கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் நடந்த தலம் ; அருணகிரிநாதருக்கு படிக்காசு வழங்கிய தலம் ; முருகன் தன்னைத்தானே பூஜித்த தலம் ; இடும்பனுக்கு பொதிகை மலை செல்ல வழிகாட்டிய மிகவும் விசேஷமான தலம்..
🔵⚜🔵⚜ BRS🔵⚜🔵⚜🔵
தொலைப்பேசி : (04294) 250223, 292263, 292595.
🦋🎸🦋🎸 BRS🦋🎸🦋🎸🦋
மூலவர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி)
அம்மன்/தாயார் : அமிர்த வல்லி, சுந்தர வல்லி
தல விருட்சம் : புளியமரம்
தீர்த்தம் : இந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், இமையன் தீர்த்தம், காசியப தீர்த்தம், பட்சி தீர்த்தம், சிவகங்கை, மாமாங்க தீர்த்தம், வரடி தீர்த்தம், காளி தீர்த்தம், தேவி தீர்த்தம், செங்கழுநீர், வாவி விஷ்ணு தீர்த்தம், சாரதா தீர்த்தம், மார்கண்டேய தீர்த்தம் (தெப்பக்குளம்) முதலிய பல தீர்த்தங்கள் உள்ளன.
ஆகமம்/பூஜை : காரண, காமிக ஆகமம்
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : புஷ்பகிரி, கரைகிரி, மகுடகிரி
ஊர் : சென்னிமலை
🅱 திருவிழாக்கள் :🅱
🌻 சித்திரை வருட பிறப்பு.
🌻 சித்ரா பௌர்ணமி.
🌻 வைகாசி விசாகம்.
🌻 ஆடி அமாவாசை.
🌻 ஆடி கிருத்திகை.
🌻 கந்தர் சஷ்டி - சூரசம்ஹாரம்.
🌻 கார்த்திகை தீபம்.
🌻 தைப்பூசம் - ரதம் உலா.
🌻 பங்குனி உத்திரம் - ரதம் உலா.
🅱 தல சிறப்பு:🅱
🎭 பச்சைப்பசேலென்ற மரங்கள் நிறைந்த நீண்ட திருமலையின் அடிவாரத்திலிருந்து 1749 அடி உயரத்தில் சென்னிமலை ஞான தண்டாயுதபாணி எழுந்தருளியுள்ள திருக்கோயில் அமைந்துள்ளது.
🎭 தண்டாயுதத்தை வலக்கரத்தில் ஏந்தி, இடது திருக்கரத்தை இடுப்பில் வைத்து, பேரொளியும், பேரழகும், பெருங் கருணையுமாக அழகு தரிசனம் தருகிறார் முருகப்பெருமான்.
🎭 இங்குள்ள முருகப்பெருமானுக்கு இரண்டு தலைகள் உள்ளன. இது போன்று எந்த தலத்திலும் கிடையாது. அக்னிஜாத மூர்த்தி என்பது இதுவாகும்.
🎭 மலைகளில் தலைமையானது என்று பொருள் தரும் சென்னி மலையில்தான் அழகு முருகன் இப்படி அற்புதக் காட்சி தருகிறார்.
🎭 இந்தக் கோயிலில், ஞான தண்டாயுதபாணியாக முருகப் பெருமான் திருக்காட்சி தந்தாலும், இரண்டு தேவியரும் தனிச் சந்நிதியில் அருள்கிறார்கள்.
🎭 மூலவர் ஞான தண்டாயுதபாணி சந்நிதிக்குப் பின்புறம் இருக்கும் படிக்கட்டுகளின் வழியாக மேலே சென்றால், வள்ளி, தெய்வானை ஆகியோரின் சந்நிதிகளைத் தரிசிக்கலாம். இருவரும் அமிர்தவல்லி, சுந்தரவல்லி என்ற பெயர்களுடன் சென்னிமலையில் தவம் இருந்து முருகப் பெருமானை மணந்துகொண்டதாக ஐதீகம். இருவரின் திருமேனிகளும் பிரபையுடன் ஒரே கல்லில் வடிக்கப்பட்டிருப்பது சிற்பக்கலையின் தனிச்சிறப்பு.
