பகல், இரவு பாராமல் நம்முடைய நுரையீரல் ஒரு நாளைக்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை சுவாசித்து, உடலுக்குத் தேவையான ஆக்சிஜனை காற்றில் இருந்து பிரித்துத் தருகிறது. மேலும், ரத்தத்தில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடைப் பிரித்து, வெளியே அனுப்புகிறது. நுரையீரைலைப் பாதுகாக்க...
புகையிலைப் பழக்கத்தைக் கைவிடுங்கள்
நுரையீரலின் முக்கிய எதிரி, புகைப் பழக்கம்தான். ஒருவர் புகைத்து வெளியிடும் சிகரெட் புகையை சுவாசித்தலும்கூட, பிரச்னையை ஏற்படுத்தும். சிகரெட் புகைக்கும் போது, அதில் உள்ள 4000-க்கும் மேற்பட்ட நச்சுப்பொருட்கள் நுரையீரலுக்குள் செல்கின்றன.
காற்று மாசு
சிகரெட் புகை மட்டுமல்ல, விறகு அடுப்பு மற்றும் ஆலையில் இருந்து வெளிப்படும் புகைகூட நுரையீரலுக்குப் பகைதான். காற்று மாசு, ஆஸ்துமா, சுவாசக்குழாய் பிரச்னைக்குக் (சி.ஓ.பி.டி) காரணமாக இருக்கிறது. இவற்றைத் தவிர்ப்பதன் மூலம் நுரையீரல் பாதிப்பைத் தவிர்க்கலாம்.
வீட்டில் கவனம்
செல்லப்பிராணிகளின் உன்னி, சமையல் புகை, அறையில் வாசம் வீசத் தெளிக்கப்படும் ஏர் ரெப்ஃரெஷ்னர், மெழுகுவர்த்தி புகை ஆகியவையும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். வீட்டுக்குள் நல்ல காற்றோட்டத்தை ஏற்படுத்துவது, நுரையீரலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விஷயங்களைக் கண்டறிந்து, அதைத் தவிர்ப்பது நல்லது.
உடற்பயிற்சி
உடற்பயிற்சி செய்யும்போது நுரையீரல் செயல்திறன் அதிகரித்து, இதயம் மற்றும் உடல் முழுவதற்கும் தேவையான ஆக்சிஜன் கிடைப்பதை உறுதிப்படுத்துகிறது. என்னமாதிரியான பயிற்சிகளை மேற்கொள்வது என்பதை, குடும்ப மருத்துவர் மற்றும் உடற்பயிற்சி நிபுணரிடம் ஆலோசனை பெற்றுச் செய்வது நல்லது.
ஹெல்த்தி டயட்
ஆரோக்கியமான உணவு நுரையீரலுக்கும் நல்லது. ஆன்டிஆக்ஸிடன்்ட் நிறைந்த உணவுகள் எடுத்துக்கொள்வது நுரையீரலைப் பாதுகாக்கும். புரோகோலி, காலிஃபிளவர் போன்ற காய்கள், வைட்டமின் சி நிறைந்த ஸ்ட்ராபெர்ரி, கிவி, ஆரஞ்சு, பப்பாளி போன்ற பழங்களை, அதிக அளவில் எடுத்துக்கொள்வது சுவாச மண்டலத்தைப் பாதுகாக்கும்.
அறிகுறிகளைப் புறக்கணிக்காதீர்கள்
ஒரு வாரத்துக்கு மேல் நீண்ட இருமல், சுவாசித்தலில் பிரச்னை, உடற்பயிற்சி செய்யாதபோதும் மூச்சுவிட சிரமம் போன்ற பிரச்னை இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
மீன் உணவுமீன், மீன் எண்ணெயில் ஒமேகா3 கொழுப்பு அமிலம் உள்ளது. இது தசைகள் வீக்கமடையும் பிரச்னையில் இருந்து காக்கிறது. குறிப்பாக, உடற்பயிற்சி செய்யும்
போதும் செய்த பிறகும் நுரையீரலின் செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது.
மீன் உணவுமீன், மீன் எண்ணெயில் ஒமேகா3 கொழுப்பு அமிலம் உள்ளது. இது தசைகள் வீக்கமடையும் பிரச்னையில் இருந்து காக்கிறது. குறிப்பாக, உடற்பயிற்சி செய்யும்
போதும் செய்த பிறகும் நுரையீரலின் செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது.
முன்னெச்சரிக்கை
கட்டுமானம், ரசாயனம், பொட்ரோலியம் போன்ற தொழிற்சாலைகள், நுரையீரலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகொண்ட தொழிற்துறையில் வேலை செய்பவர்கள், தகுந்த பாதுகாப்பு சாதனங்கள் அணிந்துகொள்ள வேண்டும்.
சுவாசப் பயிற்சி
மூச்சை இழுத்து செய்யப்படும் சுவாசப் பயிற்சிகள் நுரையீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதுடன், நுரையீரலைப் பலப்படுத்துகிறது. சுவாசப் பாதையைச் சுத்தப்படுத்துகிறது. உடலுக்கு அதிக அளவில் ஆக்சிஜனும் கிடைக்கிறது.
நீண்ட மூச்சு
முடிந்தவரை நுரையீரலின் முழுக் கொள்ளளவும் நிறையும் வகையில் மூச்சை நன்கு இழுத்து, வெளியேவிடவும். இது நுரையீரலின் செயல்திறனை நன்குவைத்திருக்க உதவும். நுரையீரலைப் பலப்படுத்தும். மன அழுத்தத்தையும் குறைக்கும்.
No comments:
Post a Comment