🏕🏝🏕🏝 BRS🏕🏝🏕🏝🏕
போன்: +91 4177 248 220, 93454 49339, 9965367272, 90952 22708
🗼🎡🗼🎡 BRS🗼🎡🗼🎡🗼
மூலவர் : மணிகண்டீஸ்வரர்
அம்மன்/தாயார் : அஞ்சனாட்சி
தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : சக்கர தீர்த்தம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : ஹரிசக்கரபும், திருமாற்பேறு.
ஊர் : திருமால்பூர்
பாடியவர்கள்: திருநாவுக்கரசர், சம்பந்தர்
🅱 தேவாரப்பதிகம்: 🅱
சாத்திரம் பேசும் சழக்கர்காள் கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர் பாத்திரம் சிவம் என்று பணிதிரேல் மாத்திரைக்குள் அருளும் மாற்பேறரே. - திருநாவுக்கரசர்
♻ தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 11வது தலம்.♻
🅱 திருவிழா: 🅱
🎭 மாசிமாதம் நடக்கும் 10 நாள் பிரமோற்ஸவத்தில் மகம் நட்சத்திரத்தன்று தீர்த்தவாரி நடக்கும்.
🎭 இந்த திருவிழாவில் தான் பெருமாளுக்குரிய கருட சேவையும் நடக்கிறது.
🎭 ஆடி வெள்ளி, ஆடிப்பூரம், ஆனித்திருமஞ்சனம், திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரையும் விசேஷம்.
🅱 தல சிறப்பு: 🅱
🌤 பார்வதிதேவியால் விருதசீர நதிக்கரையில் மணலால் அமைக்கப்பட்ட லிங்கம் இங்கு மூலவராக உள்ளது.
🌤 அது கரைந்து விடாமல் இருக்க லிங்கத்தின் மீது, குவளை (செம்பால் செய்யப்பட்ட கவசம்) சாத்தியே அபிஷேகம் செய்யப்படுகிறது.
🌤 சிவபெருமானை மூலஸ்தானம் அருகே திருமால் கைகூப்பி வணங்கிய நிலையில் "செந்தாமரைக்கண்ணப்பெருமாள்' என்ற நாமத்துடன் உள்ள தலம்.
🌤 மூலவரின் அருகே அதிகார நந்தி நின்ற நிலையில் உள்ளார்.
🌤 சிவன் கோயில் என்றாலும், பெருமாள் அருள் தலம் பெற்ற தலம் என்பதால் பிரம்மோற்ஸவ காலத்தில் கருடசேவை நடக்கிறது.
🌤 இக்கோயிலில் பக்தர்களுக்கு சடாரி சார்த்தி, தீர்த்தம் தருவது தனி சிறப்பு.
🌤 திருமால்பூர் தரிசனம் செய்வோர், இறைவனை எட்டு நாமங்கள் சொல்லி வழிபடுவோர், வழிபோக்கராக ஒரு கணப்பொழுதேனும் இத்தலத்தில் தங்கியோர் ஆகியோருக்கு முக்தி கிட்டும். இப்பிறவியில் நினைத்தது நிறைவேறும்.
🅱 திறக்கும் நேரம்: 🅱
🔘 காலை 6 மணி முதல் மதியம் 12மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
🅱 பொது தகவல்: 🅱
💥 சுமார் 1.20 ஏக்கர் அளவில் சுற்று மதில் சுவர்களுடன் கிழக்கு நோக்கிய ராஜகோபுரமும், இரண்டு பிரகாரங்களுடன் கோயில் அமைந்துள்ளது.
💥 கோயிலுக்கு எதிரில் சக்கர தீர்த்தம்.
💥 சுவாமி சன்னதி கிழக்கு நோக்கியும், அம்மன் சன்னதி தெற்கு நோக்கியும் அமைந்துள்ளது.
