Thursday 28 December 2017

அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், திருக்கொள்ளிக்காடு , திருத்துறைப்பூண்டி – திருவாரூர்.

உலகிலேயே மிகப் புண்ணிய பூமியாக கருதப்படும், தேவர்களால் பக்தியுடன் தொழப்படும் சிவஸ்தலம் ; திருநள்ளாறு சென்று அடிக்கடி  தரிசனம் செய்தும், சனி தோஷம் விலகாதவர்கள் தொழவேண்டிய ஒரு புண்ணிய, சக்தி வாய்ந்த ஈசன் திருத்தலம் ; அனைத்திற்கும் நிவாரணம் தேடுபவர்கள் செல்ல ஒரு திவ்ய க்ஷேத்திரம்..

🍄💧🍄💧 BRS🍄💧🍄💧🍄

தொலைபேசி : +91- 4369 - 237 454 : +91- 4366 - 325 801

🍁🌸🍁🌸 BRS🍁🌸🍁🌸🍁

மூலவர் : அக்னீஸ்வரர், தீவண்ணநாதர்

அம்மன்/தாயார் : பஞ்சின் மெல்லடியம்மை, மிருதுபாத நாயகி

தல விருட்சம் : வில்வம் மரம், வன்னி

தீர்த்தம் : அக்னி தீர்த்தம், தீர்த்த குளம்

 பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : கீராளத்தூர்

 ஊர் : திருக்கொள்ளிக்காடு

பாடியவர்கள் : அப்பர், சம்பந்தர்

🅱 தேவாரப்பதிகம்:🅱

பஞ்சுதோய் மெல்லடிப் பாவை யாளொடும் மஞ்சுதோய் கயிலையுள் மகிழ்வர் நாள்தொறும் வெஞ்சின மருப்பொடு விரைய வந்தடை குஞ்சரம் உரித்தனர் கொள்ளிக் காடரே. - திருஞானசம்பந்தர்.

🌀 தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 115 வது தலம்.

 🅱 திருவிழாக்கள் :🅱

🍁 மகா சிவராத்திரி

🍁 மார்கழி திருவாதிரை

🅱 தல சிறப்பு:🅱

🎭 இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

🎭 மூலவர் சிவலிங்கத் திருமேனி சற்று சிவந்த நிறமாகவுள்ளது. (அக்கினி வழிபட்டது.)

🎭 நெருப்புக்கு இறைவனாம் அக்னிபகவான் வந்து தங்கி தவம் செய்த புண்ணியத் தலம் .

🎭 அக்னி தேவனால் உருவாக்கப்பட்ட மூர்த்திக்கு அக்னீஸ்வரன் என்று பிரம்மதேவன் பெயர் சூட்டினார்.

🎭 அக்னி தேவன் தவம் செய்த வனம்.

🎭 இங்குள்ள அம்பிகை மிகுந்த வரப்பிரசாதி. கருணைக்கு, அன்பிற்கு இவரை விட வேறு ஒரு தெய்வம் இல்லை என்கிறார் சிவவாக்யரும், நந்தி தேவரும். தமது நூலில் நந்தி தேவர்,

‘‘பஞ்சினுமெல் லடியாளவள்
தாயினுஞ் சாலப் பரிந்து எமக்கு
வேண்டுதலெலாமீந்தெனை யொரு
பொருட்டாக்கி பொருளாக்கினளே’’ - என்கிறார்.

🎭 லிங்கோத்பவர் சந்நதியின் இருபுறமும் பிரம்மாவும் மகாவிஷ்ணுவும் நின்ற கோலத்தில் அருள்பரிபாலிப்பதினால், இங்கு மும்மூர்த்தி தரிசனம் பெறலாம். மூகாம்பிகை க்ஷேத்திரத்தில் மூன்று சக்திகளும் கூடப் பெற, ஆதிசங்கரர், கோயில் அமைத்துப் பின் அவர் வந்து தொழுத மூர்த்திகள் இவர்களே.

🎭 பொதுவாக அனைத்து கோயில்களிலும் நவகிரகங்கள் ஒன்றையொன்று பார்க்காமல் அமைந்திருக்கும். ஆனால் இத்தலத்தில் "ப' வடிவில் அமைந்திருப்பது சிறப்பு.

🎭 இத்தல முருகன் கையிலே வேலுடன் விளங்கும் முருகன், இங்கு வில்லுடன் அருள்பரிபாலிப்பது மிக அற்புதம். இவரை விஸ்வாமித்ரர் ‘தனுசு சுப்பிரமணியர்’ என விவரித்து போற்றுகின்றார். தனுர் வேதத்தை ராமபிரானுக்கு போதித்த விஸ்வாமித்திரர் தொழுத மூர்த்தி இந்த தனுசு சுப்பிரமணியர்.

