Saturday 1 July 2017

அருள்மிகு நாகவல்லி அம்பாள் சமேத நாகநாத சுவாமி திருக்கோயில், சிவன் சன்னதி, நாகூர் , நாகப்பட்டினம்.


சுயம்பு லிங்கமாக திருமாலுக்கு காட்சி கொடுத்த ஈசன் ; ஆனி மாத பவுர்ணமியில் சந்திரன் 10 நாட்களும், மாசி மாத பவுர்ணமியில் இந்திரன் 10 நாட்களும் கொடியேற்றி, தேரோட்டி தீர்த்தவாரிகள் நடத்தி பிரமோற்சவம் செய்து வழிப்பட்டு சிவபெருமான் திருவடி அடைந்த சிவதலம்...

🔵⚜🔵⚜ BRS🔵⚜🔵⚜🔵

மூலவர் : நாகநாத சுவாமி

உற்சவர் : சந்திரசேகரர்-கல்யாணசுந்தரர்

அம்மன்/தாயார் : நாகவல்லி அம்பாள்

தல விருட்சம் : பின்னை மரம்

தீர்த்தம் : சந்திர தீர்த்தம்

ஆகமம்/பூஜை : காமிய ஆகமம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : புன்னகாவனம்

ஊர் : நாகூர்

🅱 திருவிழா:🅱

🍁 மகா சிவராத்திரி, பிரதோஷம், கார்த்திகை வழிபாடு, அர்த்த ஜாமபூஜை போன்ற திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது.

🍁 கார்த்திகை சோமவாரம் பங்குனி உத்தரம் மற்றும் மாதந்திர விசேஷ நாட்கள் அனைத்தும் இங்கு விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன.

🅱 தல சிறப்பு:🅱

👉🏽 இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

👉🏽 நாகராஜன் பூஜித்து பெயர் பெற்றதால் இறைவன் நாகநாதர் என்றும் இறைவி திருநாகவல்லி என்றும் அழைக்கப்படுகின்றனர்.

👉🏽 மூர்த்தி, தலம், தீர்த்தம் இம்மூன்றாலும் சிறப்பு பற்ற பதி.

👉🏽 தில்லைக்கு நிகரான சிறப்புடையது.

👉🏽 வைகாசி மாதம் பவுர்ணமி அன்று புன்னை மரத்தடியில் சுயம்பு லிங்கமாக தோன்றி திருமாலுக்கு காட்சி கொடுத்தது.

👉🏽 சுவாமி சந்நிதிக்கு அருகில் ராகு, கேது ஆகியோரின் திருவுருவங்கள் காணப்படுகின்றன.

👉🏽 இது சர்ப்பதோஷ நிவர்த்தி ஸ்தலம் என்பர்.

👉🏽 கார்த்திகை நட்சத்திரக்காரர்களுக்கு இது பரிகாரத் தலம் எனப்படுகிறது.

👉🏽 சீதையைத் தேடிவந்த இராமபிரான் இக்கோயிலில் (தென்புறம்) ஓர் லிங்கமூர்த்தியை நிறுவி பூஜித்தார்; அம்மூர்த்தி இராமலிங்கேசுவரர் என்று அழைக்கப்படுகிறார்.

👉🏽 கிரகண காலங்களிலும், அர்தோதய-மகோதய புண்ணிய காலங்களிலும் இங்குள்ள கடலில் மூழ்கி இராமனாதப் பெருமானை வணங்குவோர், எல்லா நன்மைகளையும் அடைவர்.

👉🏽 நாகநாத சுவாமி சன்னதியில் நாகப்புற்றுக்கள் உள்ளன.




🅱 திறக்கும் நேரம்:🅱

🗝 காலை 6:30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை திறந்திருக்கும்.🗝

🅱 பொது தகவல்:🅱

🌺 ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்ட கோயில் கிழக்கு நோக்கி அமையப் பெற்றுள்ளது.

🌺 உள்ளே சென்றால் கருங்கல் மண்டபத்தில் விநாயகர், நந்தி, பலிபீடம் இருக்கக் காணலாம். சன்னதிக்குச் செல்லும் வழியிலுள்ள சுவற்றில், ஆதிசேஷன் சிவபெருமானைப் பூஜிக்கும் திருவுருவம் இருக்கக் காணலாம். இடப்புறச் சுவற்றில், நாககன்னிகை இருக்கிறாள்.

