Thursday, 7 December 2017

ஏன்? எதற்கு? எதில்? - பென்ஃபோட்டமைன் (Benfotiamine)


வைட்டமின்-பி வகையைச் சேர்ந்த சத்து பென்ஃபோட்டமைன். இது கொழுப்பில் கரையக் கூடியது.நம் உடல் இதைச் சேகரித்து வைத்துக் கொள்ளும். நரம்பியல் கோளாறுகள் உள்ளவர்களுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.    
பென்ஃபோட்டமைன் ஏன் தேவை?

கீழ்க்கண்ட நோய்களைக் கட்டுப்படுத்தவும் தவிர்க்கவும் பயன்படுகிறது.

*   நீரிழிவு

*   பெரி பெரி

*   தயாமின் குறைபாடு

*   வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது. குறிப்பாகப் பெண்களை அதிகம் தாக்கும் ஃபைப்ரோமயால்ஜியா என்கிற பிரத்யேக வலியைக் குறைக்க உதவுகிறது.

*   ரத்த அழுத்தத்தில் காணப்படும் தாறுமாறான ஏற்ற இறக்கங்களைச் சரிசெய்கிறது.

பென்ஃபோட்டமைன் ஏற்படுத்தும் பக்க விளைவுகள் 


அரிதாகச் சில நேரங்களில் இது பக்கவிளைவு களை ஏற்படுத்தலாம். அப்படி ஏற்படும்பட்சத்தில் அவை தீவிரமாக இருக்கும்.    
*   வயிற்றுப்போக்கு

*   சருமத்தில் வெடிப்பு

எதில் பென்ஃபோட்டமைன்?

*   முழு தானியங்கள்

*   முட்டையின் மஞ்சள்கரு

*   வேர்க்கடலை

*   வாழைப்பழம்

*   சூரியகாந்தி விதை

*  பூண்டு

வெங்காயம்

ஒரு நாளைக்கு எவ்வளவு பென்ஃபோட்டமைன் தேவை? 


300-600 மில்லிகிராம் (மருத்துவர்ின் பரிந்துரையின் பேரில் மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்) 

No comments:

Post a Comment