Saturday, 26 November 2016

கங்கை கரையில் - 6



சார்தாம் யாத்திரை - பத்ரிநாத் 






இமயமலையில் உத்தரகாண்ட பகுதியில் அமைந்துள்ள நான்கு முக்கிய தலங்களான யமுனோத்திரி, கங்கோத்திரி, பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் ஆகிய நான்கு தலங்களுக்கும், ஒரே சமயம் தலயாத்திரை செல்வது, ''சார்தாம் யாத்திரை!'' என்றழைக்கப்படுகின்றது.

அந்த வரிசையில் மூன்றாவதாக நம் பார்க்க போகும் தலம் பத்ரிநாத் ஆலயம்..


Image result for badrinath temple

பத்ரிநாத் தலத்தின் பெருமைகளை முதலில் பார்க்கலாம்..

வசிஷ்ட முனிவரின் மனைவி அருந்ததி பத்ரிநாத் தலத்தின் பெருமைகளை கூறுமாறு கேட்க வசிஷ்டர் கூறுகின்றார். "

பத்ரிநாத்தை தரிசிப்பவன், அவன் எப்படிப்பட்ட பாவியாயினும், பக்தியினால் புனிதமடைந்து மோக்ஷமும் அடைகின்றான். பத்ரிநாதரின் தரிசனம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல.எவனொருவன் வாழ்நாள் முழுவதும் இறைவனை பிரார்த்தனை செய்கின்றானோ, அவனுக்குத் தான் பத்ரிநாதரின் தரிசனம் கிட்டுகின்றது. அவனுடைய பாவங்கள் நீங்கும். உள்ளம் தூய்மை பெறும். எந்த குற்றத்தை செய்தவனும், வேறெந்த க்ஷேத்திரத்திலும் அவனுடைய பாவங்களிலிருந்து விடுபட வழியின்றிப் போனவனும் கூட பத்ரிநாதரின் கருணையினால் சொர்க்க லோகத்தை அடைகின்றான். எவன் கங்கையில் நீராடி, உடைகளையும், ஆபரணங்களையும் பத்ரிநாதருக்கு சமர்பிக்கின்றானோ அவனுக்கு மோட்ச லோகத்தில் நிச்சயம் இடம் கிட்டும். எவன் அகண்ட தீபம் ஏற்றுகின்றானோ அவன் சிரேஷ்டராகின்றான்.எவன் பத்ரிநாதரின் கோயிலை வலம் வருகின்றானோ, அவரது பாதாரவிந்தங்களை பற்றிக் கொண்டு பிரார்த்தணை செய்கின்றானோ அவன் அஸ்வமேத யாகம் செய்த பலனை பெறுகின்றான். இவ்வாறு சிறப்பு பெற்ற பத்ரிநாத் தலத்தின் மற்ற சிறப்புகளைக் காணலாம்..

நமது பாரத தேசமெங்கும் உள்ள அனைத்து தலங்களிலும், நான்கு திசைகளிலும் உள்ள பரமபவித்ரமான ஸ்தலங்கள் “சார் தாம்” என்று அழைக்கப்படுகின்றன.


Image result for badrinath temple


ஆதிசங்கரர் இந்த நான்கு தலங்களிலும் தமது பீடத்தை ஸ்தாபிதம் செய்தார். மேலும் உத்தராகண்ட் மாநிலத்தின் சோட்டா சார்தாம் தலத்திலும் ஒன்று பத்ரிநாத். இந்த சிறப்பு இந்த தலத்திற்கு மட்டுமே உண்டு.


Image result for badrinath temple

மஹாலக்ஷ்மித் தாயாருக்கு மிகவும் உகந்த தலம். பத்ரி எனப்படும் இலந்தை மரத்தினடியில் மஹாலக்ஷ்மித் தாயார் தவம் செய்ய அதற்கு பிரசன்னமாகி பெருமாள் அதே இலந்தை மரத்தடியில் சேவை சாதித்து நமக்கு முக்தி வழங்கும் முக்தி தாம்.


