கொங்கண சித்தரின் படிமம் அமைந்த பதி ; ரசவாத வித்தையை கொங்கணருக்கு அருளிய மிக அற்புதமான சிவ பைரவ ஷேத்திரம்.
Ⓜ®🅱💲 *BRS* Ⓜ®🅱💲
அம்மன்/தாயார்: *அழகம்மை , சவுந்தர்யநாயகி*
தல விருட்சம்: *வில்வம்*
தீர்த்தம்: *பைரவர் தெப்பம்*
ஆகமம்/பூஜை : *சிவாகமம்*
பழமை : *500 வருடங்களுக்கு முன்*
புராண பெயர்: *இலுப்பை வனம்*
ஊர்: *இலுப்பைக்குடி*
🅱 *திருவிழா:*🅱
💐 சித்திரையில் பிரம்மோற்ஸவம், சிவராத்திரி, கார்த்திகை, ஐப்பசியில் அன்னாபிஷேகம்.
🅱 *தல சிறப்பு:*🅱
🎭 தேவர்கள் அசுரர்களுக்குப் பயந்து இந்த தலத்தில் நல்ல நிம்மதி கிடைக்கவே இங்கு மணலால் சிவலிங்கம் செய்து வழிபட்டனர்.
🎭 சிவன் அருளால் பைரவர் தோன்றி அரக்கர்களை அழித்து தேவர்கட்கு நிம்மதியைக் கொடுத்தால் அதாவது தேவர்களின் இளைப்பை ஆற்றினதால் இவ்வூருக்கு இளையாற்றங்குடி என்ற பெயர் வழங்கலாயிற்று.
🎭 பைரவர் அட்சய பாத்திரத்துடன் காட்சி தருகிறார்.
🎭 சுவாமி சன்னதி முன்மண்டபத்தில் உள்ள தூணில் ஒரு அங்குல அளவே உள்ள *"குட்டி விநாயகர்'* சிற்பம் இருக்கிறது. இந்த சிலையில் கண் இமை, விரல் நகங்களும் துல்லியமாகத் தெரியும்படி நேர்த்தியாக சிற்ப வேலைப்பாடு செய்யப்பட்டிருப்பது சிறப்பு.
🎭 சுவாமி சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி, தலையில் கிரீடம் அணிந்து காட்சி தருவது வித்தியாசமான அம்சம்.
🎭 அம்பாள் சன்னதி எதிரிலுள்ள ஒரு தூணில் சிம்ம வாகனத்தில் அமர்ந்த வாராஹி சிற்பம் இருக்கிறது.
🅱 *நடை திறப்பு:*🅱
🗝 காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். 🗝
🅱 *பொது தகவல்:*🅱
🔥 தான்தோன்றீஸ்வரர், சிறிய அளவிலேயே இருக்கிறார்.
🔥 அம்பாள் சவுந்தர்ய நாயகி சிலை திருவாசியுடன் இணைத்து அமைக்கப்பட்டிருக்கிறது.
🔥 இங்குள்ள பைரவர் சொர்ண ஆகர்ஷண பைரவர் எனப்படுகிறார்.
🔥 இரட்டை நாய் வாகன பைரவர் இருப்பது சிறப்பம்சம்.
🔥 தல விநாயகரின் திருநாமம் வரசித்தி விநாயகர்.
🔥 நடராஜர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, பெருமாள், மகாலட்சுமி, முருகன், சனீஸ்வரர் மற்றும் நவக்கிரக சன்னதிகள் உள்ளன.
🅱 *பிரார்த்தனை:*🅱
🌷 குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக, திருமண, புத்திர தோஷங்கள் நீங்க இங்கு வேண்டிக் கொள்கிறார்கள். தீராத நோய் மற்றும் கிரக தோஷம் நீங்க இங்குள்ள பைரவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.
🌷 திருமணத்தடையுள்ள பெண்கள் வாராகிக்கு சந்தனக்காப்பு செய்து, நெய்தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.
🅱 *நேர்த்திக்கடன்:*🅱
🌺 சிவன், அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், பைரவருக்கு வடை மாலை அணிவித்து விசேஷ பூஜை செய்தும் வேண்டிக் கொள்கிறார்கள். தீராத நோய் மற்றும் கிரக தோஷம் நீங்கியவர்கள் பைரவர் சன்னதியில் தேங்காயில் நெய் தீபம் ஏற்றியும், வடை மாலை அணிவித்தும் நேர்த்திக்கடன் செய்கின்றனர்.
🅱 *தலபெருமை:*🅱
💦 இத்தலத்து பைரவர், *"ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர்'* என்று பெயர் பெறுகிறார்.
