🔵⚜🔵⚜ *BRS*🔵⚜🔵⚜🔵
மூலவர் : *சோமலிங்க சுவாமி*
தல விருட்சம் : *வில்வமரம்*
தீர்த்தம் : *அகஸ்தியர் உருவாக்கிய வேதி ஊற்று*
பழமை : *500 வருடங்களுக்குள்*
புராண பெயர் : *கல் நீ வாடி*
ஊர் : *கன்னிவாடி*
🅱 *திருவிழா:*🅱
🍁 சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, ஆடி அமாவாசை, ஐப்பசியில் அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, பிரதோஷ விழா இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றனர்.
🅱 *தல சிறப்பு:*🅱
👉🏽 இத்திருக்கோயிலில் நந்தியெம்பெருமான் விநாயகர் முன்புறம் அமைந்துள்ளார்.
👉🏽 அரிகேசவ பர்வதம், வராககிரி என்று பழைய மலைவாகட நூலில் கூறப்பட்டுள்ள மலைகள் தான் தற்போது கன்னிவாடி மலை, பன்றிமலை என பெயர் பெற்றுள்ளன.
மலைக்கோவில் , குகைக்கோவில் , தரைக்கோவில் எனும் மூன்று சிறப்பினையும் ஒருங்கே பெற்ற புண்ணிய பூமி
👉🏽 இந்நந்தியெம் பெருமானுக்கு வலதுபுறம் ஒரு காலும் இடதுபுறம் மூன்று கால்களுடன் அருள்தருகின்றார்.
👉🏽 அதேபோல் எம்பெருமான் சிவபெருமான் எதிர்புறம் அமைந்து உள்ள நந்தியெம் பெருமானுக்கு வலதுபுறம் ஒரு காலும், இடதுபுறம் மூன்று கால்களுடன் அருள்பாலிக்கின்றார் என்பது சிறப்புமிக்கதாகும்.
🅱 *திறக்கும் நேரம்:*🅱
🗝 *காலை 6 மணி முதல் மாலை 6மணி வரை திறந்திருக்கும். (பிரதோஷம் 4 மணிக்கு மேல் 5.30 மணிக்குள்)*🗝
🅱 *பொது தகவல்:*🅱
🌺 அம்பாள் மற்றும் பிற பரிவார மூர்த்திகள் கிடையாது.
🌺 கோயில் வளாகத்தில் வேம்பு, வில்வ மரத்தடியில் விநாயகர் மட்டும் இருக்கிறார்.
🌺 இவருக்கு எதிரே தந்தைக்குரிய நந்தி வாகனம் இருப்பது விசேஷமான அமைப்பு.
🌺 பழனி முருகன் சிலையை போகர் நவபாசனத்தின் உருவாக்கிய இடமும் இத்திருக்கோயில்தான் என்று உறுதிபடக் கூறினார்கள்.
🌺 போகர் அரைத்த உரல் இன்றும் உள்ளது.
🅱 *பிரார்த்தனை:*🅱
🌿 இறைவன் சோமலிங்க லிங்க சுவாமியை வணங்கினால் நினைத்த காரியங்களை சித்தி அடையச் செய்வார் என்பது மட்டுமின்றி தடைப்பட்ட கல்வி, திருமணம், மாங்கல்யதோஷம், செவ்வாய் தோசம், மற்றும் குடும்ப கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து வருவதாகவும் நவக்கிரக தோஷங்களும், பூர்வ ஜென்ம தோஷங்களும் நிவர்த்தியாகி வருகின்றன என்று பக்தர்கள் ஏராளமானோர் பிரார்த்திக்கின்றனர்.
🅱 *நேர்த்திக்கடன்:*🅱
☀ நீண்ட நாட்கள் திருமணம் தடையை நீக்க இத்திருக்கோயில் பிரதோஷ காலத்தில் வில்வமாலை அணிவித்து வழிபாடு செய்தால் திருமணம் கைகூடுகின்றன. சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.
🅱 *தலபெருமை:*🅱
🌸 மெய்கண்ட சித்தர், குண்டலி சித்தர், முத்தானந்த சித்தர், வலையானந்த சித்தர் ஆகியோரால் எம்பெருமான் சிவபெருமானை சோமலிங்க சுவாமியாக எழுந்தருளச் செய்து வணங்கி அருள் பெற்ற புண்ணிய ஸ்தலம்.
🌸 பூர்வ ஜென்மம் தோஷம் நீங்கும் இடம்.
🌸 ஓம் வடிவில் விநாயகர், நந்தி கழுத்தில் சிவலிங்கம் உள்ளது.
🌸 சித்திரை மாதம் பவுர்ணமி காலங்களில் சித்தர்கள் அனைவரும் ஒரு இடத்தில் கூடி, அவர்களது அரிய விஷயங்களை கூறிக் கொள்வார்கள். அப்படி சந்தித்த இடங்களில் இத்திருக்கோயிலும் ஒன்று.
🦋 *மலையின் சிறப்பு:* 🦋
🌸 அரிகேசபர்வதம் என்னும் மலையின் அடிவாரத்தில் அமைந்த கோயில் இது.
🌸 சிவலிங்கம் போன்று அமைந்த குன்றுக்கு, ஆதிசேஷன் என்னும் நாகம் குடைபிடிப்பது போல அமைந்த மலை இது.
🌸 பாறையை ஒட்டி சிறிய சன்னிதியில் சிவன் காட்சி தருகிறார்.
🌸 பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை, சிவராத்திரி நாட்களில் இங்கு விசேஷ பூஜை நடக்கும்.
🌸 கோயிலுக்கு அருகில் அகத்தியர் உருவாக்கியதாகக் கருதப்படும் வேதி தீர்த்தம் உள்ளது.
🌸 பல மூலிகைகள் கலந்த அற்புத தீர்த்தம் இது.
🌸 வயிற்று வலி, தீராத நோயால் அவதிப்படுவோர் நிவர்த்திக்காக இந்த தீர்த்தத்தை சிறிது குடித்துவிட்டுச் செல்கின்றனர்.
🦋 *தீப வடிவ குகை:* 🦋
🌸 சோமலிங்கசுவாமி சன்னிதிக்குப் பின்பறம், மெய்கண்டார் தவம் செய்த குகை உள்ளது.
🌸 பாறையில் இயற்கையாக அமைந்த இக்குகை, பார்ப்பதற்கு தீபத்தின் ஒளி சுடர்விட்டு பிரகாசிப்பதைப் போல அமைந்துள்ளது.
🌸 பக்தர்கள் தங்கள் மனம் ஒரு நிலைப்படவும், சிவன், சித்தர்களின் அருள் கிடைக்கவும் இதற்கு முன்பாக அமர்ந்து தியானம் செய்து செல்கின்றனர்.
🌸 மற்ற மூன்று சித்தர்கள் தவம் புரிந்த குகைகள், இந்த மலையின் உச்சிப்பகுதியில் வேறுவேறு இடங்களில் உள்ளது.
🐲 *இராஜகாளியம்மன் - போகர் ஓலைச்சுவடிக் குறிப்பு* 🐲
🔥 போகர் ஓலைச்சுவடிக் குறிப்புகளின் படி மதுராபதி தெய்வம் என்று அறியப்படும் மதுரை காளி, கோவலன் கொலையுண்டது கண்டு பாண்டியன் அரண்மனை நோக்கிச் சென்று அங்கே செங்கோல் ஏந்திய பாண்டியனைக் கண்டாள். மதுராபதியாகிய இராஜகாளியம்மன் பாண்டியன் செங்கோலைத் தொட்டு நீதி கேட்ட போது, பாண்டிய மன்னன் மீனாட்சி சொக்கநாதர் ஆகிய தெய்வங்களின் பெயரை உச்சரித்து அபயம் கேட்டு கூக்குரலிட்டது கேட்டு மீனாட்சியும் சொக்கநாதரும் பாண்டியன் முன் தோன்றினர். இத்தெய்வங்கள் மதுரை காளியுடன் வாதிடத் தொடங்கினர். மதுரை காளி தன கடமையிலிருந்து எவ்வாறு தவறினாள் என்பது வாதம். மதுரை நகரின் காவல் தெய்வம், பாண்டிய வம்சத்தின் குல தெய்வம் ஆகிய இரண்டு பொறுப்புகளை ஏற்றுள்ள மதுரை காளி மதுரை நகரை தீயினின்று காக்கத் தவறியது தான் பிழை என்பது மீனாட்சி சொக்கநாதர் வைத்த வாதம்.
