*பாரதத்தில் சிவனுக்காக அமைக்கப்பட்டுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்று ; இந்தியாவிலேயே மகாசக்தி பீடமும் ஜோதிர்லிங்கமும் ஒரே இடத்தில் தரிசனம் தரும் மூன்று தலங்களில் ஒன்று ; எல்லாப் பிணிகளையும் தீர்ப்பவராக அருள்பாலிக்கும் சிவபெருமானின் இருப்பிடம்..*
💧🌺💦🌹 *BRS*💧💐💦🌼💧
மூலவர் : *வைத்தியநாதர்*
அம்மன்/தாயார் : *தையல்நாயகி*
தீர்த்தம் : *சூரிய தீர்த்தம், கங்கா தீர்த்தம்..*
பழமை : *2000-3000 வருடங்களுக்கு முன்*
ஊர் : *தேவ்கர்*
🅱 *திருவிழா:*🅱
🌼 சிவராத்திரி, நவராத்திரி, ஹோலிப் பண்டிகை, தீபாவளி, கார்த்திகை முதலிய விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
🅱 *தல சிறப்பு:*🅱
🥀 சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களுள் இதுவும் ஒன்று.
🥀 மகேசன் சுயம்பு லிங்கமாக அருள்புரிகிறார்.
🥀 பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களில் இரண்டாவது தலமாக இது விளங்குகின்றது.
🥀 இந்த சிவலிங்கத்தை பைஜூ என்ற வேடன் தான் முதன்முதலில் கண்டு வழிபட்டான் என்றும், அவன் பெயரால் இந்த சிவன் பைஜூநாத் என்று வணங்கப்பட்டு, அந்தப் பெயரே வைத்தியநாத் என்றானதாகச் சொல்லப் படுகிறது.
🥀 51 சக்தி பீடங்களில் 22-ஆவதாக விளங்கும் இது, அன்னையின் உடற்கூறுகளில் இதயம் விழுந்த தலமாகக் கருதப்படுகிறது.
🥀 இந்தியாவிலேயே மகாசக்தி பீடமும் ஜோதிர்லிங்கமும் ஒரே இடத்தில் தரிசனம் தரும் மூன்று தலங்களில் வைத்யநாதர் ஆலயமும் ஒன்று. காசியும், ஸ்ரீ சைலமும் மற்ற இரண்டு தலங்கள்.
🥀 அன்னையின் மார்புப் பகுதி விழுந்த தலத்தை ஹ்ருதய்பீட் என்பர். தற்போது வைத்யநாதர் ஆலயம் என்று மக்களால் அழைக்கப்படுகிறது.
🥀 இருதய பீடமான இங்கே அன்னையின் சந்நிதி, உயர்ந்த சதுர மேடையின் மேல் கட்டப்பட்டுள்ளது.
🥀 சிவன் சந்நிதிக்கு நேர் கிழக்கில் அன்னையின் ஆலயம் உள்ளது. கருவறையில் பிரதான தெய்வமாக ஜெயதுர்கா கம்பீரமாகக் காட்சியளிக்கிறாள்.
🥀 சக்தி பீடத்தை அலங்கரிக்கும் அன்னை, ஜெயதுர்கா என்றும், கால பைரவர் வைத்யநாதர் என்றும் போற்றப்படுகிறார்கள்.
🥀 திரேதயுகத்தில் வாழ்ந்த இராவணன் அசுரனாயினும் சிறந்த சிவபக்தன். இவன் சிவனாரை நோக்கிக் கோரத் தவம்புரிந்து பல அபூர்வ சக்திகளைப் பெற்றவன். அவன் இவ்வாறு தவம் செய்த இடமே தியோகர் (தேவ்கர்).
🥀 வெகுகாலம் தவம் செய்தும் பரமசிவன் பிரசன்னமாகாததால் மனவருத்தமுற்ற இராவணன் தன் பத்துத் தலைகளையும் ஒன்றன்பின் ஒன்றாக ஹோமத் தீயில் ஆகுதி செய்தான். அவன் பத்தாவது தலையையும் வெட்டிக் கொள்ள முயலும்போது அவன் திடச்சித்தத்தை மெச்சிப் பரமசிவன் அவன் முன் தோன்றினார். அவனால் ஆகுதி செய்யப்பட்ட ஒன்பது தலைகளையும் அவன் திரும்ப அடையுமாறு செய்து அவனுடைய வெட்டுக் காயங்களையும் ஆற்றினார். ஒரு மருத்துவர்போல் இறைவன் செயல்பட்டுத் தன் பக்தனைக் காத்ததால் அவர் வைத்யநாதர் எனும் நாமத்தை அடைந்தார்.