🎭 மூலவர் செவ்வாய் அம்சமாகவும் நவகிரஹங்களில் எட்டு கிரஹங்கள் அழகிய தேவ கோஷ்டங்களில் பாங்குடன் அமைந்தும் அருள்பாலிக்கின்றனர்..
🎭 மலையாண்டவர் கோயிலுக்கு மேற்கே மாமுருகனை அடைய தவமிருந்து மாலையிட்ட வள்ளி தெய்வானையின் ஆலயம் அமைந்துள்ளது. ஒருகல்லில் வடிவமைக்கப்பட்ட இவ்விருவரின் கற்சிலைக்கு நடுவில் கீழே ஒரு அற்புத லிங்கமும் இச்சிலையிலே இருக்கிறது.
🎭 சிரகிரி என வழங்கப்படும் சென்னிமலை சுமார் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிராத்தனைச் சிறப்புமிக்க மலைக்கோயிலாகும்.
🎭 18 சித்தர்களுள் ஒருவரான புன் நாக்கு சித்தர் வாழ்ந்து முத்தியடைந்த திருத்தலம். அவர் தவமிருந்த குகை ஒன்றும் உள்ளது.
🎭 மூலவரை வழிபட்டாலே நவகிரகங்களை வழிபட்ட பலன் உண்டு.
🎭 ஸ்ரீஅருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்றுள்ளது.
🎭 முருகப் பெருமானால் அருணகிரிநாதருக்கு படிக்காசு வழங்கப் பெற்றத்திருத்தலம்.
🎭 இரண்டு காளை மாடுகளைப் பூட்டிய மாட்டு வண்டி ஒன்று இந்த மலை படிக்கட்டுகள் வழியே ஏறிச்சென்று மலை உச்சி அடைந்த சம்பவம் இங்கு சமீபத்தில் நடந்த அற்புதம்.
🎭 தேவராய சுவாமிகள் என்ற முருகபக்தர் இயற்றிய 'கந்த சஷ்டி கவசம்' என்ற முருகன் மீதான கவசத்தை அரங்கேற்ற முருகனை வேண்டிய போது முருகனே கனவில் தோன்றி சென்னிமலை தலத்திலே வந்து அரங்கேற்றம் செய்ய அருளினார். அதன்படி இந்த சென்னிமலை தலத்திலே 'கந்த சஷ்டி கவசம்' என்ற கவசமாலை அரங்கேற்றம் செய்யப்பட்டது.
🎭 தினசரி அபிஷேகம் மற்றும் நைவேத்திய காரியங்களுக்கு திருக்கோயிலில் பராமரிக்கப்பட்டு வரும் இரண்டு அழகிய பொதி காளைகள் மூலம் தினமும் அடிவாரத்திலிருந்து திருமஞ்சனத் தீர்த்தம் மலைக்குக் கொண்டு செல்லும் சிறப்பு தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லாத தனிச்சிறப்பு.
🅱 நடை திறப்பு:🅱
🗝 தினசரி காலை 5:30 மணிக்கு கோ பூஜை நடைபெற்ற பின்னர் மலைக்கோவில் சன்னதி காலை 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் வழிப்பாட்டிற்குத் தடையின்றி பகலில் நடை சாத்தப்படாமல் அர்ச்சனை பூஜை செய்யப்பட்டு, இரவு அர்த்தஜாம பூஜை முடிவுற்ற பின்னர் 8:15 மணிக்குச் சன்னதி நடை சாத்தப்பட்டு வருகிறது.🗝
🅱 பூஜை விபரம் :🅱
🍁 மூலவருக்கு தினசரி ஆறுகால பூஜை நடைபெறுகிறது.
☂ காலை 7:00 மணி - விளாபூஜை.
☂ காலை 8:00 மணி - கால சந்தி.
☂ பகல் 12:00 மணி - உச்சிகால பூஜை.
☂ மாலை 5:00 மணி - சாயரட்சை.
☂ இரவு 7:00 மணி - இராக்காலம்.
☂ இரவு 8:00 மணி - அர்த்தசாமம் பூஜை.
🅱 பொது தகவல்:🅱
💲 சஷ்டி விரத மகிகை:💲
🦋 கந்தர் சஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்யப்பட்ட இத்தலத்தில், பிரதி மாதம் வளர்பிறை சஷ்டி திருநாளிலும், ஐப்பசி மாதம் கந்தர் சஷ்டி திருவிழா, ஆறாம் நாளில் எண்ணற்ற பக்தர்கள், சந்தான பாக்கியம் வேண்டி விரமிருப்பது தொன்று தொட்ட நோன்பாகும். இதை முன்னோர்கள், சஷ்டியில் இருந்தால், அகப்பையில் வரும்' எனக்கூறுவர். குழந்தை வரம் வேண்டி முறையாக, சஷ்டி விரதம் கடைபிடிப்போருக்கு, சென்னிமலை ஆண்டவர் குழந்தைப்பேறு அருள்வது கண்கூடானது. குழந்தை வரம் வேண்டுவோரும், வரத்தின் பலன் கிடைத்த பின்னரும், குழந்தைகளோடு வளர்பிறை சஷ்டித்திருநாளில், ஆண்டவரை தரிசித்து செல்வது இன்னும் தொடர்கிறது.
🅱 சஞ்சீவி மூலிகைகள்:🅱
🦋 நோய் தீர்க்கும் வல்லமை கொண்ட, சஞ்சீவி மூலிகைகள் பல, சென்னிமலை மலையில் உள்ளன. இம்மலையில் வெண்சாரை, வெண்தவளை, கானாச்சுனை, கெயாத எட்டி, கரநொச்சி முதலிய சஞ்சீவி மூலிகைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
🦋 உடற்பிணி நீங்க வேண்டி, பல தலங்கள் சென்று வழிபட்டு, இத்தலத்தை வந்தடைந்து, சென்னிமலை ஆண்டவனை வணங்கி, நோய் நீங்க பெற்ற சோழ அரசரான சிவாலயச் சோழன், அதற்கு பரிகாரமாகவே, மலைக்கோவிலை அமைத்தார், என்பர்.
🅱 பிரார்த்தனை:🅱
🌹 ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருப்பவர்கள், கோயிலுக்கு வந்து முருகப்பெருமானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால், செவ்வாய் தோஷம் நீங்கிவிடும் என்பதும் பக்தர்களது நம்பிக்கை.
🌹 கல்யாணத்தடை நீங்குகிறது. குழந்தை பாக்கியம் கைகூடுகிறது. தவிர செவ்வாய் தோஷம் நீங்குகிறது. இத்தலம் பிரார்த்தனைத் தலங்களில் முக்கியமானது. நோய் நீக்கம், துன்ப நீக்கம், ஆயுள் பலம், கல்வி, அறிவு, செல்வம், விவசாயம் செழிப்பு ஆகியவற்றைப்பெற இத்தலத்தில் முருகனிடம் வேண்டுகிறார்கள்.
🌹 இயற்கை மூலிகை மரங்கள் செடி கொடிகள் நிறைந்த மலையாக இருப்பதால் இங்கு வரும் ரத்தகொதிப்பு ஆஸ்துமா நெஞ்சுவலி நோய்கள் உடையவர்கள் குணமாகிறார்கள். இது இத்தலத்துக்கு அடிக்கடி வந்து போகும் பக்தர்கள் அனுபவப்பூர்வமாக கண்ட உண்மை என தெரிவிக்கிறார்கள்.
🌹 திருமணமான தம்பதியர் சந்தான பாக்கியம் வேண்டி, மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபடுவதும், தீர்க்கசுமங்கலியாக இருப்பதற்குச் சந்நிதியின் முன்பு நின்று மாங்கல்யச் சரடு கட்டிக்கொள்வதும் வழக்கமாக இருக்கிறது. அதேபோல் இந்தக் கோயிலில் அமைந்திருக்கும் புளியமரத்தில் `சந்தானகரணி’ என்னும் ஸித்திப் பொருள் இருப்பதாகவும், அந்த மரத்தினடியில் மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள்.
