அதே நேரத்தில் பஞ்சாட்சரம் ஜபிக்கும் ஒலி காற்றில் மிதந்து வந்தது. இது ஸ்ரீராமனை ஈர்க்க... 'இங்கு அடியவர் ஒருவர் சிவ பூஜை செய்கிறார் போலிருக்கிறது. தரிசித்துக் கிளம்பலாம்!'' என்ற எண்ணத்துடன், அந்தத் திசை நோக்கி நடந்தார்.
அங்கு- சிவ பூஜையில் லயித்திருந்தார் வசிஷ்டர். வசிஷ்டரை வணங்கிய ஸ்ரீராமன், தன் மனக் கலக்கத்தை அவரிடம் விவரித்தார். உடனே, ''கவலை வேண்டாம் ராமா. அருகில் தவசாகிரி என்றொரு தலம் உள்ளது. ஈசன் தவக் கோலத்தில் அருள்பாலிக் கும் இடம் அது. அங்கு சென்று பூஜித்தால் எல்லாம் நலமாகும்!'' என்றார் முனிவர். (வசிஷ்டர் சிவபூஜை செய்த தலம் அரியூர் ஸ்ரீவருணீஸ்வரர் ஆலயம்).
அதன்படி, தவசாகிரியை அடைந்த ஸ்ரீராமன், பூஜைக்காக கங்கையில் இருந்து நீர் எடுத்து வரும்படி அனுமனைப் பணித்தார். காசிக்குச் சென்ற அனுமன் திரும்பி வர கால தாமதமானது. எனவே, தீர்த்தமலையின் பாறைகளில் நீர் கசியச் செய்யுமாறு சிவனாரை வேண்டினார் ஸ்ரீராமன். அப்படியே நடந்தது. அந்தத் தீர்த்தத்தைக் கொண்டு சிவ பூஜையை செய்து முடித்தார்.
வரும் வழியில் இந்தத் தகவலை அறிந்த அனுமன், 'கலசத்தில் எடுத்து வந்த கங்கை நீர் வீணானதே' என்று வருந்தினார். புனித நீர்க் கலசத்தை தனது வாலால் சுழற்றி வீசினார். அது, அருகில் உள்ள ஆற்றில் விழுந்தது. அப்போது அவர் முன் தோன்றிய ஈஸ்வரன், ''ஆஞ்சநேயா, வருந்தாதே! உன்னால் வீசியெறியப்பட்ட கலசம் விழுந்த ஆறு, 'அனுமன் தீர்த்தம்' என்றே இனி அழைக்கப்படும். பக்தர்கள் இதில் நீராடிய பிறகே தவசாகிரி வந்து என்னை வணங்குவார்கள். மட்டுமின்றி, ஸ்ரீராமனின் பிரார்த்தனைக்கு இணங்க பாறையெங்கும் தீர்த்தம் கசியும் தவசாகிரி தலம், 'தீர்த்தமலை' என்று பெயர் பெறும்'' என்று அருளினார்.
எங்கிருக்கிறது தீர்த்தமலை?
தருமபுரியில் இருந்து சுமார் 54 கி.மீ. தொலைவிலும், அரூரில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. அடிவாரத்தில் ஒன்றும், மலைக்கு மேல் ஒன்றுமாக இரண்டு கோயில்கள் உள்ளன. நாம், முதலில் அடிவாரக் கோயிலை தரிசிப்போம்.
அளவில் பெரியதும் சிறியதுமான மூன்று தேர்களைக் கடந்து உள்ளே நுழைந்தால் நந்தி- கொடிமரம். பிராகார வலத்தில்... நாகக் கன்னிகள், சூரியன், ஸ்ரீபைரவர், சந்திரன், ஸ்ரீவல்லப கணபதிமற்றும் ஸ்ரீஆறுமுகர் ஆகிய தெய்வங்களை தரிசிக்கலாம். இங்குள்ள மூலவர் ஸ்ரீதீர்த்த கிரீஸ்வரரையும், அம்பாள் ஸ்ரீவடிவாம் பிகையையும் தரிசித்த பின் மலைக் கோயிலுக்குச் செல்கிறோம்.
மலைக்கு மேல் உள்ள ஸ்ரீராமர் தீர்த்தம், குமார தீர்த்தம், கௌரி தீர்த்தம், அக்னி தீர்த்தம், அகத்தியர் தீர்த்தம் ஆகியவற்றை பஞ்ச புண் ணிய தீர்த்தங்கள் என்று
மலைக்கு மேல் சென்றதும் ஸ்ரீவரசித்தி விநாயகரை வணங்கிய பின் திருக்கோயிலை வலம் வருகிறோம். இங்கு அருள்பாலிக்கும் அம்பாள்- ஸ்ரீவடிவாம்பிகை, ஸ்ரீகாசி விஸ்வநாதர், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஅகத்தீஸ்வரர், ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி, கன்னிமார்கள், ஸ்ரீராமலிங்கசாமி ஆகிய அனைவரும் சாந்நித்தியம் மிகுந்த தெய்வங் களாம். கருவறையில் சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார் ஸ்ரீதீர்த்தகிரீஸ்வரர். தவிர சகஸ்ரலிங்கம், எட்டுத் திருக்கரங்களுடன் அருள் பாலிக்கும் ஸ்ரீதுர்கா பரமேஸ் வரியை வணங்குவது சிறப்பு. தல விருட்சம் பவள மல்லி. இங்குள்ள, பாம்பாட்டி சித்தர் குகையும் தரிசிக்க வேண்டிய ஒன்று!
சித்திரை வருடப் பிறப்பு அன்று... வருடத்தின் 365 நாட்களை குறிக்கும் வகையில் 365 லிட்டர் பாலால் தீர்த்தகிரீஸ்வரருக்கு அபிஷேகம் நடைபெறுமாம். அப்போது, அனுமன் தீர்த்தத்தில் நீராடி, இந்த அபிஷேக- ஆராதனைகளை தரிசித்தால் நலம் விளையுமாம்!
|
Tuesday, 8 August 2017
ஸ்ரீராமர் வழிபட்ட தீர்த்தகிரீஸ்வரர்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment