளங்கித் தோன்றுகிற
ஆனந்தம் சிவானந்தம் ஆகிய அமுதத்தை
மொண்டு அருந்த கண்களால் மொண்டு அருந்துதற் பொருட்டு
நின்று ஆடல் திருச்சிற்றம்பலத்துள் காட்சிப் புலனாகும்படி நின்று ஆடுதலே,
காணும் அருள் மூர்த்தியாக் கொண்ட தன் திருவருளையே காணும் வடிவமாகக் கொண்டு விளங்கும்
திரு அம்பலத்தான் கூத்து நடராசப் பெருமான் இயற்றும் திருக்கூத்தாகும்.
பொழிப்புரை
மோனம் ஆகிய முடிநிலையில் நிற்கும் சிறந்த முனிவர்கள் மும் மல வாதனையை முற்றிலும் நீக்கி, தற்போதம் அற்ற நிலையில் விளங்கித் தோன்றும் பேரின்பமாகிய அமுதத்தைத் கண்களாலும் மொண்டு அருந்தும் படியாக இறைவன் வெளியே திருச்சிற்றம்பலத்துள் புலப்பட நின்று ஆடுகிறான்.
விளக்கம்
புளியை நாவில் இட்டுச் சுவையா விடினும் அதனைப் பார்த்த போதே பார்த்தவர்களுக்கு நாவில் நீர் ஊறும். அதுபோலக் கூத்தப் பெருமானது ஆனந்தக் கூத்தினைக் கண்டவர்க்கு உள்ளத்தில் பேரின்பம் ஊற்றெடுக்கும்.
பக்குவம் இல்லாதார் நிலை
நாமும் அக் கூத்தினைக் காணத்தானே செய்கிறோம். நமக்கு அத்தகைய இன்பம் தோன்றவில்லையே. அது ஏன்? என வினவலாம். இதற்குப் பின்வருமாறு விடை கூறலாம். பருவம் வாயாத சிறுபெண் ஓர் ஆடவனைக் காணுங்கால் அக்காட்சி அவளுக்கு இன்பத்தைச் செய்யாது. அதே பெண் பருவமுற்றுக் காதலிற் கவிழ்ந்த போது, தன் தலைவனை அவன் நோக்காத நேரத்தில் தான் நோக்கித் தன்னுள் இன்புறுகிறாள். அக்காட்சி அவளுக்கு மகிழ்ச்சியைச் செய்கிறது. பருவம் அமையாத சிறு பெண்ணின் நிலையில் நாம் இருக்கிறோம். இறையின்பத்திற்கு உரிய தகுதியும், அதன் மேல் வேட்கையும் இன்றி இருக்கிறோம். இறையின் பத்திற்கு உரியர் அல்லார்க்குப் பொன்னம்பலக் காட்சி எவ்வாறு இன்பம் செய்யும்?
ஆளுடைய பிள்ளையாரது அனுபவ நிலை
ஆளுடைய பிள்ளையார் மெய்ஞ்ஞானமேயான திருவம் பலத்தினையும், ஆனந்த நடத்தினையும் கண்டு கும்பிட்டுக் களித்தார்; கண்களினின்றும் ஆனந்தக் கண்ணீர் பொழிந்தார். ஆனந்த நடனமாகிய திருவமுதைக் கண்களால் உண்டருளினார்.
உணர்வின் நேர்பெற வரும்சிவ போகத்தை
ஒழிவின்றி உருவின் கண்
அணையும் ஐம்பொறியளவினும் எளிவர அருளினை
எனப் போற்றினார். ஆளுடைய பிள்ளையாரது இந்த அனுபவ நிலையை இங்கே பொருந்த வைத்து நோக்க வேண்டும்.
தொழுவார் பெறும் பயன்
38. பரைஇடமா நின்றுமிகு பஞ்சாக் கரத்தால்
உரைஉணர்வுக்கு எட்டா ஒருவன் வரைமகள்தான்
காணும் படியே கருணை உருக் கொண்டு ஆடல்
பேணும் அவர்க்கு உண்டோ பிறப்பு
பதவுரை
உரை உணர்வுக்கு வாக்கிற்கும் மனத்திற்கும்
எட்டா அகப்படாத
ஒருவன் ஒப்பற்ற முதல்வன்
மிகு மந்திரங்கள் எல்லாவற்றினும் மேலானதாகிய
பஞ்சாக்கரத்தால் திருவைந்தெழுத்தால்
கருணையுருக் கொண்டு அருள்திருமேனி தாங்கி
பரை இடமா நின்று அவ்வருளே தனக்கு அரங்காகக் கொண்டு
வரைமகள் தான் அவ்வருளாகிய உமையம்மை
காணும்படி காணுமாறு
ஆடல் நின்று ஆடும் திருக்கூத்தை
பேணுமவர்க்கு விரும்பித் தொழுவார்க்கு
பிறப்பு உண்டோ பிறவி ஏற்படுமோ?
பொழிப்புரை
உரைக்கும் உணர்வுக்கும் எட்டாத ஒப்பற்ற முதல்வன் ஐந்தெழுத்தால் அருளுருக் கொண்டு, அருளே தனக்கு அரங்காகக் கொண்டு, அவ்வருளேயான உமையம்மை காணும்படி நின்று ஆடும் திருக்கூத்தை மேற்கூறிய முறையில் உணர்ந்து விரும்பித் தொழுவார்க்குப் பிறவியில்லை.