🎭 நடக்கப்போகும் பலன்கள் சுபிட்சமாக இருக்கவும் எல்லா மங்களங்களும் சேரவும் கொடிய நோய் தொற்றாது தடுக்கவும் வல்லவர் இந்த சுப்பிரமணியர்.

🎭 பேய் பிசாசு போன்றன இவரைக் கண்ட மாத்திரத்தில் ஓடி ஒழியும். கந்தர் சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்றவற்றை தேய்பிறை சஷ்டி, வளர்பிறை நவமியில் இந்த சந்நதிமுன் பாராயணம் செய்துவர, எண்ணிய எண்ணம் ஈடேறும்  என்கின்றார், அகத்தியர்.

‘‘நாடிய பொருள் கைகூடும்
தேடிய யோகம் தானேயண்டும்
கிருட்டிண சட்டிகொடு சுக்கிலநவமி
தனுரேந்திய கந்தனடி கவசஞ்
செய்வருக்கே’’

🎭 இங்குள்ள சனிபகவான் உழைப்பின் பெருமையை உணர்த்தும் வகையில் கலப்பை ஏந்திய நிலையில் அருள்பாலிக்கிறார்.

🎭 திருநெல்லிக்காவல், திருத்தங்கூர், கோட்டூர், திருவண்டுதுறை ஆகிய தலங்களின் நடுவே அமைந்துள்ளது.

🎭 மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று சிறப்பம்சங்களையும் கொண்ட இத்தலத்தின் இறைவன் அக்னீஸ்வரர்.

🎭 சனி தோஷம் போக்குவதில் திருநள்ளாறையும் விட இத்தலம் சிறப்பு பெற்றது.

🎭 சனி பகவானால் உண்டாகும் அனைத்து தோஷங்களும் இத்தலத்திற்கு சென்று வந்தால் உடனடியாக நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.

🎭 சனீஸ்வர பகவான், பொங்கு சனியாக இருந்து அருள் பாலிக்கும் தலம்.

🎭 இத்தலத்து இறைவனை வந்து வழிபடும் பக்தர்களுக்கு அருள் செய்து நலன்களை வழங்கக் கூடியவர் என்பதை திருஞான சம்பந்தர் தேவாரம் தெளிவாக காட்டுகிறது.

🅱 நடைதிறப்பு :🅱

🔑 காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.🔑

🅱 பொது தகவல்:🅱

🌀 கோயில் முன்புறவாயிலில் ராஜகோபுரமில்லை. மேலும் நுழைவாயில் வழியாக உள்ளே சென்றால் பலிபீடம் நந்தி மட்டுமே உள்ளது. கொடிமரம் கிடையாது.

🌀 பிரகாரத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், மகாலட்சுமி, சனிபகவான் மற்றும் பைரவர் சன்னதிகள் உள்ளன.

🌀 விநாயகர், காசிவிசுவநாதரை வணங்கி வலம் முடித்து உள்ளே சென்றால் நேரே மூலவர் தரிசனம்.

🌀 மேற்கு பார்த்த சன்னதி. அக்கினி வழிபட்டதால், சிவலிங்கத்திருமேனி சற்று சிவப்பு நிறமாக இருக்கிறது.

🌀 சுவர் ஓரத்தில் நால்வர் சன்னதி உள்ளது.

🌀 சன்னதிக்கு முன்னால் இடதுபுறம் அம்பாள் சன்னதி உள்ளது. சிறிய திருமேனி நின்ற திருக்கோலம்.

🌀 கோஷ்ட மூர்த்தங்களாக பிரம்மா, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, விநாயகர், முதலிய திருமேனிகள் உள்ளன.

🅱 பிரார்த்தனை:🅱

🍄 சனி சம்பந்தப்பட்ட தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து அக்னீஸ்வரரை வழிபாடு செய்து, சனிபகவானை வழிபட்டால் தோஷம் விலகும் என்பது ஐதீகம்.

🍄 இத்தலத்து இறைவனையும் அம்பிகையையும் பொங்கு சனீஸ்வரரையும் தொடர்ந்து ஏழு வாரங்கள் வழிபட்டு வர, பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரும்.

