மூலவர் : கற்பகவிநாயகர்
துதிக்கை : வலம்சுழி
சிறப்பு : குடவரை
ஈசன் : திருவீசர்
அம்பாள் : சிவகாமி
தலமரம் : மருதமரம்
தீர்த்தம் : ஊருணி
ஊர் : பிள்ளையார்பட்டி
புராணபெயர்: மருதம்பூர்
முதல்வன்:
எடுத்த காரியம் எளிதாக - வெற்றியாக முடிய வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உண்டு. அந்த ஆசையை நிறைவேற்றிவைக்கும் கடவுள் விநாயகரே என்ற நம்பிக்கை ஒவ்வொருவர் உள்ளத்திலும் நிலைத்திருக்கிறது. தமிழரின் வழிபாட்டில் விநாயகர் வழிபாடு தொன்மையானது. சங்க இலக்கியங்களில் விநாயகர் பற்றிய குறிப்புகள் இல்லை.
"உரையாசிரியர்' என்று அழைக்கப்படும் இளம்பூரணர் செய்யுளியல் உரையில் "தன்தோள் நான்கில்' என்ற அகவலை எடுத்தாள்கிறார். விநாயகர் வழிபாட்டில், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் வழிபாடு உலகெங்கும் பரவியுள்ளது.
பிராமி மொழிக் கல்வெட்டுள்ள குடைவரையான பிள்ளையார்பட்டி, மருதங்குடி, திருவீங்கைக்குடி, எருக்காட்டூர், இராசநாராயணபுரம் என்ற பெயர்களால் கல்வெட்டுகளில் ஆளப்பட்டுள்ளது.
கற்பக விநாயகரின் திருவுருவத்தைச் செதுக்கிய தச்சனின் பெயர் "எருக்காட்டூர் கோன் பெருபரணன்' எனச் சுட்டப்பெறுகிறது.
இங்குள்ள பிள்ளையார் உலக மக்களின் நன்மைக்காகச் சிவலிங்கத்தைக் கையில் வைத்துத் தவம் புரியும் முகமாக வீற்றிருப்பதால் இவ்வூர் பிள்ளையார்பட்டி என்று அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஊரிலும் பிள்ளையாருக்கு ஒவ்வொரு பெயர் உள்ளதே!
"கற்பகம்" என்று பெண்களுக்குத்தானே பெயர்?
இந்த பிள்ளையார்பட்டியில் மட்டும் "கற்பக விநாயகர்" என்ற பெயர் உள்ளதே!
"இதற்குக் காரணம் என்ன?
"கற்பக விநாயகர்" என்றால் பொருள் என்ன?
"கற்பகம்" என்றால் கேட்பதெல்லாம் கொடுப்பவர் என்று பொருளாமே?
கல்+பக என்ற இரண்டு சொற்கள் சேர்ந்து உண்டான சொல்தான் "கற்பக" என்ற சொல் உருவானது.
"கல்" என்றால் பாறை என்று பொருள்.
"பக" என்றால் "பகுத்தல் (பிளத்தல்)" என்றும் பொருள்.
"கல்பக" அதாவது "கற்பக" என்றால் பாறையைப் பிளவு படுத்துதல் என்று பொருள்.
கற்பக விநாயகர் என்றால் பிளவு பட்ட பாறையின் உள்ளே உள்ள பிள்ளையார் என்று பொருள்.
சுருங்கச் சொன்னால் "கற்பக விநாயகர்" என்றால் பாறையைப் பிளந்து, பாறையைக் குடைந்து அதன் உள்ளே உள்ள பிள்ளையார், அதாவது "குடைவரைக் கோயிலில் உள்ள பிள்ளையார்" என்று பொருள் என்றேன்.
பிள்ளையார் பட்டியில் மட்டுமல்ல, குன்றக்குடியிலும் இதுபோன்றதொரு பிள்ளையார் உள்ளார், திருப்பரங்குன்றத்திலும் உள்ளார், ஏனைய குடைவரைக் கோயில் உள்ள இடங்களிலும் கற்பகவிநாயகர் இருப்பார்.
பிரார்த்தனை:
இத்தலத்தில் வணங்கினால் கல்வி ,கேள்வி, ஞானம், திருமணம், குழந்தை பாக்கியம்,குடும்ப நலம் ,உடல் பலம் உட்பட சகல பலன்களும் கிடைக்கும்.புதிய கணக்கு தொடங்கல், வியாபார விருத்தி ஆகியவற்றுக்காகவும் பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர்.