விளக்கம்
உண்மை அம்பலமும் உண்மைத் திருமேனியும்
பெருமான் நடனம் புரிதற்கு இடம் ஆன்மா என்றும், அவனுக்குத் திருமேனியாய் அமைவது ஐந்தெழுத்து மந்திரம் என்றும் மேலே பார்த்தோம். இவ்வாறு சொல்லப்படினும், உண்மையில் அவனுக்குத் திருமேனியாவது அவனது அருளேயாகும். அவனுக்கு இடமாவதும் அருளேயாகும். இச்செய்யுளில், பரை இடமா நின்று எனவும், கருணை உருக் கொண்டு எனவும் வந்துள்ள தொடர்களில் இக்கருத்துக் கூறப்பட்டுள்ளமை காணலாம். ஞாயிற்றை நமக்குப் புலப்படுத்துவது அதன் ஒளியேயாகும். அவ்வொளி, ஞாயிற்றின் உருவாகவும் குணமாகவும் உள்ளது. அதுபோல இறைவனும் அருளொளியை உடையவன். அவ்வருளொளியே அவனுக்கு உருவாகவும் குணமாகவும் அமைகிறது.
ஞாயிறு உலகத்தோடு தொடர்பு கொள்வது தன் ஒளி மூலமாகவே யாம். அதுபோல இறைவன் உலகத்தோடும் உயிர்களோடும் கொண்டுள்ள தொடர்பு அவனது சத்தியாகிய அருள் வழியாகவேயாம். இப்பகுதியின் தலைப்பாகிய நாதன் நடம் என்பதன் கீழ்த் தரப்பட்டுள்ள முன்னுரையில் இறைவனுக்கு இடம், திருமேனி முதலிய எல்லாமாவது அவனது திருவருளேயாம் என்பதை விளக்கினோம். ஆகவே, இறைவனுக்குத் திருவருளே உண்மை அம்பலமும் (இடமும்), உண்மைத் திருமேனியும் ஆகும் என்பது நன்கு உளங்கொள்ளுதற்குரியது. ஆன்மாவும் பஞ்சாக்கரமும் அவனுக்கு உபசார அம்பலமும் உபசாரத் திருமேனியும் ஆவன.
கற்பனை கடந்த சோதி
கருணையே உருவ மாகி
என்ற சேக்கிழார் திருமொழியில் கூத்தப் பெருமானது உண்மைத் திருமேனியும்,
அருமறைச் சிரத்தின் மேலாம்
சிற்பர வியோமம்
என்ற அவரது திருவாக்கில் உண்மைத் திருவம்பலமும் கூறப்பட்டுள்ளமை காணலாம். சிற்பர வியோமம் என்ற தொடர் ஞானமேயான அருள்வெளி என்ற பொருளைத் தருவதாகும். சித்ஞானமாகிய அருள்; வியோமம் வெளி.
இறைவனது திருக்கூத்தினைக் கண்டு தொழுவார் பெறும் பயன்
யாவராலும் காணுதற்கரிய பெருநிலை உடையது சிவம். அப் பரம்பொருள் தானே தனது கருணை காரணமாக அனைவரும் காணும்படி அம்பலத்தில் தோன்றிப் பொற்புடன் நடஞ் செய்கின்றது. அதனைக் காண்பதனால் நாம் அடையும் பயன் என்ன? என வினவுவார்க்கு விடையாக, ஆடல் பேணுமவர்க்கு உண்டோ பிறப்பு என்றார் மனவாசகங் கடந்தார். பிறவி இன்ன காலத்தில் தொடங்கியது என்றும், இன்ன காலத்தில் முடியும் என்றும் சொல்ல இயலாத நிலையை உடையது. வினையால் பிறவியும் பிறவியால் வினையும் இடைவிடாது தொடர்ச்சியாய் முடிவின்றி வந்து கொண்டிருக்கின்றன. இப் பிறவிச் சுழற்சியிற் பட்டுத் துன்புறுகின்ற உயிர் அதினின்றும் நீங்கி நிலைத்து நின்று இன்புறும் நிலை கூத்தப் பெருமானது திருநடனத்தைக் காண்பதனால் கிடைப்பதாகும். அஃது எவ்வாறு என்பதைக் காண்போம்.
பிறவிக்குக் காரணம் அஞ்ஞானம். அஞ்ஞானம் என்பது இறைவனை அறியாதிருத்தலே. எனவே, இறைவனை அறிந்து கொள்ளுதல் தான் ஞானம் என்பதும், அந்த ஞானத்தால் பிறவி அறும் என்பதும் விளங்கும். இறைவனது திருநடனம் ஐந்தொழில்களைக் குறிப்பதாகும். ஐந்தொழில்களை இறைவன் இயற்றுதல் உயிர்களின் பிறவித் தொடர்ச்சியை அறுத்தற் பொருட்டேயாகும். உயிர்கள் அளவில்லாமல் இருத்தலின், அவைகளின் பொருட்டுச் செய்யப்படுகின்ற ஐந்தொழில்களுக்கும் தோற்றமும் இல்லை. முடிவும் இல்லை. எனவே உயிர்களின் பொருட்டு இறைவன் ஐந்தொழில் நடனத்தை இடையறாது புரிந்து நிற்கின்றான். இந்நடனம் இறைவனது ஐந்தொழிலை உணர்த்தி, அவனை உணரும் ஞானத்தைத் தருவதாகும். இந்நடனத்தின் பொருளை உணர்ந்து விரும்பித் தொழுவார்க்கு ஞானம் உண்டாகி, அதனால் பிறவி அறும், அழிவிலா ஆனந்தம் விளையும். அது பற்றியே, கருணை உருக்கொண்டு ஆடல் பேணுமவர்க்கு உண்டோ பிறப்பு என்றார் ஆசிரியர்.