🔥 பாண்டியன் அரண்மனை உள்ளே நுழையும் வரை கண்ணகி மானிடப்பெண். பாண்டிய மன்னன் ஊழ்வினைப் பயனாலும், கண்ணகியின் கற்பின் சக்தியாலும் அவள் காளியாகவே மாறிவிட்டதால் மதுரையை தீயினின்று காக்க இயலவில்லை' என்பது இதற்கு மதுர காளி வைத்தபதில் வாதம். சொக்கனாதனாகிய சிவன் இறுதியாக தொகுத்து சொன்ன தீர்ப்பு என்னவெனில், பாண்டிய மன்னன் தன கடமை தவறி கண்ணகி என்ற கற்புகரசியின் வாழ்வை அழித்தது மட்டுமல்ல தன்னையும் அழித்துக் கொண்டுள்ளான். எனவே அவனுக்கு மறுபிறவி உண்டு.
🔥 மன்னன் தன கடைசி பிறவியில் காளி கோவில் கட்டி சாப நிவர்த்தி அடைவான். இது காலம் வரை மதுராபதி தெய்வமாகிய நீ குடியிருக்க கோவிலின்றி மதுரை மீனாட்சி கோவில் மேற்கு கோபுரத்தில் துயில் கொள்ள கட்டளையிடுகிறேன், என தீர்ப்பு கூறினார். கடவுளின் தீர்ப்பின்படி துயில் கொண்டிருந்த மதுராபதி அம்மன் சாபநிவர்த்தியாக மகா போகர் தவம் செய்த இடத்தில் அரூப சக்தியாக உள்ளாள்.
🎭 *விஷ்ணு மலையில் சிவன்:* 🎭
🍄 *"ஹரிகேச பர்வதம்'* என்று சித்தர்களால் அழைக்கப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையின் அடி வாரத்தில் உள்ளது இத்திருத்தலம். சிவனுடைய திருத்தலம், விஷ்ணுவின் பெயரால் அழைக்கப்படும் மலையில் அமைந்திருப்பது சிறப்பு. இம்மலையை தூரத்திலிருந்து பார்க்கும் போது விஷ்ணு பகவான் ஆதிஷேசன் மேல் சயனித்திருப்பதைப் போன்று காட்சி தருகிறது.
🔘 *பதினெண் சித்தர்களில் ஒருவராக விளங்கிய போகர் தன் சீடர்களான கோரக்கர், கரூவூரார், கொங்கணர் போன்ற சித்தர்களுடன் கன்னிவாடி மலை வந்து கன்னிபூசை செய்தார். அப்பொழுது, தன் தவ சக்தியால், ஒரு கல்லின் மீது கமண்டல நீரைத் தெளித்து, கல்லுக்கு உயிர் கொடுத்து, கன்னிவாடி...! என எழுப்பி அந்த கன்னிப்பெண்ணை பூசை செய்யத் துவங்கியுள்ளார்.*
🔘 *பூசையை நிறைவு செய்வதற்கு முன்பு பூமி மாதாவாகிய புவனேசுவரியம்மன் கடும் கோபத்தில் இங்கு தோன்றி, போகருக்கு சாபத்தினை அளித்ததுடன், பூஜையில் இருந்த கன்னிபெண்ணை மீண்டும் கல்லாக மாற்றினாள். சாபம் பெற்ற போகர், தன் சகல சக்தியையும் இழந்து பழுத்த வயோதிக தன்மை அடைந்த நிலையில் தன் சீடர்களுடன் கன்னிவாடி மலை அடிவாரப்பகுதியில் உள்ள தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில் இருக்கும் இடத்தில் தவம் செய்துள்ளார்.செய்த தவப்பயனால், அம்மன் தோன்றி சாப நிவர்த்தி கொடுத்தாள். பின்பு போகர் சக்திகிரி (பழநிமலை) சென்று முருகப் பெருமானை வழிபட்டுள்ளார். முருகன் தோன்றி போகரின் சாபத்தை முழுதாக நிவர்த்தி செய்தார். அதன் பிறகு, போகர் மற்ற சித்தர்களுடன் நவபாசாணத்தால் ஆகிய முருகன் சிலையை வடித்தார்.*
🅱 *தல வரலாறு:*🅱
🌤 நம் முன்னோர்கள் கோயில் வழிபாட்டை மூன்றாக பிரித்து உள்ளார்கள். அந்த முறைப்படி பார்த்தால், மலைக்கோயில், குகைக்கோயில், தரைக்கோயில் என இம்மூன்றும் ஒருங்கே அமைய பெற்ற புண்ணிய ஸ்தலமாகும்.
🌤 சித்தர்கள் கண்ட சிவவழிபாடு அருளாளர்களாலும், ஆன்றோர்களாலும் மக்கள் அமைதியுடன் மகிழ்வான வாழ்வு பெற ஓர் உந்து சக்தியாய் அமைக்கப்பட்டதே ஆலய வழிபாட்டு முறையாகும்.
🌤 குறிப்பிட்ட இடங்களில் மனதைக் குவித்து நல் வழிப்படுத்தும் திருவருள் நிரம்ப இருப்பது கண்டு, சித்தர்களும் நம் முன்னோர்களும் அவ்விடங்களில் கோயில்கள் அமைத்து, இறைவன் திருஉருக்களைப் பிரதிஷ்டை செய்து அனைவரும் பயனடையச் செய்துள்ளனர்.
🌤 மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் இம்மூன்றும் இயற்கையாகவே சித்தர்கள் அமைத்து வழிபட்ட புண்ணிய ஸ்தலமாகும்.
🌤 இயற்கை எழில் மிகுந்த மலையடிவாரத்தில் அமைதியான சூழலில் மன அமைதியோடு இறைவனை வழிபட ஏற்ற இடமாக இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
🌤 திண்டுக்கல் மாவட்டம், சிரங்காடு கிராமம், கன்னிவாடி கிராமத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அரிகேச பர்வத மலையில் மெய்கண்ட சித்தர், வாழையானந்த சித்தர், குண்டலி சித்தர், முத்தானந்த சித்தர் ஆகியோர் தங்களுக்கு சிவனருள் கிடைக்கவும், சித்துக்கள் கைகூடவும் மலைப்பகுதியில் தவமிருக்க ஆயத்தமாயினர். இதற்காக இங்கு வந்தவர்கள் மலையில் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தனர். அவர்களுக்கு அருளிய சிவன் இங்கேயே எழுந்தருளினார்.
🌤 இவருக்கு சோமலிங்கசுவாமி என்ற பெயர் ஏற்பட்டது.இறைவன் எம்பெருமான் சிவபெருமானை சோமலிங்க சுவாமியாக பிரதிஷ்டை செய்து வணங்கிய புண்ணிய ஸ்தலம் ஆகும்.
🌤 கோரக்கர் எழுதிய மலைவாகடம் என்ற நூலில் இருந்து இம்மலையில் சித்தர்கள் வாசம் செய்திருக்கிறார்கள் என்று தெளிவாகியுள்ளது.
🌤 பழனியில் முருகனுக்கு நவபாஷாண சிலை வடித்த போகர் சித்தரும் இம்மலையில் தவம் செய்துள்ளார்.கரூரார் ஜலத்திரட்டு என்ற நூலின் மூலமாக போகர் சித்தர் இத்திருக்கோயிலுக்கு வந்த பொழுது, (ஒரு சமயம் அவர் கவுரிபூஜை செய்வதற்காக, தமக்கு அனைத்து அங்கலட்சணங்களும் பொருந்திய பெண் வேண்டுகின்றார்.
🌤 அவருடைய சீடர்களான கொங்கணர், கரூரார் ஆகிய இருவரை பெண்களில் உயர்ந்த ரகமான பத்மினி ரகத்தைச் சேர்ந்த பெண் தேடி சென்ற போது பெண் கிடைக்காத காரணத்தால் அந்த ரக கல்சிலை ஒன்று இருந்ததைக் கண்டு அந்த சிலையை உயிராக்கி கொண்டு சென்றனர். அப்போது போகர் கல் நீ வாடி என்று அழைத்ததின் பேரில் அது நாளடைவில் கன்னிவாடி என்ற ஊர் பெயராக விளங்குகிறது.
🌤 இதேபோல் திருவிளையாடல் புராணத்தில் எம்பெருமான் பன்றிக் குட்டிகளுக்கு பால் கொடுத்து விட்டு ஆகாய மார்க்கமாக அம்மையும் அப்பனும் செல்லும் போது, அம்மலையின் அழகை பார்த்து அம்மன் தயங்கி நிற்க, அப்பன் ஆடு மயில் வாகனமே ஆறணங்கே, பூவை கன்னிவாடி என்று சொன்னானே வாழும் ஊர் சொல்லலையே, என்று அழைக்க அதுவும் கன்னிவாடி என்று பெயர் வரக் காரணம்.