💥 உள் பிரகாரத்தில் விநாயகர், சிதம்பரேஸ்வரர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், நடராஜர், கஜலட்சுமி முதலிய சன்னதிகள் உள்ளன.
🅱 பிரார்த்தனை : 🅱
🔘 பெருமாள் வணங்கி சக்கரம் பெற்ற தலமாதலால், இங்கு வழிபடுவோருக்கு எதிரி பயம் இருக்காது.
🔘 வழக்குளில் வெற்றி பெறலாம் என்பது நம்பிக்கை.
🅱 நேர்த்திக்கடன்: 🅱
🥀 சிவனுக்கு அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.
🅱 தலபெருமை: 🅱
🔥 பராந்தக சோழன் நினைவாக அமைக்கப்பட்ட சோளீஸ்வரர் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
🔥 எட்டு கரத்துடன் துர்க்கை நளினமாக காட்சி தருகிறாள்.
🔥 சிவன் கோயில் என்றாலும், பெருமாள் அருள் தலம் பெற்ற தலம் என்பதால் பிரம்மோற்ஸவ காலத்தில் கருடசேவை நடக்கிறது.
🔥 பத்து கரங்களுடன் வல்லபை விநாயகரும் அனுக்கிரகம் புரிகிறார்.
🅱 நின்ற நிலையில் நந்தியின் வரலாறு ! 🅱
🍁 பார்வதிதேவி பூஜைக்கு துணையாக இந்தததால் அதிகார நந்தி (கயிலாய நந்தி) நின்ற நிலையில் காட்சி தருகிறார்.
🍁 ராவணன் இத்தல இறைவனை தரிசிக்க வரும் போது நந்தி இருப்பதை கவனிக்காமல் தரிசிக்க செல்கிறார்.
🍁 ராவணனைப் பார்த்து, ‘‘சுவாமி உள்ளே தியானத்தில் இருக்கிறார். ஆகையால், உள்ளே போகாதே!’’ என்று நந்தி தடுத்ததால், ராவணனால் சபிக்கப்பட்டு ஆஞ்சநேய முகமாக மாறிவிடுகிறது நந்தியம் பெருமானுக்கு.
🍁 சபிக்கப்பட்ட முகத்தால் ராவணனுக்கு அழிவு என்று நந்தி சபிக்கிறார்.
🍁 ஆகையால், நின்ற நிலையில் இருக்கும் நந்திகேஸ்வரரை வணங்கி, பின்னர் சுவாமியை தரிசிப்பது கயிலாய தரிசனம் பெற்ற புண்ணியம் ஆகும்.
🍁 மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம் ஆகிய அம்சங்களால் சிறப்பு பெற்றது இவ்வாலயம்.
🍁 கிழக்கு பார்த்த இக்கோயில் முன்பு சக்கர தீர்த்தம் உள்ளது.
🍁 அருகில் விநாயகர், நின்ற திருக்கோலத்தில் ஆஞ்சநேயர் சந்நிதி உள்ளது.
🍁 ராஜகோபுரத்தை கடந்து ஆலயத்திற்குள் செல்லும் போது பிரகார வாயிலில் இடப்புறமாக, ஆஞ்சநேய முகமாக நின்ற நிலையில் உள்ள அதிகார நந்தியை வழிபட்டு சுவாமியை தரிசனம் செய்வதற்கு செல்ல வேண்டும்.
🍁 மூலவர் மணிகண்டீஸ்வரருக்கு எதிரில் திருமால் ஈசனை வணங்கிய கோலத்தில் உள்ளார்.
🍁 சித்திரை நட்சத்திரக்காரர்களின் பரிகாரத் தலமாக இந்த ஷேத்திரம் விளங்குகிறது.
🍁 அஷ்டலட்சுமி கூடிய பீடத்துடன் உள்ள அம்பாளை மீன ராசிக்காரர்கள் வழிபட, சகல தோஷமும் நீங்கும்.