🍄 தொடர்ந்து ஐந்து வாரங்கள் வழிபட, மனநோய் முற்றிலும் குணமாகி, சுகவாழ்வு அடைவர். பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க, நீண்ட ஆயுள், மன அமைதி, புத்திர பாக்கியம், செல்வம், பதவி, கௌரவம், அந்தஸ்து, வெற்றி போன்ற அனைத்தையும் வழங்கி அருளுகிறார் அக்னீஸ்வரர்.

🅱 நேர்த்திக்கடன்:🅱

🌻 சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

🅱 தலபெருமை:🅱

🔥 அக்னி பகவான் தன் சாபம் நீங்க இத்தலத்து ஈசனை வணங்கியதால் இறைவன் "அக்னீஸ்வரர்' எனப்படுகிறார்.

🔥 இங்கு மகாலட்சுமியின் சன்னதிக்கு அருகில் சனிபகவான் சன்னதி அமைந்திருப்பது தலத்தின் சிறப்பாகும்.

🔥 இத்தலத்திற்கு வன்னி, ஊமத்தை, கொன்றை என 3 தலவிருட்சங்கள் உள்ளன. இதில் வன்னிமரம் குபேர செல்வத்தையும், ஊமத்தை மனக்கவலையையும், கொன்றை குடும்ப ஒற்றுமையையும் தருகிறது.

🔥 பொதுவாக அனைத்து கோயில்களிலும் நவகிரகங்கள் ஒன்றையொன்று பார்க்காமல் அமைந்திருக்கும். ஆனால் இத்தலத்தில் "ப' வடிவில் அமைந்திருப்பது சிறப்பு.

🔥 நாம் செய்யக்கூடிய பாவங்கள் அனைத்தையும் இத்தல இறைவன் அழித்து விடுவதால், பாவங்களுக்கு தண்டனை அழிக்கும் வேலை, இத்தலத்து நவகிரகங்களுக்கு கிடையாது. எனவே மாறுபட்ட கோணத்தை விட்டு அனைத்து நவகிரகங்களும் "ப' வடிவில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

🔥 கலப்பை ஏந்திய சனி இங்குள்ள சனிபகவான் உழைப்பின் பெருமையை உணர்த்தும் வகையில் கலப்பை ஏந்திய நிலையில் அருள்பாலிக்கிறார். இவரை சனிக்கிழமைகளில் மட்டுமின்றி அனைத்து கிழமைகளிலும் வன்னி இலைகளால் அர்ச்சனை செய்தால் சிறந்த பலன் கிடைக்கும்.

🔥 நவகிரக மண்டலத்தில் சனியின் திசை மேற்கு. அதே போல் இத்தலமும் மேற்கு பார்த்து அமைந்துள்ளது. சனி சம்பந்தப்பட்ட தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து அக்னீஸ்வரரை வழிபாடு செய்து, சனிபகவானை வழிபட்டால் தோஷம் விலகும் என்பது ஐதீகம்.

🔥 மேற்கு வெளிப் பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் கிழக்கு நோக்கிய சனி பகவான் சந்நிதி தனி விமானம், தனி மண்டபத்துடன் உள்ளது. திருநள்ளாற்றைத் தவிர்த்துப் பார்த்தால் சனீஸ்வரனுக்கு இத்தலத்தில் தான் விசேஷம்.

🔥 நளன் இத்தலத்தில் சனீஸ்வரரை வழிபட்டுள்ளான் என்ற சிறப்பு இடையது இச்சந்நிதி. புரூரவஸ் என்ற சக்கரவர்த்திக்கு ஏற்பட்ட சனி தோஷத்தை நீக்கியருளிய மூர்த்தி இங்குள்ள சனி பகவான் என்பது பிரசித்தம்.

🔥 சனி பகவான் இத்தலத்தில் அனுக்கிரக மூர்த்தியாக பொங்கு சனியாக காட்சி அளிப்பதால் அவர் அருள் வேண்டி பக்தர்கள் இங்கு வருகின்றனர்..

🔥 அகத்தியர் தமது நூலில்,

‘‘நெல்லிக்காத் தங்கூராங் கோட்டூருவண்
துறையாரூர், அச்சாங் கொள்ளிக்காடுறை
யீசனைப் பணிவார் குபேரராகுவரே’’ என்கின்றார்.  அதாவது திருவாரூர் மாவட்டத்தில் விளங்கும் காவிரி நதியின் தென்கரையில் உள்ள பிரசித்தி பெற்ற புண்ணிய க்ஷேத்திரங்களான திருநெல்லிக்காவல்,  திருத்தங்கூர், கோட்டூர், திருவண்டுதுறை ஆகிய கோயில்கள் சூழ, நடுவில் கோயில் கொண்டுள்ள திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரன் மிகுந்த வரப்பிரசாதி.