நேர்த்தி கடன்:
சதுர்த்தி விரதம்:
முக்குறுணி மோதகம் (கொழுக்கட்டை) செய்து வழிபடல்..
கணபதி ஹோமம் :
தொழில் அபிவிருத்தி வேண்டுவோர் இத்தலத்தில் கணபதி ஹோமம் செய்வது மிகவும் விசேஷம்.அருகம்புல் மாலை அணிவித்து வழிபடல்.
தலச்சிறப்பு :
6 அடி உயர கம்பீரமாக அமர்ந்த கோலத்தின் மூர்த்திதான் – பிள்ளையார்பட்டி விநாயகர் (தொன்மையானவர்).
இது ஒரு குடவரைக் கோவில்.
இரண்டு கைகள் கொண்ட வலம்புரிவிநாயகர்..
சதுர்த்தி விரதம் மேற்க்கொண்டு நிறைவேற்றினால் நலம் பெறலாம்.
பிரதி ஜனவரி முதல் தேதி ஆயிரக்கணக்கான பக்தர்கள் விநாயகரை தரிசிப்பது வழக்கம்.
தமிழகத்திலேயே உண்டியல் இல்லாத கோயில் இதுதான். ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி அன்று மஹா கொழுக்கட்டை செய்யப்படுகிறது.
தலவரலாறு :
பிள்ளையார்பட்டியின் பிரதானப் பெயர் மருதம்பூர். இங்கு மூலவராக கற்பக விநாயகர் அருள் தருகிறார். இக்கோவில் சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கபட்டு உள்ளது. குடைவரைக் கோவிலில் புகழ் பெற்ற பல்லவ மன்னர்களுக்கு முன்பே பாண்டியர்களால் அமைக்கபட்ட கோவில் கி.பி. 12-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் செட்டிநாட்டவர் வசமானது.
இன்று வரை நாட்டுக் கோட்டை நகரத்தார்களின் மேற்பார்வையில் கோவில் வழிபாடு நடந்து வருகிறது.
கயமுகா சூரனை கொன்ற பிள்ளையார் தனது பழியை போக்கிக் கொள்ள சிவபெருமானை நோக்கி தவம் செய்த இடம் பிள்ளையார் பட்டியாகும். இங்கு சிவபெருமானை நோக்கி தவம் செய்த வண்ணம், வடக்கு முகமாகவே பக்தர்களுக்கு விநாயகர் அருள் பாலிக்கிறார். கற்பக விநாயகர் தனது வலது கையில் ஒரு சிவலிங்க சின்னமும், இடது கரத்தை தனது வயிற்றை சுற்றியுள்ள கச்சையின் மீதும் வைத்துக் கொண்டும் அமர்ந்து இருக்கிறார். இவரது தும்பிக்கை வழஞ்சுழியாக இருக்கிறது. மற்றொரு சிறப்பு அம்சம் இவருக்கு முப்பரிநூல் கிடையாது. விநாயகர் சன்னதிக்கு எதிர்புறம் அமைந்துள்ள வடக்கு கோபுரவாசல் வழியாக சென்று வழிபட்ட பின்பு கிழக்கு கோபுரவாசல் வழியாக வரவேண்டும் என்பது மரபு.
விநாயகர் கோபுரத்துக்கு எதிர்புறத்தில் வெளிபிரகாரத்தின் வட திசையில் விசாலமான திருக்குளம் உள்ளது.
ஒவ்வொரு சதுர்த்தியின் இரவு நேரத்தில் விநாயகர் மூசிக வாகனத்தில் எழுந்தருளி கோவில் உட்பிரகாரத்தில் வலம் வருவார்.
பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பத்து நாள் திருவிழா நடைபெறுகிறது. ஒன்பதாம் நாள் தேர்திருவிழா புகழ் பெற்றது. இங்கு பிள்ளையாருக்கு தனியே தேர் உள்ளது. பிள்ளையார் தேரில் இரு வடங்களில் ஒன்றை ஆண்களும், மற்றொன்றை பெண்களும் இழுத்துச் செல்வார்கள்.
முக்கிய திருவிழாக்கள்:
*சதுர்த்தி திருவிழா ஆவணி மாதம் 10 நாட்கள். ஒன்பது நாட்கள் முன்பாக காப்புக்கட்டி கொடிஏற்றம் செய்து திருநாள் தொடங்கும்.
சதுர்த்தி அன்று இரவு விநாயகப் பெருமான் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளுவது விசேசம்.
மிக விமரிசையாக நடக்கும் இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்
*திருக்கார்த்திகை
*மார்கழி திருவாதிரை நாளன்று சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமான் திருவீதி பவனி வருவார்.
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment