காசி: கங்கைக் கரையிலுள்ள புனிதமான தலம் காசி. இங்குள்ள விஸ்வநாதர் ஆலயமும், விசாலாட்சி ஆலயமும், அன்னபூரணி ஆலயமும் மிகவும் போற்றப்படுபவை ஆகும். காசியில் தர்ப்பணம் செய்வதை சாஸ்திரங்கள் சிறப்பாகச் சொல்கின்றன.
கயா: காசியிலிருந்து கயாவுக்குச் செல்ல வேண்டும். கயாவில் விஷ்ணு கயா, புத்த கயா என்று இரு பகுதிகள் உள்ளன. விஷ்ணு கயாவில் ஓர் ஆலமரம் உள்ளது. அந்த மரத்தின் அடிப்பகுதியில் விஷ்ணு பாதங்கள் இருக்கின்றன. இங்கு சிராத்தம் தந்தால் பாவங்கள் அழியும்.
பத்ரிநாத் : இமய மலையில் உற் பத்தியாகி ஓடி வரும் கங்கை, ஹரித்வாரில் பூமியை வந்தடைகி றது. அதற்கு மேற்புறம் இமய மலையில் உள்ள தலங்களில் கேதார்நாத், பத்ரிநாத், ரிஷி கேஷ் போன்ற தலங்கள் முக்கிய மானவை ஆகும். பத்ரிநாத்தில் தர்ப்பணம் தருவது சிறப்பு.
திருக்கோகர்ணம்: காசியிலும் ஒரு பங்கு அதிகம் கோகர்ணம். இதற்கு இணையான தலம் மூவு லகிலும் இல்லை என்பர். இங்கு 33 தீர்த்தங்கள் உள்ளன. இவற் றுள் முக்கியமானது கோடி தீர்த்தம். இங்கு வருபவர்கள் கோடி தீர்த்தத்தில் நீராடிய பின், கடல் நீராட வேண்டும். பிறகு தர்ப்பணம் செய்தால் வாழ்வு வளம் பெறும். கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து பேருந்து மூலமாக திருக்கோகர்ணம் செல்லலாம்.
திலதர்ப்பணபுரி: நாகை மாவட்டத்தில் பூந்தோட்டத் துக்கு அருகில் உள்ள ஊர் திலதர்ப்பணபுரி. இந்த ஊரில் முக்தீஸ்வரர் கோயிலுக்கு வெளியே சந்திர தீர்த்தம் உள்ளது. இங்கு அரிசல் ஆறு ஓடுகிறது. இங்குதான் ராமனும் லட்சுமணனும் தன் தந்தை தசரதனுக்கும், ஜடாயுவுக்கும் தில தர்ப்பணம் செய் தனர். அரிசலாற்றில் நீராடி தர்ப்பணம் செய்து முக்தீஸ்வரரையும் சுவர்ணவல்லியையும் வழிபட்டால் சகல வளங்களையும் பெறலாம்.
திருவெண்காடு: இந்தத் தலம் புதன் தலமாகும். இங்கே உள்ளே சிவன் கோயிலில் சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் என்று மூன்று தீர்த்தங்கள் உள்ளன. இந்தத் தீர்த்தங்களில் நீராடினால் பாவங்கள் நீங்கும். சந்திர தீர்த்தத்துக்கு அருகில் ஓர் ஆலமரம் இருக்கிறது. இந்த ஆல மரத்தின் அடிப் பகுதியில் ‘ருத்ர பாதம்’ இருக்கிறது. இங்கே சிவபெருமானின் திருவடிகள் வரையப்பட்டுள்ளன. இந்த ஆலமரத்தின் அருகில் திதி - தர்ப்பணங்களைச் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
கும்பகோணம்: இங்குள்ள மகாமகக் குளத்தில் நீராடி அங்குள்ள படித் துறையில் தர்ப்பணம் தருவது சிறப்பாகக் கருதப்படுகிறது. இங்கு அருகில் உள்ள ஆல மரத்தின் அடிப்பகுதியில் நீத்தாரை நினைத்து வழிபட்டு தான- தர்மங்கள் செய்வதை சாஸ்திரங்கள் சிறப்பாகச் சொல்கின்றன.
ராமேஸ்வரம்: இந்தத் தலத்தில் 64 தீர்த்தங்கள் இருக் கின்றன. இதில் சிறப்பாகப் பேசப்படுவது அக்னி தீர்த்த மும், கோடி தீர்த்தமும் ஆகும். அக்னி தீர்த்தமான கட லில் மூழ்கி நீராடி தர்ப்பணம் முதலிய காரியங்கள் செய்தால், சகல பாவ தோஷங்களும் நீங்கும் என்பர்.
காவிரி நதிக்கரை, அனைத்தையும் விடச் சிறந்த தாகும். காவிரிக்கரையில் அருள் மிகு ரங்கநாதர் பள்ளி கொண்டிருக்கும் தலங்களில் சாஸ்திர சம்பிர தாயத்துடன் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்தால் சுபமான வாழ்வு கிட்டும் என்பர். முக்கடல் கூடும் கன்யாகுமரியும், காவிரி- கொள்ளிடம் சங்கமமாகும் திருச்சிக்கு அருகிலுள்ள முக்கொம்பு என்ற இடமும் திருவையாற்றுப் படித் துறையும், காவிரிப்பூம்பட்டினமும் நீத்தார் கடன் வழிபாடுகளுக்குச் சிறந்த இடங்களாகும்.
|
Wednesday, 2 August 2017
தர்ப்பணம் செய்யும் ஸ்தலங்கள்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment