Wednesday 9 November 2016

அருள்மிகு கோணேஸ்வரர் திருக்கோயில், திருகோணமலை (இலங்கை)



மூலவர் : கோணேஸ்வரர்

அம்மன்/தாயார் : மாதுமையாள்

தல விருட்சம் : கல்லால மரம்

தீர்த்தம் : பாவநாசம்

பழமை : 3000 வருடங்களுக்கு முன்



பாடியவர்கள்:

குற்றமிலாதார் குரைகடல் சூழ்ந்த

கோணமா மலையமர்ந் தாரைக்

கற்றுணர் கேள்விக் காழியர் பெருமான்

கருத்துடை ஞானசம் பந்தன்

உற்றசெந் தமிழார் மாலையீ ரைந்தும்

உரைப்பவர் கேட்பவர் உயர்ந்தோர்

சுற்றமும் ஆகித் தொல்வினை யடையார்

தோன்றுவர் வானிடைப் பொலிந்தே.
 - திருஞான சம்பந்தர்.


தேவராப் பாடல் பெற்ற 276 சிவத்தலங்களில் இத்தலம் இலங்கையில் உள்ளது.

திருவிழா:

ஆடிப்பூரம், ஆருத்ரா தரிசனம், பூங்காவனம், தேர்த் திருவிழா

தல சிறப்பு:

33 அடி உயர சிவபெருமான் சிலை உள்ளது.




சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 271 சிவாலயங்களில் இது 270 வது தேவாரத்தலம் ஆகும்.

பொது தகவல்:

மாதுமையாள் சமேத கோணேஸ்வரர், சந்திரகேசர், பார்வதி, பிள்ளையார், அஸ்திரதேவர், வீரசக்தி, அன்னப்பறவை முதலான தெய்வத் திருவுருவங்கள் அமைந்துள்ளது.




பிரார்த்தனை :

குடும்பத்தில் நிம்மதி நிலவவும், ஐஸ்வர்யம் நிலைக்கவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கும் அம்பாளுக்கும் வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

தலபெருமை:

இலங்கையின் கிழக்குப் பகுதியில் உலகப் புகழ்பெற்ற திருகோணமலை சிவன் கோயில் உள்ளது. கச்சியப்ப சிவாச்சாரியார் சிவபெருமானின் ஆதி இருப்பிடங்களில் திபெத்திலுள்ள திருக்கயிலாய மலையினையும், சிதம்பரம் கோயிலையும், திருகோண மலையையும் கந்த புராணத்தில் மிக முக்கிய மூன்றினுள் ஒன்றாகக் குறிப்பிட்டுள்ளார். 


கிட்டத்தட்ட 3000 வருடங்களுக்கு முற்பட்ட பழமை வாய்ந்த இக்கோயிலுக்கு சுமார் 1700 ஏக்கர் பரப்பளவு நிலங்கள் இருந்தன. இங்கு மகாவலி கங்கை அருகிலுள்ள கடலுடன் கலப்பதால் இப்பகுதி முழுவதும் நீர்வளம், நிலவளம் பெற்று செழிப்பாக இருந்தது. மேலும் குறிஞ்சியும், நெய்தலும், முல்லையும் ஒன்று சேருமிடத்தில் இத்தலம் அமைந்திருந்தது. சமுத்திரக்கரை ஓரமாக மலை அடிவாரத்தின் உச்சியிலும், இடையிலும், அடிவாரத்திலுமாக மூன்று பெருங்கோயில்கள் இருந்ததாக வரலாறு கூறுகிறது. 

பிறகு கி.மு 306 ல் ஏற்பட்ட கடல்சீற்றத்தினால் கடலில் மூழ்கி விட்டதாகவும் இன்னும் மலையின் அடியில் கடலுக்கு மிக அருகில் மலைக்குகை போன்ற பண்டைய கால கோயிலை நினைவுபடுத்தும் பகுதிகள் காணப்படுகின்றன என்கிறார்கள். இத்தலத்திற்கு திருக்குணமலை, திருமலை, தட்சிண கயிலாயம், கோகர்ணம், திரிகூடம், மச்சேஸ்வரம் எனப் பல பெயர்கள் உண்டு. 

அக்காலத்தில் தாமரைத்தண்டு நூலினால் திரி செய்து விளக்கேற்றி இக்கோயிலில் வழிபட்டு வந்தனர். இதன் காரணமாக திரிதாய் என்ற பெயரும் உண்டு. இறைவன் திருக்கோணேஸ்வரர், இறைவி மாதுமையாள், தலவிருட்சம் கல்லால மரம், முதலில் கல்லால மரத்துக்கு பூஜை செய்துவிட்டு, பின்னரே மூலவர் மற்றும் கோயில் சன்னதிகளில் பூஜை நடைபெறுகிறது. இங்குள்ள மிக முக்கிய தீர்த்தம் பாவநாசம் இதில் தீர்த்தமாடினால் பாவங்கள் தொலைந்துவிடும் என்பது நம்பிக்கை. 


1624 ல் ஏற்பட்ட போர்த்துக்கீசிய படையெடுப்பில் இத்தீர்த்தக் கேணியையும் சுனையையும் தூர்த்துவிட்டனர். தற்போதுள்ள கேணிதீர்த்தம் ஒரு சிறு பகுதி மட்டும் கிடைத்துள்ளது. இக்கோயிலை பல்லவர்கள், சோழர்கள் பாண்டியர்கள் மற்றும் பல அரசர்கள் திருப்பணிகள் செய்து மிக நல்ல நிலையில் வைத்திருந்தனர். 

ஏராளமான தங்க நகைகளும் நவரத்தினங்களும் இக்கோயிலுக்குச் சொந்தமாக இருந்தன. 1624 வருடம் சித்திரை புத்தாண்டு தினத்தில் சுவாமி மாதுமை அம்பாள் சமேத திருக்கோணேச்சரப் பெருமான் நகர்வலம் வந்த வேளையில் போர்ச்சுகீசியத் தளபதி வீரர்களுடன் பக்தர்கள் போல வேடமிட்டு கோயிலினுள் சாமி நுழைந்த ஆங்கிருந்தவர்களை வெட்டிக் கொன்றுவிட்டு கோயிலிலிருந்த தங்க நகைகள், நவரத்தினங்கள் மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளை அடித்துச் சென்றனர். 


ஆசியாவிலேயே மிகச் செழிப்பான செல்வவளம் கொண்ட இக்கோயில் முற்றிலும் சூறையாடப்பட்டது. பின்னர் கேள்வியுற்ற பக்தர்களும், அர்ச்சகர்களும் சில முக்கிய விக்கிரகங்களை உடனடியாக அகற்றி, குளங்களிலும் கிணறுகளிலும் மறைத்து வைத்தனர். சில விக்கிரகங்களை அருகிலுள்ள தம்பலகாமம் என்ற இடத்தில் வைத்து பிரதிஷ்டை செய்து ரகசியமாக பூஜை செய்து வந்தனர். தற்போது அங்கே ஆதிகோணநாதர் என்ற பெயரில் இறைவன் திருவருள் பாலிக்கிறார். 

பின்னாளில் திருக்கோணமலை கோயிலுக்குச் சொந்தமான மானியங்களில் பெரும்பகுதி இக்கோயிலுக்கும் சொந்தமாயிற்று. பராந்தக சோழனுக்குப் பயந்து பாண்டிய மன்னன் இலங்கையில் பாதுகாப்பாக மறைந்திருந்த காலத்தல் தாம்பலகாமம் ஆதிகோணேச்சுவரருக்கு பல திருப்பணிகள் செய்து வழிபட்டதாக தலபுராணம் தெரிவிக்கிறது. நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர் திருகோணமலை தலத்தாறு கோபுர என்று திருப்புகழ் பாடியுள்ளார்.





ஆயிரங்கால் மண்டபமும், பெரிய தீர்த்தக் கேணியும் மற்றும் பிற மண்டபங்களும் இருந்தன என்பதை விஸ்பன் நகரில் உள்ள வரலாற்றுச் சான்றான படத்தின் மூலமே அறிய முடிகிறது. 16-ம் நூற்றாண்டில் வந்த குளக்கோட்டன் என்ற மன்னன் இக்கோயிலை மீண்டும் புதுப்பித்தான் முன்னே குளக்கோட்டன் மூட்டு திருப்பணியை

பின்னே பறங்கி பிரிக்கவே

பூனைக்கண் புகைக்கண் செங்கண் ஆண்டபின்

தானே வடுகாய் விடும்
-கல்வெட்டு

என்ற பாடல் மூலம் குளக்கோட்ட மன்னனின் திருப்பணி மட்டுமின்றி, சோதிட முற்கூறலும் கல்வெட்டு மூலம் உண்மையை உணர்த்துகிறது. குளக்கோட்டனின் திருப்பணியால் அமைந்த இவ்வாலயத்தை போர்த்துகீசியர் உடைப்பார்கள். பின்னர் அரசர்கள் இதனைப் பேணமாட்டார்கள் என்று கோயிலின் எதிர்காலம் பற்றிய கல்வெட்டுக் கருத்து நம்மை வியக்க வைக்கிறது. 


போர்ச்சுக்கீசிய படையினால் சிதைவிடைந்த இக்கோயிலின் ஒரே ஒரு தூண் மட்டும் பின்னர் 1870 ல் சுவாமி பாறைக்கு அருகில் நினைவுச்சின்னமாக பக்தர்களின் துணையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மனதை ரணமாக்குகிறது. பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் போதும் எவ்வித பூஜைகளும் இங்கு நடைபெற அனுமதிக்கப்படவில்லை. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மாலுமிகள், பக்தர்கள், சுவாமி பாதைக்குச் சென்று பூ, பழம், தேங்காய் உடைத்து தங்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொண்டனர். 

பின்னர் 1944 ஆம் ஆண்டில் திருகோணமலை கோட்டையினுள் நீர்த்தேக்கம் அமைக்க அகழாய்வு செய்தபோது சில விக்கிரகங்கள் கிடைத்தன. பின்னர் 1950 ஆண்டில் கடற்கரை அருகில் பொதுக்கிணறு தோண்டியபோது மேலும் சில விக்கிரகங்கள் கிடைத்தன. இறையருளால் அனைவரும் வியக்க மாதுமையாள் சமேத கோணேஸ்வரர், சந்திரகேசர், பார்வதி, பிள்ளையார், அஸ்திரதேவர், வீரசக்தி, அன்னப்பறவை முதலான தெய்வத் திருவுருவங்கள் வெளிப்பட்டன. அவை அனைத்தும் 1952 ல் பிரதிஷ்டை செய்யப்பட்டு, மீண்டும் இக்கோயில் புத்துயிர் பெற்றது. பழைய கோயிலுடன் ஒப்பிடுகையில் இது சிறிய கோயில். இருப்பினும் எம்பெருமான் திருவருளினால் மீண்டும் அனைத்து விக்கிரகங்களும் வெளிப்பட இறையருள் போற்றத்தக்கது. இங்கு ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன. 

ஐம்பொன் மூர்த்தங்கள் மிக வடிவுடன் தேவ மண்டபத்தில் காட்சி தருகின்றன. சிவராத்திரி விழாவும், ஆடி அமாவாசை பெருவிழாவில் எம்பெருமான் கடலில் தீர்த்தமாடுவதும். பங்குனி தெப்பத் திருவிழாவும் மிகச் சிறப்பானவை. பாண்டியனின் கயல்சின்னம் பொறிக்கப்பட்டிருப்பது. இக்கோயிலின் தொன்மையை உணர்த்துகிறது. கோயில்முன் 33 அடி உயரமான சிவபெருமான் சிலை ஒன்று அமைந்துள்ளது.




தல வரலாறு:

ராவணன் தனது தாயாரின் சிவபூஜைக்காக தட்சிண கயிலாயமான திருகோணமலையைப் பெயர்த்ததாகவும் ஒரு செய்தி தட்சிண கயிலாயமான திருகோணமலையைப் பெயர்த்ததாகவும் ஒரு செய்தி தட்சிண கயிலாய புராணத்தில் உள்ளது. இதற்குச் சான்றாக ராவணன் வெட்டு என்ற மலைப்பிளவு இன்னும் இப்பகுதியில் காணப்படுகிறது. 

ராவணன் வெட்டு என்ற மலைப்பிளவு

கடல் சீற்றத்திற்குப் பிறகு கோயில் அருகிலுள்ள சுவாமிலை எனப்படும் குன்றின் உச்சியில் கோயில் மீண்டும் அமைக்கப்பட்டது. கி.பீ 7 ஆம் நூற்றாண்டில் சீரும் சிறப்புமாக விளங்கிய இக்கோயிலின் அழகினைக் கேள்விப்பட்ட திருஞான சம்பத்தர் ராமேஸ்வரத்தில் இருந்தபடியே ஞானக்கண் கொண்டு குற்றமில்லாதார் குறைகடல் சூழ்ந்த கோண மாலையமர்ந் தாரை.... என தேவாரப் பதிகத்தில் பாடியுள்ளார். அப்படி பெருமானும் போற்றிப் பாடியுள்ளார். 

டெம்பிள்ஸ் அஃப் தவுசண்ட் பிள்ளர்ஸ் என்றழைக்கப்பட்ட இக்கோயிலின் தூண்களையும் கற்களையும் பெயர்த்து எடுத்த பின்பே, கோயிலைத் தரைமட்டமாக்கினான். அத்தூண்களையும் கற்களையும் கொண்டு புகழ்பெற்ற பிரட்ரிக் கோட்டையை பலப்படுத்திக் கட்டியதாகவும் வரலாறு.




சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: 33 அடி உயர சிவபெருமான் சிலை உள்ளது.




ராவணன்


ராவணன்


No comments:

Post a Comment