💦 அவரது இடது கையில் கபாலத்துக்கு பதிலாக அட்சய பாத்திரம் இருக்கிறது. ஸ்வர்ணம் (தங்கம்) தந்தருளியவர் என்பதால் கபாலத்தை, அட்சய பாத்திரமாக வைத்திருப்பதாக சொல்கிறார்கள். இவரிடம் வேண்டிக் கொள்ள வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
💦 இவர் இரண்டு நாய் வாகனங்களுடன் காட்சி தருவது மற்றொரு சிறப்பு.
💦 வலப்புறம் உள்ள நாய் அமர்ந்த நிலையில், சுவாமியின் பாதத்தைப் பார்க்கிறது. இடதுபுறம் உள்ள நாய் நின்று கொண்டிருக்கிறது. பைரவர் சன்னதியின் கீழே யந்திர பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
💦 தேய்பிறை அஷ்டமியில் இவருக்கு விசேஷ யாகம் நடக்கிறது. அப்போது 16 கலசம் வைத்து பூஜித்து, அந்த புனித நீரால் சிவன், அம்பாள், பைரவருக்கு அபிஷேகமும், கோமாதா பூஜையும் நடக்கிறது.
🅱 *நாய்க்கடி பலகை:*🅱
🍁 பைரவர் சன்னதி எதிரிலுள்ள ஒரு தூணில் நாய் படம் வரையப்பட்ட *"நாய்க்கடி பலகை'* இருக்கிறது.
🍁 நாய்க்கடி பட்டவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, தூணை சுற்றி வந்து விஷத்தன்மை முறிய பைரவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.
🍁 சித்திரை பிரம்மோற்ஸவத்தின் போது கொங்கணர் புறப்பாடாகிறார்.
🍁 இலுப்பை வனத்தின் மத்தியில் சிவன் காட்சி தந்த தலமென்பதால், *"இலுப்பைக்குடி'* என்று இவ்வூர் அழைக்கப்படுகிறது.
🅱 *தல வரலாறு:*🅱
⛱ கும்பாண்டகன் என்னும் அசுரன், இந்திராதி தேவர்களைப் போரிட்டு வென்று தேவலோகத்தைக் கைப்பற்றிக் கொண்டான். இதனால், இந்திரன் தனது ராஜ்ஜியத்தை இழந்து, காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி என்னும் வனத்திற்கு வந்தடைந்தான். இங்கே சுயம்புநாதராகிய தான் தோன்றி ஈசரைச் சரணடைந்து வணங்கி, வழிபட்டான்.
⛱ பல ஆண்டுகள் மனமுருகி வழிபட்டதால், சுயம்புலிங்க மூர்த்தியிலிருந்து பைரவர் வெளிப்பட்டு கும்பாண்டகனை வதம் செய்தார். வதம் செய்து, இந்திர லோகத்தை மீட்டு இந்திரனுக்குக் கொடுக்கிறார்; பின்னர்,இந்திரனும் இந்திராதி தேவர்களும் வேண்டியதன் பொருட்டு இலுப்பைக்குடியில் தங்கி அருள் பாலித்துவருகிறார். இங்கே பைரவர் தனி சன்னதி கொண்டிருக்கிறார். இங்கு நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் இருபுறமும் நாய் வாகனங்களுடன் உள்ளார்.
⛱ இன்னொரு சிறப்பும் இலுப்பைக்குடி பைரவருக்கு உண்டு; இன்றைய வேதியியலின் முன்னோடித்துறையான ரசவாதத்தில் நமது சித்தர்கள் அளவற்ற ஆராய்ச்சிகள் செய்துள்ளனர்; அப்படிப்பட்ட ரசவாத ஆர்வத்தில் கொங்கண சித்தர் ஈடுபட்டிருந்தார். அவருக்கு ரசவாதம் மூலமாக தங்கம் தயாரிக்கும் எண்ணம் இருந்தது.
⛱ எனவே,அவர் கன்னியாக்குமரி அருகில் இருக்கும் மருத்துவாழ்மலையில் தவம் செய்து கொண்டிருக்கும் காகபுஜண்டரிடம் மாற்றுக் குறையாத தங்கம் செய்யும் வித்தையைக் கற்றுத்தரும் படி கேட்டார். அதற்கு காகபுஜண்டர் உயர்ந்த மாற்றுத் தங்கம் என்பது சிவன் அருளும் வரம் ! எனவே, தாங்கள் பூர்வஜன்மத்தில் தவமியற்றிய தலம் வடுகநாதபுரிக்கு அருகில் இருக்கிறது , அது இலுப்பைக்காடாகத் தோன்றும், அங்கு தாங்கள் சென்று தவமியற்றினால் சிவன் அருளால் கைகூடும் என்று வழிகாட்டினார்.
⛱ அது போன்றே கொங்கணரும் வடுகநாதபுரி என்ற வயிரவன்பட்டிக்குச் சென்றார். அங்கு பல ஆண்டுகள் தவம் செய்து வரும்போது, ஒரு குறிப்பிட்ட தவநிலையை எட்டியதும், சிவன் அவருக்கு காட்சி தந்து, தங்கத்தை ஆயிரம் காரட் உயர்த்தி தயாரிக்க அருள் செய்தார். அதன் படி கொங்கணர் சிவனரை வழிபட சிவனின் ஒர் சக்தியான பைரவப் பெருமான் ஒரு ரிஷி வடிவத்தில் வந்து, கொங்கணருக்கு ரசவாதம் கற்றுக் கொடுத்தார்.