அஷ்டாத்திர மந்திரத்தை உபதேசம் செய்த தலம். பெருமாள் நர நாராயணகர்களாக அவதாரம் செய்துதவம் செய்து நாம் எல்லோரும் உய்ய நலம் தரும் தானே குருவாகவும், சீடனாகவும் “ஒம் நமோநாராயணா” என்னும் திருமந்திரத்தை அருளிய தலம்.


அலக்நந்தா நதியின் மேற்குக் கரையில் நர நாரயண சிகரங்களுக்கிடையில் அமைந்துள்ள தலம். சங்கராச்சாரியருக்கு பெருமாள் நரசிங்கமூர்த்தியாக சேவை சாதித்த தலம்.

Image result for badrinath temple

வியாச முனிவர் கூற தந்தத்தை உடைத்து முழுமுதற் கடவுள் விநாயகப் பெருமான் மஹா பாரதம் எழுதிய தலம்.


இந்த பூவுலகில் பெருமாள் பிரத்யக்ஷமாக ஆச்சாரியனாக சேவை சாதிக்கும் தலம்.

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்யதேசங்களுள் ஒன்று இந்த பத்ரிகாச்ரமம். .


வடதிசைமதுரை சாளக்கிராமம் வைகுந்தம்துவரையயோத்தி

இடமுடைவதரியிடவகையுடைய எம்புருடோத்தமனிருக்கை


என்று பெரியாழ்வாரும்,


சீராரும்மாலிருஞ்சோலை திருமோகூர்

பாரோர் புகழும் வதரி வடமதுரை


என்று திருமங்கையாழ்வாரும் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

இவ்வதரி திவ்ய தேசத்தை 22பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார் திருமங்கையாழ்வார். 

பேரன், கருடன், பத்ரிநாதர், உத்தவர், நாரதர், நரநாராயணர்
மாலை சிருங்கார தரிசனம்

இத்தலம் பெருமாள் தானாகவே எழுந்தருளிய ஸ்வயம்வக்த ஸ்தலங்களுள் ஒன்று. மற்ற தலங்கள் ஸ்ரீரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருப்பதி, வானமாமலை, புஷ்கரம், நைமிசாரண்யம், சாளக்கிராமம் ஆகியவைஆகும்.

பத்ரிநாதர் ஆலயம் எப்போது நிறுவப்பட்டது என்பதற்கு வரலற்றுப்பூர்வமான ஆதாரங்கள் ஏதும் இல்லை. புத்தர் காலத்தில் நாரத குண்டத்தில் வீசிய இந்த சாலக்கிராம மூர்த்தியை ஆதிசங்கரர் கண்டெடுத்து அதை தப்த குண்டத்திற்கும் கருட சிலாவிற்கும் இடையில் பைரவி சக்கரத்தின் மேல் பிரதிஷ்டை செய்தார். 5ம் நூற்றாண்டில் குஷ்ட நோயால் அவதிப்பட்ட கர்வால் மஹாராஜா, வரதராஜ ஆச்சாரியார் என்ற குருவின் யோசனைப்படி இந்த மூர்த்தியை தற்போது உள்ள இடத்தில் நிறுவினாராம். இதனால் அவரது அந்த நோய் நீங்கியது.



நந்த பிரயாகையிலிருந்து சதோபந்த வரையிலான ஷேத்ரம் பத்ரி விஷால் என்று அழைக்கப்படுகின்றது.

சகஸ்ர கவசன் என்ற அரக்கனை வதம் செய்ய பெருமாள் நர நாராயணர்களாய் பத்ரி ஆசிரமம் வந்து தவம் செய்த போது மஹாலக்ஷ்மி தாயார் இலந்தை(பத்ரி) மரமாக இருந்து நிழல் கொடுத்தாள், தவம் செய்யும் போது ஸ்திரீகளை தொடுவதில்லை என்ற விரதம் கொண்டதால், பெருமாள் வளர வளர மரமும் வளர்ந்தது எனவே விசாலமான என்ற பொருளில் இத்ஷேத்ரம் பத்ரி விஷால் என்றும் அழைக்கப்படுகின்றது.