🅱 நேர்த்திக்கடன்:🅱
💥 முருகனுக்கு பால், தயிர் அபிஷேகம் செய்யப்படுகிறது. தவிர காவடிஎடுத்தல், முடிக்காணிக்கை முதலியன, கிருத்திகை அன்னதானம், காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், முடி இறக்கி காது குத்தல் சஷ்டி விரதம் இருத்தல். தவிர சண்முகார்ச்சனை, முருக வேள்வி ஆகியவை செய்கிறார்கள். கார்த்திகை விரதம் இருத்தல். ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல், திருப்பணிக்கு பொருளுதவி செய்தல் ஆகியவை இத்தலத்துக்கு வருபவர்கள் முருகனுக்காக செய்யலாம்
🅱 தலபெருமை:🅱
🌻 கந்த சஷ்டி அருங்கேறிய ஸ்தலம்:🌻
🔥 உலகில் உள்ள முருக பக்தர்கள், தினமும் மனமுருகி பாராயணம் செய்யும், ஸ்ரீகந்தர் சஷ்டி கவசம்' இயற்றிய ஸ்ரீபாலன்தேவராய சுவாமிகள், காங்கேயம் நகரின் அருகில் உள்ள மடவிளாகத்தை சேர்ந்தவர். இவர், மைசூர் தேவராச உடையாரின் காரியஸ்தரில் ஒருவராவார். இவர் முருக பக்தர். ஐப்பசி மாதம், கந்த சஷ்டி அன்று, வேற்று மதத்தவர்களிடம் அனல்வாதம் (தான் எழுதிய நூலை சான்றோர்கள் முன், நெருப்பிலிட்டு, தீயில் கருகாமல் திரும்ப எடுத்து அரங்கேற்றுவது), புனல்வாதம் (கரைபுரண்டு ஓடும் ஆற்று வெள்ளத்தில், தான் எழுதிய நுõலை இட்டு, நீரில் எதிர்கொண்டு செல்லும் சுவடிகளை எடுத்து அரங்கேற்றுவது) செய்து, கந்த சஷ்டி கவசத்தை அரங்கேற்றம் செய்ய முருகனை வேண்டினார். அதற்கு உரிய ஆலயமாக சென்னிமலையை, முருகப்பெருமானின் அருளாணையால் உணர்ந்து, இங்கு கந்த சஷ்டி கவசத்தை சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக' என இத்தலத்து பெருமானை அழைத்து, அரங்கேற்றம் செய்து, பெருமைபடைத்தார்.
🥀 வானில் வந்தவர் இங்கேயே வாழ்ந்தார்:🥀
🔥 இறைவன் கிருபையும், அருளையும் மறுத்துரைப்பவர்கள், பொய் சொல்பவர்கள் நாவானது புண் பொருந்திய நாக்கு' எனக்கூறியவர் தன்னாச்சி அப்பன் சித்தர். 18 சித்தர்களில் ஒருவரான இவரை முனிவர் என்றும், புண் நாக்கு' சித்தர் என்றும் அழைத்தனர். பிற்காலத்தில் புண்ணாக்குச் சித்தர்' என்று பெயர் மருவியது. இவர், தனது நாக்கை பின்புறமாக மடித்து, அருள்வாக்கு சொல்லி வந்ததாலும், இவர் பின்நாக்கு சித்தர் என அழைக்கப்பட்டார். சித்தராக வானவீதி வழியாக பறந்து வந்த இவர், நிலையாக இவ்வாலயத்தில் இருந்து, சென்னிமலை சுப்ரமணியரை நினைத்து, யோக நிலையில் தவம் புரிந்தார். பின்னர் சென்னிமலையிலேயே, புண்ணாக்குச் சித்தர் சிவசமாதி அடைந்தார்.
