தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
சிவஸ்தலம் பெயர் : திருக்கழுகுன்றம்
இறைவன் பெயர் : வேதகிரீஸ்வரர் (மலைமேல் இருப்பவர்)
பக்தவத்சலேஸ்வரர் (தாழக்கோயிலில் இருப்பவர்)
இறைவி பெயர் : சொக்கநாயகி என்கிற பெண்ணினல்லாளம்மை
(மலைமேல் இருப்பவர்)
திரிபுரசுந்தரி (தாழக்கோயிலில் இருப்பவர்)
திரிபுரசுந்தரி (தாழக்கோயிலில் இருப்பவர்)
பதிகம் : திருநாவுக்கரசர் - 1
திருஞானசம்பந்தர் - 1சுந்தரர் - 1
அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர்
ஆகிய மூவராலும்
பதிகம் பாடப்பெற்ற திருமுறைத்
தலங்கள் 44. அவற்றில்
திருக்கழுக்குன்றம் தலமும்
ஒன்றாகும். வேதமே
மலையாய் இருப்பதால் இத்தலம்
வேதகிரி எனப்
பெயர் பெற்றது.
வேதாசலம், கதலிவனம்,
கழுக்குன்றம் என்பன
இத்தலத்திற்குரிய வேறு
பெயர்கள். மலைமேல்
ஒரு கோயிலும்,
ஊருக்குள் ஒரு
கோயிலும் உள்ளது.
இவை முறையே
திருமலை, தாழக்கோயில் என்றழைக்கப்பபடுகிறது.
மலைக்கோவிலில் இறைவன்
வேதபுரீஸ்வரர் என்ற
பெயரிலும், தாழக்கோவிலில் இறைவன்
பக்தவத்சலேஸ்வரர் என்ற
பெயரிலும் குடி
கொண்டுள்ளனர். ரிக்,
யஜுர், சாமம்,
அதர்வணம் என்ற
நான்கு வேதங்களும் 4 பெரிய
பாறைகளாக இருப்பதாகவும், அவற்றுள்
அதர்வணவேத பாறை
உச்சியில் சிவபெருமான் கோவில்
கொண்டுள்ளார் என்று
தலபுராணம் விவரிக்கிறது.
மலைக்கோவில்:
மலைக்கோவில் சுமார்
4 கி.மி.
சுற்றளவும், 500 அடி
உயரமும் கொண்டு
மலைமேல் இராஜகோபுரம், ஒரு பிராகாரத்துடன் அமைந்துள்ளது.
மலைமீது ஏறிச்செல்ல நல்ல
முறையில் அமைக்கப்பட்ட படிகள்
உள்ளன. மூலவர்
வாழைப் பூக்குருத்துப் போன்று
சுயம்புலிங்க மூர்த்தியாக வேதகிரீஸ்வரர்
என்ற பெயருடனும், அம்மன்
சொக்கநாயகி என்கிற
பெண்ணினல்லாளம்மை என்ற
பெயரிலும் எழுந்தருளி இருக்கின்றனர்.
கழுகுகள் பூசித்துப் பேறு
பெற்ற காரணத்தால் கழுக்குன்றம்
என்று பெயர்
ஏற்பட்டது. முதல்
யுகத்த்தில் சாபம்
பெற்ற சண்டன்,
பிரசண்டன் என்னும்
கழுகுகளும், இரண்டாம்
யுகத்தில் சம்பாதி,
ஜடாயு என்னும்
கழுகுகளும், மூன்றாம்
யுகத்தில் சம்புகுத்தன், மாகுத்தன்
என்னும் கழுகுகளும், நான்காம்
யுகத்தில் சம்பு,
ஆதி என்னும்
கழுகுகளும் முறையே
வழிபட்டுப் பேறு
பெற்றன. மலையில்
நாள்தோறும் உச்சிப்
பொழுதில் இரண்டு
கழுகுகள் வந்து
சில ஆண்டுகள்
முன்பு வரை
உணவு பெற்றுச்
சென்றுள்ளன. இப்போது
அவைகள் வருவதில்லை.
மலைக்கோவிலுக்கு ஏறிச்
செல்லும் படிகள்
வழியாகவே கீழே
இறங்கி வரலாம்.
ஆயினும் கீழே
இறங்குவதற்கு மற்றொரு
பாதையும் உள்ளது.
அவ்வழியே இறங்கி
வந்தால் பல்லவர்
மகேந்திரவர்மன் காலத்திய
(கி. பி.
610 - கி.பி.
640) குடைவரைக் கோவில்
ஒன்றுள்ளதைக் காணலாம்.
கோவிலினுள்ளே ஒரு
சிவலிங்கம் உள்ளது.
தாழக்கோவில்:
இக்கோவில் சுமார்
12 ஏக்கர் நிலப்பரளவில் நான்கு
புறமும் கோபுரங்களுட்ன் அமைந்துள்ளது.
இவற்றில் 7 நிலையுள்ள
கிழக்கிலுள்ள கோபுரமே
இராஜகோபுரம். ஆலயம்
மூன்று பிராகாரங்களுடன் அமைந்துள்ளது.
இக்கோகுர வாயில்
வழியே உள்ளே
நுழைந்தால் நேர்
எதிரே ஒரு
4 கால் மண்டபம்
உள்ளது, வலதுபுறம்
உள்ள மண்டபத்தில் கோவில்
அலுவலகம் உள்ளது.