🍁 பவுர்ணமிதோறும் அம்பாளுக்கு ஊஞ்சல் சேவை நடக்கிறது.
🅱 கல்வெட்டு: 🅱
🎭 ஜயங்கொண்ட சோழமண்டலத்திலுள்ள காமக்கோட்டத்தின் பகுதியான வல்ல நாட்டிலுள்ள திருமாற்பேறு(271 of 1906) என்று இராஜகேசரி வர்மன் திரிபுவனச்சக்ரவர்த்தி குலோத்துங்க சோழன்காலத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
🎭 இறைவன் பெயர் கல்வெட்டுக்களில் திருமாற் பேறுடையார், ஆளுடையார், உத்தம சோழீசுவரமுடையார், அவிமூக்தீசுவரமுடையார் என்று வழங்கப்படுகின்றன. இத்தலத்தில் அக்கினீசுவரர் கோயில் ஒன்று தனியே இருந்திருக்கவேண்டும். இக்கோயிலுக்குக் கண்டராதித்தனால் ஐம்பெருங்குழு ஏற்படுத்தி நிலங்களைக் கவனிக்கவும், படையலுக்கு நெல்கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன(283 of 1906).
🎭 இங்குள்ள விஷ்ணு கோயிலிலுள்ள இறைவன் பெயர் கோவிந்தபதியில் நின்றருளிய பெருமானடிகள் என்பது(303 of 1906). இது தண்டகநாட்டின் மாவட்டமான தர்மக்கோட்டத்தின் பிரிவான வல்ல நாட்டில் கோவிந்தபதியிலுள்ள கோயிலிலுள்ள நின்றருளிய பெருமான் ஆகும்(314 of 1906). மாற்பேறுடையார் கோயிலைக் கட்டவும், சுற்று மண்டபத்தை முற்றுப்பெறச் செய்யவும் விராட அரசன் அனையமான் என்கிற மண்டலாதித்யனால் தானம் கொடுக்கப்பட்டது(267 of 1906).
🎭 உத்தம சோழீசுவரமுடையார் உருவம் தயார்செய்ய சேதிராயன் என்பவனால் நிலம் தானம் செய்யப்பட்டது(277 of 1906), உமாபத்தராகியார் (அதிசுந்தர தேவதேவியார்) உருவம் தயார்செய்ய சோழன் இராஜகேசரிவர்மனால் நிலம் தானம்செய்யப்பட்டது(284 of 1906). மணவாளப்பெருமாள் உருவம் செய்யவும், ஆபரணம் தயார்செய்யவும் பரகேசரிவர்மன் இராஜேந்திர சோழன் ஆட்சியில் ஆவனசெய்ததைத் தெரிவிக்கின்றது( 321 of 1906). கோயிலில் அனையமான் பரமண்டலாதித்தன் ஒரு மண்டபம் கட்டியுள்ளான்(323 of 1906).
🎭 நம்மாழ்வார் திருவாய்மொழியின் வரிகள் கருப்பக்கிருகத்தின் மேற்குச் சுவரில் காணப்படுகின்றன(326 of 1906). மணவில் கோட்டத்தின் பகுதியான மேல்பழுங்கூர்நாட்டில் சிறியரூரில் கோவிந்தபதி ஆழ்வார் கோயில் ஒன்று உள்ளது(326 of 1906). தோழனார் தந்தையால் கோவிந்தபதி ஆழ்வார்மீது ஒரு திருப்பதியம் பாடப்பட்டுள்ளது(333 of 1906 ).
🎭 சோழன் இராஜகேசரிவர்மன் காலத்தில் வைஷ்ணவர்களில் 18 நாடு குறிக்கப்படுகின்றது. மேலும் வண்டல்படிந்த நிலங்களைப் பற்றியும் பாலாற்றில் வெள்ளம் வந்ததைப்பற்றியும், இதற்குச் செப்பனிட 1000 கூலிகள் நியமிக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் 12 கோல் நிலம் கொடுக்கப்பட்டது பற்றியும் அறிவிக்கப்பெறுகின்றன(322 of 1906). மற்றைய கல்வெட்டுக்கள் விளக்கிற்கு, பிராமண உணவிற்கு, அபிடேகத்திற்குப் பொன், நிலம், பசுக்கள், குடங்கள் முதலியன கொடுக்கப்பட்டதைத் தெரிவிக்கின்றன.