🔥 அவர் சமாதி அடைந்த பின், அவருடைய சிலையை, தற்போதைய இடத்தில் நிறுவி, பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ஆண்டி வடிவில் அமைந்து அருள்பாலிக்கும் முருகனிடம், தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர் புண்ணாக்குச் சித்தர். சென்னிமலையில், 1,740 அடி உயரத்தில் குகை வடிவில் அமைந்துள்ள கோவிலில், இவர் அருள்பாலிக்கிறார். வள்ளி, தெய்வானை சன்னதிக்கு மேல், 800 அடி நீளப்பாதையில் கிழக்கு முகமாக இக்குகை உள்ளது. மக்கள் குறையைப் போக்கும் ஆலயமாக விளங்குகிறது. இக்குகை, பழனி வரை செல்வதாக நம்பப்படுகிறது.
🎸 மாமாங்கத் தீர்த்தம் : 🎸
🔥 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வறட்சியான கோடை காலத்தில் சிறிதேனும்கூட மழையில்லாத கொடூரமான நேரத்தில் மலைக் கோயிலுக்கு தென்புறம் அமைந்துள்ள தீர்த்த விநாயகர் முன்பு திடீரென பொங்கி வழிந்தோடும் மாமாங்கத் தீர்த்தமானது அதிசயம் நிறைந்த தெய்வீகச் சிறப்பாக அமைந்து விடுகிறது.
🎸 சிரசுப் பூ உத்திரவு கேட்டல்:🎸
🔥 திருமணம், வரன்கள், விவசாயம், கிணறுவெட்டுதல், புதிய வியாபாரம் தொடங்கல், வியாதிகள் ஆகியவை குறித்து முடிவு செய்ய ஆண்டவர் முன்னால் அர்ச்சனை செய்து சிரசுப் பூ உத்திரவு கேட்டு நல்ல உத்திரவு கிடைத்தபின்பு காரியத்தை தொடங்குகிறார்கள். சிரசுப்பூ உத்திரவு நல்லபடியாக கிடைக்காவிட்டால் குறிப்பிட்ட செயல்களை பக்தர்கள் தொடங்குவதில்லை.
☔ சென்னிமலை ஆண்டவர் கோவிலின் அமைப்பு:☔
🌷 அடிவாரத்தில் இருந்து செங்குத்தாக இல்லாமல், பக்தர்கள் எளிதில் ஏறிச் செல்ல வசதியாக 1,320 படிக்கட்டுகள் அமையப் பெற்றிருக்கின்றன. அடிவாரத்தில் இருந்து சில படிகள் ஏறியதுமே கடம்பவனேஸ்வரர், கந்தர், இடும்பன் ஆகியோரின் சந்நிதிகளை ஒரே வரிசையில் தரிசிக்கலாம். பின்னர் தொடர்ந்து வள்ளியம்மன் பாதம் என்ற மண்டபத்தைக் கடந்து மேலே சென்றால், `முத்துக்குமார சாவான்' என்னும் மலைக் காவலர் சந்நிதி அமைந்திருக்கிறது. அதற்கடுத்ததாக வரும் ஆற்றுமலை விநாயகர் சந்நிதியையும் தரிசித்துவிட்டு, மேலே சென்றால், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி எழுந்தருளியுள்ள திருக்கோயிலை அடையலாம்.
🔥 கிழக்கு நோக்கி உள்ள சென்னிமலை ஆண்டவர் சன்னதிக்கு முன்பாக விநாயகர் சன்னதியும், வலது பக்கத்தில் மார்க்கண்டேசுவரர் மற்றும் உமையவல்லி அம்மனும், இடது பக்கத்தில் காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சி அம்மன் சன்னதிகளும் அமையப்பெற்றுள்ளது. மூலவர் சன்னதிக்கு நேர் பின்புறமாக சென்றால் வள்ளி, தெய்வானை சன்னதியும் அமைந்துள்ளது.
🌷 இங்கு தேவியர் இருவரும் தனிப்பெரும் கோவிலில் இருந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பது வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும். அதற்கு பின்புறம் சென்றால் மலையின் உச்சியில் 18 சித்தர்களில் ஒருவராக பின் நாக்கு சித்தர் சன்னதி (புண்ணாக்கு சித்தர்) உள்ளது. அங்கு கோவில் வேல்கள் நிறைந்து வேல் கோட்டமாக காட்சி அளிக்கிறது.
🌷 இதன் பின்புறம் சரவணமா முனிவரின் சமாதி கோவிலும் (குகை) உள்ளது. இப்படி பல சிறப்புகளை கொண்ட சென்னிமலை ஆண்டவர் கோவிலில் கடந்த 12–2–1984 அன்று உலகமே வியக்கும் வகையில் 1,320 படிக்கட்டுகள் வழியாக இரட்டை மாட்டு வண்டிகள் தங்கு தடையின்றி சென்று அதிசயத்தை நடத்தியுள்ளது. இதை லட்சக்கணக்கான மக்கள் நேரில் வந்து கண்டுகளித்தனர்.
🅱 தம்பிக்கு முதல் பூஜை:🅱
🔥 எல்லா கோயில்களிலும் விநாயகருக்கு முதல் பூஜை உண்டு. இங்கோ மூலவர் முருகனுக்கு நைவேத்ய பூஜை முடிந்த பின்பே, சந்நிதி விநாயகருக்கு பூஜை செய்யப்படும்.
🔥 முருகன் ஞானப்பழத்தால் கோபித்து வந்து மலைமேல் வீற்றிருப்பதால், அவரை சாந்தப்படுத்தும் வகையில் தொன்று தொட்டு இவ்வாறு நடக்கிறது.
🅱 தல வரலாறு:🅱
⛱ சென்னிமலைக்கு சுமார் 3 மைல் தூரத்தில் நொய்யால் ஆற்றின் கரையில் 'கொடுமணல்' என்ற கிராமம் உள்ளது. தமிழ்நாட்டின் மாநில தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த இடம் ஒரு முக்கியமான தொல்பொருள் தளமாகும். ஒரு காலத்தில், இந்த கிராமம் ஒரு பெரிய நகரமாக இருந்தது, ஒரு குட்டி அரசரால் ஆளப்பட்டது என்று தொல்லியல் ஆய்வு கூறுகிறது. இந்த விஷயத்தில் ஆராய்ச்சிக் கட்டுரை இன்னும் வெளிப்படையான தகவல்களைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
⛱ பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நிலத்தில் ஒரு பண்ணையக்காரர் வசித்து வந்தார், அவரது பண்ணையில் நூற்றுக்கணக்கான பசுமாடுகள் இருந்தன, அதில் ஒரு வளம் மிக்க காராம்பாசுவும் இருந்தது.. ஒவ்வொரு நாளும் மாலை பசுக்கள் மேய்ப்பவன் அடைத்து வைப்பது வழக்கம். சில நாட்களாக ஒரு காராம் பசுவின் மடியில் பால் இல்லாமல் இருந்ததை வேலையாள் தன் எஜமானிடம் தகவல் தெரிவித்தான்.
⛱ தினசரி மாலையில் ஆவினங்கள் கூட்டாக தொட்டிக்கு திரும்பி வரும் போது, இந்த காராம் பாசு மற்றவர்களிடமிருந்து பிரிந்து, ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று, பால் முழுவதும் தானாகவே சொறியவிட்டு பின் மறுபடியும் மாடுகள் கூட்டத்தில் சேர்ந்து வருவதை சிவ நாட்கள் கவனித்துவிட்டு, அந்த குறிப்பிட்ட இடத்தில் மண்ணை தோண்டி பார்க்க செய்தார்.