தவம் செய்யும் பத்ரிநாதரை தரிசனம் செய்யாமல் முக்தி அடைய முடியாது என்று நம்புகிறார்கள். பனிக் காலத்தில் ஆறு மாதங்கள் திருக்கோவில் மூடியிருக்கும், அப்போது உற்சவ மூர்த்தி ஜோஷிமட் நரசிம்மர் ஆலயத்தில் இருப்பார். அப்போது பத்ரி நாதரை நாரதர் பூஜை செய்வதாக ஐதீகம். மஹா லக்ஷ்மித் தாயார் சன்னதியின் உள்ளே இருப்பார். திருக்கோவில் மூடும் போது ஏற்றப்பட்ட அகண்ட தீபம் ஆறு மாதம் கழித்து மீண்டும் திறக்கும் போது அப்படியே அனையாமல் இருக்கும் அற்புதம் நடக்கும் தலம்.

இமயமலைச்சாரலில் அமைந்துள்ள பத்ரிஷேத்ரம் காலம் காலமாகவே ரிஷிகளையும் யோகிகளையும் ஈர்த்து வந்துள்ளது. வசிஷ்டர், காஷ்யபர், அத்ரி, ஜமதக்னி, கௌதமர், விசுவாமித்திரர், அகஸ்தியர் ஆகிய சப்த ரிஷிகள் தவம் செய்த புண்ணிய பூமி இந்த பத்ரிகாஸ்ரமம்.

கடல் மட்டத்திலிருந்து 3100 மீ உயரத்தில் நர நாராயண சிகரங்களுக்கிடையில் சுற்று சூழல் பாதிக்கப்படாத இயற்கைச் சூழலில், 400 அடி உயர வஸுதரா என்ற அருவியிலிருந்து இறங்கி வரும் அலக்நந்தா ஆற்றின் வலக்கரையில் இத்தலம் அமைந்துள்ளது.

Image result for badrinath temple


ஒரு காலத்தில் பத்ரி யாத்திரை வாழ்வின் கடைசி யாத்திரையாக கருதப்பட்டது. எனவே பலர் தங்களது நான்காவது ஆசிரமத்தில் இங்கு வந்து தவம் செய்ததால் இப்பூமி தபோ பூமி , தபோவன் என்று அழைக்கப்பட்டது.

File:Sri Badrinath at night.jpg


பத்ரிநாதர் வைஷ்ணவர்களுக்கு வைகுண்டநாதன், சைவர்களுக்கு பஞ்சமுகி சிவன், சாக்தர்களுக்கு காளி, பௌத்தர்களுக்கு சாக்கிய முனி, ஜைனர்களுக்கு தீர்த்தங்கரர்.

தமருகந்ததுஎவ்வுருவம் அவ்வுருவம்தானே

தமருகந்தது எப்பேர் மற்றபேர் என்றபடி எந்த வடிவில் பக்தர்கள் வழிபடுகின்றார்களோ அந்த வடிவில் அவர்களுக்கு காட்சி அளிக்கின்றார் பத்ரிநாதர்.




தமது எட்டாவது வயதில் காலடியிலிருந்து புறப்பட்ட ஆதிசங்கரர் பாரத தேசமெங்கும் நடந்து இமயமலையின் உயரத்தில் அமைந்துள்ள பத்ரிகாசிரமத்தை தனது 14வது வயதில் அடைந்து நாரத குண்டத்திலிருந்து பத்ரிநாதரை எடுத்து புனர் பிரதிஷ்டை செய்தார். இக்கோவிலின் பூஜா முறையையும் இவரே வகுத்துக் கொடுத்தார்.

பத்ரிநாதருக்கு பூஜை செய்யும் உரிமையை கேரள பிராமணர்களுக்கு அளித்தார். இவர்கள் ராவல் என்று அழைக்கப்படுகின்றனர். அந்த முறை இன்றும் பின்பற்றப்படுகின்றது. ஆதி சங்கரர் இங்கிருந்த போது வேத வியாசரின் பிரம்ம சூத்திரத்திற்கு பாஷ்யம் எழுதினார். ஆதி சங்கராச்சாரியருக்கு தனி சன்னதி உள்ளது.

பத்ரிநாதர்  தொடருவார்....

திருச்சிற்றம்பலம்

கங்கை கரையில் தொடர் இன்னும் வ(ள)ரும்...

No comments:

Post a Comment