ஆடல் காணும் அம்மை
உமையம்மை காணும்படி நின்று சிவபெருமான் திருக்கூத்து இயற்றுகிறான் என்பதை வரைமகள் தான் காணும்படி என்று இந்நூலும், இவ்வாறே பிற நூல்களும் கூறிச் செல்லும். அதன் பொருள்தான் என்ன? சிவன் செய்யும் கூத்தினை உமை காணுதலாவது, சிவனது செயலை உயிர்கட்குச் சேர்ப்பித்தல் என்று பொருள் கூறுவர். இதனை மேலும் விரித்துக் கூறினால்தான் பொருள் இனிது விளங்கும். நாம் செய்யும் செயல்களுக்கு, நமக்கு வாய்த்துள்ள உடல், கருவி முதலியவை உடனின்று உதவுகின்றன. நாம் ஓரிடத்திற்குச் செல்ல வேண்டும் என்றால், நம் உடம்பானது இயங்கி அச்செயலை நிறைவேற்றுகிறது. நாம் ஒருவருக்கு ஒரு பொருளை எடுத்துக் கொடுக்க வேண்டும் என்றால் நம் கைகள் இயங்கி அச் செயலை முற்றுவிக்கின்றன. உடம்பும் கருவிகளும் இவ்வாறு உதவினாலும் அச் செயல்கள் நம் செயல்களே. கொடுத்தலையும், எடுத்தலையும் செய்தவர் நாம். அதற்குக் கருவிகள் உடனின்று உதவின. அதுபோல, இறைவன் செய்யும் செயல்களுக்கு அவனது சத்தியே தனு, கரணம் முதலிய எல்லாமாய் நின்று செயல்களை முற்றுவிக்கும்.
நங்கையினால் நாம் அனைத்தையும் செய்கிறோம். அதுபோல, நங்கையினால் இறைவன் அனைத்தையும் செய்கிறான். முதலில் உள்ள நங்கை என்பது நம் கை எனப்பிரிந்து பொருள்தரும். பின்னுள்ள நங்கை என்பது பெண் எனப் பொருள்பட்டு இறைவனது சத்தியைக் குறிக்கும். இதனால், இறைவனே செயலைச் செய்பவனாக, சத்தி அதனை முற்றுவிக்கும் துணையாக உள்ளமை விளங்கும். எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள் என்பது அறியத்தகும். ஞானத்தை உணர்த்தி வீடு அளித்தல் இறைவனது செயல். அச் செயலைச் சத்தியே உயிர்களிடத்தில் உடனாய் நின்று செய்கிறது. முன்னர் அது திரோதான சத்தி என்ற பெயரும் நிலையும் கொள்கிறது. மலங்களைச் செயற்படுத்தி அவற்றின் வழியில் நின்று உயிர்களைச் செலுத்துகிறது. பிறப்பு இறப்புக்களையும் இன்பத் துன்பங்களையும் மாறி மாறிக் கொடுக்கிறது.
திரோதான சத்தி எல்லாவுயிர்களிடத்திலும் ஒரே வகையாகச் செயற்படுவதில்லை. ஒவ்வொரு உயிரும் பக்குவ நிலையில் வேறுபாடு உடையது. ஆதலால், அந்தந்த உயிரின் நிலைக்கு ஏற்ப வெவ்வேறு வகையில் அவற்றைச் செலுத்தி அவற்றின் அறியாமையைச் சிறிது சிறிதாக நீக்கி அறிவைப் படிமுறையில் வளர்த்து வருகிறது. குமர குருபர சுவாமிகள் இதற்கு ஓர் அருமையான எடுத்துக் காட்டுத் தருகிறார். கைக்குழந்தை நோய்வாய்ப்படுகிறது. அந்நோய்க்குரிய மருந்தை நேரே கொடுத்தால் மென்மையான அக்குழந்தையின் பசுங்குடல் அம்மருந்தின் வேகத்தைத் தாங்காது. அதனை உணர்ந்த தாய் அம்மருந்தைத் தான் உண்டு பால் வழியாக அம்மருந்தின் பயனைக் குழந்தை பெறும்படி செய்கிறாள்.
பாலுண் குழவி பசுங்குடர் பொறாதென
நோயுண் மருந்து தாய்உண் டாங்கு (சிதம்பர மும்மணிக் கோவை, செ.2)
திரோதான சத்தியாகிய தாய் இதுபோன்ற செயலைத் தான் செய்கிறாள். அறியாமைதான் உயிர்களிடமுள்ள நோய். மெய்யறிவுதான் அதற்குரிய மருந்து. அம் மெய்யறிவை ஒரே காலத்தில் ஒருங்கே அளித்தால் உயிர் அதனை ஏற்றுக் கொள்ள இயலாது. உயிரின் பக்குவக் குறைபாடே அதற்குக் காரணம். ஆதலால் உலக நுகர்ச்சியாகிய பால் வழியாக மெய்யுணர்வைச் சிறிது சிறிதாகப் புகட்டி, அதன் அறியாமையைப் போக்கி, உண்மையைப் படி முறையில் உணரும்படி செய்கிறாள். எனவே, கூத்தப் பெருமானின் பக்கலில் நின்று ஆடல் காணும் அம்மை சிவகாமவல்லி திருக்கூத்தை முற்றக் கண்டு அதன் பயனாகிய ஞானத்தைப் பல்லுயிர்களுக்கும் அவற்றின் பக்குவ நிலைகளுக்கு ஏற்றவாறு ஊட்டி, அவற்றின் பாசப் பற்றை அறுத்து, உணர்வைவளர்த்து வரும் தாய் ஆவாள் என்பது உளங் கொள்ளுதற்குரியது.