⛱ சுமார் 5 முதல் 6 அடி ஆழம் தோண்டியதும் எல்லோரும் அதிசயத்தக்க பூர்ண முகப் பொலிவுடன் ஒரு கற்சிலை தென்பட்டது. சிலை கண்டுபிடித்ததில் பண்ணையார் மகிழ்ச்சியடைந்தார். மேலும், அவர் சிலையை ஆராய்ந்த போது அதன் முகம் பொலிவுடன் இருந்தாலும், இடுப்புக்கு கீழ் சரியான வேலைப்பாடின்றி இருந்தது. அக்குறையைப் போக்க அந்தப் பகுதியை சிற்பியைக் கொண்டு உளியால் வேலையைத் துவக்கினார். உளிபட்ட இடத்தில் ரத்தம் பீறிட்டது. பணியை நிறுத்திவிட்டனர். “ ”ஆண்டவர் அப்படியே இருக்க பிரியப்படுகிறார்”, என்று சென்னிமலையின் மேல் பிரதிஷ்டை செய்தனர். இவருக்கு “தண்டாயுதபாணி’ என்ற திருநாமம் இட்டனர். இன்று அத்தலமே சென்னிமலை என்று அழைக்கப்படுகிறது. இன்றும் கூட மூலாவார் விக்ராஹத்தின் கீழ் பகுதி வேலைப்பாடற்றும் ஒரே வழியில் காணப்படுகிறது.
⛱ கோயில் 'சிவாலய சோழ' காலத்தில் 3000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பிரம்மஹத்தி தோஷத்தை அகற்றுவதற்காக இந்த மன்னர் நொய்யல் நதியில் நீராடும் சமயம் இம் மலையைப் கண்டு படைகளுடன் மலை மீது ஏறி கோயிலுக்குள் நுழைந்தார். முருகன் 'அர்ச்சகர்' வடிவத்தில் தோன்றி, தன்னைத்தானே பூஜித்து மன்னருக்கு பிரம்மஹத்தி தோஷம் விடுவித்தார்.
⛱ திருக்கடவூரிலிருந்து இருந்து திருவிருந்தபுரத்தில் (பிடாரியூர்) தங்குவதற்கு 'தெய்வசிகாமணியார்' என்ற திருமறையவரை மன்னர் சிவாலய சோழர் கொண்டு வந்தார்.
⛱ சிவமறையோர் குலத்தில் பிறந்த சத்திய ஞானியை குருவாக கொண்ட சரவண முனிவர் சென்னிமலையில் வரலாற்றை அறிய விரும்பி முருகக் கடவுளை வழிபட்ட சமயம் அசரிரீ மூலம் முருகப் பெருமான் அருளியவாறு காஞ்சிபுரம் சென்று அங்கு வாழ் மறையவர்களிடம் செப்பேட்டிலிருந்து சிரகிரி வரலாற்றை வேறு செப்பேட்டில் எழுதிக் கொண்டு சென்னிமலையில் செப்பேட்டில் உள்ளவாறு மகிமைகள் அணைத்தும் கண்டு மகிழ்ந்தார். முருகக்கடவுள் சரவண முனிவருக்கு ஆறுமுக வடிவமாகவும் , ஒருமுக வடிவமாகவும் காட்சியருளினார். சரவண முனிவர் சமாதி இம்மலைமேல் உள்ளது.
⛱ பழனியம்பதிக்கு முன் தோன்றிய சென்னிமலை சிவபெருமான் திருமணத்தின் போது, தென்கோடி மக்கள் அனைவரும், சிவ-பார்வதி திருமணக்கோலம் காண, வடகோடியில் குவிந்தனர். அப்போது வடதிசை தாழ்ந்து, தென்திசை உயர்ந்தது. இதை சமன் செய்ய, அகத்தியரை தென்கோடிக்கு, சிவபெருமான் செல்ல பணித்தார். சிவபார்வதியின் திருமணக்கோலத்தை தான் காண முடியாதா என, அகத்தியர் வருந்தினார். உனக்கு, அங்கேயே காட்சியளிப்பதாக, அருளினார். தென்திசை நோக்கி வந்த அகத்தியரை, சூரபத்மன் போன்ற அசுரர்களின் தலைவனான இடும்பாசுரன் எதிர்கொண்டு, அவரை வணங்கி, தன்னை சிஷ்யனாக ஏற்க வேண்டினார். அகத்தியரும், சிஷ்யனாக ஏற்றனார். தென்திசை நோக்கிய அவசர பயணத்தால், தன் சிவபூஜை எடுத்து வரும்படி, இடும்பனை, அகத்தியர் பணித்தார். வடதிசை சென்ற இடும்பனுக்கு, அம்மலையில், சிவபூஜை எங்குள்ளது எனத்தெரியாமல், சிவகிரி, சத்யகிரி என இரு மலைகளை, காவடியாக எடுத்து, சென்னிமலை வந்தார். அப்போது, சென்னிமலை துவாபர யுகத்தில், புஷ்பகிரியாக இருந்தது.
⛱ இடும்பனுக்கு, பொதிகைக்கு வழி அறியாத நிலையில், முருகப்பெருமான், ராஜகுமாரனாக காட்சியளித்து, பொதிகைக்கு வழிகாட்டிய இடமே புஷ்பகிரி எனும் சென்னிமலையாகும். இடும்பன் காவடியாக கொண்டு வந்த மலைதான், தற்போது பழனியம்பதியாக உள்ளது. இதனால், சென்னிமலையை, ஆதிபழனி என்பர். இங்கு மூலவர் தண்டாயுதபாணி கோலத்தில் வீற்றுள்ளார். இங்கு, தினமும், நடக்கும் கால பூஜைகளில், மூலவருக்கு நிவேத்திய பூஜைகள் முடிந்த பின்னரே, சன்னதி விநாயகருக்கு பூஜை செய்யப்படும். ஏனெனில், முருகப்பெருமான், பழத்தின் பொருட்டு, கோபித்து வந்து, மலையில் வீற்றிருப்பதால், அவரை சாந்தப்படுத்தும் பொருட்டு, தொன்றுதொட்டு இவ்வாறு பூஜைகள் இன்னும் நடக்கிறது.
🅱 சிறப்பம்சம்:🅱
Ⓜ அதிசயத்தின் அடிப்படையில்:
♻ புராணக் காலத்தில் அனந்தன் என்ற நாக ராஜனுக்கும் வாயு தேவனுக்கும் இடையில் ஒரு பலப்பரீட்சை நடந்தது. அனந்தன் மகாமேரு பர்வதத்தை உறுதியாகச் சுற்றிப் பிடித்துக் கொண்டான். அனந்தனின் பிடியிலிருந்து மேருமலையை விடுவிக்க வேண்டி, வாயுதேவன் எதிர்த்துத் தாக்கினார். அவ்வளவில் மேருமலையின் சிகரப் பகுதி முறிந்து, பறந்து சென்று பூந்துறை நாட்டில் விழுந்தது. அந்தச் சிகரப் பகுதி தான் சிகரகிரி, புஷ்பகிரி, மகுடகிரி என்றெல்லாம் அழைக்கப்பட்டு, தற்போது சென்னிமலை என்று அழைக்கப்படுகிறது.
♻ இந்த மலையில் தான் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,749 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது முருகப்பெருமான் அருளும் திருக்கோயில். இந்த ஊருக்கு மற்றுமொரு வரலாற்றுப் பெருமையும் இருக்கிறது. அது தமிழ்நாட்டின் மிக முக்கிய சுதந்திரப் போராட்டத் தியாகியான திருப்பூர் குமரன் பிறந்த ஊர் என்பதுதான்.
♻ சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன், சிறந்த முருகப்பக்தரான சிவாலயச் சோழன் என்ற மன்னருக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்குவதற்காக, முருகப்பெருமானே நேரில் வந்திருந்து, தன்னைத்தானே பூஜித்து, மன்னனின் பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கியதாக ஒரு நம்பிக்கை காலம்காலமாகப் பக்தர்களிடையே நிலவுகிறது.
🅱 இருப்பிடம்:🅱
✈ ஈரோட்டில் இருந்து தாராபுரம் செல்லும் வழியில் சுமார் 28 கி.மீ தொலைவில் உள்ளது சென்னிமலை.
✈பெருந்துறையில் இருந்து 13 கி.மீ., மற்றும் இங்கூர் தொடர்வண்டி நிலையத்திலிருந்து 3 கி.மீ., தூரத்தில் உள்ளது.
❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃
🏹 தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்🏹
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

No comments:
Post a Comment