🌺 சுவாமிக்கு வலது புறத்தில் உற்சவர் சந்திசேகரர், கல்யாண சுந்தரர், தியாகராஜர், இடது புறத்தில் அம்பாள் நாகவல்லி, காட்சி கொடுத்த நாயனார், நடராஜர், ஐயப்பன் தனி தனி சன்னதிகளிலும், உட்பிரகார வலது புறத்தில் ஜூரதேவர், தெட்சிணாமூர்த்தி, நாகர் கன்னிகள், வலம்புரி விநாயகர், மேற்கில், கன்னிராகுபகவான், ஐவேலி நாதர், சுப்பிரமணியர், தத்த புருஷலிங்கம், மகாலெட்சுமி, நால்வர், இடது புறத்தில் பிரம்மா, துர்கை, காசி விஸ்வநாதர்,நர்த்தன விநாயகர், சனீஸ்வர பகவான் ஆகியோர் தனி, தனி சன்னதிகளிலும், வெளி பிரகார வலது புறத்தில் சந்திர தீர்த்த குளம், இடது புறத்தில் நந்தவனமும் அமையப் பெற்றுள்ளது.

🌺 தென்மேற்கில் வினாயகப்பெருமானின் சன்னதியும், வடக்குத் திருச்சுற்றில் முருகப்பெருமானது சன்னதியும் உள்ளன. மயில் வாகனனாக, வள்ளி-தெய்வானையுடன் அற்புதக் காட்சி வழங்குகின்றான் ஆறுமுகன்.

🌺 சண்டிஸ்வரர், பைரவர் ஆகிய மூர்த்திகளையும் பிராகாரத்தில் தரிசிக்கலாம்.

🌺 பிராகாரத்தில், தக்ஷிணாமூர்த்தி, கருவறைச் சுவற்றை ஒட்டி கோஷ்டமாக மட்டும் இருக்காமல் தனிச் சன்னதி கொண்டு விளங்குகின்றார். இது போன்ற அமைப்பு, இக்கோயிலிலும், நாகை சட்டையப்பர் (ஆதிகாயாரோகணேசுவரர்) கோயிலிலும் மட்டுமே உள்ளன.

🌺 இத்திருக்கோயிலின் உட்பிரகாரத்தில் கன்னி மூலையில் ராகுபகவான் விமானம், மண்டபத்துடன் தனி சன்னதியில், நாகவல்லி, நாககன்னியருடன் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.

🌺 நாகநாதப்பெருமானது அருளை வேண்டி, வாசுகி, கார்கோடகன், தனஞ்சயன், ஐராவதன், குளிகன், சங்கபாலன் ஆகிய நாகங்களும் வழிபட்டதை மேலைத் திருச்சுற்றில் காணலாம்.

🌺 இவ்வூரில் யாரையும் நல்லபாம்பு தீண்டியது கிடையாது என்று கூறப்படுகிறது.

🅱 பிரார்த்தனை:🅱

🌿 நாக தோஷம், காலசர்ப்ப தோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம் என அனைத்து வித தோஷங்களும் நிவர்த்தியாவதால் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து தோஷம் நீங்க பிரார்த்தனை செய்கின்றனர்.

🅱 நேர்த்திக்கடன்:🅱

☀ பிரார்த்தனைகள் நிறைவேறியதும் எடைக்கு எடையாக தானியங்களை நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர்.

🅱 தலபெருமை:🅱

🌸 பிரம்மன், இந்திரன், சந்திரன், துர்வாசர், சப்தரிஷிகள், உருத்திரசன்மன், அந்தணன் ஆகியோரால் யுகங்கள் தோறும் வழிபடப்பெற்றது.

🌸 நாகராஜரின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய நாகதோஷ பரிகார தலம்.

🌸 இக்கோயிலின் தீர்த்தம் சந்திரனால் உருவாக்கப்பட்டதால் சந்திரதீர்த்தம் என பெயர் பெற்றது.

🌸 இத்தீர்த்தத்தில் நீராடி சிரார்த்தம், தான, தர்மம் செய்தால் கயாவில் செய்த பலன் கிடைக்கும்.