சாதனம்
திருவைந்தெழுத்து
மந்திரங்களுள் தலையாயது
மந்திரம் என்பதற்கு நினைப்பவரைக் காப்பது என்பது பொருள். நினைப்பவரைக் காப்பது இறைவனது திருவருளேயன்றி வேறொன்று அன்று ஆதலால் உண்மையில் மந்திரமாய் இருப்பது திருவருளே. ஆயினும் அது சொற்களையும் சொற்றொடர்களையும் தனக்கு இடமாகக் கொண்டு அவற்றின் வாயிலாகவே புத்தி, முத்தி ஆகிய பயன்களைத் தருதலால், அச்சொற்களும் சொற்றொடர்களும் உபசார முறையில் மந்திரங்கள் எனப்படுகின்றன. மந்திரங்களுள் தலையாயது திருவைந்தெழுத்து ஆகும். அது ஞானத்தைத் தரும் மறைமொழியாகும். வடமொழியில் அது பஞ்சாக்கரம் எனப்படும். முந்திய பகுதியில் திருவைந்தெழுத்து சிவனது உருவமாய் உள்ள நிலையை அறிந்தோம். இப்பகுதியில் திருவைந் தெழுத்தின் பொருள் நிலையையும், அதனை ஓதும் முறையையும் உணர்த்துகிறார் ஆசிரியர்.
திருமுறைகளில்
நகாரம் முதலாக அமைவது தூல பஞ்சாக்கரம் எனப்படும். திருமுறைகளில் நமச்சிவாய என்னும் இத்தூல பஞ்சாக்கரமே மிகுதியாக எடுத்தோதப்பட்டுள்ளது. நமச்சிவாய என்று இடையில் மெய்யெழுத்தை மிகுத்துச் சொன்னாலும் மெய்யெழுத்து எண்ணப்படாமல் எழுத்து ஐந்து என்றே கொள்ளப்படும். இனி, சிகாரம் முதலாக அமைவது சூக்கும பஞ்சாக்கரம் எனப்படும். திருமுறைகளில் சிவாயநம என்னும் இச் சூக்கும பஞ்சாக்கரம் சிறுபான்மையாகச் சில இடங்களில் எடுத்தோதப்பட்டுள்ளது. நாலாந் திருமுறையில் ஈன்றாளுமாய் என்னும் திருப்பதிகத்தில்
சித்தம் ஒருக்கிச் சிவாயநம என்று இருக்கினல்லால்
அத்தன் அருள்பெற லாமோ, அறிவிலாப் பேதை நெஞ்சே
எனவும்,
திருவாய் பொலியச் சிவாயநம என்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி நீ பாதிரிப் புலியூர் அரனே
எனவும், எட்டாம் திருமுறையில் திரு ஏசறவு என்னும் பகுதியில்
நானேயோ தவம் செய்தேன் சிவாயநம எனப் பெற்றேன் எனவும் வரும் இடங்களைச் சுட்டலாம்.
திருவைந்தெழுத்தின் பொருள் நிலை
திருவைந்தெழுத்து மந்திரத்தை சிகாரம் முதலாகக் கொண்டு நோக்கினால் அம்மந்திரம் மூன்று கூறாய் நிற்பது புலனாகும்.
சிவா என்பது முதற்கூறு.
ய என்பது இரண்டாம் கூறு
நம என்பது மூன்றாம் கூறு
சிவா என்பது பதியையும், ய என்பது பசுவையும், நம என்பது பாசத்தையும் குறிக்கும். முதற் கூறில் உள்ள சிகாரம் சிவனையும் வா என்பது அவனது அருட்சத்தியையும் குறிக்கும். மூன்றாம் கூறில் உள்ள மகாரம் ஆணவத்தையும், நகாரம் திரோதான சத்தியையும் குறிக்கும். மாயை கன்மங்கள் திரோதான சத்திக்குக் கருவியாய் அதன் வழிபட்டு நிற்றலின் அதனுள் அடங்கும். நடுவில் உள்ள ய ஆகிய உயிர் இருபக்கமும் சென்று பாசத்தோடும் பதியோடும் நிற்கும் தன்மையுடையது. யகாரம் ஆகிய உயிர் பின்னுள்ள மகாரம் ஆகிய ஆணவ மலத்துட்பட்டு அறியாமையில் அழுந்தியும், நகாரம் ஆகிய இறைவனது திரோதான சத்தியால் செலுத்தப்பட்டு மாயை கன்மங்களைப் பொருந்தி உலக நுகர்ச்சியில் அழுந்தியும் வரும். எனவே, நம ஆகிய ஈரெழுத்துக்களும் முறையே சகல நிலையையும் கேவல நிலையையும் குறிக்கின்றன என்பது புலனாகும். உயிர் நம வில் அழுந்தியிருக்கும் நிலையே கட்டு நிலையாகும். ய ஆகிய உயிருக்கு முன்னுள்ள சி, வா என்பவை தந்தையும் தாயுமாய் உள்ள சிவமும், அதனைப் பிரியாத திருவருளும் உயிருணர்வில் உடன் கலந்திருப்பதை உணர்த்தும். உயிர் தனக்கு முன்னாக உள்ள அம்மையப்பரைத் தன் அறிவின்கண் காண முற்படாமல், உலகத்தை மட்டுமே அறிந்து அனுபவித்து வருகிறது. உயிர் நம வை விடுத்து, வா ஆகிய திருவருளைச் சார்ந்து நிற்பதே சுத்த நிலையாகும். திருவருள் உயிரைச் சிவத்திடம் சேர்ப்பிக்கும். உயிர் சிவத்தில் அழுந்தி நிற்பதே இன்புறு நிலையாகும்.