அலுவலக மண்டபக்
கற்சுவரில் அழகான
அஷ்டபுஜ துர்க்கையின் சிற்பம்
உள்ளது. இடதுபுறம்
16 கால் மண்டபம்.
இதிலுள்ள தூண்களில்
அழகிய சிற்பங்கள் உள்ளன.
4 கால் மண்டபத்தையடுத்து 2வது கோபுரம். கோபுரத்தின்
இருபுறமும் விநாயகரும் சுப்பிரமணியரும்
உள்ளனர். வெளிப்
பிராகாரம் வலம்
வரும்போது வடக்குச்
சுற்றில் நந்தி
தீர்த்தமும், கரையில்
நந்தியும் உள்ளது.
2வது
கோபுர வாயிலில்
நுழைந்து பிராகாரம்
வலம் வரும்போது
சோமாஸ்கந்தர் சந்நிதி
உள்ளது. இப்பிராகாரத்தில் பீடம்
மட்டுமே கொண்டஆத்மநாதர் சந்நிதி
உள்ளது. பாணப்பகுதி இல்லை.
இதன் எதிரில்
மாணிக்கவாசகர் சந்நிதி,
ஏகாம்பரநாதர், தலவிநாயகரான வண்டுவன
விநாயகர், ஜம்புகேஸ்வரர், அருணாசலேஸ்வரர்
முதலிய சந்நிதிகள் தனித்
தனிக் கோயில்களாக அமைந்துள்ளன.
ஆறுமுகப்பெருமான் சந்நிதியும் இப்பிராகாரத்திலுள்ளது.
அழகான முன்
மண்டபத்துடன் உள்ள
அம்பாள் சந்நிதியும் இப்பிராகாரத்தில்
அமைந்துள்ளது. அம்பாள்
சந்நிதி சுற்றி
வலம்வர வசதி
உள்ளது. உள்ளே
கருவறையில் நின்ற
திருக்கோலத்தில் கிழக்கு
நோக்கி அம்மன்
திரிபுரசுந்தரி அருட்காட்சி தருகிறாள்.
அம்பிகைக்கு தினமும்
பாதத்தில் தான்
அபிஷேகம் நடைபெறுகிறது. ஓராண்டில்
மூன்று நாட்கள்
மட்டுமே (ஆடிப்பூரம் 11ம் நாள், நவராத்திரி
9ம் நாள்,
பங்குனி உத்திரம்
இரவு) திருவுருவம் முழுவதும்
அபிஷேகம் செய்யப்படுகிறது.
அம்பாளுக்கு எதிரில்
பிரத்யட்ச வேதகிரீஸ்வரர் சந்நிதி
உள்ளது. அதையடுத்து நடராச
சபை உள்ளது.
பிராகாரம் வலம்
வந்து மரத்தாலான
கொடிமரத்தின் முன்பு
நின்று வலதுபுறம்
உள்ள அகோர
வீரபத்திரரைத் தொழுது,
துவார பாலகர்களை
வணங்கி உள்ளே
சென்று, உள்சுற்றில் வலம்
வரும்போது சூரியன்
சந்நிதியும், அதையடுத்து விநாயகர்,
63 மூவர் மூலத்திருமேனிகளும், அடுத்து
ஏழு சிவலிங்கங்களும், அதனையடுத்து
63 நாயன்மார்களின் உற்சவத்
திருமேனிகளும் உள்ளன.
பைரவர் வாகனமின்றி உள்ளார்.
மூலவர் சதுரபீட
ஆவுடையாரில் பக்தவத்சலேஸ்வரர் என்ற
பெயருடன் கிழக்கு
நோக்கி எழுந்தரிளியுள்ளார். கருவறை
கஜப்பிரஷ்ட அமைப்புடையது. கோஷ்டமூர்த்தங்களாக
விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர்,
பிரம்மா, துர்க்கை
ஆகியோர் உள்ளனர்.
சண்டேஸ்வரர் தனி
சந்நிதியில் உள்ளார்.
உட்பிராகாரத்திலுள்ள சுமார் 7 அடி உயரமுள்ள அகோரவீரபத்திரர்
திருவுருவம் பார்த்து
மகிழ வேண்டியதாகும்.
சங்கு தீர்த்தம்:
கிழக்கிலுள்ள இராஜகோபுரத்திற்கு
நேநே உள்ள
தெருவின் மறு
கோடியில் மிக்க
புகழுடைய "சங்கு
தீர்த்தம்" உள்ளது.
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை
இக்குளத்தில் சங்கு
பிறக்கின்றது. இவ்வாறு
கிடைத்த சங்குகள்
ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளன. மார்க்கண்டேயர்
இறைவனை வழிபடப்
பாத்திரமின்றித் தவித்த
போது இறைவன்
சங்கை உற்பத்தி
செய்து தந்ததாகவும், அதுமுதற்கொண்டு
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை
இக்குளத்தில் சங்கு
பிறப்பதாகவும் சொல்லப்படுகிறது. 2011-ம்
ஆண்டு இக்குளத்தில் சங்கு
கிடைத்துள்ளது. நீராழி
மண்டபமும், நீராடுவதற்குரிய படித்துறை
மண்டபமும் உள்ளன.
சங்கு தீர்த்தத்தில் விடியற்காலையில்
நீராடி, மலையை
கிரிவலம் வருபவர்களின் நோய்கள்
யாவும் நீங்கும்
என்பது நம்பிக்கை.
No comments:
Post a Comment