🅱 தல வரலாறு:🅱

🌤 சம்புபத்தன் என்னும் பிராமணன் தன் மனைவியுடனும் ஐந்து வயது மகனுடனும் காட்டில் வாழ்ந்து வந்தான். ஒரு நாள் அச்சிறுவன் நண்பர்களுடன் காட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது பாம்புகளுக்கு அரசனா தக்கன் என்பவன் தன் மனைவியுடன் கூடி மகிழ்வதை அச்சிறுவன் கண்டுவிட்டானே அன்பதை உணர்ந்த நாக அரசன் தன்முன் வினைப்பயன் காரணமாக, சீறிப்பாய்ந்து அவனைக் கடிக்க, அப்பிள்ளை இறந்து போனான்.

🌤 நெடுநேரமாகியும் மகன் வரவில்லையே என்று தாய் கணவரிடம் கேட்க , உடன் சம்புபத்தன் காட்டில்தேடி ஓரிடத்தில் தன் மகன் பிணமாகக் கிடப்பதைக் கண்டான். அந்த அந்தணன் தன் ஞான திருஷ்டியினால் பாம்பு அரசனால் தான் தன் மகனுக்கு இப்பழி வந்தது என்பதை உணர்ந்து கோபமுற்று நாகராசனை சபிக்கலானான்.

🌤 நீ நாகர் உலகை விட்டு நீங்கி அறிவும் வலிமையும் நீங்கி தனிப்பட்டவனாய் இப்பூலோகத்தில் திரியக்கடவாய் என்று சாபமிட்டான். நாக அரசன் நடுநடுங்கி அந்தணன் காலில் வீழ்ந்து வணங்கி தான் செய்த தவறை உணர்ந்து தன் சாபம் நிறைவேறும் காலத்தைக் கேட்டான்.

🌤 அதற்கு அந்தணன், ஆயிரம் வருடங்கள் சென்ற பிறகு உன் தந்தை காசியபனை நீ காண்பாய் அப்போது சாபம் தீரும் என்றார். அதன்படி நாகராஜா தன் தந்தையைக் கண்டு வணங்கி தன் சாபம் தீர மகாசிவராத்திரி நாளில் முதற்காலம் கும்பகோணம் வில்லவனத்திலும், இரண்டாம் காலம் திருநாகேஷ்வரம் சண்பகாரணியத்திலும் மூன்றாம்காலம் திருபாம்புறம் வன்னி வனத்திலும், நான்காம் காலம் புன்னாக வனத்திலும் உங்கள் நாகநாத சுவாமிகளை சிறப்பு வழிபாடு நடத்தி வழிபட்டு தன் சாபவிமோசனம் நீங்கி நாகூர் ஸ்ரீ நாகநாதசுவாமியின் திருவடிகளைச் சேர்ந்து முக்தி அடைந்தார்.

மற்றுமொரு ஸ்தல புராணம் :

🌤 சனத்குமார முனிவரின் வேண்டிக்கோளுக்குக் கிணங்கி, நந்தியெம்பெருமான், நாகையில் திருக்கோயில் கொண்டுள்ள நாகநாதப் பெருமானுடைய பெருமைகளைக் கூறுவதாகத் தலபுராணம் அமைந்துள்ளது.

🌤 பாதாள உலகை ஆண்டு வந்த ஆதிசேஷனுக்கு மகப்பேறு இல்லாததால் மிகவும் மனச்சோர்வடைந்து வசிஷ்ட முனிவரை அணுகினான். சிவபூஜை செய்துவந்தால் மகப்பேறு சித்திக்கும் என்று முனிவர் அருளவே; சிவராத்திரி தினத்தன்று இரவு நான்கு காலங்களும் முறையே, குடந்தைக் கீழ்க்கோட்டம் (கும்பகோணம் நாகேஸ்வர சுவாமி ஆலயம்), திருநாகேசுவரம்,திருப்பாம்புரம், திருநாகைக் காரோணம் ஆகிய நான்கு தலங்களை வழிபட்டான்.

🌤 நாகையை அடைந்து, தேவ தீர்த்தத்தில் நீராடி, காயாரோகணப் பெருமானையும், நீலாயதாக்ஷி அம்பிகையையும் முறைப்படி வழிபட்டான். சர்வ தீர்த்தத்தின் மேல்திசையில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தான். அதன் பயனாக அவனது மனைவி ஒரு பெண் மகவை ஈன்றெடுத்தாள். ஆனால் அக்குழந்தைக்கோ மூன்று தனங்கள் இருக்கக் கண்டு வருந்தலாயினான்.

🌤 அப்போது “நாகராஜனே! வருந்தாதே; இவளுக்குத் தக்க மணாளன் வரும்போது மூன்றாவது தனம் மறையும்” என அசரீரி ஒலித்தது.

🌤 ஆதிசேஷனின் மகளான நாககன்னிகை, நாள்தோறும் ஆதிபுராணரை மனமுருகி வழிபட்டுவந்தாள். ஒருநாள் தேவ தீர்த்தக்கரையில் சோழ அரசகுமாரனாகிய சாலீசுகனைக் கண்டாள். அப்போது அவளது மூன்றாவது தனம் மறையவே, இவனே தனது மணாளன் என அறிந்து, தன் பெற்றோரிடம் கூறினாள்.

🌤 பிலத்துவாரம் வழியே நாகலோகம் சென்ற சோழனை ஆதிசேஷன் வரவேற்றுத் தன் மகளை அவனுக்கு மணம் செய்துவித்தான். பின்னர் அவனை அரசாட்சி செய்யுமாறு கூறிவிட்டு, நாகராஜன் நாகையை வந்து அடைந்தான். நாக தீர்த்தத்தில் நீராடித் தான் பிரதிஷ்டை செய்த நாகலிங்கத்தை வழிபாட்டு வந்தான். இத்தீர்த்தத்தில் நீராடுவோரைப் பாம்பு தீண்டினாலும் விஷம் ஏறாமல் இருக்கக் கடவது என்ற வரமும் பெற்றான்.

🌤 ஆதிசேஷன் மாசி மாத மகாசிவரத்திரியன்று பூஜை செய்யும்போது, இறைவன் காட்சி நல்கினான்; அப்போது ஆதிசேஷன், "இறைவா, இந்நகரம் அடியேனது பெயரில் அழைக்கப்பட வேண்டும்; இந்த லிங்கமூர்த்தியில் தாங்கள் எப்போதும் இருத்தல் வேண்டும்; இங்கு வந்து வணங்கும் அன்பர்களுக்கு வேண்டிய வரம் அனைத்தையும் தந்தருள வேண்டும்;” என்று வீழ்ந்து வணங்கினான். நாகநாதப் பெருமானும் அவன் வேண்டிய வரத்தைத் தந்தருளினார்.

🅱 சிறப்பம்சம்:🅱

🎥 அதிசயத்தின் அடிப்படையில்:

🤹🏻‍♀ இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

🤹🏼‍♂ ஆனி மாத பவுர்ணமியில் சந்திரன் 10 நாட்களும், மாசி மாத பவுர்ணமியில் இந்திரன் 10 நாட்களும் கொடியேற்றி, தேரோட்டி தீர்த்தவாரிகள் நடத்தி பிரமோற்சவம் செய்து வழிப்பட்டு சிவபெருமான் திருவடி சேர்ந்தனர்.

🤹🏼‍♂ மாசி மாத அமாவாசையில் நாகராஜன் 10 நாட்களும் கொடியேற்றி, பிரமோற்சவம் செய்து, ஒன்பதாம் நாள் தேரோட்டம் நடத்தினான் என்று நம்பப்படுகிறது.

🤹🏼‍♂ மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றாலும் சிறப்புற்று விளங்கும் திருத்தலமான இவ்வூரில் யாரையும் நல்லபாம்பு தீண்டியது கிடையாது.

🤹🏼‍♂ தில்லைக்கு நிகரான சிறப்புடையது.

🤹🏼‍♂ வைகாசி மாதம் பவுர்ணமி அன்று புன்னை மரத்தடியில் சுயம்பு லிங்கமாக தோன்றி திருமாலுக்கு காட்சி கொடுத்த சிவன்.

🅱 இருப்பிடம்:🅱

🚗 நாகப்பட்டினத்தில் இருந்து காரைக்கால் செல்லும் வழியில் நாகூர் பேரூந்து நிறுத்ததில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் தேரடி பேரூந்து நிறுத்ததில் இறங்க வேண்டும்.

❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃

🌿 தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்🌿

No comments:

Post a Comment