பஞ்சாக்கரத்தின் வகைகள்
தூல பஞ்சாக்கரம், சூக்கும பஞ்சாக்கரம் என்பவற்றின் பெயர்க் காரணத்தைப் பின்வருமாறு சொல்லலாம். திருவைந்தெழுத்தை நகாரம் முதலாகச் சொல்லுங்கால் அது ஒரு தொடர் மொழியாய் நின்று சிவனுக்கு வணக்கம் என்னும் ஒரு பொதுப்பொருளையே தந்து நிற்றலால் தூல பஞ்சாக்கரம் எனப்படுகிறது. சிகாரம் முதலாகச் சொல்லுமிடத்து ஒவ்வொர் எழுத்தும் ஒவ்வொரு நுண் பொருளைக் குறித்து, உயிர் பாசங்களின் நீங்கித் திருவருள் வழியாகச் சிவத்தை அடைதல் வேண்டும் என்னும் சிறப்புப் பொருளைத் தந்து நிற்றலால் அது சூக்கும பஞ்சாக்கரம் எனப்படுகிறது. தூல பஞ்சாக்கரம் சமய தீக்கையிலும், சூக்கும பஞ்சாக்கரம் விசேட தீக்கையிலும் உபதேசிக்கப்படும் விசேட தீக்கை பெறுவோர் உலகியல் பற்று ஓரளவேனும் நீங்கியவராய் இருத்தல் வேண்டும். இதனால் சரியையில் நிற்போர் திருவைந்தெழுத்தை நகாரம் முதலாக உச்சரித்தல் வேண்டும் என்பதும், கிரியையிலும் யோகத்திலும் நிற்போர் சிகாரம் முதலாக உச்சரித்தல் வேண்டும் என்பதும் விளங்கும்.
இனி, உலகப்பற்று அற்று ஞானத்தில் வேட்கை கொண்டு ஞானநெறியிற் செல்லும் பக்குவர்க்கு உரியது முத்தி பஞ்சாக்கரம். நகாரம் மகாரம் ஆகிய பாச எழுத்துக்கள் நீங்க நிற்கும் சிவாய என்னும் மூன்றெழுத்தே முத்தி பஞ்சாக்கரம் எனப்படும். அதிசூக்கும பஞ்சாக்கரம் என்றும் கூறப்படும். ஞானாசிரியர் நிருவாண தீக்கை செய்து ஐந்தெழுத்தை இங்குக் கூறியவாறு மூன்றெழுத்தாக வைத்து உபதேசிப்பார். அவ்வுபதேசத்தைப் பெற்ற பக்குவ ஆன்மா அம்மூன்றெழுத்தை மட்டுமே மந்திரமாகக் கொண்டு, அதன் பொருளில் தன் அறிவை இடைவிடாது நிறுத்தி அப்பொருளை உணர்ந்து உணர்ந்து நிற்கும். அதனால் வினை நீங்கும். வினை நீங்கவே திருவருள் இனிது விளங்கும். திருவைந்தெழுத்தைப் பற்றி இது காறும் கூறிய விளக்கத்தைக் கருத்திற் கொண்டு இனிச் செய்யுட்களை நோக்குவோம்.
அஞ்செழுத்தைப் பற்றிய ஐயம்
39. நாதாந்த நாடகத்தை நன்றா அருள்செய்தீர்
ஓதீர் எழுத்து அஞ்சும் உள்ளபடி தீதுஅறவே
அஞ்சு எழுத்துஈது ஆகில் அழியும் எழுத்து ஆய்விடுமோ
தஞ்ச அருள்குருவே சாற்று.
பதவுரை
தஞ்ச அடியேனுக்குப் புகலிடமாக உள்
அருட்குருவே அருள் உருவாகிய குருமுதல்வரே,
நாத அந்த நாதம் முடிவாக உள்ள முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்த
நாடகத்தை திருக்கூத்தின் இயல்பை
நன்றா யான் தெளியும் படி
அருள்செய்தீர் உணர்த்தினீர்.
தீது அறவே (இனி) மலவாதனை கெடும்படி
எழுத்து அஞ்சும் திருவைந்தெழுத்தின் பொருள் நிலையை
உள்ளபடி உள்ளவாறு
ஓதீர் உணர்த்தியருள வேண்டும்.
ஈது அஞ்செழுத்து ஆகில் இறைவனது திருப்பெயராகிய இஃது ஐந்து எழுத்து எனப்படுமாயின்
அழியும் எழுத்தாய் விடுமோ மற்ற எழுத்துக்கள் போல இவையும் அழியும் தன்மை உடையன ஆகுமோ?
சாற்று கூறியருள்வீராக.
பொழிப்புரை
அடியேனுக்குப் புகலிடமாக உள்ள அருட்குருவே, அம்பலவாணர் ஆடும் திருக்கூத்தின் இயல்பை யான் தெளியும்படி உணர்த்தியருளினீர். இனி, திருவைந்தெழுத்தின் பொருள் நிலையை உள்ளவாறு உணர்த்தியருள வேண்டும். இறைவனது திருப் பெயர் எனப்படும் ஐந்தெழுத்து ஏனைய எழுத்துக்கள் போல அழியும் தன்மை உடையன ஆகுமோ? இவ் ஐயத்தை நீக்கியருள வேண்டும் என்று மாணவர் வேண்டுகிறார்.
அழியா எழுத்து
40. உற்ற குறிஅழியும் ஓதுங்கால் பாடைகளில்
சற்றும் பொருள்தான் சலியாது மற்றுஅது கேள்
ஈசன்அருள் ஆவி எழில்ஆர் திரோதமலம்
ஆசுஇல் எழுத்து அஞ்சின் அடைவு ஆம்
பதவுரை
ஓதுங்கால் ஆராய்ந்து சொல்லுமிடத்து
பாடைகளில் மொழிகளில்
உற்ற பொருளுக்கு அமைந்த
குறி பெயராகிய குறி
அழியும் அழிந்து போகும். பொருள்களும் அங்ஙனமே.
(ஆனால் சிவனது பெயராகிய அஞ்செழுத்து அழியா இயல்பினது. அவ்வாறே)
பொருள்தான் அஞ்செழுத்தால் உணர்த்தப்படும் பொருளும்
சற்றும் சிறிதும்
சலியாது அழிவதில்லை
மற்று அது கேள் அவ்வஞ்செழுத்தின் பொருள் நிலையைக் கேட்பாயாக.
ஈசன் சிவனும்
அருள் திருவருளும்
ஆவி உயிரும்
எழிலார் திரோதம் எழுச்சியுள்ள மறைத்தற் சத்தியும்
மலம் மூல மலமும்
ஆசு இல் குற்றமில்லாத
எழுத்து அஞ்சின் திருவைந்தெழுத்தின்
அடைவு ஆம் பொருள்களாம்.
பொழிப்புரை
பெயர்கள் யாவும் எழுத்துக்களால் ஆனவை. எழுத்துக்கள் தோற்றமும் இறுதியும் உடையன. ஆகவே அனைத்துப் பெயர்களும் தோன்றி அழிவன ஆகின்றன. ஆனால் சிவ நாமமாகிய ஐந்து எழுத்துக்கள் ஏனைய எழுத்துக்கள் போல் ஆவன அல்ல. அவை அழியா இயல்பின. அவற்றால் குறிக்கப்படும் பொருள்கள் சிவனும், திருவருளும், உயிரும், திரோதான சத்தியும், மலமும் ஆகும்.
விளக்கம்
திருவைந்தெழுத்தைச் சிகாரம் முதலாக வைத்து இப்பொருள்களைக் கண்டு கொள்க.
நிற்கும் முறை, ஓதும் முறை
41. சிவனருள் ஆவி திரோதம்மலம் ஐந்தும்
அவன் எழுத்து அஞ்சின் அடைவாம் இவன்நின்று
நம்முதலா ஓதில் அருள் நாடாது நாடும் அருள்
சிம்முதலா ஓதுநீ சென்று
பதவுரை
சிவன் அருள் ஆவி திரோதம் மலம் ஐந்தும் மேற்கூறியபடி சிவன், திருவருள், உயிர், மறைத்தற் சத்தி, மூல மலம் ஆகிய ஐந்தும்
அவன் எழுத்து அஞ்சின் அச்சிவனது பெருநிலையை நினைப்பிக்கும் ஐந்தெழுத்தின்
அடைவு ஆம் பொருளாகும்
இவன் சாதகன்
நின்று உலகியலில் நின்று
ந முதலா ஓதில் நகாரத்தை முதலாக வைத்து ஓதும் முறையை மேற்கொண்டால்
அருள் நாடாது அவனது உணர்வில் திருவருள் வெளிப்படாது.
(ஆதலால்)
நீ திருவருளைத் தலைப்பட விரும்புகின்ற நீ
சென்று உலகியலின் நீங்கிச் சென்று, வீட்டு நெறியில் உன் உணர்வை முழுதும் ஈடுபடுத்தி நின்று
சி முதலா ஓது சிகாரத்தை முதலாக வைத்து ஓதுவாயாக.
அருள் நாடும் அப்போது திருவருள் பாசமாம் பற்றை அறுத்து உன் உணர்வில் வெளிப்பட்டுத் தோன்றும்
பொழிப்புரை
மேற்கூறியபடி திருவைந்தெழுத்தில் ஒவ்வோர் எழுத்திற்கு ஒவ்வொரு பொருள் அமையும். திருவருளைப் பெற விரும்புவோன் உலகியலில் நின்று நகாரத்தை முதலில் வைத்து ஓதினால் திருவருள் வெளிப்படாது. உலகியலிலிருந்து நீங்கி, வீட்டு நெறியில் அறிவை நெறிப்படுத்தி நின்று, சிகாரத்தை முதலில் வைத்து ஓதினால் திருவருள் உன் உணர்வில் வெளிப்பட்டுத் தோன்றும். ஆகலின் நீ அவ்வாறு நின்று, அவ்வாறு ஓதுக.
