Thursday 7 July 2016

சிவபெருமான், ஆஞ்சநேயரின் வாலை அறுத்த‍ அரிய நிகழ்வு! – யாருமறியா ஆன்மீகத் தகவல்

சிவபெருமான், ஆஞ்சநேயரின் வாலை அறுத்தாரா – அரிய நிகழ்வு யாருமறியா ஆன்மீகத் தகவல்

சூர்ப்பனகையின் சூழ்ச்சியாலும் வஞ்சத்தாலும் தூண்டப்பட்ட‍ இலங்கை மன்னன் ராவணன் அவ‌னால் கடத்தி செல்லப்பட்ட சீதையை,
ராமபிரான் இலங்கை சென்று ராவணனுடன் போரிட்டு அவனை வதம் செய்து சீதா தேவியை மீட்டு ரமேசு வரம் வந்துள்ளார். சிவபக்தனாக இருந்த ராவணனை ராமபிரான் வதம் செய்ததால் அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.
இந்த தோஷம் நீங்க ராமர் சிவலிங்கத்திற்கு பூஜை செ ய்ய வேண்டும் என்றும், அதன்மூலம் தோஷம் நீங்கும் என்றும் முனிவர்கள் ஆலோசனை கூறினார்கள். இதையடுத்து ராமர்பிரான் ஆஞ்சநேயரிடம் பூஜை செய்வதற்கு சிவலிங்க ம் கொண்டு வருமாறு ஆணையிடுகிறார். சிவலிங்கம் எடுப்பதற்காக
கைலாய மலைக்கு சென்ற ஆஞ்சநேயர் வர தாமதமாகி யதால் சீதாதேவி தனது கரங்களால் கடற்கரைமணலில் ஒரு சிவலிங்கத்தை செய்கிறார்.
மேலும் மணலால் ஆன அந்த சிவலிங்கத்துக்கு பூஜை செய்யும்படி ராம பிரானிடம் கேட்டுக்கொள்கிறார். இதை யடுத்து ராமபிரான் அந்த மணல் லிங்கத்திற்கு பூஜை செய்ய முற்படுகிறார். அப்போது அங்கு கைலாய மலை யில் இருந்து இரண்டு சிவலிங்கங்களுடன் ஆசநேயர் வந்து விடுகிறார். அவர், தான் கொண்டு வந்த சிவ லிங்கத்திற்கு பூஜை செய்யுமாறு ராமனிடம் வேண்டுகிறார்.
அப்போது சீதாதேவியும் தான்செய்த சிவ லிங்க த்திற்குத்தான் பூஜை செய்ய வேண்டும் என ராமரிடம் கூறுகிறார். இதனால் எந்த சிவலிங் கத்திற்கு பூஜை செய்வது என்று யோசனை செய்த ராமர், சீதா தேவியால் செய்யப்பட்ட சிவ லிங்கத்தை அகற்றுமாறு ஆஞ்சநேயருக்கு கட் டளையிடுகிறார். (திடுக்கிட்ட‍ சீதாதேவியை ராமரை நோக்க‍ வேண்டாம் என்று தனது கண் அசைவால்சொல்ல‍, அதற்கு ராமரோ, பொறு என்று தனது கண்கால் சீதை யை அமைதி படுத்தினார்.) அதனை தொடர்ந்து அந்த சிவலிங்கத்தை அகற்ற ஆஞ்சநேயர் கடுமை யாக முயற்சிக்கிறார்.
ஆனால் முடியவில்லை. (இதன்பொருளை ராமபிரான் மட் டுமே அறிவார். ஆம் சீதையால் பிரதிஷ்டை செய்ய‍ப்பட்ட‍ சிவலிங்கம் ரூபத்தில் இருக்கும் சிவன் அந்த இடத்தைவிட் டு இம்மி அளவுகூட நகரவில்லை. இறுதியாக தனது வாலா ல் சிவலிங்கத்தை கட்டி இழுக்கும்போது வாலறுந்து போய் விடுகிறது. இதையடுத்து ராமபிரான் சீதாதேவி செய்த சிவ லிங்கத்தை பிரதிஷ்டைசெய்து பூஜித்து ராமலிங்கம் என்று பெயர் இட்ட துடன், தனது பக்தனான ஆஞ்ச
நேயர் கொண்டு வந்த 2 சிவலிங்கத்திற்கும் பூஜை செய்து வழிபாடு நடத்தினாராம்.
மேலும் ராமலிங்கத்தின் அருகிலேயே ஆஞ்சநே யர் கொண்டு வந்த லிங்கங்களை பிரதிஷ்டை செய்து அவற்றுக்கு ஆத்மலிங்கம், விசுவலிங்கம் என்று பெயரிட்டாராம். இதில் விசுவலிங்கத்திற் கே முதல் பூஜைகள் நடத்தப்படவேண்டும் என்றும் ராமபிரான் கட்டளை யிட்டதாக ராமாயண கதையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment