Monday 4 July 2016

திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி(சனீஸ்வரபகவான்)

ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரசுவாமி (சனீஸ்வரபகவான்) திருநள்ளாறு..

Thirunallaru-saneshwaran_temple
சுவாமி : தர்ப்பாரண்யேஸ்வரர்.
அம்பாள் : பிராணேஸ்வரி, பிராணாம்பிகை, போகமார்த்த பூண்முலையாள்.
தீர்த்தம் : நள தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், வாணி தீர்த்தம்.
தலவிருட்சம் : தர்ப்பை.
தலச்சிறப்பு : 
சனி பார்வையில் உள்ள பக்தர்கள் இத்தலத்திற்கு சென்று எள்ளுடன் கூடிய தீபம் ஏற்றி அன்னதானம் செய்தால் சனிபகவான் அருள் பரிபூரணமாக கிட்டும்.  இத்தலத்தில் பூஜைசெய்து  மேன்மை பெற்ற நளமன்னரால் திருநள்ளாறு என்ற பெயரைக் கொண்டு சிறப்புடன் விளங்குகிறது.   தோஷ நிவர்த்தி தரும் பரிகார தலம். 

தல வரலாறு : 
நிடத நாட்டு மன்னன் நளனும் சேதி நாட்டு இளவரசி தமயந்தி இருவரும் ஒருவரை  ஒருவர் விரும்பி மணம் புரிந்து கொண்டனர்.  ஆனால் தேவர்கள் தமயந்தியை மணம் புரிய  விரும்பினர்.  ஆகவே இந்த திருமணத்திற்கு பிறகு, நளன் மீது பொறாமையும் கோபமும்,  கொண்டு, சனிபகவானை இதற்கு உதவி புரிய வேண்டினர்.
ஆனால் சனிபகவான், இவர்களது தூய்மையான அன்பை அறிந்து, நளனின் உண்மையான அன்பை அவர்களுக்கு உணர்த்த ஏழரை ஆண்டுகளாக பல தொல்லைகள் கொடுத்தும், மனம் தளராத  உறுதியுடன் தர்பபனேஸ்வரரை வந்து அடைந்து சாப விமோசனம் பெற்றார்.


சனி உருவான வரலாறு : 
சூரியனுக்குரிய மனைவியரில் ஒருத்தி உஷா.  இவள் சூரியனின்  வெப்பம் தாளாததால் தன் நிழலையே ஒரு பெண்ணாக்கி சாயாதேவி என்ற பெயரில்  தங்கியிருந்தாள்.  சாயா தேவிக்கு சனீஸ்வரன் பிறந்தார்.  பின்னர் உண்மை தெரிந்தது.  சூரியன்  தன்னை ஏமாற்றிய மனைவியைக் கடிந்து கொண்டார்.  அவளுக்கு பிறந்த சனீஸ்வரனை வெறுத்து  ஒதுக்கி விட்டார்.  சனி காசிக்கு சென்று விஸ்வநாதரை வணங்கி நவக்கிரக மண்டலத்தில் இடம்  பெற்றார்.
வழிபடவேண்டிய முறை : 
அதிகாலை 5 மணிக்கு நள தீர்த்தத்தில் நீராடி, கரையில் உள்ள நள  விநாயகர் மற்றும் பைரவரை வழிபட்டு பின்னர் கோவிலில் உள்ள கங்கா தீர்த்தக் குளத்தை  வணங்க வேண்டும். அதன் பின்னர், ராஜகோபுரத்தை முழுவதுமாக பார்த்து வணங்க வேண்டும்.   சனீஸ்வரரின் இருப்பிடமான படிக்கட்டை வணங்க வேண்டும்.  முதல் பிரகாரத்தில் நள  சரித்திரத்தை பார்த்து வணங்கவும்.  காளத்தி நாதரை வணங்க வேண்டும்.  அடுத்து கருவறையில்  உள்ள மூலவர் அருள்மிகு தர்பனேஸ்வரரை தரிசிக்க வேண்டும்.  அதன் பின்னர் தியாகவிடங்கர்  சன்னதிக்கு சென்று பக்தி வழிபாடு செய்ய வேண்டும்.  பின்னர் மரகத லிங்கத்தையும்  அர்த்தநாரீஸ்வரரையும் துர்க்கை, சண்டிகேஸ்வரர், தரிசித்து வெளிப்பிரகாரம் செல்ல வேண்டும்.

அங்குள்ள தெய்வங்களுக்கு வழிபாடு செய்து பின்பு, கட்டைக் கோபுரத்துள்  அருள்பாலிக்கும், அன்னை பிராணேஸ்வரியை வணங்கி அதன் பின்னர் தான்  சனீஸ்வரரிடம் சென்று அர்ச்சனை செய்ய வேண்டும். சிலர் முதலிலேயே  சனீஸ்வரர் சன்னதிக்கு சென்று விடுகின்றனர்.  இது சரியான வழிபாட்டு  முறை அல்ல என்றும், சனி தோஷ நிவர்த்தி கிட்டாது என்றும் கூறுகின்றனர்.
முற்பிறப்பில் செய்த பாவங்களுக்கு தண்டனை வழங்கும் முகமாக சனீஸ்வர பகவான் மனிதர்களின் வாழ்வில் நீதிபதியாக செயல்படுகிறார். அவ்வாறு அவர் அளிக்கும் தண்டனை காலங்களை ஏழரைச் சனி, மங்குசனி, பொங்குசனி, தங்குசனி, மரணச் சனி என சாஸ்திர வல்லுனர்கள் கணித்துள்ளனர். இதன்படி ஏழரைச் சனியில் சிலர் மரணத்தையும், சிலர் நீண்ட ஆயுளையும் பெறுவார்கள்.
   சனியைப்போல கொடுப்பாரும் இல்லை. சனியைப்போல கெடுப்பாரும் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு. சனிபகவான் ஒவ்வொரு ராசியையும் சுற்றிவர இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. அதன்படி சனிபகவான் 12 ராசிகளையும் சுற்றிவர 30 ஆண்டுகள் ஆகின்றன. இதன் காரணமாகவே 30 ஆண்டுகள் வாழ்ந்தவனும் இல்லை. 30 ஆண்டுகள் தாழ்ந்தவனும் இல்லை என்று ஸ்லோகம் சொல்லப்படுகிறது.
    திருநள்ளாறு கோவிலில் ஸ்ரீசனிபகவான் 2-வது கோபுர வாசலின் வலதுபுறமாக கிழக்குநோக்கி இருக்கிறார். பொதுவாக சனி பகவான் மேற்கு நோக்கியே இருப்பார். உக்ரமூர்த்தியான சனிபகவான் இங்கு அனுக்ரக மூர்த்தியாக அருளாசி வழங்குகிறார். இக்கோவிலில் மற்ற 8 கிரகங்களும் பிரதிஷ்டை செய்யப்படவில்லை என்பது சனி பகவானின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
    சனி பெயர்ச்சி தினத்தில் இருந்து 45 நாட்கள் முன்பாகவோ அல்லது பின்பாகவோ சனி பகவானை தரிசனம் செய்யலாம்.  இது சனிப்பெயர்ச்சி காலத்தில் தரிசனம் செய்யும் பலன்களைத் தரும்.

திருவிழாக்கள் :

வைகாசி – உத்திரட்டாதி நட்சத்திரத்தில் கொடியேற்றம் பின்னர் 18 நாட்கள் பெருவிழா எனப்படும் பிரம்மோத்சவம்,
புரட்டாசி பௌர்ணமி விசேஷம் தரும்,
நவராத்திரி மற்றும் விநாயகர்சதுர்த்தி,
அனைத்து சனிக்கிழமைகள் மற்றும் பிரதோஷம் நாட்களில் தீர்த்தத்தில் மூழ்கி பின்னர் வழிபட்டால் மேன்மை பெறுவது நிச்சயம். 

No comments:

Post a Comment