Friday, 4 November 2016

பதினோராம் திருமுறையும் ஆசிரியர்களும்

11ஆம் திருமுறையை பாடி அருளியவர்கள் மொத்தம் பன்னிரண்டு ஆசிரியர்கள். அப்பெருமக்கள் பாடி அருளிய பாடல் தொகுப்புகளைக் கீழே காணலாம்:

சோமசுந்தரக் கடவுள்: 

மதுரையில் உறையும் சொக்கேசர் 'சேரமான் பெருமாள் நாயனாருக்கு எழுதி அருளிய ஒரே ஒரு திருமுகப் பாசுரப் பாடல்' இத்திருமுறையின் முதல் பாடலாகத் தொகுக்கப் பட்டுள்ளது.

Lord Shiva

காரைக்கால் அம்மையார்: 
 

1. திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் (இரு பதிகங்கள்) 
2. திரு இரட்டை மணி மாலை 
3. அற்புதத் திருவந்தாதி

karikal ammaiyar

ஐயடிகள் காடவர்கோன் நாயனார்:

1. ஷேத்திரத் திருவெண்பா.

iyadigal kadavarkon nayanar

சேரமான் பெருமாள் நாயனார்:

1. பொன் வண்ணத்து அந்தாதி
2. திருவாரூர் மும்மணிக்கோவை
3. திருக்கயிலாய ஞான உலா

seraman perumal nayanar

நக்கீர தேவர்:

1. கயிலை பாதி காளத்‌தி பாதி - அந்தாதி
2. திரு ஈங்கோய் மலை எழுபது
3. திருவலஞ்சுழி மும்மணிக்கொவை
4. திரு எழு கூற்றிருக்கை
5. பெருந்தேவ பாணி
6. கோபப் பிரசாதம்
7. கார் எட்டு
8. போற்றித் திருக்கலி வெண்பா
9. திருமுருகாற்றுப் படை
10. திருக்கண்ணப்ப தேவர் திருமறம்

Lord Shiva and Nakeerar
 
கல்லாட தேவர்: 

1. திருக்கண்ணப்ப திருமறம்.

Lord Shiva

 கபில தேவர்:

1. மூத்த நாயனார் திரு இரட்டை மணி மாலை
2. சிவபெருமான் திரு இரட்டை மணி மாலை
3. சிவபெருமான் திருவந்தாதி

Lord Shiva

பரண தேவர்:

1. சிவபெருமான் திருவந்தாதி

Lord Shiva

இளம் பெருமான் அடிகள்:

1. சிவபெருமான் திரு மும்மணிக் கோவை

Trishul in Mount Kailash

அதிரா அடிகள்:

1. மூத்த பிள்ளையார் திரு மும்மணிக் கோவை

Lord Shiva

பட்டினத்துப் பிள்ளையார்:

1. கோயில் நான்மணிமாலை
2. திருக்கழுமல மும்மணிக் கோவை
3. திருவிடை மருதூர் மும்மணிக் கோவை
4. திரு ஏகம்பமுடையார் மும்மணிக் கோவை
5. திருவொற்றியூர் ஒரு பா ஒரு பஃது

Pattinathar 


நம்பியாண்டார் நம்பி:

1. திருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை
2. கோயில் திருப்பண்ணியர் விருத்தம் 
3. திருத்தொண்டர் திருவந்தாதி 
4. ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி 
5. ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம் 
6. ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை 
7. ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை 
8. ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் 
9. ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை 
10. திருநாவுக்கரசர் திருஏகாதசமாலை

Nambi Andar Nambi in Thirunaraiyur

No comments:

Post a Comment