பின்னர் 12ஆம் நூற்றாண்டில் சேக்கிழார் காலத்தில் 'பெரிய புராணம்' என்று அழைக்கப் பெறும் 'திருத்தொண்டர் புராணம்' 12ஆம் திருமுறையாகச் சேர்க்கப் பட்டது.
இப்பன்னிரு திருமுறைகளையும் பாடி அருளியோர் மொத்தம் 27 அருளாளர்கள். 27 நட்சத்திரங்களைப் போன்று பக்தி வானில் ஒளிர்பவர்கள்.
திருஞானசம்பந்தர் பாடி அருளியவை.
4, 5, 6 திருமுறைகள் (தேவாரம்):
திருநாவுக்கரசர்(அப்பர்) பாடி அருளியவை.
7ஆம் திருமுறை (தேவாரம்):
சுந்தர மூர்த்தி நாயனார் பாடி அருளியவை.
8ஆம் திருமுறை (திருவாசகம், திருக்கோவையார்):
மாணிக்க வாசகர் பாடி அருளியவை.
9ஆம் திருமுறை (திருவிசைப்பா, திருப்பல்லாண்டு):
இத்திருமுறையை அருளிச் செய்தவர்கள் மொத்தம் ஒன்பது அருளாளர்கள்.
1.திருமாளிகைத் தேவர்
2.சேந்தனார்
3.கருவூர்த்தேவர்
4.பூந்துருத்தி நம்பி
5.கண்டராதித்தர்
6.வேணாட்டடிகள்
7.திருவாலியமுதனார்
8.புருடோத்தம நம்பி
9.சேதிராயர்
இவற்றுள் திருப்பல்லாண்டைப் பாடி அருளியவர் சேந்தனார் மட்டுமே. திருவிசைப்பா என்ற பாடல் தொகுப்பை சேந்தனார் உட்பட ஒன்பது திருமுறை ஆசிரியர்களுமே பாடி அருளியுள்ளனர்.
10ஆம் திருமுறை (திருமந்திரம்):
திருமூலர் அருளிச் செய்தவை.
இத்திருமுறையை பாடி அருளியவர்கள் மொத்தம் பன்னிரண்டு ஆசிரியர்கள்.
1.திருஆலவாய் உடையார்
2.காரைக்கால் அம்மையார்
3.ஐயடிகள் காடவர்கோன்
4.சேரமான் பெருமாள்
5.நக்கீரதேவர்
6.கல்லாடதேவர்
7.கபிலதேவர்
8.பரணதேவர்
9.இளம்பெருமான் அடிகள்
10.அதிரா அடிகள்
11.பட்டினத்துப் பிள்ளையார்
12.நம்பியான்டார் நம்பிகள்
12ஆம் திருமுறை (பெரிய புராணம்):
சேக்கிழார் பெருமான் அருளிச் செய்தவை.
திருமுறை ஆசிரியர்களின் பாராயணத் துதி:
திருஞானசம்பந்தர் வாகீசர் சுந்தரர்
திருவாதவூரர் மற்றைத்
திருமாளிகைத் தேவர் சேந்தனார் கருவூரர்
தெள்ளுபூந்துருத்தி நம்பி
வருஞான கண்டராதித்தர் வேணாட்டடிகள்
வாய்ந்த திருவாலியமுதர்
மருவு புருடோத்தமர் சேதிராயர் மூலர்
மன்னு திருஆலவாயர்
ஒரு காரைக்காலம்மை ஐயடிகள் சேரமான்
ஒளிர்கீரர் கல்லாடனார்
ஒண் கபிலர் பரணர் மெய்உணர் இளம்பெருமானோடு
ஓங்கும் அதிராஅடிகளார்
திருமேவு பட்டினத்(து) அடிகளொடு
நம்பியாண்டார் நம்பி சேக்கிழாரும்
சிவநெறித் திருமுறைகள் பன்னிரண்டு அருள்செய்த
தெய்விகத் தன்மையோரே.
No comments:
Post a Comment