Saturday 2 July 2016

திருவண்ணாமலை

திருவண்ணாமலை


திருவண்ணாமலை

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை  மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறப்பு நிலைநகராட்சி ஆகும்திருவண்ணாமலை மாவட்டத்தின் தலைநகரும் இதுவே ஆகும்புனித நகரமாக கருதப்படும் இந் நகரில் அண்ணாமலையார் திருக்கோயில் உள்ளது.

 

அருணாச்சலேஸ்வரர் கோயில் :

 

 

அண்ணாமலை மலையடிவாரத்தில் அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரர்   கோயில் ஆயிரம் வருடம்பழமை வாய்ந்த உலக புகழ் பெற்ற புனித   ஸ்தலமாகும்தென் இந்தியாவை ஆண்ட பலமன்னர்களில் குறிப்பாக பாண்டிய மன்னர்சோழ மன்னர்மற்றும் மன்னர் கிருஷ்ணதேவராயர்ஆகியோர் இக்கோயிலின் வளர்ச்சிக்காக பல வழிகளில் உதவிபுரிந்துள்ளனர்அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அருள்புரியும் தெய்வங்கள் சிவன் மற்றும் பார்வதிதேவிஇங்குசிவன் உலகை உருவாக்கிய பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னியின் வடிவத்தில்அருள்பாலிக்கிறார்.திருவண்ணாமலையில் உள்ள சிவன் பக்தர்களால் அண்ணாமலையார் என்றும்அருணாச்சலேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்இக்கோயில் உலகளவில் மிகப்பெரியகோயிலென பெயர்பெற்றதுஇக்கோயிலை பற்றி பல விபரங்கள் தமிழ் புராண புத்தகங்களானதேவாரம் மற்றும் திருவாசகத்தில் இடம் பெற்றுள்ளதுமேலும் இக்கோயிலின் மகிமையை போற்றிதமிழ் கவிகளான அப்பர்சுந்தரர்மாணிக்கவாசகர்மற்றும் சம்பந்தர் சிறப்பாகபாடியுள்ளனர்.திருவண்ணாமலை மேலும் ஒரு சிறந்த பாடல் பெற்ற ஸ்தலமாக விளங்குகிறது.

அக்காலகட்டத்தில் ஆண்ட பல மன்னர்கள் அருணாசலேஸ்வரர் கோயிலின் வளர்ச்சிக்கும்வசதியடையவும் மிகுந்த பொருளுதவிபராமரிப்பு ஆகியவை அளித்து இக்கோயில் பிரபலமடையசெய்துள்ளனர்பல பக்தர்களும் பொதுமக்களும் திருவண்ணாமலை வளர்ச்சியடையஉறுதுணையாக இருந்துள்ளனர்இக்காரணத்தால் கடந்த ஆயிரம் ஆண்டு காலமாக இக்கோயிலின்வளர்ச்சி பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது

 இக்கோவிலின் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவென்றால் 66 அடி உயரம் கொண்ட கோவிலின்கோபுரம்இது பதிமூன்று அடுக்குகளை கொண்டு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.இத்துடன் ஏழு பிரகாரங்கள் மற்றும் ஒன்பது அழகான கோபுரங்கள் உள்ளனபதினைந்தாம் நூற்றாண்டில் மன்னர் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்ட இக்கோபுரம் உயரத்தில் இரண்டாவதுகோபுரமாக விளங்குகிறதுகிழக்குப்புறம் உள்ள கோபுரம் ராஜகோபுரம் என அழைக்கப்படுகிறது.அருணாசலேஸ்வரர் கோயில் 25 ஏக்கர்  நிலப்பரப்பில் நிறுவப்பட்டுள்ளதுஅண்ணாமலையார்கோயிலில் உள்ள ஏழு பிரகாரத்தில் முதல் இரண்டு பிரகாரங்கள் பாண்டிய மன்னர்களால்கட்டப்பட்டதுமற்ற ஐந்து பிரகாரங்கள் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது.இக்கோயிலில் இரண்டுதெப்பகுளங்கள் உள்ளதுஇவை பிரம்ம தீர்த்தம் என்று சிவாகங்கா தீர்த்தம் என்றும்அழைக்கப்படுகிறதுமேலும் இங்கு ஓர் பிரம்மாண்டமான ஆயிரம் தூண்கள் கொண்ட அழகானமண்டபம் உள்ளதுஇவை அக்காலத்தில் ஆட்சி செய்த மன்னர்களால் கட்டப்பட்டது.குறிப்பாககர்நாடக மாநிலத்தில் ஆட்சி புரிந்த ஹோசாலா மன்னர்களால் இங்கு இருக்கும் சில சன்னதிகள்மற்றும் பிரகாரங்கள் கட்டப்பட்டது.

இங்கு அக்னி வடிவத்தில் உள்ள சிவன் வழிபாடு ஓவ்வொரு கார்த்திகை மாதம் கார்த்திகைநட்சத்திரம் வரும் நாள் அன்று மலையின் உச்சியில் ஏற்றப்படும் தீபத்தை தரிசிக்க ஆயிரக்கணகில்பக்தர்கள் இங்கு கூடுவது பல்லாண்டு காலமாக நடந்து வரும் பழக்கமாகும்இந்நாள் மிகவிசேஷமான நாளாக ‘கார்த்திகை தீபத்திருநாள்’ என்று அழைக்கப்படுகிறதுஇதை காணஉலகமெங்கும் உள்ள சிவனடியார் பக்தர்கள் இங்கு கூடி தீபத்தை தரிசிப்பது மிகவும் புண்ணியமானகாரியம் என்பது மக்களிடையே நிலவும் ஆழ்ந்த நம்பிக்கை.இங்கு லிங்க வடிவத்தில் உள்ள சிவன்அண்ணாமலை என்ற நாமம் பெற்றும் பார்வதிதேவி அபிட்டகுசலாம்பாள் என்ற பெயர் பெற்றும்விளங்குகின்றனர்இக்கோயில் சிவனுடைய சிறப்பான கோயில் என விளங்குவதற்கு காரணம்இங்கு சிவன் பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னியின் வடிவத்தில் காட்சி தருவதால் சிறப்புபெற்றது.மற்ற நான்கு பூதங்களான ஆகாயம்நீர்வாயுமற்றும் நிலம் சேர்ந்து அமைந்தது தான் இவ்வுலகம்.இந்த நான்கு பூதங்களும் தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலத்தில் உள்ள வெவேறு கோயில்களில்சிவனை பிரதிபலிகின்றனசிவன் திருவானைகாவலில் நீர் வடிவத்திலும் சிதம்பரத்தில் ஆகாயவடிவத்திலும் காஞ்சிபுரத்தில் நிலம் வடிவத்திலும் ஆந்திர மாநிலம் காளகஸ்தி கோயிலில் வாயுவடிவத்திலும் காட்சியளிக்கிறார்.திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் இன்றும்பாரம்பரிய முறையில் பூஜை மற்றும் வழிபாடுகள் நடைமுறையில் இருந்துவருகிறதுஇங்குவாழும் மக்கள் மற்றும் கோயிலுக்கு சம்மந்தமான பூசாரி நிர்வாகிகள்தர்மகர்த்தாக்கள்சிப்பந்திகள்,காவலாளிகள்பஜனை குழுவினர்பல்லக்கு தூக்குபவர்கள்வித்வான்கள்மற்றும் இதர கைவினைகலைஞர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து அணைத்து கோயில் வேளைகளில் ஈடுபட்டு சிறந்தமுறையில் ஒத்துழைப்பு அளித்து சரிவர செய்து வருகின்றனர்.குறிப்பாக தெற்குப்புரத்தில் உள்ளதெப்பகுளத்தில் இருக்கும் கங்கா தீர்த்தத்தை யானையின் மீது வைத்து தெற்கு புரத்தில் திருமஞ்சனகோபுரம்வழியில் கொண்டுவந்து இந்நீரை இரண்டாவது பிரகார நுழைவாயிலை சுத்தம் செய்வதற்குஉபயோகிக்கப்படுகிறது.பின்பு சிவன் மற்றும் பர்வதிதேவியை ஊர்வலமாக சிவனை ராஜகோபுரம்உள்ள கோயிலுக்கும் பார்வதியை உண்ணாமலையம்மன் கோயிலுக்கும் எடுத்துச்செல்கிறார்கள்.அதன் பின் பூஜைகள் ஆரம்பித்து காலையில் தொடங்கி ஒரு நாள் முழுவதும் ஆறு முறைநடைபெறுகிறதுபக்தர்கள் அனைவரும் சிவனை சேவித்து பௌர்ணமி அன்று மாதம் ஒரு முறைகிரிவலம் வருகின்றனர்சுமார் 5 லட்சம் பக்தர்கள் மாதம் ஒருமுறை பௌர்ணமி நாள் அன்று 13 கி.மீநடந்து கிரியை சுற்றி வருவது வாழக்கமாக உள்ளதுஇக்கிரிவலம் செல்பவர்கள் அனைவரும்மனதில் அமைதியுடனும்உடல் வலிமையுடனும் இருக்க உதவுகிறது

 

திருவண்ணாமலை வரலாறு :


திருவண்ணாமலை ஒரு வரலாறு முக்கியத்துவம் பெற்ற தமிழ்நாட்டில் உள்ள மிகவும் பழமைவாய்ந்த புண்ணிய திருத்தலமாகும்இங்கு உள்ள கோயிலில் அருணாச்சலேஸ்வரர்அக்னிவடிவதில் காட்சியளிக்கிறார்திருவண்ணாமலை கோயிலை பற்றி பல கவிகள் கவி இயற்றிபாடியுள்ளனர்இது ஒரு பாடல்பெற்ற ஸ்தலமாக விளங்குகிறதுஇக்கோயில் பிரகாரங்களில்உள்ள கற்களில் பல முக்கிய குறிப்புகள் செதுக்கப்பட்டுள்ளதுஇவ்வெழுத்துக்கள் பல நிகழ்வுகளைமக்களுக்கு தெரிவிக்கின்றனமேலும் இக்கோயில் மற்றும் ஸ்தலத்தை பற்றிய விவரங்கள் இங்குகிடைத்த செம்பு தட்டுகளால் [ செப்பு தகடுகளால் ] கிடைக்கப்பெற்றது.

திருவண்ணாமலையின் புகழை மேலும் தமிழ் சைவ மகாகவிகளான அப்பர்சுந்தரர்,மாணிக்கவாசகர்மற்றும் சம்பந்தர் ஆகியவர்கள் அவர்கள் இயற்றிய கவிகள் முலம் மக்களுக்குஎடுத்துரைத்துள்ளனர்தமிழ் இலக்கியங்களான தேவாரம் மற்றும் திருவாசகம் இதனைவெளிக்காட்டுகிறதுஅருணாச்சலேஸ்வரரை பற்றியும் திருவண்ணாமலையை பற்றியும்அருணகிரிநாதர் அவர்கள் எழுத்துகள் முலம் சிறப்பாக உரைத்துள்ளார்இப்படைப்புகளை வாசித்தசோழ மன்னர்கள் மிகவும் பூரிப்படைந்து இக்கோயிலுக்காக பல உதவிகளை செய்துள்ளனர்.மேலும் கடவுள் அருணாச்சலேஸ்வரர் மகிமை மீது மிகுந்த நம்பிக்கை அடைந்துள்ளனர்சோழமன்னர்கள் பல கோபுரங்கள்மண்டபங்கள்கோயிலை சேர்ந்த கட்டிடங்கள் கட்டிகொடுத்து கடந்தஆயிரம் காலமாக கோயில் முன்னேற்றம் அடைய உதவியுள்ளனர்.


மேலும் விஜய நகரை ஆண்ட மன்னர் கிருஷ்ணதேவராயர் திருவண்ணாமலை கோயில்வளர்ச்சிக்காக கோபுரங்கள்மண்டபங்கள் என பல கட்டிடங்களை கட்டிக்கொடுத்து உதவியுள்ளார்.இதில் 217 அடி கொண்ட ராஜகோபுரம் மன்னர் கிருஷ்ணதேவராயர் உதவியால் உருவாக்கப்பட்டது.இவர் அண்ணாமலையாரின் தீவிர பக்தராக விளங்கினார்இக்கோபுரமானது இந்தியாவின்உயரத்தில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதுமேலும் இக்கோயில் சிவன் பார்வதிக்காகஇந்தியாவில் கட்டப்பட்ட மிக பெரிய கோயில் என்று வரலாறு கூறுகிறதுமற்றும் ஒரு சிவன்பக்தரான  பல்லாலா இக்கோயிலுக்காக பல கட்டிடங்கள் கட்டி கொடுத்துள்ளார்இவர் செய்தஉதவியை சிவனடியார் பாராட்டும் விதத்தில் பல்லாலா இறைவனடி சேர்ந்த பின்பு சிவபெருமானேவந்து இம்மன்னருக்கு வாரிசு இல்லை என்றதால் அவரே இறுதி சடங்குகள் செய்தார் என வரலாறுகூறுகிறது.


சிவனடியார் இங்கு அக்னி வடிவத்தில் உருவான மற்றொரு வரலாறு சுவாரசியமான புராணம்ஒருதருணத்தில் பிரம்மா மற்றும் விஷ்ணுவிற்கு வாக்குவாதம் ஈற்பட்டு உச்சத்தை எட்டிய நிலையில்,சிவன் இதற்கு ஒரு முடிவை எடுத்துரைக்க அக்னி வடிவத்தில் தோற்றமளித்து விஷ்ணுவையும்,பிரம்மாவையும் சிவனுடைய கால்கள் மற்றும் சிரசத்தை கண்டுபிடிக்க சவால் விடுத்தார்இந்தசவாலை ஏற்ற பிரம்மா மற்றும் விஷ்ணு தோல்வியடைந்தனர்இந்த போட்டியில் பிரம்மாஜெயிக்க சிவனிடம் பொய் சொல்லிவிட்டார்இதனால் கோபமடைந்த சிவன் பிரம்மாவிற்கு சாபம்கொடுத்தார்இந்த சாபத்தினால் பிரம்மாவிற்கு இந்தியாவில் எந்த இடத்திலும் கோயில் இல்லை.இதனால் பிரம்மாவை யாரும் எந்த கோயிலிலும் சென்று வணங்க முடியாத நிலை உள்ளதுஇன்றுதிருவண்ணாமலையில் சிவனடியார் அக்னியாக வழிபடுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகஉள்ளதுஆதலால் இது ஒரு பஞ்சபூத ஸ்தலமாக தமிழ்நாட்டில் திகழ்கிறது

 

கிரிவலம் :


திருவண்ணாமலையில்  ஓவ்வொரு பௌர்ணமி அன்றும் பக்தர்கள் கிரிவலம் வருவதுபழக்கமாகவும் புண்ணியமாகவும் கருதப்படுகிறதுலட்ச கணக்கான சிவ பக்தர்கள் இங்குபௌர்ணமி அன்று கிரிவலம் வருகின்றனர்கிரி என்று அழைக்கப்படும் மலையை சுற்றிவலம்வருவதால் கிரிவலம் என்ற பெயர் வந்ததுஒரு முறை இந்த மலையை சுற்றி வருவதற்கு 14கி.மீ நடக்கவேண்டும்இதை மேற்கொள்ளும் அனைத்து பெரியவர்கள்சிறியவர்கள் அனைவரும்மன அமைதிபெற்று உடல் முழு உற்சாகமும் பெரும் என்பதில் பக்தர்களிடையே உள்ள முழுநம்பிக்கைதற்பொழுது அண்ணாமலை என்று அழைக்கப்படும் மலை பல்வேறு காலங்களில்பலவிதமான உருவத்தில் இருந்ததாக வரலாறு கூறுகிறதுஇந்த மலை கிருதாயுகத்தில்அக்னியாகவும்தீர்த்தயுகத்தில் மாணிக்க கல்லாகவும்துவாபரயுகத்தில் தங்கமாகவும்,தற்பொழுது இக்கலியுகத்தில் வெறும் கல்லால் உருவெடுத்த மலையாகவும் விளங்குகிறது எனநம்பபடுகிறதுஅருணாச்சலேஸ்வரர் கோயிலில் அஸ்டலிங்கம் என எட்டு வித லிங்கங்கள்உள்ளனஇவைகள் ஓவ்வொன்றும் ஓவ்வொரு திசையை நோக்கி அமைக்கப்பட்டுள்ளது.ஓவ்வொரு லிங்கமும் உலகில் இருக்கும் வெவ்வேறு திசைகளை குறிக்கின்றதுஇவ்வெட்டுலிங்கங்களின் பெயர்கள் இந்திரலிங்கம்அக்னிலிங்கம்யமலிங்கம்நிருதிலிங்கம்வருணலிங்கம்,வாயுலிங்கம்குபேரலிங்கம்ஈசானியலிங்கம்என்று அழைக்கப்படுகிறது.இவையனைத்துலிங்கங்களும் மனிதனுடைய ஓவ்வொரு காலகட்டத்தை குறிக்கின்றதுஅத்துடன் பக்தர்களின்நன்மைக்காக பல நன்மைகளால் அருள்புரிந்து சிறப்பான வாழ்கை அமைய வழி செய்கிறது.இவ்வெட்டு லிங்கங்களும் எட்டு நவகிரகங்களை குறிக்கிறதுஇவை வேண்டி வணங்கும்பக்தர்களுக்கு பல நன்மைகள் பயக்கும் என்பதில் உண்மையுண்டு என்று நம்புகிறார்கள்.

கிரிவலம் வரும் வழியில் முதலில் தோன்றுவது இந்திரலிங்கம்இந்தலிங்கம் கிழக்கே பார்த்துஅமைக்கப்பட்டுள்ளதுஇந்த லிங்கம் பூலோக தேவனான இந்திரதேவனால் நிறுவப்பட்டது.சூரியனின் மற்றும் சுக்கிரனின் ஆட்சியில் உள்ள லிங்கம் வணங்கும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுளும்பெருத்த செல்வமும் வழங்கும்.

கிரிவலம் வரும் வழியில் இரண்டாவது லிங்கம் அக்னிலிங்கம்இந்த லிங்கம் தென்கிழக்குதிசையை நோக்கியுள்ளதுஇந்த லிங்கத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இது கிரிவலம் செல்லும்வழியில் இடது புறம் இருக்கும் ஒரே லிங்கம் ஆகும்அக்னிலிங்கத்தை பிராத்தனை செய்யும்பக்தர்கள் நோயின்றி முழு ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள் என நம்பபடுகிறதுஇந்த லிங்கத்தின்கிரகம் சந்திரன்மேலும் சந்திரகிரகம் என்பதால் வாழ்க்கையில் வரும் இடஞ்சல்களை அகற்றும்சக்தியுள்ளது என நம்புகிறார்கள்இந்த லிங்கம் தாமரை தெப்பகுளத்திற்கு அருகே உள்ளது.

கிரிவலத்தில் மூன்றாவது லிங்கமாக அமைந்துள்ள லிங்கம் யமலிங்கம். இந்த லிங்கம் தெற்குதிசையை நோக்கியுள்ளது யமதர்மனால் நிறுவப்பட்ட லிங்கம் என கூறப்படுகிறதுஇது செவ்வாய்கிரகத்திற்கு உட்பட்ட லிங்கம்இதனருகில் சிம்ம தீர்த்தம் உள்ள தெப்பகுளம் அமைந்துள்ளது.இதை வேண்டுபவர்களுக்கு பண நெருக்கடி இல்லாமல் சந்தோஷமாக வாழலாம்என நம்பபடுகிறது.

கிரிவலம் பாதையில் நான்காவதாக உள்ள லிங்கம் நிருதி லிங்கம்இதன் திசை தென்கிழக்காகும்.இதனுடைய கிரகம் ராகுவாகும்பூதங்களின் ராஜாவால் இந்த லிங்கம் நிறுவப்பட்டதுசனி தீர்த்தம்என அழைக்கப்படும் தெப்பகுளம் இதனருகில் உள்ளதுஇதை வேண்டும் பக்தர்கள் நிம்மதியாகபிரச்னைகளின்றி வாழலாம்.

கிரிவலம் பாதையில் ஐந்தாவதாக உள்ள லிங்கம் வருண லிங்கம்இதற்குரிய திசை மேற்கு.மலைதரும் வருணதேவனால் இந்த லிங்கம் நிறுவப்பட்டதுஇந்த லிங்கத்தை ஆட்சி செய்யும்கிரகம் சனி பகவான்இங்கு வருண தீர்த்தம் என்னும் தெப்பகுளம் உள்ளதுசமூகத்தில்முன்னேற்றமடையவும் கொடிய நோய்களிலிருந்து தப்பிக்கவும் இந்த லிங்கத்தை பக்தர்கள்பிராத்தனை செய்ய வேண்டும்.

கிரிவலம் பாதையில் ஆறாவதாக உள்ள லிங்கம் வாயு லிங்கம். இந்த லிங்கம் வடமேற்குதிசையை நோக்கியுள்ளதுவாயு பகவானால் இந்த லிங்கம் நிறுவப்பட்டதுஇதை ஆட்சி செய்யும்கிரகம் கேதுவாகும்இந்த லிங்கத்தை சேவித்து வந்தால் இருதயம்வயிறுநுரையிறல்மற்றும்பொதுவாக வரும் நோய்களிலிருந்து காத்து கொள்ளலாம்.

கிரிவலத்தில் உள்ள ஏழாவது லிங்கம் குபேர லிங்கம்வடதிசையை நோக்கியுள்ள இந்த லிங்கம்குருவை ஆட்சி கிரகணமாக கொண்டுள்ளதுசெல்வத்தை வழங்கும் குபேர தெய்வத்தினால் இந்தலிங்கம் நிறுவப்பட்டதுபக்தர்கள் செல்வ செழிப்புடன் திகழ இந்த லிங்கத்தை பிராத்தனை செய்யவேண்டும்.

கிரிவலத்தில் உள்ள கடைசி லிங்கம் ஈசானிய லிங்கம்வடகிழக்கை நோக்கியுள்ள இந்த லிங்கம்எசானிய தேவரால் நிருவப்பட்டதுபுதன் கிரகம் இந்த லிங்கத்தை ஆட்சி செய்கிறதுஇந்தலிங்கத்தை சேவித்து வரும் பக்தர்கள் மன அமைதியுடனும்அனைத்து காரியங்களிலும் ஜெயம்கொண்டு திகழ்வார்கள்.

No comments:

Post a Comment