⛱ (நாம் பயன்படுத்தும் தங்கம் 24 காரட் தான் தரம் இருக்கும்) பைரவரின் அருளாசியால்,கொங்கணர் 500 காரட் தங்கம் ரசவாதத்தின் மூலமாக செய்திருக்கிறார். கொங்கணருக்கு தங்கத்தின் மீதான ஆசை அதிகரித்து விட்டது. கொங்கணர் பைரவரின் அருளால் உயர்ந்த மாற்றுத்தங்கம் தயாரித்த இடமே இன்று மாத்தூர் என்ற பெயரில் இருக்கிறது. பைரவப் பெருமான் தான் ரிஷி போல வந்திருக்கிறார் என்பதை கொங்கணர் உணரவில்லை; எனவே, பைரவப்பெருமான் திருவருள் புரிய திரு உள்ளம் கொண்டார்.
⛱ கொங்கணரிடம் இலுப்பைக்காடு போகலாம் , அங்கு சிறிது நேரம் இளைப்பாறலாம் என்றார். இலுப்பைக்காடு என்ற சொல்லைக் கேட்டதும், அவருக்கு காகபுஜண்டர் கூறியது ஞாபகத்துக்கு வந்தது.
⛱ அப்பெயரைக் கேட்ட உடனேயே அவரது மெய் சிலிர்த்தது. கொங்கணருக்கு அந்த கணத்திலேயே சிவன் லிங்கத் திருமேனியில் சூரியப் பிரகாசத்துடன்(ஜோதி ரூபமாக) பைரவராக காட்சி கொடுத்தார்.
⛱ சிவபெருமானின் காட்சி கிடைத்ததும், கொங்கணருக்கு ஆசைகள் முற்றிலும் அற்றுப்போனது. அவர் தொட்டதெல்லாம் தங்கமாயிற்று. அட்டமாசித்திகள் அனைத்தும் கைகூடியது. நீண்டகால வாழ்க்கையும் மரணமில்லாதப் பெருவாழ்வும் சித்தியாகியது. அவரும் ஜோதி மயமாகி இலுப்பைக்குடியில் ஜீவசமாதியானார்.
⛱ தமிழகக் கோவில்களில் இலுப்பைக்குடியில் மட்டுமே கொங்கண சித்தர்,வில்வ விருட்சத்து அடியில் பூஜை செய்யும் விதமான சிற்பம் இருக்கிறது.
⛱ இக்கோவிலில் மட்டுமே கொங்கண சித்தரின் படிமம் இருக்கிறது.
⛱ பிரகாசமான ஜோதியில் இருந்து தோன்றியதால் சுவாமிக்கு, *"சுயம்பிரகாசேஸ்வரர்'* என்றும், *"தான்தோன்றீஸ்வரர்'* என்றும் பெயர்கள் ஏற்பட்டன. இத்தலத்தின் பைரவர் *சுவர்ண ஆகர்ஷண பைரவர்* என்று பெயரில் அருள்புரிகிறார்.
🅱 *சிறப்பம்சம்:*🅱
Ⓜ *அதிசயத்தின் அடிப்படையில்:*
♻ இத்தல ஈசன் பிரகாசமான ஜோதியில் இருந்து தோன்றியதால் சுவாமிக்கு, *"சுயம்பிரகாசேஸ்வரர்'* என்றும், *"தான்தோன்றீஸ்வரர்'* என்றும் பெயர்கள் ஏற்பட்டன.
♻ சுவாமி சன்னதி முன்மண்டபத்தில் உள்ள தூணில் ஒரு அங்குல அளவே உள்ள *"குட்டி விநாயகர்'* சிற்பம் இருக்கிறது.
♻ சிவன் ஒருபோதும் அவதாரம் எடுப்பதில்லை. தேவைப்படும் போது தனது சக்தியின் ஒரு பகுதியை அவதாரமாக அனுப்பி வைப்பார். அப்படி அனுப்பப்பட்ட சக்திகளே *ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீவீரபத்திரர், ஸ்ரீசரபேஸ்வரர்.*
♻ *இவர்களில் மிக உயர்ந்த அவதாரமும் முதல் அவதாரமும் ஸ்ரீகால பைரவப் பெருமானே !!!*
🅱 *இருப்பிடம்:*🅱
✈ காரைக்குடியில் இருந்து 8 கி.மீ., தூரத்தில் இவ்வூர் உள்ளது. குறித்த நேரத்தில் மட்டும் பேருந்து உண்டு.
❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃
🏹 *தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்*🏹
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
No comments:
Post a Comment