Friday 1 July 2016

திருநீறு பூசும்போது கடைபிடிக்கவேண்டியது

திருநீறு பூசும்போது கடைபிடிக்கவேண்டியது 
1. வெள்ளை நிற விபூதி மட்டும் அணிய வேண்டும் 
2.முகத்தை அண்ணாந்து வைத்து நிலத்தில் சிந்தாமல் நடு மூன்று விரல்களினால் நெற்றி நிறைய பூசவேண்டும் 
3.வடக்கு கிழக்குமுகமாக நின்று பூசவேண்டும் 
4.நடந்து கொண்டோ படுத்துகொண்டோ பூசக்கூடாது 
5.நித்திரைக்கு முன்னும் பின்னும் குளித்த உடனும் சூரிய உதய அஸ்தமனத்தின் போதும் உணவுக்கு முன்னும் பின்னும் பூசைக்கு முன்னும் பின்னும் மல சல காரியங்களுக்கு பின்னும் பூச வேண்டும் 
6.ஆசாரியர் சிவனடியார் இவர்களிடம் விபூதி பெரும் போது அவர்களை வணங்கி பெறுதல் வேண்டும் 
7.நந்தி முத்திரை (ம்ருகீ முத்திரை )யால் மட்டுமே எடுக்க வேண்டும்
8.அணியும் போது ஐந்தெழுத்து மந்திரம் கூறி அணியவேண்டும் 

திருநீறு பூசும்போது செய்யக்கூடாதது 

1.புகை நிற விபூதியும் பொன்னிற விபூதியும் கூடாது 
2.தலையை கவிழ்த்தும் நடுங்கிகொண்டும் வாயை திறந்து கொண்டும் பேசிக்கொண்டும் பூசக்கூடாது 
3.ஒருவிரலால் கண்டிப்பாக எடுக்கவோ  தரிக்கவோ கூடாது 
4.சண்டாளர் ,பாவிகள் முன்னும் அசுத்த நிலத்திலும் வழி நடையிலும் பூச கூடாது 
5.விபூதி அணியாதவர் முகம் சுடுகாட்டிற்கு சமம் 
6.ஒரு கையால் வாங்கிய விபூதியும் தீட்சை பெறாதவர் தந்த விபூதியும் பூசலாகாது 
7.சுவாமியை பார்த்துக்கொண்டும் திருநீறு கொடுத்த ஆசாரியாரை பார்த்துக்கொண்டும் அக்கினியை பார்த்துக்கொண்டும் ஆற்றைப் பார்த்துக்கொண்டும் பூசக்கூடாது .திரும்பி எதிர் திசையில் பார்த்து பூசவேண்டும் 
8.தீட்சை பெற்றவரும் சந்தியா காலம் தவிர மற்ற காலங்களில் உத்தூலனமாகவே பூச வேண்டும் 
9. வலது கை பூசும்போது இடது கை இடுப்புக்கு கீழ் தொங்ககூடாது 
10.விபூதி வைத்திருக்கும் கலயத்தை கவிழ்த்து எடுக்க கூடாது 
11.விலைக்கு வாங்கிய விபூதியை பூச கூடாது
12.விபூதியை கீழே சிந்தக்கூடாது
13.கொடுப்பவர் கீழாகவும் வாங்குபவர் மேலாகவும் நின்று வாங்ககூடாது 
14.திண்ணை ஆசனம் பலகை குதிரை சிவிகை இவற்றின் மீது அமர்ந்து வாங்ககூடாது 
15.ஒருவர் திருநீறு தருகிறார் என்றால் வாங்க மறுக்க கூடாது
16.ஆலயங்களில் வாங்கிய திருநீற்றை தூண்களிலும் சிற்பங்களிலும் போட்டுவிட்டு வருவது ஆலயம் செல்லாததை விட கொடிய பாவசெயல் 


திருநீற்றுக்காகவே இரண்டு நாயன்மார்கள் 
தங்கள் உயிரை துறந்தவர்கள்
ஒருவர் ஏனாதி நாயனார், மற்றொருவர் மெய்ப்பொருள் நாயனார் 


கற்பம்,அனுகற்பம்,உபகற்பம் என்று மூன்று வகை விபூதிகள் மட்டுமே பஞ்சபிரம்ம மந்திரம் சொல்லி தயாரிக்கப்பட்டது. அஷ்டமி நவமி சதுர்த்தசி திதிகளில் எடுக்கவேண்டும் என்பது போன்ற ஆகம விதிப்படி தயாரிக்கப் பட்டது இவை சைவ விபூதி எனப்படும். முழுநீறு பூசிய முனிவர்க்கும்  அடியேன் எனக்கூறப்படுவது இந்த முறை விபூதி  தான். முழு பலனும் தரக்கூடியது என்று பொருள் 

அகற்ப விபூதி என்பது விதிமுறைக்கும் அப்பாற்பட்டது அசைவ விபூதி எனப்படும் இது தாரணத்திற்குஉகந்தது அல்ல.பலன் இல்லை அதனாலேயே கடையில் விலைக்கு வாங்கி பூசக்கூடாது

திருநீறு அணியும் இடங்கள் 

தலை நடுவில் (உச்சி)
நெற்றி
மார்பு
தொப்புளுக்கு(கொப்பூழ்) சற்று மேல்.
இடது தோள்
வலது தோள்
இடது கையின் நடுவில்
வலது கையின் நடுவில்
இடது மணிக்கட்டு
வலது மணிக்கட்டு
இடது இடுப்பு
வலது இடுப்பு
இடது கால் நடுவில்
வலது கால் நடுவில்
முதுகுக்குக் கீழ்
கழுத்து முழுவதும்

திருநீற்றை வீட்டில் அதற்கென ஒரு கிண்ணம் அல்லது மண் பாத்திரம் வாங்கி அதில் போட்டு வைக்கவேண்டும் அதற்க்கு திருநீற்றுகோயில் அல்லது பஸ்மாலயம் என்று பெயர் அதையே சிவலிங்கமாக பூசிக்கலாம் இதற்கு சணிகலிங்கம் என்று பெயர்.திருமுறைகளில் திருநீற்றின் மேன்மைகள் பல இடங்களில் பாடப் பெற்றுள்ளது 

எந்த கொள்கையும் கோட்பாடும் இல்லாத அரசியல் கட்சி சின்னங்களையும் கட்சித்  தலைவனின் படத்தையும் கூசாமல் அணியும் மனிதவர்க்கமே இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை பயக்கும் திருநீற்றை அணிந்து பேறு பெறுவோம். சிவசின்னங்களை  அணிய நாம் கூச்சப்பட்டால் சிவபெருமான் நம்மைப்பார்க்க கூசுவார்.திருநீறணிந்தால் எல்லா வளமும் நலமும் ஒருங்கே கிடைக்கும் .சிவசின்னம் அணிந்து சிவவேடம் என்பது சிவபெருமானால் மட்டுமே அருளமுடியும் .அந்த கொடுப்பினை எல்லோர்க்கும் கிடைக்க எல்லாம் வல்ல ஈசன் அருள்புரிவாராக 
                              
                                  எனவே தினமும் திருநீறு பூசி திருநீற்றுப்பதிகம் பாடினால் நம் வினைப்பயன் அழியும் என்பது கண்கூடாக பலபேர் அனுபவித்த உண்மை 


                               ஓம் நமசிவாய

                               திருச்சிற்றம்பலம் 

No comments:

Post a Comment