🔥 சனி தசை, சனி வக்ர கதி தோஷம், வக்ர நிவர்த்தி தோஷம், தீய கோள்களினால் சனிக்கு தோஷம் ஏற்பட்டு அதனால் ஏற்படும் தொல்லை, மூல  திரிகோண, அஷ்டம, கண்டக, பாத சனி தோஷங்களினால் சொல்ல முடியாத சங்கடங்களை கொண்டவர்கள் மற்றும் திருநள்ளாறு சென்று அடிக்கடி  தரிசனம் செய்தும், சனி பீடை விலகாதவர்கள் தொழவேண்டிய ஒரு புண்ணிய, சக்தி வாய்ந்த கோயில் இது.

🅱 தல வரலாறு:🅱

🌺 சனி பகவான் பாரபட்சம் பார்க்காதவர். நாம் செய்யும் தவறுகளுக்கு தகுந்தபடி தண்டனை கொடுப்பவர். அதே போல் ஒருவர் பிறந்த நேரத்தின்படி சனிபகவான் நன்மை செய்வதாக அமைந்திருந்தால் அவர்களுக்கு அளவற்ற நன்மைகளையும், சிறந்த முன்னேற்றத்தையும் அளிப்பார். ஆனால் தேவர் முதல் மனிதர் வரை சனிபகவான் செய்யும் நன்மைகளை கண்டு சந்தோஷப்படாமல், அவர் செய்யும் தீய பலன்களைப்பற்றி மட்டுமே நினைத்து பயப்படுவர்.

🌺 இதனால் மனம் வருந்திய சனி, வசிஷ்டரின் யோசனைப்படி அக்னி வனம் எனப்படும் இத்தலத்தில் வந்து கடும் தவம் செய்தார். இவரது தவத்தில் மகிழ்ந்த ஈசன், அக்னி உருவில் தரிசனம் தந்து, சனியை பொங்கு சனியாக மாற்றினார். அத்துடன் இத்தலம் வந்து தன்னையும் பொங்கு சனியையும் வழிபடுவோருக்கு சனி சம்பந்தப்பட்ட தோஷங்கள் விலகும் என அருள்புரிந்தார்.

🌺 சிவன் அருளின்படி சனிபகவான் இத்தலத்தில் குபேர மூலையில் இருந்து, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு செல்வங்களை வழங்கி, மகிழ்ச்சியான வாழ்வை தருகிறார். நளச்சக்கரவர்த்தி தனக்கு சனிதோஷம் ஏற்பட்ட காரணத்தினால் நாடு, நகரம், மனைவி, மக்களை பிரிந்து மிகவும் துன்பத்திற்கு ஆளாகிறான்.

🌺 சனி தோஷம் விலகிய பின் இத்தலம் வந்து பொங்கு சனியை வணங்கி நலமடைந்ததாக வரலாறு கூறுகிறது.

🅱 சிறப்பம்சம்:🅱

Ⓜ அதிசயத்தின் அடிப்படையில்:

♻ இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

♻ மூலவர் சிவலிங்கத் திருமேனி சற்று சிவந்த நிறமாகவுள்ளது

♻ மக்கள் வழக்கில் 'கள்ளிக்காடு' என்று வழங்குகிறது.

♻ கொள்ளி - நெருப்பு. அக்கினி வழிபட்ட தலமாதலின் 'கொள்ளிக்காடு' என்று பெயர் பெற்றது.

♻ இத்தலத் தேவாரத்தில் இறைவன் யானையை உரித்த செயல் குறிப்பிடப்படுவதால் மக்கள் ஒரு காலத்தில் இக்கோயிலை "கரியுரித்த நாயனார் கோயில்" என்றும் அழைத்து வந்ததாக தெரிகிறது.

♻ சோழ மன்னன் ஒருவனுக்கு சனி தோஷம் விலகிய தலமாகும்.

♻ சம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

🅱 இருப்பிடம்: 🅱

✈ திருவாரூரிலிருந்து (20 கி.மீ) திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் கச்சனம் அமைந்துள்ளது. அங்கிருந்து மேற்கே 8 கி.மீ. தூரம் சென்றால் திருக்கொள்ளிக்காடு திருத்தலத்தை அடையலாம். கச்சனத்திலிருந்து ஆட்டோ வசதி உள்ளது.

🌀🌻🌀🌻 BRS🌀🌻🌀🌻🌀

🍄 தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்🍄

No comments:

Post a Comment