🅱 தல வரலாறு: 🅱
🌺 குபன் என்ற அரசனுக்காக திருமால் துதீசி முனிவர் மீது தனது சக்கரத்தை வீசினார். ஆனால், அது முனிவரின் தெய்வீக உடம்பில் பட்டு முனை மழுங்கி விட்டது. கவலையடைந்தார் திருமால். என்ன செய்வதென்று தேவர்களுடன் கலந்தாலோசித்து, சலந்தராசுரனை அழிப்பதற்காக உண்டாக்கிய சுதர்சன சக்கரம் சிவனிடம் உள்ளதை அறிந்தார்.
🌺 உடனே இத்தலம் வந்து அம்பிகை பூஜித்த இந்த லிங்கத்தை தினமும் ஆயிரம் தாமரை மலர்களால் பூஜை செய்தார்.
🌺 ஒரு நாள் சிவன், திருமாலின் பக்தியை சோதிக்க, பூஜைக்கான ஆயிரம் மலர்களில் ஒன்றை மறைத்து விட்டார்.
🌺 திருமால் பூஜை செய்யும் போது மலர் ஒன்று குறைய, தனது கண்ணைப்பறித்து இறைவனின் திருவடியில் அர்ப்பணித்தார். இந்த பூஜைக்கு மகிழ்ந்த சிவன், ""தாமரை மலருக்காக உனது கண்ணை எடுத்து பூஜித்ததால், தாமரை போலவே உனக்கு கண் கொடுக்கிறேன்.
🌺 இதனால் உன்னை "பதுமாஷன்' என அழைப்பார்கள்.
🌺 இத்தலமும் "திருமாற்பேறு' என அழைக்கப்படும்'' எனக்கூறி திருமால் வேண்டிய சக்கரத்தை கொடுத்தருளினார்.
🌺 மேலும் அவர் திருமாலிடம்,""நீ கூறி வழிபட்ட ஆயிரம் நாமங்களால் என்னை பூஜிப்பவர்களுக்கு முக்தியை கொடுப்பேன். அதைச் சொல்ல இயலாதவர்கள் என்னை, தீண்டச்சிவந்தார், சாதரூபர், மணிகண்டர், தயாநிதியார், பவளமலையார், வாட்டந்தவிர்த்தார், சாகிசனர் ஆகிய திருநாமங்கள் சொல்லி பூஜித்தால் வேண்டிய வரம் தருவேன்,''என்று அருளினார்.
🌺 இத்தலத்தில் ஒரு கண நேரம் தங்கியவர்களுக்கும் முக்தியளிக்க வேண்டும் எனவும், இங்கு வழிபட்டால் அனைத்துக் கோயில்களிலுள்ள லிங்கங்களையும் வழிபட்ட பலன் கிடைக்க வேண்டும் எனவும் வரம் பெற்றார்.
🌺 சிவன் மகிழ்ந்து திருமால் கேட்ட வரம் தந்தருளியதாக வரலாறு.
இத்தலத்தை பற்றி இன்னொரு தகவலும் சொல்லப்படுகிறது.
🌺 ஒரு சமயம் சிவனும் பார்வதியும் கயிலாயத்தில் பேசிக்கொண்டிருக்கும் போது, ‘‘இவ்வுலகம் என்னால்தான் இயங்குகிறது’’ என்று சிவன் சொல்கிறார்.
