சுந்தரர், திருவாரூர் தியாகராஜர் திருக்கோயிலில் பாடி அருளிய ஒப்பற்ற திருப்பதிகம் (பாடப்பட்ட காலம் - 7ஆம் நூற்றாண்டின் இறுதி).
சுந்தரர், தன் சம காலத்திலும், தன் காலத்துக்கு முன்பும் தோன்றிய 60 நாயன்மார்களை, 11 பாடல்கள் கொண்ட இத்திருப்பதிகத்தில் போற்றிப் பாடியுள்ளார்.
ஒவ்வொரு நாயன்மாரின் திருப்பெயர் - வரலாறு இவைகளை ஓரிரு வரிகளில் முறைப்படுத்தித் தொகுத்து, அப்பெருமக்கள் ஒவ்வொருவருக்கும் தான் அடியவன் என்று பாடியருளிய திருப்பதிகம்.
அடியவர் வழிபாட்டின் சீர்மையை எடுத்துரைப்பதால், மூவர் தேவாரம் முழுமைக்கும் இரத்தினம் போன்று விளங்கும் திருப்பதிகம்.
திருவாரூரில் சுந்தரருக்கு இறைவனே 'தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்' என்னும் முதலடியைக் கொடுத்தருளிய சிறப்புப் பொருந்தியது.
11 ஆம் நூற்றாண்டில், 'நம்பி ஆண்டார் நம்பி' சுந்தரர் பாடியருளிய 60 நாயன்மார்களோடு 'சுந்தரர், மற்றும் சுந்தரின் தந்தை சடையனார் - தாயார் இசைஞானியார்' ஆகிய மூவரையும் சேர்த்து, 63 நாயன்மார்களாகத் தொகுத்து 'திருத்தொண்டர் திருவந்தாதி' எனும் திருப் பதிகத்தை இயற்றி, 11ஆம் திருமுறையில் இணைத்தார்.
'நம்பி ஆண்டார் நம்பி' திருமுறைகளை பதினொன்றாக தொகுத்தார். இவர் காலத்தில் தான் '63-நாயன்மார்கள்' என்று அழைக்கப் படும் மரபு தோன்றியது.
12 ஆம் நூற்றாண்டில், சேக்கிழார் பெருமான் திருத்தொண்டர் தொகையையும், திருத்தொண்டர் திருவந்தாதியையும் மூலமாகக் கொண்டு, 'பெரிய புராணம்' என்னும் அரும்பெரும் நூலை இயற்றி, 12ஆம் திருமுறையாகத் தொகுத்தார்.
சகல நலன்களும் பயக்கவல்ல இத்திருப்பதிகத்தை அனுதினமும் பாராயணம் செய்து, உமையொரு பாகனின் பரிபூரணத் திருவருளைப் பெற்று உய்வு பெறுவோம் (ஓம் நமசிவாய).
No comments:
Post a Comment