விளக்கம்
நகாரம் முதலாக வைத்து ஓதுவார்க்கு உலகப் பயன் கிடைக்கும். உலகப் பயனில் நாட்டமின்றிப் பிறவி நீக்கத்தை வேண்டுவோர் சிகாரம் முதலாக ஓதுதல் வேண்டும் என்பது இங்கு உணர்த்தப்பட்டது.
பயன்
42. அண்ணல் முதலா அழகுஆர் எழுத்துஐந்தும்
எண்ணில் இராப்பகல் அற்றஇன்பத்தே நண்ணி
அருளானது சிவத்தே ஆக்கும் அணுவை
இருளானது தீர இன்று
பதவுரை
அழகு ஆர் மெய்யுணர்ந்தோர் விரும்பும் தன்மை உடைய
எழுந்து ஐந்தும் திருவெழுத்து ஐந்தையும்
அண்ணல் முதலா அண்ணலாகிய சிவ பெருமானைக் குறிக்கும் சிகாரம் முதலாக வைத்து
எண்ணில் எண்ணி வந்தால்
அருளானது அந்நிலையில் வெளிப்பட்டுத் தோன்றும் திருவருள்
அணுவை உயிரை
இராப் பகல் அற்ற கேவலமும் சகலமும் நீங்கிய
இன்பத்தே இன்ப ஒளி தோன்றும் அருள் நிலையில்
நண்ணி நண்ணவைத்து,
இன்று அப்பொழுது
இருளானது ஆணவ மலத்தின் வாசனை
தீர பற்றறக் கழிய,
சிவத்தே முடிநிலையாகிய சிவானந்தத்தை
ஆக்கும் நுகரச் செய்யும்.
பொழிப்புரை
திருவெழுத்து ஐந்தையும் அண்ணலாகிய சிவனைக் குறிக்கும் சிகாரம் முதலாக வைத்து இடையறாது எண்ணி வந்தால், திருவருள் வெளிப்பட்டு உயிரைக் கேவலமும் சகலமும் நீங்கிய அருள் நிலையில் சேர்க்கும்; எல்லையற்ற சிவானந்தத்தை நுகரச் செய்யும்; அந்நிலையில் இருளான ஆணவ மலம் பற்றறக் கழியும்.
விளக்கம்
இராப்பகல் அற்ற இடம்
அறியாமையைக் கேவலம் என்றும், அறிவுநிலையைச் சகலம் என்றும் நூல்கள் குறிப்பிடும். மேலும், அறியாமையாகிய கேவலத்தை இரவு என்று குறியீட்டினாலும், அறிவு நிலையாகிய சகலத்தைப் பகல் என்ற குறியீட்டினாலும் உணர்த்தும். புறவுலகில் இரவும் பகலும் மாறி மாறி வருவதைப் போல உயிருணர்வில் கேவலமும் சகலமும் ஆகிய அறியாமையும் அறிவும் ஆகிய இரவும் பகலும் மாறி மாறி வருகின்றன. உயிருக்கு அமைந்த சார்புகள் இரண்டு. ஒன்று, அசத்தாகிய கருவி கரணங்களின் சார்பு. மற்றொன்று, சத்தாகிய திருவருட் சார்பு. அசத்தாகிய ஐம்பொறி முதலிய கருவிகளின் சார்பு இடையில் வந்தது. ஆகவே அஃது உயிருக்குச் செயற்கையான சார்பாகும். திருவருட் சார்பே என்றும் உள்ள இயற்கையான சார்பாகும்.
செயற்கையாகிய கருவிகளின் சார்பு நீங்கினால் அப்பொழுதே உயிர் திருவருட் சார்பைப் பெற்றுவிடும். மனம் முதலிய கருவிகள் நம்மோடு எப்போதும் உடனாகவே நிற்கின்றனவே; அவற்றை விட்டு நீங்குவது எப்படி? என வினவலாம். இங்கே, நீங்குதல் என்றால் அறிவால் நீங்குதல் ஆகும். அஃதாவது, கருவி கரணங்கள் நமக்கு வேறானவை எனத் தெளிய உணர்ந்து, அவற்றினிடத்துப் பற்றுச் செய்யாது, அவற்றின் வசப்படாது நிற்றலாகும். இங்கு ஓர் ஐயம் எழலாம். ஐம்பொறி, மனம் முதலிய கருவிகள் நீங்கினால் உயிர் யாதொன்றையும் அறியமாட்டாது கேவலமாகிய அறியாமையை அல்லவா தலைப்படும்? கருவிகள் நீங்க நீங்க உயிர் உறக்கம் பேருறக்கம் முதலிய நிலைகளை அடைவது இதைத்தானே காட்டுகிறது. அங்ஙனமாக, உயிர் கருவிகளை நீங்கினால் திருவருட் சார்பைப் பெறும் என்று கூறுவது எவ்வாறு பொருந்தும்? என்பதே அவ் ஐயம்.
ஓர் உண
்மையைத் தெரிந்து கொண்டால் இவ்ஐயம் நீங்கிவிடும். கருவிகள் சோர்வுற்றுச் செயற்படாமல் மடங்கித் தாமாகவே நீங்கும் பொழுதுதான் உயிருக்கு அறியாமை உண்டாகும். அவ்வாறின்றிக் கருவிகள் நன்கு செயற்படும் பொழுது, அவை நாமல்ல; நமக்கு வேறானவை என்று கண்டு நீங்கினால், அவற்றின் வசப்படாது நின்றால் உயிர் திருவருளைச் சேர்ந்து விடும். இங்ஙனம் கருவிகளையும், அவற்றால் வரும் புலன் உணர்வுகளையும் நீங்கி உயிர் திருவருளைச் சேர்ந்து நிற்றலையே இரவு பகல் அற்ற இடத்தில் இருப்பதாக நூல்கள் கூறும். திருவருட் சார்பு இரவு பகலற்ற இடமாதல் எப்படி என்பதை நோக்குவோம். உயிர் திருவருள் ஒளியில் நிற்கும் பொழுது அறியாமையாகிய கேவலம் எப்படித் தலைகாட்டும்? ஆகவே அஃது இரவு என்பது நீங்கிய இடம் ஆகிறது. அதுகாலை கருவிகள் செயற்பட்டுச் சிற்றறிவைத் தருமாயினும் திருவருளால் வியாபக அறிவு விளங்கிய பிற்பாடு அச்சிற்றறிவு என்ன பயனைச் செய்யும்? எல்லாவற்றையும் விளங்கக் காட்டும் சூரியவொளி வந்த பின்னர் எரிகின்ற விளக்கின் சுடர் போன்றது அச் சிற்றறிவு எனலாம். உயிர் பேரறிவாகிய திருவருள் ஒளியில் நிற்கும் பொழுது சிற்றறிவாகிய சகலம் எப்படித் தலைகாட்டும்? ஆகவே அது பகல் என்பது நீங்கிய இடமாகிறது. இவ்வாறு திருவருள் ஞானத்தால் உயிர்க்கு அறியாமையும், சிற்றறிவும் நீங்கி விடுதலால் திருவருட் சார்பு இரவு பகலற்ற இடம் எனக் கூறப்படுகிறது. இதனையே இச்செய்யுள் இராப் பகலற்ற இன்பத்தே எனக் குறிப்பிடுகிறது.
இருள் நீக்கமும் இன்பத் தோற்றமும்
மேற்கூறியவாறு, உலக வாழ்வில் உள்ள போதே திருவருளில் அழுந்தி நிற்கும் நிலை துரிய அருள்நிலை எனப்படும். இந்நிலை முதல்வனது அருளைச் சேர்ந்த நிலையே தவிர, முதல்வனைச் சேர்ந்த நிலையாகாது. இதற்கு ஓர் உவமை கூறுவோம். கண் விளக்கொளியோடு கூடி அதனால் தன்னிடத்துள்ள இருள் நீங்கப் பெறுகிறது. அந்நிலையில் கண் விளக்கொளியைக் கண்டதேயன்றி விளக்கொளிக்கு முதலாய் உள்ள விளக்கைக் கண்டது ஆகாது. கண் முதலிற் கண்ட விளக்கொளி வழியாகப் பின்னர் விளக்கை நோக்கிக் காணும் போதே அது விளக்கைக் கண்ட காட்சியாகிறது. அதுபோல, உயிர் திருவருளோடு கூடிய நிலையில் அது திருவருளைக் கண்ட காட்சியே தவிரத் திருவருளுக்கு முதலாகிய சிவத்தைக் கண்ட காட்சியாகாது. உயிர் முதலிற் கண்ட திருவருள் வழியாகப் பின்னர் சிவத்தை நோக்கிக் காணும் போதே அது சிவத்தைக் கண்ட காட்சியாகிறது. கண் விளக்கொளியைச் சேர்ந்து அதனால் தன்னிடத்துள்ள இருளை நீக்கிக் கொள்வது போல உயிர் திருவருளைச் சேர்ந்து தன்னிடத்துள்ள ஆணவ மலமாகிய இருள் நீங்கப் பெறுகிறது. இதனையே, இருளானது தீர இன்று என்று குறிப்பிட்டது இவ்வுண்மை விளக்கச் செய்யுள்.
மேற்கூறிய கண் உவமையில், கண் பெறும் ஒளிவிளக்கமும், இருள் நீக்கமும் உடன் நிகழ்ச்சியாய் ஒருங்கு நிகழ்கின்றன. ஆயின் அவற்றோடு விளக்கினது காட்சியும் உடன் நிகழவில்லை என்பது அறியற்பாலது. அதுபோல, உயிரிடத்து அருள் விளக்கமும் ஆணவ மலமாகிய இருள் நீக்கமும் உடன் நிகழுமேயன்றிப் பேரின்பமாகிய ஆனந்த விளக்கம் உண்டாகாது. ஆனந்த விளக்கம் அருளின் வழியே அவ்வருளுக்கு முதலாய் உள்ள சிவத்தை அணைதலினாலேயே உண்டாகும். முன்னர் நிகழும் அருள் விளக்கத்தில் தோன்றுவது சுகப் பிரபை எனப்படும் இன்பத் தோற்றமே யன்றிப் பரம சுகம் எனப்படும் பேரின்பம் அன்று. இச்செய்யுளில், இராப் பகலற்ற இன்பத்தே நண்ணி என்ற வரியில் இன்பம் என்று குறிக்கப் பெறுவது இன்பத் தோற்றத்தை எனவும், அடுத்த அடியில் சிவத்தே ஆக்கும் என்றது பின்னர் விளையும் சிவானந்தமாகிய பேரின்பத்தை எனவும் கொள்ளுதல் வேண்டும். உயிர் திருவருளைச் சேர்தலினால் இருள் நீக்கமும் இன்பத் தோற்றமும் உண்டாகும் என்பதும், முடிவாகச் சிவத்தை அணைதலினால் பேரின்பத்தை நுகரும் என்பதும் இச் செய்யுளில் உணர்த்தப் பெற்றன.

No comments:
Post a Comment