Saturday 23 July 2016

அருள்மிகு தாணுமாலையன் திருக்கோவில் சுசீந்திரம்


 சுவாமி : தாணுமாலையன்.
மூர்த்தி : தாணுமலயான், விஸ்வரூப ஆஞ்சநேயர், தக்ஷிணாமூர்த்தி, நந்திகேஸ்வரர், சுப்ரமணிய சுவாமி, நடராஜர், திருவேங்கட விண்ணகர பெருமாள், பள்ளிக்கொண்ட பெருமாள், கொன்றையடி தாணுமலயான்.
தீர்த்தம் : பிரபஞ்ச தீர்த்தம்.
தலவிருட்சம் : கொன்றை.

தலச்சிறப்பு : 
திருக்கோவில் 1300 வருடம் புராதனம் வாய்ந்தது.  திருக்கோவிலின் முதல் சன்னதி தட்சிணாமூர்த்தி.  வெளியே வரும் முன் நந்தியின் முன்பு இந்திர விநாயகர்  அருட்காட்சி அளிக்கிறார். தத்தாத்ரி கோவில் - மூலக்கொவில்.  நவகிரகங்கள் வசந்த மண்டபத்தின்  மேல்  தளத்தில் உயரே உள்ளது. சிவனும் பார்வதி தேவியும் இக்கோவிலில் அமர்ந்து யாகம் செய்த போது  நவகிரகங்கள் மேலிருந்து கீழ் நோக்கி வழிப்பட்டதால் எல்லா நவக்கிரங்கங்களும் கீழ் நோக்கி  பார்க்கின்றார்கள்.  வெள்ளை நிறத்தில் உள்ள 12 அடி உயரமுள்ள நந்தி – சங்கால் அரைத்து  செய்யப்பட்டது.  ஸ்ரீ நீலகண்ட விநாயகர் பார்வதி தேவியுடன் காட்சி அளிக்கிறார்.  பிரகார  மண்டபத்தின் தூண்களின் கீழ்பாவை விளக்கு உள்ளது.  இங்கு சங்கீதத் தூண்களை கொண்ட  குலசேகர ஆழ்வார் மண்டபம் உள்ளது.  அதன் நடுவே 18 வருடங்களாக தொடர்ந்து ஏரிந்து  கொண்டிருக்கும் அணையா விளக்கு காடா விளக்கு - தனிச்சிறப்பு.  ஒரே கல்லில் நாஞ்சில்  துவார  பாலகர் உள்ளார்.  இங்கு உள்ள 18 அடி உயர ஆஞ்சநேயர் விஸ்வரூப ஆஞ்சநேயர் என்று அழைக்கப்படுகிறார்.  ஆஞ்சநேயருக்கு பிரார்த்தனையாக வெற்றிலை மாலை, வெண்ணெய்,  பன்னீர் அபிஷேகம் அனைத்தும் ஆஞ்சநேயரின் தலைக்கு மேல் உள்ள வாலுக்கு செய்யப்படுகிறது.   பார்வதி தேவி விநாயகர் ரூபத்தில் காட்சி அளித்து விக்னேஸ்வரி என்ற பெயர் பெறுகிறார்.
தல வரலாறு : 
அத்திரி முனிவருக்கும், கற்பில் சிறந்த மனைவியான அனுசுயாவுக்கும்,  "ஞானாரன்யத்தில் மும்மூர்த்திகளும் லிங்க வடிவில் தோற்றமளித்தனர்" என்று புராணம்  கூறுகிறது.  மூலவரான லிங்கத்தின் மேல் பாகம் – விஷ்ணு, நடுப்பாகம் – சிவன், அடிப்பாகம் – பிரம்மா என  கருதப்படுகிறது. இந்திரன் இங்கு வந்து புனிதம் அடைந்ததால் இவ்வூர் சுசீந்திரம் எனப் பெயர்  பெற்றது. "சுசி" என்றால் புனிதம் (சுத்தம்) இந்திரன் சுத்தம் அடைந்த இடம் என்பதால் (சுசி + இந்திரன்) சுசீந்திரம் எனப் பெயர் வந்தது. இன்றும் தாணுமாலையனுக்கு அர்த்த சாம பூஜை  இந்திரன் நடத்துவதாக ஐதீகம்.  மேலும் இத்திருக்கோயிலில் மாலையில் பூஜை செய்தவர் அடுத்த  நாள் காலை பூஜை செய்ய அனுமதிப்பதில்லை உள்ளே எதுவும் மாறுதல்கள் கண்டால் அதை  பிறரிடம் வெளியிடக் கூடாது என்ற ஐதீகப் படி அகம் கண்டதை புறம் கூறக் கூடாது என்ற நியதி  கடைபிடிக்கப் படுகிறது.

நடைதிறப்பு : காலை 4.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
பூஜை விவரம் :
காலை நடைத் திறப்பு - அதிகாலை 4.00 மணி,
அபிஷேகம் காலை - 4.30 மணி,
திருப்பள்ளியெழுச்சி - 5.30 மணி,
உஷக்காலபூஜை - 6.15 மணி,
மிருஷ்டாந்தபூஜை - 9.30 மணி,
உச்சிகாலஅபிஷேகம் - 10.30 மணி,
உச்சி கால பூஜை - 11.00 மணி,
திருனடைசாத்துதல் - 11.30 மணி,
 நடைத்திறப்பு - மாலை 5.00 மணி,
சாயரட்சை தீபாராதணை - 6.30 மணி,
திருநடைசாத்துதல் - 8.15 மணி.
குறிப்பு : தேவேந்திரனே தினமும் இரவு இத்திருக் கோவிலுக்கு வந்து அர்த்த சாம பூஜை செய்வதாக ஐதீகம்.



கணபதியைப் பெண்ணுருவில் செதுக்கியுள்ள சிற்பம்

இக்கோயில் 5400 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது.
இக்கோயிலின் அரச கோபுரத்தின் உயரம் நூற்று முப்பத்தி நாலரை அடி இருக்கிறது.
இக்கோயிலில் கணபதியைப் பெண்ணுருவில் செதுக்கியுள்ள சிற்பம் உள்ளது. இதை“விக்கினேசுவரி” என அழைக்கிறார்கள்.


திருவிழாக்கள் :
சித்திரை தெப்பத் திருவிழா பரணி நட்சத்திரத்தில் கொடியேற்றம் - 10 நாட்கள் நடைபெறும், 9-ம் நாள் தேரோட்டம்,10-ம் நாள் திருநாள் தெப்பம்,
ஆவணி - மகாவிஷ்னு - மூலத்திருவிழா -10 நாட்கள் உற்சவம். 9ம்நாள் திருநாள் தேரோட்டம்,
மார்கழி - திருவாதிரை பெருந் திருவிழா சதய நட்சத்திரத்தில் கொடியேற்றம், 5-ம் நாள்  கருடதரிசனம், 9-ம் நாள் நான்கு தேர்கள் தேரோட்டம் (பிள்ளையார், சிவன் - பார்வதி அம்மன்,  தேவேந்திரன் ஆகியோர் 4 தேர்களில் பவனி வருவர்),
மாசி - திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

No comments:

Post a Comment