🥀 பவிஷ்ய புராணத்தில் இத்தலத்தைப் பற்றிய குறிப்பு இருக்கின்றது.
🥀 மத்ஸ்ய புராணம் *“ஆரோக்ய வைத்யநாதிடி”* என்று இத்தலத்தைக் குறிப்பிடுகிறது.
🥀 கைலாயத்திலிருந்து இராவணன் பெற்றுவந்த ஆத்மலிங்கம் இருப்பது தியோகரில் தான் என்றும் வேறொரு புராணக் குறிப்புக் கூறுகிறது.
🥀 காடுகளுக்குள் மறைந்திருந்த இந்த லிங்கத்தைப் பைஜு என்று பெயருடைய வேடன் ஒருவன் கண்டு இதனை வழிபட்டு வந்ததாகவும், அந்த ஆத்மலிங்கமே வைத்யநாதரான ஜோதிர்லிங்கம் என்றும் சொல்லப்படுகிறது.
🥀 ஆதிசங்கர பகவத்பாதர் இயற்றிய துவாதசலிங்க ஸ்தோத்திரத்தில், வைத்யநாதர் வடகிழக்கில் எழுந்தருள்வதாகச் சொல்லியிருப்பதிலிருந்தும் இதுவே ஜோதிர்லிங்கத் தலம் என்று நிபுணர்கள் முடிவு செய்கின்றனர்.
🅱 *திறக்கும் நேரம்:*🅱
🗝 *காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்..*🗝
🅱 *பொது தகவல்:*🅱
🎠 வைத்யநாதர் கோயில் விஸ்வகர்மாவாலேயே கட்டப்பட்டது என்பது ஐதீகம்.
🎠 கோபுரத்தின் மீது மூன்று தங்கக் கலசங்கள் உள்ளன. இவை ராஜ புராண் சிங் என்ற மன்னரால் வழங்கப்பட்டவை.
🎠 கோபுரத்தின் உட்பகுதியில் சந்திரகாந்தக்கல்லால் ஆன எட்டிதழ் தாமரை வடிவம் பொருத்தப்பட்டிருப்பது சிறப்பு.
🎠 லிங்கப் பெருமானார் சிறிய திருவுருவங் கொண்டே பேரருள் பாலிக்கிறார்.
🎠 அன்னை பார்வதியின் ஆலயம் சிவன்கோயிலுடன் பெரிய செந்நிறக் கயிறுகளால் பிணைக்கப்பட்டிருப்பது சிவசக்தி ஐக்கியத்தைக் காட்டுகிறதாம்.
🎠 இங்கு பக்தர்கள் இறைவனுக்குத் தாங்களே அபிஷேகம் செய்யலாம்.
🎠 முதலில் பூஜாரி தர்ப்பைப் புல்லால் லிங்கத்தின் மீது நீரைப் புரோக்ஷிக்கிறார், அதன்பின் பக்தர்கள் அபிஷேகம் செய்து மலரும் வில்வமும் சார்த்துகிறார்கள்.
🅱 *பிரார்த்தனை:*🅱
🎭 அம்மையும், வைத்திய நாதரும் ஜோதிர்லிங்கமாக அமர்ந்து இருப்பதால், உயிர்களின் தீராத உடற்பிணியையும், தீராத சகலநோய்களையும் தீர்த்து வைப்பார்கள். ஓம் நமசிவாய என்ற மந்திரம் உடற்பிணியை மட்டுமல்ல பிறவிப்பிணியையும் போக்கி மோட்சத்தையும் கொடுக்கும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பர். எனவே நமக்கு நோயற்ற நல்வாழ்வை இறைவன் அருளுவார். அன்னை பசியற்ற வாழ்வை வழங்குவார்.
🅱 *நேர்த்திக்கடன்:*🅱
☀ வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அபிஷேகம், அர்ச்சனை செய்து வஸ்திரம் அணிவித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்..
🅱 *தலபெருமை:*🅱
🌺 நம் நாட்டில் உள்ள பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்று.
🌺 இத்தலத்தில் சிவபெருமான் மருந்தீசர் என மருந்து மலைக் குன்றின் மீது சிவலிங்கமாக அமர்ந்து உள்ளார். அம்மையும், அப்பனும் மருந்துகளுடன் அமர்ந்து உலக உயிர்களை ரட்சிக்கின்றனர்.
🌺 மக்களின் தீராத வினைகளைத் தீர்த்து வைக்கின்றனர். கோயில் குன்றின்மீது அழகாக கோட்டை போல் காணப்படுகிறது. கோயில் மிகப் பழமை வாய்ந்தது எனினும் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. வைத்திய நாதம் கோயில் ஒரு சிறு குன்றின் மீது கட்டப்பட்டுள்ளது. கோயிலின் வடக்குப்பக்கமும் கிழக்குப் பக்கத்திலும் படிக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளன.
🌺 கோயில் கோபுரம் அறைக்கோள வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது.
🌺 கோயிலைச் சுற்றிலும் கோட்டை யாகக் கட்டியுள்ளார்கள். கோபுரமும், விளக்குத்தூண்களும் அழகாக உள்ளன.
🌺 விளக்குத்தூண் மரத்தில் இலைகள் உள்ளது போலக் கற்களால் கட்டியுள்ளனர்.
🌺 கோபுரத்தின் மீது தங்கக்கலசம் உள்ளது.
🌺 கோயில் இரண்டு பிராகாரங்களாக அமைக்கப்பட்டுள்ளது.
🌺 வைத்திய நாதர் அழகிய சுமாரான லிங்கவடிவில் காட்சி தருகிறார்.
🌺 கர்ப்பகிரகத்தின் உள்ளே நாம் சென்று சிவலிங்கத்தை தொட்டு அபிஷேகம் ஆராதனை முதலிய வழிபாடுகளைச் செய்யலாம்.
🌺 வைத்திய நாதர் தவிர வேறு பரிவாரத் தெய்வங்களும் உள்ளன.
🌺 கர்ப்பகிரகத்தின் முன்னுள்ள விசாலமான அந்த மண்டபத்தில் பல தூண்கள் சிற்ப வேலைப்பாடுடன் காணப்படுகின்றன.
🌺 பளிங்குத் தரை போடப்பட்டுள்ளது. தரையின் நடுவே ஆமை வடிவம் செதுக்கப்பட்டுள்ளது.
🌺 அனுமன் சன்னதியும், விநாயகர் சன்னதியும் உள்ளது.
🌺 குன்றும் கோயிலும் அமைதியான இயற்கை எழில்மிக்க சூழலில் அமைந்துள்ளது.
🌺 வைத்திய நாதத்தில் முதலில் கோயில் அமைந்துள்ள குன்றினையும், கோயிலையும், கிழக்கேயிருந்தும் வடக்கேயிருந்தும் தரிசிக்க வேண்டும்.
🌺 கோயில் கோட்டைபோல் அமைந்துள்ளதாலும், இரண்டு பிராகாரங்கள் உள்ளதாலும் அவற்றில் பல மூர்த்திகள் உள்ளது.
🌺 கோயிலைச் சுற்றி குன்றின் மீது சில சிறுசிறு கோயில்களும் உள்ளன.
🌺 கோயிலில் சிற்பங்களும் சித்திரங்களும் உள்ளன.
🌺 இத்தலத்தில் விளக்குக்கம்பம் மரத்தில் கிளை கிளையாக அடுக்காகக் காணப்படுவது போல் அமைத்துள்ளார்கள். நமது தென்னாட்டுப்பக்கம் கோயில் முன்பு சிறு சதுரமான மேடை, அதன் நடுவே ஒரு கல்தூண் வைத்து அதன் உச்சியில் சட்டி வைப்பதற்கு ஒரு நிலை அமைத்து அதில் ஒரு புதிய சிறுபானையில் எண்ணெய் திரிவிட்டு விளக்கு ஏற்றுவார்கள். அதுபோன்று இங்கே இல்லை.
🌺 கோயில் முன் மண்டபத்தில் தரையில் ஆமை வடிவம், நந்தி ஆகியோரையும் தரிசிக்கலாம்.
🌺 இங்கு ஒரு வித்தியாசமான வழிபாட்டுமுறை உள்ளது. அதாவது, சிராவண மாதத்தில் (நம்ம ஊர் ஆடி மாதம்) பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கு வழிபடவருவார்கள்.
🌺 அவர்கள் கங்கை நீர் சேகரிக்கப்பட்ட கலசங்களை காவடிபோல் சுமந்துகொண்டு, சுல்தான் கஞ்ச் என்னுமிடத்திலிருந்து கால்நடையாகவே கோயிலுக்கு வருவார்கள்.
🌺 பயண தூரம் 105 கிலோமீட்டர்! அப்படி வரும்போது அந்தக் காவடியை எதற்காகவும் கீழே வைக்கக்கூடாது. வேண்டுமானால் அடுத்தவரிடம் கொடுத்துவிட்டு நம் அவசிய காரியங்களைச் செய்யலாம்.
🌺 உறங்குவதென்றாலும், அந்தக் காவடியை மற்றவர் வைத்துக் கொண்டு நிற்க வேண்டும். வேறு வழியின்றி தரையில் வைக்க நேர்ந்தால் மறுபடியும் புறப்பட்ட இடத்துக்கே சென்று, அங்கிருந்து தரையில் விழுந்து வணங்கி படி வந்து பின்னர் காவடியைச் சுமந்து செல்ல வேண்டும்.
🌺 ஒரு சிலர் ஓட்டமும் நடையுமாக எங்கேயும் நிற்காமல் 105 கிலோமீட்டர் தூரத்தையும் கடப்பார்கள். இந்த வழியில் இரண்டு இடங்களில் அனுமதிச்சீட்டு வாங்கவேண்டும். அங்கும் இவர்கள் நிற்கமாட்டார்கள். ஓடிய வண்ணம் தான் எல்லாமே. சூரியன் மறைவதற்குள் கோயிலை அடைந்தாக வேண்டும். இவ்வாறு கொண்டு செல்லப்படும் கங்கை நீரைக் கொண்டு வைத்தியநாத சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவார்கள்.
🅱 *தல வரலாறு:*🅱
🎸 கயிலை மலையில் பல காலம் சிவபெருமானை அர்ச்சித்தும் பலன் கிடைக்கவில்லை ராவணனுக்கு. பின்னர் அவன் இமயத்தின் தென்புறத்தில் பெரிய குண்டம் உண்டாக்கி, தன் தலைகளை ஒவ்வொன்றாகக் கொய்து பெருமானை நினைந்து யாகம் செய்தான். பத்தாவது தலையை வெட்டி எடுக்கும் போது சிவபெருமான் ராவணன் முன் தோன்றி, “வேண்டும் வரம் யாது?’ எனக் கேட்க, “சுவாமி, தாங்கள் எங்கள் நாட்டில் எழுந்தருள வேண்டும்’ என்றான். அதற்கிசைந்த சிவபெருமான் குறையாத வலிமையையும், அறுபட்ட சிரங்களை மீண்டும் வளரும்படியும் அருளினார்.
🎸 ஒரு லிங்கத்தை அவனிடம் தந்து, “இதை எங்கு நீ தரையில் வைத்தாலும் அந்த இடத்திலேயே குடி கொண்டு விடுவேன். எனவே நேராக உன் நாட்டுக்கு எடுத்துச் செல்’ என்றருளினார்.
🎸 அதைப் பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியுடன் தன் நாடு நோக்கிச் செல்ல, அந்த சிவலிங்கத்தை இராவணன் தன் நாட்டில் ஸ்தாபித்து விட்டால் பின்னர் இராவணனை அழிப்பதென்பது நடவாத காரியமாயிற்றே என்று தேவர்கள் அஞ்சினர். உடனே திருமால் இடம் சென்று முறையிட்டனர்.
🎸 திருமால் விநாயகப் பெருமானின் உதவியை நாடினார். விநாயகப் பெருமான் அவர்களுக்கு அபயம் கூறி புறப்பட்டார்.
🎸 தன் நாட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த இராவணனுக்கு சந்தியாகால கடமைகளைச் செய்யும் நேரம் வந்தது. லிங்கத்தையும் கீழே வைக்கக்கூடாது. என்ன செய்வதென்று அவன் தவித்தபோது, விநாயகப் பெருமான் , அந்தண சிறுவன் வடிவில் அங்கு வந்தார்.
🎸 சிறுவனைக் கண்ட இராவணன் மகிழ்ந்து, சற்றுநேரம் லிங்கத்தை வைத்துக்கொண்டிருக்குமாறும்; தான் நித்ய கடமைகளை முடித்து விட்டு சீக்கிரம் வந்து விடுவதாகவும் கூறிச் சென்றான். இராவணன் அகன்றதும் விநாயகப் பெருமான் லிங்கத்தை தரையில் வைத்துவிட்டு மறைந்துவிட்டார். திரும்பிவந்த இராவணன் அந்த லிங்கத்தைப் பெயர்த்தெடுக்க எவ்வளவோ முயன்றும் இயலாமல் போக மனவருத்தத்துடன்
நாரதர் ராவணனை சந்தித்தார்..
🎸 அப்பொழுது நாரதர் "சிவபெருமானை நம்புவதில் நீ தவறு செய்தாய். சிவனின் வார்த்தையை நம்புவது தவறு.
🎸 கயிலை மலையையே இலங்கைக்கு நகர்த்து செல்லும் யோசனையை கூறினார் நாரதர்..
இதனால் அணைத்திலும் வெற்றி பெறக்கூடும். " என்று நம்ப வைத்தார் நாரதர்..
🎸 இராவணன் உடனடியாக நாரதரின் யோசனையை நிறைவேற்றினார்.
கயிலை மலையை அப்படியே இடம் பெயர்த்து இலங்கையில் வைத்துவிட்டால், தினமும் சிவ வழிபாடு செய்ய வசதியாக இருக்கும் என்று எண்ணிய ராவணன், திருக்கயிலாயம் வந்தான். அந்த நேரம் பார்வதி - பரமேஸ்வரன், கணங்களோடு கொலுவீற்றிருந்தனர். ஈசனை தரிசிக்க தேவர்களும் அங்கே குழுமியிருந்தனர்.
🎸 மலையடிவாரம் அடைந்த ராவணன், தன் பலம் முழுவதையும் கொண்டு இருபது கரங்களால் மலையை ஒருமுறை அசைத்து அதைப் பெயர்த்துத் தன் தோளில் தூக்க முயன்றான். இதனால் கயிலயங்கிரி பெரும் ஆட்டம் கண்டது. பிரம்மா, விஷ்ணு உள்ளிட்ட தேவர்களும் நிலை தடுமாறினர். சிவகணங்கள் விழுந்து புரண்டனர்.
கலக்கமடைந்த மலைமகள், ஈசனைப் பார்த்து "இது என்ன விபரீதம்.... இராவணனை அடக்குங்கள்'' என்றாள்.
🎸 சினம் கொண்ட சிவ பெருமான், தன் இடது காலின் கட்டை விரலால் மலைக்கு ஓர் அழுத்தம் கொடுத்தார். இதனால் மலையின் அடிபாகத்தில் நசுங்கி அவதியுற்றான் ராவணன். பின் வாகீச முனிவர் அங்கு வந்து, ராவணனிடம் "சாம வேதமாகிற கானத்தை பிழையின்றி ஓதி, சிவபெருமானை சாந்தப்படுத்தி, சாபவிமோசனம் அடைவாய்'' என்று வழி கூறினார். முனிவரின் வாக்குப்படியே கானம் இசைத்து சாப விமோசனம் அடைந்தான் ராவணன். இத்தகைய புராணக் கதைகளைக் கொண்டுள்ளது இந்தத் தலம்.
🅱 *சிறப்பம்சம்:*🅱
Ⓜ *அதிசயத்தின் அடிப்படையில்:*
🍁 புகழ்பெற்ற இந்து யாத்ரீக ஸ்தலமான இது, பைத்யநாத் தாம் என்று அழைக்கப்படுகிறது.
🍁 52 சக்தி பீடங்களில் ஒன்றாவும் கருதப்படுகிறது. இது சக்தியின் இதயம் விழுந்த இடமாம்.
🍁 சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களுள் இதுவும் ஒன்று.
🍁 நிலப்பரப்பில் அமைந்துள்ள தியோகரில் சிறிய குன்றுகளும் ஏராளமாக உள்ளன. பிரதான கோவில் வளாகம் 22 கோவில்களுடன், 12 ஜோயோதிர்லிங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.
🍁 இந்த, ஜார்கண்ட் மாநில தேவ்கர் வைத்தியநாதர் கோவில் குறித்த குழப்பம் ஒன்று நீண்ட நாட்களாக இருந்தது. மகாராஷ்டிர மாநிலத்தின் பரளி எனுமிடத்தில் அதே பெயரிலும், இமாச்சல பிரதேசத்தில், பைஜிநாத் எனுமிடத்தில் அதே பெயரிலும் உள்ள இன்னுமோர் ஆலயமும் தமது ஆலயங்களில் உள்ள லிங்கங்கள் தான் ஜோதி லிங்கங்கள் என கூறி வந்தன.
🍁 எனினும் 8ம் நூறாண்டில் வாழந்த ஆதி சங்கரர், பாடி இருந்த பாசுரத்தின சரியாக ஆய்ந்து, ஜார்கண்ட் மாநில தேவ்கர் வைத்தியநாதர் கோவில் லிங்கம் தான் ஜோதிலிங்கம் என சொல்லப் பட்டுள்ளது.
🅱 *இருப்பிடம்:*🅱
✈ ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ளது இத்தலம். ஹௌரா- டெல்லி வழியில் ஜஸ்டிகர் என்னும் தொடர் வண்டி நிலையம் உள்ளது. அங்கிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் தேவ்கர் எனப்படும் வைத்தியநாதம் உள்ளது.
❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃
🦋 *தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்*🦋
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
No comments:
Post a Comment