🌤 இத்தனை பெருமை மிக்க புண்ணியஸ்தலமானது பராமரிப்பு இல்லாமல் இருந்தது. அச்சமயம் கேரளாமாநிலம் மூணாறு மாவட்டத்தை சேர்ந்த மாதவன் சுவாமிகள் இத்திருக்கோயிலில் தங்கி பூஜைகள் செய்து 3 வருட காலம் தங்கினார். அச்சமயத்தில் தான் இத்திருக்கோயிலின் எல்லா ஆதாரங்களையும் திரட்டினார். அதன்பின் இத்திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பட்டதென்று அறிந்தார். இத்திருக்கோயிலில் அகத்தியர் முதற்கொண்டு அநேக சித்தர்களும் அருள்தரும் சோமலிங்க சுவாமியை வணங்கி அருள்பெற்றுச் சென்றுள்ளார்கள் என்பதை அறிந்தனர்.
🌤 போகருக்கு பெண் தேடி கொங்கணரும், கரூராரும் சென்று கற்சிலையை உயிராக்கி கொண்டு வந்த சமயம் போகர் கற்சிலை என்று அறிந்து கொங்கணருக்கு தவளையாகும்படியும், கரூராருக்கு சித்த பிரமை பிடித்தவராகவும் சாபம் கொடுத்து உள்ளார்.
🌤 அச்சமயத்தில் சித்தர்கள் எல்லோரும் கூடிய போது, கொங்கணரையும், கரூராரையும் காணாமல் புலிப்பாணியை அகஸ்தியர் அவர்கள் எங்கே என்று கேட்க, அதற்கு நடந்த சம்பவங்களை புலிப்பாணி அகஸ்தியரிடம் கூற அதற்கு அகஸ்தியர் அவர்கள் போகரை கோபித்து, நீ நாம் வணங்கும் தமிழ் கடவுளான முகப் பெருமானை நவபாசனத்தில் செய்து முடிக்கும் வரை உனக்கு சித்துப் பலிக்காது என்று கூறி சாபம் விட்டார். அதற்கு போகர் அகஸ்தியரை வணங்கி எனக்குச் சித்து பலிக்கவில்லை என்றால் நான் இந்தப் பணியை எப்படி செய்வேன் என்று வேண்ட அதற்கு அகஸ்தியர் ககன குளிகை என்னும் மூலிகை மாத்திரையை போகரிடம் கொடுத்து, இதை நீ வாயில் போட்டு அடக்கி கொண்டால் ஆகாய மார்க்கமாக பறக்கலாம் என்று கூற, அந்த ககனக்குளிகை மாத்தரையை போகர் பெற்றுக் கொண்டு முருகன் சிலை செய்து சாப விமோசனம் நீங்கியதாக கதை உண்டு.
🅱 *சிறப்பம்சம்:*🅱
🎥 *அதிசயத்தின் அடிப்படையில்:*
🤹🏻♀ இத்திருக்கோயிலில் நந்தியெம்பெருமான் விநாயகர் முன்புறம் அமைந்துள்ளார்.
🤹🏼♂ இந்நந்தியெம் பெருமானுக்கு வலதுபுறம் ஒரு காலும் இடதுபுறம் மூன்று கால்களுடன் அருள்தருகின்றார்.
🤹🏼♂ அதேபோல் எம்பெருமான் சிவபெருமான் எதிர்புறம் அமைந்து உள்ள நந்தியெம்பெருமானுக்கு வலதுபுறம் ஒரு காலும், இடதுபுறம் மூன்று கால்களுடன் அருள்பாலிக்கின்றார் என்பது சிறப்புமிக்கதாகும்.
🤹🏼♂ அனேக சித்தர்கள் வாசம் செய்த சிவத்தலம்..
🅱 *இருப்பிடம்:*🅱
🚗 ஒட்டன்சத்திரம் முதல் செம்பட்டிக்கு இடையில் உள்ள கன்னிவாடியில் இறங்கி கோயிலுக்கு வரலாம்.
🚗 திண்டுக்கல்லில் இருந்து நகர பேருந்து மூலம் கன்னிவாடி வரலாம்.
🚗 கன்னிவாடியில் இருந்து மேற்குமலை அடிவாரத்தில் கோயில் அமைந்துள்ளது.
❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃
🌿 *தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்*🌿
No comments:
Post a Comment