🌺 இதை ஏற்க மறுத்த பார்வதிதேவி, சிவபெருமானின் கண்முன்னே கையை வைத்து கண்பார்வையை மறைக்கிறார். உடனே உலகமே இருள் சூழ்கிறது. இதனால் மிகுந்த வருத்தமுற்ற பார்வதிதேவி, ‘‘என்னால் ஒரு விநாடி நேரத்தில் அனைத்து ஜீவராசிகளும் துயரம் அடைந்து விட்டனவே! இந்த பாவத்தை நான் ஏற்றுக்கொண்டு உங்கள் இடத்திலிருந்து விலகி பூமிக்கு சென்று நிவர்த்தி செய்கிறேன்’’ என்கிறார்.
🌺 சிவபெருமானும், ‘‘அவ்வாறே ஆகட்டும்!’’ என்று சொல்ல, பூமியில் பாலாற்று நதிக்கரைக்கு வந்தடைகிறார். அங்கு வில்வ மரத்தடியில் மணலை லிங்கமாக பிடித்து பூஜை செய்து வழிபட்டுக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த ஈசன், ‘‘பார்வதிதேவி! பார்வதிதேவி!’’ என்று கூப்பிடுகிறார்.
🌺 பூஜையில் இருந்ததால் ஈசன் அழைத்தது பார்வதி காதில் கேட்கவில்லை. இதனால், சிவபெருமான் கோபத்துடன் இந்த பூஜையை கலைக்க, தன் தலையில் இருந்த காவேரிதேவியை பாலாற்றில் போடுகிறார். வெள்ளம் ஏற்பட்டு கரை புரண்டு வரும் போது பார்வதிதேவி அலறியபடி லிங்கத்தை அணைத்துக் கொண்டு தன் அண்ணன் பெருமாளை அழைக்கிறார்.
🌺 உடனே பெருமாள், தன் தங்கையின் பூஜை கலைந்துவிடுமே என்றெண்ணி திருப்பாற்கடலில் படுத்து அணை கட்டியவுடன் இந்த பாலாறு காஞ்சிபுரத்திற்கு தெற்கே ஓடுகிறது. இதன்பின் பூஜையை பூர்த்தி செய்து பார்வதிதேவி, ஈசனை சென்றடைகிறார்.
🅱 சிறப்பம்சம்: 🅱
⚜ அதிசயத்தின் அடிப்படையில்:⚜
🎭 பார்வதிதேவியால் விருதசீர நதிக்கரையில் மணலால் சுயம்புவாக அமைக்கப்பட்ட லிங்கம் இங்கு மூலவராக உள்ளது.
🎭 லிங்கம் கரைந்து விடாமல் இருக்க லிங்கத்தின் மீது, குவளை (செம்பால் செய்யப்பட்ட கவசம்) சாத்தியே அபிஷேகம் செய்யப்படுகிறது.
🎭 சிவபெருமானை மூலஸ்தானம் அருகே திருமால் கைகூப்பி வணங்கிய நிலையில் "செந்தாமரைக்கண்ணப்பெருமாள்' என்ற நாமத்துடன் உள்ள தலம்.
🎭 மூலவரின் அருகே அதிகார நந்தி நின்ற நிலையில் உள்ளார்.
🅱 இருப்பிடம்: 🅱
🚗 காஞ்சிபுரம் – அரக்கோணம் சாலையில் சுமார் 18 கிமீ தொலைவில் அமைந்துள்ள திருமால்பூர் புகைவண்டி நிலையத்தை (பள்ளூர் பேரூந்து நிறுத்தம்) ஒட்டி தண்டவாளத்தின் கீழே செல்லும் சாலையில் சுமார் 5 கிமீ சென்றால் திருமால்பூர் அடையலாம்.
🚘 காஞ்சிபுரத்தில் இருந்து (22கிமீ) பனப்பாக்கம் வழியாக ஆற்காடு செல்லும் பேரூந்தில் கோயிலுக்கு செல்லலாம்.
❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃
🌿 தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்🌿
No comments:
Post a Comment